Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tatoo-woman.jpg

கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த பிரித்தானியப் பெண், சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் அனைத்துலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறிலங்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணான, நயோமி மிச்சேல் கோல்மன், நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த காரணத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். 

அவரை நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நாடுகடத்துவதற்கான குடிவரவுத் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இவர் இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அடுத்தவரின் மத உணர்வுகளைக் காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பிரித்தானியப் பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக, அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

பிரித்தானிய பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிவோம் என்றும், அவருக்கான உதவிகளை தூதரகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இந்நத விவகாரம் அனைத்துலக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மைகாலமாக சிறிலங்காவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து அனைத்துலக அளவில் வலுவடைந்து வருகிறது. 

பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் அண்மையில் பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது சிறிலங்காவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

இந்தநிலையில், புத்தரின் படத்தை பச்சை குத்திய காரணத்துக்காக பிரித்தானிய சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தி உலகளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருப்பது சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் அச்சத்துக்குள்ளாகியுள்ளது. 

இது இந்த ஆண்டில் சிறிலங்காவின் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை எற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140423110383

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தனது உடம்பில் பச்சை குத்தினால்.... இவர்கள் கேட்க யார். அதுகும்... அவர் அந்நிய நாட்டு பிரஜை.
உலகில் எத்தனையோ.... பௌத்த நாடுகளுக்கு, இல்லாத அக்கறை.... இவர்களுக்கு ஏன் வருகின்றது.
புத்தரின்... சூத்தை பல்லை, வைத்துக் கொண்டு.... இவர்கள் ஆடும் ஆட்டம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தனது உடம்பில் பச்சை குத்தினால்.... இவர்கள் கேட்க யார். அதுகும்... அவர் அந்நிய நாட்டு பிரஜை.

உலகில் எத்தனையோ.... பௌத்த நாடுகளுக்கு, இல்லாத அக்கறை.... இவர்களுக்கு ஏன் வருகின்றது.

புத்தரின்... சூத்தை பல்லை, வைத்துக் கொண்டு.... இவர்கள் ஆடும் ஆட்டம் அதிகம்.

 

அப்புறம்

சீனாவை எப்படி   காலுக்குள் வைத்திருப்பதாம்.......... :(

ஒருவர் தனது உடம்பில் பச்சை குத்தினால்.... இவர்கள் கேட்க யார். அதுகும்... அவர் அந்நிய நாட்டு பிரஜை.

உலகில் எத்தனையோ.... பௌத்த நாடுகளுக்கு, இல்லாத அக்கறை.... இவர்களுக்கு ஏன் வருகின்றது.

புத்தரின்... சூத்தை பல்லை, வைத்துக் கொண்டு.... இவர்கள் ஆடும் ஆட்டம் அதிகம்.

அதுவும் அந்த சூத்தை பல்லும் நிசம் அல்ல. :)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் புனிதப் பல்லை, சூத்தைப் பல் என்று சொல்லி அவமரியாதை செய்த தமிழ் சிறிக்கு கண்டணம் தெரிவித்து, அஸ்கிரிய கெட் மொட்டை, மல்வத்தை கெட் மொட்டை மற்றும் பொது பல சேனவின் 'பனி' மொட்டைகள் எல்லாரும் ஜெர்மன் தூதரகம் முன் நாளை ஆர்ப்பாட்டம்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஒரு இறையாண்மையுள்ள மதச்சார்பான நாடு. இதைத் தெரிந்துகொண்டுதான் பிரித்தானியா முன்பு உதவிகளை வழங்கியது.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.