Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 20–ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

இது சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும். நாளை சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. கடந்த குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார். அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார்.

இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட்டப்படுகிறது. நாளை முதல் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் தவக்காலம் தொடங்குகிறது.

இந்த 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். வீடுகளில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது. அன்னதானம் வழங்குவர். ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் ஏசுவின் இறப்பை நினைவூட்டும் சிலுவைபாதை வழிபாடு நடைபெறும்.

இந்த தவக்காலத் தின் கடைசி வாரமான ஏப்ரல் 17, 18–ந்தேதிகளில் புனித வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. புனித வியாழன் அன்று ஏசுவின் கடைசி விருந்து, புனித வெள்ளியில் ஏசுவின் சிலுவை மரணம் ஆகிய வற்றை நினைவூட்டும் வழிபாடுகள் நடைபெறும். 19–ந்தேதி புனித சனி இரவில் ஈஸ்டர் வழிபாடும், 20–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

 

http://www.maalaimalar.com

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

தவக்காலம்... தூய்மையின் காலம்!

 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிடச் சொன்னவர் இயேசு கிறிஸ்து. தாழ்ந்து போகிறவர் கெட்டுப் போவது இல்லை என்பதும் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதும் ஆன்றோரின் அமுத மொழி.

தவக்காலம் என்பது சோதனையின் காலம். சோதனை எல்லாம் வல்லவருக்கு மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் அதனை எதிர் கொண்டே ஆக வேண்டும். பட்டினி கிடப்பதனால், வழிபாடுகளில் தவறாது கலந்து கொள்வதினால் மட்டும் நாம் தவக் காலத்தினை சிறப்பித்திட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தவக் காலம் நம்மைக் கடந்து செல்லும்போது நமது உள்ளத்தில் ஏதாவது மாற்றதை விட்டுச் செல்ல வேண்டும். பட்டினி கிடப்பதாலோ தியானம் செய்வதாலோ தவக்காலத்தை சிறப்பித்திடலாம் என்று எண்ணி விட முடியாது.

நாம் செய்கிற தியாகமெல்லாம் அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று செய்கின்ற தியாகமெல்லாம் தியாகமாகாது. கண்ணீரும் துன்பமும் எல்லோருக்கும் பொது. அந்தக் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக்குவதும் சோகக் கண்ணீராக்குவதும் அவரவர் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைந்திடும்.

புனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்து மட்டும் அல்ல, படித்துப் பார்த்து அதனைப் பின்பற்றுதல் வேண்டும். அன்னை மரியாளின் தாழ்மை, இந்த பூமியிலே அவளுக்கு கடவுளின் அன்னை என்ற மணிமகுடத்தை பெற்றுத் தந்தது. விண்ணக, மண்ணக அரசியாக அவளை உயர்த்தியது. அவளது பிள்ளைகள்தான் நாம் என்பதை நமது வாழ்வில் அவளது வாழ்வைப் பிரதிபலிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். இப்படி நடந்தால் அது இறைவனுக்கு மிக உகந்ததாக இருக்கும். அதனால் இறைவனின் ஆசிர் நமக்குக் கிட்டும்..

தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திவோம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி, நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி, நிமிர்ந்து நடக்கும்போது இறை ஆசீரும், இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்குத் துணை இருக்கும். தவக்காலத்தை மனதைத் தூய்மைப்படுத்தும் காலமாக மாற்றிக் காட்டுவோம்.

 

http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article1511250.ece

 

 

 

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கு திரும்புவாய் மறவாதே என்றும் ....

 

 

சிலுவைப்பாதை

 

சிலுவைப்பாதை அன்பின் பாதை; அருளின்பாதை; இரக்கத்தின் பாதை; தியாகத்தின் பாதை. ஆண்டவர் இயேசு நாம் நலமுடன், அருளுடன், உறவுடன் வாழ, தம்மையே தியாகமாக்கிய அதே சிலுவைப்பாதையின் வழிகளில் நம்மையும் ஈடுபடுத்தி ஆண்டவர் இயேசு ஏற்றுக்கொண்ட துன்பங்களில் ஒரு சிறிதளவாவது பங்கேற்கும் போதுதான்; திருந்திவாழ முயற்சிக்கும் போதுதான் இந்த வழிபாடு நமக்கு பொருளுள்ளதாக அர்த்தம் நிறைந்த வழிபாடாக அமையும். இத்தகைய சிந்தனைகளுடன் இயேசு நடந்து வந்த பாதைகளை சிந்திக்க நமது பாவங்கள்,குற்றம் குறைகளை ஏற்றுக்கொள்வோம் மனம் வருந்துவோம்.

 

முதலாம் நிலை:

 

 

இரண்டாம் நிலை:

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடு வேலை செய்கிற சிலர் இப்படி சாம்பலால் , ஒரு சிலுவை வைத்த்து கொண்டு வந்திருந்தார்கள் ..தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

மூன்றாம் நிலை:

 


http://www.youtube.com/watch?v=f9owIpl43Rg

Edited by தமிழினி

நான்காம் நிலை:

 

 

http://www.youtube.com/watch?v=RGt_o7FwxMc

 

ஐந்தாம் நிலை

 

 

http://www.youtube.com/watch?v=psgTkAsLqSo

  • 3 weeks later...

பதினொராம் நிலை:

 

http://www.youtube.com/watch?v=nQDC_zufBG8

Edited by தமிழினி

பன்னிரென்டாம் நிலை:

 

http://www.youtube.com/watch?v=XtPlIxkOZdI

 

பதின் மூன்றாம் நிலை:

http://www.youtube.com/watch?v=GT-THaDfAas

 

பதின் நான்காம் நிலை:

http://www.youtube.com/watch?v=laQaeq7BjGs

Edited by தமிழினி

  • 10 months later...

https://www.youtube.com/watch?v=kdW-ZbOw-YM

 

உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)

உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) - உனக்காக

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) - உனக்காக

  • கருத்துக்கள உறவுகள்
கிறிஸ்தவர்கள் அல்லாத மற்ற மதத்தவரும் ...
பூமியில் வன்முறையை ஒழித்து அன்பை பேணி எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று 2000 வருடம் முன்பு புரட்சி செய்த மகானை நினைவு கூர்ந்து.
பூமியில் வன்மறை ஒழிந்து சமாதானம் தோன்ற இந்நாட்களில் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்!
 
2000ம் ஆண்டு முன்பு ஜேசு கூறியதை மனிதர்கள் செவி மடுத்திருந்தால் 
இன்று எத்தனை அழிவுகள் இல்லாது போயிருக்கும்.
 
தற்போதைய பல அரசுகள் ஆயுதம் செய்வதற்கு (பாதுகாப்பு செலவு) அதிக வரி பணத்தை செலவழிக்கின்றன.
மக்கள் உரிய மருத்துவம் உணவு கல்வி போன்ற அடிப்படைகளுக்கு நாளும் நாளும் அல்லாடுகிறார்கள்.
 
பூமியில் சாந்தியும் சமாதானமும் தோன்ற பிரார்த்திப்போம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.