Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுப்பு மூலை: தேசியத் தொண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: தேசியத் தொண்டு

நந்தி முனி

பல ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். 'காரைநகரில் நேவி நடாத்தும் ஒரு ஹொட்டல் இருக்கிறதாமே. அங்க குடும்பத்தோட போய் லஞ் எடுப்பமா?' என்று கேட்டார். நானும் அந்த ஹொட்டலைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனான். அதை ஒருக்காப் பார்ப்பம் என்று தோன்றியது. எனவே, அவருடைய அழைப்பை ஏற்று போனோம்...

கடற்காற்றில் சாப்பாடு சுமாராயிருந்தது... ஆனால் உறவினர் அமைதியிழந்தவராகக் காணப்பட்டார். அவர் சாப்பாட்டை ருசிச்சு ரசிச்சுச் சாப்பிடவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவாறு யந்திரத்தனமாகச் சாப்பிட்டார். பில் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமாராக ஆயிரத்து ஐநூறு வரும். எனக்குத் திகைப்பாக இருந்தது. சாப்பிட்டது செமிக்காது கட்டியாகிவிட்டது போல ஒரு உணர்வு. உறவினர் பில்லைப் பொருட்படுத்தவில்லை. அதை அலட்சியமாகப் பார்த்தார். காசைக் கொடுத்துவிட்டு வானில் வந்து ஏறும் வரை இருவரும் அதிகம் கதைக்கவில்லை. வான் புறப்பட்டு வேகம் பிடித்ததும் அவர் கதைக்கத் தொடங்கினார்.

உறவினர்: எங்கட நிலம்... எங்கட கடல்... எல்லாத்தையும் பிடிச்சு வைச்சுக் கொண்டு... எப்பிடியெல்லாம் உழைக்கிறாங்கள்... எனக்குச் சாப்பாடு உள்ளுக்கிறங்கேல்ல.

நந்திமுனி: படைத்தரப்பு இப்ப யுத்த எந்திரம் மட்டும் இல்ல. அது ஒரு வணிக நிறுவனமும் ஆயிற்று...

உறவினர்: ஓமோம்... ஓமோம்... நல்ல உழைப்பு...

நந்திமுனி: உதில குடுத்த காசுக்கு நாங்கள் ஒரு ஆடு வாங்கி வெட்டியிருக்கலாம்.

உறவினர்: உண்மை தான். ஆனா ஒரு சேஞ்ச ஆயிருக்கட்டும் எண்டுதான் இஞ்ச வந்தனான்... ஆடு வெட்டிச் சமைக்கிறது பம்பல் தான். ஆனா எங்கட பொம்பிளயள் தான் கிடந்து முறியோணும். அதுகள் அடுப்படிக்க புகை குடிக்க நாங்கள் ஹாயா இருந்து விஸ்கி குடிப்பம்.... அது பிழையெல்லே...? எனக்கு முந்தி இதெல்லாம் விளங்கேல்ல... புலம்பெயர்ந்த பிறகுதான் இப்ப விளங்குது... இப்பிடி ஹொட்டலுக்கு அல்லது றெஸ்ரோரண்டுக்கு குடும்பமா வந்து சாப்பிடுகிறது ஒரு சந்தோஷம். எவ்வளவு ரிலாக்ஸ்ஸா இருக்கும்...?

நந்திமுனி: உண்மைதான். ஆனா அதுக்கு காசும் வேணுமே...?

உறவினர்: உண்மை தான்... நாங்கள் டொலருக்கால யோசிக்கேக்க எங்களுக்கு அது பெரிசாத் தெரியாது....

நந்திமுனி: சரியாச் சொன்னீங்கள்... அது சரி நாளைக்கு என்ன பிளான்?

உறவினர்: நாளைக்கு... அம்மா, அப்பாவின்ர அறுபதாவது வெடிங் டே... அதக் கொண்டாடத்தான் குடும்பமா வந்தனாங்கள்... நீங்களும் வாங்கோ...

நந்திமுனி: எங்க கொண்டாட்டம்?... உங்கட அக்கான்ர வீட்டிலயா? அல்லது தப்பியின்ர வீட்டிலயா?

உறவினர்: ரெண்டிலுமில்ல... கிரீன் கிராஸ் ஹொட்டல்ல தான்.. கொஞ்சம் முந்திச் சொன்னனே...? அதுதான் ஒரு சேஞ்சா இருக்கட்டும் எண்டுதான்... அதோட அம்மா, அப்பாவுக்கும் அது ஒரு மறக்கேலாத அனுபவமா இருக்கும்... அதுகளும் என்னத்த கண்டதுகள்...?

நந்திமுனி: ம்.... நாளண்டைக்கு என்ன பிளான்...?

உறவினர்: நாளண்டைக்கு கசூரினாவுக்குப் போகோணும் எண்டு பிள்ளையளும் மருமகப் பிள்ளையளும் கேக்குது... மனுசிக்காரி நயினாதீவுக்குப் போகோணுமாம். ஒரு நேர்த்தி இருக்குதாம்...

நந்திமுனி: வேற எங்க போகப்போறியள்...?

உறவினர்: வேற எங்க.... ம்.... வடமராட்சி கிழக்கு கடற்கரைப் பக்கம் போகலாம்.... கீரிமலைக்குப் போகலாம்....

நந்திமுனி: வேற....

உறவினர்: நீங்களே... சொல்லுங்கோ... வேற எங்க போகலாம்...?

நந்திமுனி: வன்னிக்கு?

உறவினர்: ஓ.... அங்கு போகேலாது. அங்கு போனா... என்னால தாங்கேலாது... இதயம் வெடிச்சிடும்....

நந்திமுனி: ஏன்... முந்தி சமாதான காலத்தில வந்து நீண்டனீங்கள்தானே?

உறவினர்: அதுதானே பிரச்சின.... அந்த ஞாபகம் எல்லாம் திரும்பி வரேக்க தாங்கேலாம இருக்கு...

என்னை ஏயார்போர்ட்டில வந்து பிக்கப் பண்ணிக் கொண்டு வந்த பெடியன மறக்கேலாது... அவன் இப்ப உயிரோட இருக்கிறானோ தெரியாது... ஏயார் போட்டில இருந்து அவங்கட வாகனத்திலதான் வந்தனான். பிறகு ராங்வியூ ஹோட்டல்ல என்னை இன்னொரு பொடியன் பொறுப்பெடுத்தவன்... என்ன சாப்பாடு...? என்ன உபசரிப்பு...? இப்ப அவங்கள் இல்லாத வன்னியப் பார்க்க அது பச்சயமில்லாத காடாத்தான் தெரியுது.

நந்திமுனி: ஆனா நீங்கள் ஒருக்கா அங்க போகவேணும். அந்தச் சனங்களோட கதைக்கவேணும்.

உறவினர்: ஏலாதப்பு... எனக்கு அதத் தாங்கிற இதயம் இல்ல... அங்கபோனா... அண்ணையின்ர வீடு, நீச்சல்குளம்.. பங்கர்... இதுகளப் பார்த்தால் எனக்குப் பழைய ஞாபகங்கள் வரும்... பைத்தியம் பிடிக்கும்.

நந்திமுனி: வன்னியெண்டது நீங்கள் சொல்லுற பங்கர் வீடும், நீச்சல் குளமும், மந்துவில்ல இருக்கிற வோர் மியூசியமும் மட்டும் இல்ல. அங்க சனமும் இருக்குது... நீங்கள் முன்னம் வரேக்க பார்த்த அந்த அரசாங்கத்தக் கட்டியெழுப்பினது இயக்கம் மட்டுமில்ல அந்தச் சனமும் சேர்ந்துதான்...

உறவினர்: ஓ... அதுவும் சரிதான்..

நந்திமுனி: இயக்கம் போ எண்டு சொன்னோடன யாழ்ப்பாணத்தில இருந்து எத்தின லட்சம் சனம் போனது? மட்டக்களப்பில இருந்து மணலாறில இருந்து, திருகோணமல, மன்னார் எண்டு எல்லா இடத்தில இருந்து வந்த சனமும் வன்னிச் சனமும் சேர்ந்து செய்த வேள்வி அது....

உறவினர்: ....ம்.....ம்... உண்மைதான்.

நந்திமுனி: எத்தின தரம் இடம்பெயர்ந்திருக்கும். எத்தின தரம் மலேரியா வந்திருக்கும்? எத்தின பேரை செப்ரிசிமியா கொன்றது? நோய்க்குச் செத்து பசிக்குச் செத்து, ஷெல்லுக்கும், பொம்பருக்கும் செத்து, கடைசியில தலைப்பிள்ளயளக் குடுத்ததும் அந்தச் சனந்தானே...

உறவினர்: உண்மைதான்... உண்மைதான்.

நந்திமுனி: நீங்கள் முதன் முதலா வன்னிக்கு வந்தது எப்ப?

உறவினர்: சமாதான காலத்தில..

நந்திமுனி: அதுக்கு முந்தி நீங்கள் வந்திருக்கோணும்... அப்பத்தான் தெரியும் அந்தச் சனம் பட்ட துன்பம்... அல்லது சமாதானம் உடைஞ்ச பிறகு வந்து பாத்திருக்கோணும்.

உறவினர்: ஓமோம்... நீங்கள் சொல்லுறது சரிதான்.

நந்திமுனி: அந்தச் சனம் இல்லாமல் நீங்கள் பார்த்த அந்தக் குட்டி ராஜ்ஜியத்த உருவாக்கியிருக்கேலாது. அந்தச் சனம் இல்லாட்டி உங்களக் கட்டுநாயக்காவில இருந்து கொண்டுவந்த பஜிரோவும் இல்ல. நீங்கள் தங்கியிருந்த ராங்வியூ ஹோட்டலும் இல்ல. நீங்கள் சாப்பிட துபாய்ப் பிட்டும் இல்ல.

உறவினர்: ஓமோம்... உண்மைதான்.

நந்திமுனி: நீங்கள் பிரமுகரா வந்து பிரமுகர்களைச் சந்திச்சுப் போட்டு பிரமுகராகவே திரும்பிப் போயிட்டீங்கள். ஆனா அங்க சீவிச்ச சாதாரண சனம் இருக்குதே.... அதுகளிட்டத்தான் அந்த நெருப்பு இப்பவும் இருக்கு.... நீங்கள் இப்ப போய்க் காண வேண்டியதும் அந்தச் சனங்களத்தான். அதுகள் இப்ப இழக்கக் குடுத்திட்டு காயங்களோட இருக்கு.

உறவினர்: உண்மை தான்.. உண்மை தான்.. நாங்கள் அந்தச் சனத்தக் காணாத்தான் வேணும்...

நந்திமுனி: நீங்களும், நானும் சாப்பிட ஒரு சாப்பாடு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ரூபா...? ஆனா கேப்பாபிலவில இப்பவும் சனம் தகரக் கொட்டிலுக்கத்தான் இருக்குது... கைவேலியில, ஆனந்தபுரத்தில அதுபோல கன இடங்களில சனம் இன்னும் சரியாக் குடியமரவே இல்ல. இருக்கக் கக்கூஸ் இல்ல... காட்டுக்கதான் போகோணும்... குளிக்க. தண்ணி குடிக்க கிணறு இல்ல. ஆற்றயும் வீட்டதான் போகோணும்... அதுகளிட்ட காசு இல்ல. வீடு. இல்ல. தலைப்பிள்ளயளும் இல்ல.

உறவினர்: ஓமோம்... நீங்கள் சொல்லத்தான் விளங்குது....நான் பிழ விட்டிட்டன்... நாங்கள் போய் அந்தச் சனத்தப் பார்ப்பம்... ஆனா நாங்கள் போனா ஏதும் பிரச்சின வருமே....?

நந்திமுனி: நீங்கள் கட்டுநாயக்காவுக்கால வரலாமெண்டா... நீங்கள் பொக்கணைக்கும், மாத்தளனுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் போகலாம்... உங்களுக்குத் தெரிஞ்ச நம்பிக்கையான ஆக்களுக்கூடாக கஸ்ரப்படுகிற சனங்களிண்ட ரெலிபோன் நம்பர எடுக்கலாம்...

உறவினர்: ஓமோம்... நல்ல ஐடியா...

நந்திமுனி: நீங்கள் அந்தச் சனத்தோட நேர தொடர்பு எடுங்கோ, நேர கதயுங்கோ நேரடியா உதவியச் செய்யுங்கோ...

உறவினர்: அப்பிடிச் செய்தால் அது மணந்துபிடிச்சு கொண்டு அந்தச் சனத்திற்ற வரமாட்டாங்களே...

நந்திமுனி: வருவாங்கள்... யார் காசு அப்பினது எண்டு கேட்பாங்கள்... சில நேரம் தங்கட ஒஃபீசுக்கு வந்து பதியச் சொல்லியும் கேட்பாங்கள்..

உறவினர்: அப்ப பிரச்சின தானே...

நந்திமுனி: பிரச்சினதான்... ஆனா தொடர்புகளயும் கொடுக்கல் வாங்கல்களயும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையா வச்சிருந்தால் அதுகளுக்கு இப்போதைக்குப் பிரச்சின வராது.... வெளியில உள்ள கன பேர் அப்பிடித்தான் செய்யினம்...

உறவினர்: ஓமோம்... நானும் கேள்விப்பட்டனான். நிறையப் பேர் அப்பிடிச் செய்யினம் எண்டு.... ஆனா அவயள் அத வெளியில சொல்லுறதும் இல்ல. இணையத்தில, முகநூலில வந்து பறை தட்டுறதும் இல்ல.

நந்திமுனி: சரியாச் சொன்னீங்கள்... கனக்காக் கதைக்கிறவை ஒண்டும் செய்யிறதில்ல.... ஆனா செய்யிறவை கனக்கக் கதைக்கிறதில்ல...

உறவினர்: அப்ப நாங்கள் நாளைக்கே வன்னிக்குப் போவம்... உங்களுக்குத் தெரிஞ்ச தொடர்புகள எடுத்துத் தாங்கோ....

நந்திமுனி: நாளைக்கா? நாளைக்கு அம்மா அப்பாவின்ர கல்யாண நாள் எண்டு சொன்னியள்...?

உறவினர்: நான் பிளான மாத்திட்டன் அறுபதாவது கல்யாணத்த சிம்பிளா கொண்டாடுவம். அதேநேரம் அந்த நாளில வன்னியில உதவி தேவைப்படுகிற சனத்தக் கண்டு கதைப்பம்... அதுதான் சரியான கொண்டாட்டமா இருக்கும்...

நந்திமுனி: ஓ... கடவுளுக்கு நன்றி... எனக்கு இப்பதான் காரைநகரில சாப்பிட்டது செமிச்சது போல இருக்கு..

உறவினர்: உங்களுக்குச் சாப்பாடு செமிக்குது... எனக்கு மே 18இற்குப் பிறகிருந்து நாலு வருசமா நெஞ்சுக்க இருந்த ஏதோ ஒண்டு இப்பத்தான் நீங்கினாப் போல இருக்கு.... எவ்வளவு ரிலாக்ஸா இருக்கு.... எவ்வளவு மன நிறைவா இருக்கு...

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=7d8fc393-8453-4864-a12a-7db83cbb3be5

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்கிற சொல் பல வளர்ந்த நாடுகளில் மரியாதைக்குரிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. அதை வாயில் உச்சரித்தவர்களில் சிலர் விளக்கம் குறைந்தவர்கள் என்கிற காரணத்தினால் "தமிழீழத் தேசியம்" என்கிற சொற்றொடரும் நகைப்புக்குரிய ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்கிற சொல் பல வளர்ந்த நாடுகளில் மரியாதைக்குரிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. அதை வாயில் உச்சரித்தவர்களில் சிலர் விளக்கம் குறைந்தவர்கள் என்கிற காரணத்தினால் "தமிழீழத் தேசியம்" என்கிற சொற்றொடரும் நகைப்புக்குரிய ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது.

 

இசை;.... உடன்படுகிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் உண்மை , எவ்வளத்தைத்தான் நேஞ்சுக்குள் புதைப்பது. பகிர்வுக்கு நன்றி கிருபன்...!

பதிவிற்கு நன்றி கிருபன்.

இங்கிருந்து வகேசனில் போறவையும் இதே கூத்து தான்.

இந்த வருடம் எனது குழந்தையின் பிறந்தநாளை பெரிதாக நண்பரின் கனடிய உணவகத்தில் செய்ய முதலில் திட்டம் போட்டேன்.

நாற்சந்தியில் ஒரு பதிவு என்னை வெகுவாக பாதித்துவிட்டது.

புது திட்டம் போட்டுவிட்டேன். வீட்டில் சிறிதாக செய்துவிட்டு சேமிக்கும் காசை ஊரில் உள்ள ஆச்சிரமத்திற்கு நேசகரத்தின் உணவு விநியோக திட்டதிற்குள்ளால் கொடுக்கபோகிறோம்.

குழந்தைக்கு வரும் காசு பரிசுகளையும் குழந்தையின் பேரில் கொடுக்க திட்டம்.

குழந்தைக்கும் புண்ணியம் சேர்த்தது ஆகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.