Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

476 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
476 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது
ஏப்ரல் 2014 08:25
3aaa(2).jpg
தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் இன்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்கள் இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
 
கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
அக் கப்பலில்... 325 பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்சியான செய்தி.
அதில்... 290 காணாமல் போயுள்ளதாகவும்,  அதில் 150 கார்கள் இருந்ததாகவும் ஜேர்மன் இணையத் தளம் ஒன்று தெரிவிக்கின்றது.
 
das-faehrschiff-sewol-sinkt-vor-der-inse

 


கப்பல் இருக்கும்... நிலையைப் பார்த்தால், யாரும் உயிருடன் தப்பி இருக்கமாட்டார்கள் என்றே... தோன்றுகின்றது. :o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரிப்பா.... மனுசர் கப்பல்ல ஏற முடியல்ல பிளைட்ல ஏற முடியல்ல....ஒண்டு விழுது மற்றது தாழுது....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரிப்பா.... மனுசர் கப்பல்ல ஏற முடியல்ல பிளைட்ல ஏற முடியல்ல....ஒண்டு விழுது மற்றது தாழுது....

 

போற போக்கில்.... நடை அல்லது சைக்கிள் தான்.... பாதுகாப்பானது போலை கிடக்கு.Srithambi.gif.velo.gif  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கில்.... நடை அல்லது சைக்கிள் தான்.... பாதுகாப்பானது போலை கிடக்கு.Srithambi.gif.velo.gif  

 

அதுவும் சரிவராது போலை கிடக்கு.....

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் சரிவராது போலை கிடக்கு.....

 

 

நீங்கள் இணைத்த காணொளியில்.... எல்லோரையும், ஒரு தேவதை காப்பாற்றியுள்ளது போலுள்ளது.engel023.gif

இது பணக்கார மாணவர்கள் நாடு நாடா சென்று படிக்கும் படகு பாடசாலையா?

இது பணக்கார மாணவர்கள் நாடு நாடா சென்று படிக்கும் படகு பாடசாலையா?

 

ஒரே பாடசாலையை சேந்த 325 உயர்தரம் பயிலும் மாணவர்களும் 15 ஆசிரியர்களும் ஒரு தீவுக்கு சுற்றுலா போயிருந்தார்களாம் :(

இப்போது 4 பேர் இறந்ததாகவும் 55 காயப்பட்டதாகவும் பலரை காணவில்லை என்றும் போட்டுள்ளார்கள்.

ஒரே பாடசாலையை சேந்த 325 உயர்தரம் பயிலும் மாணவர்களும் 15 ஆசிரியர்களும் ஒரு தீவுக்கு சுற்றுலா போயிருந்தார்களாம் :(

இப்போது 4 பேர் இறந்ததாகவும் 55 காயப்பட்டதாகவும் பலரை காணவில்லை என்றும் போட்டுள்ளார்கள்.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய கப்பல் கரணமடிக்கக் காரணம் என்ன...!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய கப்பல் கரணமடிக்கக் காரணம் என்ன...!

 

க‌ட‌லின் கீழ் உள்ள‌... பாறையில் மோதியிருக்க‌லாம் என்று... சில‌ ச‌ந்தேக‌ங்க‌ள் உண்டு சுவி.

ஆனால்... க‌ப்ப‌ல் வ‌ழியோ, ஆகாய‌ வ‌ழியோ... எல்லா மாலுமிக‌ளும் குறிப்பிட்ட‌ பாதையில் செல்ல‌ வேண்டும் என்ற‌, வ‌ரை முறையும் உண்டு.

 

இதை... மீறிச் சென்றதால், விப‌த்து ஏற்ப‌ட்டிருக்க‌லாம். (இத்தாலிய‌ க‌ப்ட‌ன் செலுத்திய‌... கொங் கோடியா மாதிரி)

அல்லது.... பயணிகள் கப்பலில், சம தளத்தை பேண முடியாத அளவுக்கு..... ஒரு பக்கம், கூட 150 வாகனத்தை... ஏற்றிய தவறு கூட... சிறிய கல்லில் கப்பல் தடுமாறியவுடன், கப்பலில்... ஒரே பக்கத்தில், இருந்தவர்களின் நிறையும்.. கப்பலை... கவிழச் செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

220px-Container_01_KMJ.jpg  இன்னொரு கப்பலில் இருந்து தவறி வீழ்ந்த கொள்கலன் மீதும் மோதியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

http://www.youtube.com/watch?v=8pgqL3FPWYg
 

  • கருத்துக்கள உறவுகள்

கவிழ்ந்து கிடக்கும் கப்பலில் தண்ணீர் புகமுடியாத ஓரிடத்தில் அகப்பட்டிருக்கும் மாணவர்களில் ஒரு மாணவன் தங்களால் வெளியே வரமுடியாதுள்ளதாகத் தொடர்ந்து தனது தந்தைக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருப்பததாக யேர்மானிய செய்தியில் சற்றுமுன் கூறினார்கள்.

 

இறந்துவிடலாம். இறப்பை அனுபவிப்பது மகா கொடுமை.

மூழ்கியக் கப்பல்: மாலுமிக்கு எதிராக பிடி-ஆணை கோரப்பட்டுள்ளது

 

140418124416_south_korea_search_ferry_30

கப்பல் கூட்டுக்குள் காற்றுக் குப்பிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது

தென்கொரியாவில் கடந்த புதன்கிழமையன்று 475 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலின் தலைமை மாலுமியை கைதுசெய்வதற்கான பிடி-ஆணை ஒன்றை பிறப்பிக்குமாறு சட்ட நடவடிக்கை அதிகாரிகள் நீதிமன்றம் ஒன்றிடம் கோரியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பல் ஊழியர்கள் வேறு இரண்டு பேர் மீதும் நீதிமன்றத்தில் பிடி-ஆணை கோரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் கேப்டன் தலைமையில் கப்பல் இயக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக இளநிலை அதிகாரி ஒருவர் கட்டுப்பாட்டில்தான் கப்பல் இயக்கப்பட்டிருந்தது என தெரியவந்துள்ளது.

இதனிடையே, மூழ்கிய இந்தக் கப்பலில் இருந்து உயிரோடு காப்பாற்றப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தின் துணைத் தலைமை ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிகின்றன.

இதனிடையே கடலில் மூழ்கி தேடும் மீட்புக் குழுவினர் முதல்தடவையாக கப்பலுக்குள் நுழைந்து தேட முடிந்துள்ளது.

இந்தக் கப்பலின் கட்டுப்பாட்டு அறை மற்றும் உணவு விடுதி ஆகிய இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அங்கு உயிர் தப்பியவர்கள் எவரையும் அவர்களால் காணமுடியவில்லை.

தவிர வேறு சில மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினரால் இந்தக் கப்பலின் சரக்கு வைக்கும் தளத்தில் நுழைய முடிந்தது. ஆனால் அதைத் தாண்டி செல்ல முடியாத அளவுக்கு அந்த இடத்தில் தடங்கல்கள் இருந்தன. மேலும் கப்பலின் வெள்ளைச் சுவர்களையே கையால் தொட்டுப்பார்த்துதான் அவர்களால் விளங்கிகொள்ள முடிந்தது என்ற அளவுக்கு நீர் கலங்கலாக இருந்துள்ளது.

29 பேர் இறந்திருப்பது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 270 பேரின் கதி என்ன ஆனது என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.

மூழ்கிக் கிடக்கும் இந்த கப்பலுக்குள் பிராணவாயுவை அனுப்ப மீட்புக் குழுக்கள் முயல்கிறார்கள். யாரேனும் உயிரோடு இருந்தால் அவர்கள் சுவாசிக்க காற்று வேண்டும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.

http://www.bbc.co.uk/tamil/global/2014/04/140418_southkoreaship.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்
das-faehrschiff-sewol-sinkt-vor-der-inse
der-bug-der-havarierten-faehre-sewol-rag

 

 

கவிழ்ந்த கப்பல், ஏன்... ஒவ்வொரு பட‌த்திலும், வேறு மாதிரியான... நிலையில், உள்ளது?
 

விடை: சுலபம்.
 

அக்கப்பல் தாழ்ந்த இடத்தில்... ஒரு நேரம், மிகுந்த தண்ணீர் குறைந்த பகுதியாகவும், சில நேரம் ஆறு மீற்றர் உயர்ந்தும்... காணப்படும்.
இது, அநேகமான... கடல்களில், காணப்படும் இயற்கை நடைமுறை.
 

இலங்கையில்... ஹிக்கடுவ என்னும், இடத்தில், மூன்று மணித்தியால இடை வெளியியில்... நேரில் பார்த்து, அருந்தப்பில், உயிர் தப்பிய... அனுபவமுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கப்பல் கவுண்டு போறதுக்கும் ஒரு அம்மணிதான் காரணமாம்......a0xl8hg.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கப்பல் கவுண்டு போறதுக்கும் ஒரு அம்மணிதான் காரணமாம்......a0xl8hg.gif

 

குமாரசாமி அண்ணேய்.... க‌ண்ட‌ப‌டி, அம்ம‌ணி மாரில், சாட்டுச் சொன்னால்....

நாளைக்கு, சோறும், புட்டும்.... கிடைக்காது.

எங்கட‌ கப்பல், கவிழாமல்... பார்கிறதும்,  அம்மணி மார் தான்.

அவ‌ர்க‌ள் தான்... எங்க‌ள‌து, குடும்ப‌ மாலுமிக‌ள்.

இப்ப‌... புரியுதா?

நாளைக்கு... நீங்க‌, "ப‌ட்டினி" இருக்கப் போறீங்கள். :lol:  :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களிட்ட திட்டு வாங்கி புட்டு தின்னுறதைவிட பட்டினி கிடக்கலாம் ...! :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.