Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா 165 ஆம் இடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம்

 

 

press+freedom+issue.jpg

 

 

எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற பெயருடன் இயங்கும் அமைப்பினால் (Reporters Without Borders' World Press Freedom Index) இன்று 2014 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையேயான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

இதில் சென்ற வருடத்தை விட 13 படிகள் கீழிறங்கி அமெரிக்கா 46 ஆம் இடத்தையும் சிறிலங்கா 165 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வருடம் அமெரிக்காவின் பின்னடைவுக்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

இதில் முதலாவதாக சமுக வலைத் தளமான விக்கிலீக்ஸில் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்த முன்னால் இராணுவ வீரருக்கு அமெரிக்க அரசு சிறைத் தண்டனை அளித்தமையும் இரண்டாவதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் அத்து மீறல்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த முன்னால் NSA ஏஜன்ட் எட்வர்ட் ஸ்னோவ்டெனைக் கண்டு பிடித்துத் தண்டிக்க முயன்றமையும் அடங்குகின்றன.

இதேவேளை இப்பட்டியலில் இந்தியா 140 ஆவது இடத்தையும் சீனா 175 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பட்டியலின் படி உலகில் பத்திரிகைச் சுதந்திரம் அதிகம் மதிக்கப் படும் நாடுகளாக ஃபின்லாந்து, நெதர்லாந்து, மற்றும் நோர்வேயும் பத்திரிகை சுதந்திரம் அதிகம் மறுக்கப் படும் நாடுகளாக ஈரான், சீனா மற்றும் வடகொரியா ஆகியவையும் விளங்குகின்றன. இந்த 180 நாடுகளிலும் முதல் 10 இடங்களையும் இறுதி 10 இடங்களையும் வகிக்கும் நாடுகளின் விபரம் கீழே:

Top 10

1. Finland
2. Netherlands
3. Norway
4. Luxembourg
5. Andorra
6. Liechtenstein
7. Denmark
8. Iceland
9. New Zealand
10. Sweden

Bottom 10

171. Lao People's Democratic Republic (Laos)
172. Sudan
173. Islamic Republic of Iran
174. Vietnam
175. China
176. Somalia
177. Syrian Arab Republic
178. Turkmenistan
179. DPRK (North Korea)
180. Eritrea

முழுப் பட்டியலையும் பார்வையிட இந்த இணைப்பை அழுத்துங்கள் -

http://rsf.org/index2014/en-index2014.php#

 

நன்றி  உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம்

 
  • கருத்துக்கள உறவுகள்

கனடா வெள்ளை வெளேர் என்று இருக்கு.. :D

நிற்க.. அதிக புள்ளிகள் எடுத்து சாதனை படைத்த இலங்கைக்கு வாழ்த்துக்கள்..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கனடா,நோர்வே ,நெதர்லாந்து,டென்மார்க்,  ஜேர்மனியில் இருப்பவர்கள் எல்லாம் வெள்ளை உள்ளம் படைத்தவர்கள். :)
 
அமெரிக்கா,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,பிரான்ஸ் நாடுகளின் மஞ்சளைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது. வெளிக்காயம் தெரியாமல் அடிப்பதில் வல்லவர்களாயிருப்பார்களோ?  :D
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு வாழ்த்துக்கள்! :o

 

சீனாவுக்கும், சிங்களத்துக்கும் இடையில் உள்ள தூரம், வெறும் பத்து ஸ்தானங்களே! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம்

 

 

press+freedom+issue.jpg

 

 

Top 10

1. Finland

2. Netherlands

3. Norway

4. Luxembourg

5. Andorra

6. Liechtenstein

7. Denmark

8. Iceland

9. New Zealand

10. Sweden

Bottom 10

171. Lao People's Democratic Republic (Laos)

172. Sudan

173. Islamic Republic of Iran

174. Vietnam

175. China

176. Somalia

177. Syrian Arab Republic

178. Turkmenistan

179. DPRK (North Korea)

180. Eritrea

முழுப் பட்டியலையும் பார்வையிட இந்த இணைப்பை அழுத்துங்கள் -

http://rsf.org/index2014/en-index2014.php#

 

நன்றி  உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம்

 

 

இதிலேயே  பாருங்கள்

சிறீலங்காவுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் நாடுகள் அனைத்தும் சிவப்பிலேயே  இருக்கின்றன

இனம் இனத்தோடு தான் சேரும்...

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லலாம், 180 வரை முன்னேறுவது எவ்வளவு  கஸ்டமாய்க் கிடக்கு.இந்தப் 15நாடுகளின் டெக்னிக்கைத் தெரிந்து கொள்ள வேண்டும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.