Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் பூமி அதிர்ச்சியை ஒத்ததது - நைகெல் வெ(க)ரேஜ்:

Featured Replies

ஐரோப்பிய செய்தியாளர் -

farage_CI.jpg

இங்கிலாந்தில் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள், பூமி  அதிர்ச்சியை ஒத்ததாக அமைந்துள்ளதாக ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைகெல் வெ(க)ரேஜ் குறிப்பிட்டுள்ளார். ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான அரசியற் கொள்கையோடு, வெளி நாட்டவர்களின் குடியேற்றத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிற்கும் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி, இது வரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 100 ற்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இது வரையில் ஐக்கிய ராஜ்ய அரசியலில் சுதந்திரக்கட்சி, பழமைக்கட்சி, தொழில்கட்சி என மூன்று பெரும் கட்சிகள் அதிகாரத்திற்குப் போட்டியிட்ட காலம் மாறி, நான்காவது புதிய கட்சியும் இணைவதாக அரசியல் வட்டாரம் கருத்துத் தெரிவித்துள்ளது. அத்தோடு 2015 இல் இடம் பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், தற்போதைய இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரோனின் கட்சி பல ஆசங்களை இழக்கும் நிலையைச் சந்திக்க நேரலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது வரை வெளியான உள்ளூராட்சி  தேர்தல் முடிவுகளில் கமரோனின் கட்சி, பல ஆசனங்களை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத்தின் தேர்தலிலும் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக்கட்சியின் மாபெரும் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு இங்கிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்லோவியா, போன்ற நாடுகளில் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏற்கனவே இடம் பெற்றுள்ளமையும், நாளைய ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் வாக்களிப்பு  இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக் கிழமை மாலை 11 மணியளவில், இத்தாலியில்இடம் பெறும் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவு பெற்றதும், முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்பதும், 28 நாடுகளில் இடம் பெறும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் 400 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும்  இதே கொள்கையுடைய தீவிரவலதுசாரிகளே  வெல்வர் என  கணிப்புக்கள் கூறுகின்றன

எல்லாமக்களையும் வாக்களிக்க வேண்டுகின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கடும்போக்கான குடியேற்றக் கொள்கை.. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கொள்கை போன்ற பல காரணங்களால்.. இவைக்கு வாக்குப் போடேல்ல..! :lol::icon_idea:

  • தொடங்கியவர்
பிரிட்டிஷ் உள்ளூராட்சி தேர்தல்: யூக்கிப் கட்சியின் ஆதரவு அதிகரிப்பு

131127102353_farage_304x171_ap.jpg

நைஜெல் ஃபராஜ்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று வாதாடுகின்ற கட்சியான யூகே இண்டிபெண்டென்ஸ் பார்ட்டி, இங்கிலாந்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முன்னைக்கு அதிக ஆசனங்களை வென்றுள்ளது.

சுருக்கமாக யூக்கிப் என்று சொல்லப்படுகின்ற இந்தக் கட்சி தாம் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளில் கால்வாசிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன.

தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகிவர எந்தெந்தக் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிவருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை யூகே இண்டிபெண்டென்ஸ் கட்சி நிறைய வாக்குகளைப் பெற்றுள்ளது என்பது நன்றாகத் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தல்களோடு சேர்ந்து நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலிலும் யூக்கிப் வெற்றிகளைப் பெறலாம் என்று தெரிகிறது. ஆனால் ஐரோப்பியத் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் வரும் ஞாயிற்றுக்கிழமைதான் எண்ணப்படவுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல்களில் லண்டனைத் தவிர நாட்டின் ஏனைய இடங்களில் பரவலாகவே யூக்கிப் கட்சிக்கு மக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது.

பிரிட்டனின் மைய நீரோட்ட அரசியலில் உள்ள மூன்று பிரதான கட்சிகளிடம் இருந்து வாக்குகளைப் பிரித்து இக்கட்சி மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.

அக்கட்சியின் முன்னேற்றத்துக்கு ஒரு முக்கியக் காரணம், அக்கட்சியின் வசீகரமான தலைவரான நைஜெல் ஃபராஜ் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஊடகங்களிலேகூட பீர் குடித்தபடியும், சிகரெட் பிடித்தபடியும் தோன்றுபவர் ஃபராஜ்.

140403095355_clegg_and_farage_304x171_cl

அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் துணைப் பிரதமர் நிக் கிளெக்கின் வாதத்தை விட நைஜெல் ஃபராஜின் வாதத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளிவர வேண்டும், அப்போதுதான் பிரிட்டனில் அளவுக்கதிகமாக இருந்துவருகின்ற வெளிநாட்டவரின் குடிவரவைக் கட்டுப்படுத்த முடியும், ஒரு நாட்டுக்குள் யார் வருவது, யார் வாழ்வது என்பதை அந்த நாடே தீர்மானிக்க முடியும் என்று வலுவாக வாதிடுபவர் அவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் செலவுகளுக்கு அரசாங்கத்திடம் கணக்கு காட்டி பணம் வாங்கியதில் நடந்துள்ள ஊழல் காரணமாகவும், 2008ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும் மையநீரோட்டக் கட்சிகளின் அரசியல்வாதிகள் மீதும் அரசியல் அமைப்புகள் மீதும் மக்களுக்கு பொதுவாக இருந்துவருகின்ற ஆத்திரமும் அதிருப்தியும் கூட யூக்கிப் கட்சிக்கு சாதகமாகப் போயுள்ளது எனலாம்.

புதிய அத்தியாயம்

பிரிட்டிஷ் அரசியலில் மூன்று கட்சிகள் என்ற நிலை மாறி, இனி நான்கு கட்சிகள் வாக்குகளைக் பகிர்ந்துகொள்ளும் என்ற ஒரு புதிய அத்தியாயம் உருவாகியிருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையால், கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமாக்கிரட் கட்சி ஆகிய மூன்றுமே சற்று கலக்கம் அடைந்துள்ளன.

யூக்கிப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்களுடைய கவலைகள் என்னவென்பதைக் கண்டறிந்து அவர்களின் ஆதரவை மீண்டும் வென்றெடுக்க முயலுவோம் என அந்த மூன்று கட்சிகளும் சூளுரைத்துள்ளன.

அதிருப்தி கொண்ட வாக்காளர்கள் இந்த ஒரு முறை யூக்கிப் பக்கம் சாய்ந்துள்ளனர். ஆனால் அடுத்த முறை பொதுத்தேர்தல் என்று வரும்போது அவர்களெல்லாம் மையநீரோட்டக் கட்சிகளுக்கு திரும்பிவிடுவார்கள்,நாட்டை ஆள்வதற்கான ஒரு முக்கியக் கட்சியாக யூக்கிப் கட்சியை அவர்கள் பார்க்க மாட்டார்கள் என மைய நீரோட்ட அரசியல் கட்சிகள் நம்புகிறார்கள்.

இந்த புதிய பரிமாணமும் சேர்ந்துகொள்ள வரும் ஆண்டில் பிரிட்டிஷ் அரசியல் சுவாரஸ்யமடையும் என்பதில் ஐயமில்லை.

bbc tamil

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனுக்கு ஐரோப்பிய யூனியன்காரர் வரக்கூடாது என்று வாக்கு குத்தினவை அங்கு போய் குடியுரிமை வாங்கினவையாத்தான் இருக்கும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனுக்கு ஐரோப்பிய யூனியன்காரர் வரக்கூடாது என்று வாக்கு குத்தினவை அங்கு போய் குடியுரிமை வாங்கினவையாத்தான் இருக்கும்.. :lol:

அதிலும் வேடிக்கை என்னவென்றால்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. டென்மார்க்.. சுவிஸில பெனிபிட் கஸ்டம் என்று.. இங்கிலாந்துக்கு ஓடியாந்த எங்கட ஆக்களும்.. குறிப்பிட்ட எண்ணிக்கையானோர்.. வாக்குப் போட்டதும் இல்லாம.. அதை தம்பட்டமும் அடிச்சது தான்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கடும்போக்கான குடியேற்றக் கொள்கை.. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கொள்கை போன்ற பல காரணங்களால்.. இவைக்கு வாக்குப் போடேல்ல..! :lol::icon_idea:

நன்றி  தம்பி

நீங்களும்  ஐரோப்பிய பிரசையாகியதற்கு வாழ்த்துக்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி

நீங்களும்  ஐரோப்பிய பிரசையாகியதற்கு வாழ்த்துக்கள் :icon_idea:

இங்கிலாந்தில் வாக்களிக்க ஐரோப்பிய பிரஜையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காமன்வெல்த்தை சேர்ந்த யாரும் வாக்களிக்கலாம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிறதுக்கு  எண்டு வந்து படிப்பு ,மேல்படிப்பு  எண்டு பம்மாத்து விட்டு இங்கேயே வேர்விட முயற்சிக்கும் பலர் கமரூனுக்கு ஆப்படிசிட்டினம் . :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிறதுக்கு என்று வந்த ஆக்களை இழுத்து வைச்சிருந்தது லேபர் மட்டுமல்ல.. கென்சவேட்டிவும் தான். இப்பவும்.. பட்ட மேற்படிப்பு படிக்கிறவைக்கு.. ஒரு பிரச்சனையும் இல்லை...! நிஜமான அறிவாளிகளை பிரிட்டன் எப்பவும் உள்வாங்கிக் கொள்ளும். அதேபோல்.. நிஜமான.. முதலீட்டாளர்களையும் உள்வாங்கும்.

பிரச்சனையே.. நிஜமற்ற அகதிகளும்.. பெனிபிட் தேடி வரும்.. ஐரோப்பிய குடியேற்றக்காரர்களும். அதில் தான்.. தமிழர்கள் பெருமளவில் அடக்கம்..! இப்ப எல்லாம் தமிழர்கள் என்றாலே எஸ்ரேட் ஏஜெண்டுக்காரங்கள்.. அதைக் கொண்டுவா.. இதைக் கொண்டுவா என்று ஆயிரம் பத்திரங்களைக் காட்டக் கேட்கிறாங்கள். எல்லாம் எம்மவர்களின் திருகுதாளத்தால் வந்த பிரச்சனை..! வங்கிகளிலும் கடனை எடுத்திட்டு.. ஊருக்கு காசனுப்பிட்டு.. எடுத்த கடனைக் கட்டாமல்.. வீட்டை விட்டு ஓடி.. மறைவாக இன்னொரு இடத்தில் வீடு எடுத்து.. வாழ்வது உட்பட பல அநியாயங்களை இந்த அகதியாக வந்தவர்கள் பணத்தாசை பிடித்துச் செய்கிறார்கள். மேலும்.. வேலை தேடுறம் என்று சொல்லிக் கொண்டே வருடக்கணக்கில்.. அரச நிதி பெற்றோரும்.. ஒரு வங்கிக் கணக்கை கவுன்சிலுக்கு காட்டிட்டு.. பிற நாடுகளிலும்.. பிற இடங்களிலும் வங்கிக் கணக்கு பராமரித்து வந்த நம்மவர்களும் நிறையப் பேர் இப்ப மாட்டி இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான்.. தற்போதைய அரசு இப்போ.. ஆப்படிக்க வெளிக்கிட்டிருக்குது. அதனால்.. இவ்வாறான தமிழர்களில் பெரும்பாலானோர் லேபருக்கு தான் வாக்குப் போட்டார்கள்.  :icon_idea::)

Edited by nedukkalapoovan

படிக்க வ்ருகிறவர்களுக்கு மதிப்பளிக்கும் நாடு என்பது சுத்த பொய், 2010 வரை படிக்க வந்தவர்கள் தமது படிப்பின் பின்னர் 2 வருடம் வேலை செய்யக்கூடிய வசதி இருந்தது, அதன் பின்னர் வசதி இருந்தது, ஆனால் இப்போது இல்லை, படித்தவர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டுமாம் என்று இந்த கமரூன் கோமாளி கூறுகிறது, அவுஸ்திரேலியா,கனடா,அமெரிக்கா போன்ற் வெளி நாட்டு மாணவர்களை இப்படி நடத்துவதில்லை, எதுக்கு எடுத்தாலும் வெளி நாட்டு மக்களையே குறை கூறுவது இவர்களது வாடிக்கை, பிரித்தானியா போன்ற ஒரு இனவாதம் பிடித்த நாடு மேற்குலகில் இல்லை, இனவாததை வாக்குகளாக மாறுகிறார்கள்,அ தாவது 1956இல் பண்டாரநாயக்கா செய்த்து போல், அதே போல் இந்த அரச உதவிகளை போலியாக எடுப்பவர்களை பற்றி குறிப்பிடு உள்ளீர்கள், அப்படியானால் வருடம் ஒன்றிற்கு £ 700 பில்லியன் நிறுவன் வருமானத்தி மீது எது வித வரியும் செலுத்துவது இல்லை, இது சட்ட பூர்வமாக நடக்கிறது அப்படியானல் ஒரு சாதாரண மனிதன் ஒரு சில ஆயிரம் பவுண்களை அரசிடம் இருந்து எடுத்தால் தவறு என்பீர்களா ?அனால் நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி செலுத்தாத்து பற்றி கேட்பார் எவரும் இல்லை, அதுக்கு உங்கள் பதில் என்ன?

படிக்கிறதுக்கு  எண்டு வந்து படிப்பு ,மேல்படிப்பு  எண்டு பம்மாத்து விட்டு இங்கேயே வேர்விட முயற்சிக்கும் பலர் கமரூனுக்கு ஆப்படிசிட்டினம் . :lol:  :icon_idea:

படிக்க ஒருவனை அழைத்தால் அவனுக்கு அந்த நாட்டு பொருளாதாரத்தில் இணைய வாய்ப்பு அழிக்க வேண்டும், அது தான் நியாயம் அமெரிக்கா,கனடா,அவுஸ்த்திரேலிய மற்றும் பெரும்பாலும் மாணவர்களை படிக்க அழைக்கும் நாடுகள் எல்லம் அப்படி தான், ஆனால் இவர்கள் மட்டும் திருப்பி அனுப்ப நினைக்கிறார்கள், ஜரோப்பியாவிலேயே அதிக நிற வெறி பிடித்தவர்கள் நடுதர வர்க்க இங்கிலிஷ் வெள்ளை இனத்தவர் தான்

இவர்களின் கடும்போக்கான குடியேற்றக் கொள்கை.. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கொள்கை போன்ற பல காரணங்களால்.. இவைக்கு வாக்குப் போடேல்ல..! :lol::icon_idea:

உண்மை கூறுகிறான், பிரித்தானியாவில் வெளியார் வருகை அதிகரிக்க காரணம், ஜரோப்பிய வாசிகளே, அதஏ போல் இவர்கள் ஆசியர்கள், கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக எதுவும் கூறுவதில்லை, அதே போல் ஒரு கூட்டத்தில் NIGEL FARAGEஎமது நாட்டுகு படித்திந்திய பொறியியலளர் வர முடியாது ஆனால் கிழக்கு ஜரோப்பியாவில் இருந்து படிக்காத ஒருவர் வந்து அரச உதவி பணம் பெறலாம், இது முட்டாள்த்னமான நடைமுறை என்று கூறினார், இவர்களி இனவாதிகளாக காட்டுவது கன்சர்வெர்டிவ் ஆதரவு ஊடகங்களான DAILY MAIL,SUN, TELEGRAPH போன்றவை

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டில்  5  வாக்குகள் உண்டு

இன்று   வாக்களித்தோம்

சோசலிச  கட்சியின் புதியபிரதமருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கணும் என்பது மடடுமே காரணம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலும் வேடிக்கை என்னவென்றால்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. டென்மார்க்.. சுவிஸில பெனிபிட் கஸ்டம் என்று.. இங்கிலாந்துக்கு ஓடியாந்த எங்கட ஆக்களும்.. குறிப்பிட்ட எண்ணிக்கையானோர்.. வாக்குப் போட்டதும் இல்லாம.. அதை தம்பட்டமும் அடிச்சது தான்..! :lol::D

 பெனிபிட்டை கருத்தில் கொண்டு இங்கிலாந்திற்கு புலர்ந்தார்கள் எனும் உங்கள் வாதம் நகைப்பிற்குரியது.

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பல "பூகம்ப" சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன.
 
1. ஆளும் கொன்சேவற்றிக் கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியானதும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதான‌ மூன்றாம் கட்சியான லிபரல் கட்சி இத்தேர்தலில் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு வெறும் 1 ஆசனத்தை மட்டும் தக்கவைத்துள்ளது.
 
இதில் என்ன சுவாரஸ்யம்? 
அ.) ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெறும் 3 பிரதான தேர்தல்களில், பாராளுமன்றத்தேர்தலும், உள்ளூராட்சி தேர்தலும் தொகுதிவாரி தேர்தல் முறைகள். ஆனல் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் மட்டும், விகிதாசார தேர்தல் முறை. 
2009இல் கொன்சேவற்றி அரசுடன் லிபரல் கட்சி இணையும் போது வைத்த பிரதான நிபந்தனைகளில் முக்கியமானது, வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்றப்பட வேண்டும் என்பது (இதன் முக்கிய நோக்கம் தமது கட்சியின் வாக்குகள் விகிதம், எப்போதும் விகிதாசர அடிப்படையில் மாறி மாறி ஆளும் பிரதான 2 கட்சிகளுக்கும் கிட்ட நிற்பதால், தமது பா உ இன் எண்ணிக்கை பல மடங்காக வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பு.) ஆனல் அவர்களது எதிர்ப்பர்ப்பு அதே விகிதாசார தேர்தலான ஐரோப்பிய தேர்தலில் 1 உறுப்பினர் தேர்வின் மூலம் backfired ஆகியுள்ளது.
ஆ) இன்னொன்று, சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல், சிவனே என்றிருந்த "ஐரோப்பிய யூனியனுக்கு எதிரான" ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் திரு  நைஜல் பெராஜ் இன் தேசிய தொலைக்காட்சி பொது வாக்குவாத சவாலை ஏற்று அவரை மேலும் பிரபல்யப்படுத்தினார் இந்த லிபரல் கட்சியின் தலைவரும், துணைப் பிரதமருமான நிக் கிளேக். நிக் கிளேக் செய்த அந்த உதவியாலும், பொதுமக்களது வெளிநாட்டவர் வருகை கவலையாலும் இன்று ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி முதலாமிடத்தை பிடித்துள்ளது.
 
_75108784_75108329.jpg
 
UKIP 27.49 +10.99 24 seats

+11

LAB 25.40 +9.67 20 seats

+7

CON 23.93 -3.80 19 seats

-7

GRN 7.87 -0.75 seats

+1

SNP 2.46 0.34 2

0

LD 6.87 -6.87 1

-10

PC 0.71 -0.13 1

0

BNP 1.14 -5.10 0 -2
 
Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

 பெனிபிட்டை கருத்தில் கொண்டு இங்கிலாந்திற்கு புலர்ந்தார்கள் எனும் உங்கள் வாதம் நகைப்பிற்குரியது.

தமிழர்கள் வாழும் 6 கவுன்சில்கள் பற்றி அறிந்ததில் இருந்து... சிலவற்றை சொல்லத் தான்.. முடியும். தனிப் புள்ளிவிபரங்களோடு வருவது சிரமமானது. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க வ்ருகிறவர்களுக்கு மதிப்பளிக்கும் நாடு என்பது சுத்த பொய், 2010 வரை படிக்க வந்தவர்கள் தமது படிப்பின் பின்னர் 2 வருடம் வேலை செய்யக்கூடிய வசதி இருந்தது, அதன் பின்னர் வசதி இருந்தது, ஆனால் இப்போது இல்லை, படித்தவர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டுமாம் என்று இந்த கமரூன் கோமாளி கூறுகிறது, அவுஸ்திரேலியா,கனடா,அமெரிக்கா போன்ற் வெளி நாட்டு மாணவர்களை இப்படி நடத்துவதில்லை, எதுக்கு எடுத்தாலும் வெளி நாட்டு மக்களையே குறை கூறுவது இவர்களது வாடிக்கை, பிரித்தானியா போன்ற ஒரு இனவாதம் பிடித்த நாடு மேற்குலகில் இல்லை, இனவாததை வாக்குகளாக மாறுகிறார்கள்,அ தாவது 1956இல் பண்டாரநாயக்கா செய்த்து போல், அதே போல் இந்த அரச உதவிகளை போலியாக எடுப்பவர்களை பற்றி குறிப்பிடு உள்ளீர்கள், அப்படியானால் வருடம் ஒன்றிற்கு £ 700 பில்லியன் நிறுவன் வருமானத்தி மீது எது வித வரியும் செலுத்துவது இல்லை, இது சட்ட பூர்வமாக நடக்கிறது அப்படியானல் ஒரு சாதாரண மனிதன் ஒரு சில ஆயிரம் பவுண்களை அரசிடம் இருந்து எடுத்தால் தவறு என்பீர்களா ?அனால் நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி செலுத்தாத்து பற்றி கேட்பார் எவரும் இல்லை, அதுக்கு உங்கள் பதில் என்ன?

படித்த பின் வேலை என்ற திட்டத்தை லேபர் 2006 இல் அமுலுக்கு கொண்டு வந்தது. அது மாணவர்கள் மீதான அக்கறையில் அல்ல. விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில்.. பிரிட்டனில் பட்டதாரிகளுக்கு நிலவிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய. அதனைப் பின்னர் நிர்வாகக் கல்வி கற்றோருக்கும் என்று நீட்டினார்கள். அதற்கு முன்னரும் மாணவர்களுக்கு என்று எந்தச் சலுகைகளும் இருக்கவில்லை.

கம்ரூன் அரசு.. 2011 வாக்கில் அதை இல்லாமல் செய்திருந்தது என்பது உண்மையே. அதுமட்டுமன்றி.. வேர்க் பெமிட் பல கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. காரணம்.. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான்.

ஆனால்..  வருடத்திற்கு.. 3 பில்லியன் பவுன்ஸ் வருமானத்தைக் கொண்டு வரும் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி என்பதில் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. பல்கலைக்கழகங்கள் அரசின் கொள்கை மீது.. அதிருப்தி வெளியிட்டன. இந்த நிலையில்.. இப்போ பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கும்.. மாணவர்கள்.. தொடர்பில்.. சில தளர்ச்சிகள் உள்ளன. ஆனாலும் இறுக்கமான நடைமுறைகளை தான் இந்த அரசு கைக்கொள்ளும். இதனால் சீரழிவது பல்கலைக்கழகங்களின் வருமானமும் தான்.

அத்தோடு.. விஞ்ஞான மற்றும் பொறியியல் வல்லுனர்களின் தேவை பிரிட்டனில் அபரிமிதமாகக் கூடியுள்ளது. பிரிட்டனில்.. விஞ்ஞானக் கல்வி பெறுவோரின் தொகை இன்னும் எதிர்பார்த்த அளவு உயர்ச்சியைக் காட்டவில்லை. அத்தோடு விஞ்ஞானக் கல்விக்கு அளிக்கப்படும் தொகையை அரசு குறைத்துக் கொண்டுள்ளதால்.. பல்கலைக்கழகங்களும் நெருக்கடியில் உள்ளன. இது பிரிட்டனின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக மாறும் நிலையே உள்ளது.

கம்ரூன் அரசின் கொள்கைகள்.. பொருண்மியத்தை மீண்டும் நிமிர்த்துவதில் இருந்ததே தவிர.. குடியேற்றக்காரர்களால் நன்மையைப் பெற்றுக் கொள்வதில் இல்லை.

குறிப்பாக நீண்ட கால நோக்கில் பிரிட்டனில்  குடியேற விரும்புவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள். அகதி அந்தஸ்து ஒன்று தான் இன்றுள்ள இலகு மார்க்கம்.

முன்னர் திருமணம் என்ற பெயரில் வந்து குந்தியோர் இப்போ..திருமணம் ஆனாலும்.. நீண்ட பரீட்சைகளை.. ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தித் தான் இங்கு வர முடியும். அதேபோல்.. குடும்ப உறவுகளைக் காட்டி குடி வந்தோர்.. குறிப்பிட்ட வருமானத்தை காட்டித்தான் இங்கு இப்போது குடி வர முடியும்.

மாணவர்களுக்கு என்றில்லை.. பொதுவாகவே கம்ரூன் அரசு நிரந்தர குடியேற்றம் கருதி பிரிட்டனுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்துவதைக் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில்... லேபரும் இதனை கைக்கொள்ள வேண்டிய தேவையை தற்போதை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான பிரிட்டன் தேர்தல் முடிவுகள் இயம்பி நிற்பதோடு.. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்.. இருந்து கொண்டு இலகுவாக பெனிபிட் எடுக்க பிரிட்டனுக்குள் ஓடி வருபவர்கள் மீதும் எனி கடும் கட்டுப்பாடுகள் வர இருக்கிறது..!

பிரிட்டனின் எல்லையை மீட்போம் என்ற UKIP இன் பெரு வெற்றி ஆளும் கட்சியினர் மீது மிகப் பெரிய அழுத்தத்தை பிரயோகிக்கும் என்பது.. வெள்ளிடை மலையாகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிறுவனங்களின் வரி ஏய்ப்புத் தொடர்பில் கன்ரூன் அரசு இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. ஸ்ரார் பக்.. அமேசன் மற்றும் அமெரிக்க.. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செய்த குழறுபடிகள் தொடர்பில்.. அண்மைய காலமாக பல செய்திகள் வெளிவருவதும்.. அரசு இவற்றின் மீது கடும் நடவடிக்கைக்கு உறுதி அளிப்பதும்... காணக் கூடியதாக உள்ளது.

நிறுவனங்களை விட.. மக்கள் பிராட் செய்து.. பெறும் அரச உதவித் தொகை தான் வரி செலுத்துனர்கள் மீது அதிக சுமையாக அமைகிறது. இதனால்.. வரி செலுத்தும் மக்களின் வெறுப்பை அரசுகள் சம்பாதிக்க வேண்டி உள்ளது. அது தேர்தல் பெறுபேறுகளிலும் பிரதிபலிக்கிறது.

லண்டனில்..  உதவி பெறும் குடியேற்றக்காரக் குடும்பங்கள் லேபருக்குத்தான் அதிகம் வாக்குப் போடுகின்றன. காரணம்.. லேபர் இதனைக் கட்டுப்படுத்தாது என்று. ஆனால்.. லேபர் எதிர்காலத்தில்.. கம்ரூனின் பாதையில் தான் பயணிக்க வேண்டி இருக்கும். இன்றேல்.. பிரிட்டன் மீண்டும் ஒரு பொருண்மியச் சரிவை நோக்கியே செல்ல நேரிடும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை கூறுகிறான், பிரித்தானியாவில் வெளியார் வருகை அதிகரிக்க காரணம், ஜரோப்பிய வாசிகளே, அதஏ போல் இவர்கள் ஆசியர்கள், கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக எதுவும் கூறுவதில்லை, அதே போல் ஒரு கூட்டத்தில் NIGEL FARAGEஎமது நாட்டுகு படித்திந்திய பொறியியலளர் வர முடியாது ஆனால் கிழக்கு ஜரோப்பியாவில் இருந்து படிக்காத ஒருவர் வந்து அரச உதவி பணம் பெறலாம், இது முட்டாள்த்னமான நடைமுறை என்று கூறினார், இவர்களி இனவாதிகளாக காட்டுவது கன்சர்வெர்டிவ் ஆதரவு ஊடகங்களான DAILY MAIL,SUN, TELEGRAPH போன்றவை

அதேவேளை.. பிரிட்டனின் வேலை வழங்குனர்கள்.. குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்களைப் பிடிக்க.. கிழக்கு ஐரோப்பியர்களை தானே பிடிக்கிறார்கள். இப்போ தமிழ் கடைகள் கூட இந்திய மாணவர்களை வேலைக்கு எடுப்பதில்லை. 2 பவுனுக்கு கிழக்கு ஐரோப்பியர்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த முள்ளமாரிகளை நாட்டுக்குள் அனுமதித்தவர்களும் அதனை அப்போது தடுக்காமல் விடுப்புப் பார்த்தவர்களும்... தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதில்.. UKIP யும் தவறு செய்தே உள்ளது.

அகதிகள் தொடர்பிலும்  நல்ல இறுக்கமான நடைமுறைகளை அமுலாக வேண்டும். உண்மையான அரசியல் அகதிகள் தவிர.. பிரிட்டனின் பொருளாதாரத்தை நாடி வரும்.. மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அகதிகள்.. உள்ளூர் சமூகத்துடன் குறித்த காலத்திற்குள் இணையும் வகையில் அவர்களை அரசு நாடு பூராவும் பரம்பல் படுத்தி.. குடியமர்த்த வேண்டும். ஒரே இடத்தில் குந்த அனுமதிப்பதன் மூலம் அவர்கள் உள்ளூர் சமூகத்திற்கு நன்மையும் இன்றி.... அதனுடன் தொடர்பும் இன்றி வாழ்கின்றனர்.

எத்தனையோ குடும்பங்கள் பல தசாப்தங்களாக பிரிட்டனில் வாழ்ந்தும்.. ஆங்கிலம்.. பிரிட்டனின் கலாசார நடைமுறைகளோடு ஒத்துப்போகாமல்.. வாழ்வதை காண்கிறோம். ஆனால் அவர்களிடம் பிரிட்டன் கடவுச்சீட்டு உள்ளது. இதனால் பிரிட்டனுக்கு ஒரு நன்மையும் இல்லை. இவர்களும் இந்த நாட்டின் பொருண்மியத்தை உறிஞ்சி வாழவே வந்திருக்கிறார்கள்.  :):icon_idea:

மற்றும்படி படித்தவர்களை பிரிட்டன் உள்வாங்க வேண்டும் என்ற அதன் கொள்கையை வரவேற்கலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக படிச்சவன் பெனிபிட் எடுக்கமாட்டான்.படிச்சவனைத் தவிர மற்றவன் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருப்பதால் அவனுக்கு இங்குள்ள நடைமுறை எதையும் அறிந்ததில்லை.காதில பூ தான் வைக்கிறாங்க என்று பார்த்தால் பூ மாலையை கொண்டு வந்து சுத்துறாங்க,கமரூன் அரசு ஆசிய மாணவர்களின் வரவை கட்டுப்படுத்தியதிற்கான காரணத்தை இந்த உலகமே அறியும்.

நீங்க பிரிட்டனில்.. படிப்போடு சம்பந்தப்படாத ஒருவர் போலத் தெரிகிறது.

இப்போதும் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களில் அநேகம் சீன.. இந்திய மாணவர்கள் தான் அதிகம்.

கம்ரூன்.. ஆசிய மாணவர்களை என்று கட்டுப்படுத்தவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அப்பால் இருந்து குடி வரும் எல்லோருக்கும் தான் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

அதில்.. கலியாணம் கட்டி வாறவை.. மற்றும் குடும்பங்களோடு இணைகிறோம் என்று வாறவை இவைக்கும் இப்போது கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் உள்ளது.

மேலும் மாணவர்களின் வரவு.. நிரந்தரக் குடியேற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு வரக் கூடாது என்ற பல்கலைக்கழகங்களின் கோரிக்கையை கம்ரூன் அரசு ஏற்று தளர்வுகளை செய்துள்ளது.

மாணவர்கள் இங்கு.. எந்த பெனிபிட்டும் எடுக்க முடியாது. பொதுச் சேவைகளை பாவிப்பதற்கும்.. சொந்தக் காசை தான் செலவு செய்கிறார்கள். அதுபோல் வேலைக் கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்கள் பெரும் செல்வத்தை (பிரிட்டனின் மொத்த வருமானத்தில்.. மாணவர்கள் 3/4வதைக் கொண்டு வருகிறார்கள்.) நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

மேலும் இங்கு படித்து வேலைக்குப் போபவர்களுக்கு பெனிபிட் பிச்சைக்காசு தேவையில்லை. அது உபத்திரமே ஒழிய.. அவர்களின் தேவைகளை ஈடு செய்யப் போதாது. அந்த வகையில்.. படித்து வேலை செய்பவர்கள்.. பிரிட்டனின் பெனிபிட் சிஸ்டத்தில் நுழைவது வெகு குறைவு.

ஆனால்.. அகதியாக வருபவர்களும்.. கிழக்கு ஐரோப்பிய குடிபெயர்வாளர்களுமே இந்த நாட்டை அதிகம் சுரண்டுகிறார்கள்.  அவர்கள் மீது தான் எனிக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

மேலும்.. மாணவர்களில் ஆராய்ச்சி.. உயர்கல்வி பெறுவர்கள் எல்லை கடந்து தங்கவும் பிரிட்டனில் வசதி உருவாக்கப்பட உள்ளது..! காரணம்.. மாணவர்கள் கல்வியைப் பெறுவது மட்டுமன்றி.. பிரிட்டனின் பொருண்மியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்குபற்ற வாய்ப்பளிக்க என்று..!

உலகெங்குமே மூளைசாலிகளுக்கு பற்றாக்குறை தான் நிலவுகிறது. அகதிகளை அடித்து விரட்டியும் ஓடி வரும் நிலை தான். அகதிகள் எந்த நாட்டிலும் வரவேற்புக்குரிய ஆட்கள் அல்ல..! இதுதான் யதார்த்தம். நாங்கள் சொல்லத் தேவையில்லை. பிரிட்டனின் உள்ளூர் சமூகத்தோடு பழகிப் பார்த்தால் தெரியும்.

பழகாமல்.. எங்களுக்குள்ளையே சாமத்திய வீடும்.. கலியாணம்.. பேர்த்டே பார்ட்டியும் செய்து கொண்டு எங்களுக்குள்ளேயே வியாபாரமும் செய்து கொண்டிருந்தால்.. இவை தெரிய வராது..!

தமிழர்கள் நடத்தும் கடைகளுக்கு எத்தனை உள்ளூர் வெள்ளைகள் கிரமமாக வந்து பொருட்கள் வாங்கிச் செல்கிறார்கள்..???????????! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் எண்டு எங்கடை பெரிசுகள் சும்மாயே சொன்னவையள்.பெனிபிட் எடுக்கிறவனை விட படிக்கவெண்டு வந்தவங்கள் செய்யிற அட்டகாசமும் நாதாரி வேலையளும் கொஞ்சநஞ்சமில்லை...கண்ணாலை கண்டனான்....காணுறன்...கண்டு கொண்டிருக்கிறன்........வாயை கிளறினால் நாற ஆரம்பிக்கும். :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.