Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரச பயங்கரவாதிகள் 6ஆயிரம் பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Featured Replies

இலங்கையில் தமிழின படுகொலையை நடத்திய சிறிலங்கா அரச படையை சேர்ந்த 6ஆயிரம் அரச பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் ஒன்றை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அவர்களின் படங்களுடன் வெளியிட்டுள்ளது.

பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6ஆயிரம் படையினர் தமிழ் இனத்தின் மீது படுகொலையை நடத்த தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களே சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தை மிகக்கோடூரமாகப் படுகொலை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சிகளும், ஆலோசனைகளும், திட்டங்களும் வழங்கப்பட்டு சிறிலங்காவின் அனைத்து கூலிப்பட்டாளங்களின் தொகுதிகளிற்குள்ளும் விடப்பட்டனர். இறுதிக்கட்டப் போரில் அகப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் எனப்பாராது தமது வக்கிரத்தை தீர்த்து படுகொலை செய்தார்கள்.

விரைவில் இவர்கள் எப்படி இனப்படுகொலை செய்வதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற வீடியோ ஆதாரமும் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரித்தானியர் தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

april-61.jpg

http://www.thinakkathir.com/?p=57877

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை யாழ் மாற்றாது என்று நம்புவோம்.

அண்மையில் தமிழனப் இனப்படுகொலையாளிகள்.. மகிந்த ராஜபக்ச.. கோத்தபாய ராஜபக்ச கொண்டாடிய புத்தாண்டு நிகழ்வு பற்றிய செய்தின் தலைப்பு.. அரச புத்தாண்டுக் கொண்டாட்டம்.. என்று மாற்றப்பட்டிருந்தது.  யாருடைய அரசு.. தமிழனதா..????! :icon_idea:

யாழுக்கும் வர வர.. எஜமான விசுவாசம் ஒட்டிக்கொள்ளப் பார்க்குது. :rolleyes:

இந்த முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.. பிரித்தானிய தமிழர் ஒன்றியம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக போர்குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கு வேலை செய்யும் கொலையாளிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவை இன்று ஆட்சிசெய்வதே பயங்கரவாதிகள்தான் ! அது உலகத்துக்கும் தெரியும் !! தெரிந்தாலும்... உலகம் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியா என்னும் கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கும் நிலையில் உள்ளது. எதனையும் துலக்கமாக அதனால் காண்பதற்கு முடிவதில்லை. :(  :o  

மிகவும் நல்ல முயற்சி.

எல்லா தமிழ் ஊடகங்களிலும், சிறி லங்கா ஊடகங்களிலும் வரவேண்டும்.

இந்த தலைப்பை யாழ் மாற்றாது என்று நம்புவோம்.

அண்மையில் தமிழனப் இனப்படுகொலையாளிகள்.. மகிந்த ராஜபக்ச.. கோத்தபாய ராஜபக்ச கொண்டாடிய புத்தாண்டு நிகழ்வு பற்றிய செய்தின் தலைப்பு.. அரச புத்தாண்டுக் கொண்டாட்டம்.. என்று மாற்றப்பட்டிருந்தது.  யாருடைய அரசு.. தமிழனதா..????! :icon_idea:

யாழுக்கும் வர வர.. எஜமான விசுவாசம் ஒட்டிக்கொள்ளப் பார்க்குது. :rolleyes:

இந்த முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.. பிரித்தானிய தமிழர் ஒன்றியம். :icon_idea:

'இணையத்தில் எதனையும் எழுதிவிட்டு போய்விடலாம், ஒரு பிரச்சனையும் வராது' என்ற  காலம் இன்றில்லை. இன்று ஒவ்வொரு விடயமும் கவனிக்கப்பட்டு அதற்கேற்ப சட்ட நடவடிக்கைக்குட்பட்டுக்  கொண்டு வரும் காலம் இது.  அந்த திரி ஆதவனால் தொகுக்கப்பட்ட, வேறு தளங்களில் இருந்து பெறப்படாத தலையங்கத்துடனான திரி அது. அதற்கு அவர் முன்னர் இட்டு இருந்த தலைப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த திரி இன்னொரு தளத்தில் இருந்து பெறப்பட்டமையால் எமக்கு பிரச்சனை இல்லை. அதே வேளை இன்னொரு தளத்தில் இருந்து பெறப்பட்ட ஆனால் மிகவும் தவறான தலைப்பு என்றால் அதனை திருத்தவும் எமக்கு உரிமை இருக்கின்றது.

இன்றும் இலங்கை அரசை, அரசு என்று தான் குறிப்பிடுகின்றோம். அரச அதிகாரிகள், அரச படைகள், அரசின் வெற்றி போன்ற பதங்கள் தான் பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றன. எனவே அப் பதங்களை யாழில் தொடர்வதில் எந்த முரண்பாடும் இல்லை.

அத்துடன் இலங்கை அரசை 'அரக்கர்கள்' என்று நாம் வேண்டுமானல் குறிப்பிட்டு எமக்குள் அக மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் முழுப் பிடியிலும் தான் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எம் தமிழ் மக்கள் வேறு எவரதும் துணையின்றி வாழ்கின்றனர்.

மற்றது,

இப்படியான நிர்வாகம் தொடர்பான கேள்விகளை கேட்பதற்கு நாற்சந்தியினை பயன்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஒரு சமூக வலைத்தளம் இதில் கருத்துகளைப்பதிபவர்களே அதற்கு பொறுப்பாளிகளாவர் யாழ்களம் அல்ல இதனால் யாழுக்கு சட்ட சிக்கல் வர சாத்தியமில்லை என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

இலங்கை ராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை.

இலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை ராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும், எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்த்தில் தவறில்லை என்றார்.இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன் , இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார்.

அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு, ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார் அவர்.

"தமிழ் அமைப்புக்களை தடை செய்ததற்கு இது பதிலடி"

அண்மையில் இலங்கை அரசாங்கம் சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை என்று கூறி தடை செய்து அறிவித்திருந்தது. அதற்கான எதிர்வினை அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் படங்களை வெளிநாட்டில் இருக்கும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், இலங்கை ராணுவத்தினர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இலங்கை பாதுபாப்புத் துறையின் இணையதளங்களில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்கள் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

இது குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் இதை ஒரு நகைச்சுவையாகவே தாங்கள் கருதுவதாகவும் கூறினா அவர். இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையின் இணையதளத்திலுள்ள எந்தத் தகவலும் இரகசியமானது அல்ல என்றும் பொதுமக்களின் பார்வைக்காகவே அவை வெளிப்படையாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த ருவான் வணிகசூரிய, "விளம்பரத்துக்காகத்தான் நாங்கள் எங்கள் படையினரின் படங்களை இணையதளத்தில் வெளியிடுகிறோம். எனவே எமது விளம்பர நடவடிக்கைகளுக்கு வேறு யாராவது உதவ முன்வந்தால் அது எங்களுக்கு மகிழ்ச்சிதானே. அதைப்பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? இனிமேல் அவர்களுக்கு எம்மைக் குறித்துப் பேச வேறு விஷயங்கள் எதுவும் இல்லை என்னும் அவர்களின் சிந்தனை வறட்சியைத்தான் இந்த செயல் காட்டுகிறது" என்றும் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/04/140417_slarmyvsltte.shtml

  • கருத்துக்கள உறவுகள்

'இணையத்தில் எதனையும் எழுதிவிட்டு போய்விடலாம், ஒரு பிரச்சனையும் வராது' என்ற  காலம் இன்றில்லை. இன்று ஒவ்வொரு விடயமும் கவனிக்கப்பட்டு அதற்கேற்ப சட்ட நடவடிக்கைக்குட்பட்டுக்  கொண்டு வரும் காலம் இது.  அந்த திரி ஆதவனால் தொகுக்கப்பட்ட, வேறு தளங்களில் இருந்து பெறப்படாத தலையங்கத்துடனான திரி அது. அதற்கு அவர் முன்னர் இட்டு இருந்த தலைப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த திரி இன்னொரு தளத்தில் இருந்து பெறப்பட்டமையால் எமக்கு பிரச்சனை இல்லை. அதே வேளை இன்னொரு தளத்தில் இருந்து பெறப்பட்ட ஆனால் மிகவும் தவறான தலைப்பு என்றால் அதனை திருத்தவும் எமக்கு உரிமை இருக்கின்றது.

இன்றும் இலங்கை அரசை, அரசு என்று தான் குறிப்பிடுகின்றோம். அரச அதிகாரிகள், அரச படைகள், அரசின் வெற்றி போன்ற பதங்கள் தான் பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றன. எனவே அப் பதங்களை யாழில் தொடர்வதில் எந்த முரண்பாடும் இல்லை.

அத்துடன் இலங்கை அரசை 'அரக்கர்கள்' என்று நாம் வேண்டுமானல் குறிப்பிட்டு எமக்குள் அக மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் முழுப் பிடியிலும் தான் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எம் தமிழ் மக்கள் வேறு எவரதும் துணையின்றி வாழ்கின்றனர்.

மற்றது,

இப்படியான நிர்வாகம் தொடர்பான கேள்விகளை கேட்பதற்கு நாற்சந்தியினை பயன்படுத்துங்கள்.

இது நிழலியின் பூச்சாண்டி.

சிங்கள அரசு என்று யாழ்  உறவுகள் நாங்கள் எல்லாம் விளித்தே வருகிறோம்... அப்படி ஒன்றும் ஆகல்ல.

சிறீலங்கா அரசு என்றும் யாழ் உறவுகள் நாங்கள் எல்லாம் விளித்து வருகிறோம்.. அப்படி ஒன்றும் ஆகல்ல.

சிங்கள ஜனாதிபதி... சிறீலங்கா ஜனாதிபதி என்று நாங்கள் எல்லாம் ஏன் பல ஊடகங்களும் விளித்தே வருகின்றன. யாரும் அதற்கு தடை போடேல்ல. அது உண்மை தானே.

சிங்கள அரசு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு அல்ல என்பதை இனங்காட்டவே இந்த விளிப்புகள். சிங்கள ஜனாதிபதி தமிழர்களை பிரதிநிதிப்படுத்துவதில்லை என்பதைக் காட்டவே இந்த விளிப்புகள். அதனை யாழ் கடந்த காலங்களில் தடுக்க முயலேல்லையே..???! இப்ப மட்டும்..??!

ஏன் இலங்கையில்.. 32 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று தெரியாமலா.. பெரும்பான்மை இனவெறி சிங்கள அரசுக்கு எதிராக.. இவ்வளவு காலமும்.. தமிழீழமும் கேட்டு.. ஆயுதப் போராட்டமும் நடத்தினார்கள்...! :rolleyes::lol::icon_idea:

எங்கையோ.. இடிக்குதே..???!

Edited by nedukkalapoovan

சிங்கள அரசு என்று யாழ்  உறவுகள் நாங்கள் எல்லாம் விளித்தே வருகிறோம்... அப்படி ஒன்றும் ஆகல்ல.

சிறீலங்கா அரசு என்றும் யாழ் உறவுகள் நாங்கள் எல்லாம் விளித்து வருகிறோம்.. அப்படி ஒன்றும் ஆகல்ல.

சிங்கள ஜனாதிபதி... சிறீலங்கா ஜனாதிபதி என்று நாங்கள் எல்லாம் ஏன் பல ஊடகங்களும் விளித்தே வருகின்றன. யாரும் அதற்கு தடை போடேல்ல. அது உண்மை தானே.

சிங்கள அரசு, சிங்கள இராணுவம், சிங்களம், சிறிலங்கா அரசு என்று விளிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அரக்கர்கள், அரக்கர்களின் வைபவம் என்று ஒரு செய்திக்கு தலைப்பிடுவதில் தான் முரண்பாடுகள் இருக்கு.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல்.. அரசு என்றும் பொதுவாக விளிக்க வேண்டியதில்லைத் தானே. அதென்ன தமிழர்கள் விரும்பும் அரசா.. இல்லையே. சிங்கள அரசு தானே. !!! :icon_idea:

அதேபோல்.. அரசு என்றும் பொதுவாக விளிக்க வேண்டியதில்லைத் தானே. அதென்ன தமிழர்கள் விரும்பும் அரசா.. இல்லையே. சிங்கள அரசு தானே. !!! :icon_idea:

ஏற்றுக் கொள்கின்றேன். அடுத்த முறை சிங்கள அரசு என்று போட்டு விட்டால் போச்சுது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.