Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தமிழ் பேசும் ஜேர்மனிய பெண்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் மொழியின் மோகம் என்பது காலத்திற்கு காலம், நாட்டிற்கு நாடு மாறுபட்டுக்கொண்டே உள்ளது. 

 

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை தமிழ் மொழிக்கு வித்திட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட தமிழ் பாடசாலைகளேயின்றி வேறொன்றும் இருக்க முடியாது. நான் இங்கு வந்து சில மாதங்கிளிலயே தமிழ் பாடசாலைக்கு என்னை என் பெற்றோர்கள் சேர்த்துவிட்டார்கள். ஊரில் மூன்றாம் ஆண்டு வரை படித்ததாக ஞாபகம் (பாசா பெயிலா என்று நினைவில்லை :D ). 

 

காலனியாதிக்கத்தில் வெள்ளைக்காரனின் மலம் கூட எமது மலத்தைவிட சுத்தமானது என்ற அடிமை குணத்தை எம் முன்னோர்கள் கொண்டுள்ளதன் காரணமே வேற்றுமொழிக்கு முன்னுரிமை கொடுத்து அதனை பேசுவதை கௌரவமாக நினைப்பது. அதாவது ஆங்கிலமோ அல்லது அவர்கள் வாழ்கின்ற நாட்டின் மொழி பேசுவதாலோ அவர்கள் அந்த நாட்டவரின் தரத்திற்கு தங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். இது கலனியாதிக்க அடிமை குணமே அன்றி வேறொன்றுமில்லை. 

 

1995ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தனது பிள்ளைக்கு தமிழ் தெரியாது அவர்கள் டொச் (அல்லது ஆங்கிலம்) தான் பேசுவார்கள்  என்று பெருமைப்பட்டது ஒரு  கௌரவமாக கருத்தப்பட்டது. ஏன் தம் பிள்ளைகள் சோறு சாப்பிடுவதில்லை, பிட்சா தான் சாப்பிடுவார்கள் என்று சொல்வதும் ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது. 

 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்லலாம். இன்று தமிழ் தெரியாமல் இருப்பது கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதை பல பெற்றோர்கள் புரிந்துவைத்துள்ளனர் (சுவிஸ் நாட்டை பொறுத்தவரை). 

 

லண்டன் கனடா போன்ற நாடுகளிலிருந்து சுவிசிற்கு வருபவர்கள் இங்கு தமிழ் சிறுவர்கள் தமிழில் பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்ட நிகழ்வுகள் நானே பார்த்திருக்கின்றேன். 

 

நான் தமிழ் பாடசாலையில் சேர்ந்த பொழுது 6ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதற்கு பின்னர் தனித்தே எனது வகுப்பில் நான் படிக்க வேண்டிவந்ததால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன். ஆனால் இன்று 12ஆம் வகுப்புவரை படிக்க முடியும் என்றால் அதற்கு பெற்றோர்களின் ஆதரவும் பிள்ளைகளின் ஊக்கமும் உள்ளதால் தான் முடிகின்றது (இது அனைத்து நாடுகளிற்கும் பொருந்தாது என்பது தான் வேதனனயான விடயம்). 

 

எனக்கு தமிழ்மொழியை ஊட்டியதில் தலைவரும் அவர் வழிநடத்திய தமிழ் பாடசாலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் ஈழமுரசு மற்றும் எரிமலை போன்ற பத்திரிகைகளும் தூக்கிவிட்டன. 

 

அது என்ன "யாழ்ப்பணத்தமிழ்"?  வெறும் தமிழ் என்று போட்டால் என்ன இவர்களிற்கு? அதில் பேட்டியெடுப்பவரும் யாழ்ப்பாணத்தமிழ் என்றே சொல்கிறார். இந்த தமிழ் வேறு இடங்களில் பேச மாட்டார்களா (உண்மையிலயே தெரியாத படியால் கேட்கின்றேன்).  :icon_idea:

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் எனது மருமக்கள் பலர் இருக்கின்றனர். எல்லோரும் ஜெர்மனியிலேயே பிறந்தவர்கள் . தமிழ்ப்பாடசாலையின் பேருதவியால் அங்கேயே தமிழ் கற்று இப்போது தமிழ் ஆசிரியை ஆகும் அளவு (12ம் வகுப்பு என நினைக்கின்றேன்) தேர்ச்சி பெற்றுள்ளனர். :D

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

 

நீங்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர் சகோதரர்  பிரேம்

பிரான்சில் தான்  இருக்கிறார்

தமிழுக்காக  பேசுபவர்களில்

உழைப்பவர்களில் முக்கியமானவர்.

 

எமக்கு தேவையான  பல  செய்திகளையும்

போராட்டங்களையும்

ஆய்வுகளையும் செய்யும் பண்பாளர்.

 

அவரை  அவமதிப்பதாக  உள்ளது தங்கள் எழுத்து

நீங்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர் சகோதரர்  பிரேம்

பிரான்சில் தான்  இருக்கிறார்

தமிழுக்காக  பேசுபவர்களில்

உழைப்பவர்களில் முக்கியமானவர்.

 

எமக்கு தேவையான  பல  செய்திகளையும்

போராட்டங்களையும்

ஆய்வுகளையும் செய்யும் பண்பாளர்.

 

அவரை  அவமதிப்பதாக  உள்ளது தங்கள் எழுத்து

 

அவர் அவ்வளவு தமிழரை அவமதிக்கிறார் அது உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லை அண்ணே ..எல்லோரும் எதோ ஒரு வழியில் முக்கியம் ஆனவர்கள் அவர் அந்த கருத்து தவிர்த்து இருக்க வேணும் ஒரு அனுபவம் மிக்க அறிவிப்பாளர் நக்கல் பேச்சு எதுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அவ்வளவு தமிழரை அவமதிக்கிறார் அது உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லை அண்ணே ..எல்லோரும் எதோ ஒரு வழியில் முக்கியம் ஆனவர்கள் அவர் அந்த கருத்து தவிர்த்து இருக்க வேணும் ஒரு அனுபவம் மிக்க அறிவிப்பாளர் நக்கல் பேச்சு எதுக்கு .

 

 

தமிழர்கள் தமிழை   மறந்திருப்பதும்

தமிழைப்பேசுவதை மரியாதைக்குறைவாக பேசுவதும்

தமிழோடு பிற  மொழிகளைக்கலந்து பேசுவதும் உண்மைதானே.

அதற்கு எதற்காக  நமக்கு கோபம் வரணும்  அஞ்சரன்??? :(  :(  :(

தமிழர்கள் தமிழை   மறந்திருப்பதும்

தமிழைப்பேசுவதை மரியாதைக்குறைவாக பேசுவதும்

தமிழோடு பிற  மொழிகளைக்கலந்து பேசுவதும் உண்மைதானே.

அதற்கு எதற்காக  நமக்கு கோபம் வரணும்  அஞ்சரன்??? :(  :(  :(

 

ஒரு சிலரின் நடைமுறை பார்த்து ஒட்டு மொத்தமா முடிவு எடுக்க கூடாது ஐநாவை நோக்கி திரள்வதும் நாங்களே என்பதை மறக்காமல் இருங்கோ .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

 

உண்மையைத்தானே சொல்லியிருக்கின்றார். ஒருசில நாடுகளிலை இருக்கிற எங்கடை சனம் செய்யிற மொழி கேவலங்களை தாங்கள் இன்னும் காணேல்லை போல....

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழியின் வாரிசு செஞ்ச வேலைய பாருங்க :icon_mrgreen:

 

1001590_10201743246689241_504584986_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் உண்மைதான்..யாழ்ப்பாணத்தான் மற்ற தமிழ்பேச்சுவழக்குகளை நக்கலடிச்சதில்லை.ஆனால் வேறை தமிழ்பேச்சு நடைகளிலை கதைக்கிறவயள் யாழ்ப்பாண தமிழை அந்தமாதிரி  நக்கலடிக்கிறது உங்களுக்கு தெரியதோ?

மட்டக்களப்பிலை நான் கொஞ்சக்காலம் இருந்தபோது அவையள் அடிச்ச நக்கல் கொஞ்சநஞ்சமில்லை.பகிடிக்குத்தான் நக்கலடிச்சாலும்......அதையே திருப்பித்திருப்பி நக்கலடிக்கேக்கை அது பகிடியில்லை.

தமிழகத்திலையும் இது இருக்குது.திரைப்படங்களிலை யாழ்ப்பாணத்தமிழை வைச்சு அடிக்கும் நகைச்சுவையளுக்கும் பஞ்சமில்லை.......

யாழ்பாணத்தவர்களை வெறுத்தவர்கள், பெரும்பாலும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து குடியேறி அங்கு சில தலைமுறைகளாக வாழ்பவர்களே. இவர்களில் இருந்து வந்தவர்களே அரசியல் தலைவர்களாக அங்கு முடிசூட்டிக் கொண்டுள்ளனர். இவர்களே மக்கள் வாக்குகளைக் கவர்வதற்காக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் பேதங்களை வித்திட்டு வளர்த்தவர்களும் ஆகும்.

மட்டக்களப்பில் புயல் அழிவைப் பார்வையிட, பிரமதாசாவோடு அமிர்தலிங்கமும் அங்குவந்தபோது, "யாழ்ப்பாணத்தவருக்கு இங்கு என்ன வேலை" என்று தேவநாயகத்தின் மனைவி கூறியபோது, "நீங்கள் போகும்போது அவவையும் கூட்டிக்கொண்டு போங்கோ" என்று பிரமதாச அமிர்தலிங்கத்துக்குச் சொல்லி நக்கலடித்ததாக செய்தியொன்று அப்போது பிரசித்தமாகி இருந்தது. தேவநாயகத்தின் மனைவி மானிப்பாய் யாழ்ப்பாணம் என்று தெரியவந்தது.

1980இல் மட்டக்களப்பிற்கு சென்றபோது, அங்கே பல வருடங்களாக வாழும் யாழ்ப்பாணக் குடும்பமொன்று கூறியது....

 

"போவிட்டு வாறோம்" என்று விடைபெறுவதை அடிக்கடி சொல்லிக்காட்டி கேலிசெய்வார்களாம். 

ஒருமுறை முதற்தடவையாக நடிகமணி வீ.வீ.வைரமுத்து அவர்களின் "அரிச்சந்திர மயான காண்டம்" எனும் கூத்து நிதி வசூல் காட்சியாக மட்டக்களப்பில் மேடையேற்றப்படும்போது...  கூத்தைப்பற்றி யாழ்ப்பாணத்தானுக்கு என்ன தெரியும் என்று எள்ளிநகையாடினார்களாம்.

ஆனால்..

அந்த கூத்து மேடையேறிய பின், கூத்துப் பற்றிய யாழ்ப்பாணத்தவரின் திறமையையும் பாராட்டினார்களாம்.

 

http://www.youtube.com/watch?v=-YbrRidLdsg

 
  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தமிழ் ...மட்டக்கிளப்பு தமிழ் எல்லாம் எப்ப கதைப்பா அதையும் போடுங்கோ அண்ணே ..

 

 

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

 

தமிழகத்தில்... மதுரைத் தமிழ்,  கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழ் என்று வட்டார வழக்கில் பேசும் போது.. மற்றைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதனை பெரிது படுத்துவதில்லை.

பலர் அதனை.... ரசிப்பார்கள்.

 

ஆனால்.... ஈழத்தமிழர் சிலருக்கு, யாழ்ப்பாணத் தமிழ், வன்னித் தமிழ், மட்டக்களப்பு தமிழ் என்று... எவரும் பேசும் போது....

சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்து... பிரதேச வாதத்தை கிளப்ப, முன்னுக்கு வந்து விடுவார்கள்.

இதற்குள், மற்றவனைப் பார்த்து... "அடிமைப் புத்தி" என்று மேதாவித் தனமாக எழுதுகின்றார்.

 

அவர்களின் நோக்கம்... இங்கு, அந்த ஜேர்மன் பெண்ணின் அரிய ஆற்றலையும், பேட்டி காணும் பிரேமில் பிழையை பிடித்து... குட்டையை குளப்புவதில் தான்... இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்திருந்தாலும்... இன்று, அந்த வட்டாரப் பேச்சை என்னால்... முன்பு போல் பேச சிரமமாக இருக்கும்.

 

இந்த வகையில்... அந்த ஜேர்மன் பெண்ணை, வாழ்த்தி.... வணங்குகின்றேன். :)

 

Edited by தமிழ் சிறி

தமிழகத்தில்... மதுரைத் தமிழ்,  கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழ் என்று வட்டார வழக்கில் பேசும் போது.. மற்றைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதனை பெரிது படுத்துவதில்லை.

பலர் அதனை.... ரசிப்பார்கள்.

 

ஆனால்.... ஈழத்தமிழர் சிலருக்கு, யாழ்ப்பாணத் தமிழ், வன்னித் தமிழ், மட்டக்களப்பு தமிழ் என்று... எவரும் பேசும் போது....

சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்து... பிரதேச வாதத்தை கிளப்ப, முன்னுக்கு வந்து விடுவார்கள்.

இதற்குள், மற்றவனைப் பார்த்து... "அடிமைப் புத்தி" என்று மேதாவித் தனமாக எழுதுகின்றார்.

 

அவர்களின் நோக்கம்... இங்கு, அந்த ஜேர்மன் பெண்ணின் அரிய ஆற்றலையும், பேட்டி காணும் பிரேமில் பிழையை பிடித்து... குட்டையை குளப்புவதில் தான்... இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்திருந்தாலும்... இன்று, அந்த வட்டாரப் பேச்சை என்னால்... முன்பு போல் பேச சிரமமாக இருக்கும்.

 

இந்த வகையில்... அந்த ஜேர்மன் பெண்ணை, வாழ்த்தி.... வணங்குகின்றேன். :)

தமிழனை கிண்டல் பண்ண தமிழனால் மட்டும் முடியும் என்று சொல்கிறேன் ஒரு முத்த அனுபவம் வாய்த்த அறிவிப்பாளர் பாவிக்கும் சொல்லாடல் இல்லை ..அது என்ன நாங்கள் என்ன சொன்னாலும்  மேதாவித்தனம் அதை கொஞ்சம் பிரபலம் சொன்னால் கெட்டித்தனம் எப்ப மாறும் எங்க சமூகம் :(

எங்களூடைய ஊடகவியலாளர்களை எடுத்துக் கொண்டால் முறைப்படி பயின்று வந்தவர்களல்ல.
அனுபவங்களின் அடிப்படையில் தங்களை வளர்த்துக் கொள்பவர்கள்!

இது ஊடகத்துறைக்கு மட்டுமல்ல. எம்மவர் சம்பந்தப்பட்ட பல விடயங்களுக்கும் பொருந்தும்.

 

ஆழமறியாமல் காலை விடாதே என்பது முதுமொழி.

ஆழமறியாது காலைவிட்டு, அதன் பின் உள்ள ஆழத்திற்கேற்றவாறு போராடியோ அல்லது சமாளித்தோ வெற்றியடைவதுதான் எம்மவர்களின் தனி இயல்பு.

 

அந்த வகையில், தான் ஏனைய தமிழர்கள் சிலரால் பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அந்த பெண்மணியினால் ஏற்பட்ட உணர்வு மேலீட்டினால் சில வார்த்தைகளை பிரேம் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி வெளிவிட்டாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.  :o

என்ன பண்ணுறது நாங்க படிச்ச படிப்பு அப்படி அதுக்கு தகுந்தால் போலதான் தமிழ் எழுத முடியும் நீங்கள் எல்லாம் உசுப்பேத்தி போட்டு வெளிநாடு வர ஓடி திரிந்தது நாங்கள் எல்லே ..

 

அறிவாளிகள் கூடித்தான் எங்க போராட்டம் இந்த நிலைக்கு வந்தது அல்லது பேசவேண்டிய விடையம் நிறைய இருக்கு ஒரு வெள்ளையை கொண்டுவந்து தமிழ் பேசுறா பாருங்கோ என்று இந்தியன் டீவி கணக்கா சீன் போட முடியுமா ...

 

இதையும் ஒருக்கா பிரேம் இடம் கொடுங்கோ போடசொல்லி மழலை தமிழில் கனடிய பெண் என்று தமிழ் பிள்ளைகள் மம்மி டாடி என்று சொல்ல இந்த பிள்ளை பாட்டு படிக்குது என்று ..

 

 

 

ஜேர்மனியப் பெண்ணொருவர் சரளமாகத்தமிழ் பேசுவது தமிழர்களாகிய
நமக்கு வியப்புத்தரும் விடயமாகும்.அடிமைமோகத்தில் மூழ்கியுள்ள
நம்மவர்களுக்கு அது பலவகையில் வழிகாட்டுவதாகும்; அது நம் கண்க-
ளைத் திறக்க வைக்கவேண்டும்.ஜேர்மனியர்கள் பலவகையில் விசேட-
மானவர்கள். உதாரணமாக, முதலாவது, இரண்டாவது உலகப்போர்களில்
மிகப்பெரிய அழிவுகளைச் சந்தித்தபோதும் தமது விடாமுயற்சியால்
அவற்றை ஈடுசெய்து பொருளாதார வளர்ச்சியில் இன்று முதன்மையான
இடத்தைப் பிடித்து அதனைப் பேணிவருகின்றனர். அறிவுசார்ந்த பல்வேறு
துறைகளில் ஜேர்மனியர்களே முதன்மையான இடத்தை வகிக்கின்றனர்.
மேற்குலகத் தத்துவஞானம்,சிந்தனைத்துறைகளில் அவர்களின் பங்க-
ளிப்பு மிகக் காத்திரமானது. கார்ல் மார்க்ஸ் ஒரு ஜேர்மனியரே. மக்ஸ்
முல்லர்[ Max Muller]  என்ற ஜேர்மனியர் இந்துசமய வேதஉபநிடதங்களை
ஜேர்மன்மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சுவாமி விவேகானந்தர்
ஐரோப்பா சென்றபோது மக்ஸ் முல்லரைச் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.
 
தாங்கள் விசேடமானவர்கள் என்ற எண்ணம்,கர்வம், ஜேர்மனியரிடம்
ஊறிப்போயுள்ளது.கிட்லரின்[ Hitler ] வாழ்வில் இது பளிச்சிடுவதைக்
காணலாம்.அவர்கள் தாய்மொழிப்பற்று மிக்கவர்கள்; அத்துடன்
நாட்டுப்பற்றும் கொண்டவர்கள். அடிமைவாழ்வை வெறுப்பவர்கள்.
அறிவார்வம் மிகுந்த முயற்சிகளின் முன்னோடிகள். அதனுடைய
ஒரு வெளிப்பாடே அந்த மதிப்புக்குரிய அம்மையாரின் தமிழ்பேசும்
முயற்சியும் எனலாம்.
 
புலம்பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் -- குறிப்பாக
தமிழ்மாணவர்கள் --- தாம்வாழும் நாட்டுமக்களின் மொழி,அவர்களின்
கலாச்சாரம்,வாழ்க்கைமுறைகள் என்பவற்றிலுள்ள சிறப்பான,
போற்றத்தக்க அம்சங்களை இனம்கண்டு அவைகளைப் பின்பற்ற
வேண்டும்; நம்மவர்களிடையே பரப்பவேண்டும். நாம் ஏன்
அடிமைகளாக,அகதிகளாக அலைகிறோம் என்பதைக் கண்டறிந்து
சரிசெய்யவேண்டும்.அங்ஙனம் நமது இழிநிலை போக்கும்வகையில்
நமது செயற்பாடுகள் அமையுமாயின் நமது புலம்பெயர்வு, அலைதல்
கூட பயனுள்ளதாகலாம்.

===  முகநூல்

அந்தப் பொண்ணு நல்லாய் தமிழ் பேசுறாங்களே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.