Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா வடக்கில் தமிழ் இராணுவப் புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்டது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL-Soldiers.jpg

வவுனியா வடக்கில் நேற்றிரவு இராணுவப் பயிற்சியின் போது நடந்த தவறுதலான துப்பாக்கிச் சூட்டில், சிறிலங்கா இராணுவத்தின் 7வது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.கமல்ராஜா என்ற தமிழ் இராணுவ அதிகாரி பலியானதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

நேற்றிரவு பதவியா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 

சிறிலங்காப் படையினரின் குழுவொன்று, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சக படைச்சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இவர் இலக்காகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

இதுதொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. 

முன்னதாக, நெடுங்கேணிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் குழுவொன்றுடன் நடந்த மோதலிலேயே இவர் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. 

ஆனால் பின்னர் அதனை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது. 

எனினும், கோபி, அப்பன், தேவிகன், ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட நெடுங்கேணியை அண்டிய வவுனியா வடக்கிலேயே சிறிலங்கா படை அதிகாரியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 

இதனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140411110310

  • கருத்துக்கள உறவுகள்

புலநாய்வு செய்தால்... தமிழ் புலநாய்களுக்கும்,
இது தான்.. முடிவு, என்று... சிங்களம் சொல்லாமல் சொல்லியிருக்கு.
இனியும்... "திருந்தாத, ஜென்மங்கள்... இருந்தென்ன லாபம்."

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ராஜா மேஜர் ஜெனரல் ஆக கனவு கண்டிருப்பார்.. கடைசியில் பதவியா பிண அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்.. :o  :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்துடன் இணைந்து சேந்து காட்டி கொடுப்பவர்களுக்கும் விரைவில் சிங்களம் பரிசாக மரணத்தை கொடுக்கும்   

கமல்ராஜா மேஜர் ஜெனரல் ஆக கனவு கண்டிருப்பார்.. கடைசியில் பதவியா பிண அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்.. :o  :huh:

 

ஜெனரலாக இருந்து மன்னராக கனவு கண்டவரே கக்கூஸ் கழுவி கம்பியெண்ணிய நாட்டில இதெல்லாம் சகஜம் இசை கலைஞரே  :D  :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரலாக இருந்து மன்னராக கனவு கண்டவரே கக்கூஸ் கழுவி கம்பியெண்ணிய நாட்டில இதெல்லாம் சகஜம் இசை கலைஞரே  :D  :D  :lol: 

 

சீமான் அண்ணே....... :rolleyes:

இசைக் கலைஞருக்கு... இப்ப, ஞாபக மறதி போல.....

மறியலில் இருந்து, கம்பி எண்ணிய.. பொன்சேகரை, நாம மறக்க முடியுமா... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் மறுபக்கத்தையும் நாங்கள் பார்க்க வேண்டும். பண்டாரநாயக்க கொலையில் சூத்திரதாரிகளில் ஒருவராகச் சிறிமாவோ பண்டாரநாயக்கா இருந்ததாகவும் செய்திகள் அப்போது கசிந்தன. ஆனாலும் சிறிமாவோ பண்டாரநாயக்காவை சிம்மாசனம் ஏற்றிவைத்து சிங்களம் கொண்டாடியதையும் மறக்கக்கூடாது. :o:icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.