Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்த்தீனியம் கொள்வனவு

Featured Replies

a00(3623).jpgயாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ பார்த்தீனியச் செடி 10 ரூபா என்ற ரீதியில், வடமாகாண விவசாய அமைச்சால் நாளை புதன்கிழமையிலிருந்து தொடர்ந்து 07 நாட்களுக்கு (11)  கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தது. 

பார்த்தீனியச் செடி அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தக் கொள்வனவுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  

புத்தூர், சிறுப்பிட்டி மேற்கு, அச்செழு, அச்சுவேலி மேற்கு வசாவிளான், ஏழாலை, வட்டுக்கோட்டை, கைதடி கிழக்கு, கோண்டாவில், மாதகல், உடுப்பிட்டி, வல்லை நாச்சந்தி ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியச் செடிகளை பிடுங்கி   உரப்பைகளில் இட்டு அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கொள்வனவு நிலையங்களில் கையளிக்க முடியும் எனவும் வடமாகாண விவசாய அமைச்சு தெரிவித்தது. 

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும்போது பார்த்தீனியச் செடிகளுக்குள் ஏனைய  செடிகள் இருக்கலாகாது என்பதுடன்,  பார்த்தீனியச் செடி கொண்டுவரப்படும் உரப்பைகளுக்குப் பதிலாக மாற்று உரப்பைகள் வழங்கப்படும் எனவும்  வடமாகாண விவசாய அமைச்சு கூறியது. 

tamilmirror

விவசாய அமைப்பு மிக சிறப்பாக செயல்படுகிறது. எல்லோருக்கும் நன்றி.

நல்ல திட்டம்.....

அது என்ன பார்த்தீனிய செடி? அதை தமிழ்நாட்டில் களை என்பது மாதிரி தானே சொல்லுவார்கள்?

 

ஆமணக்கம் செடியா? அதிலிருந்து ethanol செய்ய??? (தமிழ்நாட்டில் வறண்ட இடங்களில் வளர்க்கிறார்கள்???? ஆனால் அது இன்னும் நிலத்தை கெடுக்கும்/வறள செய்யும் என்று எங்கோ/எப்போதோ வாசித்தேன்)

 

பார்த்தீனியசெடியை பற்றி யாராவது தயவு செய்து விளக்குங்கள்...நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகை விசச்செடி என்று கேள்விப்பட்டுள்ளேன்.. கெட்ட குணமுள்ளவர்களை குறிக்க தமிழ்நாட்டில் இச்சொல்லை பயன்படுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகை விசச்செடி என்று கேள்விப்பட்டுள்ளேன்.. கெட்ட குணமுள்ளவர்களை குறிக்க தமிழ்நாட்டில் இச்சொல்லை பயன்படுத்துவார்கள்.

 

காங்கிரஸ் களை http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88
அது 1980 களின் பிற்பகுதி...

உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கவென இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்திருந்த காலம். 1987 களில் இந்தியத்துருப்பினர் தம்முடன் செம்மறி ஆடுகளையும் கொண்டுவந்தனர். அவர்கள் கொண்டு வந்த ஆடுகள் மற்றும் பொதியுடன் ஒருவகை விதையும் சேர்ந்து வந்தது. அப்போது அந்த விதை பற்றி இலங்கையில் எவரும் அறிந்திருக்கவில்லை.

f91.jpg

யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் எமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். (பாத்தீனியம்) பல பொது இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

முன்னர் எமது திணைக்களம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு நிலைகளில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல விவசாய அமைப்புகளும் ஒத்துழைத்தன. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. மக்கள் தமது தோட்டத்திலிருக்கும் பார்த்தீனியம் செடிகளைக் களையக்கூட தயாராக இல்லை. இப்படி இருக்கும் போது பொது இடங்களில் இருப்பவற்றை எப்படிக் களைய முடியும்?

பார்த்தீனியம் செடிகளை ஒரேதரத்தில் அழிக்கமுடியாது. அழிப்பு நடவடிக்கைகளை குறித்த கால இடைவெளிகளில் கிரமமாக நடைமுறைபடுத்த வேண்டும். அத்துடன் செடிகள் பூக்க முதலே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் விதைகள் விரைவாகப் பரப்பிவிடும்.

இந்த வருடம் பார்த்தீனிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

களை கொல்லிகள் மூலம் அவற்றை ஒழிப்பதற்கு போதிய நிதியுதவியும் கிடைக்கவில்லை. பார்த்தீனிய ஒழிப்பில் பிரதேச செயலகங்கள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பு இல்லாமல் நாம் தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.

f92.jpg
இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த வவுனியா விவசாயப் பாடசாலை வளாகத்தில் விழுந்த அந்த விதைகள் விழுந்து முளைத்தன. விளைவு, பார்த்தீனியம் என்ற அழிக்கும் இயல்புடைய (புதிய வகை)த் தாவரம் முளைக்கத் தொடங்கியது. பார்த்தீனியமானது இந்தியாவில் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.

இந்திய அமைதிப்படை முகாமிட்டிருந்த பகுதிகளிலெல்லாம் பார்த்தீனியம் மிகவும் வேகமாகப் பரவியது. அதன் பரவல் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகியது. ஏனெனில் பார்த்தீனியம் பரவியுள்ளது என்பதை அறியவே எமக்குப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன.

இந்திய அமைதிப்படை மீளவும் தன் தாய் நாட்டுச் சென்று சில வருடங்களின் பின்னரே பார்த்தீனியத்தின் பரவல் பற்றி அறியப்பட்டது. 1999 ஜுலை மாதத்தின் பிற்பகுதியிலே வவுனியாவில் இத்தாவரம் பரவலாகக் காணப்படுவது கண்டறியப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது யாழ் குடாநாடு, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, குருணாகல், கண்டி, மற்றும் பதுளை போன்ற பல மாவட்டங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டது.

இந்திய அமைதிப்படை முகாமிட்டிருந்த பகுதிகளிலே பார்த்தீனியம் செறிந்து பரவியிருந்தது. ஆதலால் இலங்கையில் அதன் பரவலுக்கு வித்திட்டது இந்திய அமைதிப்படையே என்று கூறப்படுகிறது. ஆனால் 1985 களிலே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட் வெங்காயம், மிளகாய் விதைகளுடன் பார்த்தீனியம் விதைகளும் சேர்ந்தே வந்தாகவும் கூறப்படுகிறது.

பார்த்தீனியம் ஒரு சாதாரண களை தானே என எண்ணி அதை அலட்சியப்படுத்த முடியாது. விவசாயத்தில் மட்டுமன்றி சுற்றுச் சூழலிலும் மனித, விலங்குகளின் சுகாதாரத்திலும் பாரிய எதிர்விளைவுகளைத் தோற்றுவிக்கவல்லது.

இந்தியா, அவுஸ்திரேலியா, மெக்சிக்கோ, கர்பியத் தீவுகள் போன்ற நாடுகள் அந்த விளைவுகளை நன்கே அறிந்து வைத்திருக்கின்றன.

பார்த்தீனியத்தின் தாயகம் மெக்சிக்கோ வளைகுடாவை ஒட்டிய பகுதிகளாகும்.

1950 களிலே இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த கோதுமை விதைகளுடன் பார்த்தீனிய விதைகளும் சேர்ந்தே சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பரவத் தொடங்கிய விதை இந்தியாவின் ஒருசில மாநிலங்களைத் தவிர ஏனைய சகல பகுதிகளுக்கும் பரவியது.

இப்படி ஏதோ ஒரு காரணத்தால், உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. தெற்கு தென்கிழக்காசியா, பசுபிக் மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்தியங்களில் வேகமாகப் பரவியது.

பார்த்தீனியத்தின் உயிரியல் பெயர் Parthenium Hystrophorous என்பதாகும். இது மூலிகைத் தாவரமாகவும் அறியப்படுகிறது. ஆணி வேரையும் உறுதியான தண்டையும் உடையது. இதன் இலைகள் இளம் பச்சை நிறமானவை. ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் நோக்கிலே இலைகளில் மயிர்கள் காணப்படும். இதன் பூவின் நிறம் பழுப்பான வெள்ளையாகும். பல்கிளைத்தண்டுகளைக் கொண்டது.

இதன் விதைகள் கறுப்பு நிறமானவை. அவற்றின் மேற்பரப்பில் வெள்ளை வரிகள் காணப்படும். அவை மிகவும் சிறியவை (1-2cm நீளம்) ஆதலால் வெற்றுக்கண்ணுக்குத் தெரியக் கூடியவை என்று கூறி விடமுடியாது.

அயன வலய நாடுகளின் சுவாத்தியம் பார்த்தீனியத்தின் பரவலுக்கு மிகவும் சாத்தியமானதாகும். இலை துளிர், வசந்த காலங்களில் விதைகள் முளைக்கும். முளைக்க ஆரம்பித்து 4 வாரங்களிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். பூக்க ஆரம்பித்தால் தாவரம் இறக்கும் வரை தொடர்ந்து பூத்துக் கொண்டேயிருக்கும். ஒரு தாவரம் மட்டுமே ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது. இலையுதிர், குளிர் காலங்களில் இத்தாவரம் இறந்து போகும். இப்படியே இதன் வாழ்க்கை வட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. புல் நிலங்களிலும் கைவிடப்பட்ட நிலங்கள், வீதியோரங்கள், நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். வீட்டுத் தோட்டங்களைக்கூட இச்செடி விட்டு வைத்ததாகத் தெரியவில்லை.

இது பல்வேறு வழிகளால் பரவுகிறது. வாகனங்கள், இயந்திரங்கள், விலங்குகள், விதைகள், விலங்குணவு, மற்றும் நீரால் பரவுகிறது. வெள்ளத்தாலும் கூட பரவுகிறது.

நீர் நிலைகள், ஆறுகளிலிருந்து நீர் கொண்டு செல்லப்படும் பகுதிகள் யாவற்றிற்கும் இவை பரவும். பதுளை கண்ட கெட்டிய பகுதியிலிருந்து பண்டாரவளை வரை பார்த்தீனியம் பரவுவதற்கு மகாவலி கங்கையே காரணமாக இருந்தது. பார்த்தீனியம் விதைகளின் காவியாக அது தொழிற்பட்டது.

அதேபோல யுத்த காலங்களில் வடபகுதி லொறிகளையும் வாகனங்களையும் சோதனை செய்யும் சாவடிகளை அண்டிய பகுதிகளிலே பார்த்தீனியத்தின் பரம்பல் மிக அதிகமாகக் காணப்பட்டமையும் அறியப்பட்டது.

அதேபோல கால்நடைகளின் சாணத்தில் இவ்விதைகள் காணப்படும். இப்படி பல்வேறுபட்ட வழிமுறைகளால் மிக இலகுவாகப் பரவும் வல்லமை வாய்ந்தது பார்த்தீனியம்.

பார்த்தீனியம் ஒரு அழிக்கும் இயல்புடைய தாவரமாக / களையாக அறியப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பார்த்தீனியத்தின் வேகமாகப் பரவும் இயல்பு சுதேச தாவரங்களை அழித்து விடும் வல்லமை மிக்கது. இவை நிலங்களின் தரத்தைக் குறைக்கும் அத்துடன் கால்நடைகளின் உற்பத்தித் திறனையும் குறைக்கும். இவை காபனீரொட்சைட்டை வெளிவிடுபவையாதலால் நைதரசன் பதித்தல் பாதிக்கப்படும்.

பார்த்தீனியம் செடியின் மகரந்தமானது சிறுவர்கள், முதியோர்கள் மத்தியில் ஆஸ்துமாவை ஏற்படுத்தும். பல்வேறுபட்ட ஒவ்வாமை நோய்களையும் தோல்வியாதிகளையும் ஏற்படுத்தும். இதற்கு மனிதர் மட்டுமன்றி விலங்குகளும் விலக்கல்ல. விலங்குகளில் பால் உற்பத்தியை மட்டுமன்றி அவற்றின் நிறையையும் குறைக்கும். கண்களில் ஒருவித எரிச்சலைத் தோற்றுவிக்கும்.

பார்த்தீனியம் செடி ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினைகள் வரையறையற்றவை என்று கூடக் கூறமுடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலேயே இது அதிகளவில் பரம்பிக் காணப்படுகிறது. அத்துடன் திருகோணமலை (சீனன்குடா), குண்டசாலை, பதுளை, அம்பிலிப்பிட்டிய, சூரியவெவ ஆகிய பிரதேசங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுகளில் பரம்பிக் காணப்படுகிறது.

f93.jpgயாழ். மாவட்டத்திலே பலாலி வீதி, காங்கேசன் துறை வீதி, பருத்தித்துறை வீதி போன்ற பிரதான வீதிகளின் ஓரங்களிலே இச்செடியைப் பரவலாகக் காணமுடிகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியம் செடிகளில் அதிக சதவீதமானவை கோப்பாய் பிரதேசத்திலேயே பரவியிருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பயிர்ச் செய்கையை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட பிரதேசம் கோப்பாய். பார்த்தீனியம் செடிகள் அங்கு செறிந்தளவில் பரம்பியிருப்பதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டுள்ளது.

Capturepp.JPGchap12_clip_image002+copy.jpgபாத்தீனியத்தின் பரம்பலைக் கட்டுப்படுத்தி அதனை முற்றாக ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவற்றை வேரோடு பிடுங்கி அழிக்க முடியும். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானவை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட செடிகளையே அவ்வாறு அழிக்க முடியும். கூட்டம் கூட்டமாக அழிப்பதாயின் தேவையான மனித வளம் மிக அதிகமாகும். அத்துடன் ஒவ்வாமை நிலைமைகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. ஏற்கனவே பூத்த தாவரங்களை பிடுங்கி அழித்தலானது விதைகளை இன்னும் வேகமாகப் பரவலடையச் செய்யும்.

அத்துடன் பார்த்தீனியச் செடிகளைப் பிடுங்கி அழிப்பதற்குச் செலவாகும் நேரம் மிக அதிகமாகும்.

களைகொல்லிகளைப் பயன்படுத்தியும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியும். இந்த முறையின் மூலம் இளந்தாவரங்களை அழித்தலே பயனுடையதாக இருக்கும். ஏனெனில் வயதான தாவரங்களை அழித்தாலும் அவற்றின் விதைகளால் மீண்டும் செடிகள் முளைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். அத்துடன் இம்முறையை முகாமை செய்வதற்கான செலவும் மிக அதிகமாகும்.

இலங்கையிலும் பார்த்தீனிய கட்டுப்பாட்டுக்கென சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் கணிசமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

உயிரியல் முறைமை மூலம் (உயிரிக் கொல்லிகள்) பார்த்தீனியம் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துதல் வினைத்திறன் மிக்கதாகக் கருதப்படுகிறது. பங்கசுகளை அறிமுகப்படுத்தி இவற்றின் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும். பங்கஸ் தொற்று ஏற்படுவதற்கு ஈரப்பதன் மிக்க நிலைமை அவசியம். வெப்ப நிலை மாற்றங்கள் பங்கஸ் தொற்றைப் பாதிக்க வல்லன. ஆதலால் பார்த்தீனியம் செடியின் பரம்பலை பங்கஸ் விருத்தியைக் கொண்டு கட்டுப்படுத்துவதென்பது இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகிறது.

பார்த்தீனியம் செடியின் பாகங்களை உணவாகக் கொள்ளும் பூச்சி இனங்களை அறிமுகப்படுத்தி செடியின் வளர்ச்சி, விதை உற்பத்தி போன்வற்றைக் குறைக்க முடியும்.

அவுஸ்திரேலியாவிலே 20 வருடகால ஆராய்ச்சியின் பின் பார்த்தீனியம் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக 9 பூச்சிகள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் நடைமுறையில் இரண்டு மட்டும் இச்செடிக்குப் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏனெனில் களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் பூச்சிகளின் செயற்பாடு காலநிலை, கால அவகாசம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது.

ஆனால் பொதுமக்களிடம் போதியளவு விழிப்புணர்வு இல்லாவிடில் மேற்குறிப்பிட்ட எந்த முறைமைகள் மூலமும் உச்சப் பயனைப் பெற முடியாமல் போய்விடும். எவ்வளவுதான் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதிகாரத் தரப்பும் பொதுமக்களும் இணைந்து அக்கறையோடு செயற்பட வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. மிக முக்கியமான இரு தரப்புகளும் கைகோர்க்க முனையாத காரணத்தால் தான் இன்று யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பார்த்தீனியம் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரம்பிக் காணப்படுகிறது.

கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின. குறித்த பிரதேசத்தில் பார்த்தீனியக் கட்டுப்பாட்டு / அழிப்பு நடவடிக்கைகளை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ளவதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஒரே பிரதேசத்தில் குறித்த கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும் போதே வெற்றியளிக்கும். இல்லாவிடில் பெருந்தொகை பணம் செலவாவது மட்டுமே மீதமாகும்.

இவை தொடர்பாக எவரும் அக்கறை கெள்வதாகத் தெரியவில்லை.

30 வருடகால யுத்தம் முடிந்து வடக்கு தெற்கு பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. பார்த்தீனியத்தின் பரம்பல் என்ற பார்வையிலே நோக்கும் போது இப்போதுதான் இலங்கை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

பார்த்தீனியத்தை இலங்கை முழுவதும் பரப்ப வடக்குக்கும் தெற்குக்குமாய் சென்று வரும் வாகனங்கள் மட்டுமே போதும் என்கிறார் கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் சரத் கொட்டகம. அவர் கடந்த கால வரலாறுகளையும் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை.

அவ்வாறு பரவுவதைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறீர்கள் என யாழ்ப்பாண விவசாயத் திணைக்களத்திடம் வினவினால், இதுவரை எந்த ஒரு திட்டமும் இல்லை, அப்படிப் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. எதுவுமே பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

எவை எப்படியோ பொதுமக்கள், அதிகாரத்தரப்பினர், கற்றோர் என சகல தரப்பினரும் ஒன்றாகக் கைகோர்த்து முனைப்புடன் செயற்படாவிடில் ஏற்படப்போகும் பின்விளைவுகள் எமது கையை மீறிவிடும் என்பது மட்டுமே நிதர்சனம். எமது தோட்டங்களில் ஏதேச்சையாய் சில விதைகள் விழுந்த போது நாம் கவனிக்கவில்லை என்பது உண்மைதான். இன்று பார்த்தீனியம் எம் கண்ணுக்குத் தெரிந்தே பரவும் போது குருடராய் இருப்பதென்பது எப்படி நியாயமாகும்.

விவசாயத்துக்குத் தேவையான சகல வளங்களையும் இயற்கை அன்னை எமக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள்.அந்தப் பசுமை வளத்தைச் சுரண்ட முளைத்திருக்கும் பார்த்தீனியம் செடியை இனிமேலும் களைய முயற்சிக்காமல் இருப்பதென்பது எமது எதிர்காலச் சந்ததிக்கும் எம்மை வாழவைக்கும் தாய்நாட்டுக்கும் நாம் செய்யும் பெருந் துரோகமாகும்.

f93.jpg

 
பேராசிரியர் சரத்கொட்டகம இப்படிச் சொல்கிறார்...
 
வடக்கிற்கும் தெற்கிற்கும் தங்குதடையின்றிப் பயணிக்கும் வாகனங்களால் இலங்கை முழுவதும் பார்த்தீனியம் பரவும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

3290350828_3ddda32128.jpgகடந்த கால வரலாறும் அதையே சுட்டி நிற்கிறது. யுத்தகாலங்களில் வாகனச் சோதனைச் சாவடிகள் இருந்த பகுதிகளின் அயற் சூழலில் பார்த்தீனியம் செறிந்து காணப்படுகிறது. லொறிகளிலிருந்து பொருட்கள் ஏற்றி இறக்கப்படும் போது பார்த்தீனியம் விதைகள் இலகுவாகப் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது இலங்கை முழுவதும் எந்தத் தடையுமின்றி வாகனங்கள் பயணிக்கின்றன. வடக்கிற்கும் சென்று வருகின்றன. இதனால் பார்த்தீனியம் இலங்கை முழுவதும் விரைவில் பரவக் கூடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அவர்கள் உடனடிக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தம்மை அறியாமலே காவிகளாக மாறலாம். ஆதலால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

வடக்கில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பார்த்தீனியம் செடியின் பரம்பல் தொடர்பிலான ஆய்வுகள் மேற்கெள்ளப்பட வேண்டும்.

பார்த்தீனியம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை கையை மீறுவதை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. 

  

  

யாழ். விவசாய திணைக்களத்தைச் சேர்ந்த பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் தனபால சிங்கம் இப்படிக் கூறுகிறார்... 

யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் எமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். (பாத்தீனியம்) பல பொது இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

முன்னர் எமது திணைக்களம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு நிலைகளில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல விவசாய அமைப்புகளும் ஒத்துழைத்தன. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. மக்கள் தமது தோட்டத்திலிருக்கும் பார்த்தீனியம் செடிகளைக் களையக்கூட தயாராக இல்லை. இப்படி இருக்கும் போது பொது இடங்களில் இருப்பவற்றை எப்படிக் களைய முடியும்?

பார்த்தீனியம் செடிகளை ஒரேதரத்தில் அழிக்கமுடியாது. அழிப்பு நடவடிக்கைகளை குறித்த கால இடைவெளிகளில் கிரமமாக நடைமுறைபடுத்த வேண்டும். அத்துடன் செடிகள் பூக்க முதலே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் விதைகள் விரைவாகப் பரப்பிவிடும்.

இந்த வருடம் பார்த்தீனிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

களை கொல்லிகள் மூலம் அவற்றை ஒழிப்பதற்கு போதிய நிதியுதவியும் கிடைக்கவில்லை. பார்த்தீனிய ஒழிப்பில் பிரதேச செயலகங்கள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பு இல்லாமல் நாம் தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.

http://inspired-treasures.blogspot.co.uk/2011_05_01_archive.html

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி விவசாய பூமியான தமிழ்நாட்டை தமிழரை கறுவறுக்க கருவேலமரம் விதைகளை விமானமூலம் தூவியுள்ளார்கள் இதன் கேடுகள் பின்வருமாறு.

 

 

கருவேலமரம் ஒழிப்பு
 
 
1380531_622970767753256_905016834_n.jpg
மரங்களை வெட்டுங்கள்! உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியி அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பது அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம். இதன் கொடூரமான குணங்கள் இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...! இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும். தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந் வேண்டி இருக்கிறது. உடம்பு முழுதும் விஷம் இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தா அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலே யே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அ பிறக்கும்....?!! ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது. அறியாமை நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான். கேரளாவின் விழிப்புணர்வு மது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..?? ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக் என்று கண்டு பிடித்து உள்ளனர். நல்ல மரம் ஆரோக்கியம் வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறத நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் . சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டு என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா? இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவச இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அத அவசியம்.... இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்... ..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! - கருவேலமரம் ஒழிப்பு இயக்கம

 

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீணீய பிரச்சினை பாரதூரமான விடயம் இரணைமடு குளத்தை விட.

யாரோ ஒரு மன்னன் எலிகளை ஒழிப்பதற்காக, பிடித்து வருகின்ற எலிகளுக்கு பணம் தரப்படும் என்று அறிவிக்க, மக்கள் தொடர்ந்து எலிகளாக பிடித்து தந்தபடியே இருந்தார்களாம். எலி மட்டும் ஒழிந்த பாடாகத் தெரியவில்லையாம். கடைசியில் விசாரித்துப் பார்த்தால், பணத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் எலிப் பண்ணைகளையே உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தது தெரியவந்ததாம்.

இப்படி ஒரு கதை முன்பு வாசித்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

Control

In Australia, the authorities are imposing measures on the movements of equipment and livestock to avoid any further spread into new areas. Good pasture management practices are also recommended. Several herbicides are considered to be effective against P. hysterophorus (e.g. 2,4-D, atrazine, hexazinone, metsulfuron, glyphosate and dicamba). Treatments have to be applied when plants are small and have not produced seeds, and when grasses are actively growing to recolonize the infested area. Ploughing the weed before plants reach flowering stage and then establishing pasture may be effective. In addition, Australian scientists are exploring possible biological control measures and several biological control agents are being studied. For example, the release of a moth, Epiblema strenuana (Lepidoptera: Tortricidae), is considered, as well as the use of a rust, Puccinia abrupta var. partheniicola that affects the weed in Mexico.

Source

Department of Primary Industries (Undated) Invasiveness Assessment - Parthenium Weed (Parthenium hysterophorus) in Victoria. Victoria resources on line. http://www.dpi.vic.gov.au/dpi/vro/vrosite.nsf/pages/invasive_parthenium_weed

Global Invasive Species Database (2010) Parthenium hysterophorushttp://www.issg.org/database/species/ecology.asp?fr=1&si=153&sts 

Khan H, Hassan G & Khan A (2011) Prevalence and distribution of Parthenium (Parthenium hysterophorus L.) weed in Peshawar Valley, Khyber Pakhtunkhwa-Pakistan. In: Bohren C, Bertossa M, Schönenberger N, Rossinelli M, Conedera M. (ed) 3rd International Symposium of Environmental Weeds and Invasive Plants. Abstracts. October 2 to 7 2011. Monte Verità, Ascona, Switzerland. 

Available from Internet: http://www.wsl.ch/epub/ewrs/sessions/detail_EN?id=292 

Macconnachie AJ, Strathie LW, Mersie W, Gebrehiwot L, Zewdie K, Abdurehim A, Abrha B, Araya T, Asaregew F, Assefa F, Gebre-Tsadik R, Nigatu L, Tadesse B, Tana T (2010) Current and potential geographical distribution of the invasive plant Parthenium hysterophorus(Asteraceae) in eastern and southern Africa. Weed research 51, 71-84. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-3180.2010.00820.x/pdf 

Natural heritage Trust (2003) Parthenium weed (Parthenium hysterophorus). Weed management guide. Weeds of national significance. 6 p.http://www.weeds.org.au/docs/parthenium_weed_mgt_guide.pdf 

Pacific Island Ecosystems at Risk (Undated) Parthenium hysterophorus.http://www.hear.org/pier/species/parthenium_hysterophorus.htm

1. செடிகளை பூ பூப்பதற்கு முன்பு கையுறை அணிந்து கொண்டு வேரோடு பிடுங்கி எரித்து விட வேண்டும். இதனால் இவை விதைகள் மூலம் பரவுவதை தடுக்கலாம்.

2. பார்த்தீனியம் செடி அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர்களான அடர் ஆவாரை, ஆவாரை, துத்தி, நாய்வேளை ஆகிய செடிகளை வளரச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

3. செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம்.

4. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது அட்ரசின் களைக் கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் 625 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நிலத்தில் சீராக தெளிக்க வேண்டும்.

5. சாலையோரங்கள் மற்றும் ரயில்பாதை ஓரங்களில் உள்ள களைகளை அகற்ற 1 லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு மற்றும் 2 மில்லி டீபால் ஒட்டு திரவத்தினை கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

6. சைக்கோ கிரம்மா பைக்கலரெட்டா என்ற வகை வண்டுகளை வளர்த்து அதை பார்த்தீனிய செடி வளரும் இடங்களில் விட்டு கட்டுப்படுத்தலாம்.

தகவல்:ப.ராமநாதன்,வேளாண் துணை இயக்குநர், நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்.

 

இதில் குறிப்பிடும் 5 முறை சில விவசாய நாடுகளில் தடை செய்யபட்டுள்ளது நம்ம இடத்திற்க்கு மண் காரத்தண்மையாகும் அவ்வளவே.

 

 

strenu5.jpgEpiblema strenuana

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கருவேல மர விதைகளை காமராஜர் ஆட்சிக்காலத்தில் தூவினார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். அதன் முள்ளு பட்டால் சுணைக்கும் தன்மை கொண்டது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பவும் காங்கிரஸ்தான் தமிழனை கூண்டோடு அழிப்பதற்க்கு இவ்விதைகளை தூவினார்களா? :D  :D

 

இப்படியும் ஒரு கதை உண்டு பின்வருமாறு

 

பப்ளிகேசன் டிவிசன் 1960 களில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஒன்று Food weapon,(உணவு ஆயுதம்), இரண்டு weather weapon(தட்ப வெப்ப ஆயுதம்). இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தவர் வைகை குமாரசாமி, நாம் நோயுற்று இருப்பதை முதலில் உணர்ந்த தலைமுறையைச் சார்ந்தவர் அவர். புத்தகத்தின் கருத்துகள் எளிமையானவைதான், எல்லா அபாயங்களையும் போல, ஒரு நாட்டை அடிமையாக்குவற்கான எதிர்காலத் தொழில்நுட்பத்தை வலுவாக அப்புத்தகங்கள் முன்வைத்தன. ஒரு நாட்டின் உணவு முறைகளையும், தட்பவெப்பத்தினையும் மாற்றி அமைப்பதன் மூலம் அந்நாட்டை அடிமையாக்க முடியும் என்பதுதான். இதற்கான திட்டங்களின் முதல் படிதான் பசுமைப்புரட்சி.   1960 களில் இச்சதித்திட்டம் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா தன்னுடைய போரை இந்தியாவின் மீது தொடங்கியது. போரை மிகவும் வெற்றிகரமாக நடத்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, சென்னையில் இருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லாமல் விவசாய விஞ்ஞானிக்கான விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை போரும் தொடர்கிறது. விருதுகளும் தொடர்கின்றன. எம்.எஸ். சுவாமிநாதனைத் தவிர இப்போரில் இந்தியாவின் மிக முக்கிய பார்ப்பனர்கள் ஈடுபட்டனர், அல்லது இந்த இந்த பார்பனர்தான் வேண்டும் என்று அமெரிக்கா அடம்பிடித்து சிவராமன் போன்ற பார்ப்பனர்களை நியமித்தனர். இந்த சிவராமன்தான் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அழித்து, நம் நிலக்காட்சிகளின் அழகையும், 500 வருட தமிழ்க்காட்சிப் படிமங்களையும் மாற்றியவர். கருவேல மரத்தை வலுக்கட்டாயமாக திணித்தவர், நம்முடைய காமராஜர் அல்ல. காமராஜர் ஆட்சிக்காலத்தில் சிவராமனால் திணிக்கப்பட்டது. இவ்வாறு தமிழனின் உடலையும், மனதையும் நிலைகுலையச் செய்யும் போர் இன்று வரை உக்கிரமாகத் தொடர்கிறது. போரின் விளைவுகள் தெரிந்ததே, மரணங்களும், துயரங்களும் . ஈழஇனப்படுகொலைக்குப் பின்னர் ‘ஒவ்வொறு அழிவுக்குப் பின்னரும் நெறைய வாய்ப்புகள் உள்ளன’ அன்று கூவிய எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இம்மரணங்களும், துயரங்களும் நடக்கும் என்று தெரிந்தேதான் பசுமைப்புரட்சியை அரங்கேற்றினார். இரண்டு லட்சங்களுக்கு மேலான விவசாயின் தற்கொலைகளுக்குப் பின்னும் அமெரிக்க பயணம் இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

 

மேலதிக விபரங்களுக்குhttp://www.poovulagu.net/2014/02/blog-post.html

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பவும் காங்கிரஸ்தான் தமிழனை கூண்டோடு அழிப்பதற்க்கு இவ்விதைகளை தூவினார்களா?

 

வரட்சிப் பகுதிகளில் வளரக்கூடிய மரம் என்பதாலும், ஏழைகளுக்கு விறகாகப் பயன்படும் என்கிற காரணத்தினாலும் தூவப்பட்டதாக அறிந்தேன். காமராஜர் வில்லங்கமா செய்திருக்க மாட்டார்.. :D அப்போது இருந்த தரவுகளைக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என கருதலாம்.  :huh:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய உலவி yendex பதிலலித்து முடியமுன்னமே உங்கள் பதில் வந்திட்டுது இசை இதே விளையாட்டு சில வெட்டு நேரங்களிலும் நடக்குது  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய உலவி yendex பதிலலித்து முடியமுன்னமே உங்கள் பதில் வந்திட்டுது இசை இதே விளையாட்டு சில வெட்டு நேரங்களிலும் நடக்குது  :D  :D  :D

நானே சிவனே எண்டு இருக்கிற‌ன்.. :blink: ஏனப்பா இந்தமாதிரி.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானே சிவனே எண்டு இருக்கிற‌ன்.. :blink: ஏனப்பா இந்தமாதிரி.. :lol:

குருஜி மன்னிப்பு தாங்கள் கூறிய வண்ணம் காமராஜர் அல்ல  சிவராமன் எனும் பார்ப்பன் தான் நான்  அறியாமல் பிழை செய்துவிட்டால் மன்னியுங்கள். :icon_idea:

  • தொடங்கியவர்

பார்த்தீனியக் கொள்வனவு ஆரம்பம்.

 

IMG_9811.JPG

-செல்வநாயகம் கபிலன்  

வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற பார்த்தீனியக் கொள்வனவு நடவடிக்கைகள் புதன்கிழமை (11) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கிலோ பார்த்தீனியம் 10 ரூபா என்ற ரீதியில், யாழ்.மாவட்டத்தில் பார்த்தீனியம் அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த கொள்வனவுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கொள்வனவு நடவடிக்கையில் புத்தூர், சிறுப்பிட்டி மேற்கு, அச்செழு, அச்சுவேலி மேற்கு வசாவிளான், ஏழாலை, வட்டுக்கோட்டை, கைதடி கிழக்கு, கோண்டாவில், மாதகல், உடுப்பிட்டி, வல்லை நாச்சந்தி ஆகிய இடங்களில் இருக்கும் பார்த்தீனியங்களை பிடிங்கி உரப்பைகளில் இட்டு அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கொள்வனவு நிலையங்களில் பொதுமக்கள் ஒப்படைத்து வருகின்றனர்.

அத்துடன், பார்த்தீனியம் செடிகள் கொண்டு வரப்படும் உரப்பைகளுக்குப் பதிலாக மாற்று உரைப்பைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 
IMG_9806(3).JPG
IMG_9794.JPG

 

tamilmirror

  • தொடங்கியவர்

வவுனியாவை ஆக்கிரமித்துள்ள பாத்தீனியத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு -

 

வவுனியா மாவட்டத்தில் பாரத்தீனியம் களை மிக வேகமாகப் பரவி வருவதனால் விவசாயிகள் உட்பட பிரதேச மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர், வயல்நிலங்கள், பாதையோரங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வியாபித்துப் பரவி வரும் இக்களையானது பயிர்செய்கை மற்றும் கால்நடைகளைப் பாதிப்பதாக விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.  இந்திய இராணுவம் வடக்கை ஆக்கிரமித்திருந்த காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகளின் மூலமாக இக்களை இப்பிரதேசத்திற்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கும் விவசாயிகள் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான செயன்முறை இன்மையே காரணமெனவும் தெரிவிக்கின்றனர். ஒரு பாரத்தீனியம் களையில் இருந்து பத்தாயிரம் வரையான புதிய களைகள் தோன்றுவதாகத் தெரிவிக்கும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மக்களிடம் முறையான விழிப்புணர்வின்மையே இக்களையைக் கட்டுப்படுத்த முடியாமைக்குக் காரணமெனவும் தெரிவிக்கின்றனர். பயிர் நிலங்களில் இக்களை வளர்வதனால் ஏனைய பயிர்கள் வளர்ச்சி குன்றிக் காணப்படுவதுடன் உற்பத்தியும் குறைவடைந்து செல்கின்றது. எனவே இக்களையைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான செயற்பாடுகளை விவசாயத் திணைக்களம் முன்னெடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்

 

www.thinakkural.lk/article.php?local/hjswiepplp913221186d7b1421929qhcr182412ab14f0332b8aee119hqsqh#sthash.UqvCyguR.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.