Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இக்களத்தைப் பார்த்து 10 கேள்விகள்

Featured Replies

இந்தக் களத்தைப் பார்வையிடுபவன் என்ற வகையில் சில குறிப்புக்கள்

1. இங்கு தமிழ் தேசிய ஆதரவின் பயன் என்பது தகாத வார்த்தைகளில் பேசுவதா?

2. இங்கு தமிழீழ அரசியல் சாணக்கிய ஆய்வு என்பது ஏட்டிக்குப் போட்டியாக கற்பனைக்கு ஆதாரங்கள் இன்றி இங்குள்ள சிலருக்கு பெருமைக்கு எழுதுவதுதானா?

3. தமிழ் தேசியம் என்பது இங்குள்ள பலரின் விருப்பப்படி விமர்சனங்கள் தாண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் அப்படியா?

4.சிலர் தமிழ் தேசிய ஆதரவு என்ற படியே நக்கல் நளினம் செய்வதும் புலிகளின் போராற்றல் படைவலு என்பவை குறித்து தம் பாட்டிற்கு வைக்கும் நளினத்தனமான கருத்துக்களுக்கு இக்களம் ஆதாரம் காட்ட முடியுமா?

இதனால் இவர்கள் வளர்க்கும் தேசிய பலம் என்ன?

5. ஒரு பக்கம் தேசியதுக்கும் தாயகத்துக்காவும் கண்ணீர் வடிப்பவர்கள் மறுபக்கத்தில் தங்கள் பொழுது போக்கு விடயங்களில் தேசியத்துக்கு அப்பால் நடந்து கொள்வது ஏன்?

அவர்களால் பொழுதுபோக்கு விடயங்களை கூட தேசியம் சார்ந்து எழுத முடியாது என்பதாலா?

6. தேசிய ஆதரவு என்பது செய்திகளில் கவிதைகளில் மட்டும் தானா?

7. இக்களத்தில் சுய ஆக்கங்களை கருத்துக்களை எழுத அழைப்பு விடுக்கும் இக்களத்தினர் விமர்சனங்களை தேசிய ஆதரவு என்ற எல்லைக்குள் வைக்க வேண்டும் என்ற நிலையை விட்டு விலகாத குறுகிய கண்ணோட்ட நிலையில் நடைமுறை உலகில் தேசியம் பற்றிய பார்வைகளை எப்படி நல்ல முறையில் கருத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்ள உதவப் போகின்றனர்.

8. சிலரின் சீனியாரிற்றிக்கு முதன்மை அளிக்கும் இக்களத்தில் உள்ளோர் மறுபக்கம் தேசிய விமர்சனங்களை வைப்பவர்கள் மீதான தனிநபர் தூசணங்களை திட்ட மிட்டு அனுமதிப்பதுதான் இக்களத்தின் தேசிய விசுவாசமா?

9.தமிழ் தேசியம் பேசுகிறது என்பதற்காக இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் எதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற உண்மை சொல்லப்படுகிறதா?

குறிப்பாக கப்பல் தகர்ப்புச் செய்தியில் இங்குள்ளவர் செய்து வரும் அநாவசிய ஆய்வுக்கும் தமிழ் தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் கிடைக்கும் செய்தி என்ன நன்மை என்ன?

10. இப்படியான அநாவசியங்களை தமிழ் தேசியத்தின் பெயரால் செய்வதுதான் தமிழ் தேசிய ஆதரவு என்று தவறான எண்ணம் வளர்க்கப்படுவதும் ஊடகங்களின் பொய்களை ஆதாரங்களாக்குவதாலும் பேரப்படும் பலன் தானா இக்களத்தின் தேவை?

இது எல்லாம் இங்குள்ளவர்களை தமிழ் தேசிய ஆதாரவாளர்கள் என்று காட்ட முனைவதன் வெளிப்பாடா? இது எவ்வளவுக்கு உண்மையானது?

  • Replies 56
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்லவாறீங்கள் .மாற்றுகருத்துடன் மாற்று பெயரில் வந்துள்ளேன் என்று சொல்லுங்கோ.......

  • தொடங்கியவர்

பெயருக்கும் பொருளுக்கும் பொருத்தம் தேடாமல் கேள்விக்கு என்ன பதில் சரக்கிருந்தால் சரணாகதியாகாமல் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்கும் பொருளுக்கும் பொருத்தம் தேடாமல் கேள்விக்கு என்ன பதில் சரக்கிருந்தால் சரணாகதியாகாமல் சொல்லுங்கள்.

சரக்கு இருந்தால் ஏனய்யா இதில நிற்கிறன் அதுவும் இந்த தலைப்புக்கு கீழ் நிற்கிறன், நோர்வே தூது குழுவில் நின்று பேச்சுவார்த்தையில் பங்கு பற்றியிருப்பன்

  • தொடங்கியவர்

பெரிய பெரிய கற்பனைகளால அநாவசிய தோற்றம் காட்டிறதால இறுதியில் போதி மரம் தான் தஞ்சமாகும்.

கருத்துக்களத்தில் கருத்து வைக்கிறதோட எங்கள் வேலை முடியுது. அதுக்கு மேல?????????

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய கற்பனைகளால அநாவசிய தோற்றம் காட்டிறதால இறுதியில் போதி மரம் தான் தஞ்சமாகும்.

கருத்துக்களத்தில் கருத்து வைக்கிறதோட எங்கள் வேலை முடியுது. அதுக்கு மேல?????????

பெரியவரே தேசியத்தை பற்றி கதைப்பதற்கு எனக்கு தகுதி இல்லை முக்கியமாக புலத்தில் வாழும் நான் தேசியத்திற்கு எதிராக கருத்துகளை கூறாம இருக்கிறென் என்பதில் ஒரு மன திருப்தி காரணம் நாம் பெரும்பாண்மை இனத்தால் பாதிக்கபட்டவன் அதை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆனால் என்னொருவர் செய்யும் போது அதை குழப்பாமல் இருக்கிறேன் என்ற மனதிருப்தி.

போதிமரத்து கீழே போனாலும் புத்தி வருதில்லை எங்கே போகிறது

  • தொடங்கியவர்

ஐயா புத்தரே தமிழ் தேசியம் என்பது திரைப்படமல்ல. தனியாட்களின் ஆதரவையோ விருப்பையோ வெறுப்பையோ விளம்பரத்தையோ விமர்சனத்தையோ கற்பனைகளையோ கண்டு வெற்றி தோல்வியடைய.

இங்கு வினவப்பட்டதெல்லாம் தமிழ் தேசியம் தொடர்பான உங்கள் தனிப்பட்ட விருப்பு வெருப்பைச் சொல்லச் சொல்லியல்ல.

ஒரு பொதுத்தளத்தில் இருந்து தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அதைப் பலப்படுத்த உதவுவதாகவும் கூறிக் கொள்வோர் நடந்து கொள்ளும் முறையில் அவதானிக்கப்பட்ட விடயங்களே.

விடுதலைப் புலிகளோ அவர்களின் சர்வதேசப் பிரதிநிதிகளோ சமீப காலங்கலாக நடக்கும் நிக்ழவுகளுக்கு விளக்கம் சொல்ல முற்படாத வேளைகளில் இங்குள்ள சிலர் தமிழ் தேசிய ஆதரவு என்ற வகையில் வெறும் ஆதாரங்களற்ற கற்பனைகளை மக்கள் முன் கொண்டு வருவதும் அதை வைத்து தங்களை தேசிய ஆதரவுப் பிரச்சார சக்திகளாகக் காட்ட நினைப்பதும் அவை தாங்கி வரும் இக்களம் மக்களுக்கு தவறான செய்திகளை வழங்கி வருவதும் நேரடியாக தமிழ் தேசிய எதிர்ப்பை தெரிவிக்கும் கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் பாதகமான விளைவையும் புலிகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகளையும் தோற்றுவிக்கும்.

நிதர்சனம்.கொம் போல யாழ்.கொம் என்பதும் தனியார் தளமே அன்றி புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல. இங்கிருப்பவர்கள் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்களின் கருத்துக்களை தமிழ் தேசிய கருத்துக்கள் என்று மக்கள் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. இது வெறும் பொழுது போக்கிற்காக தமிழ் தேசியம் பற்றி பேச்சுக்குப் பேச்செழுதும் களம் மட்டுமே.

இதை இங்கிருப்பவர்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்தாயிற்று.

அநாவசியத் தோற்றப்பாடுகளினூடு தங்களைத் தாங்களே தமிழ் தேசிய ஆதர்வாளர்கள் என்று இப்படியான தனியார் இணையத்தளங்கள் நடத்துவோர் உரிமை கொண்டாடிக் கொண்டு மறைமுகமாக தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் பெருகி உள்ள நிலையில் இந்த வெளிக்காட்டல் அவசியமாகிறது.

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள்-பதிவுகள் அனைத்தும் தனிமனிதருடையதாகத்தான் கருதப்பட வேண்டியது. ஒரு சிலரை தவிர எல்லோருமே முகமூடிகளுடன் எழுதுபவர்கள்.

இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானோர் தேசியத்திற்கு ஆதரவான கருத்துக்களை ஊக்குவிக்கிறார்கள் வரவேற்கிறார்கள். தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள் என்று இங்கு உள்ள தனிமனிதர்களால் கருதப்படும் கருத்துக்களிற்கு பதில் பல வழிகளில் (பண்பாகவும் பண்பற்ற முறையிலும், நக்கலாகவும் நிதானமாகவும்) கிடைக்கிறது. எல்லை மீறிப்போகும் போது நிர்வாகம் கவனம் எடுக்கிறது.

இங்கு தேசிய ஆதரவு நிலைப்பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பதற்காக இதை புலிகளோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பவர்கள் சுத்த முட்டாள்கள். இங்கு சொல்லப்படுபவைக்கும் புலிகளிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிங்கள மற்றும் சிறீலங்கா விற்கு ஆதரவு நிலை எடுத்தும் பல தளங்கள் கருத்துக்களங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு எழுதப்படுபவை சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் நிலைப்பாடுகள் என்று யாராவது சந்தேகித்து இருக்கிறார்களா? அவ்வாறு இல்லை என்று விளக்கம் உண்மை சொல்ல சொல்லியாவது கேட்டிருக்கிறார்களா?

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னணிச் சக்த்திகள் விடுதலைப்புலிகள் அவர்களின் தலமையின் கீழ் பல்வேறு கட்டமைப்புகள் அந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன. புலிகளின் உத்தியோக பூர்வ ஊடகங்கள் பேச்சாளர்கள் என்று இருக்கிறார்கள் உத்தியோக பூர்வ நிலைப்பாடுகளை முடிவுகளை அறிய அறிவிக்க. ஏனயவை எல்லாம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இயங்குபவை மட்டுமே அன்றி உத்தியோக பூர்வமாக எந்த அர்த்தத்தையும் கொண்டவர்கள் அல்ல.

ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இயங்குபவர்கள் பலதரப்பட்டவர்கள் அவர்களது கருத்துக்கள் குளப்பங்கள் விளக்கங்கள் எல்லாம் தனிமனதிரது என்றரீதியில் பலதரப்பட்டிருக்கும்.

களத்தில் பொழுது போக்குக்கு வருபவர்களை அடித்து விரட்டுவதா? அவர்களிற்கும் இடம் ஒதுக்கியிருக்கு. எழுதுபவர்கள் எல்லாரும் எழுதுவது எல்லாம் எப்பவும் 100வீதம் தேசியம் பற்றித்தான் இருக்க வேண்டும் என்பது எந்தளவிற்கு யதார்த்தமானது? முன்னுரிமை தேசியம் போராட்டம் சாரந்த விடையங்களிற்கு கொடுத்து ஊக்குவிக்கப்படுகிறது. மற்றப்படி தேசியத்திற்கு எதிராகவே தேசியத்தையோ போராட்டத்தை கொச்சப்படுத்தாமல் எழுதும்படிதானே கேக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் புத்தா தமிழ் விழங்காதா உமக்கு யாழ் இந்த களத்தை பாத்ததான் கேள்வி கேட்டிருக்கிறார் இதிலை கருத்து எழுதிற ஆக்களையோ அல்லது அதை நிருவாகிக்கிறவையையோ அல்ல நீர் விழங்காமல் இதுக்கை முந்திரி கொட்டை மாதிரி எழுதாமல் பேசாமல் இரும் களம் விரும்பினால் பதில் சொல்லட்டும் இல்லாட்டி விடட்டும்.அது களத்தை பொறுத்தது.எனவே நானும் கேக்கிறேன் களமே பதில் சொல் சொல் சொல் ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே சொல் களமே சொல்

  • தொடங்கியவர்

குறுக்காலபோவன் என்பவரின் கருத்தில் இருந்து இங்கு வினப்பட்ட கேள்விகள் சார்பில் வந்த பதிலின் சாரம்

1.இங்கு வைக்கப்படும் கருத்துக்கள்-பதிவுகள் அனைத்தும் தனிமனிதருடையதாகத்தான் கருதப்பட வேண்டியது. ஒரு சிலரை தவிர எல்லோருமே முகமூடிகளுடன் எழுதுபவர்கள்.

2. இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானோர் தேசியத்திற்கு ஆதரவான கருத்துக்களை ஊக்குவிக்கிறார்கள் வரவேற்கிறார்கள்.

3.இங்கு சொல்லப்படுபவைக்கும் புலிகளிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிங்கள மற்றும் சிறீலங்கா விற்கு ஆதரவு நிலை எடுத்தும் பல தளங்கள் கருத்துக்களங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு எழுதப்படுபவை சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் நிலைப்பாடுகள் என்று யாராவது சந்தேகித்து இருக்கிறார்களா? அவ்வாறு இல்லை என்று விளக்கம் உண்மை சொல்ல சொல்லியாவது கேட்டிருக்கிறார்களா?

(இதன்படி இங்கு தரப்படும் கருத்துக்கள் எவையும் புலிகள்ன் ஆதாரங்களை சுமந்து வருபவை அல்ல என்பது சொல்லப்படுகிறது. இவறிற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்பதை மக்கள் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இவை தனிநபர்களின் கருத்துக்கள் மட்டுமே. அவற்றிள் போதிய அளவுக்கு ஆதாரமற்ற நம்பிக்கைக்கு பாத்திரமாகாத நிறைய விடயங்கள் இருக்கின்றன என்ற உண்மை சொல்லப்படுகிறது.)

4.களத்தில் பொழுது போக்குக்கு வருபவர்களை அடித்து விரட்டுவதா? அவர்களிற்கும் இடம் ஒதுக்கியிருக்கு. எழுதுபவர்கள் எல்லாரும் எழுதுவது எல்லாம் எப்பவும் 100வீதம் தேசியம் பற்றித்தான் இருக்க வேண்டும் என்பது எந்தளவிற்கு யதார்த்தமானது?

(இக்களம் பல்நோக்குக் களம். தமிழ் தேசியப் பரப்புரை மட்டுமே இதன் குறிக்கோள் அல்ல. இதை தனியார் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். எனவே இங்கு யாரும் எதுவும் எழுதலாம்.அரட்டைகளும் எழுதலாம். அதுவும் பல்நோக்குகளில் ஒன்றுதான். நன்றி குறுக்காலபோவன்.)

5.முன்னுரிமை தேசியம் போராட்டம் சாரந்த விடையங்களிற்கு கொடுத்து ஊக்குவிக்கப்படுகிறது. மற்றப்படி தேசியத்திற்கு எதிராகவே தேசியத்தையோ போராட்டத்தை கொச்சப்படுத்தாமல் எழுதும்படிதானே கேக்கப்படுகிறது.

(தமிழ் தேசிய போராட்டத்துக்கு ஆதரவாக எழுத வேண்டும் என்பதுதான் நிபந்தனை இங்கு. உங்கள் கருத்துக்கள் எந்த வகையினது என்றாலும் அதை வெளியிட உரிமையில்லை. அது தமிழ் தேசியம் தொடர்பில் இங்குள்ளவர்கள் தீர்மானிக்கும் அளவுகோலின் அளவுக்கு ஏற்ற வகையில் அது தேசிய ஆதரவு என்ற நிலையைப் பெற வேண்டும். அந்த அளவுகோலை நிர்ணயிக்க என்று நிர்வாகத்துக்கு வழிகாட்ட என்று இங்கு ஒரு குழு செயற்படுகிறது. அது உடனடியாக தனது அளவுகோலுக்கு உட்படாததுகளை செந்தமிழ் கொண்டு எதிர்க்கும். அதைத் தொடர்ந்தே களம் நிர்வாகம் என்றுள்ள ஒரு கட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க டுபாக்கூறு

அஜீவனைத் துரத்தியடிக்க வந்தியள். காரியம் முடிஞ்சு தானே. அல்லது வேறு யாரையும் லிஸ்டில் வைத்திருக்கியளோ?

இங்கே, நிர்வாகம் தூசணம் எழுதியிருக்கு எண்டால் அதை, வெளியால எழுதிக் காட்டினால் குறைஞ்ச போய்டுவீர்.

யாழ் தேசியத்துக்கு ஒண்டும் செய்யாது எண்டால் நீர் என்னத்துக்கு குப்பை கொட்டுறீர். குருவி எண்ட பெயரில் 5 வருசம் கொட்டின குப்பை போதாதோ

அப்பல்லாம் உந்தத் தத்துவம் வரவில்லயோ! அடிபட்ட புலி தான் பழி வாங்கும் எண்டு வாங்கள். பன்றி கூட அந்த எண்ணத்தில் இருக்கும் எண்டு தெரியாமல் போச்சு!

  • தொடங்கியவர்

மதனராசா அவர்களே ஒரு சுத்தத் துரோகிக்கு பெயர் விளம்பரம் கொடுக்கும் நீங்கள் இங்கு அந்தப் பெயரை வைத்து எப்படி தமிழ் தேசியம் வளர்க்கிறீங்கள்???

கற்பனைகளை கருத்தாக்குவதை விடுத்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதிலிருந்தால் எழுதலாமே.

சமாதானம் = குருவி என்றார்கள் இப்போது எங்களையும் குருவி என்கிறார்கள். குருவி என்பவர் தந்த பாதிப்புக்கள் அந்தளவுக்கு இருக்கிறதோ இங்கு.

அஜீவனை யாரும் துரத்தவில்லை. அவர் விரும்பிய நேரம் வந்து எழுதலாம் விரும்பாவிட்டால் போகலாம். அவருடைய கருத்துப் பற்றித்தான் எமது விமர்சனம் தரப்பட்டது. கருத்துக்களத்தில் கருத்தை வைப்பவர்கள் விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

எமது குறிப்புகளில் அஜீவன் பற்றிய தனிநபர் குறிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. குருவிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஓய் சூம்ம வக்காலத்து வாங்கதயுமோய் குருவி ஒரு பன்றி அதுக்கு வக்காலத்தோ உமது எழுத்து நடைகளை பாத்தால் குருவி போலத்தான் இருக்கு

அடியேன் வாரும்....

தங்களது அன்மை கால நிகழ்வுகள் அருவருப்பை தந்த வண்ணம் முள்ளது...

அது ஒரு புறம் இருக்க என் கேள்விக்கு இப்போ தாங்கள் பதில் உரையுங்கள்...

பின்னாடி தங்களது கருத்துக்கு வரலாம்....சரிங்களா...???

தமிழ் தேசியம் என்றால் என்ன...??

அது சார்ந்த நிலைகள் என்றால் என்ன...??

பரப்புரை என்றல் என்ன...??

விழிப்புணர்வு என்றால் என்ன...??

விடுதலை என்றால் என்ன...??

பகுத்தறிவு என்றால் என்ன...???

கண்ணோட்டம் என்றால் என்ன...??

கருத்து போர் என்றால் என்ன....??

தேசிய ஒருமைப் பாடு என்றால் என்ன...??

தேசிய நலன் என்றால் என்ன...??

தேசிய வாதி என்றால் என்ன....??

தேசப் பற்றாளன் என்றால் என்ன...??

மனித நேயம் என்றால் என்ன...???

மனித நாகரிகம் என்றால் என்ன....??

கவிதை என்றால் என்ன...??

கருத்து கணிப்பு என்றால் என்ன...??

செய்தி என்றால் என்ன....??

செய்தி ஆய்வு என்றால் என்ன...??

அரசியல் என்றால் என்ன...??

நெருக்கு வாரம் என்றால் என்ன...??

அதிகார புர்வமற்ற அறிக்கை என்றால் என்ன...??

அதகார புர்வமான அறிக்கை என்றால் என்ன...??

இத்தனைக்கு மேலால் மக்கள் கருத்தென்றால் என்ன...??

இவையாவும் எதை குறிக்கின்றன...???

இவையாவயும் ஒன்றினைக்கும் தளம் எது....???

இத்தனை கேள்விக்கும் பதில் அளியுங்கள் இல்லண்ண என்ன செய்யனும்....??

அதை செய்யுங்கள்....

ஆடு நனையுது எண்ணு ஓநாய் அழுதிச்சுதாம்...

அந்த கதையா கிடக்கு தங்கள் நிலை...

முடிந்தால் முயற்சியுங்கள் விளக்கமாய் வந்து விளக்கங்கள்...

அஜிவனின் கேள்விகளத்திலும் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை...

தேசயத்தை காக்க தங்களால் என்ன பணி செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்

அந்த தேசிய வாதிகள் சொல்லும் கருத்தை செவியை திறந்து வைத்து செவி மடுங்கள்

இந்த களம் அரும் பெரும் பணியை ஆற்றி வருகிறது அதற்கு மோகன் அவர்களுக்கு

மன மாhந்த நன்றிகளை தெரிவியுங்கள்...எத்தனை படைப்பாளிகள்...

எத்தனை படைப்பு களங்கள்..எத்தனையோ பணிகளை அருமையாக செய்யும் இந்த

தளத்தை வந்து இச்சை படுத்தாதீர்கள்..

முடிந்தால் உங்கள் கருத்தை உங்கள ஆய்வை வைய்யுங்கள்...

அதற்கு மாற்றாரின் கருத்தை கேளுங்கள்...

என் கேள்விக்கு பதில் அளியுங்கள்...!!!

  • தொடங்கியவர்

ஓய் சூம்ம வக்காலத்து வாங்கதயுமோய் குருவி ஒரு பன்றி அதுக்கு வக்காலத்தோ உமது எழுத்து நடைகளை பாத்தால் குருவி போலத்தான் இருக்கு

உங்கள் கருத்து நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. நீங்கள் எழுதுவதும் நான் எழுதுவதும் தமிழ் தான். அப்ப இருவரும் ஒருவரா.

குருவி பன்றியோ யானையோ சிங்கமோ புலியோ அதுதான் இப்ப கருத்துக்களத்தில விவாதிக்கப்படனுமா. உங்கள் கற்பனைகளுக்கும் சந்தேகங்களுக்கும் அளவே இல்லையா. சமாதானத்துக்க இருந்த குருவி இப்ப பன்றியாகி நமக்குள்ளையா?!

உங்களிடம் ஒரு வேண்டுகோள். எல்லாத்திற்கும் முந்திரிக்கொட்டை போல பதில் எழுத நிற்காமல் உங்களுக்க சரக்கிருந்தா எழுதுவதற்கு அதில் வந்து உருப்படியா தமிழனை என்றாலும் கேவலம் பண்ணாமல் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

தேசியத்தைப் பாதுகாக்கச் சொல்லி உங்களை யாரும் கேட்கவில்லையே. நீங்களே தேசியத்தைக் காக்கிறம் என்று கிளம்பிக் கொண்டு கேள்வியைப் பாருங்கோ.

நீங்கள் உங்களின் கற்பனைச் செய்திகளை தருவதை நிறுத்தினால் கூட தேசியம் பற்றி மக்களுக்குள்ள எழும் அநாவசியக் குழப்பங்கள் தவிர்க்கப்பட உதவும். குழப்பமான சூழலில் மக்களைக் குழப்பக் கூடிய தகவல்களை செய்திகள் என்ற முறையில் எழுதிவிட்டு சிரிப்பதையும் முழிப்பதையும் நிறுத்துங்கள். புலிகள் மீதான நம்பிக்கைகளை தகர்க்க நினைக்காதீர்கள். அதற்கு தேசிய ஆதரவுத் தளங்களும் ஊடுருவல்களும் உங்களுக்கு உதவலாம்.

புலிகள் கூட சர்வதேசப் பேச்சாளர்களை காலத்துக்கு காலம் வன்னிக்கு அழைத்து அறிவுறுத்துகிறார்கள். ஆனால் நீங்களேல்லாம் புலிகளின் செய்திகளை வெளியிட எங்கு உரிமை பெற்றீர்களோ தெரியவில்லை. மக்களுக்கு தேசிய ஆதரவு என்ற முறையில் தவறான தோற்றப்பாடுகளைக் காட்டி புலிகளுக்கு எதிரான மறைமுக எதிர் பிரச்சாரமும் நடக்கிறது.

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்களே விடையும் சொல்லிவிடுங்கோ. இதைக் கூடத் தெரியாமலா தேசியத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

களத்தைப்பார்த்து கேட்ட் கேள்விகளுக்கு பொறுப்பாளர் பதில் சொல்லுவார் அடக்கி வாசித்தால் நல்லம்

ஏய்யோ....

யாருக்கு வக்காளத்து வேண்ட வந்தனியள்.....???

கேட்ட கேள்விக்கு பதில் தாராது விட்டிட்டு சும்மா உமது

பிரசங்கங்களை இங்கு வைக்காதீர்....

செய்தி என்பது ஒருவன் அதை ஆய்வு செய்து ஆராய்ந்து

நுட்பமான முறையில் உண்மை தன்மையை சூட்சுமமாக எழுதுவதே

அதன் அடிப்படை தத்துவார்ந்த நோக்கமாக இருக்கிறது .

சும்மா எடுத்த எடுப்பிலேயே எழுத முடியாது. மிக உண்மையான செய்திகளை

உறுதிப் படுத்தி சில இராணுவ தந்திரங்களை உட்புகுத்தி

அந்த கள நிலவரத்திற்கு எற்றவாறு அதை வழி காட்டி செல்வதே

அந்த ஆய்தலின் நோக்கமாகும்.

சும்மா உங்களை போல தெளிவின்றி எதுக்கெடுத்தாலும்

உள்நோக்கம் கற்பிக்கும் உங்களை மாதிரி ஆட்களின்

செயல்களால் தான் இந்த களத்துக்கு இடையுறு.

அது நிற்க . உண்மையில் பகுத்தறிவு கொண்டவன் பக்குவப் பட்டவன்

தேசிய நலனில் அக்கறை கொண்டவன் . இவ்வாறன புலம்பல்களை புரியான் .

மாறாக இதை விடுத்து ஒதுங்கி கொள்வான் .

எத்தனையோ ஆய்வாளர்கள் இன்று வாழ்ந்து கொண்டு

இருக்கிறார்கள் தற்கால அரசியல் பார்வைகளின்

எதிர்வு கூறல்கள் நடந்தேறும் நிலையிலேயே உள்ளது

ஏனெனில் கள நிலவரம் அவ்வாறு உள்ளது .

மாறாக இங்கு வந்து எமது கருத்தை பார்த்தபின்னர்

அவர்கள் உளவு தகவல்களை பெறுவதில்லை .

இதை தாங்கள் முதலில் புரிதல் வேண்டும் .

விடுதலைப்புலிகள் தமது அமைப்பின் உறுப்பினர்களை பல தேவை கருதி

மாற்றுவது இயல்பு . அது அவர்களின் கொள்கை வகுப்பில் ஒன்று .

இதுவும் தெரியாமால் தாங்கள் எல்லாம் அரசியல்

சாணக்கியம் பேச வந்திருக்கிறியள் .

நினைத்தால் சிரிப்பு தான் வருகுது .

முதல் புலிகளின் பலத்தையும் அரசின் உடைய பலத்தையும்

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த தந்திரங்கள் அதன்

பரிமாணங்களை அலசி பார்த்தால் யாவுக்கும் விடைகிடைக்கும் .

ஒரு செய்தியையோ அல்லது ஆய்வு கட்டுரையையோ பார்க்கும்

போது அதன் வடிவத்தை ஆழ உற்று நோக்கி அதன் கருத்தாடலை பார்த்தாலே

புரியும் அதன் செய்தி எவ்வாறு இருக்கும் என்று .

எல்லாத்திற்கும் ஆதாரங்கள் காட்டவும் முடியாது

எல்லாத்தையும் கட்டு கதை என்று கூறவும் முடியாது .

சில தந்திரங்கள் அவ்வப்போது கையாளப் படுவது வழமை

அது சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களிற்கு அது புரியும் .

உலக அரசியலை படிக்க முன் புலிகளின் அரசயில் தந்திரங்களையும்

அவர்களின் வழி நடத்தல்களையும் படை ஒருங்கிணைப்பு புலனாய்வு தகவலின் பரிமாற்றத்தை அருகில்

இருந்து பார்த்தாலும் தங்களை போன்றவர்களுக்கு ஏறவே ஏறாது .

எனவே தாங்கள் அடக்கி வாசித்தால் அது தற்காலத்தில்

சால சிறந்ததாய் இருக்கும் .

தாங்கள் அரசியல் ஆய்வுகளில் வித்துவான் என்றால் எங்கே இங்கே காட்டுங்கள்

உங்கள் முழக்கத்தை .

அதை விடுத்து மாற்றானை இழிக்கும் நிலையை

இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள் .

அத்தோடு பண்பாக பேச பழகுங்கள் .

தேசிய நலனில் அக்கறை கொண்ட தாங்கள்

அந்த தேசிய விடுதலைக்காய் ஆற்றிய பங்கென்னவோ....???

இதுவரை செய்தவற்றை எங்கே பகிரங்கமாக பட்டியலிடுங்கள்

பார்க்கலாம்.....???

உங்களுக்கு அச்சம் இல்லையாயின்

எங்கே உங்கள் முகவரியை தெளிவாக இங்கே வையுங்கள்

பார்க்கலாம்....

போலி முகங்களில் வந்து இங்கு

கேலி விளையாட்டுக்களை இங்கே வைக்காதீர்கள் ...

வன்னி மைந்தன் .

  • தொடங்கியவர்

நீங்கள் தான் யாழின் தராகி சிவராம் என்கிறீங்களா?

தராகி பல இடங்களில் இருந்து ஆதாரங்களுக்குரிய தகவல்களைப் பெற்றுத்தான் செய்தி ஆய்வுகளை ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவார். அதுதான் அவரை நிலைக்க வைத்தது.

இணையத்தளங்களில் வரும் புனைகதைகளைத் தொகுத்து கோர்த்துவிட்டு அதை ஆய்வுக்கட்டுரை என்பது நகைச்சுவைக்கு இடமான விடயம்.

இதனால் வெறும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் உருவாகுமே தவிர தராகி போன்றவர்கள் செய்தது போல தகவல்களை வழங்காது.

செய்வதை உருப்படியாச் செய்தால் ஏன் குறைகள் வரப்போகுது? குற்றச்சாட்டுகள் எழப்போகுது? வெறும் உம்மாண்டிகளாக்கி குப்பைகளைக் கொட்டுவதிலும் உருப்படியா ஒரு ஆக்கத்தை முன் வைப்பதே தேசியத்துக்குப் பலம்.

உருப்படியான கேள்விகளுக்கு விடை கொடுக்கத்தான் வேணும். மிகுதிகளுக்கு விடைகளை நீங்களே தேடிக் கொள்வதுதான் நல்லது.

அடியேன் வாரும்....

தமிழ் தேசியம் என்றால் என்ன...??

அது சார்ந்த நிலைகள் என்றால் என்ன...??

பரப்புரை என்றல் என்ன...??

விழிப்புணர்வு  என்றால் என்ன...??

விடுதலை என்றால் என்ன...??

பகுத்தறிவு என்றால் என்ன...???

கண்ணோட்டம் என்றால் என்ன...??

கருத்து போர் என்றால் என்ன....??

தேசிய ஒருமைப் பாடு என்றால் என்ன...??

தேசிய நலன் என்றால் என்ன...??

தேசிய வாதி என்றால் என்ன....??

தேசப் பற்றாளன் என்றால் என்ன...??

மனித நேயம் என்றால் என்ன...???

மனித நாகரிகம் என்றால் என்ன....??

கவிதை என்றால் என்ன...??

கருத்து கணிப்பு என்றால் என்ன...??

செய்தி என்றால் என்ன....??

செய்தி ஆய்வு என்றால் என்ன...??

அரசியல் என்றால் என்ன...??

நெருக்கு வாரம் என்றால் என்ன...??

அதிகார புர்வமற்ற அறிக்கை என்றால் என்ன...??

அதகார புர்வமான அறிக்கை என்றால் என்ன...??

இத்தனைக்கு மேலால் மக்கள் கருத்தென்றால் என்ன...??

இவையாவும் எதை குறிக்கின்றன...???

இவையாவயும் ஒன்றினைக்கும் தளம் எது....???

இத்தனை கேள்விக்கும் பதில் அளியுங்கள் இல்லண்ண என்ன செய்யனும்....??

அதை செய்யுங்கள்....

என் கேள்விக்கு பதில் அளியுங்கள்...!!!

இப்பத்தான் எனக்குக் குழப்பம்.......

மேற்கூறப்பட்டவைக்கு தெளிவான விளக்கம் வேண்டும்

அதுவும் வன்னிமைந்தனே....!

இவற்றை ஒவ்வொன்றாக விளக்கம் தரவேண்டும்.

ஆதிவாசி காத்திருக்கிறேன்.

பதில் தெரியாதவையும் விளக்கம் இல்லாதவையாலையும் கேள்வி கேக்கத்தான் முடியும்...!

அதை இந்த பகுதி கேள்வியில் காணக்கூடியதாய் இருக்கு...!

இங்கு ஆக்கத்துக்கும் ஊக்கத்துக்கும்தான் மரியாதை வளங்க முடியும்... அடக்கம் செய்த பிணங்களை தோண்டி எடுத்து ஒப்பாரி வைப்பவர்களுக்கு அல்ல... முடிந்தால் முண்ணேற்றத்துக்கு வளிகாணுங்கள் ஊக்கம் வளங்கப்படும்... குறை பிடிக்க எண்டால் அதுக்கு வேற இடம் பாக்கிறது நல்லது...!

தல யாரைச் சொல்றீங்கண்ணா?

ஆதியையா?

ஏற்கனவே குழம்பிக் கிடக்கிறன்.

களத்தைப்பார்த்து கேட்ட் கேள்விகளுக்கு பொறுப்பாளர் பதில் சொல்லுவார் அடக்கி வாசித்தால் நல்லம்

இவர் யார் என்று இங்கு பதிந்தவுடனேயே அடையாளம் கண்டு கொண்டு விட்டேன். இங்கு சில குழப்பங்களை மேற்கொள்ள வந்ததாகவே கருதுகின்றேன். அதனால் தான் அறிமுகம் பகுதியைத் தவிர மேற்கொண்டு எழுத இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் விளக்கம் கொடுப்பதாகவும் இல்லை.

இவர் யார் என்று இங்கு பதிந்தவுடனேயே அடையாளம் கண்டு கொண்டு விட்டேன். இங்கு சில குழப்பங்களை மேற்கொள்ள வந்ததாகவே கருதுகின்றேன். அதனால் தான் அறிமுகம் பகுதியைத் தவிர மேற்கொண்டு எழுத இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் விளக்கம் கொடுப்பதாகவும் இல்லை.

IP தொழில் நுட்பம் வேலை செய்யுது போல கிடக்கு... ! :wink: :P

அஜீவன் அண்ணா விடயத்தில் இவர் தொடங்கிய விதமே சொன்னது இவரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது...! வேண்டும் எண்றே அஜீவன் அண்ணாவை வெளியேற வைக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தவர்....!

இது விடயத்தில் கவனம் எடுத்த மோகன் அண்ணாவை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை...

தல யாரைச் சொல்றீங்கண்ணா?

ஆதியையா?

ஏற்கனவே குழம்பிக் கிடக்கிறன்.

எங்கை பாத்தாலும் பலரையும் சிந்திக்க தூண்டி மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஆதியை சொல்ல மனம் வருமா...?? :wink: :P :P

ஆக்க பூர்வம் என்பது மற்றவரை சிரிக்க தூண்டி மகிழ்ச்சியாக இருக்க வைக்க எழுத தூண்டுகிறீர்களே... அதைத்தான் முக்கியமாக சொல்லவேண்டும்...! தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விப்பது எனது ஒரு கொடை...!

தத்துவம் ஒண்டும் இல்லீங்க எனது எண்ண ஓட்டம் அப்பிடி இருக்கு...! :wink: :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.