Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணியின் அயர்லாந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 3- 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
sl_1_zps0f33cf0c.jpg

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்டையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின்  5ஆவதும் இறுதியுமான போட்டி பேர்மிங்காமில்  நேற்று இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் குக், துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அலிஸ்டர் குக் 56 ஓட்டங்களையும் பெல் 37 ஓட்டங்களையும் ஜோர்டான் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 3 விக்கெட்டுகளையும் மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 220 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தன மற்றும் திரிமன்னே ஆகியோரின் இணைப்பாட்டம் கைகொடுக்க இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது திரிமன்னே (60) மற்றும் மெத்தியூஸ் (42 ) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் டிரெட்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை அடைந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக திரிமன்னே தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடரின் நாயகனாக லசித் மலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி லோட்ஸில் இடம்பெறவுள்ளது.
 

 

 

http://www.virakesari.lk/articles/2014/06/04/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 

இங்கிலாந்துஇ இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐந்தாவதும்  இறுதியுமான போட்டியில் சசித்திர சேனநாயக்க ஜோஸ் பட்லரினை ரன் அவுட் முறையில்  ஆட்டமிழக்க செய்தது  சர்ச்சைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. போட்டி நிறைவடைந்ததும் இலங்கை அணி தவறாக நடந்துள்ளது. 

கனவான் தன்மையை மீறி நடந்துள்ளது. வரையறைகளை மீறி விட்டது. மிகவும் கீழ்த் தரமான செயல். இனி மேல் இவ்வாறு நடக்காமல் பாத்துக்கொள்ள வேண்டும் என கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டயர் குக் வெளியிட்டுள்ளார். 

இதே போன்ற சம்பவங்களை நான் இதற்க்கு முன்னர் பாத்ததில்லை. இங்கிலாந்து அணித் தலைவராக எப்போதும் கிரிக்கெட்டின் கனவான் தன்மையை பாதுகாக்கவே நான் செயற்படுவேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தனது அணியை எவ்வாறு செயற்ப் படுத்த வேண்டும் என தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும் என அஞ்சலோ மத்தியூஸ் மீதும் தனது அதிருப்தியை குக் வெளியிட்டுள்ளார். 

நேற்று நடை பெற்ற போட்டியில் சசித்திர சேனநாயக்க பந்து வீசும் போது பந்து வீச்சு முனையில் இருந்த ஜோஸ் பட்லர் பந்து வீசுவதற்கு முன்னரே எல்லைக் கோட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். விதிகளின் படி அவ்வாறு செல்ல முடியாது. எனவே சசித்திர சேனநாயக்க அவரை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்தார். 

2(3013).jpgநடுவர்கள் இலங்கை அணித் தலைவரிடம் இந்த ஆட்டமிழப்பை விரும்பினால் கனவான் தன்மையை கருத்திற் கொண்டு பின் வாங்குமாறு கோரினார். 

இருப்பினும் அஞ்சலோ மத்தியூஸ் அதற்க்கு சம்மதிக்கவில்லை. ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணித் தலைவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதே போன்ற ஆட்டமிழப்பு சம்பவம் 1992 ஆம் ஆண்டு நடந்து இருந்தது. அதற்கு பினன்ரும் சில தடவைகள் நடந்த போதும் அவை குறித்த அணிகளின் தலைவர்களினால் பின் வாங்கப்பட்டன. 


இங்கிலாந்து அணித் தலைவரின் கருத்துகளின் பின்னர் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் நியாயங்களை இ இங்கிலாந்து அணித் தலைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார். 

விதிமுறைகளை தொடர்ந்து மீறி நடந்தால் நாம் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறன நடவடிக்கைகளில் தான் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் எந்த இடத்திலும் கனவான் தன்மையை மீறி நடக்கவில்லை. இரண்டு தடவைகள் நடுவர்கள் மூலம் எச்சரிக்கை வழங்கியும் ஜோஸ் பட்லர் தொடர்ந்தும் பந்து வீச முன்னர் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற வண்ணம் இருந்தார். அதன் பின்னரே நாங்கள் இதை செய்தோம் என கூறிய மஹேல ஜெயவர்தன நான்காவது போட்டியினை ஒளிப்பதிவில் பார்த்த போது ஜோஸ் பட்லர்இ ரவி போபரா ஆகியோர் இறுதி 12 ஓவர்களில்  22 இரட்டை ஓட்டங்களை இதன் மூலம் பெற்றுள்ளமையை பார்த்தோம். 

இந்த போட்டியிலும் நடுவர்களுக்கும்இ ஜோஸ் பட்லருக்கும் எச்சரிக்கை செய்தும் அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதன் பின்னரே அவரை ஆட்டமிழக்க செய்தோம் என மேலும் தெரிவித்துள்ளார். 

நாங்கள் கனவான் தன்மையுடன் விளையாடும் போது எதிரணி கனவான் தன்மையை மீறி இ விதிமுறைகளையும் மீறி நடந்தால் நாங்கள் விதியை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. மற்ற அணி விதிகளை மீறி விளையாடுகின்றது என்றால் அவர்கள் கிரிக்கெட்டின் கனவான் தன்மையுடன் விளையாடவில்லை என்பது அர்த்தம். அந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்வது என்ற கேள்வியையும் மஹேல ஜெயவர்தன கேட்டுள்ளார். 

கடந்த வருட சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்ட கனவான் தன்மையுடன் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற விருதினை இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன பெற்றுக் கொண்ட அதேவேளை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்ட கிரிக்கெட்டினை கனவான் தன்மையுடன் விளையாடும் அணிக்கான விருதினை இரண்டு  தடவைகள்  இலங்கை அணி 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த விருதினை இங்கிலாந்து அணி 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் பெற்று இருந்தது.  

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/113038-2014-06-04-09-34-33.html

 

  • தொடங்கியவர்

http://youtu.be/jX3QfZe0sZg

 

இதை இங்கிலாந்து அணிதான் செய்தது :icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்

மஹேல - குக் இடையில் வாக்குவாதம்

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 5ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழப்பு செய்த விதம் தொடர்பில் மஹேல ஜெயவர்தனவுக்கும் இங்கிலாந்து அணித் தலைவர் குக்கிற்குமிடையில் வாக்குவாதமேற்பட்டுள்ளது.


இது குறித்து இங்கிலாந்து அணத் தலைவர் அலிஸ்டர் குக் கூறுகையில்,

' இந்த ரன் அவுட் மூலம் இலங்கை அணி கட்டுப்பாட்டுக் கோட்டை மீறிவிட்டது. டெஸ்ட் போட்டிகளின் போது இதனால் சற்று சலசலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். இது தவிர்க்க முடியாததே.

இதற்கு பதிலடியாக கிரிக்கெட் ஆட்டம்தான் இருக்கவேண்டும். பேசிய வார்த்தைகள் திறமையான ஆட்டமாக மாறவேண்டும். மீண்டும் இதனைச் செய்வேன் என்று இலங்கை அணித் தலைவர் மெத்தியூஸ் கூறுகிறார் என்றால் ஒரு தலைவராக தன் அணி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் அவர் கவனிப்பது அவசியம்".

இலங்கை அணித் தலைவர் மெத்தியூஸ் கூறுகையில்,
' அவரது ஓடும் வேகத்தை நிறுத்த என்னதான் செய்வது இதைத் தவிர? அதனால்தான் இப்படி ரன் அவுட் செய்ய முடிவெடுத்தோம்" என்றார்.

ஜெயவர்தனே கூறுகையில்,
' முதல் எச்சரிக்கைக்கு முன்பே கூட இருமுறை அவரை எச்சரித்தோம், பட்லரும், ஜோர்டானும் ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பாக கிரீஸை விட்டு கொஞ்சம் அதிகமாகவே முன்னேறுகின்றனர் என்று கூறினோம்.
மீண்டும் மீண்டும் அவர்கள் இதனைச் செய்யவே நாங்கள் ரன் அவுட் செய்ய முடிவெடுத்தோம் வேறு வழியில்லை.

லோர்ட்ஸ் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 22 முறை இரண்டு ஓட்டங்களை எடுத்தனர். அப்போது அனைத்து தடவைகளிலும் கிரீஸை விட்டு நன்றாகவே வெளியே சென்றனர். இது கிரிக்கெட் விதி முறைகளுக்குப் புறம்பானது.

நடுவர்களிடமும் எச்சரித்தோம், ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் அவர்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எனவே நாங்கள் சரியான முடிவை எடுக்கத் தள்ளப்பட்டோம்.

நாங்கள் எப்பவும் சரியான உணர்வுடனேயே ஆடி வருகிறோம், ஆனால் எதிரணியினர் விதிமுறைகளை மீறும்போது நாங்கள் இப்படிச் செய்ய நேரிடுகிறது. இது துரதிர்ஷ்டவசமானதே" என ஜெயவர்தனே தெரிவித்தார்.

ரன்னர் முனையில் இருக்கும் வீரரை இவ்வாறு முதன் முதலாக ரன் அவுட் செய்தது இந்திய வீரர் வினு மன்காட் ஆவார். அவர் 1947 ஆம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவின் பில் பிரவுன் என்பவரை இவ்வாறு ரன் அவுட் செய்ததால் இந்த ரன் அவுட்டிற்கு 'மன்கடட்" என்ற பெயர் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/06/04/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

 

பந்து வீச முன்னர் ஓட ஆரம்பிப்பது தவறு தானே.. அவுட் ஆக்கியது சரியான செயல்.

  • தொடங்கியவர்

பந்து வீச முன்னர் ஓட ஆரம்பிப்பது தவறு தானே.. அவுட் ஆக்கியது சரியான செயல்.

 

அதுவும் இரண்டு தடவை இப்படிமுதலே ஓட ஆரம்பிக்க வேண்டாம் என்று நடுவர்களால் எச்சரிக்கை கொடுத்த பின்பும், மீண்டும் அதே தவறை துடுப்பாட்ட வீரர் செய்ததால் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழக்க வேண்டி வந்தது

 

  • தொடங்கியவர்

இலங்கை அணி செய்தது சரியா: சர்சசை கிளப்பிய ரன் அவுட்
ஜூன் 04, 2014.

 

பர்மிங்காம்: விளையாட்டு உணர்வு இல்லாமல் ‘ரன் அவுட்’ செய்த இலங்கை வீரர் சேனநாயகா சர்ச்சையில் சிக்கினார்.

இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, பர்மிங்காமில் நடந்தது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3–2 என்ற கணக்கில் தொடரை வென்றது.                  

 

இப்போட்டியின் 44வது ஓவரை வீசினார் சேனநாயகே. இங்கிலாந்து வீரர் பட்லர், பவுலிங் செய்யும் முன் ‘கிரீசை’ விட்டு வெளியே வந்து நின்றார். இதைப்பார்த்த சேனநாயகே, ‘பைல்சை’ தட்டிவிட்டு, பட்லரை ‘மன்கேடிங்’ முறையில் ‘ரன் அவுட்’ செய்தார்.              

    

சர்வதேச கிரிக்கெட்டில் 1992 க்குப் பின், ‘மன்கேடிங்’ முறையில் செய்யப்பட்ட ‘ரன் அவுட்’ இது தான். விதிமுறைப்படி இது ‘அவுட்’ தான். எனினும், பீல்டிங் செய்யும் அணி கேப்டன், விரும்பினால் திரும்ப அழைத்து விளையாட அனுமதிக்கலாம். இதுகுறித்து இலங்கை கேப்டன் மாத்யூசிடம், அம்பயர் கேட்ட போது, விளையாட்டு உணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட மாத்யூஸ், பட்லருக்கு அனுமதி மறுத்தார்.       

           

இச்சம்பவம் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சை கிளப்பியது. இதுகுறித்து இலங்கை வீரர் ஜெயவர்தனா கூறுகையில்,‘‘பட்லரை முதன் முறை எச்சரிக்கை செய்தோம். இரண்டாவது முறை அம்பயரிடம் தெரிவித்தோம். இருப்பினும், மீண்டும் அதே தவறை செய்ததால், எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களைப் பொறுத்தவரை இது சரிதான். கிரிக்கெட் விதிப்படி தான் விளையாடினோம்,’’ என்றார்.        

         

ரணதுங்கா எதிர்ப்பு: இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறுகையில்,‘‘இலங்கை செய்தது சரிதான் என்றாலும், பட்லரை திரும்ப விளையாட அனுமதித்து இருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால், வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம்,’’ என்றார்.       

          

தோனி மாதிரி வருமா                 

கடந்த 2011, ஜூலை மாதம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட், டிரன்ட் பிரிட்ஜில் நடந்தது. இஷாந்த் சர்மா பந்தை எதிர்கொண்ட இயான் பெல், இரண்டு ரன் எடுத்த பின், பந்து பவுண்டரி எல்லையை தொட்டுவிட்டதாக நினைத்து, கிரீசை விட்டு சாதாரணமாக வௌியேறினார்.                  

அப்போது இயான் பெல் ‘ரன் அவுட்’ செய்யப்பட, தேநீர் இடைவேளை குறுக்கிட்டது. அப்போது, இந்திய வீரர்கள் ‘டிரசிங் ரூமிற்கு’ வந்த அப்போதைய பயிற்சியாளர் ஆன்டி பிளவர், கேப்டன் ஸ்டிராஸ் இருவரும், ‘அவுட்டை’ திரும்ப பெறுமாறு தோனியிடம் கேட்டனர். விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட தோனி, பெல்லை தொடர்ந்து விளையாட அனுமதித்தார். போட்டியில் இந்திய அணி தோற்ற போதும், தோனியின் பெருந்தன்மை வரலாற்றில் இடம் பெற்றது.

 

 

http://sports.dinamalar.com/2014/06/1401894954/SriLankaEnglandOneDayCricketSenanayake.html

உந்த ரன் அவுட் பெரியவிடயமாக வந்ததற்கு காரணம் இங்கிலாந்து இந்த ஒருநாள் தொடரை நிச்சயம் வெல்லுவார்கள் என்று நினைத்திருந்தார்கள் .

முதல் இங்கிலாந்து அடுத்து இலங்கை பின் இங்கிலாந்து அடுத்து இலங்கை என்று இருந்த ஆட்டங்கள் கடைசி நிர்ணயிக்கும் ஆட்டத்தை இலங்கை வென்றது பலத்த ஏமாற்றத்தை இங்கிலாந்து அணிக்கு கொடுத்துவிட்டது .

இந்த முறையில் பல பிரபலங்களே ரன் அவுட் செய்திருக்கின்றார்கள் கபில்தேவ் உட்பட .

 

மேற்கிந்திய வேக பந்து வீச்சாளர் வால்ஷ் பாகிஸ்தானுடன் ரன் அவுட் சந்தர்ப்பம் அமைந்தும் அவுட்டாக்காமல் விட்டதும் நடந்து இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

நம்மால் நினைக்கவும் முடியாத நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்..! :)

  • தொடங்கியவர்

ஐ.சி.சி. தரப்­ப­டுத்­தல் : இலங்கை இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி அணி­க­ளுக்­கான தரப்­ப­டுத்­தலில் இந்­தி­யாவை பின்­தள்­ளிய இலங்கை அணி இரண்­டா­வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. அவுஸ்­தி­ரே­லியா தொடர்ந்தும் முத­லி­டத்தை தக்க வைத்­துள்­ளது.


இலங்கை– இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டி அணி­க­ளுக்­கான புதிய தரப்­ப­டுத்தல் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஒருநாள் தொடரை கைப்­பற்­றிய இலங்கை அணி, தசம புள்ளி வித்­தி­யா­சத்தில் 2 ஆவது இடத்­தி­லி­ருந்த இந்­தி­யாவை பின்­தள்ளி 112 புள்­ளி­க­ளுடன் 2 ஆவது இடத்தை பிடித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து இந்­தியா 112 புள்­ளி­க­ளுடன் 3 ஆவது இடத்­துக்கு சரிந்­தது.

அதே­வேளை அவுஸ்­தி­ரே­லியா 115 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தை தக்­க­வைத்­துள்­ள­துடன் தென்­னா­பி­ரிக்கா (109), இங்­கி­லாந்து (109), பாகிஸ்தான் (100), நியூ­ஸி­லாந்து (98), மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் (94), பங்­க­ளாதேஷ் (73) சிம்­பாப்வே (61), ஆப்கானிஸ்தான் (34) மற்றும் அயர்லாந்து (33) ஆகியன முறையே 4 முதல் 12 இடங்களில் தொடர்கின்றன.

 

 

http://www.virakesari.lk/articles/2014/06/06/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81

 

  • தொடங்கியவர்

ஜொஸ் பட்லரை மீண்டும் துடுப்பெடுத்தாட இலங்கை வீரர்கள் அழைத்திருக்க வேண்டும்: -அர்ஜூன ரணதுங்க
2014-06-05 21:38:23

 

இலங்கையுடனான   5 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ஜொஸ் பட்லர் ரன் அவுட் செய்யப்பட்டமை சரியானது எனவும் ஆனால், விளையாட்டு உணர்வை கருத்திற்கொண்டு அவரை மீண்டும் துடுப்பெடுத்தாட இலங்கை வீரர்கள் அழைத்திருக்க வேண்டும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

 

கடந்த செய்வாய்க்கிழமை பேர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் சச்சித்ர சேனநாயக்க பந்தை வீசுவதற்கு முன்னரே ஜொஸ் பட்லர் ஓட்டம் எடுக்கும் அவசரத்தில் எல்லையை விட்டு சென்ற வண்ணம் இருந்தால்  அவரை சச்சித்ர எச்சரித்தார்.  ஆனால் அவர் மீண்டும் எல்லையை விட்ட முன்னோக்கி நகர்ந்தபோது பந்து வீச ஓடிய சச்சித்ர,  ஸ்டம்ப் செய்து ரன் அவுட்டுக்கான கேள்வியை எழுப்பினர்.

நடுவரோ ஆட்டமிழப்புக்கான கேள்வியை மீளப்பெறுமாறு அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸிடம் கோரினார். ஆனால் விதிகளின்படியே ஆட்டமிழப்புக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என ஏஞ்சலோ மெத்யூஸ் பதிலளித்தர். அதையடுத்து ஜொஸ் பட்லர் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார்.


இவ்விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

 

இது தொடர்பாக  அர்ஜுன ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில் 'அவரை நாம் ஆட்டமிழக்கச் செய்திருக்க வேண்டும். அதன்பின் அவரை அணித்தலைவர் ஏஞ்சலோ மீண்டும் அழைத்திருக்க வேண்டும். நான் இதைத்தான் செய்திருப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், இலங்கை வீரர்கள் விதிகளின்படியே செயற்பட்டனர் எனவும் அர்ஜூன ரணதுங்க கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5700#sthash.8wbVzP5f.dpuf

  • தொடங்கியவர்

இலங்கை – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு
வெள்ளிக்கிழமை, 06 ஜூன்

 

இலங்கை  - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

அலஸ்டயர் குக் தலைமையில் 12 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய மூன்று வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுளளது. மூயேன் அலி, கிறிஸ் ஜோர்டான், சாம் ரொப்சன் ஆகியோரே இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள புதிய வீரர்களாவர்.

 

உபாதை காரணமாக சந்தேகத்தில் இருந்த விக்கெட் காப்பாளர் மத் ப்ரையர் அணியில் இணைக்கப்பட்டுளார். லியாம் பிளங்கட் 7 வருடங்களின் பின்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொன்டி பனேசர் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அணியில் அங்கம்வகிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

 

ஆஷஸ் போட்டிகளின் தோல்வியின் பின்னர்  அணியில் இருந்து பலர் விலகியுள்ள நிலையில் பல மாற்றங்களுடன் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அலஸ்டைர் குக், மூயேன் அலி, ஜேம்ஸ் அன்டேர்சன், கரி பலன்ஸ், இயன் பெல், ஸ்டுவோர்ட் ப்ரோட், க்றிஸ் ஜோர்டான், லியாம் ப்லங்கட், மத் ப்ரையர், சாம் ரொப்சன், ஜோ ரூட், க்றிஸ் வோக்ஸ் ஆகியோரே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/113250-2014-06-06-05-55-45.html

  • தொடங்கியவர்

ஜோ ரூட் இரட்டை சதம்: இங்கிலாந்து அபாரம்

ஜூன் 13, 2014.

லண்டன்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 575 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் (102), மாட் பிரையர் (76) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு மாட் பிரையர் (86) நம்பிக்கை தந்தார். ஜோர்டான் (19) நிலைக்கவில்லை. ஸ்டூவர்ட் பிராட் (47), பிளங்கட் (39) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செயதார்.

முதல் இன்னி்ங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜோ ரூட் (200), ஆண்டர்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் நுவன் பிரதீப் 4, ஷமிந்தா எரங்கா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சில்வா அரை சதம் கடந்தார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. கவுசால் சில்வா (62), சங்ககாா (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://sports.dinamalar.com/2014/06/1402680459/rootendlandcricket.html

  • தொடங்கியவர்

36 ஆவது டெஸ்ட் சதம் குவித்தார் குமார் சங்கக்கார
 

 

லோர்ட்ஸ் மைதானத்தில் ந நடைபெறும் இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சதம் குவித்துள்ளார். சற்றுமுன் வரை அவர் 11 பௌண்டரிகள் உட்பட 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் குமார் சங்கக்கார குவித்த 36 ஆவது சதம் இதுவாகும். 36 வயதான குமார் சங்கக்கார தனது 123 ஆவது டெஸ்ட் போட்டியில் 36 ஆவது சதத்தை குவித்துள்ளார்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5793#sthash.WEprPru7.dpuf

  • தொடங்கியவர்

மயிரிழையில் தப்பியது இலங்கை
செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2014

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று (16) இலங்கை அணி மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி சமநிலையான முடிவைப் பெற்றுக்கொண்டது.

ஐந்தாம் நாளான நேற்று (16), 390 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி, 90 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கை அடைவது கஷ்டம் என்ற நிலையில் ஆரம்பம் முதலே இலங்கை அணி சமநிலை முடிவை நோக்கி துடுப்பாடியது. ஆரம்பத்தில் நல்ல முறையில் விளையாடிய போதும் இறுதி நேரத்தில் வேகமாக விக்கெட்களை இழந்தனர். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குமார் சங்ககார 61 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 57 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 4 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். இதில் கரி பலன்ஸ் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்டான்  24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களையும், மத் ப்ரயொர் 86 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் பிரதீப் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 453 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 147 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 102 ஓட்டங்களையும் பெற்றனர். கௌஷால் சில்வா 63 ஓட்டங்கள். மஹேல ஜெயவர்த்தன 55 ஓட்டங்கள். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டேர்சன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் நாயகனாக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார். இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/114564-2014-06-16-21-36-10.html

 

  • தொடங்கியவர்

பிரோட் ஹெட்ரிக் : இலங்கை அணி 257 ஓட்டங்கள்

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி துமல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது.


இப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிரோட் ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார். இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி போராடி முதல் போட்டியை சமநிலை செய்தது.

இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கைக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

குமார் சங்கக்கரா மட்டும் சிறப்பாக விளையாடி 79 ஓட்டங்களை குவித்தார். பின்னர் அவரும் வெளியேற ஆட்டம் தலைகீழாக மாறியது.

சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிரோட் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

முதல் ஓவரின் கடைசி பந்தில் சங்கக்கராவை ஆட்டம் இழக்கச் செய்த அவர், தனது அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் சந்திமால் (45 ஓட்டங்கள்), எரங்க (0) ஆகியோரை வெளியேற்றி ஹொட்ரிக் சாதனை புரிந்தார்.

இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தது.  முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் அலிஸ்டயர் குக் 14 ஓட்டங்களுடனும் சாம் ரொப்சன் 21 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/06/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-257-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை தோற்கடிக்குமா இலங்கை ?

 

அணித்­த­லைவர் மத்­தி­யூஸின் சதத்துடன் 2 ஆவது இனிங்ஸில் 457 ஓட்டங்களைக் குவித்த இலங்கை அணி, 350 ஓட்டங்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் 350 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி நேற்றைய நாளாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று தடுமாறுகின்றது.


இங்­கி­லாந்­து - இலங்கை அணிகளுக்கி­டை­யி­லான 2 ஆவதும் இறு­தி­யு­மான டெஸ்ட் லீட்ஸில் நடை­பெற்று வரு­கின்­றது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை, முதல் நாளி­லேயே தனது முதல் இனிங்­ஸ{க்­காக சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 257 ஓட்­டங்­க­ளைப்பெற, பதி­லுக்கு தனது முதல் இனிங்ஸை ஆரம்­பித்த இங்­கி­லாந்து 3 ஆம் நாளான நேற்று முன்­தினம் சகல விக்­கெட்­டுக்களையும் இழந்து முதல் இனிங்­ஸ{க்­காக 365 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றது.

இத­னை­ய­டுத்து அன்­றைய நாளி­லேயே தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்­ட­நேர முடிவின் போது 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 214 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் போட்­டியின் 4 ஆவது நாளான நேற்று மீண்டும் தனது 2 ஆவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 243 ஓட்டங்களைப்பெறுவதற்குள் மீதி விக்கெட்டுக்களை இழந்து 2 ஆவது இனிங்ஸ{க்காக 457 ஓட்ட ங்களைப்பெற்றது. 24 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த மத்தியூஸ் 160 ஓட்ட ங்களைப் பெற்றார்.

இந்நிலையில் 350 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு  துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய நாளாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆடுகளத்தில் ஜோய் ரூட் 6 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார். பந்துவீச்சில் தம்மிக பிரசாத் 4 விக்கெட்டுகளையும் ரங்கண ஹேரத் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய 5 ஆவதும் இறுதியுமான நாளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமாயின் 5 விக்கெட் மீதமிருக்கையில் 293 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

விக்கெட்டுகளை கைப்பற்றினால் இலங்கை அணி வெற்றியை ருசிக்கும் அதே நேரம் ஓட்டங்களை அதிரடியாக குவித்தால் இங்கிலாந்து அணி வெற்றியை ருசிக்கும். இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருப்பதால் அடித்தாடாது தடுத்தாடும் நோக்கிலேயே களமிறங்கும்.

இந்நிலையில் இப் போட்டிக்கான வெற்றி வாய்புக்கள் இலங்கையின் பக்கம் இருப்பதால் போட்டி எவ்வாறு அமையும் என பெறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

http://www.virakesari.lk/articles/2014/06/24/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இங்கிலாந்தில் முதற் தடவையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை
2014-06-24 23:46:07

இங்கிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட தொடரினை ஏஞ்சலோ மெத்வ்ஸ் தலைமையிலான இலங்கை அணி 1-0 என்ற ரீதியில் வெற்றிபெற்றது.

டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி வெற்றிபெற்ற முதல்  டெஸ்ட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5911#sthash.imZHHOmA.dpuf

  • தொடங்கியவர்

இங்கிலாந்திற்கு எதிரான தொடரை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இலங்கை

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை பதிவு செய்யாத இலங்கை, இன்று அந்த சாதனையை பதிவு செய்துள்ளது.
sds_zps840b6d2d.jpg

நான்காம் நாளில் தனது இரண்டாவது இனிங்சில் 214 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியை தொடர்ந்த இலங்கை அணி, மஹேல மற்றும் மெத்தியூசின் நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஸ்திரமான நிலையை அடைந்தது.

மஹேல ஜயவர்தன தனது 48 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்து 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்போது இலங்கை அணி 159 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

மெத்தியூஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்தினார். எனினும் சந்திமால் மற்றும் பிரசாத் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் மெத்தியூஸ் 149 ஓட்டங்களைப் பெற்றனர். இது இம்மைதானத்தில் பெறப்பட்ட இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாகும். ஹேரத் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அணித்தலைவருக்கான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்தியூஸ் 160 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 457 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்துக்கு 350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலகு வெற்றியை பெறும் நோக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. நான்காம் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.

5 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி போட்டியை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இடைநிலை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் மொஹீன் அலி திறமையாக விளையாடி ஆட்டமிழக்காமல் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அன்டர்சன் 50 பந்துகளை எதிர்கொண்டு எந்தவிதமான ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்தார். இதுவொரு சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


இறுதியில் மிதமாக ஒரு பந்து இருக்கும் வேளையில் இலங்கை அணி தனது த்ரில் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/articles/2014/06/25/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

 

 

இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட் போட்டியின் இறுதி ஓவரில் 5 வது பந்தில் :D :D

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் விளையாட்டு தொடர்பான செய்திகளை இணைக்கும் நவீனனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பந்தை சமாளிச்சு இருந்தா விளையாட்டு சம நிலையில் முடிஞ்சு இருக்கும்.... அஞ்சிலோ மைத்தியுஸ்சின் விளையாட்டு பாராட்டும் படியா இருந்தது....மைத்துயுஸ் நின்ர படியால் தான் வெற்றி கிடைத்தது இல்லை என்றால் இங்கிலாந்து உந்த விளையாட்டை ஈசியா வென்று இருக்கும்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.