Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா ரயில் மீது மோதியது மாத்தறை ரயில்! - 68 பயணிகள் காயம், வடபகுதி ரயில் சேவை பாதிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வவுனியா ரயில் மீது மோதியது மாத்தறை ரயில்! - 68 பயணிகள் காயம், வடபகுதி ரயில் சேவை பாதிப்பு. 
[Wednesday, 2014-04-30 09:44:07]
train-accident-300414-150.jpg
குருநாகல் பொதுஹெர என்ற இடத்தில் இன்று காலை இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், 68 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - வவுனியாவுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் இன்ரசிற்றி ரயிலும், வவுனியா - மாத்தறைக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரஜரட்ட ரயிலும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்ரசிற்றி ரயிலிலேயே ரஜரட்ட ரயில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் 68 பேர் வரையில் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரோஹண தெரிவித்தார்.
  
இதனால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

01%20copy(24).jpg
குருநாகல், பொத்துஹெர பகுதி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட வவுனியா அதிசொகுசு ரயிலுடன்  ரஜரட்ட ரயில் மோதியுள்ளது. இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த 75 பேர், குருநாகல் மற்றும் பொல்காஹவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்: இஷான் மதுசங்க)

IMG-20140430-WA005%20copy.jpg

19%20copy(4).jpg

03%20copy(23).jpg

07%20copy(13).jpg

11%20copy(7).jpg

12%20copy(10).jpg

17%20copy(10).jpg

18%20copy(3).jpg

22%20copy(2).jpg

IMG-20140430-WA002%20copy.jpg

IMG-20140430-WA003%20copy.jpg

IMG-20140430-WA004%20copy.jpg

tamilmirror

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில்தான் இந்த மாதிரி கேலி கூத்துக்கள் நடைபெறுகிறது.மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை.
நிச்சயமாக சிக்னல் வெளிச்சம் கொடுப்பதில் தவறு ஏற்பட்டிருக்கலாம். 

அம்புலன்சுக்கு முன்னர் இராணுவம் வந்துவிட்டது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் செல்ஃபோனில் கதைக்குது.. ரொம்ப கொடுமை சார்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக  விடப்பட்ட  புகையிரதம்

இரும்புக்கு விடப்பட்ட பழைய  சாமான் மாதிரித்தெரியுது :(  :(


இத்தனை  கோடி உதவிகள் கிடைத்தும்

பெற்றும்............ :(  :(

இந்த விபத்து இடம்பெற்ற இடம் எனக்கு மிகவும் பரிச்சயமான இடம். கொழும்புக்கும் குருணாகலுக்கும் பயணம் செய்யும் போது கடக்கும் இடம்.  இவ் இடத்துக்கு சமீபமாகத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு மோசமான விபத்து நடந்து பலர் செத்துப் போயிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக  விடப்பட்ட  புகையிரதம்

இரும்புக்கு விடப்பட்ட பழைய  சாமான் மாதிரித்தெரியுது :(  :(

இத்தனை  கோடி உதவிகள் கிடைத்தும்

பெற்றும்............ :(  :(

 

புதிய‌ புகையிரதப் பாதை அமைத்த படங்களைப்... பார்தபோது,

கற்களின் மேல் தெரிந்த படி.... சிலீப்பர் கட்டைகள் பதிக்கப் பட்ட போதே,

தமிழர் ப்யணிக்கும் ரயில்களை... மோத விட்டும், தடம் புரட்டியும் கொல்ல திட்டம் போடுகின்றார்கள், என்று யோசித்தேன். அது சரி போல்... உள்ளது.

இந்தியனும், சீனனும், சிங்களவனும்... கூட்டுச் சேர்ந்து, எம்மை அழிக்க.. இது மறைமுகமான ஆயுதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம்  ரயில் போகுதோ இல்லையோ மனுசண்டை உயிர் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் அழிவுகள் ஏற்பட்டவுடன் வெளிநாடுகள் அள்ளிக்கொடுக்கும் என்பது அரசுக்குத் தெரியாதா? அதனால்தான் புதிது புதிதாக......... மீட்புப் பணிக்கு இந்திய உதவி முந்தியிருக்க வேண்டுமே...! :o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.