Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கோல் மு.கா வசம்: கிழக்கு சபையமர்வு ஒத்திவைப்பு

Featured Replies

10485300_10203820572615450_1522142027115
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர கவன ஈர்ப்பு பிரேரணை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படாததை அடுத்து ஏற்பட்ட அமளிதுமளியினால் சபையமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அளுத்கம, பேருவளை, தர்ஹா மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரான நஸீர் அஹமட் உள்ளிட்ட  உறுப்பினர்கள் அவசர கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றைக் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர்.

அந்த அவசரப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அமைச்சர் நஸீர் அஹமட். ஏ.எம். ஜெமீல் அன்வர் றம்ழான் முஹம்மட், ஏ.எல்.எம். நஸீர், மற்றும் ஏ.எல். தவாம் ஆகியோரே செங்கோலை கைப்பற்றிக்கொண்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இந்த உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
10477900_10203820540934658_8560297780513

 

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜோக்கு...முண்டு குடுக்கேக்கை யோசிச்சிருக்கவேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக இராஜதந்திரத்துடன் செயல்படுகிறோம் என்று சிங்களவனை ஏமாற்ற நினைத்தால் கடைசியில் இப்படித்தான் ஆகும். இவர்கள் கிரிபத் உண்டு மகிழ்ந்தது, கட்டிப்பிடித்து கொண்டாடியது எல்லாம் போலிக்கே என்பது சிங்ளவனுக்கு தெரிந்தே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமது மக்களின் அழிவில் அரசியல் சேய்வதில் உள்ள அக்கறையில் கொஞ்சத்தை அந்த மக்களில் காட்டுவதை விட்டு படம் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இப்படி இருப்பார்கள் நாளை சிங்கள அமைச்சர்களுடன் பேரீச்சம்பழ வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்.
எத்தனை அடி வாங்கினாலும் வலிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அவசரப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

ஆகா

சரியான  போட்டி

தொடரட்டும்  தங்கள் கைப்பற்றுதல்கள் (சிங்களவனிடம் மட்டும்)

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்... 

இடம்பெற்ற வன்செயல்களில் 264 முஸ்லீம் குடும்பங்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் 

501 பெண்களும், 
479 ஆண்களும், 
55 தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், 
155 சிறுவர் சிறுமியர்கள் 
16 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 
27 வயோதிபர்களும் அடங்குவார்கள். 
 
உந்த செங்கோல புடுங்குறத விட்டுப் போட்டு உன்ட  உம்மா,வாப்பா, நாணா, (D)தாத்தா, தங்கச்சி, தம்பி, காக்கா , சாச்சா, சாச்சி இவங்கள காப்பாத்துர வழிய பாரு. இனி நான் என்னத்த சொல்ல ஈக்கி "எல்லாம் அல்லாட காவல் தான்"      :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.