Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆவணமே தடைக்கு அடிப்படை! - என்கிறது ஆங்கில வாரஇதழ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆவணமே தடைக்கு அடிப்படை! - என்கிறது ஆங்கில வாரஇதழ். 
[sunday, 2014-04-06 10:14:30]
kapila-hendawithara-060514-150.jpg

இறுதிப்போரின் பின்னர் முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டு அமைப்புகளும் தனி ஆட்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. போரின் பின்னர் 39 பக்கங்கள் அடங்கிய இந்த ஆவணம் விடுதலைப் புலிகள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே சுமார் 400 அமைப்புக்களும் தனி ஆட்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தது. எனினும் இது குறித்து சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை தடை செல்லுடியற்றதாகவே இருக்கும் என்று சட்டஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  

இந்தநிலையில் குறித்த அமைப்புக்கள் மற்றும் தனிஆட்கள் தொடர்பில் கண்காணிப்பு பணிகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக இலங்கையின் இளைப்பாறிய தேசிய புலனாய்வுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கருத்துப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தர் குமரன் பத்மநாதன், விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், பிரதியமைச்சர் கருணா என்ற முரளிதரன், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் போன்றோர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

இந்தநிலையில் இந்த தடைக்கு எதிராக இலங்கையின் நீதிமன்றத்தில் எவரும் வழக்கு தாக்கல் செய்யமுடியும். அத்துடன் எதிர்காலத்தில் இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருப்போர் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக அமைப்புக்களிடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொள்ளலாம். எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதியை பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு நிதி பெற்றுக் கொள்ளப்படுமானால் எவரும் கைது செய்யப்படுவர் என்று ஹெந்தவிதாரண குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=107029&category=TamilNews&language=tamil

நம்புறம். கேட்கிறவன் சிங்களவன் என்றால் எருமையும் மிகின் ஏரோ பிளேன் ஓட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருக்கும். ஏனெனில் 2009 கடைசியில். நாம் வன்னி சென்றிருந்தபோது நிரப்பிக் கொடுத்த படிவங்களுடன் என் தந்தை கைப்பட எழுதியது எம்மைப் பற்றிய விபரங்கள், நாம் எந்த எந்த நாடுகளில் இருக்கிறோம் என்ற விபரங்களுடன் என் தந்தையுடன் இன்னும் மூவரின் பெயர்களும் Srilangkan Defense இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.நாடு கடந்த அரசு என்பது எல்லாம் 2009க்குப் பிறகு உதயமான அமைப்புக்கள். அவை யாவும் ஆவணத்தில் உள்ள தகவல்கள்.... பிறகெப்படி கேபி தான் தொடங்கிய அமைப்பு என்று பீத்திக் கொண்டு திரிய வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.நாடு கடந்த அரசு என்பது எல்லாம் 2009க்குப் பிறகு உதயமான அமைப்புக்கள். அவை யாவும் ஆவணத்தில் உள்ள தகவல்கள்.... பிறகெப்படி கேபி தான் தொடங்கிய அமைப்பு என்று பீத்திக் கொண்டு திரிய வேண்டும்?

 

நியாயமான கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.