Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும் - யாழ் ஆயர்

Featured Replies

'யாழ்ப்பாணத்துக்கான உணவுக் கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும்' யாழ் ஆயர்

யாழ் குடாநாட்டு மக்களுக்கு இன்னும் 5 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லவுள்ள கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று யாழ் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுவதாகத் தெரிவித்துள்ள ஆயர், அங்கு கொழும்பில் இருந்து உணவுக் கப்பல் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சியின் வழித்துணை தேவை என்றும், அதற்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்கும் பட்சத்திலேயே அவர்கள் வழித்துணை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அதனால், யாழ் மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு விடுதலைப்புலிகள் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரும் அறிக்கை ஒன்றை தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக தான் விடுதலைப்புலிகளுக்கு கடிதம் ஒன்றை தொலைநகல் மூலம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் ஆயர் குறிப்பிட்டார்.

ஏ9 பாதையைத் திறந்து அதன் மூலம் பொருட்களை அனுப்புமாறு விடுதலைப்புலிகள் கேட்பதாகவும், ஆனால் சண்டை நடப்பதால் அந்தப் பாதையை திறக்க முடியாது என்று இராணுவம் கூறுவதாகவும் ஆயர் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அங்கு பொருட்களின் விலை மிகவும் அதீதமாக அதிகரித்துள்ளதாக யாழ் மக்கள் சிலர் தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்கள்.

சில இடங்களில் சீனியின் விலை 200 ரூபாயாக விற்கப்படுவதாக சிலர் கூறினார்கள்.

எந்தவிதமான தொழிலும் இல்லாத நிலையில் தம்மால் எதனையும் வாங்க முடியாத நிலை இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் பட்டினி நிலை உருவாகலாம் என்றும் சிலர் கவலையுடன் தெரிவித்தனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்துக்கு இரண்டாவது உணவுக் கப்பலை தாம் அனுப்பியுள்ளதாக இலங்கை அரசாங்க அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி கூறியுள்ளார்.

நன்றி பிபிசி தமிழோசை

யாழ். தரைவழிப் பாதை திறப்பு

யாழ்ப்பாணத்தில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கான உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான தேவைகள் இருக்கின்றன.

தரைவழிப் பாதை ஒன்றைத் திறந்து மக்களினது மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்ய தயாராக உள்ளோம்.

குடாநாட்டு மக்களுக்கும் வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள மக்களுக்குமான ஒரு தரைவழிப் பாதையைத் திறந்து அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு போகின்ற போது யுத்தத்தை நிறுத்தி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர் என்ற எமது தேசியத் தலைவரின் நிலைப்பாட்டை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு எழுத்து மூலமாகக் கொடுத்துள்ளோம்.

மக்களுக்கான தேவைகளை முடக்குகின்ற சிறிலங்காவின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்பதை மனிதாபிமான அமைப்புகளிடமும் சர்வதேச செஞ்சிலுவச் சங்கத்திடமும் இன்று நோர்வே அனுசரணையாளர்களிடமும் கூறியிருக்கிறோம்.

கடல் வழி அல்லது ஆகாய வழி போக்குவரவுகளுக்கு எம்மால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அப்பயணங்கள் எந்த நேரத்திலும் ஆபத்துக்குரியன என்றும் தரைவழிப் பயணத்திற்குத்தான் உத்தரவாதம் அளிக்கப்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளோம்.

தமிழ்செல்வன்.

----------------

நோர்வேப் பிரதிநிதிகள் வன்னி சென்றது பற்றியும்..புலிகளுடன் பேசியது பற்றியும்..பிபிசிக்கும் தமிழோசைக்கும் அறவே தெரியாதா...???! காரணம்..இவை இரண்டும் இச்சந்திப்புக் குறித்து மூச்சே விடல்ல..! தமிழ்செல்வனின் ஊடகவியலாளர் மாநாடு குறித்தும்..அதில் பாதை திறப்புக் குறித்தும் சொல்லப்பட்டவை குறித்தும்...தமிழோசைக்கும் தெரியாதா...?! அமெரிக்க ஏபி செய்திஸ்தாபனம்..சிங்களவர்களை எச்சரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்...

Sri Lankan rebels warn Sinhalese will pay the price for army action

Associated Press, Wed September 6, 2006 08:43 EDT . CASSIE BIGGS

S. P. Tamilselvan, the Tiger's political head, told Norway's ambassador Wednesday, that Tamils were suffering ``absolute misery,'' and criticized the international community's lack of action, the rebels' peace Web site said.

He warned that the majority Sinhalese would have to ``face the consequences soon.''

Tamilselvan's comments were the clearest indication yet that the Liberation Tigers of Tamil Eelam were preparing to retaliate for the government's capture of a key rebel enclave in the east.

பிபிசியும்..தமிழோசையும்..வன்ன

ஆகவே சண்டை நடப்பதால் தரைவளிப்பாதை திறக்க முடியாது என்கிறார்கள்.... அதாவது போர் நிறுத்தம் அமுலில் இருக்கின்றது என்கிறார்கள்...! ( போர் நிறுத்தம் இருப்பதினால் பாதை திறக்க முடியாது...)

நல்லது...!

:lol: :lol: :lol:

இப்பான் பிபிஸியின் நிலமை விளங்கியிருக்குப் போல

:lol: :lol: :lol:

ஏ9 பாதையைத் திறந்து அதன் மூலம் பொருட்களை அனுப்புமாறு விடுதலைப்புலிகள் கேட்பதாகவும், ஆனால் சண்டை நடப்பதால் அந்தப் பாதையை திறக்க முடியாது என்று இராணுவம் கூறுவதாகவும் ஆயர் தெரிவித்தார்

அப்போ கடலில் சண்டையும் இல்லை கண்ட கண்ட நேரம் மீன் பிடிக்கவும் அனுமதி :P :P

அப்போ கடலில் சண்டையும் இல்லை கண்ட கண்ட நேரம் மீன் பிடிக்கவும் அனுமதி :P :P

அரசாங்கத்துக்கு வால் பிடிக்கிறவை சொன்னால் அது சரியாத்தான் இருக்கும்...!

மேற்கோள்:

ஏ9 பாதையைத் திறந்து அதன் மூலம் பொருட்களை அனுப்புமாறு விடுதலைப்புலிகள் கேட்பதாகவும்இ ஆனால் சண்டை நடப்பதால் அந்தப் பாதையை திறக்க முடியாது என்று இராணுவம் கூறுவதாகவும் ஆயர் தெரிவித்தார்

அதிவணக்கத்துக்குரிய ஆயருடன் எனக்குப் பல வருடமாக தொடர்பு உண்டு (மன்னார் வவுனியா ஆயராக இருந்த போது)

இவருக்கு தற்போது ஒரு மாறாட்டம் உள்ளதை அறியமுடிகிறது தனது ஒரு குருவை அல்லைப்பிட்டியில் காணவில்லை என்ன நடந்தது என நேற்று மகிந்தனிடம் கேட்டு விட்டு இன்றைக்கு மாறி போடுகிறார்;;;;;;;;;;;;;;....................................

............

காணாமல் போன குருவின் சகோதரி பிரான்சில் உள்ளார் இவ்வயர்களின் பொறுப்பில் இருந்த தம்பின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்

அரசை பொறுத்த வரை கடல் அல்லது ஆகாய மார்க்கமாகவே விநியோகத்தை தொடர விரும்புகிறது தெரிகிறது. இதன் மூலம் அவர்களது இராணுவ விநியோகங்களையும் இரகசியமாக செய்ய வாய்ப்பிருப்பதோடு புலிகளின் தலையீட்டையும் பெருமளவு தவிர்த்து கொள்ளலாம். மாறாக தரை வழி பாதை விநியோகம் என்பது புலிகளின் ஆதரவு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் ஊடாக அரச கட்டுபாட்டு பகுதிக்கு விநியோகம் செய்து கொண்டு எதிர் காலத்தில் புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்கு அரசினால் கொண்டு வரப்படக் கூடிய பொருளாதார தடை அல்லது கெடுபிடிகளுக்கான வாய்ப்புகள் முற்றாக இல்லாமல் போய் விடுகிறது.

இந்த இழுபறியின் பின்னனி இதுவாகத்தான் இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குடாநாட்டில் பட்டினிச்சாவை தவிர்க்க

ஓரிரு கப்பல்களையாவது அனுமதியுங்கள்

யாழ்.ஆயர் விடுதலைப் புலிகளின் தலைவரிடம் அவசர கோரிக்கை

குடாநாட்டில் பட்டினிச்சாவை தவிர்ப்பதற்காக ஓரிரு உணவுக் கப்பல்களையாவது மனிதாபிமான ரீதியில் அனுமதிக்கும்படி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் யாழ்.ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஊடாக ஆயர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ். அரச அதிபரின் அறிக்கைப் பிரகாரம் கையிருப்பில் உள்ள உணவுப் பொருள்கள் இன்னும் ஐந்தே நாள்களில் முடிவடைந்து விடும். இப்பொழுது கொழும்புத் துறைமுகத்தில் யாழ். மக்களுக்கென உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டிருக்கும் கப்பல் ஓரிரு நாள்களில் புறப்படாவிடில்(06 ஆம் பக்கம் பார்க்க) யாழ்.மக்கள் பட் டினிச்சாவை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து தொழில்துறையில்லாமல் ஏற்கனவே துன் பத்தை அனுபவிக்கும் மக்களை பட்டினிச் சாவை எதிர் நோக்கவைப்பது கொடூரமா னது.

எனவே ஓரிரு கப்பல்களையாவது தடை யின்றி யாழ். வந்தடைய அனுமதிக்கும்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை மனிதாபிமானரீதியில் அன்பாக வேண்டுகின்றோம்.

தமிழ் மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த அவசர வேண்டுகோளை உடன் நிறை வேற்றுவீர்களென அன்புடன் எதிர்பார்கின் றோம் என்றுள்ளது.

-உதயன் செப்ரெம்பர் 06 2006

  • தொடங்கியவர்

Jude

நீங்கள் பத்திரிகை வெளிவந்த 6 ந் திகதியை தவறாக 9 ந் திகதியென்று எழுதியுள்ளீர்கள் அதனை மாற்றிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தற்போது ஒரு மாறாட்டம் உள்ளதை அறியமுடிகிறது தனது ஒரு குருவை அல்லைப்பிட்டியில் காணவில்லை என்ன நடந்தது என நேற்று மகிந்தனிடம் கேட்டு விட்டு இன்றைக்கு மாறி போடுகிறார்;;;;;;;;;;;;;;....

என்ன வகையில் மாறாட்டம் என்று விளக்கமாக எழுதுங்கள்.

[*]காணாமல் போன குருவை இராணுவம் கடத்தியிருக்கலாம் அல்லது கொன்றிருக்கலாம்.

[*] சிறிலங்கா இராணுவத்தின் தலைவர் மகிந்த.

[*]அவரிடம் ஆயர் தனது குருவை பற்றி கேட்டார்.

[*] ஏ9 பாதை வன்னிக்கூடாக வருகிறது.

[*] வடக்குக்கான கடலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

[*] இவற்றுள் எந்த வழியில் உணவு யாழ்ப்பாணம் வரவேண்டுமானாலும் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பின் மத்தியில் செஞ்சிலுவை சங்கமோ ஐ.நா. அகதிகள் அமைப்போ அப்படி கொண்டுவர போவதில்லை.

[*] கடல்வழியே உணவு வருவதற்கு சிறிலங்கா அனுமதிக்கிறது.

[*] பட்டினி சாவை தவிர்க்க ஆயர் விடுதலைப்புலிகளிடம் கடல்வழி உணவு வர அனுமதி கேட்கிறார்.

இதில் என்ன மாறாட்டம்?

காணாமல் போன குருவின் சகோதரி பிரான்சில் உள்ளார் இவ்வயர்களின் பொறுப்பில் இருந்த தம்பின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்.

செஞ்சோலையில் மாண்டுபோன 61 சிறுமிகளின் பெற்றோரும் தான் அழுகிறார்கள். செஞ்சோலையில் யாருடைய பாதுகாப்பை நம்பி, யாருடைய பொறுப்பில் இந்த சிறுமிகள் சென்றிருந்தார்கள்?

வடக்கு கிழக்கில் நடக்கும் போரை ஆயர் ஆரம்பிக்கவும் இல்லை. ஆயுதம் ஏந்தி நடத்தவும் இல்லை. காணாமல் போன மதகுருவை ஆயர் கட்டாயப்படுத்தி மதகுருவாக்கி போர்க்களத்தில் வாழ நிர்ப்பந்திக்கவும் இல்லை.

ஆயர் இன்று உணவுக்கப்பலை அனுமதியுங்கள் என்று கேட்பது, நாளை உங்கள் உறவுகள் யாழ்ப்பாணத்தில் பட்டினியால் இறந்தபிறகு நீங்களும் அழாமல் இருப்பதற்காகவே தவிர மாறாட்டத்தில் அல்ல.

z_P7-Inter2.jpg

கிறிஸ்தவ மதகுருக்கள் கோவிலில் புூசை செய்வதுடன் தமது தொழில் முடிந்து விட்டது என்ற வரையறைக்குள் செயற்படுவது இல்லை. அவர்கள் தமது மக்களுக்காகவும் அவர்களது தேவைகளுக்காகவும் குரல் கொடுத்து அதற்காக சிறையிலடைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இந்த வகையில் யாழ்ப்பாண ஆயர் பட்டினி சாவை எதிர்நோக்கும் மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுப்பதில் என்ன மாறாட்டம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலென்ன பகிடி தெரியுமோ!

புலிகளுக்கு யாழ் நிலமை தெரியா மாதிரியும், பி.பி.சி தமிழோசையும் ஆயரும் தான் அதை தெரி வைக்கிற மாதிரி கதை போகுது.

யாழில் சண்டை நடந்த போதும், கப்பலை விடுதலைப்புலிகள் அனுமதித்தனர். ஆனால் ஐ.சி.ஆர்.சி என்ன செய்தது? புலிகள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியதா? 4000 தொன் ஏற்றப்பட வேண்டிய கப்பலில், 1500 தொன் உணவுப்பொருட்கள் மட்டும் ஏற்றப்பட்டால், மிகுதி இடத்தில் என்ன நடாந்தது? ஆயரோ பி.பி.சியோ பதில் பெற்று தரமுடியுமா?

இங்கே யாரும் ஆயர் கேட்டது தவறென்று சொல்லவில்லை. ஆனால், அவர் சொன்ன வழியும், முறையிலும் தவறிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் ஆயர் கேட்டது தவறென்று சொல்லவில்லை. ஆனால், அவர் சொன்ன வழியும், முறையிலும் தவறிருக்கலாம்.

ஆயர் கேட்டது தவறு என்று யாரும் சொல்லவில்லை என்பது உண்மையே. ஆனால் ஆயருக்கு மாறாட்டம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலே எழுதியிருப்பதை படித்து பாருங்கள்.

எனது கருத்து ஆயருக்கு மாறாட்டம் இல்லை என்பதே. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன? ஆயருக்கு மாறாட்டம் என்று நீங்களும் கருதுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சண்டை நடந்த போதும், கப்பலை விடுதலைப்புலிகள் அனுமதித்தனர். ஆனால் ஐ.சி.ஆர்.சி என்ன செய்தது? புலிகள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியதா? 4000 தொன் ஏற்றப்பட வேண்டிய கப்பலில், 1500 தொன் உணவுப்பொருட்கள் மட்டும் ஏற்றப்பட்டால், மிகுதி இடத்தில் என்ன நடாந்தது? ஆயரோ பி.பி.சியோ பதில் பெற்று தரமுடியுமா?

.

விடுதலைப்புலிகளோ, செய்தி நிறுவனங்களோ ஐ.சி.ஆர்.சியை இது வரை இந்த கப்பலில் வேறு என்ன வந்தது, என்று கேட்டு சந்தேகம் தெரிவிக்கவில்லை. உங்கள் கற்பனைக்கு ஐ.சி.ஆர்.சி., பீபீசி, ஆயர் எல்லோரும் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இந்த கேள்விக்கு பதில் ஆயர் உங்களுக்கு எடுத்து தரவேண்டிய தேவையில்லை. ஆயருக்கு அங்கேயுள்ள மக்களின் வாழ்வும் உயிருமான போராட்டம் பற்றிய தேவைகளே நிறைய இருக்கின்றன.

கற்பனை வதந்திகளை உருவாக்கி பறக்க விடாமல் ஐ.சி.ஆர்.சிக்கு எழுதுங்கள், பதில் கிடைக்கும். அல்லது தொலைபேசி எடுத்து கேஞங்கள், எங்கே விபரம் கிடைக்கும் என்றாவது சொல்வார்கள்.

Postal address

International Committee of the Red Cross

19 avenue de la Paix

CH 1202 Geneva

Fax

ICRC general: ++ 41 (22) 733 20 57

Production, Marketing, Distribution Division: ++ 41 (22) 730 27 68

Phone

++ 41 (22) 734 60 01

மேற்கோள்:

ஏ9 பாதையைத் திறந்து அதன் மூலம் பொருட்களை அனுப்புமாறு விடுதலைப்புலிகள் கேட்பதாகவும்இ ஆனால் சண்டை நடப்பதால் அந்தப் பாதையை திறக்க முடியாது என்று இராணுவம் கூறுவதாகவும் ஆயர் தெரிவித்தார்

அதிவணக்கத்துக்குரிய ஆயருடன் எனக்குப் பல வருடமாக தொடர்பு உண்டு (மன்னார் வவுனியா ஆயராக இருந்த போது)

இவருக்கு தற்போது ஒரு மாறாட்டம் உள்ளதை அறியமுடிகிறது தனது ஒரு குருவை அல்லைப்பிட்டியில் காணவில்லை என்ன நடந்தது என நேற்று மகிந்தனிடம் கேட்டு விட்டு இன்றைக்கு மாறி போடுகிறார்;;;;;;;;;;;;;;....................................

............

காணாமல் போன குருவின் சகோதரி பிரான்சில் உள்ளார் இவ்வயர்களின் பொறுப்பில் இருந்த தம்பின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்

நீங்கள் ஆயர் பற்றி சொல்லுவது தவறு.அவ்ரின் பொறுப்பில் பொறுப்பில் என்கின்றீர்களே அவர் தான் கடத்துவபரிடம் ஒப்படைத்தாரா.ம்ற்றது அவர் புலிகளிடம் கேட்டதில் தவறு ஏதும் இல்லை அவர் மக்களின் தெவையை கூறி உள்ளார் இராணுவம் ஆயுதம் கொண்டுவந்துவிடும் என்பதால் சனத்தை மறக்கமுடியுமா ஆமி காரன் விமானத்தாலி இறக்கிருவான் சனம் பட்டினியால் செத்துவிடும்.இது தான் உங்கள் எதிர்பார்ப்பா.ஒருவர் மீது அநாவசியமாக குற்றம் சுமத்தக்கூடாது :oops: :oops:

எதை எதை பற்றி விமர்சனம் செய்வது என்றுகூட........

ஒரு பொறுப்புணர்ச்சி இல்லையா?.........

ஏதோ எஞ்சி இருக்கிறது கொஞ்சம்............

அதையாவது வாழ வழி விடுங்களேன்........

தலைமைக்கு .......

எல்லாம் தெரியாமல் போகுமா...........

சும்மா கத்தி...........

இருக்கிற உதவிகளையும்..-சிங்களவன்

மேல அனுப்ப வழி பண்ணாதீங்க...........

நிறுத்திடலாமே- தப்பா??

  • தொடங்கியவர்
ஆயர் இங்கே கருத்துத் தெரிவித்திருப்பது அரசாங்கத்திற்கு ஆதரவாகவில்லை. யாழ் மக்களின் அவலநிலை கண்டே. அதைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

அது உண்மை வசம்பு உங்களின் கருத்துடன் இது தான் முத்லாவதாக ஒத்துபோகின்றேன்.நீங்கள் புலத்தில் இருந்துகொண்டு கதைகிறீர்கள்.உங்கள் பிள்ளைகளுக்கு 2 வாரம் பால்மாவோ அல்லது அரிசியோ அது வேண்டாம் 2 வாரம் உங்களாம் வேலை கிடைக்காமல் இருக்கமுடியுமா தயவுசெய்து யாழ் மக்களின் நிலையை புரிந்துகொள்ளுங்கள்

அதுமட்டுமல்ல ஆயரை குறை சொல்லுவதையும் தவிருங்கள்

கிறிஸ்தவ மதகுருக்கள் கோவிலில் புூசை செய்வதுடன் தமது தொழில் முடிந்து விட்டது என்ற வரையறைக்குள் செயற்படுவது இல்லை. அவர்கள் தமது மக்களுக்காகவும் அவர்களது தேவைகளுக்காகவும் குரல் கொடுத்து அதற்காக சிறையிலடைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இந்த வகையில் யாழ்ப்பாண ஆயர் பட்டினி சாவை எதிர்நோக்கும் மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுப்பதில் என்ன மாறாட்டம்?

இதில் கிறிஸ்தவ மதகுருமார்கள் எண்ற எல்லைக்குள் யாழ் ஆயரை மக்கள் அவர்கள் இந்துகளாக இருந்தாலும் விட்டு வைப்பதில்லை என்பதுதான் உண்மை...!

ஆயர் அவர்கள் மதங்களை தாண்டி வெளியேறி தமிழ் மக்கள் எண்றவகையில் செயற்பட ஆரம்பித்து ஆண்டுக்கள் பல ஆகிவிட்டது...!

புலிஅக்ளிடம் ஆயர் கேட்டதில் ஆட்சேபம் எதுவுமே இல்லை.... அவர் வளமையாக செய்யும் செயல்தான்...! ஆனால் வெளிப்படையாக அறிக்கை விடும் அளவுக்கு அவர் தூண்டப்பட்டு இருக்கிறார் போல இருக்கிண்றது... (இராணுவதரப்பு நெருக்குவாரம் கொடுத்து இருக்கலாம்,... அவரின் உயிருக்காக எண்றில்லாவிட்டாலும்) காரணம் என்ன எண்றால் புலிகளுடன் ஆயர் அவர்களுக்கு இருக்கும் நெருக்கம் அப்படி....! இதில் மூடு மந்திரம் எதுவும் இல்லை...!

ஆயரின் கோரிக்கைக்கு அரசியல் சாயம் பூசுவதிலும்..அதில் உள்ள மனிதாபிமான நோக்கத்தையும்..மக்களின் தேவையின் அவசரத்தையும் புரிந்து கொள்ள வேண்டிய அதேவேளை...வன்னியில் அவதிப்படும் மக்களினதும் மனிதாபிமானத் தேவைகளையும் சம நிலையில் வைத்து நோக்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போர் நிறுத்தத்தின் மீது அரசுக்கு அக்கறை இருந்தால்..உடனடியாக தரைப்பாதைத் திறந்து வன்னி மக்களினதும் யாழ் மக்களினதும் மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்வதே சிறப்பு..! மோதல் தொடர்வதாக பாதையைத் திறக்க சாட்டுச் சொல்லும் அரசு வெளி உலகுக்கு சம்பூர் மீட்பின் பின் தாங்கள் அமைதி காப்பது போல அறிக்கைகள் விடுகின்றது. தமிழ் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை அரசியலாக்க நினைக்கும் அரசுக்கு உதவியளிக்கக் கூடிய வகையில் அறிக்கைகளைத் தயார் செய்யாமல்..தமிழ் மக்களை அரசின் சதிகளில் இருந்து பாதுகாக்க அனைவரும் புரிந்துணர்வோடு செயற்பட வேண்டியதே அவசியம்.

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமே யாழ் ஒரு திறந்த சிறை என்றிருப்பதை சர்வதேசத்துக்கு சுட்டிக்காட்டி..அரசின் தமிழ் மக்கள் மீதான மனிதாபிமான நெருக்கடிக்குக்கு இட்டுச் செல்லக் கூடிய செயற்பாடுகளை இனங்காட்டி...பாதை திறப்பை ஊக்கிவிப்பதே தமிழ் மக்கள் அனைவருக்கும் நீதி கிட்ட உதவியாகும்...! நிரந்தரமான உணவு வழங்கலையும் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதையும் உறுதிப்படுத்தும்..!

இதில் தமிழ்செல்வனின் நிலைப்பாட்டின் நியாயத் தன்மையையும் அனைவரும் நோக்க வேண்டியது அவசியமாகிறது. புலிகளைப் பொறுத்தவரை மக்கள் எல்லோருக்கும் தேவைகள் என்பது ஒன்றுதான். அரச படைகளின் கட்டுப்பாடு என்பதற்காக விசேட ஒழுங்குகளை செய்வதாயின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத மக்களை அரசு புறக்கணிக்கவே வகை செய்யும். இது விமல் வீரவண்ச பேசும் வீரவசனமான...வன்னி மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வர முண்டியடிக்கிறார்கள் என்பதை நடைமுறைச் சாத்தியமாக்கவே உதவும்..! ஆனால் அதுவல்ல உண்மை.

மக்கள் மீது நெருக்கடிகளை பிரயோகித்து அவர்களின் மனோவலிமையை சிதைக்கும் அரசின் நகர்வுகளுக்கு எவரும் உதவி செய்யாது இருக்கும் அதேவேளை மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. மோதல் தணிந்துள்ள இவ்வேளையில் கண்காணிப்புக்குழுவின் பிரசன்னத்தோடு பாதையைத் திறப்பதே உசிதமான நடவடிக்கை...! உண்மையான மக்கள் அக்கறை இருப்பின் அதுதான் செய்யப்பட வேண்டியது..! பேரம் பேசலுக்கான நேரமில்லை இது..!

மக்களும் மெளனிகளாகாமல் இருக்காமல் பாதையைத் திறக்க சகல வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே சரியான அணுகுமுறை...! அன்றி கப்பலுக்கும் விமானத்துக்கும் காத்திருக்கும் நிலையும்..அதை வைத்து சர்வதேசத்துக்கு விசமப் பிரச்சாரம் செய்யவும் அரசுக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. கடந்த கால பாடங்களை இதில் மீள் நினைவூட்டுவது சிறப்பு..! ஐரிஸ் மோனா தொடங்கி..மூழ்கிப் போன கப்பல்கள் வரை..! :idea: :!:

திறந்த சிறையாக யாழ். குடாநாடு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவிப்பு

icrc.gif

நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் துண்டிக்கப்பட்டு ஒரு திறந்த சிறையாக யாழ். குடாநாடு இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து அனுமதியை வழங்க மறுப்பதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

யுத்தநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யாழ். குடாநாட்டிற்கு செல்லும் வழிகளை உத்தியோகபூர்வமாக திறக்க வேண்டும் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றிட்டோ மெயிர் அண்மையில் இலங்கைவந்து மீண்டும் ஜெனிவா திரும்பிய சில நாட்களிலேயே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய பிரதேசங்கள் நாட்டின் ஏனைய பாகங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

யாழ்ப்பாணம் ஒரு துண்டிக்கப்பட்ட தடுக்கப்பட்ட பிரதேசமாக உள்ளது என்றும் அது மேலும் கூறியுள்ளது.

http://www.tamilwin.net/

தரையிலும் பார்க்க மிகக்கொடுரமாக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் யார் செய்கிறார்கள் என்பதே தெரிய வில்லை...! அங்கும் புலிகளுக்கும் கடற்படைக்கும் சண்டை நடைபெறுகிறது...! செஞ்சிலுவை கப்பலை யாராவது தாக்கிவிட்டு புலிகள்தான் செய்தார்கள் எண்று பளியை போட்டால் அதுக்கு எப்படி புலிகள் பொறுப்பாக முடியும்...??? அப்படியானால் புலிகள் கடல்வளியான வினியோகத்துக்கு பாதுகாப்பு அளிப்பதாய் உறுதி அளிக்கலாம்...??

அதோடு போர் நிறுத்தம் கடைப்பிடிக்க படும் நாட்டில் தரைவளியால் பொருட்டகள் கொண்டு வருவது கடினம் எண்று எப்படி சொல்ல முடியும்...??? அப்படி கொண்டு வருவதில் என்ன கஸ்ரம்... புலிகளின் பகுதிக்கும் உணவு கொடுக்க வேண்டி வரும் என்பதா...???

யாழ்ப்பாண மக்களுக்கு உணவு கொடுக்க இலங்கை அரசுக்கு முடியவில்லை எண்றால் யாழ் வவுனியா பாதையை திறக்க வேண்டியதுதான்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.