Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் இந்தியாவில் இருக்காது என்பதா?: ஒமர் அப்துல்லா மீது ஆர்.எஸ்.எஸ் பாய்ச்சல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்த சர்ச்சையில் காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்த கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கையாக கருதப்படுகிறது. ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யான பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த பிரச்னையை, பா.ஜனதா, தொழில்முறையாக அணுகி வருகிறது. காஷ்மீரில் நிறைய சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது" என்றார்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்துக்கு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையிலான ஒரே அரசியல் சட்ட தொடர்பு 370வது பிரிவுதான். எனவே, ஒன்று, 370வது பிரிவு இருக்கும் அல்லது காஷ்மீர், இந்தியாவில் இருக்காது. இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

இதனிடையே, தனது கருத்து திரித்து கூறப்பட்டு விட்டதாக ஜிதேந்திரசிங் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘பிரதமரை மேற்கோள் காட்டி, நான் எதையும் கூறவில்லை, இது முற்றிலும் அடிப்படையற்றது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  ஒமர் அப்துல்லா கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.ஒமர் அப்துல்லா நினைப்பது போன்று காஷ்மீர் ஒன்றும் பரம்பரை எஸ்டேட் பகுதி அல்ல. ஒமரின் கருத்து ஏற்றுகொள்ள முடியாத ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

ஒமர் அப்துல்லா விளக்கம்

இதனிடையே காஷ்மீர் என்னுடைய சொத்து என கூறவில்லை என்று உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து இல்லை என்றால், அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்காது என்று தான் கூறினேன். அந்த பகுதி என்னுடைய சொத்து என்று நான் கூறவே இல்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், எனது இந்த கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. காஷ்மீர் மாநிலத்துக்கு 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதத்துக்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=28387

  • கருத்துக்கள உறவுகள்

370 ஐ ஒரு விவாதப் பொருளாகவே மாற்றக்கூடாது.. மாற்றினால் காஷ்மீரிகள் தங்களது உரிமைகளை மறந்துவிட வேண்டியதுதான். 

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஈழத்தின் தமிழ்த் தலைவர்கள் சிந்தனையற்று செயற்பட்டதன் விளைவை இன்று அனுபவித்து வருகிறோம்.

இந்தியாவினாலும், பாகிஸ்தானாலும் வலுக்கட்டாயமாக கூறுபோடப்பட்ட நிலம் காஷ்மீர்.

ஆனால் இந்தியப் போலித் தேசிய நாய்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. நேற்றுக்கூட வேலைத்தளத்தில் இந்திய போலித் தேசியவாதி ஒருவனுடன் இதனாலேயே சண்டை போடவேண்டி வந்துவிட்டது.

காஷ்மீர் இந்தியவின் ஒரு பகுதிதான். அது தனிநாடாக இருந்ததில்லை இனியும் இருக்கப்போவதில்லை என்று அவன் சொல்ல, கெட்ட வார்த்தைகளால் அவனைத் திட்டித் தீர்த்துவிட்டேன்.

அவன் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பணி.

காஸ்மீர் எப்போதுமே இந்து சீக்கிய மன்னர்களால் ஆளபட்டு அகண்ட பாரதத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது....ஆகவே இந்தியர்கள் அதை தங்களுடன் வைத்திருக்க விரும்புவதில் என்ன பிரச்சனை....காச்மீரிகளுக்கு இந்தியா முழுவதும் மற்றவர்கள் போல் வசிக்க வேலை செய்ய சொத்து வாங்க உரிமையுள்ளது...ஆனால் இந்த 370 ஆல் மற்றைய இந்தியர்கள் காஸ்மீரில் குடியேற முடியாது...அதை தான் நீக்க RSS கேட்குது....இதற்க்கு வெளியாட்கள் ஏன் குத்தி முறிவான்?? :)

விட்டால், அகண்ட பாரதத்தின் ஒரு அங்கம் என்று பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்த்தான், நேபாளம் என்று எல்லாவற்றையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளத் துடிப்பார்கள் இந்தியப் போலித் தேசியவாதிகள், சேர்க்கலாம் என்கிறீர்களா??

RSS  இன் கோட்பாடே அது தான் என்று நினைக்கிறன்... :) அங்கெல்லாம் முஸ்லீம்கள் ஆளுவதால் கடினம்....

பாகிஸ்தானை தவிர மற்றவை இந்தியாவில் சார்ந்தே இருக்கிறார்கள்...(ஆப்கானிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் பக்கமே - இப்போதுள்ள அரசுகளால் வருகிறது...தலிபான் திருப்பி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் தலைகீழாகலாம்) :)

காஸ்மீர் எப்போதுமே இந்து சீக்கிய மன்னர்களால் ஆளபட்டு அகண்ட பாரதத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது....ஆகவே இந்தியர்கள் அதை தங்களுடன் வைத்திருக்க விரும்புவதில் என்ன பிரச்சனை....காச்மீரிகளுக்கு இந்தியா முழுவதும் மற்றவர்கள் போல் வசிக்க வேலை செய்ய சொத்து வாங்க உரிமையுள்ளது...ஆனால் இந்த 370 ஆல் மற்றைய இந்தியர்கள் காஸ்மீரில் குடியேற முடியாது...அதை தான் நீக்க RSS கேட்குது....இதற்க்கு வெளியாட்கள் ஏன் குத்தி முறிவான்?? :)

சீக்கியரே தாம் இந்தியர் இல்லை என்று களிஸ்தானை பிரிக்க கோருகிறார்களே?

பிரச்சினையே இந்தியா என்ற நாடு 66 வருடங்களுக்கு முன் இருக்கவில்லை என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்தப் பிரித்தானிய மன்னர்களால் வந்த வினை.
ஆனாலும் ஒரு நாள் இந்தியக் குடியரசு 30 நாடுகளாகச்  சிதறும்
 
சீக்கியரே தாம் இந்தியர் இல்லை என்று களிஸ்தானை பிரிக்க கோருகிறார்களே?

பிரச்சினையே இந்தியா என்ற நாடு 66 வருடங்களுக்கு முன் இருக்கவில்லை என்பது தான்.

கனடாவில் நிறைய இடம் இருக்கு தானே அங்கே காலிஸ்தான் உருவாக்கலாம் :) (இந்தியாவில் சீக்கியர் இப்போது குண்டு வெடிப்பது இல்லை... :) தனி நாடு இப்போ கேட்கிறார்களா??  பலமாக இருக்கும் மோயிஸ்டு களே தனி நாடு கேட்க்கவில்லை...)

மகா பாரதம் காலம் தொட்டே பாரதம் இருந்திருக்கின்றது... அங்கே எல்லாரும் ஒரே கடவுளையே கும்பிட்டு ஒரே மக்களாக தங்களுக்குள்ளே வணிகம் செய்து...திருமணம் செய்து...ஒரினமாக இருந்திருகிறார்கள்....

அந்த காலமே திரும்பியும் வரவேண்டும்... :)

ஜெய்கிந் :)

எல்லாம் இந்தப் பிரித்தானிய மன்னர்களால் வந்த வினை.

ஆனாலும் ஒரு நாள் இந்தியக் குடியரசு 30 நாடுகளாகச்  சிதறும்

வெள்ளையர் வெளியேறியபோது கிட்டத்தட்ட 400 அரசர்கள் இந்தியாவில் இருந்திருகிறார்கள்...

அப்போ 400ஆக பிரியவும் இடமுண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாட்டவர்களால் உருவகிக்கப்பட்டு பெயரிடப்பட்ட பிரதேசம்தான் இந்தியா. மிளகு கடுகு போன்ற திரவியங்கள் இங்கிருந்து அரேபியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதன் சுவைகளால் கவரப்பட்ட ஸ்பானிய, டச், ப்ரென்ச், ஆங்கில வெள்ளைகள் இந்த "இந்தியாவை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள்.

வணிகம் செய்யவென வந்து போன அரேபியர்களில் சிலர் கேரளம், இலங்கை போன்ற இடங்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள்.. அன்று இலங்கையும் "இந்தியா"வின் ஒரு பகுதிதான்.. :D

இவ்வாறாக இந்தியாவை கண்டுபிடிக்கிறேன் பேர்வளி என்று கிளம்பிய வெள்ளைக்காரர்கள். அமெரிக்க கண்டத்தை கண்டார்கள். அவுஸ்திரேலியாவை கண்டார்கள். காலப்போக்கில் அவற்றின் பூர்வகுடிகளை அழித்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டார்கள்.

வேறு சில வெள்ளைக்காரர்கள் உண்மையிலேயே "இந்தியாவை" கண்டறிந்து நேரடி வாணிகம் செய்ய ஆரம்பித்தார்கள். பிறகு படிப்படியாக மன்னர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

இரண்டாம் உலகப்போரின் பாதிப்பும், அதன் பின்னதான அரசியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் "இந்தியாவை" சுதந்திரம் அடைய வைத்தது.

வெள்ளையன் உருவாக்கிய "இந்தியா" எனும் கற்பனை தேசம் ஒரு நாடாக உருவெடுத்தது. வல்லபாய் பட்டேல் அநேகமாக எல்லா மன்னர்களிடம் இருந்தும் சம்மதம் பெற்று இந்திய யூனியனுடன் இணைத்தார். முரண்டு பிடித்த ஹைதராபாத் நிசாம் படை நடவடிக்கை மூலம் ஒடுக்கப்பட்டார். நிசாம் ஆந்திராவின் பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைக்கும் முடிவில் இருந்தார். அது நடந்திருந்தால் கிழக்கு வங்கதேசம்போல ஆந்திராவின் பல பகுதிகளும் பாகிஸ்தான் வசமாகிவிடும். ஆனால் பாகிஸ்தானுடன் இணைவது மக்களின் விருப்பமல்ல என்கிற கருத்தின் அடிப்படையில் ஆந்திராவின்மீது படைபலம் பாவிக்கப்பட்டது.

ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் மன்னர் இந்துவாக இருந்ததால் அவர் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் மக்களில் பெரும்பான்மையாக மஸ்லிம்கள் இருந்ததால் தயங்கினார். இழுபறியான இந்தக் கட்டத்தில் பாகிஸ்தான் தனது பகுதியில் இருந்து பழங்குடி மக்களை அனுப்பி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. இவர்கள் ஆயுததாரிகள். இந்த நடவடிக்கை பூட்டின் செய்தது போன்றது.)

இதுதான் சந்தர்ப்பம் என இந்தியாவும் படையை அனுப்பி காஷ்மீரின் மிகுதியை கபளீகரம் செய்து கொண்டது. வேறு பல சண்டைகளின் பின்னர் ஐநாவின் தலையீட்டுடன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இனங்காணப்பட்டு காஷ்மீர் நிரந்தரமாகவே துண்டாடப்பட்டது.

இது அமெரிக்காவை ஆளுவது வந்தேறு வெள்ளையனா இல்லை அடிமை கருப்பனா என்கிற சண்டை போலவே காஸ்மீரை ஆளுவது பொறுக்கி கிந்தியாவா இல்ல பயங்கரவாத பாகிஸ்தானா என்று போட்டி இதில் அமெரிக்க பூர்வீக குடிகளான செவிந்தியரின் அபிலாசைகளோ காஸ்மீரின் பூர்வீக குடிகளான இந்து காஸ்மீறி களின் அபிலாசைகளோ இந்த உலகத்தினால் கணக்கிலெடுக்கவில்லை என்பது தான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியாவை" கண்டுபிடிக்கவென மேற்குப் பக்கம் போன வெள்ளைக்காரர்கள் கரீபியன் தீவுகளையும் அங்குள்ள திரவியங்களையும் கண்டுகொண்டார்கள். ஆகவே அந்தத் தீவுகளுக்கு மேற்கு "இந்திய" தீவுகள் என பெயர் வந்தது.. :D

கனடாவும் ஒரு முன்னர் நாடு இல்லைதானே .

அர்ஜூன் எங்களுக்கு வசதியானதை மட்டும் தான் நாங்கள் கருத்தில் கொள்வோம் :)

குபெக் பிரிந்து போக கேட்கிறார்கள் :) (ஆனால் கனடிய $, ஆர்மி எல்லாம் பாவிப்போம்)

  • கருத்துக்கள உறவுகள்

குபெக் பிரிந்து போக வாக்கெடுப்பு நடத்த முடியும். ஆனால் அல்பேர்ட்டா வாக்கெடுப்பு நடத்த முடியுமா? :D யோசித்துப் பார்க்க வேண்டும்..

அதேபோல 370 காஷ்மீருக்கு கிடைத்த ஒரு சிறப்புரிமை. அதை கேள்விக்குள்ளாக்குவதும், குபெக்கின் சிறப்பு உரிமைகளை குபெக் விட்டுக் கொடுப்பதும் ஒரே வகைதான்.

இசை குபெக் போக முடியுமென்றால்...ஏன் அல்பேர்டா பிரிந்து போகமுடியாது?

அவர்களும் தங்களது "எண்ணை காசு" பிச்சைகார மாநிலங்களுக்கு போகுது என்று குமுறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

பழங்குடியினர் தங்களுக்கும் ஒரு நாடாக பிரித்து தரசொல்லி கேட்டதாக எங்கோ வாசித்த ஞாபகம்....

கனடா "இரு மக்கள்" கருத்தியலில் உருவானது. ஆங்லேயர் மற்றும் ஃபிரெஞ்ச். பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாக குபெக் தனது தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டுவிட்டது. 1998 இல் எதேச்சையாக கருத்துக் கணிப்பு நடத்தியமை தவறல்ல என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இது ஒரு அரசியல் பிரச்சினையே தவிர சட்டப் பிரச்சினை அல்ல என்றும் சொல்லிவிட்டது

இப்போது அல்பேர்ட்டா கருத்துக் கணிப்பு நடத்தலாமா என்றால் ஆம்.. நடத்தலாம். ஆனால் அவர்களுக்கு பிரிந்து போக தேவையான அரசியல் மேடை இன்னும் அவர்களிடம் இல்லை. :D ஆனால் குபெக்குக்கு உண்டு. இதுதான் அவர்களது புத்தி சாதுர்யம். தங்களது தனி அந்தஸ்தை இன்றுவரையில் நிலைநாட்டி வருகிறார்கள். இதைக் கோட்டைவிட்டவர்கள்தான் ஈழத்தின் தமிழ்த் தலைவர்கள்.

அதேபோல காஷ்மீரும் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு தனி அந்தஸ்துடன் விளங்குகின்றது. இந்த ஆர்.எஸ்.எஸ். அரசியல் சட்டம் 370 ஐ இல்லாமல் செய்வதன்மூலம் அந்த மாநிலத்தையும் மற்ற மாநிலங்களுக்கு சமமாக மாற்ற நிற்கிறார்கள். அதைத்தான் காஷ்மீரிகள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றேன். :huh:

உமர் அப்துல்லா - ஆர்எஸ்எஸ்

மோதலுக்கு காரணமான அரசியல் சட்டம்

370 வது பிரிவு என்பது என்ன?

370 வது பிரிவு உருவானது எப்படி?

இந்த

அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும்

அந்த அரசியல் சட்டம் 370

வது பிரிவு என்பது என்ன?

அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த

சில தகவல்கள்...

சுதந்திரத்திற்கு முன்னர்

பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ்

இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை,

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம்

ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா,

பாகிஸ்தானுடன்

இணைப்பதா அல்லது தனி நாடாக

செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.

அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த

ஹரி சிங், இந்தியாவுடன்

காஷ்மீரை இணைத்து, ஷேக்

அப்துல்லாவை பிரதமராக நியமித்தார்.

அப்போதைய நிலைமையை கட்டுக்குள்

கொண்டுவர,

சிறப்பு அந்தஸ்து அளிக்கஅரசியல்

சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க

முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின்

முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர

இந்தியாவின் முதல் மத்திய

சட்டத்துறை அமைச்சருமான டாக்டர்

பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர்

மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்

370 வது பிரிவை வடிவமைக்க

மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர்

ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக்

அப்துல்லாவிடம் பேசி, அம்பேத்கருடன்

கலந்து பேசி பொருத்தமான அரசியல்

பிரிவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால்,

கடைசியில்

கோபாலஸ்வாமி அய்யங்காரால்தான் 370

வது பிரிவு உருவாக்கப்பட்டது.

கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலான

இந்தியாவின் முதல் அமைச்சரவையில்

இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீர்

மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள்

திவானாகவும் பதவி வகித்தார்.

370 வது பிரிவு சொல்வதென்ன...?

* இந்திய அரசியல் சாசனத்தின் 370

வது பிரிவு, ஜம்மு காஷ்மீர்

மாநிலத்திற்கு தற்காலிகமாக

சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த

சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய

மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம்

மட்டுமே பெருமளவில் மாநில

சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி,

இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம்,

தகவல் தொடர்பு,

வெளியுறவு விவகாரம், ஆகிய

துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில்

இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர்

சட்டசபையின் ஒப்புதல்

இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச

நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும்

இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர்

மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும்,

தனி அரசியல் சாசனமும் உண்டு.

இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த

மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான

அசையா சொத்து வாங்குவதும்

தடை செய்யப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற

மாநில ஆண்களை திருமணம்

செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம்

வாங்கும்

உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள்

மற்ற மாநில பெண்களை மணந்தாலும்

அவர்கள் நிலம் வாங்க முடியும்.

* ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின்

பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற

எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம்

5 ஆண்டுகளாகும்.

* அரசியல் சாசனத்தின் 238

வது பிரிவு ஜம்மு காஷ்மீர்

மாநிலத்திற்கு பொருந்தாது.

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI

வது பகுதியில் திருத்தம்

செய்து தற்காலிக மற்றும்

மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370

வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

* முதலில் உருவாக்கப்பட்ட 370

வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான

அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக

அங்கீகரிக்கப்படுகிற

நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக,

மத்திய அமைச்சர்களின்

அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட

முடியும்" என கூறப்பட்டிருந்தது.

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில்,

அதாவது 370 வது பிரிவில் மாற்றம்

செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான

அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில

சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு,

ஜனாதிபதியால் தற்காலிகமாக

அங்கீகரிக்கப்படுகிற

நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக

மத்திய அமைச்சர்களின்

அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட

முடியும்" என வரையறுக்கப்பட்டது.

* அரசியல் சாசனத்தின் 370

வது பிரிவின்படி மாநிலத்தின்

எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால்

கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நிறைய இடம் இருக்கு தானே அங்கே காலிஸ்தான் உருவாக்கலாம் :) (இந்தியாவில் சீக்கியர் இப்போது குண்டு வெடிப்பது இல்லை... :) தனி நாடு இப்போ கேட்கிறார்களா??  பலமாக இருக்கும் மோயிஸ்டு களே தனி நாடு கேட்க்கவில்லை...)

மகா பாரதம் காலம் தொட்டே பாரதம் இருந்திருக்கின்றது... அங்கே எல்லாரும் ஒரே கடவுளையே கும்பிட்டு ஒரே மக்களாக தங்களுக்குள்ளே வணிகம் செய்து...திருமணம் செய்து...ஒரினமாக இருந்திருகிறார்கள்....

அந்த காலமே திரும்பியும் வரவேண்டும்... :)

ஜெய்கிந் :)

வெள்ளையர் வெளியேறியபோது கிட்டத்தட்ட 400 அரசர்கள் இந்தியாவில் இருந்திருகிறார்கள்...

அப்போ 400ஆக பிரியவும் இடமுண்டு.....

திரும்பவும் உங்களுக்கு வசதியானதை மட்டுமே கருத்தாட எடுத்துக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

காலிஸ்த்தான் தனிநாட்டிற்கான போராட்டம் இப்போது நீறுபூத்த நெருப்பாகத்தன் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக யாரும் அதுபற்றிப் பேசுவதில்லை. ஏனென்றால், 1984 இல் ஈழத்தின் முள்ளீவாய்க்கால் படுகொலையினை ஒத்த படுகொலையொன்று காலிஸ்த்தான் விடுதலைக் கோரிக்கையாளர்மீது இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்டது. ஒப்பரேஷன் புளூ ஸ்டார் என்று பெயரிடப்பட்ட அந்த ராணுவ நடவடிக்கையில் சீக்கியரின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயில் மீது இந்திரா காந்தியினால் அனுப்பப்பட்ட ராணுவம் நடத்திய தாக்குதலில் காலிஸ்த்தான் விடுதலை ராணுவத்தின் தலைவர் பிந்தரன் வாலே மற்றும் தளபதிகள் உற்பட குறைந்தது 500 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக இந்தியா உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ஆனால், பொற்கோயிலுக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொல்லப்பட்ட போராளிகள், பக்தர்களீன் எண்ணிக்கை குறைந்த 5000 ஆவது இருக்கலாம் என்று காலிஸ்த்தான் சார்புச் செய்திகள் கூறுகின்றன. தமது புனிதத்தலம் தக்கப்பட்டதையும், பிந்தரன் வாலே உற்பட பல சீக்கியர்கள் கொல்லப்பட்டமையும் எதிர்த்து பல சீக்கிய ராணுவ வீரர்கள் ராண்வத்தை விட்டு ஆயுதங்களுடன் தலைமறைவாகியதாகவும் அவர்களை மீள இணைக்கும் முயற்சியில் கடுமையான மோதல்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ராணுவம் கூறியிருக்கிறது.

பொற்கோயில் மீது மேற்கொல்லப்பட்ட ராணூவ தாக்குதலுக்க்ப் பழிவாங்கவே இந்திரா அம்மையார் கொல்லப்பட்டதும், அக்கொலைக்குப் பழிவாங்க நாடெங்கிலும் சீக்கியர்கள் 20,000 பேரைக் காங்கிரஸ் குண்டர்கள் கொன்றதும் வரலாறு. 

காலிஸ்த்தான் இன்னும் நீறு பூத்த நெருப்பாக இருப்பதற்கு ஒரு உதாரணம், அண்மையில் இங்கிலாந்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்ட 84 ஒப்பரேஷன் புளூஸ்டார் தளபதியை காலிஸ்த்தான் விடுதலை இயக்கத்தினர் படுகொலை செய்ய எத்தனித்தது. ஆகவே, அழிக்கப்பட்ட ஒரு இனம் தனது தருணத்திற்காகக் காத்திருக்கிறது. நடந்தவற்றை மறந்துவிடவில்லை. :(

மாவோயிஸ்ட்டுக்கள் ஒருபோதுமே தனிநாட்டிற்காகக்ப் போராடவில்லை. தமது நிலங்களுக்கான உரிமை தமக்கே வழங்கப்படவேண்டும் என்றும், சுரண்டப்படும் தமது மக்களினம் சரியாக நடத்தப்பட்டவேண்டும் என்றும், பல்தேசியக் கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கப்படும் தமது இயற்கை வளங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றே போராடுகிறார்கள். :huh:

மகாபாரதம் வட இந்தியர்களுக்கானது. அதில் மருந்திற்குக் கூட வேற்று மொழியினரோ அல்லது இனத்தினரோ இல்லை. அப்படியிருக்க மகாபாரதம் முழு இந்தியாவையும் குறிக்கிறது என்பது வேடிக்கை.  ஐரொப்பிய ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இலங்கை எப்படி சிங்கள தமிழ் ராச்சியங்களாக இருந்ததோ அதேபோலத்தான் இந்தியாவும் பல மன்னராட்சி தேசங்களாகப் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயர்கள் தமது நிர்வாகத் தேவைக்காக இந்த சிறிய ராஜ்ஜியங்களை சேர்த்து பெரிய நாடாக உருவாக்கினார்கள். அபோது உருவானதுதான் நீங்கள் கொண்டாடும் மகாபாரதம். மொழியாலும் , கலாச்சாரத்தாலும், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளாலும் 100 % வேறுபடும் தெற்கில் வாழும் தமிழனும் , வடக்கின் சீக்கியனும் ஒரே நாட்டில் வாழ்வது எப்படிச் சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்? இது சாத்தியமானது ஆங்கிலேய ஆக்கிரமிப்பினால்த்தானேயன்றி, நீங்கள் கூறும் அகண்ட மகாபாரதக் கதையினால் அல்ல.  <_<

ஒத்துப்போக விரும்பாத பல வேறுபட்ட தேசிய இனங்களை பலாத்காரப்படுத்தி போலித்தேசியவாததிற்குள் கட்டி வைத்திருக்கிறது இந்திபேசும் வட இந்தியா. அதற்கு நீங்கள் மகாபாரதம் - ஜெய்கிந்த் என்று வேறு நியாயம் கற்பிக்கிறீர்கள். :D

தெரியாமல்த்தான் கேட்கிறேன், உண்மையிலேயே நீங்கள் இந்தியப் போலித்  தேசியத்தின் விசுவாசியா அல்லது இங்கே கருத்தெழுதியவர்களை கொதிப்பேற்ற  எழுதுகிறீர்களா??  :)

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இசை குபெக் போக முடியுமென்றால்...ஏன் அல்பேர்டா பிரிந்து போகமுடியாது?

அவர்களும் தங்களது "எண்ணை காசு" பிச்சைகார மாநிலங்களுக்கு போகுது என்று குமுறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

பழங்குடியினர் தங்களுக்கும் ஒரு நாடாக பிரித்து தரசொல்லி கேட்டதாக எங்கோ வாசித்த ஞாபகம்....

நாந்தான்,  நீங்கள் குதர்க்கமாக எழுதினாலும் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. 

காஷ்மீர் பற்றி இன்னுமொரு கேள்வி உங்களிடம். இன்றுவரை காஷ்மீரை தனது நாட்டின் பகுதியென்று உரிமை கொண்டாடும் இந்தியா, ஏன் இதுவரை அங்கே மக்களின் விருப்பினை அறிய கருத்துக் கணிப்பொன்றினை நடத்தவில்லை என்று சொல்ல முடியுமா?? 

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட 5 நாடுகள் குழுவினால் 1949 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானமான காஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் தத்தமது இராணூவங்களை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும், காஷ்மீரின் எதிர்காலம் பற்றி காஷ்மீர் மக்கள் மத்தியில் மட்டுமே நடத்தப்பட வேண்டிய சர்வஜன வாக்கெடுப்பினை மேற்கொள்ளல் ஆகிய இரு தீர்மானங்களும் ஏன் இன்னும் இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் கூற முடியுமா?? 

காஷ்மீர் தன்னுடைய பகுதிதான் என்பதிலும், காஷ்மீர் மக்கள் இந்தியாவைத் தமது நாடாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதிலும்  இந்தியாவிற்கு  முழுமையான நம்பிக்கை இருந்தால் அங்கே சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்துவதில் என்ன தயக்கம் ?? மக்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதை அறிந்துவிடலாமே?? 

நாந்தான்,  நீங்கள் குதர்க்கமாக எழுதினாலும் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. 

காஷ்மீர் பற்றி இன்னுமொரு கேள்வி உங்களிடம். இன்றுவரை காஷ்மீரை தனது நாட்டின் பகுதியென்று உரிமை கொண்டாடும் இந்தியா, ஏன் இதுவரை அங்கே மக்களின் விருப்பினை அறிய கருத்துக் கணிப்பொன்றினை நடத்தவில்லை என்று சொல்ல முடியுமா?? 

காரணம் காஸ்மீரில் இருந்த பண்டிட்களும் முஸ்லீம் அல்லாதவர்களும் இந்தியா முழுக்க அகதியாக வாழுவதாலும் ..பாகிஸ்தான் தொடர்ந்தும் குடைச்சல் கொடுப்பதாலுமே....(அது தான் இந்திய அரசு சொல்லுவது)

காஸ்மீரில் இன்னும் சுமுகநிலை இல்லை....

முஸ்லீம் என்று சொல்லி அங்கிருந்தவர்களின் மனதை கலைத்து விட்டார்கள் ...

காஸ்மீரில் இருந்த முஸ்லீம்களால் கொல்லப்பட்ட/துரத்தப்பட்ட சீக்கியர்களும், இந்துக்களும் அவர்களின் வம்சாவளியும் அங்கு திரும்பியவுடன் தேர்தல் நடக்கும்  (பாகிஸ்தான் குள்ளநரி வேலை பார்க்காவிட்டால்)

மற்றது முழு காஸ்மீருக்கும் (பாகிஸ்தானால் பிடிக்கப்பட்டதையும் ) சேர்ந்து தான் தேர்தல் நடத்தப்படவேண்டும்...அதற்கு பாகிஸ்தான் தயாரில்லை... :)  அகவே தான் இந்தியாவும் நடத்தவில்லை.....

ரகு இந்திய அரசியல் வாதிகள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் தான்...ஆனால் முட்டாள்கள் இல்லை.... :)

ஆகவே தான் எல்லா நாடுகளும் அவர்களுக்கு (அவர்களை பிடிக்காவிட்டாலும்) குறைந்தளவு மரியாதையாவது செய்கிறார்கள்....

Edited by naanthaan

திரும்பவும் உங்களுக்கு வசதியானதை மட்டுமே கருத்தாட எடுத்துக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

தெரியாமல்த்தான் கேட்கிறேன், உண்மையிலேயே நீங்கள் இந்தியப் போலித்  தேசியத்தின் விசுவாசியா அல்லது இங்கே கருத்தெழுதியவர்களை கொதிப்பேற்ற  எழுதுகிறீர்களா??  :)

ரகு ஆகவே தான் சொன்னேன் காலிஸ்தான் கனடாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பெறலாம் என்று :)

இந்தியாவில் சீக்கியர்கள் அதை செய்ய இப்போது முயலுகிரார்களா? என்பது தான் பிரச்சனை :)

உங்களது வாதத்தின் படி பார்த்தால்...உலகில் மில்லியன் கணக்கான நாடுகள் அமைக்க வேண்டும்...

அமெரிக்க கனடாவிலேயே எத்தனை பேர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி புது நாடுகள் அமைக்க வேண்டும் என்று கதைகிறார்கள்..... நகரமத்தியில் இருந்து சில கோமாளிகள் நோட்டீஸ் எல்லாம் அடித்து கொடுத்து கொண்டும்...ஒலிபெருக்கி வைத்து கூட்டம் போட்டுக்கொண்டும் இருப்பார்கள்...பார்த்திருப்பீர்கள்

இரண்டு சீக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்...அவர்களுக்கு இந்திய மத்தியஅரசை/ஏன் பஞ்சாப் அரசையுமே கொள்ளைக்கார்கள் என்றே திட்டிக்கொண்டும்...இந்தியாவை எல்லாருக்கும் முன் கேவலப்படுத்திக்கொண்டும் இருப்பார்கள்..ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு போய் காணி வீடு என்று முதளிட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்....அவர்களுக்கும் தெரியும் இனி காலிஸ்தான் கிடைக்காது என்று :)

காலிஸ்தான் பிந்தரன் வாலாவை வளர்த்ததே இந்திரா தானே ... அவருக்கு சரியான தண்டனை...

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் காஸ்மீரில் இருந்த பண்டிட்களும் முஸ்லீம் அல்லாதவர்களும் இந்தியா முழுக்க அகதியாக வாழுவதாலும் ..பாகிஸ்தான் தொடர்ந்தும் குடைச்சல் கொடுப்பதாலுமே....(அது தான் இந்திய அரசு சொல்லுவது)

காஸ்மீரில் இன்னும் சுமுகநிலை இல்லை....

முஸ்லீம் என்று சொல்லி அங்கிருந்தவர்களின் மனதை கலைத்து விட்டார்கள் ...

காஸ்மீரில் இருந்த முஸ்லீம்களால் கொல்லப்பட்ட/துரத்தப்பட்ட சீக்கியர்களும், இந்துக்களும் அவர்களின் வம்சாவளியும் அங்கு திரும்பியவுடன் தேர்தல் நடக்கும்  (பாகிஸ்தான் குள்ளநரி வேலை பார்க்காவிட்டால்)

மற்றது முழு காஸ்மீருக்கும் (பாகிஸ்தானால் பிடிக்கப்பட்டதையும் ) சேர்ந்து தான் தேர்தல் நடத்தப்படவேண்டும்...அதற்கு பாகிஸ்தான் தயாரில்லை... :)  அகவே தான் இந்தியாவும் நடத்தவில்லை.....

ரகு இந்திய அரசியல் வாதிகள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் தான்...ஆனால் முட்டாள்கள் இல்லை.... :)

ஆகவே தான் எல்லா நாடுகளும் அவர்களுக்கு (அவர்களை பிடிக்காவிட்டாலும்) குறைந்தளவு மரியாதையாவது செய்கிறார்கள்....

நீங்கள் சொல்வது ஓரளவிற்குச் சரிதான்.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய இந்துப் பண்டித்துக்களையும், சீக்கியர்களையும் அங்கு திருப்பி அழைத்தாலும் கூட முஸ்லீம்கள்தான் அங்கே பெரும்பான்மையினராக நிச்சயம் இருப்பர். ஏன் சொல்கிறேன் என்றால், நேருவுடன் அன்றைய கஷ்மீர் மன்னர் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமே பெரும்பான்மை முஸ்லீம்கள் பாக்கிஸ்த்தானுடன் சேர்ந்து காஷ்மீரை ஆக்கிரமித்து தனது ஆட்சியை அகற்றி விடுவார்கள் என்கிற பயத்தினால்த்தான் உருவக்கப்பட்டது.

ஆகவே, ஒன்றுபட்ட காஷ்மீருக்குள் (ஆசாத் மற்றும் ஜம்முக் காஷ்மீர்கள் இணைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட பண்டித்துக்கள் மற்றும் சீக்கியர்களும் மீள் அழைக்கப்பட்ட காஷ்மீர் ) அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவென ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிச்சயம் அது சுதந்திரக் கஷ்மீர் என்றுதான் முடிவு வரும். 

ஆனால் அப்படியொன்றை நடத்துவதற்கு நிச்சயம் பாக்கிஸ்த்தானோ அல்லது இந்தியாவோ விடமாட்டா என்பதுதான் எனது எண்ணம். ஜம்முக் கஷ்மீர் என்பது எப்படி தனது நாட்டின் பகுதியென்று இந்தியா சொல்கிறதோ, அவ்வாறே ஆசாத் காஷ்மீரும் தனது நாட்டின் ஒரு பகுதியென்று பாக்கிஸ்த்தானும் சொல்கிறது.

இந்த இரண்டு எதிரிகளும் காஷ்மீரத்து மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை தமது அரசியல் ராணுவ நலன்களுக்காக பாவிக்கின்றன. இடையில் அகப்பட்டு அழிவதோ அப்பாவிக் காஷ்மீர்கள்.

இதில் வெளியாரான எனக்கு என்ன வேலை , ஏன் குத்தி முறிகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். எங்களைப்போல விடுதலை கோரிப் போராடும் ஒரு இனம்தான் காஷ்மீர்கள் என்பதும், இந்தியாவின் மீதான இயல்பான கோபமும்தான், வேறென்ன இருக்க முடியும் ? 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு ஆகவே தான் சொன்னேன் காலிஸ்தான் கனடாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பெறலாம் என்று :)

இந்தியாவில் சீக்கியர்கள் அதை செய்ய இப்போது முயலுகிரார்களா? என்பது தான் பிரச்சனை :)

உங்களது வாதத்தின் படி பார்த்தால்...உலகில் மில்லியன் கணக்கான நாடுகள் அமைக்க வேண்டும்...

அமெரிக்க கனடாவிலேயே எத்தனை பேர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி புது நாடுகள் அமைக்க வேண்டும் என்று கதைகிறார்கள்..... நகரமத்தியில் இருந்து சில கோமாளிகள் நோட்டீஸ் எல்லாம் அடித்து கொடுத்து கொண்டும்...ஒலிபெருக்கி வைத்து கூட்டம் போட்டுக்கொண்டும் இருப்பார்கள்...பார்த்திருப்பீர்கள்

இரண்டு சீக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்...அவர்களுக்கு இந்திய மத்தியஅரசை/ஏன் பஞ்சாப் அரசையுமே கொள்ளைக்கார்கள் என்றே திட்டிக்கொண்டும்...இந்தியாவை எல்லாருக்கும் முன் கேவலப்படுத்திக்கொண்டும் இருப்பார்கள்..ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு போய் காணி வீடு என்று முதளிட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்....அவர்களுக்கும் தெரியும் இனி காலிஸ்தான் கிடைக்காது என்று :)

காலிஸ்தான் பிந்தரன் வாலாவை வளர்த்ததே இந்திரா தானே ... அவருக்கு சரியான தண்டனை...

காலிஸ்த்தானுக்கான தேவை இன்னமும் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், 1984 இல் பொற்கோயிலில் நடத்தப்பட்ட படுகொலையை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்பது மட்டும் தெரியும். பொற்கோயில் படுகொலையே காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் என்பது வேதனை.

நீங்கள் கூறிய பிந்தரன் வாலே உருவாக்கத்தில் இந்திராவின் பங்கு இருந்ததென்பதை என்னுடன் வேலை பார்க்கும் ஒரு இந்தியன் சொன்னான். பஞ்சாப்பில் தனது எதிரிகளை வீழ்த்த இந்திரா அம்மையார் உருவாக்கியவர்தான் பிந்தரன் வாலே என்றும், அவன் சொன்னான். ஆனால் அதுமட்டுமே ஒரு இனத்தின் சுதந்திர போராட்டத்தை உருவாக்குமா என்பது கேள்விக்குறியே. 

நீங்கள் சொல்வது ஓரளவிற்குச் சரிதான்.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய இந்துப் பண்டித்துக்களையும், சீக்கியர்களையும் அங்கு திருப்பி அழைத்தாலும் கூட முஸ்லீம்கள்தான் அங்கே பெரும்பான்மையினராக நிச்சயம் இருப்பர். ஏன் சொல்கிறேன் என்றால், நேருவுடன் அன்றைய கஷ்மீர் மன்னர் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமே பெரும்பான்மை முஸ்லீம்கள் பாக்கிஸ்த்தானுடன் சேர்ந்து காஷ்மீரை ஆக்கிரமித்து தனது ஆட்சியை அகற்றி விடுவார்கள் என்கிற பயத்தினால்த்தான் உருவக்கப்பட்டது.

ஆகவே, ஒன்றுபட்ட காஷ்மீருக்குள் (ஆசாத் மற்றும் ஜம்முக் காஷ்மீர்கள் இணைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட பண்டித்துக்கள் மற்றும் சீக்கியர்களும் மீள் அழைக்கப்பட்ட காஷ்மீர் ) அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவென ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிச்சயம் அது சுதந்திரக் கஷ்மீர் என்றுதான் முடிவு வரும். 

ஆனால் அப்படியொன்றை நடத்துவதற்கு நிச்சயம் பாக்கிஸ்த்தானோ அல்லது இந்தியாவோ விடமாட்டா என்பதுதான் எனது எண்ணம். ஜம்முக் கஷ்மீர் என்பது எப்படி தனது நாட்டின் பகுதியென்று இந்தியா சொல்கிறதோ, அவ்வாறே ஆசாத் காஷ்மீரும் தனது நாட்டின் ஒரு பகுதியென்று பாக்கிஸ்த்தானும் சொல்கிறது.

இந்த இரண்டு எதிரிகளும் காஷ்மீரத்து மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை தமது அரசியல் ராணுவ நலன்களுக்காக பாவிக்கின்றன. இடையில் அகப்பட்டு அழிவதோ அப்பாவிக் காஷ்மீர்கள்.

இதில் வெளியாரான எனக்கு என்ன வேலை , ஏன் குத்தி முறிகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். எங்களைப்போல விடுதலை கோரிப் போராடும் ஒரு இனம்தான் காஷ்மீர்கள் என்பதும், இந்தியாவின் மீதான இயல்பான கோபமும்தான், வேறென்ன இருக்க முடியும் ? 

பண்டிட்களும் சீக்கியர்களும் காஸ்மீரின் ஆளும் வர்க்கமாக இருந்தவர்கள் :)

இந்தியாவுக்கு தனி காஸ்மீர் நாடு பிரச்சனையில்லை என்று நினைகின்றேன்...ஆனால் மதத்தை காட்டி பாகிஸ்தான் முழுவதையும் விழுங்கிவிடும் என்பது தான் இந்தியாவின் பிரச்னை...

காஸ்மீரிகள் சூபி முஸ்லீம்கள்..சூபி முஸ்லீம்கள் தர்கா வழிபாடு செய்து மற்ற மதத்தினரையும் அனுசரித்து செல்வார்கள் என நினைக்கிறன்......ஆனால் பாகிஸ்தானால் வகாபியிச முஸ்லீம் மதவெறி கொண்டு இவர்களை மாற்ற பார்கிறார்கள் ...

தற்போது காஸ்மீரில் கொல்லப்படும் தீவிரவாதிகள் ஆசாத் காஸ்மீரிகள் கூட இல்லை.....ஆசாத் காஸ்மீரிகளும் தனியே இருக்க தான் விரும்புகிறார்கள் என நினைக்கிறன்..அவர்கள் இந்திய காஸ்மீரிகளிலும் பார்க்க அவதிபடுகிறார்கள் ..மற்றைய பாக்கிகளால்...

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.