Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுவனை நலன் விசாரித்தார் ஜனாதிபதி!

Featured Replies

temple%20tree%20meet%20654.jpg

 

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்ட சிறுவன், அவரது பெற்றோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்தார். இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ மற்றும் பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் உடனிருந்தனர். சிறுவனின் நலன் குறித்து அவரது பெற்றோரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் 4 வயது மகனான டனிது யசீன் என்ற சிறுவன் கடந்த 28ஆம் திகதி கடத்தப்பட்டார். இந்தச் சிறுவன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்
 
temple%20tree%20meet%20655.jpg
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டிலை எக்கச்சக்கமான பிரச்சளையள் இருக்க மாண்புமிகு ஜனாதிபதி இப்ப இதை ஏன் தூக்கிப்பிடிக்கிறார்?? 

  • கருத்துக்கள உறவுகள்

உள்குத்துத்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலை எக்கச்சக்கமான பிரச்சளையள் இருக்க மாண்புமிகு ஜனாதிபதி இப்ப இதை ஏன் தூக்கிப்பிடிக்கிறார்?? 

 

தன்ட பாதுகாப்புபடையும் தானும் சிறுவர்களை பாதுகாப்பதில் புலியாம்....(அக்கறை)

A photo op (sometimes written as photo opp), short for photograph opportunity (photo opportunity), is an arranged opportunity to take a photograph of a politician, a celebrity, or a notable event.[1]

The term has acquired a negative connotation, referring to a carefully planned pseudo-event, often masqueraded as news.[3] It is associated with politicians who perform tasks such as planting trees, picking up litter, and visiting senior citizens, often during election cycles, with the intent of photographers catching the events on film, generating positive publicity.

http://en.m.wikipedia.org/wiki/Photo_op

போட்டோ ஒப் என்றால் புகைப்பட சந்தர்ப்பம் என்று அர்த்தம்.

அரசியல் வாதிகள் நுணுக்கமாக திட்டமிட்டு மரம் நடுதல், குப்பை பொறுக்குதல், கடத்தப்பட்ட சிறுவனை கட்டி அணைத்தல் போன்ற நிகழ்வுகளை அரசியல் இலாபத்திற்காக செய்திகளாக வெளியிடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

temple%20tree%20meet%20654.jpg

 

மகிந்த: தம்பி.. றோல் சாப்பிட்டிட்டா. எனி டீல் பேசுவமா. வீட்டுக்கு வேலைக்கு ஆள் தேவைப்படுது வாறியா.. இதை மாதிரி நிறைய றோல் தாரன். (மனசுக்க இதையும் நினைச்சுக்கிறார்.. இப்படி எலும்புத் துண்டு போட்டுத்தானே ஹக்கீம்.. டக்கிளஸ்.. கருணா.. கேபின்னு.. பெரிய வளர்ந்த பையங்களையே எனக்கு சூ தொடைக்க வைச்சிருக்கிறன்.) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட பையன் றோலஸ் சாப்பிட்டது என்ரை சாப்பாட்டுக் கண்ணுக்கு படமால் போச்சே :lol:

  • தொடங்கியவர்

வாழ்வு ஏன் இப்படி இருக்கிறது?

 

Shiranthi.jpgஇங்கே எல்லாம் சரியாக இருக்கிறது; நாம் சரியாக இருக்கி றோம்; சரியான முறைப்படிதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம் என்று அடித்துச் சொல்ல முற்படுகிறவர்கள் குறித்து சந்தே கம் கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லாம் சரியாக இருந்தால், ஏன் இத்தனை துன்பம்? ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு? ஏன் இத்தனை இழிவுபடுத்தல்கள்? ஏன் பலர் வாடச் சிலர் வாழும் நிலைமை? நாளும் பொழுதும் நாம் பார்க்கும் கேட்கும் சமூக வக்கிரங்கள் கொஞ்சமா?

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் ஒவ்வொருவருமே குற்றம் செய்பவர்களாகவோ அல்லது குற்றத்திற்குத் தூண்டுபவர் களாகவோ தானே வாழ வேண்டியிருக்கிறது? நாம் சாப்பிடுவதென்பது, உலகில் எங்கெங்கோ பல்லாயிரம் பேர் பட்டினியால் செத்துக் கொண்டிருப்பவர்களின் உணவைத் திருடியதாகத்தானே இருக்கிறது?

நாம் நாளுக்கொன்றாக உடுத்தும் ஆடைகள் கூட, உடுதுணி வாங்க முடியாத, குளிருக்குப் போர்த்திக்கொள்ளத் துண்டில்லாத பல்லாயிரம் மனிதர்கள் இருக்க, நாம் அணிந்துகொள்வதாகத் தானே இருக்கிறது? நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதுகூட, எங்கெங்கோ பலர் வறுமையாலும் வன்முறையாலும் வாழமுடியாமல் செத்துக் கொண்டிருக்க நாம் இருப்பதாகத்தானே இருக்கிறது?

ஆக, இந்த சமூகம், கலாசாரம், ஆட்சி, நாம், நமது வாழ்க்கை முறை எதுவும் இங்கு சரியாக இல்லை என்பதிலிருந்துதான் நாம் தொடங்க வேண்டியிருக்கிறது. இன்றிருக்கும் இந்தச் சமூக அமைப்புமுறை, ஒழுக்கவிதிகள், பழக்கவழக்கங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நாம் நடக்க வேண்டு மென அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பின் தர்மமாக ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும்தான் தொடர்ச்சியாக இருக்கி றதெனில் நாம் என்ன செய்வது?

நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்பதை வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருப்பதற்கான அதிகாரத்துக்காகவே எல்லோ ரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். எல்லா வித்தியாசங்களுக்கும் அப் பால் நாம் எல்லோருமே மனிதர்கள்தானே? அப்படி இருக்க, இந்தப் பாகுபாடுகள் இழிவுபடுத்தல்கள் எல் லாம் எங்கிருந்து வருகின்றன? கலாசாரத்திலிருந்தா, மரபிலி ருந்தா, மொழியிலிருந்தா, மத நம்பிக்கைகளிலிருந்தா, சொத்தி லிருந்தா, அதிகாரத்திலிருந்தா, நாம் கேட்டு வளர்ந்த கதைகளிலிருந்தா…

நாம் ஒருவரையொருவர் தாழ்த்தவும், கீழ்ப்படுத்திவிடவும், விளிம்புநிலைக்குத் தள்ளி அப்படித் தள்ளிவிடப்பட்டவர்கள் துன் புறுவதும் துயர் சுமப்பதும் குறைமனிதர்களாய் சிதைந்தழிவதும் தவிர்க்க முடியாததுதானா? கண்டு பேதலித்து நிற்க முடியாது; உலகநியதி இது; நாம் நம் பாட்டைப் பார்த்துப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்- என்ற குற்றமற்ற மனோநிலையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டோம்? சமமற்ற மனிதர்களாகவே வாழ்வதில் எவ்வாறு சமாதானமடைந்து கொண்டோம்? இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? மற்றவர் பற்றியும் அவரை நாமும்தான் தாழ்த்துகிறோம் என்பது பற்றியும் கவ லையே படாது சென்றுகொண்டிருக்கும் மனநிலை எப்படிச் சாத் தியமாகிற்று? கேள்விகளுக்கு விடை காணாதவரை இந்தச் சமூக அமைப்புக் குறித்துத் திருப்தியடைய ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. 

கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போரின் வாழ்க்கை பற்றிக் கவ லைப்படாமல் மற்ற சிலர் வாழ்வதற்கு… என்ன தர்மநியாயங்க ளும் கனவுகளும் ஏமாற்றுக்களும் தேவையோ அவையெல்லாம் தான் சமூக நியதிகளாகவும் விதிகளாகவும் அரசியலாகவும் வெற் றிகளாகவும் இங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்!

http://salasalappu.com/?p=84856

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.