Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் ஆதரவுக் குரல் நம்பிக்கை தருகிறது! - சம்பந்தன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் ஆதரவுக் குரல் நம்பிக்கை தருகிறது! - சம்பந்தன் தெரிவிப்பு 

[saturday 2014-08-23 18:00]
sampanthan-delhi-200-news.jpg

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும் அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்து குரல் கொடுத்தால் அது தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின்னர் கருத்து தெரிவித்த அவர், தமிழக அரசும், அரசியல் தலைவர்களும், மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகின்றனர். அவர்களது செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம்.

  

ஆனாலும் எல்லோரும் ஒருமித்து குரல் கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். அதாவது தமிழகத் தலைவர்களும் இந்திய மத்திய அரசுடன் இணைந்து இலங்கைப் பிரச்சினைக்காகக் குரல்கொடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115510&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஜெவையும் மாணவர்களயும் வைக்கோவையும் நெடுமாறனையும் பகைகாதீர்கள்.

சீமான் கருணாநிதி போன்ற வியாபாரிகளை கண்டும் காணாது விடுங்கள். மக்கள் அவர்களை பார்த்துக் கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெவையும் மாணவர்களயும் வைக்கோவையும் நெடுமாறனையும் பகைகாதீர்கள்.

சீமான் கருணாநிதி போன்ற வியாபாரிகளை கண்டும் காணாது விடுங்கள். மக்கள் அவர்களை பார்த்துக் கொள்வார்கள்.

 

 

இங்கு  சம்பந்தரின்  கூற்று

தமிழக  மக்களின் போக்கு சரியில்லை

இந்திய  மத்திய  அரசுடன் சேர்ந்து (அதாவது அவர்களது கொள்கையை எற்று)

அவர்களுடன் ஒன்றாக  நின்று குரல் தாருங்கள் என்று தான் அமைகிறது

நீங்க வேற கற்பனையில் உள்ளீர்கள்

 

தமிழரல்லவா

எமக்குள் பிரிவுகளை  உத்தேசிக்கின்றீர்கள்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரச என்ன மாதிரியான குரல் கொடுக்கிறது என்று தெரிந்தால்தானே சேர்ந்த குரல் கொடுக்க முடீயும்.நீங்க 13தானே சொல்லுறியள்.அங்க என்னடா எண்டால் சிறிலங்கா அரசையும் ததேகூட்டைமைப்பையும் சேர்ந்து தீர்வுக்கு வருமாறு மோடி சொல்கிறார்.இஞ்ச சம்பந்தர் தமிழக அரசையும் மத்திய அரசையும் சேர்ந்து முடிவெடுக்கட்டாம்(அதாவது இந்தப் போர்க்குற்ற விசாரணை,சர்சனவாக்கெடுப்பு இதெல்லாம் விட்டுப்போட்டு 13க்க ஆதரவு கொடுக்கட்டாம்.(சம்பந்தர்);

  • கருத்துக்கள உறவுகள்
ஆகத் தாங்களாலும் முடியாது. ஆனால் ஆதாரபூர்வமாகவும்  சிங்களஅரசுமீது(இலங்கையரசு) அழுத்தத்தைக் கொண்டுவர முயலும் தமிழக மக்களை 13க் கேட்டுப்போராடுங்கள் என்று கேட்கின்றார். 
 
இதனூடகப் பல நோக்கங்களை நிறைவேற்றலாம்:
1) 13யோ அல்லது அதற்கு மேலோ( சிங்களத்துக் இது தவிர்கமுடியாத நிலை என்று வரும்) (ஒருவேளை) சிங்களம் அமுல்படுத்திவிட்டால் தங்களது கட்சி அரசியல் இருப்பு உறுதியாகிவிடும்.
2) சிங்கள அரசும் காப்பாற்றப்பட்டுவிடும்
3)புலம்பெயர்ந்த (புலம்பெயர் புண்ணாக்குகளால்) நாடுகளில் இருந்துவரும் தம்மீதான அரசியல் விமர்சனங்களை, கண்டனங்களைக் கண்டு கொள்ளாமல் விடலாம்.
4) இனவழிப்பிற்கான தீர்வாக அனைத்துல மேற்பார்வையில் கோரப்படும் வாக்கெடுப்பையும் இனவழிப்புமீதான விசாரணையை நீர்த்துபோகச் செய்தல்.
 
இவையே இன்றைய சிறிலங்கா மற்றும் அதன் கூட்டுக்கொலையாளிகளின் நோக்கமாகவுள்ளது. அதனை நிறைவேற்றும் ஒரு இடைத்தரகராத் தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்பட முனைகிறதா?
 
மக்களை அணிதிரட்டி சனநாயகப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்குச் சிங்களம் அனுமதிக்காது. அதனூடாக இலங்கைத்தீவில் சனநாயகவெளி எப்படி இருக்கிறது என்பதை அனைத்துலகத்திற்குப் புரியவைக்க வேண்டியது அவசியமாகும். அதனூடாக மட்டுமே எமதினத்தின் மீதான கொடும் படையரீதியான அடக்குமுறைகளை நீக்குவதோடு அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமரச் செய்யலாம். 
 
அவர்களது சொந்தநிலங்களில் குடியேறுவிடுவதே அவர்களது சனநாயக உரிமையென்பதை சிங்களம் மறுத்துவருகிறது. அது சம்பூர் முதல் வலிகாமம் வரை தொடர்கிறது. இவற்றை வரைபுகளோடு கூடிய ஆய்வறிக்கைகளையாவது கூட்டமைப்பு மக்களுக்கோ, தென்னிலங்கைத் தோழமைச் சக்திகளுக்கோ அல்லது சாதாரண சிங்கள மக்களுக்கோ வெளிப்படுத்தியுள்ளதா?  
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய மத்திய அரசை நம்பி கடந்த 31 ஆண்டுகளில் எதைத்தமிழினம் பெற்றது என்பதையும் மாறிவரும் தமிழக அரசியலை(குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்றோரை) எமக்குச் சாதகமாக மாற்றுவதற்கான வழிகுறித்து சிந்திப்பதும் அவசியமென்பதை பழுத்த அரசியல் தலைமைகள் ஏன் புரியாதிருக்கின்றன என்பதே சாதாரண பாமரத் தமிழனின் எண்ணவோட்டமாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் இதே 13 வது திருத்தச் சட்டத்தை உப்புச்சப்பற்றது என்ற சம்பந்தன் தான் இப்ப அதனை இட்டு தமிழக மக்களை.. அரசை.. இந்திய மத்திய நடுவன் அரசோடு இணைந்து செயற்படுத்தக் கேட்கிறார்.

 

தமிழக அரசு.. 1983 இல் என்ன நிலைப்பாடு எடுத்திருந்து.. தமிழீழ விடுதலையை ஆதரித்ததோ.. அதே நிலைப்பாட்டில் அது தன்னை தக்க வைப்பதோடு.. தமிழீழ மக்களின் விடுதலையை துரிதப்படுத்தும் செயலில் தமிழக அரசை இயங்கச் செய்ய தமிழக மக்கள் ஆதரளிக்க வேண்டும்.

 

சம்பந்தன் மட்டும் தமிழ் மக்களின் குரல் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் புலிகளின் பெயரை வைச்சுத்தான் தமிழ் மக்களின் முன்னே கூட வர முடிகிறது. அந்த உச்சரிப்பு இல்லையேல்.. சம்பந்தன் உட்பட பலர் ஆனந்தசங்கரியின் கதிக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் மக்களால்..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.