Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லீம் மக்களின் உரிமைப்போரில் அனைவரும் இணைந்து கொள்வோம்: புதிய திசைகள்

Featured Replies

பௌத்தம் தமிழர் பகுதிகள் எங்கும் பரவுவதை ஆதரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் கிருத்தவத்தின் வளர்ச்சியும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மையாவதும் தமிழ்த்தேசீயத்துக்கு இலங்கையில் தலமையேற்பதும் தவிரக்க முடியாத எதிர்கால விதி. இவைகளை எல்லாம் ஆதரிப்பதற்கான ஒரே காரணம் இந்துத்துவம் இலங்கையில் கருவறுக்கப்டவேண்டும். இன்று ஒவ்வொரு தமிழனும் சுயமரியாதை இன்றி அடிமையாய் இரண்டாந்தரப் பிரஜையாய் இருப்பதற்கான அடிப்படை காரணம் இந்துத்துவமும் அதை தாங்கிப்பிடிக்கும் மையவாதமும். இவை இரண்டும் அழிக்கப்படாமல் தமிழனுக்கு எந்த ஜென்மத்திலும் விடுதலை இல்லை. உள்ளிருந்து  அழிக்க முடியாத இந்துத்துவ விசச் செடியை பிற சக்திகளாக பௌத்தம் இஸ்லாம் கிருத்தவத்தின் வளர்ச்சியாலே தான் அழிக்கமுடியும். அந்தக் காலம் வெகு தூரத்தில் இல்லை ஏனெனில் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மையவாதக் கோட்பாட்டுக்கு கீழே மக்கள் ஐக்கியப்படுவதோ இல்லை தலமைகள் உருவாவதோ இல்லை உருவான தலமைகள் வெற்றிபெறுவதோ இனம் கட்டமைக்கப்படுவதோ தேசியம் வலுப்படுவதோ கற்பனையிலும் நடக்கமுடியாத காரியம் என்பதை வரலாறும் நடைமுறையும் யதார்த்தமும் சொல்லி நிற்கின்றது.

நீங்கள் சொல்லும் விடயத்தின் பின்னாலுள்ள நியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எமது மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களை அகதிகளாக்கி அங்கே பௌத்த சின்னங்களை நிறுவி இறுமாந்து நிற்கும் பௌத்த பேரினவாதம் ஒருபோதும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லப் போவதில்லை. பௌத்த தத்துவவியல் மற்றைய மதங்களை விட எவ்வளவோ உயர்வானதாயினும் இலங்கையில் அது இன்று கடைப் பிடிக்கப் படும் முறை காவிதரித்த மொட்டைக் காடையரின் கூடாரமாகியுள்ளது. புத்தர் சொன்ன அன்பு வழியைப் பின்பற்றக் கூடிய பௌத்த பிக்குகள் மிகவும் சிறுபான்மையினராகி பேசும் உரிமையைக் கூட இழந்து வருகின்றனர்.

அடுத்ததாக இஸ்லாம். இது ஒப்பீட்டளவில் மனிதருள் (இஸ்லாமியராக மாறிய பின்) சமத்துவத்தைப் போதித்தாலும் பெண்களை மிக மோசமாக அடக்கும் மதம். இதற்கான நியாயங்கள் குரானில் தாராளமாக் உள்ளன. இஸ்லாமியர் அல்லாதோர் குறித்து இந்த மதம் இழிவான கருத்துக்களைச் சொல்லி மதவெறியர்களை உருவாக்கக் கூடிய மதம். இந்த மதம் இன்று கடைப் பிடிக்கப் படும் முறை மனித சமுதாயத்தையே 7ம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்லக் கூடியது.

கிறிஸ்தவம். போர்த்துக்கேயர் காலத்தில் மிகவும் கொடூரமான முறையில் எம்மண்ணில் அறிமுகப் படுத்தப் பட்டது. இன்று மகிந்த அரசின் காடைகளே அண்ணார்ந்து பார்க்குமளவிற்கு இருந்தது இந்தக் கத்தோலிக்கர்கள் மதத்தைத் திணித்த முறை. கிறிஸ்தவம் இன்று உலகளவில் கடும் போக்கைக் கடைப்பிடிக்கும் மதமாக இல்லாது (இலங்கை உட்பட) வெறும் சம்பிரதாய பூர்வமாகவே கடைப் பிடிக்கப் படும் மதமாக மாறியுள்ளது. ஆனாலும் இன்றைய கிறிஸ்தவர்கள் தமது வாழ்வியலை தமது பைபிளில் தேடி அதன் படி வாழ்வார்களாயின் கிறிஸ்தவ ஜிகாதிகள் எம்மண்ணில் உருவாகக் கூடிய ஆபத்தும் பொதிந்து கிடக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

இந்து வருணாசிரம தர்மம் முதற் கொண்டு அத்தனை கேவலமான இந்துத்துவக் கோட்பாடுகளும் இந்த உலகில் துடைத்தெறியப் படவேண்டும். அதற்காக எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் வேலையை நாம் செய்ய முடியாது தானே.

Edited by Alternative

  • Replies 84
  • Views 5.7k
  • Created
  • Last Reply

பௌத்தம் தமிழர் பகுதிகள் எங்கும் பரவுவதை ஆதரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் கிருத்தவத்தின் வளர்ச்சியும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மையாவதும் தமிழ்த்தேசீயத்துக்கு இலங்கையில் தலமையேற்பதும் தவிரக்க முடியாத எதிர்கால விதி. இவைகளை எல்லாம் ஆதரிப்பதற்கான ஒரே காரணம் இந்துத்துவம் இலங்கையில் கருவறுக்கப்டவேண்டும். 

 

 

இஸ்லாமியத் தமிழர்கள் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட முற்படும்போது ஏனைய தமிழர்கள் அதில் பங்குபெறுவது குறித்து இஸ்லாமியத் தமிழர்கள் தான் முடிவுசெய்யவேண்டும். இதில் முரண்பாடுகளின் சுய உருவமாகவும் உலகின் எந்த ஒரு நாட்டின் அனுசரணைக்கும் அப்பாற்பட்ட தமிழர்கள் இவ்வாறான போராட்டங்களில் மூக்கை நுளைக்கும்போது இஸ்லாமியத்தமிழர்களின் போராட்டம் பலவீனமாகவே சந்தர்ப்பம் உண்டு.  பெரும்பான்மையாகவும் பிரதான சக்தியாகவும் உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழ்ச்சமூகம் தான் அவர்களின் போராட்டத்தில் ஏனைய தமிழர்களை இணைப்பதா இல்லையா என்பதை முடிவுசெய்யவேண்டுமே தவிர ஏனைய தமிழர்கள் இல்லை.

தாங்கள் தமிழர் மாதிரி நடிக்கும் போது நடிப்பில் விடும் பிழைகளை தெய்யாமல்த்தான் நடிக்கிறார்கள். 

 

துடிக்கிற துடியிலை அடி பொறுப்பாக விழுகிறது என்று காட்டுகிறது. பதியுதின் திரும்ப கூட்டமைப்பில் சேர வேண்டும் என்று அறிக்கை விட தயாராகிறார் போலிருக்கு. 

 

குருடன் சூரியன் உதிக்கிறதா என்று கேட்டால் அதில் நகைப்பில்லை. வகுப்பு வாதத்தை திணிக்க வந்தவர்கள் இன்று சிங்களத்திடம் வங்குவதை வெளியே யார் பார்க்கிறார்கள் என்று நடித்தால் நம்ப நாங்கள் முட்டாள் அல்ல.

 

 

அது மட்டுமல்ல பொதுபல சேனா கூட அப்பாவி இந்துகளை வன்முறையால் மதம் மாற்றுகிறார்கள் என்கிறது. எதோ தங்களுக்கு தான் சப்போட்மாதிரி எழுதுறார்கள். கறுமம். 

 

அது போக அரேபிய பௌத்தத்தில் தான் சாதி மதம் இல்லை. இந்திய இலங்கை பௌத்தம், கிரிஸ்த்தவம் இரண்டிலுமே எல்லா சாதியும் இருக்கு. ஊர் மனைக்களுக்குள் குடியிருக்காமல், லண்டனுக்கு படிக்ககிற காசிலை வந்து படித்திட்டு எழுதுவோருக்கு இலங்கையை பூகோளப்படத்தில் காட்ட தெரியாது என்றதை நாம் பலதவைகள் முன்னரும் பார்த்திருக்கிறோம். 

எந்த மதம் எந்த மதத்திட்டை கருவறுபட்டது என்றதை சிலர் இங்கே எழுதிய பதிவுகளில் சொல்லப்பட்டும் இருக்கிறது.  அடிச்ச சரக்கு குலைஞ்சு போன நிதானத்தாலை தாங்கள் முதல் பந்தியில் என்ன எழுதினாங்கள் என்றது நினைவில் இல்லாமல் எழுதிகிறார்கள். தமிழர் தங்கள் பாட்டை பார்பார்கள். சதி பேதத்தை அவர்கள் கையாளவர்கள். ந்டிக்கத்தெரியாத நடிகர்களின் மேடை பேச்சு எடுபடாது.

 

நிர்வாணமாக திரியும் வெக்கம் கெட்டவனுக்கு அரைதுண்டுடன் தியானத்தில் இருக்கும் சாமியைப்பார்க்க சிரிப்பு வருகிறது.  கொடுக்குடன் இருப்பவனை பார்த்துசிரிப்பது நிர்வாணமான திரியும் தனக்குத்தான் இன்னொரு வெக்கம் என்றதை அவனால் புரிந்து கொள்ள முடியுமாயின் அவன் தனது நிர்வாணத்தைதான் முதலில் மறைத்துவிட்டுத்தான் சிரிக்க முயல்வான். நேற்றும் பரிசில் முகத்தை மூடக்கூடாது என்ற சட்டதை மீறி சென்ற பெண்ணை தடுக்க முயன்ற போது பொலிஸ் ஆபிசரின் மூக்கை கடித்து எடுத்துவிட்டத்தாக செய்தி. 

 

 

சிங்கள எழுத்தாளர்கள் மகாவம்சம் பற்றி எழுதுகிறார்கள். இனி 6ம் நூற்றண்டு கதைதான் திரும்ப வரப்போகிறது. அவர்கள் தமிழர் 6ம் நூற்றாண்டில் கண்டு பிடித்த்தை இன்று கண்பிடித்துவிட்டார்கள். மேற்கு நாடுகள் இந்துக்களின் பண்புகளை விரும்புகிறார்கள்.  காந்தி தனது அகிம்சையை, வெறி மதங்களை அழிக்க பக்தி மார்கத்தை தொடக்கி வைத்த திருநாவுக்கரசரிடம் இருந்து கற்றார். அதை மாட்டின் லூதர் பயன்படுத்தியால் இன்று மேற்குலகின் தனி கறுப்புத் தலைவனாக இருக்கிறார். முழு மிருகங்களை கொன்று தின்னும் பழக்கதை ஒதுக்குவது இந்துக்களிடம் இருந்து மேற்குநாடுகள் வேகமாக கற்கிறார்கள்.  பொது பல சேன கூட அதை இலங்கையில் கொண்டுவந்து மிருகங்களை அறுத்து பணம் உழைப்பதற்கு தடை போடுகிறது. மனதுக்கு  விரும்பமான கடவுளை வணங்குவது அவர்களின் இயல்பாக மாறி வருகிறது. உலகு எங்கே போகிறது என்றதை அறியாத குருடுகளும், பௌவுத்ததில் கிறிஸ்த்தவத்தில் சாதியம் முழுவத்தாக இருக்கு என்றதை அறியாத முட்டாள்களினது முடிவு பொது பல சேனையால் குரல் மெல்ல மெல்ல திருக்கப்படுவதே. 

 

வவுனியாவில் சிவசேனையாக நடித்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக  வெளிவிட்ட அறிக்கையை எல்லோருக்கும் தெரியும். உடனே இந்து மகா சபை யார் ஏன் அந்த அறிக்கை விடுகிறார்கள் என்றதை கூறிவிட்டது. ஆண்டாண்டு காலமாக அரசின் சிறிய பணத்துக்கு ஆசைப்பட்டு யாழில் வந்து விதைத்த  பொறியில் இப்போ இந்த சிங்கங்கள் தான் சிக்கியிருக்கு. ஆனால் தாழ்த்தபட்ட தமிழர் கூட்டமைப்புக்குதான் முழுவாக்கும் எப்போதும் அளித்து வருகிறார்கள். அவர்கள் தங்களின் விடுதலை பாதை எங்கிருக்கிறது என்று தெரிந்து நிதானமாக பயணிக்கிறார்கள். போதிக்க வந்தவர்களுக்கு கிடைக்கும் அடியால் தப்ப முடியாமல் திசை திருப்ப சாதியம் திரும்பவும் கதைக்கிறாகள். தமிழர் ஐ.நா வரை தங்கள் வழக்கை கொண்டு சென்றுவிட்டார்கள். முஸ்லீம்களே இந்தியாவில் வாக்களித்து மோடி பதவிக்கு வரபோகிறார்.  இனி சந்திரனை பார்த்து குரைக்க வேண்டியதுதான். ஐ.நா சென்று தங்கள் நலங்களுக்கு எதிராக கதைத்த கக்கீமும் இலங்கையின் சம்பளபட்டியலில் இருக்கும் தனக்குதான் குழி பறிக்கும் டபண்டிதர்களும் இந்துக்களின் சாதியத்தை பற்றி கதைத்துக்கொண்டு ******************************************8

Edited by nunavilan

இல்லாத பிள்ளைக்கு என்ன பெயர் சூட்டுவது?

வாலி,

இந்த பிள்ளை எப்படியோ பிறக்கபோவது. இப்போதே பெற்று, பெயர் வைப்பது நல்லது.

தமிழீழம் கிடைத்த பின் 50 இசுலாமிய நாடுகளுடன் வர்த்தகம், அரசியல் செய்யவேண்டுமே? தமிழீழத்திற்கு தேவையான எரிபொருளுக்கு எங்கே போவது?

தமிழீழம் எல்லா மத,மொழி, இனங்களையும் ஒரே தாயாக வளர்க்கும்.

இங்கு சில இசுலாமிய சக்திகளின் துரோகத்தை பட்டியலிடுவொர் டக்கி, கருணாவை மறக்கிறார்கள்.

பல போராளிகளை வெளியில் எடுக்க எங்களுக்கு மூனா வேண்டும், உண்டியலில் காசு அனுப்ப மூனா வேண்டும், வாய்க்கு ருசியா மச்சம் சமைக்க நானா வேண்டும்.

புலிகளின் அரசியல் மேடைகளில் அய்யர், பாதிரியார், இமாம், பிக்கு என்று எல்லா மதத்தையும் மதித்தார்கள்.

நாமும் பழசில் இருந்து படித்து புதிய நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

விக் அண்ணா, சில காலத்துக்கு முன்னர் இல் ஒரு கட்டுரை வந்தது அதாவது அம்பாறையில் இஸ்லாம் மததிற்கு மாறிய தமிழருக்காக ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாம், இதை விட வேறு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன், http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35657இதை தயவு செய்து வாசிக்கவும்

நன்றி. பதிவை படித்தேன்.

நாம் கைவிட்ட ஏழைகள் வாழ்வாதாரத்திற்காக மதம் மாறியுள்ளனர்.

இப்படியான விடயங்கள் கிறித்தவத்திலும் உண்டு, இந்து மதத்திலும் உண்டு.

கனடாவில் சாய் பாபா, ஈசா, நித்தியானந்தா, அம்மா என்று பல அமைப்புகள் ஆட்சேர்ப்புக்கு அடிபடுகிறார்கள்.

அதற்காக இப்படியான நிகழ்வுகளை தட்டி கழிக்க தேவையில்லை. இவற்றையும் கணிப்பில் வைத்திருக்கவேண்டும்.

நாம் இசுலாமியருடன் சேர்ந்து சில விடயங்களில் போராடுவது பல அனுகூலங்களை தரும்.

1. உலகம் சிறி லண்கவை நம்புவதை குறைக்கும்.

2. 53 இசுலாமிய நாடுகளுடன் ஒற்றுமையை பேணி ஐ.நா மற்றும் அபிவிருத்தி உதவிகள் பெறலாம்.

3. இசுலாமிய ஓட்டுகுழுகளை பின் தள்ளலாம்.

4. பொது பல சேனைக்கு மாரடைப்பு கொடுக்கலாம்.

5. சிறி லங்காவின் அடக்கு முறை அதிகரித்து அரபு நாடுகளின் வெறுப்பை சேர்க்கும்

6. இணக்கவாதிகள் என்று சேர்ந்திருப்போர் சந்தேக கண்ணுடன் நோக்கபடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்
 
140505143938_muslims_protest_304x171_bbc

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு என்ற இயக்கத்தின் தலைமையில், பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள்.

140505144100_muslim_protest_304x171_bbc_பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கோசமிட்டு ஆர்பாட்டை ஆரம்பித்த முஸ்லிம்கள், அங்கிருந்து ஊர்வலமாக இலங்கை தூதரகத்தை நோக்கிச் சென்றனர்.

பொதுபலசேனா உட்பட சில அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிச் செய்யக் கோரியும் சில பாதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களின் பேச்சாளரான எம் . பௌசர் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் பற்றிக் கூறுகையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் கோரும் வகையில் தமது இந்த முதலாவது போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார்.

140505143302_muslim_protest_in_london_30

அதேவேளை, இந்த போராட்டத்துக்கும் தமக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று இலங்கை உலமாக்கள் சபையும், இலங்கையில் உள்ள முஸ்லிம் கவுன்ஸில் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. குறைகள் இருப்பின் முஸ்லிம்கள் பிரிட்டனுக்கான இலங்கை தூதுவரிடம் அது குறித்து முறைப்பாடு செய்யலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

ஆனால், கடந்த காலங்களில் தம்மால், இலங்கை தூதரிடம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அநீதிகள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்த விதமான பலனும் கிட்டாத காரணத்தினாலேயே, இந்த போராட்டத்தை தாம் ஏற்பாடு செய்ததாக இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் அமைப்பின் தலைவரான எஸ். நசீர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/05/140505_muslimslondonprotest.shtml

இலங்கையில் இப்படியான ஊர்வலங்களை செய்யாமல் ஏன் இங்கு செய்யவேண்டும். இதனை இலங்கை கவனத்தில் எடுத்து பௌத்த வெறியர்களை அடக்கி சமவுரிமை கொடுக்குமா?(ஏற்கனவே தமிழர்களுக்கு) சர்வதேச விசாரணைகள் வரப்போவதால் திசை திருப்பி தங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கு எனக்காட்டி இது நாட்டில் மதங்களுக்கு இடையில் இருக்கும் சிறுபிரச்சனையாக காட்ட(ஏற்கனவே இந்தமாதிரி உலகுக்கு காட்ட இலங்கையைகாப்பாற்றும் தரப்பில் முயற்சி) சிங்கக்கொடியை தூக்கிகொண்டு தமிழர்களையும் சேர்த்து உலகிற்கு காட்டவா? எல்லா பக்கத்திலும் நன்றாக சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை முஸ்லீம்களுக்கு அங்கை பிரச்னை இருக்கிறது உண்மை.அது மதப்பிரச்சனை
தமிழருக்கும் பிரச்சனை இருக்கு அது இனப்பிரச்சனை.
இலங்கை முஸ்லீம்கள்இந்துக்களுடன் சேந்து  இனப்பிரச்சனைக்குத் தீர்வைத் தேடினால் அவர்களுக்கு இப்போதுள்ள மதப்பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும்.   இந்துக்களுடன் சேர்ந்து முஸ்லீம்களும் தமிழர்கள் என்ட
வகையில் கூட்டமைப்பை முன்னிறுத்திப் போராடினாலே எல்லாப்பிரச்சனைக்கும் ஒரு வழி பிறக்கும்.
 

நாம் கைவிட்ட ஏழைகள் வாழ்வாதாரத்திற்காக மதம் மாறியுள்ளனர்.

இப்படியான விடயங்கள் கிறித்தவத்திலும் உண்டு, இந்து மதத்திலும் உண்டு.

கனடாவில் சாய் பாபா, ஈசா, நித்தியானந்தா, அம்மா என்று பல அமைப்புகள் ஆட்சேர்ப்புக்கு அடிபடுகிறார்கள்.

அதற்காக இப்படியான நிகழ்வுகளை தட்டி கழிக்க தேவையில்லை. இவற்றையும் கணிப்பில் வைத்திருக்கவேண்டும்.

பொருளாதார ரீதியில் மட்டுமல்ல சமூக ரீதியிலும் கைவிடப் பட்ட மக்கள் அல்லது ஒடுக்கப் பட்ட மக்கள் மதம் மாறுவது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. இது குறித்து அக்கறை கொள்பவர்கள் அந்த மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இந்து மதத் தலைவர்கள் இந்த மக்கள் பற்றி பெரிதாக அக்கறைப் பட்டதில்லை. மதம் மாறும் மக்களை திட்டி வசைபாடுதல் மட்டும் இந்த மத மாற்றத்தை நிறுத்தி விடாது.

Edited by Alternative

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் நல்ல சிந்தனை 
முஸ்லிம் சகோதர்கள் முதல்கட்டமாக .............. போரால் பதிக்க பட்ட தமிழர்களுக்கு.
கொஞ்ச நிதியுதவி செய்யலாம்.
 
அதனை தொடர்ந்து தமிழர்களும் ..... முஸ்லிம் சகோதரர்களுக்காக போராடலாம்.
 
(அனேகமாக முட்டைக்குள் இருந்துதான் கோழி வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்)

இலங்கையில் இப்படியான ஊர்வலங்களை செய்யாமல் ஏன் இங்கு செய்யவேண்டும். இதனை இலங்கை கவனத்தில் எடுத்து பௌத்த வெறியர்களை அடக்கி சமவுரிமை கொடுக்குமா?(ஏற்கனவே தமிழர்களுக்கு)சர்வதேச விசாரணைகள் வரப்போவதால் திசை திருப்பி தங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கு எனக்காட்டி இது நாட்டில் மதங்களுக்கு இடையில் இருக்கும் சிறுபிரச்சனையாக காட்ட(ஏற்கனவே இந்தமாதிரி உலகுக்கு காட்ட இலங்கையைகாப்பாற்றும் தரப்பில் முயற்சி) சிங்கக்கொடியை தூக்கிகொண்டு தமிழர்களையும் சேர்த்து உலகிற்கு காட்டவா? எல்லா பக்கத்திலும் நன்றாக சிந்திக்க வேண்டும்.

நல்ல ஒரு சிந்தனை. நாம் பட்டாகத்தி சிங்ககொடியின் கீழ் போராடாமல் எதிரில் நின்று சிறி லங்காவிற்கு எதிராக போராடலாம்.

இதனால் உலகத்திற்கு சிறி லங்கா ஒரு பிரச்சினையான நாடு என்று காட்டலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.