Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படலைகக்கு படலையும்...பிள்ளையார் கோலாவும்

Featured Replies

படலைக்கு படலையில் பிள்ளையார் கோலா குடிப்பது போல் ஒரு கனவுக்கதையில் ஐரோப்பாவில் உள்ள பல ஆலயங்களின்

சீர் கேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளது

வேறு யாராவது இந்த நிகழ்ச்சியைப் பார்திருந்தால் படலைக்கு படலை நாடகத்தில் சொல்லப்பட்ட விடயம்

ஏற்றுக் கொள்ளக் கூடியதா ?

அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

படலைக்குபடலை பார்த்தன். பிள்ளையார் கோலா குடித்தவரா ஐரோப்பாவில? இது ஒரு கற்பனைக்கதையா அல்லவா இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று அதீத கற்பனைதான் என்றாலும் இங்குள்ள மக்கள் அதையும் ஏற்றுக்கொள்வார்கள். டென்மார்க்கில் ஒரு அம்மா செய்வதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர் அங்கு போகும் மக்களை கோவிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கித்தான் செல்லவேண்டும் என்று சொல்வாராம். பக்த கோடிகளும் சாமியார் சொல்லிவிட்டார் தங்கி போகவேணும் இல்லாவிட்டால் ஏதும் நடந்துவிடும் என்ற அச்சதஇதில் அந்த விடுதியில் தங்கி போவார்களாம். வேதனை என்னவென்றால் அந்த விடுதியில் அழுக்கான தலையணைகளும் போர்வைகளும் . மக்களுடைய அச்சத்தை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யமுடியும்.

அதனால் இந்த கதையை யாரும் நிஜமாக்காமல் இருக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றேன்.

நான் கேள்விப்பட்டேன் இப்போ பிள்ளையாரும் ஜரோப்பாக்கு வர போகிறாராம் ஊரில் ஒரே சண்டையாம்

யாரும் நல்ல விசா உள்ள பெண் இருந்தால் சொல்லட்டாம் :P :P

அந்தாளின் தொந்திக்கும் தொப்பைக்கும் உகண்டாவில் தான் பொண்ணு பார்க்க வேண்டும். :roll: :)

யாரும் நல்ல விசா உள்ள பெண் இருந்தால் சொல்லட்டாம்

தம்பி என்ரை பச்சிலை (60 வயசிலை) ஒரு சூப்பர் பிகர் இருக்குது பிள்ளையாருக்கு o.k யா?? எண்டு கேட்டுச் சொல்லுலுமன்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் வந்து அதுஇது என்டு சொன்னால் சாமி கண்ணை குத்திடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் ....

இங்கு லண்டனில் "உண்டியலான்" ஜெயதேவனின் ஈழ்பதீஸ்வரர் உண்டியலே முழுக்க அமுக்குது!! மற்றக் கோயிலுகளில் கோலாவை அமுக்கிறதென்ன பெரிய நியூஸோ??????

உது மாதிரி பக்திப் பரவசமூட்டும் நிகழ்ச்சிகளை, த.தொ.இ தயாரிக்கும் முன் கண்டிப்பாக "உண்டியலானின்" ஆலோசனைகளை பெற வேண்டும்!!! இது அடியேனின் தாழ்மையான கருத்து!!!!

ரோகரா........ :lol: :mrgreen: :smile2:

  • கருத்துக்கள உறவுகள்

பரவசமுட்டும் நிகழ்சிகளை தயாரிக்க நீர் என்ன கதாசிரியரா ஜெயதேவன் சார் ஆ

  • தொடங்கியவர்

படலைக்கு படலை மறுஒளிபரப்பு வெள்ளி 11.30க்கு உண்டு

தம்பி என்ரை பச்சிலை (60 வயசிலை) ஒரு சூப்பர் பிகர் இருக்குது பிள்ளையாருக்கு o.k யா?? எண்டு கேட்டுச் சொல்லுலுமன்.......

என்ன ஜெயதேவனுக்கு எண்டால் ok யாம் உண்டியலான் பெண் தெடுவதாக கேள்வி சாந்தா விட்டிட்டு ஓடிற்றாவாம் :lol::lol: :P :P

கடந்த படலைக்கு படலையில நல்ல தெரு விடையம் பற்றி இருந்தது.

பிள்ளையார் பால்குடிக்கிறார் என்று ஏமாரும் சனத்தை கொஞ்சம் சிந்திக்க வைக்கக்கூடியது.

கிட்டத்தட்ட உதே பாணியில் தான் டென்மார்கில ஒரு அம்மன் எழுந்தருளி அருள் பாலிக்கிறதாக சொல்லி நல்ல வியாபாரம் நடக்குது.

ஜரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த சமூதாயத்தில் எத்தனை வழியில் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப வசதிகள் உள்ள இடங்களில் இருப்பவர்கள் கூட இவ்வாறான மனநிலையில் ஏமாறுவது எப்போது முடிவிற்கு வரப்போகிறது?

எமது பழைய தலைமுறை தான் தொலைந்த திருத்த முடியாத சந்ததி என்றாலும் அடுத்த தலைமுறையாவது உருப்படுமா?

  • தொடங்கியவர்

பிள்ளையார் கோலா குடிச்ச விடயத்துக்கு பல பக்தகோடிகள் எதி;ர்பு தெரிவித்திருந்ததாக அறிந்தேன்

சில நேரத்தில் சில உண்மைகள் உறைக்கத்தான் செய்யும்

படலைக்கு படலை குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்

அருள்மிக்கு கோலா பிள்ளையார் கோயிலில ஒரு கோலா ஐம்பது ஜூரோவாம்...!

நானும் ஆயிரம் கோலா உடைக்கிறதாய் வேண்டுதல் வச்சிருக்கிறன்...!

ஓகோ...........

எக்கொனொமி - டவுண் ஆயிடும் தல! :P 8)

ஓய் உந்த கதையில இடையில நம்மட கூட்டு ஒருவர் வந்து பிள்ளையார் அப்பா கலந்தடிக்கிறவரா எண்டு கேட்டவர் நீங்கள் கேட்னீங்களே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

கோயில் நடத்திறவரை பாத்தா வரக்கூடிய நியாயமான கேள்வி தானே?

வணக்கம் அனைவருக்கும்,

ரிரிஎன் தொலைக்காட்சியில் இடம்பெற்ற படலைக்கு படலை நிகழ்ச்சி தொடர்பான இந்தத் தலைப்புத் தொடர்பாக யாழ் கள நிர்வாகத்துக்கு வந்த ஒரு மடலை இங்கு பிரசுரிக்கிறோம். எதிர்வினைகளைத் தொடருங்கள்:

எழுதியவர்: நெல்லை சிவம்

ரிரிஎன் தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய கொக்கா கோலா பிள்ளையார் விடையத்தை

பாராட்டி சிலர் எழுதியதைப் பாhர்த்தேன். உண்மையில் பிள்ளையாருக்கு பால்கொடுக்கும்

பக்தர்களின் அறியாமையைவிட அதை கிண்டலடிப்பவர்களை பாராட்டுபவர்களின் அறியாமை பெரிதாக தோன்றுகிறது.

கடவுளும் மதமும் அதுசார்ந்த நம்பிக்கைகளும் மக்களுடைய உணர்வு சார்ந்த விடயங்கள்.தங்களுக்கும்

தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் துன்பமும் துயரமும் இழப்புக்களும் நேரும் போதும் எதிர்காலம்

பற்றிய கேள்விக்குறி எழும்பும் போதும் மக்கள் அதிகளவுக்கு கடவுளை நம்புகிறார்கள்.கடவுள்

தங்களது எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாhர் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த நினைப்பு முட்டாள் தனமானதாக இருந்தாலும் அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல்

கிடைக்கிறது.இந்த நினைப்பு அவர்களுக்கு ஒரு ஆறுதலையும் ஆத்ம திருப்தியையும் தருகிறது.

மக்களுடைய இந்தப் பலவீனத்தை பிழைப்புவாதிகள் மட்டுமல்லாமல் ஆக்க்pரமிப்பாளர்களும் கூட

மிகத் தெளிவாக இனங்கண்டிருக்கிறார்கள்.

இதனால் தான் ஒரு ஆக்கிரமிப்பு யுத்தம் நடக்கும் போது ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும்

எதிரிகள் திட்டமிட்டு அழிக்கின்றார்கள்.மக்களுடைய ஆத்ம பலத்தை திட்டமிட்டு சிதைக்கும்

போது சுலபமாக மக்களுடைய விடுதலை உணர்வு உணர்வு உட்பட அனைத்தையும் சிதைத்து அவர்களை

பிரித்து அழித்துவிடலாம் என்பது மரபு வழியான ஒரு ஆக்க்pரமிப்புக் கோட்பாடாகும்.

உலகிலே தங்களது விடுதலைக்காகப் போராடிய அநேகமான விடுதலை இயக்கங்கள் இந்த விடயத்திலே

மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கின்றன.

எப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் கூர்மை அடையும் போது அதை உடைப்பதற்கு எதிரிகள் மதம்

என்ற உணர்வுபூர்வமான விடயத்தை கையில் எடுத்துக் கொள்வது வழக்கமாகும்.

இந்திய விடுதலையை தடுப்பதற்கு மகாத்மாகாந்தியின் காலத்தில் இந்து முஸ்லீம் கலவரங்கள்

தூண்டிவிடப்பட்டதும் பலஸ்தீன விடுதலையை தடுப்பதற்கு சன்னி சியா முஸ்லீம் மதப்பிரிவுகளுக்கு

இடையிலான முரண்பாடுகளும் லெபனாலில் கிறீஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான

முரண்பாடுகளும் தூண்டிவிடப்பட்டதும் எரித்திரிய மற்றம் கிழக்கு தீமோர் விடுதலைப்

போராட்டக்காலத்தில் கிறீஸ்தவ இஸ்லாமிய முரண்பாடுகளும் தூண்டிவிடப்பட்டதும் என்று

எராளமான உதாரணங்களை கூறமுடியும்.

மதத்தை வைத்த பலர் பிழைப்பு நடத்துகின்றாhர்கள் என்பது உண்மை.அந்தப் பிழைப்பு வாதிகளை

விமர்சிப்பதாக அம்பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு பிள்ளையார் பாலும் கொக்காவும் தான்

குடிப்பாரோ விஸ்கி பிறண்டி வைன் குடிக்கமாட்டாரோ என்று கேட்டு இலட்சக்கணக்கான மக்களின்

உனர்வுகளை புண்படுத்த வேண்டிய தேவை ஏன் ரிரி என்னுக்கு எற்பட்டது. அதிலும் 20ஆயிரத்துக்கும்

அதிமான மக்கள் கலந்தகொண்ட ஒரு தேர் திருவிழா நிகழ்வு நடந்த அன்று இப்படி ஒரு

நிகழ்ச்சியை ஒளிபரப்பியது சரியா என்று ரிரிஎன் நிர்வாகம் சிந்தித்துப்

பார்க்கவேண்டும். இந்த நிகழ்சியினுடைய உள் நோக்கம் சமூக சீர்திருத்தத்தை அடிப்படையாகக்

கொண்டதாகத் தெரியவில்லை. எதிரி எங்கள் மக்களை கொன்றுகுவிக்கும் போது எங்கள்

பிரதேசங்களை ஆக்கிரமித்து கேக் வெட்டி கொண்டாடிக்கொண்டிருக்கும் போது மதத்தை

சீர்திருத்துவதும் பிள்ளையார் விஸ்கி வைன் பியர் குடிக்க மாட்டாரா என்று ஆராய்வதும்

முக்கியமா அல்லது தாயக விடுதலைக்காக உழைப்பது முக்க்pயமா என்பதை சிந்தித்தப் பார்த்தால்

எங்கோ தவறு நடந்திருக்க்pறது என்பதை இனங்காண முடியும்.

2002 ம் ஆண்டுதைப் பொங்கல் தினத்தன்று புதுக்குடியிருப்பிலே ஒரு புரட்சிப்பொங்கல்

நடைபெற்றது.வழக்கமான தைப் பொங்கலுடன் கோழி இறைச்சிப் பொங்கள் ஆட்டுப் பொங்கல்

மீன் பொங்கல் என்றெல்லாம் பொங்கப்பட்டது.

இந்தப் பொங்கல் விழாவை நடத்திவர்கள் உழவன் சைவப் பொங்கல் பொங்கிலால் மீனவர்கள்

மீன் பொங்கல் பொங்குவதும் கிராம மக்கள் ஆட்டு இறைச்சிப் பொங்கல் பொங்கவதும்

தவறில்லை என்ற கூறினார்கள்.

இது மக்களை ஆத்திரப்படவைத்தது. இந்த விடயம் தேசியத் தலைவரின் கவனத்துக்கு சென்ற போது

பகுத்தறிவு பிரச்சாரம் என்பது மக்களின் உணர்வுகளை புண்படுத்தாதவகையில் நடைபெறவேண்டும்

என்றும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் முதலில் தங்களுடைய மட்டத்துக்கள் அதை செய்து

மக்களுக்கு முன்மாதிரியாக நம்பிக்கதரக் கூடிய விதத்தில் நடந்து காட்ட வேண்டும் என்றும்

எடுத்த எடுப்பிலேயே மக்களை உணர்வுகளை புண்படுத்தி அவர்களை ஆத்திரப்பட வைக்கக் கூடாது என்று

கூறி அதில் சம்மந்தப்; பட்டவர்களை மிகக் கடுமையாகக் கண்டித்ததாகவும் அறிந்தேன்.

இந்த விடயம் ரிரிஎன்னுக்கு ஏன் தெரியாமல் போனது? என்று எனக்குத் தெரியவில்லை.

ஈழத் தமிழர்களாக நாங்கள் இப்போது தேசிய விடுதலைக்காலகட்டத்தில் இருக்கிறோம்.இந்த

தேசிய விடுதலைக்கூடாகவே நாங்கள் சமூக விடுதலையையும் பெறமுடியும்.

தேசிய விடுதலையின் தளங்களும் சமூகவிடுதலையின் தளங்களும் ஒன்றல்ல என்பதும் எதிரிகள்

எப்போதும் ஒன்றை அழிப்பதற்கு மற்றதை பயன்படுத்துவார்கள் என்பதையும் நாங்கள்

உணர்ந்தகொண்டு பிள்ளையார் ஏன் விஸ்கியும் பிரண்டியும் வைனும் குடிக்கமாட்டார் என்று

ஆராய்வதை விட்டு விட்டு எங்கள் தாயகத்தில் சிறீலங்கா படைகள் எப்படி எங்கள் உறவுகளை

அழிக்கிறார்கள்? எப்படி அங்கே ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்கின்ற விடயங்களை ரிரின்

ஆராய்ந்து வெளிக்கொண்டு வருமாக இருந்தால் அது எங்களது இனத்துக்கு செய்கிற பேருதவியாக

இருக்கும்.

-நெல்லை நவம்

இண்றைக்கும் இந்து மதத்தை சூறையாடிக்கொண்டும் பலரை மதமாற்ற பயன் படுவதும் இப்படியான விடயங்கள்தான்...

பிள்ளையார் பால் குடிக்கிறார் கேட்க்க பரவசமான செய்திதான்...! ஆனால் உண்மையில் பார்த்தவர் யார் எண்டு கேட்டுப்பாருங்கள்.... அவர்கள் சொல்வார்கள் எனக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் கண்டார் என்பார்கள்...! உண்மை எது பொய் எது எண்டே தெரியாமலே பலர் அதை ஏற்ற்ம் கொள்ளுவர்...!

இதையேதான் சொல்லி மற்றய மதத்தவர் இந்து மதத்தை கேவலப்படுத்த சாட்டை கண்டு பிடிக்கிறார்கள்... பாரம்பரியங்கள் மிக்க சைவ மதம் இப்படியான பரபரப்பூட்டும் செய்திகளால்த்தான் வளர்க்கபட வேணும் இந்துக்களை கவரவேணும் எண்ட நிலையிலா இருக்கிறது என்ன...???

அப்படியான கேவலத்தை செய்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது கூட இந்து மதத்துக்கு செய்யகூடிய மிகப்பெரிய தொண்டுத்தான்...! அப்படியாவது மதத்துக்கு கிடைக்கும் கேவலமான பெயரையும், அவதூறுகளையும் விலக்கி மூடநம்பிக்கைகளையும் களைய வேணும் அப்போதான் இந்துக்களுக்கு நல்ல மதிப்பு கிட்டும்...!

இந்து மதம் எப்போதுமே கடவுள் நேரடியாக வேறொரு உருவில் வந்து ஆட்கொள்ளுவார் மறைவார் எண்றுதான் அறிந்து இருக்கின்றோம்... இப்படி மறைமுகமாய் வந்து பால்குடிக்கிறது போறது எல்லாம் ஏன் எண்டு விளக்கமானவை சொல்லும் வரை நம்புறது எல்லாம் நடக்காது...!

  • கருத்துக்கள உறவுகள்

வேறு மதத்தில் உள்ளவர்கள் எங்கள் மதத்தை பற்றி அறிந்ததை கூட எங்கள் மதத்தில் உள்ளவர்கள் அறியவில்லை என்பதுதான் கவலைபடவேன்டியவிடயம்.வினாயகர

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

வணக்கம்

படலைக்கு படலை தொடர்பில் நெல்லை சிவம் அவர்கள் எடுத்துரைத்துள்ள

கருத்துக்கள் தொடர்பில் சில எதிர்வினைகளை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்

உலக மதங்கள் யாவுமே மனித வாழ்வியலுக்கு உயர்ந்த பல பண்புகளையும்

வழிகாட்டுதல்களையும் கொண்டுள்ளது என்பது உண்மை

இந்த உண்மைகளையும் அது மனிதனுக்கு தருகின்ற பயன்களையும் முழமையாக உணராமல்

மதத்தின் பெயரால் தற்காலத்தில் நிகழ்கின்றவை வருந்த தக்கது

இதற்கு பல சான்றுகள் தற்காலத்தில் கண்முண்ணே உள்ளன

மதத்தின்: ஆத்மார்த உண்மையான வழிகாட்டுதல்களை புறந்தள்ளிவிட்டு மதத்தை மனிதன்

வழிகாட்ட நினைப்பது கொடுமையான ஒன்று

இந்நிலையில் மனிதனுடைய இறை நம்பிக்கையையும் அதனுள் பொதிந்து கிடக்கின்ற மூடநம்பிக்கைiயும்

உள்வாங்கி கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் சாட்சியம்தான் பாரிஸ் பிள்ளையார் தேர் பவணி

இதனை தகுந்த சான்றாக இந்த தேர்த் திருவிழாவுக்கு அனுசரணையை வழங்குவது வேறு யாருமல்ல

பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம் ஆகும்...

இந்த அனுசரணையுடாக மக்களுடைய பொதுப்புத்தியை மழுகச் செய்வது மட்டுமல்லாது

தேசிய உணர்வை திசை திருப்பவும் செய்கின்றனர்

20 ஆயிரம் மக்கள் தேர் பவணியில் ஒன்று கூடினார்கள் என்று நெல்லை சிவம் குறிப்பிட்டுள்ளார்

இந்த 20ஆயிரம் பேருக்குள் மத்தியில் புனர்வாழ்வுக் கழகத்திற்கான பணவைப்புக்கள் சிறிலங்கா

அரசால் முடக்கப்பட்ட நிலையில் புனர்வாழ்வு உறுப்பினர்கள் உண்டியல் குழுக்கிய ஏந்தி நின்ற

போது விழந்த காசு எவ்வளவு?......பிள்ளையாரின் உண்டியலில் விழுந்த காசு எவ்வளவு ?.

சிந்தித்துப்பார்க வேண்டும்.....நெல்லை சிவமும்..20ஆயிரம் பேரும்...

ஆலய ஆகம விதிப்படி ஆண்டவனின் தேர் கோயிலைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளை மட்டுமே

பவனி வரவேண்டும்....போன வீதியால் மீண்டும் வரக் கூடாது

ஆனால் பிள்ளையார் தமிழ்கடைகள் உள்ள தெருவெல்லாம் தேடிப்போனது மட்டுமல்லாது

போன வீதியால் மீளவும் பயணி வந்தது என்ன?

நெல்லை சிவத்தை இது புண்படுத்த வில்லையா?

கடைக்கு கடை போட்டி போட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்தார்கள்

இது நெல்;லை சிவத்தின் கண்களுக்கு தெரியவில்லையா?

இவ்வாறு பல விடய்ங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...

இதேவேளை பாரிசில் நடக்கின்ற தேசிய நிகழ்வுகளுக்கு 20ஆயிரம் பேரையும் திசைதிருப்பி

தாயகத்திற்கு வலுவுூட்டியிருக்கலாம் நெல்லை சிவம்...

இதேவேளை தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்

தமிழீழ தேசிய போராட்டம் வெறுமனவே மண்மீட்டு போரோடு நிற்கவில்லை

அது சமூகத்துக்குள் உறைஞ்சு கிடக்கி;ன்ற அல்லது சுூத்தை பிடித்துக் கிடக்கின்ற

பல விடயங்களை கழுவிச் செல்கின்றது

இதற்கு சிறந்த உதாரணம் பெண்கள் படைப்பிரிவு...

பெண்கள் அடிமைப்படுத்துவதில்: பெரும் பங்காற்றி வந்த மதக்கோட்பாடுகளை தகர்தெறிந்து

தேசிய வி:டுதலையின் பால் பெண்களின் அகவிடுதலையையும் அது அது பெற்றுக் கொடுத்துள்ளது

இதேவேளை தற்காலத்தில் தமிழ் மொழிக்குள் ஊடுருவிக்கிடக்கின்ற வட மொழி அதாவது ஆரியச்

சொற்களை களைந்து தூய தமிழ் சொற்களை பாவணைக்கு கொண்டு வந்துள்ளனர் ( அகவை...அகவணக்கம்)

இதேபோல் தமிழர்களின் பாரம்பரிய பறை..உடுக்கை போன்ற பல இசைக்கருவிகளின் ஊடாக இண்னிய அணி

உருவாக்கம்...திருக்குறல் மாநாடு என்று நீண்டு செல்கின்றது பட்டியல்

இவைகள் ஆரியத்தையும் அதகோடு அந்நிய ஆதி;க்கத்தையும் விரட்டியடித்து

தேசிய விடுதலைப் போராட்டதுக்கு வலுச் சேர்கும் ஓர் அங்கமே...

இதனைச் செய்வது களப் போராளிகள் அல்ல...கலைமாந்தர்களே...

இதன் வழி 2002ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் நிகழந்த புரட்சிப் பொங்கலும்..அதற்கான

தேசியத் தலைவரது குறிப்பும் என்று ஒரு விடயத்தை கோடிட்டு காட்டியுள்ளார்

புதுவை இரத்தினதுரை அவர்கள் ஐரோப்பிய பயணத்தின் போது தேசியத் தலைவர் குறிப்பிட்ட

விடயம் ஒன்றை பாரிஸ் வாழ் கலைஞர்களோடு பகிர்ந்து கொண்டார்

அது

ஒருவர் சும்மா மேடையில் தேசியத் தலைவரின் பெயரை ( பிரபாரன் ) என்று வெறுமனவே

அழைப்பதற்கும் ஒரு கவிஞன் தனது கவிதையில் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதற்கு

நிறைய வித்தியாசம் உள்ளதென்றார்

அதாவது அது ஒரு கலைஞனுக்கு உள்ள சிறப்பு அல்லது அதிகாரம் என்றார்

அந்த வகையில் சமூகத்தலி;: நடக்கின்ற சீரழிவுகளை கோடிட்டு காட்டுவதும் கூரீய விமர்சனத்தை

வைப்பதும் ஒரு கலைஞனுடைய கடமை...அந்த கடமையை படலைக்கு படலை செவ்வன செய்துள்ளது

படைப்பென்பது வெறுமன சமூகத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாது சமூகத்திற்கான சிறந்த வழிகளையும்

திறக்க வேணடும் அதுவே ஒரு படைப்பின் பொறுப்பு

இதில் மதம்...இனம்..என்று வளைந்து கொடுக்கல் ஆகாது

இதேவேளை பிள்ளையாரின் வரலாற்றை ஒரு கணம் நினைவு கூர்ந்து பாருங்கள்

தமிழரின் மதம் சைவம்...அவர்களின் வழிபாட்டுத் தெய்வம் முருகன்

இதற்கு வரலாறுகள் நன்கு சான்று பகிர்கின்றன

இந்நிலையில் தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றுக்குள் ஊடுருவியது வட இந்திய ஆரியம்

இ;ந்த ஆரியத்தின் ஒரு குறியீடுதான் பிள்ளையார்.

பிள்ளையார் எவ்வாறு முருகின் சகோதரர் ஆனார் என்பதற்கு தனிக் கதை உண்டு

ஆரயித்pன் வருகை எவ்விதம் தமிழிரன் பண்பாடை சீரழித்து....விழுங்கியது பற்றி நீண்ட நூல்கள் உண்டு

அது பற்றி எழத இது போதாது...

இ;ந்நிiயில் தமிழரின் முதன்மை தெய்வமான முருகளை இழிவுபடுத்தினால்

அது கண்டனத்துக்குரியது...பிள்ளைய

வணக்கம்...

படலைக்கு படலை நாடகத்தொடரின் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஊடாக நல்லதொரு சிந்தனைக்கான களம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கவிநயனின் கருத்துக்களோடு உடன்படுகிறேன். படலைக்குப் படலை நிகழ்ச்சி தெளிவான ஒரு நோக்கோடு உருவாக்கப்பட்டிருந்தது. அந்த முயற்சி தொடரவேண்டும்.

நமது சமூகத்தின் போலித்தனங்களையும், பொதுப்புத்தியை அவமதிக்கும் செயல்களையும் இப்படியான படைப்புகளூடாக வெளிக்கொணரவேண்டும். படைப்பு என்பது காலத்தின் பதிவு. படைப்பு என்பது சமூக மாற்றத்துக்கான வாயில்.

நெல்லை சிவத்தின் கருத்துக்கள் போலித்தனங்களை வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவே படுகிறது. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மதஉணர்வுகளில் தலையிடாமைக்குக் காரணம் "ஆதரவு" என்பதை ஒட்டிய நிலைப்பாடு ஆகும். மக்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையே. விடுதலைப் போராட்ட அமைப்புகள் மக்களின் முட்டாள்தனங்களில் கைவைக்கவில்லை என்பதால் சமூக அக்கறை உடைய சாதாரண தமிழனும் கைவைக்கக்கூடாது என்பது போன் நெல்லை சிவத்தின் கருத்து அருவருக்கத்தக்க வாதம்.

ஆடம்பர வாழ்க்கை வாழும் இந்த புலம்பெயர்ந்து மக்களின் போலித்தனமான மதஉணர்வினை பக்தி என்றும், மனக் கவலை போக்கும் மார்க்கம் என்றும் பொருட்படுத்துவது அபத்தம். கூடை கூடையாய் தேங்காய் உடைத்து வீதியைக் குப்பையாக்கி, உடைத்த மறுகணமே அதனை அள்ளி குப்பையில் வீசுவதும் மதஉணர்வா? மனிதநேயமா? la chappel பிள்ளையார் கோவில் திருவிழாவின் போது தேசத்தில் அல்லல்படும் மக்களுக்காய் சிறுவர்கள் கூட தெருவில் நின்று உண்டியல் குலுக்கி பணம் கேட்டார்கள். கண்டும் காணாதவராய் சென்றனர் தமிழர். மனமுவந்து சிறிது பணத்தை போட்டுச் சென்றனர் வேற்றினத்து மக்கள். அல்லல்படும் உறவுகளுக்காய் பணம் போட மனம் வராத தமிழ் உறவுகள் கூடை கூடையாய் தேங்காய் உடைத்தனர். கண்டு மனம் வெந்தது. இவர்கள் தங்கள் உடைகளைக் காட்டவும், நகைகளைக் காட்டவும், ஆடம்பர வாழ்வின் அசிங்கத்தைக் காட்டவும் தான் திருவிழாவுக்கு வந்தார்கள். இது ஒருபுறம் இருக்க - இந்த மக்களின் முட்டாள்தனங்களை பயன்படுத்து பணம் பண்ணும் கூட்டம் இன்னொருபுறம். பொதுப்புத்தியை அவமதிக்கும் போலிமனிதர் இவர் தம்மை தோலுரித்துக் காட்ட ரிரிஎன் தமிழ்ஒளி தொடர்ந்து பங்காற்றவேண்டும். சமூக விழிப்புணர்வை உண்டுபண்ணும் மேலும் பல நிகழ்வுகளை தொகுத்து வழங்கவேண்டும். :D

அண்ணா

இந்த ரிரியின் அப்படியே இந்த இந்தியச் சினிமாவுக்குள்ளால பரவுற தமிழ் சமூகத்துக்கான பின்னடைவான சிந்தனைகளைக் களையச் செய்யாதோ அண்ணா.

வெறும் புகலிடத்தில உள்ள படலை பிள்ளையார் தேங்காய் என்று மட்டும் தான் சுத்துமோ அண்ணா.

அப்படியே தாயகம் என்றால் அண்டப் புளுகுகள அவிட்டு விடுறதையும் செய்யுமோ அண்ணா.

சீரியல் அது இதென்று அதுகளால ரிரிஎன்னுக்கு வருமானம் போல.

அது சரியண்ணா வருமானம் வரும் என்றால் மக்கள் எப்படித்தான் போனால் தான் என்ன அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.