Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொலன்ட் அல்லது கொலம்பியா அல்லது வெல்கியம் அல்லது கொஸ்தரிக்க அல்லது அமெரிக்கா , இந்த நாடுகள் கோப்பை தூக்கினால் மகிழ்ச்சி...............

Edited by பையன்26

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலன்ட் அல்லது கொலம்பியா அல்லது வெல்கியம் அல்லது கொஸ்தரிக்க அல்லது அமெரிக்கா , இந்த நாடுகள் கோப்பை தூக்கினால் மகிழ்ச்சி...............

 

பையன் நீங்கள் சொன்ன நாடுகளும் 50 60 வருடங்கள் விளையாடுகின்றனர். ஆனால் கோப்பையைத் தூக்கஅது காணாது.அதுக்கு ராசி வேண்டும். :D

இந்த முறை கோப்பை ஜேர்மனிக்குத் தான் :D

அடுத்த முறை ரஸ்யாவிலை போய் இவை கோப்பையைத்  தூக்கட்டும் :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா தோல்வியடைந்ததில் எனக்கு மிகவும் கவலை.  :(

கொலன்ட் அல்லது கொலம்பியா அல்லது வெல்கியம் அல்லது கொஸ்தரிக்க அல்லது அமெரிக்கா , இந்த நாடுகள் கோப்பை தூக்கினால் மகிழ்ச்சி...............

 

கொலண்ட்  வெண்டாலும் தோத்தாலும் காரணம் றொபன் எண்டு ஆகி போச்சுது...     மெக்சிகோவை குத்துக்கறணம் அடிச்சு நடுவரை ஏமாற்றி தோற்கடித்ததாக ஊடகங்களுக்கு சொல்ல போய்  வம்பிலை மாட்டி இருக்கிறார்... !!!    தவளை வாயாலை கெடுவது போல... 

 

இதுவரை ஒல்லாந்து வெண்டதுக்கு மிக முக்கிய காரணங்களில் றொபன் முக்கியமான ஆள்...  இனி நடுவர்கள் எரிச்சல் அடைந்து பக்க சார்ப்பாக நடக்க வெளிக்கிட்டாலும் காரணம் றொபனே... 

 

மற்றும்படி ஒல்லாந்து கோப்பையை வெல்ல எல்லாவகையிலையும் தகுதியான அணிதான்... 

  • கருத்துக்கள உறவுகள்

exercices009.gifd51a8c0b.gif

பயங்கர  ரெய்னிங் ,  நாட்  ரைம் டூ ஸ்பீக்  ஸ்டில் பிரைடே...! :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

றொபன் குத்துக்கரணாம் அடிச்சது வடிவா தெரிஞ்சது.. :huh: ஒன்றுகூடலின்போது கண்டு மகிழ்ந்தோம்.. சசியும், தமிழினியும் 'ஆகா.. என்னமாதிரி டைவ் அடிச்சார்..' என்று சந்தோசப்பட்டினம்.. ஐ மீன் பட்டிருப்பினம்..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் தமிழர்களுக்கு அடைக்கலம் குடுத்த நாடுகள் வெல்ல வேண்டும் என்று பிரான்ஸ்,பிரித்தானியா,கொலண்ட் ஆகிய நாடுகளும் முதற் சுற்றுகளில் வெல்லவேண்டும் என்று உள்ளூர விரும்பினோம்.இனி நேருக்கு நேர் மோதல் வந்து விட்டதால் எனக்கு குடியுரிமை தந்த நாடாகிய ஜேர்மனிக்கு முழு ஆதரவைக் கொடுத்து பிரான்ஸ்சுக்கு நல்ல அடி குடுக்கப்போகிறேன்.அண்ணன் தம்பி பாசம் எடுபடாது. இது குருசேத்திரப்போர்க்களம்!!!!விசுகர் உட்பட அனைத்து பிரான்ஸ் உறவுகளுக்கும் அழ்ந்த அனுதாபங்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நாளையும் கால் பந்துக்கு ஓய்வு..... :D பந்து எப்படி தான் தாங்குதோ தெரியல 22 பேர் கூடி அடிக்க.... லொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு நாளும் தமிழர்களுக்கு அடைக்கலம் குடுத்த நாடுகள் வெல்ல வேண்டும் என்று பிரான்ஸ்,பிரித்தானியா,கொலண்ட் ஆகிய நாடுகளும் முதற் சுற்றுகளில் வெல்லவேண்டும் என்று உள்ளூர விரும்பினோம்.இனி நேருக்கு நேர் மோதல் வந்து விட்டதால் எனக்கு குடியுரிமை தந்த நாடாகிய ஜேர்மனிக்கு முழு ஆதரவைக் கொடுத்து பிரான்ஸ்சுக்கு நல்ல அடி குடுக்கப்போகிறேன்.அண்ணன் தம்பி பாசம் எடுபடாது. இது குருசேத்திரப்போர்க்களம்!!!!விசுகர் உட்பட அனைத்து பிரான்ஸ் உறவுகளுக்கும் அழ்ந்த அனுதாபங்கள்!!!!

 

எங்கடை ஆக்களுக்கு அடைக்கலம் எண்டு பாக்கப்போனால் ஜேர்மனிதான் தாய்நாடு :D .........கூடுதலாய்  ஜேர்மனிக்கை நுழைஞ்சுதான் பிறகு அங்காலை இஞ்சாலை பிரிஞ்சவை.  :lol: ...அதுக்கை கனடா கொஞ்சம்...கொஞ்சம் வித்தியாசம்.. <_<  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்களுக்கு அடைக்கலம் எண்டு பாக்கப்போனால் ஜேர்மனிதான் தாய்நாடு :D .........கூடுதலாய்  ஜேர்மனிக்கை நுழைஞ்சுதான் பிறகு அங்காலை இஞ்சாலை பிரிஞ்சவை.  :lol: ...அதுக்கை கனடா கொஞ்சம்...கொஞ்சம் வித்தியாசம்.. <_<  :icon_idea:

 

நானும் அதே போல தான் தாத்தா..இரண்டர வருடம் உங்க இருந்து தான் டென்மார்க் வந்தேன்...1997ம் ஆண்டில் இருந்து 1999ம் ஆண்டு வர....1999ம் ஆண்டு 10ம் மாதம் டென்மார்க் வந்தேன்...ஜேர்மனியில் gladbeck சிட்டியில் வசித்தேன்....நான் வசித்த வீட்டுக்கு பக்கத்தில் டொச் மாஸ்ரர் இருந்தார் அவருக்கு என்னை நல்லா பிடிக்கும் சனி கிழமை அல்லது ஞாயிற்று கிழமை சினிமா சிவிம்மிங் பூல் மக்டோனாஸ் என்று அவரின் பிள்ளைகளோட என்னையும் கூட்டி செல்வார்...மற்ற நாட்க்களில் எங்களுக்கு டொச்சும் படிப்பிப்பார்....ஆரம்பகால வெளி நாட்டு வாழ்க்கை ஜேர்மனியில் நல்லாவே போனது....

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் தமிழர்களுக்கு அடைக்கலம் குடுத்த நாடுகள் வெல்ல வேண்டும் என்று பிரான்ஸ்,பிரித்தானியா,கொலண்ட் ஆகிய நாடுகளும் முதற் சுற்றுகளில் வெல்லவேண்டும் என்று உள்ளூர விரும்பினோம்.இனி நேருக்கு நேர் மோதல் வந்து விட்டதால் எனக்கு குடியுரிமை தந்த நாடாகிய ஜேர்மனிக்கு முழு ஆதரவைக் கொடுத்து பிரான்ஸ்சுக்கு நல்ல அடி குடுக்கப்போகிறேன்.அண்ணன் தம்பி பாசம் எடுபடாது. இது குருசேத்திரப்போர்க்களம்!!!!விசுகர் உட்பட அனைத்து பிரான்ஸ் உறவுகளுக்கும் அழ்ந்த அனுதாபங்கள்!!!!

 

நானும் அதே போல தான் தாத்தா..இரண்டர வருடம் உங்க இருந்து தான் டென்மார்க் வந்தேன்...1997ம் ஆண்டில் இருந்து 1999ம் ஆண்டு வர....1999ம் ஆண்டு 10ம் மாதம் டென்மார்க் வந்தேன்...ஜேர்மனியில் gladbeck சிட்டியில் வசித்தேன்....நான் வசித்த வீட்டுக்கு பக்கத்தில் டொச் மாஸ்ரர் இருந்தார் அவருக்கு என்னை நல்லா பிடிக்கும் சனி கிழமை அல்லது ஞாயிற்று கிழமை சினிமா சிவிம்மிங் பூல் மக்டோனாஸ் என்று அவரின் பிள்ளைகளோட என்னையும் கூட்டி செல்வார்...மற்ற நாட்க்களில் எங்களுக்கு டொச்சும் படிப்பிப்பார்....ஆரம்பகால வெளி நாட்டு வாழ்க்கை ஜேர்மனியில் நல்லாவே போனது....

 

உங்கள் எல்லோருக்கும்... ஜேர்மனி மீது இருக்கும், பாசத்தை நினைக்க கண் கலங்குதப்பா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=yP6fPNCsFP0

 

deutschl_m_ds.gifஜேர்மனிdeutschl_w_ds.gif வெல்ல வேண்டும் என்று... இங்குள்ள ஆலயங்களில், விசேட  யாக பூசை நடை பெறுகின்றது.

வரும் வெள்ளிக்கிழமை....  ஜேர்மனிடம் தோற்கப் போகும்df.gif, பிரான்சுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :D

பிரான்ஸுக்கு, சுவாஹா....... :lol:

Edited by தமிழ் சிறி

ஜேர்மன் பைனல் மட்சில் ஆர்ஜெண்டீனாவிடம் தோக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதல்...அதை நிறைவேற

கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதாக வேண்டுகிறேன்...

 

pinky-2117032.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் பைனல் மட்சில் ஆர்ஜெண்டீனாவிடம் தோக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதல்...அதை நிறைவேற

கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதாக வேண்டுகிறேன்...

pinky-2117032.jpg

ஜேர்மன் அணிக்கு படம் நல்ல தோதா இருக்கு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் அணிக்கு படம் நல்ல தோதா இருக்கு.. :D

 

ம் ம்  விளங்குது :D  :lol:  :lol:   வெள்ளிக்கிழமை இரவு  விளையாட்டு முடிய எங்கடை ஆட்டம் எப்படி என்று தெரியும் :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஃபிஃபா 2014-ல் கோல்கீப்பர்கள் ஆதிக்கம்: 16 கோல்களை முறியடித்து அமெரிக்காவின் ஹோவர்டு சாதனை

 

tim_howard_1979334h.jpg

'இது கோல்கீப்பர்களின் உலகக் கோப்பை' என்று சொல்லும் அளவுக்கு கோல்கீப்பர்களின் ஆதிக்கம் மிகுந்த ஃபிஃபா 2014-ல் அமெரிக்காவின் ஹோவர்டு அபார சாதனை படைத்துள்ளார்.

பெல்ஜியம் அணிக்கு எதிராக சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத, அசாத்திய கோல் கீப்பிங் செய்த அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு 16 முறை கோல்களைத் தடுத்திருப்பது புதிய சாதனையாகியுள்ளது. 1966 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு இதுதான் சாதனை. அதிலும் 16 தடுப்புகளும் நேருக்கு நேர் என்று கூறப்படும் உறுதியான கோல் வகையறாவைச் சேர்ந்தவை. டிம் ஹோவர்டிற்கு வயது 35!!

கிரிக்கெட்டில் எப்படி பேட்ஸ்மென்கள், அவர்கள் அடிக்கும் சிக்சர்கள், பவுண்டரிகள், நட்சத்திர வீரர்கள் என்று கவனம் குவியுமோ கால்பந்திலும் கோல்களை அதிகம் அடிக்கும் நெய்மார், மெஸ்ஸி, வான் பெர்சி, அர்ஜென் ராபின், தாமஸ் முல்லர், கொலம்பியாவின் ரோட்ரிகஸ், சுவிட்சர்லாந்தின் ஷகீரி என்று ரசிகர்களின் கவனம் குவிய, உண்மையான ஹீரோக்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல்கீப்பர்களே.

இந்த உண்மையின் முத்தாய்ப்புதான் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்டின் இந்த புதிய சாதனை. பெல்ஜியம் கேப்டன் வின்செண்ட் கொம்பெனி வெற்றி பெற்ற பிறகு தனது ட்விட்டரில் உடனடியாகப் பதிவு செய்த வார்த்தை இதுதான்: "Two words.. Tim Howard=respect".

அமெரிக்க பயிற்சியாளர் கிளின்ஸ்மென் கூறுகையில், “டிம் ஹோவர்டின் ஆட்டம் ஒரு பெருநிகழ்வு” என்றார்.

நேற்று நடைபெற்ற அர்ஜென் டீனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு எதிரான நாக்-அவுட் ஆட்டத்தில் சுவிஸ் கோல் கீப்பர் பெனாக்ளியோவின் அபார கோல்கீப்பிங் அர்ஜென் டீனாவின் கோல் போடும் முயற்சியைத் தொடர்ந்து முறியடித்து வந்தது. கடைசியில் அவரும் களைப்படைந்த நிலையில் கவனம் சிதறவே அந்த ஒரு கோலை தடுக்க முடியாது போனது. ஆனால் கடைசியில் எப்படியாவது சமன் செய்து விடும் முயற்சியில் சுவிஸ் கோல்கீப்பரே நடுக்களத்தில் வந்து நடுக்கள வீரராகக் களமிறங்கி ஆடியபோது அவரது தீவிரம் தெரியவந்தது. இந்தத் தீவிரம்தான் அவரது கோல்கீப்பிங்கிலும் பிரதிபலித்தது.

முதல் சுற்று ஆட்டத்தின்போது பிரேசில் - மெக்சிகோ அணிகள் மோதிய போட்டியில் மெக்சிகோ கோல்கீப்பர் ஒச்சா பெரிய ஹீரோவாகத் திகழ்ந்தார். அவர் அன்று குறைந்தது ஒரு 6 அல்லது 7 கோல்களையாவது முறியடித்திருப்பார்.

பிரேசில் கோல் கீப்பர் சீசர் அன்று சிலி அணிக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டில் அனைத்து சிலி ஷாட்களையும் சரியாக கணித்தார். 3 கோல்களை அவர் தடுத்தார்.

கிரீஸிற்கு எதிராக அன்று கோஸ்டா ரிகா நாக்-அவுட் சுற்றில் ஆடும்போது கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெயலர் நவாஸ் தடுத்த சில கோல்களால் அந்த ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோலை அவர் தடுத்ததே அந்த அணிக்கு காலிறுதிக்கு முன்னேற வைத்தது. இதற்காக ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றார்.

அதே போல் நைஜீரியாவின் கோல் கீப்பர் என்யீமா பிரான்ஸிற்கு எதிராக சில கோல்களை முறியடித்தார். ஆனால் கடைசியில் அவரே செய்த தவறினால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனாலும் அவர் அன்று செய்த கோல்கீப்பிங் பிரான்சின் நம்பிக்கையைக் குலைத்தது என்றே கூறவேண்டும்.

ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் பல அபாயங்களிலிருந்து ஜெர்மனி அணியை இந்த உலகக் கோப்பையில் காப்பாற்றியுள்ளார். கானா அணிக்கு எதிராக அவர் சில சேவ்களைச் செய்ததால் அந்த ஆட்டம் டிரா ஆனது. இல்லையெனில் ஒரு அதிர்ச்சித் தோல்வி முதல் சுற்றில் நிகழ்ந்திருக்கும்.

பிரேசிலுக்கு எதிராக மெக்சிகோ கோல் கீப்பர் ஒச்சாவ் நெய்மார் தலையால் முட்டிய பந்தை தடுத்தாட்கொண்டது இந்த உலகக் கோப்பையின் சிறந்த தடுப்பாக பேசப்பட்டது. நெய்மாரின் சக்தி வாய்ந்த தலை முட்டில் பந்து மேலாக கோல் நோக்கிச் செல்ல திடீரென ஒரு கை வந்து பந்தைச் சற்றும் எதிர்பாராதவிதமாகத் தட்டிவிட்டது. ஓச்சாவின் அந்தக் கை அன்று பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.

ஆனால் அதை விடவும் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டின் 16 தடுப்பில் பல தடுப்பு நேருக்கு நேர் எதிர்கொண்ட ஷாட்களாகும், உறுதியான கோல் வாய்ப்புகளாகும் அவையனைத்தும்.

பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே பெல்ஜியம் காரனர் ஷாட்டை டிவோக் ஆரிஜி கோலாக மாற்றியிருப்பார் ஆனால் டிம் ஹோவர்ட் அதனை வெளியே தட்டி விட்டார்.

பிறகு 29வது நிமிடத்தில் எளிதாக ஒரு பந்தை தடுத்தாட்கொண்டார். 43வத் நிமிடத்தில் மீண்டும் டீ புருயின் அடித்த கார்னர் ஷாட்டை முட்டியால் தட்டி விட்டு சேவ் செய்தார் டிம் ஹோவர்ட்.

இடைவேளைக்குப் பிறகு 47வது நிமிடத்தில் கெவின் டீ புரூயின் மீண்டும் அமெரிக்க பெனால்டி பகுதிக்குள் பந்தை நுழைக்க, அங்கு டிரைஸ் மெர்டன்ஸ் அதனை கோலுக்குள் தலையால் அடித்தார். ஆனால் டிம் ஹோவ்ர்ட் பல அடி தூரம் எம்பி பந்தை பாருக்கு மேல் தட்டி விட்டார்.

76வது நிமிடத்தில் ஆரிஜி அடித்த பாஸை கெவின் மிரலாஸ் கோலாக மாற்ற முயற்சிக்க மீண்டும் ஹோவர்ட் அதனை தடுத்து விட்டார்.

78வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்ட் அடித்த ஷாட்டை இடது புறம் தாழ்வாக டைவ் அடித்து ஹோவர்ட் மீண்டும் ஒரு அசாத்திய தடுப்பை நிகழ்த்தினார். கூடுதல் நேரத்திலும் சில கோல்களை முறியடித்தார் ஹோவர்ட்.

மீண்டும் 84வது நிமிடத்தில் ஆரிஜி அடித்த ஷாட்டை கோல் போஸ்டிற்கு மேல் தட்டி விட்டு கோலை முறியடித்தார். அதன் பிறகுதான் லுகாக்உ களமிறங்க சுமார் 100 நிமிட தடுப்பாட்டத்தினால் களைப்படைந்த ஹோவர்ட் 2 கோல்களை விடுகிறார்.

காலிறுதி ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் நாம் ஸ்ட்ரைக்கர்கள் மீதான கவனக்குவிப்பை இனி கோல்கீப்பர்கள் பக்கம் திருப்பலாமே.

தி ஹிந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் கால் இறுதி ஆட்டம்: ஜெர்மனி-பிரான்ஸ் நாளை பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினத்தோடு 2–வது சுற்று முடிந்தது.

இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து, கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ரியோடி ஜெனீரோவில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி– பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி அணிகளில் ஒன்றாக ஜெர்மனி திகழ்கிறது. 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி கடந்த 3 உலக கோப்பையிலும் அரை இறுதிக்கு நுழைந்து இருந்தது. தற்போது 13–வது முறையாக அரை இறுதியில் நுழைவதில் ஆர்வமாக இருக்கிறது.

ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரராக தாமஸ் முல்லர் ஜொலிக்கிறார். அவர் இதுவரை 4 கோல் அடித்துள்ளார். இது தவிர ஒசில், கவாஸ்டிக்கர், ஹம்மல்ஸ், ஆந்த்ரே, கேப்டன் பிலிப் போன்ற சிறந்த வீரர்களும் ஜெர்மனி அணியில் உள்ளனர்.

‘லீக்’ ஆட்டங்களில் 4–0 என்ற கணக்கில் போர்ச்சுக்கலையும், 1–0 என்ற கணக்கில் அமெரிக்காவையும் தோற்கடித்தது. கானாவுடன் 2–2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2–வது சுற்றில் அல்ஜிரியாவை 2–1 என்ற கோல் கணக்கில் வென்றது. தோல்வியை சந்திக்காத ஜெர்மனி அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராட வேண்டும்.

ஜெர்மனி அணிக்கு எல்லா வகையிலும் சவால் விடக்கூடிய வகையில் பிரான்ஸ் அணி உள்ளது. இந்த போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இது தவிர போக்பா, கிரவுட் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி ‘லீக்’ ஆட்டங்களில் 3–0 என்ற கணக்கில் ஹோண்டுராசையும், 5–2 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வென்றது. ஈக்வடாருடன் 0–0 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2–வது சுற்றில் நைஜீரியாவை 2–0 என்ற கணக்கில் வென்றது.

1998–ம் ஆண்டு சாம்பியனான அந்த அணி 6–வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.


மாலைமலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

deutschl_m_ds.gifஜேர்மனிdeutschl_w_ds.gif வெல்ல வேண்டும் என்று... இங்குள்ள ஆலயங்களில், விசேட  யாக பூசை நடை பெறுகின்றது.

வரும் வெள்ளிக்கிழமை....  ஜேர்மனிடம் தோற்கப் போகும்df.gif, பிரான்சுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :D

பிரான்ஸுக்கு, சுவாஹா....... :lol:

 

 

Tamil-Daily-News-Paper_49770319462.jpg

 

 

ஜேர்மன் பேபிகள் மீது நாவூறு படாமல் இருப்பதற்கு இதனை படைக்கின்றேன். பிரான்சுக்கு சுவாஹா......

 

374521_471190812922696_1972552488_n.jpg

 

:lol:

02-1404277796-10417493-798636390176622-6

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Daily-News-Paper_49770319462.jpg

 

 

ஜேர்மன் பேபிகள் மீது நாவூறு படாமல் இருப்பதற்கு இதனை படைக்கின்றேன். பிரான்சுக்கு சுவாஹா......

 

374521_471190812922696_1972552488_n.jpg

 

:lol:

 

german_w.gifgermanflag.gifgerman%20(2).gif

 

இந்தச் சாம்பிராணிப் புகைக்குப் பிறகு, smiley1670.gifஜேர்மன் அணிக்கு hurra.gifவெற்றி தான்.... குமாரமிசாமி அண்ணை.

நீங்கள்,  party042.gifவெற்றி விழா பாட்டிக்கு....party055.gif ஒழுங்கு படுத்தி விட்டீர்களா? :D

smilie%20germany%20ball.gif

 

 

 

Edited by தமிழ் சிறி

பிரஞ்சு அணி பலமான அணிதான்...!!     ஆனாலும் உந்த சிவப்பு , மஞ்சள் , கறுப்பு நிறங்களை தாண்டி  மனம் அங்காலை போகுது இல்லை...  எல்லாம் பழக்க தோசம்தான் காரணம்...  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிள்ஸ் vs ஆபிரிக்கா :o கலக்கப்போவது யாரு? :unsure: இன்று முடிவு தெரிந்துவிடும். :D

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்  திறமையை மட்டும் நம்பி விளையாடும் அணி
பிரான்ஸ் வெற்றிக்கு பாடுபடுவதே நமது பணி
பிரான்ஸ்  ரசிகர்கள் குதூகலித்து குலைவையிடுவார் இனி
பிரான்ஸ்  இன்று பறித்துச்  சுவைத்திடும் வெற்றிக் கனி
பிரான்ஸ்  எயார்  ஏறிடும் இன்று மாலை  ஜெர்மனி
பிரான்ஸ்  சை  எதிர்க்கும் அணிக்கெல்லாம்  மங்குசனி
பிரான்ஸ்  சுக்குத்தான் எதிர்காலம் பொங்குசனி, பொங்குவோம் இனி...! :D:D 670895d3.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஜேர்மனி எதிர் பிரான்ஸ் விளையாட்டுக்கள் 25
பிரான்ஸ் வெற்றி 11
ஜேர்மனி வெற்றி 8
சமநிலை 6

ஜேர்மனி அடித்த கோல்கள் 42
பிரான்ஸ் அடித்த கோல்கள் 41

இதுவரை மூன்று தடவை உலகக் கிண்ண விளையாட்டுக்களில்
ஜேர்மனியும் பிரான்ஸும் எதிர் எதிராக விளையாடியிருக்கின்றனர்.

 

1958 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்திற்கான விளையாட்டில் 6:3 என்ற முறையில் பிரான் வெற்றி

 

1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கிண்ண விளையாட்டுக்களில் அரையிறுதியில் ஜேர்மனி 120 நிமிடங்கள் விளையாடி 3.3 என்ற நிலையில் தண்டனை உதைமூலம் 5. 4 என்ற முறையில் வெற்றி

 

1986 ஆம் ஆண்டு மெக்சிக்கோ  உலகக்கிண்ண விளையாட்டிலும்
அரையிறுதியில் 90 நிமிட விளையாட்டில் 2.0 என்ற வகையில் ஜேர்மனி வெற்றி

 

இது நான்காவது முறை ஜேர்மனி கிண்ணத்தை வெல்லும் முறை
ஆகவே இந்த முறையும் பிரான்ஸிற்கு பலத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது.

பிரான்ஸ் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :D :D :lol:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.