Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது  Top News 
[saturday, 2014-05-03 10:11:18]
News Service
வெளிநாடுகளில் வதியும் மூன்று இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரோன் பிரதேசத்தில் ஏரிஎம் நிலையம் ஒன்றில் பணம் எடுக்க முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகுதி போலி கடனட்டைகளும், 7 இலட்சம் பாத் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
நெதர்லாந்தில் வாழும், விநோதன் தியாகராஜா (29 வயது), நோர்வேயில் வாழும் ஞானபூரணன் ரத்தினசபாபதி (வயது 51), இந்தியாவில் வாழும் நேசரூபன் அருணாசலம் ( வயது 28) ஆகியோரே தாய்லாந்துப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
thailand-arrest-020514-600.jpeg
 
thailand-arrest1-020514-600.jpeg
  • கருத்துக்கள உறவுகள்

முயற்ச்சியாளர்கள்  :rolleyes:

 

பாராட்டுக்கள் என போடுவோமோ ?:D

  • கருத்துக்கள உறவுகள்

 வாழும்நாட்டில் கக்கூஸ்கழுவிக்கூட காசு சம்பாதிக்கலாம். நோகாமல் நொங்குகுடிக்கிறவேலை கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் முக்கிய தளபதிகள் போல் இருக்கிறார்கள் ....... அனேகமாக ஆயுத கொள்வனவுக்குதான் இதை செய்து இருப்பார்கள்.
 
யாராவது சாத்திரம் பார்த்து எழுதினால்தான் ....
புலிகள் கடன் அட்டை மோசடி செய்தது தெரிய வரும்.
  • கருத்துக்கள உறவுகள்
இரு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் ஒரு 'இந்திய வெஜிடேரியன் செயினில்' சில 'snacks' வாங்கினேன். £11.42. Debit Card கொடுத்தேன். Cash machine தொலைவில் இருந்ததால், நேரமாகும் என கொடுத்து விட்டேன்.
 
பின் அடிக்கும் போது, கவனத்தினை ஈர்க்கும் வகையில், இதை அப்பிடி 'heat' பண்ணுங்கள், இதை plain tea உடன் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும், போன்ற உரையாடல்கள் இருந்தன. 
 
மறுநாள் பாங்கில் இருந்து கைத்தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. 'ஐயா, உங்கள் பிலிப்பீன்ஸ் விடுமுறை எப்படி போகிறது என்று ஆரம்பித்தார்'. என்னது? நான் விடுமுறையில் என்று யார் சொன்னது? இப்போது வேலையில் இருக்கிறேனே, என்றேன்.
 
அப்படியா, ஐயா: விடயம் என்னவெனில், உங்கள் அட்டையினை பாவித்து £84, £84, £168 அங்கே எடுக்கப்பட்டுள்ளது. இப்போதே மட்டையினை cancel பண்ணுகிறோம். விசாரித்து விட்டு, பணத்தினை திருப்பித் தருகிறோம். என்றார்.
 
சொன்னது போல் ஒரு வாரத்தில் திருப்பி தந்தனர். இந்த இழப்புக்களை வட்டியாக பின்னர் அறவிடுவார்கள்.
 
இப்ப தெரியுது, இந்த வேலை செய்ய விரும்பாக் மட்டை கோஸ்டிகள் எவ்வளவு வேகமாக செயல் படுகிறார்கள் என....
 
ஒரு ஆலோசனை: (அனுபவத்தால் வந்தது) 
 
சில வேளைகளில் கையில் தேவையான பணம் இருக்காது. cash point போய் வர நேரம் இருக்காது, 'Car Parking' பிரச்சனைகள் வேற: எனவே அவசியமான, அவசரமான தருணங்களில் மட்டையினை கொடுக்க வேண்டி இருக்கும்.
 
இத்தகைய தருணங்களில் தயங்காமல் மட்டையினை கொடுங்கள். கடையினை விட்டு வெளியே வந்ததும், மறக்காமல் முதல் வேலையாக 'Cash Point' போய், PIN மாத்தி விடுங்கள். உங்கள் பணம் பத்திரமாகும்.
 
அடுத்த முறை அதே கடைக்கு போனால், இந்த ஆள், சரிப்படாது என 'ருசி ஆலோசனைகள்' இருக்காது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்குப் போகும்போது கடனட்டை வழங்கும் வங்கிக்கு அறிவித்துவிடுவேன். ஒரு அட்டையைத்தான் பாவிப்பேன். இதுவரையில் பரவாயில்லாமல் ஓடிக்கொண்டிருக்கு.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இன்ரநெற்றும் எனக்கும் முழுநேரத்தொடர்பு

ஆனால் இதுவரை காட்டால் எதற்கும் காசு செலுத்தியது கிடையாது

அநேகமாக எந்தநேரமும் காசு இருப்பதால் காசு தான் செலுத்துவேன் (பெற்றோலுக்கும்)

(காட்டைக்கொடுத்து அதுக்கு காசை  வங்கியில் போட்டால் வங்கி வேறு எங்கிருந்து வந்தது என்று கேள்வி  கேட்கும் :lol: )

 

இதுவரை  நான் லா  சப்பலில்  காட்டை  பாவித்ததில்லை :)

 

 


வெளிநாட்டுக்கு போய் வந்த முதல் வேலையாக காட்டை  வங்கியில் கொடுத்து புதிசு வாங்கி  விடுவேன் :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு போதும் Debit Card ஐ எதையும் வாங்குவதற்குப் பாவிப்பதில்லை. Cash Point இல் பணத்தை எடுப்பதற்கு மட்டும்தான் பாவிப்பேன். அத்தோடு Credit Card ஐ நம்மவர்களின் கடைகளிலோ அல்லது நம்மவர்கள் வேலை செய்யும் இடங்களிலோ எக்காரணம் கொண்டும் பாவிப்பதில்லை. அவ்வளவு நம்பிக்கை நம்மவர்கள் மீது!!

எனினும் Credit Card ஐ internet shopping க்குத் தாரளமாகப் பயன்படுத்துவேன். ஒன்றுக்கு மேற்பட்ட security settings உள்ளதால் பிரச்சினைகள் (இதுவரை) இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா,

 

இசையர் பாங்குக்கு, தொடை தட்டி சவால் விட்டு, போய் ஒரு மட்டையில விளையாட்டு காட்டுறது மட்டுமில்லாமல், தன்னடக்கத்தோட, ஏதோ ஓடிக்கொண்டிருக்காம்.

உந்த பிடிபட்ட கருமங்கள், இசையரிட்ட தொழில் பழக வேண்டும்.  :blink:  :icon_idea: 

இசையா, கொக்கா!!  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்யா கொலைவெறி??! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்யா கொலைவெறி??! :D

 

 

அடி  வாங்கியிருக்கிறார் போல........ :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.