Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் பாலஸ்த்தீன நெருக்கடியில் ஈழத்தமிழரின் நிலைப்பாடு என்ன ?

Featured Replies

AC7A1BABD0C4494EADC20E1F98E003E8.png

  • கருத்துக்கள உறவுகள்

http://www.middleeasteye.net/news/israels-army-prepared-ground-assault-gaza-official-275282816

மேலே உள்ளது ராக்கெட் தாக்குதல்களுக்குஹமாஸ் உரிமை கோரியதர்க்கான ஆதாரம்.

எப்படி புலிகள் செய்த சிறு யுத்த நிறுத்த மீறல்களை காரணம் காட்டி போரை மீள ஆரம்பிப்பது அரசுக்கு கடினமாயிருந்தோ, அதே போல இந்த இரு இளைஞர் கொலையை காரணம் காட்டி இப்படி ஒரு பெரும் போரை செய்ய இஸ்ரேலால் முடியாமல்த்தான் இருந்திருக்கும்.

மாவிலாற்றில் தண்ணியை மறித்து விட்டார்கள், அப்பாவி மக்கள் தாகத்தில் தவிக்கிறார்கள், பயிர்கள் கால்நடைகள் அழிகிறன என்று ஒரு போலியான "மனிதாபிமான" காரணம் அரசுக்கு பேருதவியாய் அமைந்தது.

அதேபோல ராக்கெட்டுகளை வானத்திலே சிதறடிக்கும் iron dome கவசம் முழு இஸ்ரேலயும் பாதுகாக்க, ராக்கெட்டுக்களால் ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிந்தும், எம்மக்கள் மீது குண்டுமழை பொழிகிறார்கள் இதை தடுக்க இந்த மனிதாபிமான நடவடிக்கை தேவை என்று இஸ்ரேல் காரணம் கூறித்தாக்க, ஹமாசே வழி செய்து கொடுத்தது.

இதை தான் அரை வேக்காட்டு தனம் என்டுறது...  
 
இஸ்ரேலின்  விமானத்தாக்குதல்கள் இந்த செய்தி வந்த  முதல் நாளே ஆரம்பமாகி  27 பலஸ்தீனியர்கள்  காசா பகுதியில் கொல்லப்பட்டனர் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருக்கிண்றனர் எண்று  இணைப்பில் உள்ள செய்தி தெளிவாக சொல்கிறது... 
 
இஸ்ரேலின் விமான தாக்குதலில்  6 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதுக்குமான பதிலடியாகவே  ஏவுகணைகள் வீசப்பட்டதும் என்பதும் தெளிவாக செய்தி சொல்கிறது... 

 

இசுரேலிய பலஸ்தீனப் பிரச்சினை பற்றி ஒரு தெளிவான கட்டுரை யாழில் இருக்கு, இது பற்றி கருத்துச் சொல்பவர்கள் முதலில் அதைப் படிக்க வேண்டும்.

 

மாவிலாறு பிரச்சினை தான், போருக்குக் காரணம் என்பவர்கள், அதற்க்கு முன்னரே மேற்குலகின் அனுசரணையாளர்கள், புலிகள் சமாதான உடன்படிக்கை செய்த பின்னும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும், வாசிங்டன் மானாட்டுக்கு அழைக்கமுடியாது என்பறதும், சிறிலங்காப் படைகளுக்கு போருக்குத் தேவையான சகல தளபாடங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது, புலிகளின் வழங்கல்களை கடலில் அழித்ததௌ இவை எல்லாம் போரிற்கான நடவைக்கைகள் என்பதை மறந்து விட்டர்களா மறைக்கிறார்களா?  

 

ஒரு மாவிலாறு இல்லாவிட்டல் ஒரு சிறு கல் எறிந்ததைக் கூடப் பிரச்சினை ஆக்கி போரை ஆரம்பிக்கலாம்.

 

இச்ரேலிய ஆக்கிரமிப்பே இப் போரிற்கான அடிப்படைக் காரணம். இதனை ஹமாஸ் முதற்கொண்டு நேற்று பிரித்தானியாவைன் எதிர்க்கட்ச்சி வரை சொல்லி விட்டது. பிரித்தானியாவைப் பொறுத்தவரை மக்கள் இசுரேலை வெறுக்கிறார்கள், இன்றைய இணைய உலகு, பல காட்ச்சிகளை அவர்கள் கண் முன் நிறுத்தி இருக்கிறது. பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் இன்று உடனடி யுத்த நிறுத்ததிற்க்கு அழைப்பு விடுதிருக்கிறார். மேற்குகலகு வழங்கி வரும் இசுரேலிய ஆதரவு கேள்விக் உள்லாக்கப்படுள்ளது. இங்கே சிலர் நடக்கும் விடயங்களை விளங்காது கத்துக்குட்டித் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அமெரிக்கா மீதும் மேற்குலகு மீதும் பெரும் அழுத்தங்கள் உள்ளன. இதில் நாம் மேற்குலகின் மக்களோடும் முற்போக்கான தரப்பினருடனும் ஒன்றிணைந்து போராடுவது எமக்கான விடுதலைக்கும் முக்கியமானது. பழைய சூதிரங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காமல் , மாறும் உலகை உன்னிப்பாகக் கவனித்து நாம் எமது வியூகங்களை வகுக்க வேண்டும்.

 

  


http://www.yarl.com/forum3/index.php?showtopic=143691#entry1030095

 

அடி நுனி தெரியாது உளறுபவர்கள் மேற் காட்டிய கட்டுரையைப் படித்துவிட்டு எழுதவும்.

தமிழர் போராட்டத்தில் அநேக தமிழர்கள் பார்வையாளர்கள்தான். பலஸ்தீன போராட்டத்திலும் அநேக இஸ்லாமியர்கள் இஸ்லாமிய நாடுகள் பார்வையாளர்களாகத்தானிருக்கிறார்கள். இதில் மிகக் குறைந்தவர்கள் அக்கறையுடனிருப்பதும் அவர்கள் மோதிக் கொள்வதும் தேவையற்றது.

Mr Hammond told the Sunday Telegraph the crisis in Gaza could become "an endless loop of violence".

"It's a broad swathe of British public opinion that feels deeply, deeply disturbed by what it is seeing on its television screens coming out of Gaza," he said.

"The British public has a strong sense that the situation of the civilian population in Gaza is simply intolerable and must be addressed - and we agree with them."

He said there "must be a humanitarian ceasefire that is without conditions", adding: "We have got to get the killing to stop."

http://www.bbc.co.uk/news/uk-politics-28628577

Israel must open talks with Hamas
In Gaza, neither side's weapons will break the other's resolve. Only a political approach can bring lasting peace
  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனர்கள் என்றால் எந்தப் பலஸ்தீனர்களைப் பற்றி கதைக்கிறீர்கள்.. காசாவா.. வெஸ்ட்பாங்...கா..??!

 

வெஸ்ட்பாங் தொடர்பில் மிகத்தெளிவான முடிவெடுக்கலாம்..! அவர்கள் தான் ஒரு இனப்படுகொலையாளியான மகிந்தவை கூப்பிட்டு சமாதான விருது கொடுத்து அனுப்பியவர்கள்..! அவர்களுக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசம் இல்லை.

 

காசாவைப் பொறுத்தவரை.. இன்று அந்தப் பகுதி மட்டும் தான் பலஸ்தீனர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை உலகுக்கு உணர்ந்தி நிற்கிறது. அதனை வெளிப்படுத்துவதால் அவர்கள் உலக வல்லாதிக்க சக்திகளால் தண்டிக்கப்படுகிறார்கள். அதன் விளைவே இன்றைய போர். இதே வல்லாதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில்.. காசா பகுதி பலஸ்தீன மக்களின் துயர் பகிர்ந்து நிற்பதே ஈழத்தமிழர்களின் நிலைப்பாடாக இருக்கும்.

 

தென்னமெரிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக கொதிக்கும் அதேவேளை.. மகிந்தவை கூப்பிட்டு சமாதான விருதும் விருந்தும் வைச்சவை. இவர்கள் எவரும் அமெரிக்காவின் இரட்டை முகக் கொள்கைக்கு அப்பாலானவர்கள் அல்ல என்பதையும்.. அதே காசா மக்களே உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டும் உள்ளனர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் பலருக்கு உடனடிக் காரணம் என்பதன் தாற்பரியம் புரியவில்லை.

பெர்டினாந்து இளவரசர் கொல்லப்பட்டாமல் இருந்திருந்தால் 1ம் உலக யுத்தம் வராமல் விட்டிராது என்று கூறமுடியாது.

ஆனால் அவர் கொல்லப்பட்டதால்தான் வந்தது. ஆனால் அது மட்டுமே யுத்ததுக்கான காரணமில்லை. பிரதான காரணம் கூட இல்லை.

தல, இளைனர்களின் கொலைக்கான இஸ்ரேலின் பதில் விமானத்தாக்குதலாயே இருந்தது. கமாஸ் ராக்கெட் வீசப்போய், அது பெரும் எடுப்பில் படைகளை கூட காசாவுக்குள் அனுப்பி நடவடிக்கை எடுக்குமளவுக்கு இஸ்ரேலுக்கு களம் அமைத்துக்கொடுத்தது.

மாவிலாறை திறப்பதாய் சொல்லி தொடங்கிய யுத்தம் எப்படி புலிகளை அழிக்கும் வரை என்று இலக்கு விஸ்தீரணம் அடைந்ததோ, அதே போல ராக்கெட்டை தடுப்பதாக சொல்லி ஆரம்பித்த யுத்தம் இப்போ சுரங்கங்களை அழிக்கும் வரை என்று விரிவு பட்டு நிக்கிறது.

சுரங்கங்களை அழித்த பின், இஸ்ரேல் தானகவே நடவடிக்கையை நிறுத்தும், படைகளையும் விலக்கும். காசாவின் மீதான பொருளாதாரதடை தொடரும்.

பாலத்தீனியர்கள்ளுக்கு பல அனுதாபிகள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பலமற்றோர். இஸ்ரேலின் அனுதாபிகள் சிலரே ஆனால் அவர்கள் மிகப்பலமானோர்.

நாமும் திருமுகன், சீமான், சூடான் என்று நியாயம் பேசுபவர்கள் பின்னால் அலையாமல் பலசாலிகளை நண்பர்களாக்கி கொள்வதே உசிதம்.

எதிர்கட்சியில் இருக்கும் வரை மிலிபாண்ட் என்ன வேணுமெண்டாலும் சொல்லலாம். ஆட்சிக்கு வந்தா சுருதி தானாய் மாறும். அதுதான் யூதனின் கெத்து ( மிலிபாண்டும் அரை யூதனே). லிபரல் டெமெகிரட்ஸ் எடுக்காத பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடா? ஆட்சிக்கு வந்ததும் என்னாச்சு? கப்சிப்.

யூதர்களிடம் நாம் எவ்வளோ படிக்கலாம். முன்னுதராணமாய் கொள்ளலாம். நீதி நேர்மை நியாயம் எல்லாத்தையும் தலையை சுத்தி எறிந்தால்.

யாரும் நம்மிடம் நீதி பாராட்டவில்லை. நாம் ஏன் அதை கட்டிக்கொண்டு அழுவான்?

Ethical foreing policy is an impossibility என்பார்கள்.

இதை சொல்லப் போனால் விதண்டா வாதம் செய்வீர்கள்.

அருச்சுன் ஒரு பதிவில் சொன்னார் "எல்லா .....கு கூட்டங்களும் எப்படி ஒரு இயக்கத்தின் ஆதரவாளர்களய் ஆனார்கள்" என்று.

உங்களின் ஒவ்வொரு கருத்தும் இதை எனக்கு நியாபகப் படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் இவ்வாறு இருக்காவிட்டால் இவர்கள் எல்லாம் சேர்ந்து இஸ்ரேலை அழித்துவிடுவார்கள்,இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்கர்களை சுத்தமாகப்பிடிக்காது ஏனென்றால் நண்பர் மாதிரி கூட இருந்து குழி பறிப்பவர்கள்.இஸ்ரேல் பலமான 3 எதிரிகளுக்கு நடுவில் தனியாக இருந்து தம்மை பாதுகாப்பவர்கள் பலவீனமான சமரச்ங்களை ஒருபோதும் செய்வதில்லை எதிகளுக்கு உளவியல் ரீதியாக ஒரு அச்சுற்த்தலை கொடுப்பவர்கள் நீங்கள் எங்களை அடித்தால் நாம் பலமாகபதிலடி கொடுப்போம் என்பதே அவர்கள் செய்தி.இவற்றைப்பார்க்கும் போது இஸ்ரேலியர்கள் நம்மவர்களின் குணாம்சத்துடன் ஒத்து போகிறது இனம் இனத்துடந்தான் சேரும்.

அடக்கு முறையாளன் எதை செய்தாலும் அடங்கி போங்கோ எனும் எலும்புக்கு வாலாட்டும் ஒருவரின் குரலாக மட்டும் தான் கோசானை  காண முடிகிறது... 

 

இது வரை நுணிப்புல் மேஞ்ச  அரை குறை  ஏவுகணை வீசியதால்  இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது எனும் நிலையில் இருந்து மாறி ஒரு புது கதையை கொண்டுவாறார்...

 

அந்த புது கதை  இனப்படுகொலையாளனை நியாயப்படுத்த இஸ்ரேலியை இளைஞர்களை ஹமாஸ் கொலை செய்தது எண்டு இப்ப   கோசான்  சொல்லவாறார்.. 

 

இலங்கையைக்கும் பொறுத்தவரைக்கும்  இனப்படுகொலையை எப்படி செய்யவேண்டும் எண்று இஸ்ரேலிடமே பயிற்சி எடுத்து கொண்டது..  F - File எனும் பயிற்சி திட்டம்  கொடுக்கப்பட்டது...   இலங்கையில் நடக்கும் படுகொலைகளின் மூல தந்திரமே இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதே... 

 

ISIS அல்கைதா போண்ற அமைப்புகளின் பேரெளுச்சியால் அதிர்ந்து போன இஸ்றேல்  பலஸ்தீனத்தை மேலும் பலவீனப்படுத்தவும்  தங்கள் மீதான  வெளிநாட்டு படையணிகள் ஊடறுக்க சந்தர்ப்பம் கொடுக்காமல் இந்த போர் ஆரம்பிக்க பட்டு இருக்கிறது...  

 

என்னை பொறுத்த வரைக்கும் இண்டைக்கு லெபணானில் , சிரியாவில் எழுச்சி உற்று  நடக்கும் போர்   இஸ்ரேலுக்குள் பரவுவதை இஸ்ரேரினால் இந்த வலிந்த தாக்குதல் தடுக்க  போவதில்லை...   இதை தான் இங்கிலாந்து ஊடகங்கள்  தலையில் அடித்து சொல்லி கொண்டும் இருக்கிண்றன... 

 

இண்டைக்கு பலஸ்தீன கொலைகளை தடுக்க முடியாதவர்களால்  யூதர்கள் மீதான கொலைகளையும் தடுக்க முடியாமல் போகலாம்... 

Edited by தயா

தயா,

 

ஹமாஸ் இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தம்மிடம் 10, 000 ராக்கெட்டுக்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 2000 ராக்கெட்டுக்கள் வரை இஸ்ரேல் மீது ஏவியிருப்பதாகவும் உரிமைகோரியிருப்பது உங்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. அப்படியிருக்க, அவர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்துவதை கண்டீர்களா என்று கேட்பது சரியா??

 

அடுத்தது, இஸ்ரேலின்  3 இளைஞர்களைக் கடத்திக்கொண்டு போய்க் கொன்றதுடந்தான் இந்த மோதலே ஆரம்பமானது. ஹமாஸ் பொல்லைக் கொடுக்க இஸ்ரேல் அதைப் பலமாகப் பிடித்துக்கொண்டு பேயாட்டம் ஆடுகிறது. 3 இளைஞர்களின் உயிருக்காக இப்போது 1700 பாலஸ்த்தீனர்களும் 62 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேலின் தாக்குதல இப்போது ராக்கெட் ஏவுதளங்களையும், இஸ்ரேலினுல் ஊடுருவ அமைக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கப் பாதைகளையும் அழிப்பதையும் தாண்டி ஹமாஸினை முடிந்தவரை பலவீனப்படுத்துவதுவரை செல்கிறது.

 

அரபுலகின் ஜாம்பவான்களே வாயை மூடிப் பேசாமல் வேடிக்கை பார்க்கும்போது நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அரபுலகமே சியா - சுன்னி மதமோதலுக்குள் ஒருவர் ஒருவரை அழிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகையில் நாம் என்ன செய்யமுடியும்?

 

விடுங்கள், ஒரு தரப்பு போதுமடா சாமி என்கிற நிலைக்கு வரும்போது மோதலும் நின்றுவிடும்.

 

 

ஹமாஸ் இந்த கொலைகளை செய்து இருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை ...   ஹிஸ்புல்லா கூட செய்து இருக்கலாம்... 

 

அதோடு  இஸ்ரேலுக்குள் நடந்த கொலைகளுக்கு காசாவில்  தக்குதல் நடத்தப்படுவது  நீதி விசாரணைக்கு உகந்தது கிடையாது... 

 

மிக முக்கியமாக  இஸ்ரேக்குக்கு ஹமாசின் இருப்பே பலமானது...  ஹமாஸ்  பொருளாதாரத்தில் அவ்வளவு பலமான அமைப்பு கிடையாது அவர்களின் இடத்தை பலம் கொண்ட லெபனானை தளமாக கொண்ட  ஹிஸ்புல்லாவோ இல்லை ISIS அமைப்போ இல்லை ,  அல்கைதாவோ நிச்சயம்  கையகப்படுத்தும்...  ஆக குறைந்தது பலவீனமான ஹமாசை  நீக்கி விட்டு அந்த இடத்துக்கு வரவும் முயலும்... 

 

அப்படி நடக்குமாக இருந்தால் எனக்கு மகிழ்சியே...!!    எனது இன மக்களின் படுகொலைக்கு திரைக்கதை எழுதியவர்களும்,  இனபடுகொலை சிங்கள இனவாத்தை நியாய படுத்தும் "PR "  நிறுவனங்களும் இந்த  இஸ்ரேலியர்களுடையதே... 

  • கருத்துக்கள உறவுகள்
அரபுலகின் ஜாம்பவான்களே வாயை மூடிப் பேசாமல் வேடிக்கை பார்க்கும்போது நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அரபுலகமே சியா - சுன்னி மதமோதலுக்குள் ஒருவர் ஒருவரை அழிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகையில் நாம் என்ன செய்யமுடியும்?

 

 

 

சவூதி இஸ்ரேலை கண்டித்து அறிக்கை விட்டிருந்தது. பான் கி மூனும் நித்திரையில் இருக்கும் குழந்தைகளை  குண்டு போட்டு கொல்வதை போல் வெட்ககரமான செயல் இந்த உலகத்தில் இருக்க முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.

 

அடுத்தது, இஸ்ரேலின்  3 இளைஞர்களைக் கடத்திக்கொண்டு போய்க் கொன்றதுடந்தான் இந்த மோதலே ஆரம்பமானது. ஹமாஸ் பொல்லைக் கொடுக்க இஸ்ரேல் அதைப் பலமாகப் பிடித்துக்கொண்டு பேயாட்டம் ஆடுகிறது

 

 

 

புலிகள் 13 இராணுவத்தை கொன்றதற்கு 1983ல் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற் கொண்ட தாக்குதலும் சரியானது உங்களின் கருத்தின் படி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.