Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இனவாதிகளாக இருந்து இருந்தால் சிங்கள மக்களை மிக இலகுவாக கொன்று குவித்து இருப்பார்கள். அப்படி நடக்கவில்லையே. அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் புலிகளால் செய்யப்படவில்லையே. புலிகள் சிங்கள இனவாத அரசும் அதன் இராணுவமுமே தமது எதிரி என செயற்பட்டார்கள்.

அனுராதபுரம் மட்டுமா? அரந்த்ஹலாவ, 90இல் கிழக்கில் சரணடைந்த 600 பொலிஸார். காத்தான் குடி பள்ளிவாசல், கந்தன் கருணை, பின்பு எல்லை கிராமங்களில் நடந்த பஸ் கிளைமோர் தாக்குதல்கள், திட்டமிட்டு எந்த இராணுவ முக்கியத்துவமும் இல்லாத மத வழிபாட்டு தலமாகிய தலதா மாலிகாவ வை குறிவைத்தமை எப்படி இனவாததுக்கு பதிலாக இனவாதத்தை தூக்கிய நாம் எந்த வகையில் தென்னிலங்கை இனவாதிகளிடம் இருந்து வேறு பட்டவர்கள்?

அரசு மக்கள் மீது குண்டு வீசுகிறது என்று ஆண்டுக்கணக்கில் பேசிய நீங்கள் விமானம் வாங்கியதும் முதல் வேலையாக ஏதாவது இராணுவ நிலையை தாக்கினீர்களா? இல்லையே நேரே மக்கள் வாழும் கொழும்புக்குதானே விட்டீர்கள் வண்டியை?

புலிகள் போட்ட விமானக் குண்டுகளில் 2000 சிங்கள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை மறந்துவிட்டீர்களே..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போட்ட விமானக் குண்டுகளில் 2000 சிங்கள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை மறந்துவிட்டீர்களே..

அந்தளவுக்கு வலுவான விமானம் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பீர்கள். கொசு மருந்தடிக்கும் விமானம் என்பதால் அப்பாவி மக்கள் தப்பித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு வலுவான விமானம் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பீர்கள். கொசு மருந்தடிக்கும் விமானம் என்பதால் அப்பாவி மக்கள் தப்பித்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சிறு விமானம் எப்படி ஒரு பெரிய விவாதப் பொருளாக உங்களால் உள்ளே கொண்டுவரப்படுகிறது..?  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையின் குணம் அறிந்து தான் கொம்பு தரப்படவில்லை.

கொம்பில்லாமலே இந்த இனவாத ஆட்டம் ஆடிய உங்களுக்கு கொம்பும் இருந்த்ஹிருந்தால். என்பதை சுட்டவே அவ் உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையின் குணம் அறிந்து தான் கொம்பு தரப்படவில்லை.

கொம்பில்லாமலே இந்த இனவாத ஆட்டம் ஆடிய உங்களுக்கு கொம்பும் இருந்த்ஹிருந்தால். என்பதை சுட்டவே அவ் உதாரணம்.

ஊகங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. சான்றுகளுடன் மீண்டும் வருக!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இனவாதிகளாக இருந்து இருந்தால் சிங்கள மக்களை மிக இலகுவாக கொன்று குவித்து இருப்பார்கள். அப்படி நடக்கவில்லையே. அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் புலிகளால் செய்யப்படவில்லையே. புலிகள் சிங்கள இனவாத அரசும் அதன் இராணுவமுமே தமது எதிரி என செயற்பட்டார்கள். 

நுணா,

உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட என்னால் முடியவில்லை. அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்னர் சிங்களவர் மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை என்கிறீர்களா??

கெப்பிட்டிக்கொல்லாவை, புணானை, பதவியா, அரந்தலாவை, பொலொன்னறுவை, கொழும்பு மத்தியவங்கி, தெகிவளைப் புகையிரத நிலையம், இறுதியாக மொரட்டுவைப் பலகலைக் கழக வீதி பஸ் மீதான கிளேமோர். இவை பெரிய அளவில் சிங்களவர்களைப் பலிகொண்ட தாக்குதல்கள். ஆனால் இதனை விடவும் அவ்வப்போது அரச, ராணுவ பொருளாதார இலக்குகள் என்று சொல்லித் தாக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களும் சேர்ந்தே பலியானார்கள். இவை எல்லாம் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே.

இவை ஒன்றில் சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் நோக்குடனோ அல்லது வடக்குக் கிழக்கில் தமிழர் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்கலாகவோ அல்லது அவ்வாறான தாக்குதல்களைத் தடுக்கும் நோக்குடனோ நடத்தப்பட்டவை. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்களே. 

கொழும்பிலும் தெற்கிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களே உலக அளவில் புலிகளைப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை பெற்றுக்கொடுத்தது. இதை விடவும் ராஜீவ், பிரேமதாசா, காமினி, சந்திரிக்கா, குணரத்ன, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே  போன்ற அரசியல் வாதிகள் மீதான படுகொலைகள் இன்னும் புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பதை உலக அளவில் பறை சாற்றியது.

இவற்றின் பலாபலன்கள் தான் நாம் 2009 இல் அனுபவித்தது. அநேகமான சர்வதேச நாடுகள் (ஐ. நா உற்பட) புலிகளை எப்பாடுபட்டாவது அழியுங்கள், பின்னர் தமிழர் பிரச்சினை பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினார்கள். இதனால்த்தான் சிங்களமும் தங்கு தடையின்றி இனவழிப்பொன்றை நடாத்தி முடித்தது.

புலிகள் இருக்கும்வரை அவர்கள் செய்த எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டே ஆதரித்தோம். தவறுகள் என்று தெரிந்தும், தொடர்ந்து நியாயம் கற்பித்தோம். ஆகவே புலிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தே அழிந்த மக்களுக்கும் நாமே பொறுப்புக் கூறவேண்டியவர்கள். 

இன்னொரு போராட்டம், அது எந்த வடிவத்தில் வரினும், முன்னர் விட்ட தவறுகள் அகற்றப்பட வேண்டும். அதற்கு சுய விமர்சனம் வேண்டும், மெற்கொண்டு முன்னேறுவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை. 

மற்றய இயக்கங்களில் இருந்த அப்பாவி பெடியளை எல்லாம் கொலை செய்து டயர் போட்டு எரித்தபோது, நீதி விசாரணை நடத்தினீர்களா?

நீதிபதி இராமச்சந்திரன், அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம, சாம் தம்பி முத்து, அமிர், யோகேஸ்வரன் இன்னும் பலரை போகிற போக்கில் போட்டபோது நீதி விசாரணை நடத்தினீர்களா?

நெதர்லாந்து ஒரு மிகைஜனநாயக நாடு. அங்கு சட்டம் ஒழுங்கு மிகவும் நல்லம். அந்த நாட்டுக்கோட்டே பயங்கரவாதிகளுக்கு கப்பம் சேர்த்தவர் என்று குற்றவாளியாக காட்டிய ஒருவரை, நான் குற்றவாளி என்று சொலாமல் காந்தி என்ர சொல்ல முடியும்.

சூரி மொழிபெயர்ப்பு பிழை என்று தவறாக எண்ணிக் கொண்டார். அவருக்கு சட்டம் தெரியாததால் வந்த மயக்கம் அது.

ஜோ நெதர்லாந்தில் நான் வாழ்கிறேன் ,நான் நெதர்லாந்து பிரஜா உரிமை உள்ள ஈழத்தமிழன் ................[கஷ்டமாய் இருக்கும் இதுதான் யதார்த்தம் ./]  ...........எனக்கு இந்த நாட்டு  அரசையும் விமர்சித்து இசை அமைத்து பாட உரிமை இருக்கு ...............அதுதான் நெதர்லாந்து மனித நேய சட்டம் ......................உங்களைப்போன்ற தமிழனாய் பிறந்து  நயவஞ்சக குலைக்கும் கொண்ட தமிழர்களை அறவே உள் வாங்காத சட்ட பிணைப்புகளை கொண்ட ஓர் நாடு .........
 
இங்கேயும் கருத்து முரண்பாடு சுதந்திரம் .அனைத்தும் உள்ளது ...............உதாரணமாக நெதர்லாந்து இனத்தவரே செயல்பட்ட தமிழன் பிழை இல்லை என்று வாதாடும்போது .ஈனத்தமிழனாய் பிறந்துவிட்ட உங்களைபோல குலைத்து திரியும் தமிழனே அது பிழை களி தின்ன வேண்டும் என்று நிற்கும்போது .நெதர்லாந்து ஊடகங்கள் ,நீதி மன்றங்கள் என்ன செய்யலாம் ...................................நாய்க்கூட்டம்போல  உங்களைப்போன்றவர்கள் கண்ட இடத்திலும் அசிங்கம் செய்யும் போது .............பூரண சுதந்திரமுள்ள மனித நேயமுள்ள இந்த நாடு .....தூஊ ...ஒவ்வொரு தமிழனும் காரி துப்பனும் ........................நான் உங்கள் மேல் காறி துப்புகிறேன் ....................என்மேல் நிர்வாகம் காறி துப்பட்டும் ...........இது என் வரலாற்று கடமை .......ஏனனில் முட்டாளை புத்திமான் என்று சொல்லும் விலை போபவன் நானில்லை ......................ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் திருப்பி அடிக்கும் கிறிஸ்தவ தமிழன் . :D

Edited by தமிழ்சூரியன்

பயங்கரவாதிகளுக்கு எதுவித உதவிகள் செய்வதும் பயங்கரவாதமே.....இவர் ஒருத்தர் உலகின் ஒரு உன்னதமான நாடில் இருந்து கொண்டு ஊரில் இருப்பவனை சிங்களவனிடம் அடிவாங்கி சாக சொல்லுவார்..பின் அதற்கும் கண்ணீர் வடிப்பார்...ஆனால் அவர் போய் சிங்களவனோடு சண்டை பிடித்து சாகமாட்டார்....இவர் தான் உயர்ந்த உன்னத அதற்கு மேற்பட்ட தமிழர்...தலை வணங்குகின்றோம்... :)

பயங்கரவாதிகளுக்கு எதுவித உதவிகள் செய்வதும் பயங்கரவாதமே.....இவர் ஒருத்தர் உலகின் ஒரு உன்னதமான நாடில் இருந்து கொண்டு ஊரில் இருப்பவனை சிங்களவனிடம் அடிவாங்கி சாக சொல்லுவார்..பின் அதற்கும் கண்ணீர் வடிப்பார்...ஆனால் அவர் போய் சிங்களவனோடு சண்டை பிடித்து சாகமாட்டார்....இவர் தான் உயர்ந்த உன்னத அதற்கு மேற்பட்ட தமிழர்...தலை வணங்குகின்றோம்... :)இதில் 

இதில் கோவிக்க பெரிதாக ஒன்றும் இல்லை .அவர் தம் அறிவிற்கு ஏற்ற படிதான் வேலை செய்யமுடியும் .நாட்டுக்காக என்று தூள் கடத்தியவர்கள் இருக்கின்றார்கள் ,தற்கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை பாவித்த தலைமையின் பிழை அன்றி வேறு எதுவுமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட என்னால் முடியவில்லை. அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்னர் சிங்களவர் மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை என்கிறீர்களா??

கெப்பிட்டிக்கொல்லாவை, புணானை, பதவியா, அரந்தலாவை, பொலொன்னறுவை, கொழும்பு மத்தியவங்கி, தெகிவளைப் புகையிரத நிலையம், இறுதியாக மொரட்டுவைப் பலகலைக் கழக வீதி பஸ் மீதான கிளேமோர். இவை பெரிய அளவில் சிங்களவர்களைப் பலிகொண்ட தாக்குதல்கள். ஆனால் இதனை விடவும் அவ்வப்போது அரச, ராணுவ பொருளாதார இலக்குகள் என்று சொல்லித் தாக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களும் சேர்ந்தே பலியானார்கள். இவை எல்லாம் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே.

இவை ஒன்றில் சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் நோக்குடனோ அல்லது வடக்குக் கிழக்கில் தமிழர் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்கலாகவோ அல்லது அவ்வாறான தாக்குதல்களைத் தடுக்கும் நோக்குடனோ நடத்தப்பட்டவை. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்களே. 

கொழும்பிலும் தெற்கிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களே உலக அளவில் புலிகளைப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை பெற்றுக்கொடுத்தது. இதை விடவும் ராஜீவ், பிரேமதாசா, காமினி, சந்திரிக்கா, குணரத்ன, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே  போன்ற அரசியல் வாதிகள் மீதான படுகொலைகள் இன்னும் புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பதை உலக அளவில் பறை சாற்றியது.

இவற்றின் பலாபலன்கள் தான் நாம் 2009 இல் அனுபவித்தது. அநேகமான சர்வதேச நாடுகள் (ஐ. நா உற்பட) புலிகளை எப்பாடுபட்டாவது அழியுங்கள், பின்னர் தமிழர் பிரச்சினை பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினார்கள். இதனால்த்தான் சிங்களமும் தங்கு தடையின்றி இனவழிப்பொன்றை நடாத்தி முடித்தது.

புலிகள் இருக்கும்வரை அவர்கள் செய்த எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டே ஆதரித்தோம். தவறுகள் என்று தெரிந்தும், தொடர்ந்து நியாயம் கற்பித்தோம். ஆகவே புலிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தே அழிந்த மக்களுக்கும் நாமே பொறுப்புக் கூறவேண்டியவர்கள். 

இன்னொரு போராட்டம், அது எந்த வடிவத்தில் வரினும், முன்னர் விட்ட தவறுகள் அகற்றப்பட வேண்டும். அதற்கு சுய விமர்சனம் வேண்டும், மெற்கொண்டு முன்னேறுவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை. 

அநுராதபுர தாக்குதல் அப்பாவி சிங்கள மக்களை கிராமங்களை சுற்றி வளைத்து கத்திகள்,  வாள்களால் வெட்டிக்கொன்றது. மேற்படி தாக்குதல்கள் பெரும்பாலும்  சிங்கள இனவாதிகளின் தாக்குதலின் போது அல்லது இராணுவ தாக்குதலின் இடையில் அகப்பட்ட மக்கள் பெரும்பாலானவர்கள். 
 
புலிகள் சிங்கள மக்களை கொன்றதால் புலிகள் பயங்கரவாதிகள்.. அப்[போ சிங்கள  அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மக்கள் இல்லையோ. இவர்களை கொன்ற சிங்கள அரசு எப்படி பயங்கரவாதிகள் இல்லாமல் போனார்கள்?? 
 
ரவிராஜ், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம், தராக்கி ஆகியோரை கொன்ற அரசு   ஏன் உலகத்தால் பயங்கரவாதி என சொல்லவில்லை??
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் என்றா சரி. நீங்கள்தான் அவர்களை விடுதலை அமைப்பு, நிழல் அரசாங்கம் என்றெல்லாம் சீன் காட்டினீர்கள்.

வரிக்கு பதில் கப்பம் பெறும் ஒரு மாபியா கும்பல்தான் அவர்கள் என்று நீங்கள் சொன்னால். அவர்கள் மேலுள்ள விமர்சனத்தை நாமும் கைவிடுகிறோம்.

டீலா நோ டீலா?

அதென்ன லண்டனில்  அரசு வரி வசூலித்தால் வரி. தமிழீழ நிழல் அரசு வரி விதித்தால்  கப்பம், மாவியா கும்பல். ஒட்டுக்குழுக்களில் இருந்து வந்தவர்களுக்கு வேறு எதை சொல்லிக்கொடுக்க போகிறார்கள்.வேறு ஏதாவது தெரிய வேண்டுமே சொல்லிக்கொடுப்பவர்களுக்கு?

இதில் கோவிக்க பெரிதாக ஒன்றும் இல்லை .அவர் தம் அறிவிற்கு ஏற்ற படிதான் வேலை செய்யமுடியும் .நாட்டுக்காக என்று தூள் கடத்தியவர்கள் இருக்கின்றார்கள் ,தற்கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை பாவித்த தலைமையின் பிழை அன்றி வேறு எதுவுமில்லை .

எல்லாம் தெரிந்தவர் கேள்வி கேட்டால் வாலைக்கிழப்புவது. :lol: இப்படி யாராவது புலிகளுக்கு எதிராக எழுதினால் பின்னால் வந்து ஜால்ரா போடுவது.

பயங்கரவாதிகளுக்கு எதுவித உதவிகள் செய்வதும் பயங்கரவாதமே.....இவர் ஒருத்தர் உலகின் ஒரு உன்னதமான நாடில் இருந்து கொண்டு ஊரில் இருப்பவனை சிங்களவனிடம் அடிவாங்கி சாக சொல்லுவார்..பின் அதற்கும் கண்ணீர் வடிப்பார்...ஆனால் அவர் போய் சிங்களவனோடு சண்டை பிடித்து சாகமாட்டார்....இவர் தான் உயர்ந்த உன்னத அதற்கு மேற்பட்ட தமிழர்...தலை வணங்குகின்றோம்... :)

பயங்கரவாதிகள் என்பதற்கு வரவில்லக்கணம் என்ன?? சிங்கள மக்களை கொன்ற புலிகள் பயங்கரவாதிகள் என்றால் 60 வருடத்துக்கு மேல் சிங்கள அரசினால் கொன்ற சிங்கள அரசு ஏன் பயங்கரவாதி இல்லை? ஒன்றில் தமிழ் மக்கள் மக்களல்ல அல்லது உலகம் ஒரு மொக்கு கூட்டம் (அர்ஜுனின் பாசையில்) :)

  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுர தாக்குதல் அப்பாவி சிங்கள மக்களை கிராமங்களை சுற்றி வளைத்து கத்திகள்,  வாள்களால் வெட்டிக்கொன்றது. மேற்படி தாக்குதல்கள் பெரும்பாலும்  சிங்கள இனவாதிகளின் தாக்குதலின் போது அல்லது இராணுவ தாக்குதலின் இடையில் அகப்பட்ட மக்கள் பெரும்பாலானவர்கள். 
 
புலிகள் சிங்கள மக்களை கொன்றதால் புலிகள் பயங்கரவாதிகள்.. அப்[போ சிங்கள  அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மக்கள் இல்லையோ. இவர்களை கொன்ற சிங்கள அரசு எப்படி பயங்கரவாதிகள் இல்லாமல் போனார்கள்?? 
 
ரவிராஜ், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம், தராக்கி ஆகியோரை கொன்ற அரசு   ஏன் உலகத்தால் பயங்கரவாதி என சொல்லவில்லை??

சிங்களவர்களைப் பயங்கரவாதிகள் இல்லையென்று யாரும் சொல்லவில்லையே. இன்றும்கூட சர்வதேச விசாரணை வரக் காரணம் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படியினால்த்தானே. 

அரசு என்ற அங்கீகாரமே பல அரசுகளை அந்நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைக்கு வழிசமைத்துக் கொடுத்துவிடுகிறது. அதே வழியை வைத்துத்தான் சிங்களவனும் இனவழிப்புச் செய்தான். 

இங்கே நாம் உண்மையென்றும் நீதியென்றும் நம்புவதற்கும், உலகத்தால் உண்மையென்று கருதப்படுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது.

சிங்களவன் பயங்கரவாதியா இல்லையா என்கிற கேள்விக்கு அப்பால், நாம் செய்தவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியமானது. 

இதில் சிங்களவர்களைக் கொன்ற நாங்கள் பயங்கரவாதிகள் என்றால், தமிழரைக் கொன்ற சிங்களவர்களும் பயங்கரவாதிகள்தான் என்று சொல்வதன்மூலம், நாம் பயங்கரவாதிகள்தான் என்று ஏற்றுக்கொள்கிறோமா?

சிங்களவன் செய்தது சரியா அல்லது நாம் செய்தது சரியா என்கிற கேள்வி வரும்போது, இருவருமே பயங்கரவாதிகள்தான். ஆனால் என்ன செய்த அளவுகளில்த்தான் வேறுபாடு இருக்கிறது. சிங்களவன் அரச இயந்திரத்தை வைத்துக்கொண்டு நன்றாகத் திட்டமிட்ட இனஅழிப்பொன்றை நடத்திமுடித்தான். நாமோ எம்மால் முடிந்தளவிற்கு, எமது சக்திக்குற்பட்ட வகையில் சிங்களவர் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை நடத்தி முடித்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
நாமோ எம்மால் முடிந்தளவிற்கு, எமது சக்திக்குற்பட்ட வகையில் சிங்களவர் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை நடத்தி முடித்தோம்.

எம்மால் முடிந்த அளவுக்கு தடுத்தோம்(defend) என்பதே சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட என்னால் முடியவில்லை. அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்னர் சிங்களவர் மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை என்கிறீர்களா??

கெப்பிட்டிக்கொல்லாவை, புணானை, பதவியா, அரந்தலாவை, பொலொன்னறுவை, கொழும்பு மத்தியவங்கி, தெகிவளைப் புகையிரத நிலையம், இறுதியாக மொரட்டுவைப் பலகலைக் கழக வீதி பஸ் மீதான கிளேமோர். இவை பெரிய அளவில் சிங்களவர்களைப் பலிகொண்ட தாக்குதல்கள். ஆனால் இதனை விடவும் அவ்வப்போது அரச, ராணுவ பொருளாதார இலக்குகள் என்று சொல்லித் தாக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களும் சேர்ந்தே பலியானார்கள். இவை எல்லாம் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே.

இவை ஒன்றில் சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் நோக்குடனோ அல்லது வடக்குக் கிழக்கில் தமிழர் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்கலாகவோ அல்லது அவ்வாறான தாக்குதல்களைத் தடுக்கும் நோக்குடனோ நடத்தப்பட்டவை. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்களே. 

கொழும்பிலும் தெற்கிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களே உலக அளவில் புலிகளைப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை பெற்றுக்கொடுத்தது. இதை விடவும் ராஜீவ், பிரேமதாசா, காமினி, சந்திரிக்கா, குணரத்ன, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே  போன்ற அரசியல் வாதிகள் மீதான படுகொலைகள் இன்னும் புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பதை உலக அளவில் பறை சாற்றியது.

இவற்றின் பலாபலன்கள் தான் நாம் 2009 இல் அனுபவித்தது. அநேகமான சர்வதேச நாடுகள் (ஐ. நா உற்பட) புலிகளை எப்பாடுபட்டாவது அழியுங்கள், பின்னர் தமிழர் பிரச்சினை பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினார்கள். இதனால்த்தான் சிங்களமும் தங்கு தடையின்றி இனவழிப்பொன்றை நடாத்தி முடித்தது.

புலிகள் இருக்கும்வரை அவர்கள் செய்த எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டே ஆதரித்தோம். தவறுகள் என்று தெரிந்தும், தொடர்ந்து நியாயம் கற்பித்தோம். ஆகவே புலிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தே அழிந்த மக்களுக்கும் நாமே பொறுப்புக் கூறவேண்டியவர்கள். 

இன்னொரு போராட்டம், அது எந்த வடிவத்தில் வரினும், முன்னர் விட்ட தவறுகள் அகற்றப்பட வேண்டும். அதற்கு சுய விமர்சனம் வேண்டும், மெற்கொண்டு முன்னேறுவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை

ரகு

இப்பத்தான் நித்திரையால் எழும்பி  வாறார்   போலும்...........

கண்ணை  மூடிக்கொண்டு  எவரும் புலிகளை  ஆதரிக்கவில்லை

அந்த நேரத்தில் அது சரியாக  இருந்தது

தேவையாக  இருந்தது

இதுவே  உண்மை

தோற்றதனால் நீங்கள் விலகி புத்திசாலியாக  ஆகிவிடமுடியாது.

இவைகளில் அநேகமானவை

2002 க்கு முன்னர்   செய்யப்பட்டவை

அதன் பின்னர் தான் புலிகளுடன் பலசுற்றும்

சந்திப்புக்களும் நடந்தன

பயங்கரவாதிகள் என்றால் இவை  எதற்கு???

என்னைப்பொறுத்தவரை

2002 இல் எம்மைக்கட்டிப்போட்டுவிட்டு

சிங்களத்தை கொடிய  ஆயுதங்களைக் கொடுத்து

திறந்து விட்டார்கள் என்பது தான் உண்மை

அதற்கு  புலிகளின் தாக்குதல்கள் ஒரு   போதும் காரணமில்லை.

அவை ஒரு சாட்டாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு சிக்கலை  சோடித்திருப்பார்கள்...

சுயவிமர்சனம்

இந்த ஐந்து வருடத்தில் என்னத்தை  கிழித்தீர்கள் என்று சொன்னால்

நாங்களும் வருமோமில்ல........

ஒரு அடி கூட நகரவில்லை

நகர முடியாது  என்பது தான் வரலாறு.............

இன்றும் தானாக நகர்வதற்கு காரணம்

புலிகளின் தியாகவேள்விகளே.........................

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சூரி பிளீஸ் கூல் டவுண். உங்கள் கண்ணியதை நீங்களே குறைக்காதீர்கள்.

ரகுநாதன்- தெளிவான சிந்தனை உங்களுடயது. இந்த துதிபாடிகளுக்கு விளங்குமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

இப்பத்தான் நித்திரையால் எழும்பி  வாறார்   போலும்...........

கண்ணை  மூடிக்கொண்டு  எவரும் புலிகளை  ஆதரிக்கவில்லை

அந்த நேரத்தில் அது சரியாக  இருந்தது

தேவையாக  இருந்தது

இதுவே  உண்மை

தோற்றதனால் நீங்கள் விலகி புத்திசாலியாக  ஆகிவிடமுடியாது.

இவைகளில் அநேகமானவை

2002 க்கு முன்னர்   செய்யப்பட்டவை

அதன் பின்னர் தான் புலிகளுடன் பலசுற்றும்

சந்திப்புக்களும் நடந்தன

பயங்கரவாதிகள் என்றால் இவை  எதற்கு???

என்னைப்பொறுத்தவரை

2002 இல் எம்மைக்கட்டிப்போட்டுவிட்டு

சிங்களத்தை கொடிய  ஆயுதங்களைக் கொடுத்து

திறந்து விட்டார்கள் என்பது தான் உண்மை

அதற்கு  புலிகளின் தாக்குதல்கள் ஒரு   போதும் காரணமில்லை.

அவை ஒரு சாட்டாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு சிக்கலை  சோடித்திருப்பார்கள்...

சுயவிமர்சனம்

இந்த ஐந்து வருடத்தில் என்னத்தை  கிழித்தீர்கள் என்று சொன்னால்

நாங்களும் வருமோமில்ல........

ஒரு அடி கூட நகரவில்லை

நகர முடியாது  என்பது தான் வரலாறு.............

இன்றும் தானாக நகர்வதற்கு காரணம்

புலிகளின் தியாகவேள்விகளே.........................

விசுகர்,

நான் நித்திரையால் எழும்பி வரவில்லை. சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை புலிகள் செய்தார்கள். நாமும் தேவையானதுதான் என்று ஆதரித்தோம் என்றுதான் சொல்ல வருகிறேன். தேவையாகவும் சரியாகவும் இருந்திருந்தால் ஏன் எமக்குத் தோல்வியேற்பட்டது என்பதை விளக்க முடியுமா உங்களால்? தோற்றதினால் நான் புத்திசாலியாகி விடவில்லை. தோற்றதிற்கான காரணங்களைத் தேடுகிறேன். தனி மனிதனாக நான் என்ன செய்தேன் அல்லது எதை செய்ய மறுத்தேன் என்று தேடுகிறேன். எடுக்கும் தீர்மானமும், அதன்மூலம் நடக்கும் காரியத்தின் முடிவும் சரியா தேவையானதுதானா என்று உறுதிப்படுத்தப்படுவது இறுதி விளைவின் பின்னர்தான். இறுதிவிளைவே தோல்வியாக முடியும் போது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எப்படி தேவையானதும், சரியானதாகவும் இருக்க முடியும்? சிகிச்சை வெற்றி, நோயாளி தப்பமாட்டார் என்பதைப் போலவா ??

அதென்ன 2002? புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று 2002 இற்கு முன்னரே பல நாடுகளில் அறிவித்து தடை செய்துவிட்டார்களே? அப்படியிருக்க அவர்கள் 2002 இற்குப் பின்னர் எதுவுமே செய்யவில்ல என்று சொல்வதன் மூலம் அவர்கள் முன்னர் செய்தவை சரியானவை ஆகிவிடுகின்றனவா? இதைக்கூட நீங்கள் சொல்லியதற்காகத்தான் கேட்கிறேன். 2002 கிளிநொச்சி பத்திரிக்கையாளர் மாநாட்டில் தலைவர் ராஜீவின் கொலை பற்றிக் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் அது ஒரு துன்பியல் நாடகம் என்றுதான் சொன்னரே ஒழிய, சரியானதும், தேவையானதும் என்று சொல்லவில்லை. அதேபோல யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு வரலாற்றுத்தவறு என்றுதான் சொன்னாரே ஒழிய தேவையானதும் சரியானதும் என்று நியாயம் கற்பிக்கவில்லை. ஆனால் நாங்கள் இப்போதுவரையிலும் அதைச் சரியானதும் தேவையானதும் என்று நியாயம் கற்பிக்க எத்தனிக்கிறோம். இதைத்தான் தவறு என்று சொல்கிறேன்.

பயங்கரவாதிகள் என்றால்கூட, பிரச்சினைப் படுபவர்களுடந்தான் சமாதானமும் பேச வேண்டும். ஆகவேதான் புலிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். புலிகளை பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிச் சென்று அவர்களாகவே பேச்சுவார்த்தை மேசையிலிருந்து அகலும்படி பார்த்துக்கொண்டார்கள். இறுதியாக இவர்களுடன் சமாதானம் பேச முடியாது, அடிதான் சரி என்று கூட்டுச் சேர்ந்து அடித்து முடித்தார்கள். நாங்கள் புலிகளின் பலம் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல், அடிக்கலாம், பிடிக்கலாம் என்று நம்பி சண்டைக்கு ஒத்தூதினோம். மூதூர் பிடிபடும்போது எமது நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஆனால் பின்னர் நடந்தவை நீங்களும் நானும் அறிந்தவை. அவைபற்றிப் பேசி இன்னுமொருமுறை அழ என்னால் முடியாது.

நானும் உங்களைப்போலத்தான். தலைவரும் புலிகளும் எனக்கும் கண்கள்தான். அதற்காக கண்ணில் குறையிருக்கிறது என்றால் சிகிச்சை செய்து திருத்துவதில்லையா, அதுபோலத்தான் எனது சுய விமர்சனமும். இது உங்களுக்கு முன்வைக்கப்படும் கேள்வியோ அல்லது விமர்சனமோ அல்ல, என்னை நோக்கி நானே முன்வைக்கும் விமர்சனம். 

தென்னிலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன். வீதியில் கொல்லப்பட்ட சிங்களவர்களது உடல்களைக் கடந்து சென்றிருக்கிறேன். குண்டுவெடிப்பிற்குப் பின்னர் பஸ்வண்டிகளிலும், வான்களிலும் அலறியடித்துக்கொண்டு வீடு செல்லும் தாய், தந்தையர், பிள்ளைகளின் அவல ஓலத்தைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இப்படித்தானே எங்கள் சொந்தங்களை உங்களது ராணுவமும் துடிக்கக் துடிக்கக் கொல்கிறது என்று மனதினுள் சொல்லி பழிதீர்த்துக்கொள்வேன். அதேபோல, தெற்கில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தாயகத்தில் நடக்கும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவோ அல்லது, இனித் தாக்கினால் நாமும் தாக்குவோம் எனும் செய்தியை அறிவிக்கும் நடவடிக்கையாகவோதான் இருக்கிறது என்று இதே தளத்தில் பலமுறை விவாதித்து இருக்கிறேன். சாணக்கியர் என்பவருடன் நீண்ட விவாதமும் செய்திருக்கிறேன். ஆனால் இன்று நடந்தவற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, இவையெல்லாம் எமக்கு கொடுத்த பலாபலன்கள் என்னவென்று பார்த்தால் எதுவுமில்லை. வெறும் அழிவு மட்டும்தான் என்பது புலனாகிறது. 

எவை எவை எல்லாம் செய்தால் எமக்கு விடுதலை கிடைக்கும், எமது மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நான் நம்பியிருந்தேனோ அவை எவையுமே எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரவுமில்லை, எனது மக்களைப் பாதுகாக்கவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் எமது மக்களினதும், ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தினதும் ஒட்டுமொத்த அழிவிற்கு ஒரு காரணமாக அமைந்ததைத் தவிர. 

இறுதியாக எமக்கு நடந்த அநியாயங்களைப் பார்க்கும்போது, அந்தச் சிங்கள மக்களையாவது பேசாமல் விட்டிருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றுகிறது. அவர்களைக் கொன்றதால் மட்டும் எமது மக்களின் அழிவினைத் தடுக்க முடிந்ததா? அல்லது சுதந்திரம் தான் பெற முடிந்ததா?  இவை எதுவுமே நடக்கவில்லை. கிடைத்ததெல்லாம் அழிவு, அழிவு அழிவு மட்டும்தான். 

இப்படி எழுதுவதால் தலைவரினதோ அல்லது புலிகளினதோ தியாகத்தை நான் மலினப் படுத்த முயலவில்லை. தவறுகளை செய்யாது விட்டிருக்கலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

மற்றும்படி நிங்கள் கூறிய எவற்றிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. உங்களைப் போலவே எனது மக்களுக்கு சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று நானும் தினமும் யாசிக்கிறேன். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை. 

முன்னர் ஒருமுறை நிழலி சொன்னதுபோல, இனி எவர் தமிழினத்துக்காகப் போராடினாலும் அவர்களும் புலிகளே. ஏனென்றால் அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கான அடையாளம். ஆனால் தவறுகள் களையப்பட்டு சரியான பாதை தெரியப்பட வேண்டும் என்பதே எனது அவா. 

  • கருத்துக்கள உறவுகள்

எம்மால் முடிந்த அளவுக்கு தடுத்தோம்(defend) என்பதே சரியானது.

மீண்டும் முரண்படுகிறேன்,

இங்கே முடிந்தளவிற்குத் தடுத்தோம் என்று எதைச் சொல்கிறீர்கள் ? மக்களின் அழிவையா? அப்படிப் பார்த்தால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லையே?? 

சரி, அதை விடுங்கள். முள்ளிவாய்க்காலுக்கு முன்னர்கூட, தெற்கில் நாம் நடத்திய தாக்குதல்களளைப் பார்த்து சிங்களவனோ அல்லது அவனது ஆள ஊடுருவும் படையணியோ தாயகத்தில் தனது தாக்குதல்களை நிறுத்தியதா?? இல்லையே. ஷங்கர், தமிழ்ச் செல்வன், கடற்புலிகளின் புலநாய்வுத் தளபதி, மாவீரர் நிகழ்விற்கு சென்ற மாணவரின் பஸ் வண்டி என்று பல தாக்குதல்கள் நடந்தனவே ? இவை எதையுமே எம்மால் தடுக்க முடியவில்லையே??

பின்னர் எதைத்தான் தடுத்தோம் என்று சொல்கிறீர்கள்??

முள்ளீவாய்க்காலை தடுக்க முடிந்திருந்தால், நீங்கள் சொல்லியவை எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.