Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உயிர் போனாலும் பருவாயில்லை இப்போடியான ஆபத்தான ஆழ் கடல் பயணங்களால் எத்தனை தமிழர்கள் கடலோடு கடலாக தண்டு இருக்கின்றார்கள் அதையும் தாண்டி இப்பிடியான பயணங்களை ஊக்குவிக்கும் இவர்கள் தமிழின தேச விரோதிகள்.....சிங்களவனை விட கேவலமானவர்கள்.......

கதிகள் மேல ரொம்பத்தான் கவலை உமக்கு. அதுதான் திருப்பியனுப்புங்கோ எண்டு கேட்கிறீர் ஆக்கும் ?

  • Replies 247
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் உயிர் போனாலும் பருவாயில்லை இப்போடியான ஆபத்தான ஆழ் கடல் பயணங்களால் எத்தனை தமிழர்கள் கடலோடு கடலாக தண்டு இருக்கின்றார்கள் அதையும் தாண்டி இப்பிடியான பயணங்களை ஊக்குவிக்கும் இவர்கள் தமிழின தேச விரோதிகள்.....சிங்களவனை விட கேவலமானவர்கள்.......

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதுதாம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு தொழில் வாக்காளன் தான் ஆனால் இந்த முறை பல தமிழர்கள் லிபரல் கட்சிக்கே வாக்களித்து இருந்தார்கள் ......

Australia வருடம் ஒன்றுக்கு...2012 ஆம் ஆண்டுக்கான அகதிகளாக 12000 பேரை ஆஸ்திரேலியா எடுத்திருக்கு அந்த நாட்டுக்கு என்று ஒரு கொள்கை இருக்கு விரும்பியோ விரும்பாமலோ அதை நான் ஏற்றோக்கொண்டே ஆகணும் காரணம் நான் இங்கே வாழ வந்தவன் அதுக்குகாக நான் ஆஸ்திரேலியா வெள்ளையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த நாட்டின் ஒரு நல்ல பிரஜையாக இருந்தாலே காணும்....

இது தத்துவம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இலங்கை தமிழ் அல்ல சண்டையில மாட்டுபடல இப்ப கடைசியா  அகதிகள் அனாவசிய உயிரிழப்பு நடத்துங்கோ கடைசியிலும் கடைசி விசுவாசம் அவுஸுக்குதான் தமிழுக்கில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில மிகப்பெரிய காமடி தாங்கள் அகதிகளா வந்ததும் பத்தாமல் ஊருல நிம்மதியா இருக்கிற சனங்களையும் ஆசை வார்த்தை காட்டி கூப்பிடும் இவர்களின் செயல் தான் செம காமடி.....:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில மிகப்பெரிய காமடி தாங்கள் அகதிகளா வந்ததும் பத்தாமல் ஊருல நிம்மதியா இருக்கிற சனங்களையும் ஆசை வார்த்தை காட்டி கூப்பிடும் இவர்களின் செயல் தான் செம காமடி..... :D

விளக்குப்புடிச்சு பாத்தவர் சொல்லுறார் கேளுங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நாட்டிண்ட பிரஜாவுரிமை எடுக்கும் போதே சத்தியபிரமாணம் பண்ணி தான் எடுக்கிறன் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாகவும் நல்ல பிரஜையாகவும் இருப்பேன் என்று பெருமாள்......

தவிர அடைக்கலம் தந்தவர்களுக்கு விசுவாசமா இரு என்று சொல்லித்தந்ததே தமிழ் தான்

விளக்குப்புடிச்சு பாத்தவர் சொல்லுறார் கேளுங்கோ.. :lol:

பாத்தத கேட்டத தான் சொல்லுறம் காரணம் நான் தற்பொழுது வேலை செய்வது அகதிகளுக்கான கோரிக்கைகளை செய்து அனுப்பும் ஒரு சட்ட நிறுவனத்தில்......:D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நாட்டிண்ட பிரஜாவுரிமை எடுக்கும் போதே சத்தியபிரமாணம் பண்ணி தான் எடுக்கிறன் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாகவும் நல்ல பிரஜையாகவும் இருப்பேன் என்று பெருமாள்......

தவிர அடைக்கலம் தந்தவர்களுக்கு விசுவாசமா இரு என்று சொல்லித்தந்ததே தமிழ் தான்

பாத்தத கேட்டத தான் சொல்லுறம் காரணம் நான் தற்பொழுது வேலை செய்வது அகதிகளுக்கான கோரிக்கைகளை செய்து அனுப்பும் ஒரு சட்ட நிறுவனத்தில்...... :D

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. நீர் நல்லா இறுக்கிப்  பிடியும். வேஷம் போட்டாச்சுது, இனி ஆடித்தானே ஆகணும், வேறு வழி ?? :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன இதுக்குள்ள நிண்டு மெனக்கெட்டு கொண்டு நடைய கட்டுறது.....:D

  • கருத்துக்கள உறவுகள்

சரி, ஒண்டும் வேண்டாம். படகெல்லாத்தையும் நிறுத்தச் சொல்லலாம். நீர் உமது அரசாங்கத்திட்டச் சொல்லி ஊரிலிருந்து அகதியெண்டு வர விரும்புகிற ஆட்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்கிறோம் என்றும், அவர்கள் அவுஸ்த்திரேலியாவிற்கு விமானம் ஏறும் வரை அவர்களுக்கு சிங்கள அரசாங்கத்தால் எந்தவித கெடுதலும் நடக்காது எண்டும் உறுதிமொழி எடுத்துக் குடுக்க முடியுமா?? நேரடியாக விமானம் மூலம் வரமுடியாது என்பதால்த்தானே உயிரையும் பணயம் வைத்துக் கடலால வருகுது சனம் ? நீர் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொடுத்தால் சனத்துக்குக் காசும் மிச்சம், கடலில வந்து சாகவும் தேவையில்லை. என்ன நான் சொல்லுறது ?

  • கருத்துக்கள உறவுகள்

More than a thousand asylum seekers have died trying to get to Australia by boat

அதுக்கு நான் அனுமதி எடுத்து தாரன் பிரச்சனை இல்லை பட் எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனுமே.....

அதாவது தற்பொழுதைய நிலைமையில் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு அவர்களால் நிம்மதியான வாழ்க்கைய மேற்கொள்ள முடியாது போன்ற விபரங்களை ஐக்கிய நாடுகள் சபை ஒரு கடிதமாக தரும்பட்சத்தில் அதை நீங்கள் பெற்றுத்தந்தால் அதற்க்கான நடவடிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும் எப்பிடி வசதி?

ஏன், அப்படியில்லை என்கிறீரா?? அப்போ ஏன் நீர் இன்னும் இங்கே இருக்கிறீர்? தேனும் பாலும் ஓடும் இலங்கைக்கே நீர் திரும்பலாம்தானே???

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்க என்கிட்டே ஒரு உதவி கேட்டீங்க பதிலுக்கு அத செய்ய உங்க கிட்ட ஒரு உதவி கேட்டன் உங்களால முடியும் இல்லை முடியாது ரெண்டில ஒரு பதில் நோ வீண் விவாதம்...

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் சொல்கிறேன். இலங்கையில் தமிழருக்குப் பிரச்சினை இருக்கிறதெண்டு நான் நினைக்கிறேன். அப்படித்தான் நீரும் நினைக்கிறீர் எண்டு எதிர்பார்த்தேன். ஆனால் உம்முடிய பதிலைப் பார்த்தால் நீர் இலங்கையில் தமிழருக்குப் பிரச்சினையில்லை என்று சொல்வதுபோல இருக்கிறது. அதனால்த்தானே என்னிடம் ஐ.நா வுக்குக் கடிதம் எழுதும்படி கேட்கிறீர்? பிரச்சினை இருக்கெண்டு நீர் நம்பியிருந்தால் நீரே அந்தக் கடிதத்தை எழுதியிருப்பீர்.

இலங்கையில் தமிழருக்குப் பிரச்சினையில்லை என்று நீர் நம்பினபடியால்த்தான், ஏன் இன்னும் இங்கே இருக்கிறீர் என்று உம்மைக் கேட்டேன். இதில் என்ன வீண் விவாதம் இருக்கிறது ?

நீர் கேட்டதற்காகச் சொல்கிறேன், இலங்கையில் தமிழருக்கும் ஏனைய சிறுபான்மையினத்தினருக்கும் பிரச்சினை இருக்கிறதெண்டு நான் எழுதித்தான் ஐ. நா வுக்குத் தெரியவேண்டும் என்றில்லை. இன்றைக்கு பேசப்படும் விசாரணைக்குழு மற்றும் அண்மையில் நடந்த அளுத்கம தாக்குதல் மீதான அரசின் பின்புலம் பற்றி விசாரிக்கவென்று ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலினால் வேண்டுதல்கள் விடப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே இலங்கையில் சிறுபான்மையினத்தவர் மேல் அடக்குமுறைகள் இருக்கிறதென்று ஐ. நா நம்புவதால்த்தான் நடக்கின்றன. யாழுக்குள்ளேயே எப்போதும் இருக்காமல் கொஞ்சம் வெளியிலையும் எட்டிப் பாரும், இலங்கையில் என்ன நடக்கிறதென்று தெரியும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பாக உங்களை விட எனக்கு கூடுதலனா அறிவு இருக்கென்றே நம்புகின்றேன்......நான் கேட்டது தமிழர்களுக்கு தற்பொழுது இலங்கையில் பாதுகாப்பில்லை அவர்கள் அங்கே வாழவே முடியாது என்று நீங்களும் நானும் நம்புவதை என்னால் ஆஸ்திரேலியா அரசாங்கத்திடம் கொண்டு செல்ல முடியாது ஐக்கியநாடுகள் சபையின் தகுந்த ஆவணம் எனக்கு வேண்டும் சோ எல்லாம் தெரிந்த எல்லாம் அறிந்த நீங்கள் அவர்களிடம் எனக்கு ஒரு கடிதம் பெற்றுதருவீர்களே ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா வரை இலங்கை தமிழர்கள் எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு இலங்கையை முழுக்க முழுக்க சிங்களவர்களின் கையிலையே கொடுத்து விடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, என்னைவிட இலங்கைபற்றி தெரிந்திருப்பது மகிழ்ச்சியே.

இலங்கையில் தமிழருக்கு பிரச்சினை இருக்கிறது என்று நீர் நம்புவதும் நல்ல விடயம். ஆனாலும் நீர் ஆதரிக்கும் டோனி அபோட்டின் அரசு ஐ. நா கூறுகின்றபோதும்கூட இதை நம்ப மறுப்பதன் காரணம் என்னவென்று நீர் நினைக்கிறீர்? இதற்கான விடை உமக்குத் தெரிந்தால் டோனி அபோட் ஏன் படகுகளை வரவேண்டாம் என்று சொல்கிறார் என்பதும் புரியும்.

இலங்கை முழுவதும் சிங்களவர்களின் கைய்யில் போகப் போகிறதென்று உமக்குக் கவலையிருந்தால் நீர் திரும்பிச் செல்லலாம் அல்லவா? நீர் இங்கே இருந்துவிட்டு, மற்றைய தமிழர்களைப் பார்த்து இங்கே வரவேண்டாம், அங்கேயே இருங்கள், இருந்து நாடு முழுவதும் சிங்கள மயமாவதைத் தடுத்து நிறுத்துங்கள்  என்று கேட்பது எப்படி நியாயமாகும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எங்குமே இலங்கை தமிழர்கள் வாழ முடியாத நாடு அல்ல என்று குறிப்பிடவே இல்லையே.....அங்கே தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் அண்மையில் கூட நீங்கள் அங்கே உல்லாச பயணம் போய் வந்தீர்களே....யாழ்ப்பாணத்தில் பஸ் இல் போனதை கூட பெருமையாக எழுதி பஸ் க்குள் இளைஞர்கள் பெண்களுடன் சேட்டை விடுகின்றார்கள் அதை தட்டி கேக்க போனேன் ஆனாலும் பயத்தில் அப்பிடியே இருந்துவிட்டேன் என்று உங்கள் வீர பிரதாபங்களை அள்ளி விட்டீர்களே.....இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனை இருப்பின் எப்பிடி உங்களால் உல்லாச பிரயாணம் போக முடிந்தது? இப்பிடி நான் கேக்கல்ல டோனி அபோட் கேக்கிறார்.......

அதாவது அகதி என்று சொல்லி வருகின்றவர்கள் எல்லாம் அப்பிடி தானம் இலங்கையில் வாழ முடியாது என்பதெல்லாம் சிடிசன் எடுக்கும் மட்டும் தானாம்.....பிறகு உல்லாச பயணம் தான் கேட்டால் ஆமா இருக்கிறா அப்பா இருக்கிறார்.....என்று சாட்டு வேற இதெல்லாம் வெள்ளையளுக்கு தெரியாது என்று நினைப்பு.....

நான் உல்லாசப் பயணம் போய் வந்தேனா ? எப்போது? ஓ...எனது கதையைச் சொல்கிறீர்களா?? அது நான் அவுஸ்த்திரேலியாவுக்கு வரமுதல் 2002 இல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய் வந்தபோது. அதன்பிறகு போக விரும்பவில்லை. நான் அங்கிருந்து வெளியேறியதன் காரணமே பாதுகாப்புத்தான். 

முதலில் நான் என்ன எழுதினேன் என்பதைப் படித்துவிட்டு மேற்கோள் காட்டுங்கள். சும்மா தூக்கினேன் கவிழ்த்தேன் என்று எழுதவேண்டாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141568

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 2002 க்கு பிறகு இலங்கையை விட்டு வெளியேறி விட்டு தான் இலங்கை நிலவரங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்

12 வருடங்கள் வெளிநாடு ஒன்றில் வாழும் உங்களை விட இங்கே Australia அரசுக்கு அங்கே தற்பொழுதுள்ள ground situation நன்றாகவே தெரிந்திருக்கு......அதுக்கு தக்க முடிவுகளை தான் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.....:D

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்கள் முன்பு அமெரிக்காவில் இருந்து ஒருவர் திரி திறந்து "நான் அமெரிக்கனான தமிழன், நான் எதற்காகத் தமிழருக்கு உதவ வேணும்?" எண்டு கேட்டிருந்தார். இப்ப சுண்டல் "நான் சத்தியப் பிரமாணம் எடுத்த அவுஸ்திரேலியன், நான் தமிழர் கஷ்டத்தை விட அவுஸ்திரேலிய சட்டத்தைத் தான் மதிப்பேன்" என்கிறார். இவர்களெல்லாம் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்கள் போன்ற "புதுப் பிரஜைகளாக" இருக்கிறார்கள்! இவர்கள் தாங்கிப் பிடிக்கிற கொடிக்குரிய நாட்டின் வரலாறுகள் தன்னும் இவர்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, 1970 வரை வெள்ளையர்கள் மட்டும் தான் அவுஸ்திரேலியாவுக்கு குடிவரவாளர்களாக வரலாம் என்ற சட்டம் இருந்தது புதுப் பிரஜையான சுண்டலுக்குத் தெரியுமா? இப்பவும் நிறத் தோல் கொண்ட மக்களுக்கு எதிரான துவேஷம் கூடிய நாடுகளில் அவுஸ்திரேலியா முன்னணியில் நிற்பது தெரியுமா? கிழக்கு ஐரோப்பியன், ரஷ்யன், ஐரிஷ் காரன் இவர்களெல்லாம் அவுசுக்குள் வந்தும் இலங்கை, ஆப்கான் அகதிகள் போல அனுப்பப் படாமல் தங்கியிருப்பது ஏன் அவுஸில் இலகுவாக இருக்கிறது எண்டாவது சுண்டல் மாதிரியான புதுப் பிரஜைகளுக்கு விளங்குமா? வெள்ளைக் காரன் என்ன சொன்னாலும் சரியாகத் தான் சொல்லுவான் என்று நினைக்கிற குருவி மண்டைகள் கையில் இருக்கிற ஸ்மார்ட் போனைப் பாவித்தாவது தாங்கள்  மழைக்கு ஒதுங்கியிருக்கும் நாடுகளின் வரலாற்றை கொட்டாவி விட்டுக் கொண்டாவது அறிந்து கொள்ள வேணும் என்பதே என் வேண்டுகோள்! <_<

The MS St. Louis was a German ocean liner most notable for a single voyage in 1939, in which her captain, Gustav Schröder, tried to find homes for 937 German Jewish refugees after they were denied entry to Cuba, the United States and Canada, until finally accepted to various countries of Europe. Historians have estimated that, after their return to Europe, approximately a quarter of the ship's passengers died in concentration camps.

http://en.m.wikipedia.org/wiki/MS_St._Louis

  • கருத்துக்கள உறவுகள்

சரி இனி ஒரு குரூப் கெளம்பிட்டு 1970 கலீல் இருந்து வரலாறுகளை சொல்லி எங்களுக்கு பாடமெடுக்க சும்மா போர் அடிக்காதிங்கப்பா

சும்மா America ல இருந்திட்டு Australia ல நிறவெறி என்று காமடி அறிக்கைகள விடக்கூடாது......எல்லா நாட்டிலையும் தான் நிற வெறி மத வெறி ஜாதி வெறி இருக்கு....இதுக்குள்ள ஆஸ்திரேலியா மட்டும் விதிவிலக்கா என்னா...:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 2002 க்கு பிறகு இலங்கையை விட்டு வெளியேறி விட்டு தான் இலங்கை நிலவரங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்

12 வருடங்கள் வெளிநாடு ஒன்றில் வாழும் உங்களை விட இங்கே Australia அரசுக்கு அங்கே தற்பொழுதுள்ள ground situation நன்றாகவே தெரிந்திருக்கு......அதுக்கு தக்க முடிவுகளை தான் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..... :D

நல்ல அறிவார்த்தமான கருத்து ! பச்சை முடிந்துவிட்டது என்னிடம். <_<

  • கருத்துக்கள உறவுகள்

No problem நாளைக்கு வந்து மறக்காம பச்சைய குத்துங்கப்பா......இதுகள சேர்த்து தான் நானு Sydney ல ஒரு வீடு வாங்கணும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.