Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீதான ஐநா விசாரணை: 'இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை'

Featured Replies

140711155305_glperies_susham_swaraj_304x

'இருநாட்டு உறவுகள் பலமடைந்துள்ளன': இந்திய வெளியுறவுத் துறை

இந்தியா வந்திருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டு போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

'உள்நாட்டு போருக்கு பிறகு அந்நாட்டின் அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதன முயற்சிகள், வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்பு திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டன' என்றார் சையத் அக்பருதீன்.இந்தியாவுக்கு இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்துள்ளமை இருநாட்டுக்கு இடையேயான உறவுகள் வலிமை பெற்றுவருவதை காட்டுவதாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் சையத் அக்பருதீன் கூறினார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜீ.எல். பீரிஸ் இடையில் நேற்று ஹைதராபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இலங்கை ஆந்திராவில் செய்துள்ள முதலீடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுமார் ஒரு பிலியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இலங்கையின் இந்த முதலீட்டீன் மூலம், 38,500 இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

'ஐநா மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது' என்று பதிலளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/07/140711_gl_sushma_meet.shtml

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இனி இந்தியாவுக்கு அரோகரா சொல்லி காவடி எடுத்தால் சரி.....

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியாவை நம்பி இருக்கிற கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாடு என்ன????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியாவை நம்பி இருக்கிற கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாடு என்ன????

 

நாமம்தான்....

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் காஷ்மீரிலும்.. மேற்கு மாநிலங்களிலும்.. ஹிந்திய படைகளுக்கு எதிராக ஒரு ஐநா விசாரணை வந்தா மோடி குடுமி என்னாகிறது..??!

 

காஷ்மீரில்.. சர்வதேச அனுசரணையில்.. ஒரு ஐநா வாக்கெடுப்பு நடத்த மறுக்கும் ஹிந்தியா ஈழத்தமிழருக்கு.. நீதியான நியாயமான சுதந்திரமான நல்வாழ்வு அமைய பாடுபடும் என்பது கனவு.

 

ஆனால்.. விக்னேஸ்வரன் ஐயா நம்புறார். அப்படி நடக்கலாம் என்று. பார்ப்பமே... :icon_idea:

 

 

அப்புறம் காஷ்மீரிலும்.. மேற்கு மாநிலங்களிலும்.. ஹிந்திய படைகளுக்கு எதிராக ஒரு ஐநா விசாரணை வந்தா மோடி குடுமி என்னாகிறது..??!

காஷ்மீரில்.. சர்வதேச அனுசரணையில்.. ஒரு ஐநா வாக்கெடுப்பு நடத்த மறுக்கும் ஹிந்தியா ஈழத்தமிழருக்கு.. நீதியான நியாயமான சுதந்திரமான நல்வாழ்வு அமைய பாடுபடும் என்பது கனவு.

ஆனால்.. விக்னேஸ்வரன் ஐயா நம்புறார். அப்படி நடக்கலாம் என்று. பார்ப்பமே... :icon_idea:

தமிழனின் பலவீனம் இது தான், கண்ணை மூடிக்கொண்டு எல்லாரையும் எதிரியாக பார்ப்பது தான், தமிழனின் அழிவுக்கூக்க் காரணம் மலையாளியும் அவர்களது குறுகிய சிந்தனையும் தான், இந்தியா அல்ல, 2004 ஆண்டுக்குப் பிறகான கொள்கைகள் எமக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கும் பாதகமானது தான், சீனாவின் ஆதிக்கம், ஏன் சீமானால் துணிந்து தமிழ் நாடு இந்தியாவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என கேள்வி கேக்கும் அளவுக்கு மோசமானது, ஆனால் மோடி அரசுக்கு இந்தியாவின் நலன்களை பணயம் வைத்து ஸ்ரீ லங்காவுக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை,

அதை விட இந்தியாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒருபோதும் வராது,அவர்கள் மட்டும் UK,US ரஷியா?சீனா மற்றும் சக்தி மிக்க, பலம் பொருந்திய எந்த ஒரு நாட்டையும் UN விசாரிக்காது.ஏன் என்றால் அதை இயக்குவதே அவர்கள் தான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மோடியின் அரசில் காங்கிரசை விட குறைய மலையாளிகள் தான் இருக்கிறார்கள். ஆகவே எமக்கு நல்ல தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என எதிர்பார்க்கலாமா??

இப்போ மோடியின் அரசில் காங்கிரசை விட குறைய மலையாளிகள் தான் இருக்கிறார்கள். ஆகவே எமக்கு நல்ல தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என எதிர்பார்க்கலாமா??

அவ்வாறு நிச்சயமாக நடக்கும் கூறுவதுக்கு இல்லை, ஆனால் காங்கிரஸ் போல் இந்திய நலன்களை பணயம் வைத்து சிங்களவனுக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை. மோடி இந்திய நலன்களை முன்வைத்து ஆட்சி நடத்தினால் எமக்கு விடிவு பிறக்க சத்தியம் உண்டு, அதே போல் 1996-2004புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலம், அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்று கவனித்தால் சில விடயங்கள் புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.