Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபரல் கட்சியின் முற்போக்குமிக்க தாராளவாத கொள்கையைத் தொடர, உங்களுடன் இணைந்து செயற்பட உங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றேன்: ஹரி ஆனதசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  gary-200-seithycom.jpg

லிபரல் கட்சியினர், ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதிக்கு தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான ஆயுத்தங்களைச் செய்தவண்ணம் உள்ளபோது ஹரி ஆனதசங்கரியின் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.

லிபரல் கட்சியினர், புதிய ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதியில் வருகின்ற பொதுத் தேர்தலுக்கான தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நியமனத் தேர்தலை எதிர்வரும் ஆவணி 20ம் திகதி மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரரில் (Scarborough Convention Centre) நடாத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த நியமனத் தேர்தலில் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியும் போட்டியிட அறிவித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

  

தனது வாழ் நாள் முழுவதும் ஒரு சமூகசேவையாளனாகவும், மனித உரிமைவாதியாகவும், வழக்கறிஞராகவும், அப்பளுக்கற்ற சமூக சேவை புரிந்துவரும் ஹரி ஆனதசங்கரி அவர்கள் கடந்த இருபத்தியந்து வருடங்களுக்கும் மேலாக புதிய குடிவரவாளர்கள், இளையோர், அகதிகள் சார்பாக குரல் கொடுக்கும் ஒருவராக இருந்து வருகின்றார், இந்த அனுபவங்களின் ஊடாக, ஹரி மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த தொகுதி மக்களின் குடியியல், பொருளாதார தேவைகளைப்பற்றிய ஆழ்ந்த புரிந்துணர்வை பெற்றுள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அறிக்கை:

"கடந்த வருடம் ஐப்பசி மாதம், இந்தப் புதிய தொகுதியிலே கனேடிய மத்திய லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட என் முயற்சியைத் தொடங்கிய நாள் தொடக்கம், இந்த வேட்பாளர் தெரிவிற்கான அறிவிப்புக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன், வேட்பாளர் தெரிவிற்கான இந்தச் செயல்முறை மூலம் எமது மக்களைச் சந்தித்த போது, எமது சமூகத்துக்கும், எமது நாட்டிற்கும், எப்படியான ஒரு எதிர்காலத்தை அவர்கள் விரும்புகின்றார்கள் என்பதை அறியக்கூடிய ஒரு வாய்ப்புக்கிட்டியது.

பல விதங்களிலே உற்று நோக்குகின்றபோது, ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதி, மாற்றமடைந்து வருகின்ற மொத்தக் கனேடிய நாட்டின் பொருளாதாரத்தையுமே பிரதிபலிப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது, பன்முகத் தன்மையின் மூலம் பொருளாதரத்தில் மிகச் சிறப்பான வளர்ச்சியைக் காணக்கூடிய பெரும் சாத்தியம் உள்ளது, கடந்த வருடம் கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரரான ஸ்காபரோ குடும்பத்தினர் பலரைச் சந்திக்க கூடிய கிடைத்த அரிய வாய்ப்பு மூலம் அவர்களின் தேவைகள், நலன்கள், அக்கறைகளை அறிய முடிந்தது, அவர்கள் எல்லா மக்களையும் உள்ளடக்கிய, முற்போக்கு சிந்தனையுடன் கூடிய செயற்திட்டம் ஒன்றையே எதிர்பார்க்கின்றார்கள். எமது லிபரல் கட்சியின் முற்போக்குமிக்க தாராளவாத கொள்கையைத் தொடர, உங்களுடன் இணைந்து செயற்பட உங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றேன். இது எங்களின் காலம்."

ஊடகத் தொடர்புகளிற்கு:

அனிதா or நாதன்

416-507-4616

 

https://www.youtube.com/watch?v=cfXt2JF-4tg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114521&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி ஆனந்தசங்கரி சிறப்பான வெற்றியைப் பெற யாவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு தமிழனின் வெற்றியைப் பறித்து வேறொரு இனத்தவனிடம் தாரைவார்க்க முயலும் கபடதாரிகள் தோற்க வேண்டும்.

ஹரி ஆனந்தசங்கரி சிறப்பான வெற்றியைப் பெற யாவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு தமிழனின் வெற்றியைப் பறித்து வேறொரு இனத்தவனிடம் தாரைவார்க்க முயலும் கபடதாரிகள் தோற்க வேண்டும்.

வாக்காளராக பதிந்த ஒவொருவரையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்களிக்கச் செய்ய வேண்டும் .இதில்தான் எங்கள் வெற்றி தங்கியுள்ளது .நானும் அந்த இடத்தில் ஒத்துழைப்பு வழங்குவேன் .

தமிழ் நாட்டிலை நெடுமாறன் ஐயா மார்வாடிகளை திரத்துவதற்கு முயற்சிகிறார் ,இங்கு பரதேசிகள் மார்வாடிக்கு ஒத்துழைப்பு ,இந்த கபடதாரிகள் ஒழிந்தால் தான் மக்கள் சுயமாக சிந்திப்பார்கள் .

GA-3.jpg

Edited by Gari

ஹரி ஆனந்தசங்கரிக்கு உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தலைவர்களின் ஆதரவு பெருகி வருகின்ற நிலையில், இரா சம்பந்தன் அவர்களின் முக்கியத்துவம் பெறும் ஆதரவு அறிக்கை

August 18, 2014 
 

எம் தாயக மக்களின் உயர்ச்சிக்கும், சுதந்திரமான வாழ்விற்கும் உலக அரங்கில் போராடும் எமது புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் பலர் திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர் . US Tamil Political Action Council (USTPAC) இன் தலைவர்: DR. காருண்யன் அருளானந்தம்,USTPAC இன் முன்னாள் தலைவர்: DR. எலியாஸ் ஜெயராஜா, Globel Tamil Forum தலைவர்: DR. S.J. இமானுவேல்,
Australian Tamil Congress (ATC) தலைவர்: DR. ராஜ் ராஜேஸ்வரன். என்று தொடருகின்ற புலம் பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடன் இன்று ஈழத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் வெளியிட்டுள்ள ஆதரவு அறிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது, மதிப்புக்குரிய திரு இரா சம்பந்தன் அவர்களின் முழு அறிக்கை பின்வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் கனடாவாழ் தமிழ்மக்களுக்கு விடுக்கும் முக்கிய செய்தி

gary_anandasangary.jpgஎதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் தொகுதியில் கனடா லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரைத் தெரிவு செய்யும் நியமனத் தேர்தலில் திரு ஹரி ஆனந்தசங்கரி போடியிடுகின்றார், இவர் ஒரு நீண்டகால மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞரும் என்பதுடன், இலங்கையில் உள்ள தமிழ்மக்களது நலன்களுக்காகத் தன்னலமற்ற பணி ஆற்றியிருக்கிறார் . குறிப்பாக ஹரி ஆனந்தசங்கரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒரு பயனுடைய களம் என ஒரு சில செயற்பாட்டாளர்கள் மட்டுமே எண்ணியிருந்த காலம் முதல் எமது மக்களின் உரிமைகளுக்காக மனித உரிமைப் பேரவையின் நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஈடுபாட்டுடன் வாதாடி வந்திருக்கிறார் என்பதை நாங்கள் நினைவு கூருகிறோம், அந்த முயற்சியில் ஈடுபட அவர் மேலும் பலரை ஊக்குவித்தும் வந்துள்ளார். இந்த முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஹரி இலங்கையில் சனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளோடு மிக நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக எமது போராட்டத்தின் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் அவர் பங்கு கொண்டு வந்திருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் அறிவுரை இரண்டினாலும் நாங்கள் பாரிய அளவில் பயன் அடைந்துள்ளோம். உலகளாவிய அளவில் எமது மக்கள் சார்பாகப் பொறுப்போடு வாதாடக் கூடியவர்கள் தேவைப்படும் இந்த நேரத்தில் ஹரி கனடிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவது மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

ஹரி அவர்களைப் எந்தத் தயக்கமும் இன்றி நான் பரிந்துரை செய்கின்றேன். அவர் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்துக் கனடியர்களுக்கும் அவர் பணிபுரிவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற அவருக்கு ஆதரவு அளிக்குமாறு எமது மக்களை அன்போடு வேண்டிக் கொள்வதுடன் அவர் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெருவித்துக் கொள்ளுகின்றேன்.

அவரது ஆதரவு அறிக்கையை பார்வையிட இதில் அழுத்தவும்

இரா. சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

http://ekuruvi.com/sampanthan-mp-gary-anandasangary-2014/ekuruviTamilNews

 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

பழைய உசார் திரும்ப வந்திட்டுது.

 

 

உள்ளேன் ஜயா  :wub:

 

ஹரி அவர்களைப் எந்தத் தயக்கமும் இன்றி நான் பரிந்துரை செய்கின்றேன். அவர் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்துக் கனடியர்களுக்கும் அவர் பணிபுரிவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற அவருக்கு ஆதரவு அளிக்குமாறு எமது மக்களை அன்போடு வேண்டிக் கொள்வதுடன் அவர் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெருவித்துக் கொள்ளுகின்றேன்.

 

தாயகமும்

புலமும்  ஒன்றாகி  நின்றால் மட்டுமே  தமிழரின் பாதுகாப்பு உறுதியாகும்

நல்ல விடயம்

நன்றிகள் ஐயா

Edited by விசுகு

இன்று நடைபெற இருக்கும் தேர்தலில் இருவர் தான் போட்டி ,மற்றவர்கள் விலகி விட்டார்கள் .

பஞ்சாபியான அஸ்வானிக்கும் ,தமிழரான ஹரிக்கும் தான் நேரடிப்போட்டி .

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற இருக்கும் தேர்தலில் இருவர் தான் போட்டி ,மற்றவர்கள் விலகி விட்டார்கள் .

பஞ்சாபியான அஸ்வானிக்கும் ,தமிழரான ஹரிக்கும் தான் நேரடிப்போட்டி .

 

 

நல்லசெய்தி

 

தொடர்ந்து  முன்னேற வாழ்த்துக்கள்

ஹரி அவர்களைப் எந்தத் தயக்கமும் இன்றி நான் பரிந்துரை செய்கின்றேன். அவர் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்துக் கனடியர்களுக்கும் அவர் பணிபுரிவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற அவருக்கு ஆதரவு அளிக்குமாறு எமது மக்களை அன்போடு வேண்டிக் கொள்வதுடன் அவர் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெருவித்துக் கொள்ளுகின்றேன்.

 

தாயகமும்

புலமும்  ஒன்றாகி  நின்றால் மட்டுமே  தமிழரின் பாதுகாப்பு உறுதியாகும்

நல்ல விடயம்

நன்றிகள் ஐயா

இதில் போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்ற கனடா உலகத்தமிழர் ,மக்கள் அவையை சேர்ந்த பரதேசிகள் இந்திக்காரனுக்கு முழு வீச்சாக களத்தில் இறங்கி வேலை செய்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்ற கனடா உலகத்தமிழர் ,மக்கள் அவையை சேர்ந்த பரதேசிகள் இந்திக்காரனுக்கு முழு வீச்சாக களத்தில் இறங்கி வேலை செய்கின்றார்கள் .

 

 

எனக்கு கனடாவில் நடப்பவை  பற்றி  தெரியாது

 

ஆனால் தமிழன் வெல்லணும்

எங்கிருந்தாலும் ஒற்றுமை  வலுவாக இருக்கணும்

எம்மிடையே  ஆன பிரிவுகள் களையப்படணும்

அதை  கெடுப்போர் எவராக இருந்தாலும்

களையெடுக்கப்படணும்

எனக்கு கனடாவில் நடப்பவை  பற்றி  தெரியாது

 

ஆனால் தமிழன் வெல்லணும்

எங்கிருந்தாலும் ஒற்றுமை  வலுவாக இருக்கணும்

எம்மிடையே  ஆன பிரிவுகள் களையப்படணும்

அதை  கெடுப்போர் எவராக இருந்தாலும்

களையெடுக்கப்படணும்

கனடாவில் உ .த வும் ,மக்கள் அவையும் மக்களுக்கு நல்லது செய்ய எவரையும் விடமாட்டாங்கள் /தாங்களும் செய்யமாட்டாங்கள் .ஹரியின் வெற்றி இவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும் .

மீண்டும் இரவு நல்ல செய்தியுடன் சந்திக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் உ .த வும் ,மக்கள் அவையும் மக்களுக்கு நல்லது செய்ய எவரையும் விடமாட்டாங்கள் /தாங்களும் செய்யமாட்டாங்கள் .ஹரியின் வெற்றி இவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும் .

மீண்டும் இரவு நல்ல செய்தியுடன் சந்திக்கின்றேன் .

 

நல்ல  செய்திக்காக காத்திருக்கின்றோம்

வெற்றி பெற வாழ்த்துக்களும்  வேண்டுதலும்

நன்றி

ஒரு தமிழனை எதிர்த்து ஒரு பஞ்சாபிக்கு குடை பிடிப்பதற்குப் பெயர் தமிழ்த் தேசியமா ?

August 18, 2014 - சிறப்பு செய்தி/ கட்டுரைகள், பிந்திய செய்திகள் - no comments

545957_246268072214812_1319295816_nஇந்த வார உலகத்தமிழர் ஏட்டில் கரி ஆனந்தசங்கரியை பழித்தும் தூற்றியும் ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. வழக்கம் போல் அதை எழுதியவர் யார் என்று போடவில்லை. ஆனால் அவர் யாராக இருக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதுவும் உலகத்தமிழர் ஏடு வெளியிடுகிற மொட்டைக் கடிதங்களில் ஒன்று.

இதிலும் கரி ஆனந்தசங்கரியை அவரது தந்தையார் வி. ஆனந்தசங்கரியோடு ஒப்பு நோக்கி இழிவாக எழுதப்பட்டுள்ளது. தந்தையின் அரசியலை கனடாவில் உள்ள மகனின் தலையில் போடுவது என்னவித நியாயம் என்று கேட்ட பின்னரும் அவர் மீதான வசை தொடர்கிறது.

அதில் ஒரு இடத்தில் கரி ஆனந்தசங்கரியை ஆதரித்து வெளிவந்த அறிக்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 50 பேர்களது படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் உ.தமிழருக்கு அவர்கள் கரி ஆனந்தசங்கரிக்கு கடமைப் பட்டவர்கள் என்றும் முகம் முறிக்க முடியாத நிலையில்தான் தங்கள் படங்களை பிரசுரிக்க சம்மதித்ததாக கரடி விடுகிறது. அதில் காணப்படுவர்கள் வாய்க்குள் விரல் வைத்தால் கடிக்கத் தெிரியாத பாப்பாக்களா? பேராசிரியர் சந்திரகாந்தன், வண.எஸ்.ஜே.இமானுவல் அடிகளார், மருத்துவர் வி.சாந்தகுமார், வழக்கறிஞர் நாதன் சிறிதரன், வைரமுத்து சொர்ணலிங்கம் போன்றோர் எல்லாம் சொந்த புத்தியில்லாதவர்களா? கரி ஆனந்தசங்கரிக்கு இவர்கள் எந்தவிதத்தில் கடமைப்பட்டவர்கள்? இதில் வைரமுத்து சொர்ணலிங்கம் போராட்டத்துக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த ஒருவர். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.

உண்மை என்னவென்றால் அவர்களது கூடாரம் காலியாகிறது. இது எனக்குக் கவலை அளித்தாலும் இந்த உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். கரி ஆனந்த சங்கரிக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் தமிழீழச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இன்னாள் கனடா தமிழ்க் கல்லூரியின் தலைவருமான வி.எஸ். துரைராசா அவர்களும் ஒருவர். இவர், தந்தை செல்வநாயகம் காலத்தில் இருந்து அரசியலில் இருந்து வருகிறார். சாவகச்சேரி வி.என். நவரத்தினம் நா.உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது வலது கை போல் பார்க்கப்பட்டவர். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) இல் துணைத் தலைவராக இருக்கிறார். மறுவாழ்வு அமைப்பிலும் இருக்கிறார். குறைந்தது ஒரு நாலு சகாப்தம் அரசியலிலும் சமூகத் தொண்டிலும் இருந்து வருகிறார்.

இவரது படத்தைப் பார்த்துவிட்டு அரண்டு போன உ.தமிழர் “தலைவர்” ஒருவர் தொலைபேசியில் அவரை அழைத்து “அங்கிள் என்ன இப்படி செய்துவிட்டீர்கள்” என்று ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார்.

இவர்கள் யாரையும் சுயமாகச் சிந்திக்க விட மாட்டார்கள். அவர்கள் கீறின கோட்டை யாரும் தாண்டக் கூடாது. கரியை ஆதரித்து 50 பேர் அறிக்கை விட்டால் உ.தமிழரும் அஷ்வானி பாரத்வாஜை ஆதரித்து ஒரு 100 பேரது படங்களைப் போட்டு ஆதரவு தெரிவிக்கலாம்தானே? யார் மறித்தார்கள்?

இவர்களது அகராதியின் படி இவர்கள் சொல்வதை கைகட்டி வாய்பொத்திக் கேட்டு நடப்பவர்கள்தான் தேசியவாதிகள். மற்றவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள். தேசியத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள்.

கரி ஆனந்தசங்கரி இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஏற்கவில்லையாம். அவர் மட்டுமல்ல நவநீதம் பிள்ளை, பான் கீ மூன், அய்.நா. நிபுணர் குழு, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, மன்னிப்புச் சபை, மனித உரிமைக் காப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்கள் இந்தக் கணம் வரை அப்படிச் சொல்லவில்லை. 2009 இல் மட்டுமல்ல 1983 இல் நடந்ததும் இனப்படுகொலைதான். நாடுமுழுதும் வாழ்ந்த தமிழ்மக்கள் தேடித் தேடித் தாக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள் கொள்கையடிக்கப்பட்டன. ஆனால் அதனைப் படுகொலை என்று ஒத்துக்கொள்ள இன்றுவரை உலகம் மறுத்து வருகிறது. ஆனால் இப்போது அதற்கான ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அய்.நா மனித உரிமை ஆணையர் அலுவலகம் நியமித்துள்ள 3 பேர் அடங்கிய நிபுணர் குழு 22-02-2002 தொடக்கம் 15-11-2009 வரை நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் (related cirmes) பற்றி விசாரணை செய்து வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான வலுவான சாட்சியங்களை நாங்கள் அந்தக் குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். காரணம் இனப்படுகொலையை எண்பிப்பது கடினமான காரியம். சுடான் தொடர்பாக அய்.நா. பாதுகாப்பு சபை நியமித்த விசாரணைக் குழு சுடானில் இனப்படுகொலை நடைபெறவில்லை, அரசு குறிப்பிட்ட ஒரு இனக் குழுவை இலக்கு வைத்துத் தாக்கவில்லை என்று கூறித் தீர்ப்பளித்துவிட்டது.

எனவே கரி மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டு ஒரு நொண்டிச் சாட்டு. அவரை உ.தமிழர் வட்டாரம எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு. அதனை பிறிதொரு தருணத்தில் எழுதுவேன்.

நண்பர்களை எப்படிப் பகைவர்கள் ஆக்குவது பற்றி யாராவது பாடம் படிக்க நினைத்தால் உ. தமிழர் குழாத்தை அவர்கள் அணுக வேண்டும். ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான இராதிகா சிற்சபைஈசனை பகைத்துக் கொண்டார்கள். தங்களது தாளத்துக்கு அவர் ஆட மறுத்ததுதான் அதற்கான காரணம். வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரையும அணைத்துப் போக வேண்டிய உ.தமிழர் தமிழ்மக்களை பிளவு படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு மற்றவர்கள் தமிழ்மக்களைப் பிரிக்கிறார்கள் எனப் புலம்புகிறார்கள். கோயில் வெளி வீதியில் சங்கிலி அறுக்கும் கள்ளனும் “கள்ளனைப் பிடி கள்ளனைப் பிடி” என்ற சொல்லிக் கொண்டுதான் ஓடிமறைவான். இந்த உத்தி தமிழ்மக்கள் மத்தியில் அது எடுபடாது.

தேசியத் தலைவர் தமிழ்த் தேசியத்துக்கு உழைத்த – உயிர்விட்ட – பலருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்துக் கவுரவித்தார். ஆனால் இவர்கள் துரோகப்பட்டம் சூட்டி இழிவு படுத்துகிறார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரா புலிகளின் சட்ட ஆலோசகராக கடைசிவரை இருந்தவர். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை (ISGA) என்ற வி.புலிகளின் அரசியல் திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்தை முதலில் எதிர்த்தார்கள். பின்னர் தேர்தலில் கலந்து கொண்டார்கள். அடுத்த கட்டமாக அந்த அமைப்பைக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். அதில் தோல்வி கண்டார்கள். உடனே நாகதஅ (ஜனநாயக அணி) என்ற போட்டி அமைப்பை தோற்றுவித்தார்கள். நாகதஅ புறக்கணித்தார்கள். பின்னர் இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி சொல்லாமல் கொள்ளாமல் அதில் இருந்து வெளியேறினார்கள். வெளியேறி ருத்ராவுக்கு நாக்கூசாது துரோகிப் பட்டம் கட்டினார்கள். அதில் உ.தமிழர் ஏட்டுக்குப் பாரிய பங்குண்டு.

இப்படித்தான் 2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க மெத்தப் பாடுபட்டார்கள். சிரிஆர் வானொலி இரவு பகல் தவில் அடித்தது. திருமலையில் சம்பந்தனை, யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை தோற்கடிக்க சூறாவளிப் பரப்புரை செய்தார்கள். புதிதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பணம் சேர்த்து அனுப்பினார்கள். தேர்தல் முடிவு வந்தபோது அந்தக் கட்சி கட்டுக்காசை இழந்தது. ஒருவர்கூட கரைசேரவில்லை. எல்லோரும் கூண்டோடு கைலாசம் போனார்கள். இதுதான் தங்களைத் தாங்களே தேசியவாதிகள் என்று சொல்பவர்களின் சோக வரலாறு.

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரு தமிழனை எதிர்த்து ஒரு பஞ்சாபிக்கு குடை பிடிப்பதற்குப் பெயர் தமிழ்த் தேசியமா? அந்தப் பஞ்சாபிக்கு ஆதரவாக உ. தமிழர் தொண்டர்களை மொட்டைப் பிரசுரங்களோடு வீடு வீடாக ஏற வைப்பதற்குப் பெயர் தமிழ்த் தேசியமா? இன்னும் ஒரு உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மே 18, 2009 க்குப் பிறகு இந்த அமைப்பு தாயக மக்களை அம்போ என்று கைவிட்டு விட்டது. வாழ்வாதாரங்களை இழந்த மக்கள், கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், கால் கை இழந்த போராளிக்கு ஒரு டொலரைத் தன்னும் உ.தமிழர் கொடுத்து உதவவில்லை. உதவி கேட்டவர்களுக்கு “நாங்கள் இப்போது மக்களிடம் பணம் சேர்ப்பதில்லை” என கையை விரித்துவிட்டார்கள்.

முடிவாக இவர்களுக்காக ஒருபிரார்த்தனை செய்வோம்.

பரமண்டலத்தில் இருக்கும் அனைத்து பரமபிதாக்களும் இவர்களை மன்னித்து அருள்வார்களாக!

- வேலுப்பிள்ளை தங்கவேலு

http://ekuruvi.com/nakkeran-canada-aug-18-2014/ekuruviTamilNe

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தேர்தலின் பிற்பகுதியில் முடிந்தால் சில விடயங்கள் பற்றி எழுதுகின்றேன். அந்த நிலைமை இப்போது வராது என நம்புகின்றேன். ஹரி அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று உலகத்தமிழர் கங்கணம் கட்டி நிற்க அவர்கள் இனப்படுகொலையை எதிர்க்க மறுத்தார் என்பது காரணமே கிடையாது.

தந்தை தவறு என்றால் எவ்வாறு மகன் பொறுப்பாக முடியும். இது குறித்து ஏற்கனவே ஹரி விளக்கமும் கொடுத்துள்ளார். தன் தாயார் 80களில் ஆநன்தசங்கரியோடு பிரிந்து வாழும் முடிவினை எடுத்தார் என்று.

ஹரி தமிழ்க் காங்கிரஸ் கூட இயங்குகின்றார். இத்தடவை அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்க் காங்கிரஸ்சின் பலம் மேலும் அதிகரித்துவிடும். ஏற்கனவே ராதிகா தமிழ் காங்கிரஸ் கூடத் தான் அதிகம் நட்புப் பாராட்டுகின்றார். அவரின் தேர்தல் நடவடிக்கைகளில் கூட தமிழ் காங்கிஸ் அதிகம் பங்களித்துமிருந்தது. சொல்லப் போனால் இதற்குப் பிற்பாடு தான் தங்களுக்கும் அரசியல் பலம் தேவை என உலகத்தமிழர் முடிவெடுத்து கொன்சேவ் கட்சியின் சார்பாளர்களாக மாற்றிக் கொண்டனர். அதில் சிலர் போட்டியிட்டனர். வெற்றி பெறவில்லை. நீதன் எல்லோரிடமும் நட்புப் பாராட்டுவதால் அவர் இவர்களின் அடையாளமாக இல்லாதுள்ளார். தவிர, அவரும் ராதிகாவின் கட்சியில் இருப்பதாலும் இவர்களுக்கு அது ஒருவகைப் பிரச்சனை.

எப்படியாவது, என்ன விலை கொடுத்தாவது ஒரு எம்பியைத் தங்களின் சார்பாக உருவாக்க வேண்டும். அல்லது, தமிழ்க் காங்கிரஸ்சுக்கு ஒரு பதவியும் கிடைக்கக்கூடாது. அல்லது தங்களின் சார்பில்லாத எவரும் வெற்றி பெறக்கூடாது என்பது தான் இவர்கள் கொண்டிருக்கின்ற முடிவு. இன்றைய தேர்தல் போட்டியில் ஹரி வெற்றி பெற்றால் பெரும்பாலும் அவர் எம்பி ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பொதுவாக ரொரன்றோ என்பது லிபரலின் கோட்டை. அவர்கள் எங்கு தோற்கின்றார்களோ இல்லையோ, ரொரன்றோவில் வெற்றி பெறுவார்கள். அதனால் இச் சந்தர்ப்பத்தில் ஹரியைத் தோற்கடித்தால் மட்டுமே, அவர் எம்பி ஆவதைத் தடுக்க முடியும். எனவே இத்தருணத்தில் தமிழீழம், தமிழ்த் தேசியம், போன்றவை ஆயுதங்களாகின்றன. நேரடியாக மோதமுடியாது என்பதால் இளையோர்களைப் பாவிக்கின்றார்கள்.

ஒரு விடயத்தினை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தருணத்தில் ஹரியைத் தோற்கடிக்க போடப்படும் வஞ்சகத் திட்டங்கள் இவர்களின் சார்பாக போட்டி போடும் எவரும் வெற்றி பெறமுடியாது என்பது வரலாறகப் போகின்றது. இவர்களுக்கு அது பற்றிய கவலை நிச்சயம் இருக்காது. தங்கள் சார்பாக யாரும் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. எதிரணியில் வெற்றி பெறக் கூடாது என்பதே இவர்களின் தேவை.

கனடிய அரசியலில் தமிழர்கள் பலம் பெற வேண்டும் என்பது தேவையான ஒன்று தான். அவர்கள் கட்சி சார்பற்ற தமிழர் பலத்தை உருவாக்கப்பட வேண்டியது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் கட்சிப் பலமாக நிருபிக்க மற்றவர்களை இழுத்து விழுத்தும் எந்த முயற்சியும் ஏற்புடையதல்ல. அதை ஆதரிக்கவும் கூடாது. இன்றைய தேர்தலில் ஹரியைத் தோற்கடித்தீர்கள என்றால் எச் சந்தர்ப்பத்திலும் எந்தத் தமிழனும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாது என்பதே திண்ணம். அதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகத் தமிழர் என்பது தமிழரின் பலம். ஆனால் அது தமிழர்களைப் பலவீனப்படுத்துவது என்பது ஆதரிக்க முடியாத ஒன்று.

ஹரியைத் தோற்கடிக்க இவர்கள் முயல்வார்கள். பலரை களம் இறக்குவார்கள். இது புதிய விடயமும் அல்ல. ஆனால் அதையும் மீறி ஹரிக்கு ஆதரவாக இறங்க வேண்டியது எங்களின் கடமை. நிச்சயம் ஒரு தமிழன் வெற்றி பெறுவதற்கான சூழலை உருவாக்க இன்றைய நாளைப் பாவித்துக் கொள்வோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வென்றால்.. நம்ம அர்ஜூனே வந்து எழுதுவார்.. சங்கரியின் இரத்தத்தில் ஊறிய அரசியல் அறிவுக்கு கிடைத்த வெற்றின்னு..!

 

இவர் தோற்றால்.. எழுதுவார்.. தமிழ் தேசிய அறிவிலிகளால் தோற்கடிக்கப்பட்டு விட்டார் என்று.

 

எதிர்காலத்தில் எந்த நாட்டில் என்றாலும் சர்ச்சைக்குரியவர்களை ஆதரிப்பதில் உள்ள நன்மை.. தீமைகள் தொடர்பில்... மக்கள் விழிப்போடு இருப்பது அவசியம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். அர்ஜின் என்ற நபருக்காகத் தானே தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்... போங்கள் ஐயா... இவர்களுக்கு எல்லாம் பயந்து கொண்டு கருத்துப் பகிர்கின்ற அளவு ஆகிவிட்டீர்களா?

உலகத் தமிழர் எவ்வாறு தோற்கக்கூடாது என்பது எங்களின் விருப்பமமோ, அந்தளவு அவர்கள் சில முட்டாள்தனமான செயற்பாடுகளின் காரணமாக நம்மவர்கள் தோற்றும் விடக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

அது ஓர் உதாரணத்துக்கு எழுதி இருக்கிறோம். சர்ச்சைக்குரியவர்களை தெரிவு செய்வதால்.. மக்களுக்கும் இதே நிலை தான் வரும். செய்வாரா.. செய்யமாட்டாரா.. என்ற நிலை.

 

இவர்கள் சில விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தத் தவறும் போது மக்கள் சூழ்நிலைக்கேற்ப தெளிவோடு இருப்பது அவசியம் இல்லையா. :icon_idea::)

சிரிப்பாய் சிரிக்குது கனேடிய தமிழ் சமூகம் .

 

முப்பதுவருடமாக போராட்டம் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொள்ளை அடித்தவர்கள் 2009 பின்னர் இரண்டாகி மூன்று நாலு ஆகி ஆளை ஆள் போட்டுத்தாக்குவதும் மொட்டை நோட்டிஸ் அடிப்பதும் அடிபடுவதும் என்று தொடருகின்றது .

 

பலர் புலி வேஷம் போட்டு ஊடகங்களில் வந்து தேசிய வியாபாரம் செய்ததே தமது சொந்த நலனுக்குத்தான் .இன்று ஓவ்வோருவராக கனேடிய அரசியலில் காலடி எடுத்துவைகின்றார்கள் .நல்ல விடயம் ஆனால் அதற்காக வந்த பாதையை மறந்து புலிகளா ? யார் அவர்கள் என்பதும் மற்றவர்களை போட்டு கொடுப்பதும் தான் கனேடிய தமிழர்களை விசனத்தில் ஆக்கியுள்ளது .

 

நாங்கள் கடந்த காலங்களில் வைத்த குற்ற சாட்டுகளை அறவே மறுத்தவர்கள் எங்களை துரோகியக்கியவர்கள் இன்று தாங்களே பிரிந்து அதே குற்ற சாட்டுக்களை அள்ளி எறியும் போது எப்பேர்பட்ட பிறப்புகள் இவர்கள் என இன்று வெளிச்சமாகின்றது .

 

ஹரி நேர்மையானவர் என்று ஒருநாளும் சொல்லமாட்டன் ஆனால் அவருக்கெதிராக இன்று குழி பறிப்பவர்களை விட ஆயிரம் மடங்கு திறம் .

இவர்கள் இப்படி அடிபடுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஏனெனில் இவ்வளவு காலமும் நாங்கள் சொல்லிவந்ததுதான் உண்மை நிருபணம் ஆகின்றது .

யாழ் நிர்வாகம் அனுமதித்தால் இந்த மாதம் மட்டும் வந்த இவர்களின் திருகுதாள வெளியீடுகளை இணைக்கின்றேன் .


இந்த வார உலக தமிழர் பத்திரிகையின் முதல் பக்கம் ஹரியின் படத்துடன் அவர்மீது வெறும் காழ்ப்புணர்வு செய்திகள் .இதுதான் கனடாவில் புலிகளின்  அதிகார பத்திரிகை . :icon_mrgreen:

எனக்கு கனடாவில் நடப்பவை  பற்றி  தெரியாது

 

ஆனால் தமிழன் வெல்லணும்

எங்கிருந்தாலும் ஒற்றுமை  வலுவாக இருக்கணும்

எம்மிடையே  ஆன பிரிவுகள் களையப்படணும்

அதை  கெடுப்போர் எவராக இருந்தாலும்

களையெடுக்கப்படணும்

 

இந்தப் பிரிவினையை உருவாக்குவதில் ஹரியும் ஒரு கில்லாடி.  இந்தத் தேர்தலில் அவர்தான் வெல்லுவார் என்பது உறுதியான விடயம்.  ஏனெனில் இவரது கனேடிய அரசியல் பிரவேசத்திற்கு இவர் 15 வருடங்களுக்கு முன்னரே அடித்தளம் போட்டுவிட்டார்.  அதற்கேற்ப எமது தேசியத்திற்குள் புகுந்து சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினார்.   தனது ஆதிக்கத்தின்கீழ் செயற்படும் ஒரு அமைப்போடு சேர்ந்து தனியாக இயங்கி வந்தார்.  ஆனால், இவரால் தாயகத்திற்கு எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.  

 

உலகத்தமிழர் மட்டும்தான் இவரை எதிர்ப்பதாக இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.  முன்னைய செயற்பாட்டாளர் ஒருவரைச் சந்தித்தேன்.  அவர் தாயகத்தில் ஆசிரியர்.  புலிகளின் தீவிர ஆதரவாளர்.  நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் ஆதரவாளராக இருந்தவர்.  அவர்கூட, இவரை எதிர்க்கிறார் என்பதுதான் இன்றைய நிலை.  என்னவொன்று, அவர்கள் இப்போது வெளியில் வாயைத் திறப்பதில்லை.  திறந்தும் எந்தப் பயனும் இல்லை என்று சும்மா இருக்கிறார்கள்.   தங்களுக்குள் பேசிக் கொள்வதோடு சரி.  இவரைப் பற்றிப் பல விமர்சனங்கள் உண்டு.  அவற்றில் பல ஏற்கனவே தமிழ் ஊடகங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால், அவற்றை இங்கு யாரும் பதிவதில்லை.  

 

எவ்வாறு 2009இற்குப் பின்னர்தான், உலகத்தமிழரைப் பற்றிப் பலருக்கு விளங்கியதோ அவ்வாறுதான் இவருடைய சுயநலங்களைப் பற்றி இன்னும் நாலைந்து வருடங்களில்தான் சிலருக்கு விளங்கும்.  எமது மக்களின் தூரநோக்கற்ற பார்வையால் நாம் அழிந்ததுதான் மிச்சம்.   யாழ் தொடர்ந்தும் இருக்கும் என்று நம்புகிறேன்.  அப்போது நான் கூறியது சரிதான் என்று பலர் உணர்வார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். அவர்களோடு குப்பை கொட்டினவர்களுக்கு இப்போது தான் அவர்கள் பற்றித் தெரிகின்றதாம். உலகத்தமிழராபட்டும், எந்த அமைப்பாகட்டும். தமிழ் உணர்வோடு செயற்படும்போது எதிர்க்க வேண்டிய தேவையில்லை. இப்போதும் கூடச் சொல்லப்பட்டவை, அவர்கள் செய்கின்ற சில தவறுகளே அன்றி,சேர்ந்து இயங்கும்போது ஜல்ரா போடுவதும், துரத்தி விட்ட பின்பு தூற்றுவதுமல்ல...

ஆமாம். அவர்களோடு குப்பை கொட்டினவர்களுக்கு இப்போது தான் அவர்கள் பற்றித் தெரிகின்றதாம். உலகத்தமிழராபட்டும், எந்த அமைப்பாகட்டும். தமிழ் உணர்வோடு செயற்படும்போது எதிர்க்க வேண்டிய தேவையில்லை. இப்போதும் கூடச் சொல்லப்பட்டவை, அவர்கள் செய்கின்ற சில தவறுகளே அன்றி,சேர்ந்து இயங்கும்போது ஜல்ரா போடுவதும், துரத்தி விட்ட பின்பு தூற்றுவதுமல்ல...

 

உங்களோடு கருத்தாடுவதில் எந்தப் பலனுமில்லை என நான் பல திரிகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.  தமிழினத்தின்  விடிவிற்காக உருவாக்கப்பட்டதையே சதித்திட்டம் தீட்டி, அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கிக் கலைத்தவர்கள்தான் இந்த ஹரியும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பும்.  உங்களுக்கு உண்மை தெரியவேண்டுமானால், நீங்கள்தான் அதனைத் தேடி அறிய வேண்டும்.  உண்மையிலேயே உங்களுக்குத் தாயகப் பற்று இருக்குமாயின் அவை சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உரையாடி நேரடியாக உண்மையை அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.  அதனைச் செய்ய உங்களுக்குத் துணிவில்லையாயின், உண்மை வெளிவரும்போது விளங்கிக் கொள்ளுங்கள்.  இதற்கு மேல் உங்களுடன் வாதாட விரும்பவில்லை. நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு உங்களை வாதடச் சொல்லிச் சொல்லவில்லையே. ஆனால் இங்கே நீங்கள் வழமை போல மற்றவர்களைப் பற்றித் தூற்றும் தொழிலைச் செய்வதால் தான் எதிர்க்க வேண்டியுள்ளது. இதுவரை நாளும் மற்றவர்களைப் பற்றி என்றைக்கும் உயர்வாகப் பேசிய பழக்கம் உங்களுக்கு இல்லாததால் அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் அது மற்றவர்களைப் பாதிக்கும் செயலாக இருப்பதால் தான் வருந்தவேண்டியுள்ளது.

ஹரி 15 வருடமாக தேர்தலுக்காகத் திட்டமிட்டால் அதில் என்ன தவறு இருக்கமுடியும். எனக்குத் தெரிந்து பலர் அச் சிந்தனையோடு, இருக்கின்றனர். அதே இண்ணத்தில் தங்களின் மனைகளை வாங்கியுமுள்ளனர். அது ஆரோக்கியமான விடயம்.

தமிழீழ விடிவுக்காக உருவாக்கப்பட்டது என்றால் அது விடுதலைப்புலிகள் என்ற அர்த்தம் மட்டுமே தான் கொடுக்கும். சும்மா நட்டு கடந்த அமைப்பு தமிழீழ விடிவுக்காக உருவானது என்று கதை விட வேண்டாமே...இதில் வந்து மற்றவர்களை வசைபாடும் வேலையை வைத்துக் கொண்டால் பதில் எழுதிக் கொண்டு தான் இருக்க வேண்டிவரும்....அதைத் தவிர்த்தால் நல்லது..

என்னோடு உங்களை வாதடச் சொல்லிச் சொல்லவில்லையே. ஆனால் இங்கே நீங்கள் வழமை போல மற்றவர்களைப் பற்றித் தூற்றும் தொழிலைச் செய்வதால் தான் எதிர்க்க வேண்டியுள்ளது. இதுவரை நாளும் மற்றவர்களைப் பற்றி என்றைக்கும் உயர்வாகப் பேசிய பழக்கம் உங்களுக்கு இல்லாததால் அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் அது மற்றவர்களைப் பாதிக்கும் செயலாக இருப்பதால் தான் வருந்தவேண்டியுள்ளது.

நான் நீதி, நியாயத்தைத்தான் பேசுகிறேன்.  உங்களுக்கு அது உறைத்தால் அதற்கான தீர்வைத் தேடுங்கள்.  அதைவிட்டு, சுட்டிக் காட்டுபவரை மட்டம் தட்டாதீர்கள்.  நான் மேலே குறிப்பிட்டதுபோல, நீங்கள் உண்மையை அறிய வேண்டுமானால் பலருடனும் பேசுங்கள்.  அப்போதுதான் உண்மை தெரிய வரும்.   அதைவிடுத்து, ஒரு பக்க கதையை மட்டும் கேட்டுவிட்டுக் கருத்தெழுதினால் அது உங்கள் பிழை.  நான் பலரது கருத்துக்களை உள்வாங்கித்தான் இங்கு கருத்தெழுதுகிறேன்.  வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்களும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.   

 

ஹரி 15 வருடமாக தேர்தலுக்காகத் திட்டமிட்டால் அதில் என்ன தவறு இருக்கமுடியும். எனக்குத் தெரிந்து பலர் அச் சிந்தனையோடு, இருக்கின்றனர். அதே இண்ணத்தில் தங்களின் மனைகளை வாங்கியுமுள்ளனர். அது ஆரோக்கியமான விடயம்.

நான் யாரையும் தேர்தலில் நிற்கவேண்டாம் எனக் குறிப்பிடவில்லை.  உங்களின் சுயநலத்திற்காகத் தாயக மக்களின் அவலத்தை பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கேட்கிறேன்.  ஹரி, தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றியோ அவர் பற்றியோ நான் இங்கு குறை கூறவில்லை.  அவர் எமது தேசியத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைப்பதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.   நீங்கள் விசுவாசியாக இருப்பது உங்கள் உரிமை.  அதேபோல், அவர் விட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டுவது எனது உரிமை.  

தமிழீழ விடிவுக்காக உருவாக்கப்பட்டது என்றால் அது விடுதலைப்புலிகள் என்ற அர்த்தம் மட்டுமே தான் கொடுக்கும். சும்மா நட்டு கடந்த அமைப்பு தமிழீழ விடிவுக்காக உருவானது என்று கதை விட வேண்டாமே...இதில் வந்து மற்றவர்களை வசைபாடும் வேலையை வைத்துக் கொண்டால் பதில் எழுதிக் கொண்டு தான் இருக்க வேண்டிவரும்....அதைத் தவிர்த்தால் நல்லது..

 

சரி.  தாயக மக்களின் நலனுக்காக செயற்படும் உங்களுக்குத் தெரிந்த அமைப்பு(கள்) எதுவென இங்கு குறிப்பிடுங்கள்?   2009இல் விடுதலைப்புலிகள் மௌனித்த பின்பு, அவ்வமைப்பு(கள்) செயற்படுத்திய திட்டங்கள் எவை?  அத்திட்டங்களில் முழுமையாகச் செயற்படுத்தி முடித்த திட்டங்கள் யாவை?  இனிமேல் செயற்படுத்த முனைந்திருக்கும் திட்டங்கள் எவை?  இவ்வாறு செயற்படும் அமைப்புகள் எத்தனை வெளிப்படையாகச் செயற்படுகின்றன?  எந்த அமைப்பும் நூறு வீதம் வெளிப்படையாக இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.  அதேவேளை, மக்களின் நலன்களுக்காக செயற்படும் அமைப்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை.  அந்தவகையில், கனடாவில் வெளிப்படையாகச் செயற்படும் தமிழ் அமைப்புகள் யாவை?   அவற்றுள் ஒற்றுமையாகச் செயற்படும் அமைப்புகள் எவை?  மக்களை உள்வாங்கி, மக்களோடு சேர்ந்து செயற்படும்அமைப்புகள் யாவை?  

Edited by தமிழச்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.