Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க பா.ஜ.க எதிர்ப்பு

Featured Replies

06-perarivalan-murugan-santhan.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்றே தானும் எதிர்ப்பு தெரிவிக்க பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால் அவர்களின் கருணை மனு மீது தாமதாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அறிவித்தார். 

மேலும் இது குறித்து மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்தார். 

இதையடுத்து அவர்களை விடுவிப்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெப்ரவரி 20ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுவிக்கவே கூடாது என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இதையடுத்து ஏப்ரல் 25ஆம் திகதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சிற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. 

அன்றைய தினம் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/117026-2014-07-06-08-58-26.html

  • கருத்துக்கள உறவுகள்

முன்பே சொன்னதுபோல, மோடி, மூடி எல்லோரும் வெறும் முகப்பூச்சுக்கள்தான். அரசை இயக்குபவர்கள் அதிகாரிகள். அவர்கள் ஏற்கனவே எடுத்துவிட்ட முடிவுகள் அவர்களை வழிநடத்தும் (precedence).

அதிகாரிகளை மாற்றி கொள்கைகளை மறுசீரமைக்காவிட்டால் பழைய நிலையே தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை பற்றி தமிழக வாக்காளர்களுக்கு நாம் தமிழர் கட்சி போன்ற உண்மையான உணர்வாளர்கள் உணர்த்தியது இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனமாகி வருகிறது. இதனை தமிழக வாக்காளர்கள் ஏற்கனவே அறிந்து விட்டனர் என்றே சொல்லலாம்.

இருந்தாலும்.. மோடிக்கு இந்த விடயம் மட்டுமல்ல.. இது உட்பட...பல விடயங்கள் தொடர்பாக தமிழக மக்கள் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க தக்க வகையில் தமிழக அரசியல் கட்சிகளின் செயற்பாடு இருக்க வேண்டும். இன்றேல் மோடி நினைச்சது தான் நடத்தப்படும். அது தமிழகத்துக்கும்.. தமிழீழத்துக்கும் கூட ஆபத்தே. :icon_idea:

சும்மா போங்க... செம காமடி சார். :D

தமிழக வாக்காளர்களும் .............

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வாக்காளர்கள் மோடிக்கு வாக்கே போடவில்லை.. :D

மத்திய அரசாங்கம் அதை எதிர்க்கும். அது யார் அரசில் இருந்தாலும் இதுவே.
 
ஆனால் நீதிமன்றம் இடையூறின்றி தன் வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு ஆதரவா போராட வர சொன்னால் எத்தனை தமிழக தமிழர்கள் வீதியில் இறங்குவார்கள்? 70 மில்லியன் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் போதே முள்ளி வாய்க்காலில் அத்தனை தமிழர்களையும் அழித்தது சிங்களம் ஒரு மில்லியன் தமிழர்கள் அந்த நேரம் வீதிகளில் இறங்கி இருந்தால் சிங்களத்தின் கடைசி நேர இன அழிப்பை தடுத்திருக்கலாம்

இதுவே ஜெயலலிதா கைது

கருணாநிதி கைது என்றால் தமிழகத்தில் பஸ் கூட ஓடாது......

இன்றும் கூட இலங்கைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு வர சொல்லுங்கள் வருகின்றவர்கள் ஒரு 50000 கூட தாண்டாது....இதான் உண்மை இதான் ஜதார்த்தம்......நிலைமை இப்பிடி இருக்கும் பொது மத்தியில் இருக்கின்ற பா ஜ கவும் சரி காங்கிரசும் சரி எப்பிடி ஈழத்தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள்?

மாற்றம் என்பது மத்தியில் இடுந்து ஆரம்பிப்பதை விட தமிழகத்தில் இருந்து ஆரம்பிக்கணும்......

மத்தியிலும் மாற்றம் வேண்டாம்

மாநிலத்திலும் மாற்றம் வேண்டாம்

என்னிடமிருந்தும் உங்களிடமிருந்தும்

எங்களைப் போன்ற வாய் வீச்சாளர்களிடமிருந்தும்

முதலில் மாற்றம் ஆரம்பிக்கட்டும்

பின்னர் தமிழகத் தமிழர்களிடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

1) மோடி வந்தவுடன் முன்னாள் பிரதமரின் கொலை சம்பந்தமாக இந்தியாவின் நிலைப்பாடும் மாறும் என்று முட்டாள் தனமாக வைகோ நெடுமாறன் உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியா ஒரு state. மோடி தலைமையில் அமைந்தது காங்கிரஸ் தலைமையில் அமைந்தது எல்லாம் governments. Govt 5 வருடத்துக்கு ஒருக்கா மாறும் ஆனல் state கொள்கைகள் பல ஆண்டுகளாய் மாறாது.

2) மோடியே விரும்பினாலும் இந்த முடிவை அரசு ஆதரித்தால் ராஜீவ் கொலை நியாயமானது என்று மோடி அரசு சொல்வது போல் ஆகி விடும். ஆக அரசு இவர்கள் விடுதலையை எதிர்க்கும் என்பது தெரிந்ததுதான்.

3) இங்கே கேள்விக்கு உரிய விடயம் - குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டா இல்லையா என்பதே. இது மத்திய மாநில அரசுகளின் உரிமை என்ன என்பதை பற்றிய பிரச்சினை. ஆகவேதான் இது அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப் பட்டது. இதில் மத்திய அரசு விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை என்று வாதாடாமல் பின்ன வேறு என்ன சொல்ல முடியும்?

4) அவுசுக்கு 80 90 இல போனாக்களே தமிழ் சனம் கப்பல்ல வரீணம் எண்டோன குய்யோ முறையோ எண்டு குதிக்கேக்க, நமக்காக தமிழ் நாடு போராடவில்லை என்று ஏங்குவது - வே டூ மச்.

தமிழ் தேசியத்துக்கு ஆதரவா போராட வர சொன்னால் எத்தனை தமிழக தமிழர்கள் வீதியில் இறங்குவார்கள்? 70 மில்லியன் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் போதே முள்ளி வாய்க்காலில் அத்தனை தமிழர்களையும் அழித்தது சிங்களம் ஒரு மில்லியன் தமிழர்கள் அந்த நேரம் வீதிகளில் இறங்கி இருந்தால் சிங்களத்தின் கடைசி நேர இன அழிப்பை தடுத்திருக்கலாம்

இதுவே ஜெயலலிதா கைது

கருணாநிதி கைது என்றால் தமிழகத்தில் பஸ் கூட ஓடாது......

இன்றும் கூட இலங்கைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு வர சொல்லுங்கள் வருகின்றவர்கள் ஒரு 50000 கூட தாண்டாது....இதான் உண்மை இதான் ஜதார்த்தம்......நிலைமை இப்பிடி இருக்கும் பொது மத்தியில் இருக்கின்ற பா ஜ கவும் சரி காங்கிரசும் சரி எப்பிடி ஈழத்தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள்?

மாற்றம் என்பது மத்தியில் இடுந்து ஆரம்பிப்பதை விட தமிழகத்தில் இருந்து ஆரம்பிக்கணும்......

தமிழ் தேசியத்துக்கு ஆதரவாகவும் ,ஸ்ரீலங்கா அரசின் காணி அபகரிப்புக்கெதிராகவும் போராட வர சொன்னால் எத்தனை  புலம் பெயர் தமிழர்கள் வீதியில் இறங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

டோண்ட் பி சிலி கரி, வி ஆர் டூ பிசி ஒப்போசிங் த பிளடி போட் பீப்பிள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.