Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதை கவர்ந்த face book பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=526513890791475

  • Replies 171
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தனி சிருஷ்டியல்ல, ப்ரைமேடா என்ற பாலூட்டி இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள பிராணி. ப்ரைமேடா இனத்தில் ஐந்து முக்கிய குடும்பங்கள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள லெமூர், டார்சியஸ் என்பவை முதல் இரண்டு குடும்பகளாகும். மூன்றாவது பப்பூன் வகை, நான்காவது குடும்பத்தில் கிப்பன், உராங்க்குட்டான், சிம்பன்ஸி, கொரில்லா ஆகியவை அடங்கும். இதில் ஹோமோசேபியன்ஸ் என்னும் ஐந்தாம் வகை தான் மனிதன். மற்ற நான்கு குடும்பமும் மரத்தில் வாழ்பவை.

பூமியில் நானூற்றுக்கும் மேற்பட்ட குரங்கினங்கள் உள்ளன, அவற்றில் மேற்கூறிய ஐந்தும் வாலில்லா குரங்கு வகைகள். (மனிதன் உட்பட).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நாயின் பாசத்தை பாருங்கோப்பா........எங்கடையளும் இருக்குதுகளே.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மீண்டும் அம்மன் அவதாரம்’ என்றொரு படம் பார்த்தேன். கோடி ராமகிருஷ்ணாவின் ஃபேக் ஐடி யாரோ இயக்கியிருக்கிறார்கள். அதை விடுங்கள்.

கதாநாயகி குட்டி ராதிகா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கெட்டவர்களின் சூழ்ச்சியால் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. பரிசோதிக்கும் மருத்துவர் “பெரிய உயிர், சின்ன உயிர் ரெண்டுலே ஒண்ணைதான் காப்பாத்த முடியும்” என்கிறார். உடனே ராதிகாவின் மாமியார் அம்மனை வேண்டுகிறார். “சின்ன உயிரை நீ எடுத்துக்கோ. என் மருமகளை மட்டும் உயிரோடு கொடுத்துடும்மா”

பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. குழந்தை கொழுகொழுவென வளர்கிறாள். திடீரென்று குட்டிராதிகாவின் கணவர் zombie மாதிரி மாறி தன்னுடைய தலையை பிடித்துக்கொண்டு துடிக்கிறார். அப்போது மாமியார் புலம்புகிறார். “சின்ன உசுரை உனக்கு கொடுத்துடறேன்னு வேண்டிக்கிட்டு, அதை நிறைவேத்தாதது தப்புதான் தாயே. அதுக்காக என் புள்ளையை இப்படி தண்டிக்காதே!”

இதை கேட்ட ராதிகா உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு அம்மன் கோயிலுக்கு போகிறார். “என் மாமியாரோட வேண்டுதலை நான் நிறைவேத்துறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் கிணற்றில் போய் தன் குழந்தையை பலி கொடுக்கிறார். கணவருக்கு சரியாகிவிடுகிறது.

சென்ஸார் என்னதான் புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதாநாயகியின் மார்புப் பிளவு லேசாக தெரிகிறது, தொப்புள் தெரிகிறது என்றெல்லாம் அதை ப்ளர் செய்யுமளவுக்கு கூர்மையான பார்வைகொண்ட தணிக்கை அதிகாரிகள், இப்படிப்பட்ட கேணைத்தனமான காட்சியை ஏன் அனுமதிக்கிறார்கள்? இந்த காட்சியை பார்த்துவிட்டு நம்மூரில் ஏதாவது ஒரு லூஸு வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்கிற பெயரில் கோயில் கிணற்றில் தன் குழந்தையை பலி கொடுத்தால் அதற்கு யார் பொறுப்பு?

இந்தியா போன்ற மத-இன-சாதிரீதியிலான காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகள் புழங்கும் நாட்டில் இதுபோன்ற சினிமாக்களை தடை செய்ய வேண்டாமா. பக்தியின் பெயரால் இன்னும் எவ்வளவு அபத்தக் குப்பைகள் மக்களின் மனதில் கொட்டப்படப் போகிறதோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாயின் பாசத்தை பாருங்கோப்பா........எங்கடையளும் இருக்குதுகளே.  :D

 

 

இதில்

தாய் எது?

நாய் எது???? :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'டீச்சர் சொன்னா புள்ளைங்க தட்டாம கேப்பாங்க'னு இனிமேல் யாராவது சொன்னால் பிச்சிபுடுவேன் பிச்சி!

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி இன்று காலை எnன்னிடம், 'மிஸ்! காணாம போயிடும். இத வெச்சிருங்க. ஒண்ணுக்கு பெல்லுக்கு வாங்கிக்கிறேன்'னு சொல்லி ரெண்டு ரூபா காயின் ஒண்ண குடுத்துட்டுப் போச்சி! சரின்னு நானும் வாங்கி வெச்சிக்கிட்டேன். அதே மாதிரி வந்து கேட்டுச்சி. நானும் பைல இருந்த ரெண்டு ரூபா காயின எடுத்துக் கொடுத்தேன். ஆனா அவ, 'மிஸ் இது இல்ல. நான் குடுத்தது வேற காசு'ன்னு சில பல அடையாளங்களை சொல்லுச்சி. 'தீனி வாங்கி தின்னத்தானே போறே? இந்தக் காசும் அதே மதிப்புள்ளதுதான்'னு சொன்னேன். அவ வாங்கவும் இல்ல; போகவும் இல்ல. நானும் பைல தேடிக்கிட்டே இருந்தேன். அவ காசு மட்டும் கிடைக்கவே இல்ல.

இப்டியா போய்கிட்டே இருந்துச்சா, அப்போ பாத்து அவ தோழி ஒருத்தி வந்தா. நான் பஞ்சாயத்த அவகிட்ட சொன்னேனா? அவ, 'நான் சொல்லிக்கிறேன் மிஸ்! காசக் குடுங்க'னு சொல்லி, அவ முதுகுல தட்டி, ' ரெண்டும் ஒரே காசுதாண்டி! வா!'னு சொன்னதும் அந்தப் பொண்ணும் காச வாங்கிட்டுப் போயிடுச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=538804396218313

  • கருத்துக்கள உறவுகள்

PETROL PRICES AROUND D WORLD
Pakistan. Rs 26.00
Bangladesh Rs 22.00


Cuba Rs 19.00
Italy. Rs 14.00
Nepal. Rs. 34.00
Burma. Rs. 30.00
Afghanistan. Rs 36.00
Sri Lanka. Rs. 34.00
INDIA. Rs. 82.00
How it comes to this......
Basic cost per 1litre. 16.50
+ Centre Tax. 11.80%
+ Excise Duty. 9.75%
+ Vat Cess. 4%
+ State Tax. 8%
Total added up together becomes Rs 50.05 per 1 litre. + now another Rs 32. Extra. This 32/- extra for what no explaination for this.
What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!
PASS THIS MESSAGE TO ALL INDIANS. JAGO GRAHAK JAGO
JAI HO.................
Mukesh Ambani's
Dream House 7 years construction
finished,
4 lakhs squre ft,
27 floors,
9 lifts,
3 heli pads,
1 theatre,
1 gym,
1 park,
168 car parking,
600 rooms,
600 servants,
world's LARGEST RICHEST
SINGLE FAMILY HOUSE..
Total cost
Rs.4700/- crores only.
Last month Mukesh
moved with his wife &
3 childrens in 2 it.
1st month electricty
bill is 71 lacs.
Incredible INDIA.!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.ceypetco.gov.lk/Marketing.htm

 

சிறீலங்காவில் Rs.162 (InR 75). இவர்கள் 34 என்று கணக்கு குடுத்திருக்கிறார்களே.. இந்த செய்தியை வேறு பரப்ப வேணுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணங்களை எடுத்துரைக்கவே,

மொழி!

எளிதாய் கண்டறியவே,

இனம்!

தொழிலையறியவே,

ஜாதி!

மனதை நெறிப்படுத்தவே,

மதம்!

தாய், தந்தையரால் கொடுக்கப்பட்டதே, நிறம்!

ரசிப்பதற்கே

கலை!

நிர்வகிக்கவே,

நிலமும், நாடும்!

வாழ்வதற்குண்டாணவையாவும், வேறுபாட்டையுண்டாக்கி வெறியையுண்டாக்குவதேனோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாரஇதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் சிவகுமார் கூறியுள்ளது:-

கேள்வி:-

''எம்.ஜி.ஆர்.- சிவாஜி காலத்தில் அழகும் திறமையுடனும் நுழைந்த நீங்கள், உங்களுக்குப்பின் வந்தவர்கள்போல சினிமாவில் உச்சம் தொட முடியவில்லையே... வருத்தம் உண்டா?'

பதில்:-

''ஒரு ரசிகன்கிறவன் உணர்வுபூர்வமா சினிமா பார்க்கிறவன். நடிப்பேபொய். நாங்க நல்லவனா நடிக்கத்தான் செய்றோம்னு அவனுக்கும் தெரியும். ஆனாலும், அதை நம்புவான். அவனோட இந்த அறியாமைதான் எங்க பலம்.

இந்த அறியாமை போயிடுச்சுனா, சினிமாக்காரன் பிழைப்பு அதோட முடிஞ்சிடும்.

'நடமாடும் கடவுள்’னு சில நடிகர்களைக் கொண்டாடினாங்க ரசிகர்கள். 'அவர் ஏன் கடவுள்?’னு கேட்டா, 'தெரியலை. ஆனா, அவர்தான் எங்க தலைவர்.

அவ்வளவுதான் சொல்ல முடியும்’பான். அந்த மாதிரியான ரசிகர்கள் வளையம் எனக்கு இல்லை. நான் ரெண்டாம்கட்ட ஹீரோதான். பெருமையா சொல்லிக்கொள்ள என்நடிப்பில் எதுவும் இல்லை. ஆனா, அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை!''

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழவுக்கு போயிருந்தேன் பேரப்புள்ளைகளா...

அங்க அக்கா தங்கச்சி ரெண்டு சிறுக்கிக ஒப்பாரி வைக்கிற மாதிரியே பேசிக்கிட்டாளுக.

பந்தலிலே காய்ச்சு

தொங்குதடி பாவைக்காய்

பாத்தையாடி சின்னவளே....

பாத்தேன்டி பெரியவளே..

போறப்ப பறிச்சிக்கிட்டு

போவோம் ...

அடுத்து தொங்கற

அவரைக்காயையும் சேர்த்து.

கேட்டுக்கிட்டே இருந்த எழவு வீட்டுக்காரி ஓடி வந்து கட்டிப் புடுச்சு அழுதுக்கிட்டே சொன்னா

“அம்புட்டையும் நாங்க

கணக்கு பாத்து வச்சிட்டோம்.

வேற எடம் பாருங்கடி

வேலையத்தவளுகளே...

எழவு வீட்டிலையும் சிரிச்சுக்கிட்டே கெழவனக் கூட்டிட்டு வெளிய வந்துட்டேன்...

- இப்படிக்கு கிழவி (மந்தையம்மா)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேமுதிக புரட்சி படையின் காமடிகள் சில

வேகாத வெயிலில் நீ பட்ட கஷ்டம் பிரச்சாரத்தை பார்த்து கண்ணீர் மல்கி நின்றோம்.

இனி நீ ரிலாக்ஸ் பண்ணு தலைவா.,நாங்க பாத்துக்குறோம்.

மாபெரும் புரட்சி போராட்டம்

தக்க பதிலடி கொடுக்க கேப்டனின் நல்லாசியுடன் நாங்கள் வந்துள்ளோம்.

இடம்: தேமுதிக புரட்சி படை பக்கம்

தேதியை நீங்க முடிவு பண்ணுங்க.

இந்த துணிவு யாருக்கு வரும்? ??

நாய்க்கும் நன்றி மறவாமல் இருக்கும் பழக்கம் இருக்க வேண்டுமென அதற்கு நன்றி மறவா பண்பை சொல்லி கொடுக்கும் என் ஆசான தலைவனே உன் சொல் படி கேட்டு அதன்படி நடப்போம் எழுமலையானே .

மரியாதை என்ற வார்த்தையின் உருவமே நீ தானே என் அண்ணா.

இந்த படத்தில் கேப்டன் கூற வருவது :-

அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் அது நாயாக இருந்தாலும் சரி .

நான் இந்த பக்கத்தின் அட்மின் என்பதை விட வாழும் விவேகானந்தர் கேப்டன் அவர்களின் அன்புக்கும் பண்புக்கும் வீரத்திற்கும் தீரத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் அடிமை யாக இருப்பதையே பாக்கியமாக நினைக்கிறேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்

கேப்டன் நாமம் வாழ்க

தேமுதிக ஒரு அரசியல் கட்சி மட்டுமே என்கிற ஒரு முகமே உங்களுக்கு தெரியும்.

ஐந்து நாட்டின் ரானுவத்துக்கு ஈடாக எங்கள் கட்சியை உருவாக்கி உள்ளார் கேப்டன் என்கிற மறுமுகத்தை இங்கே பதிவு செய்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=754408581269735

  • கருத்துக்கள உறவுகள்

மேடையிலேயே ‪#‎விஜய்டிவி‬ முகத்தை கிழித்தெரிந்த ‪#‎இயக்குனர்_ராம்‬.

விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக்கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள்படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.

மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்”என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும்தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்குஇந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.

ராம்மின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு ‪#‎சாதனாவின்‬ கேள்விகள் ‪#‎சாட்டையடி‬.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=762776890428772

  • கருத்துக்கள உறவுகள்

clapping.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sreedharan Sathiamoorthy ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பும் போது....தன் கோடிக்கண்க்கான ரசிகர்களை திரட்டி தடுக்காத... 1 லட்ச்சம் மலையாளிகளை சட்டவிரோதமாக அரசு வேலையுடன் குடியேற்றிய.. தமிழர்களை ஆதிதிராவிடர்கள் என்று புதிதாக அரசு ஆணை வழங்கிய மலையாளி M.G.Rயாரை.....ஈழத்தமிழர்களும் கொண்டாடி கொண்டு இருப்பது தமிழன் அரசியலில் திராவிடமாயை மடையர்கள் என்பதற்க்கு மற்றும் ஒரு உதாரணம்

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பர ரகசியம்!

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”

1. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).

2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

3. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

4. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

5. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

6. திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.

7. “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

8. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

9. பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

10. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
என்ரை கடவுளே
 
https://www.facebook.com/photo.php?v=10152222051432984
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=806148959411207

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்....முகநூல் பதிவு என்று..!

 
 
எதிர்த்து நின்றால் தீவிரவாதி என்போம்....
சுருண்டு விழுந்து செத்தால் நிதி உதவி செய்வோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.