Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

இனிய கதை இது

என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்

எழுதும் புதுக்கதை இது

(சொந்தம்)

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை

ஜாடையில் நான் காண

வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்

கோலத்தை நான் காண

இளமையை நினைப்பது சுகமோ

முதுமையை ரசிப்பது சுகமோ

செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை

முந்தானை துடைப்பது சுகம்தானோ

(சொந்தம்)

நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள்

ஆற்றில் நீந்தி வர

நிறத்தில் மஞ்சள் முகத்தில் மோதி

காவியம் பாடி வர

சூரியன் ஒளியில் மின்ன

தோகையின் விழிகள் பின்ன

பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம்

கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

(சொந்தம்)

படம் : பிராப்தம்

குரல் :T.M.S+சுசீலா

பாடல் : கண்ணதாசன்

இசை :M.S.V

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருபொன் மாலைப்பொழுது

வான மகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்.

இது ஒரு பொன் மாலைபொழுது .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன் மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா..

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ..

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

ஆண்கள்.. எல்லாம்.. பொய்யின் வம்சம்

கோபம்.. கூட.. அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓகோ....

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...

உறவும் முறைதானா...

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ

வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ

ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மீதே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடியலைந்து காதலில் விழுந்து

நாட்டை இழந்தவர் பலருண்டு

பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

ஆண்: பாடும் பறவை கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்

வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜகுமாரி)

படம்: வீரத் திருமகன்

இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - கை

பறந்தாலும் விடமாட்டேன்

பிறர் கையில் தரமாட்டேன்

அன்று நான் உன்னிடம் கைதியானேன்

இன்று நான் உன்னையே கைது செய்வேன்

எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்

Senyorita, How do you feel about me now I say? hahaha

பறக்காதே கிடைக்காது

நினைக்காதே நடக்காது

கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச

கோதை நான் மானல்ல வலையை வீச

உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?

Hey, let me see what you can do!

wow..

நதியிருக்கு தலை குளிக்க

விதியிருக்கு மணம்முடிக்க

இணங்கிவிட்டால் சுகமிருக்கு

இதயத்திலே இடமிருக்கு.. ஹ.

தொடர்கதை எழுதுவோம் விரைவிலே

தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே

பறக்காதே கிடைக்காது

நினைக்காதே நடக்காது

அன்று நான் உன்னிடம் கைதியானேன்

இன்று நான் உன்னையே கைது செய்வேன்

உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?

விதிவழிதான் கதை நடக்கும்

அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்

பதுமையல்ல ஆட்டிவைக்க

பாவையல்ல பூட்டிவைக்க

காமுகன் மனதிலும் கவிதையா

போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் விடமாட்டேன்

பிறர் கையில் தரமாட்டேன்

கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச

கோதை நான் மானல்ல வலையை வீச

எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்

Baby, Hey Baby, How do you feel about me now huh?

பறக்காதே கிடைக்காது

பறந்தாலும் விடமாட்டேன்

கையில் மிதக்கும் கனவா நீ...

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...

நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..

இந்திர லோகம் போய் விடவா...

இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..

சந்திர தரையில் பாயிடவா?...........

(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி..

அதை கண்டு கொண்டேனடி...

(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது..

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.

பசியோ வலியோ தெரியாது...

(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..

உயரம் தூரம் தெரியாது...

(உன்னை..)

உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..

என்னால் தாங்க முடியாது..

(கையில்..)

படம்: ரட்சகன்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=CoFex8Yngo8&feature=related

ஆரம்பியுங்கள் - வெண்ணிலா / வெண்ணில

படம்: வாழ்வே மாயம்

இசை: கங்கை அமரன்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

(நீலவான..)

காளிதாசன் பாடினால் மேக தூரமே

தேவிதாசன் பாடுவாள் காதல் கீதமே

இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி

இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி

நீயில்லையேல் நானில்லையே

கூடல் ஏன் கூடும் நேரம்

(நீலவான..)

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்

வானம் பூமி யாவுமே வாழ்த்து பாடலாம்

விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ

விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ

ஸ்ரீதேவியே என் ஆவியே

எங்கே நீ அங்கே நாந்தான்

(நீலவான..)

Edited by உடையார்

http://www.youtube.com/watch?v=2zDaCZggZgQ&feature=fvst

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே..)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உனை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே..)

இது இருள் அல்ல அது ஒளி அல்ல

இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

இது இருள் அல்ல அது ஒளி அல்ல

இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே

சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்

பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே

புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே

நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்

தாலாட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே..)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?

கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?

இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?

பெண்ணே பெண்ணே

பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்

பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்

நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே..)

படம்: மின்சார கனவு

இசை: AR ரஹ்மான்

பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள்: வைரமுத்து

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்

அதில் என்னோடு நீமட்டும் வேண்டும் வேண்டும்

ஆகாய வெண் மேகம் பாலாக வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு பாடுங்கள்

நல்வாழ்த்து பாடல்கள்

மங்கை எந்தன் நெஞ்சுக்குள்

கங்கை எந்தன் கண்ணுக்குள்

ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை

தானும்தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்

மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்

மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=2zDaCZggZgQ&feature=fvst

வெண்ணிலவே வெண்ணிலவே

நன்றி தமிழினி,இந்த பாட்டை நினைத்துதான் வெண்ணில என்று எழுதினான், பிரபு தேவா & கஜோல் என்ன நடிப்பு இந்த பாட்டுக்கு, கண்ணில் என்ன ஒரு எக்கம் இரண்டு பேரிடமும்

ஆரம்பியுங்கள் - காதலி

படம்: லக்ஷ்மி கல்யாணம்

இசை: M.S.விஸ்வநாதன்

வரிகள்: கண்ணதாசன்

குரல்: P.சுசீலா

ராகம்: சுப பந்துவராளி

ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி - அவன்

நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்

(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்

காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்

அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்

அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்

(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்

தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்

வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்

வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்

(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்

மதங்களை இணைப்பவன் - சிவராமன்

மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்

முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

நம்பிய பேருக்கு ஏது பயம்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

ராமனின் கைகளில் நான் அபயம்!!!

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ

பட்டாம்பூச்சி பறக்கும் போது சாயம் ஊறுமோ

கண்ணும் கண்ணும் மோதும் போது காதாலகுமோ

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்

ஏற்றும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வலை நீயே

என்னைக் கட்டி இழுத்தாயே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதேஎதைத்த தருவது தானென்று

எதைப் பெறுவது தானென்று

குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல

இதயம் குதித்தோட

தலையசைக்குது உன் கண்கள்

தவிதவிக்குது என்நெஞ்சம்

ஒரு தீ போல ஒருத்தி வந்து

உயிரைப் பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்

அது முடியாத முதலாக

பூமுகம் உன் பூமுகம்

அது முடியாத முதல் பாகம்

இவள்தானே உன் இதழால் படிப்பாயோ

கண்ணிமையால் எனை

மூடி காதல் திறப்பாயோ

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க

தொலைத்தொடர்பினில் நான் இருக்க

உதடும் உதடும் பேசும் போது

உலகை மறந்தேனே

உனதருகினில் நானிருக்க

உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க

இரண்டாம் முறையாய்

இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே

மாலையில் மாலையில்

உன் மடி மீது விழுவேனே

மார்பினில் உன் மார்பினில்

நான் மருதாணி மழை தானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்

பெண்ணிலவோ தொடுந்தூரம்

உன்மழையில் நனைந்தாலே

காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது

பூவே ஓடாதே

காதல்தேனை சாப்பிடும் போது

பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்

ஏற்றும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வலை நீயே

என்னைக் கட்டி இழுத்தாயே.....

படம்: காவலன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கே.கே , ரீட்டா

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சத்ரியன்

பாடல் : மாலையில் யாரோ

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : சுவர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வலையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை தேர்த்தடிப்பவநோ சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை

வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க

சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ

முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க

முத்தமிட்டு எங்கே தொடுங்க

மொத்தமாக சொல்லிக் குடுங்க

சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க

கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா

கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை தேர்த்தடிப்பவநோ சொல்லு

மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி

மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு

...

கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்

பூங்கொடிக்குக் கண்ணாலம்

கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக்

கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு

மூணு முடி போடுவதெதுக்கு

உரிமைக்காக ஒத்த முடிச்சு

உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே

உறவுக்காக ரெண்டாம் முடிச்சு

ஊருக்காக மூணாம் முடிச்சு

முடிச்சு முடிச்சு முடிச்சு

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு

மூணு முடி போடுவதெதுக்கு

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Q1Xa3h4UHlw

வெள்ளிக் கொலுசு மணி

வேலான கண்ணு மணி

சொல்லி இழுத்த்தென்ன

தூங்காம் செயஞ்ச்தென்ன

பாடாத ரகம் சொல்லி

பாட்டுபடிச்ச்தென்ன

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !

மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -

பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!

கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!

வண்ணமயில் போல வந்த பாவையே..

எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!

உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,

எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!

பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,

இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,

துடியிடையில் பாசம் வைத்தேன்,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -

பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒ

மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!

கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

ஆஆஅ ஆஆ...

கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,

மென்மனதினால் முடித்த மூக்குத்தி..

என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,

அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..

கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,

ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,

கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!

மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

தங்கமகன் வரவை எண்ணி தந்தை உள்ளம் பாடும் பாட்டு

தங்கமகன் வரவை எண்ணி தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

உயிர் கொடுத்த தந்தை இங்கே உரு கொடுத்த அன்னை அங்கே

இன்ப துன்பம் எது வந்தாலும் பங்குகொள்ளும் சொந்தம் எங்கே

தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு

இன்பதுன்பம் எது வந்தாலும் பங்குகொள்ள நண்பன் உண்டு

ஒரு தாயின் பிள்ளை போலே உருவான சொந்தம் கொண்டு

வருங்காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த தெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காக கொடுத்தான்

ஒருத்தனுக்க கொடுத்தான்

இல்லை ஊருக்காக் கொடுத்தான்

ஒருதனுக்கா கொடுத்தான் இல்லை

ஊருக்காக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்

தென்றல்வர மறுத்திடுமா

மாலை நிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறுத்திடுமா

தனக்கக் வாழ்வு வாழ்

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை . ...

அவன் அவன் அவன்....

அழகியமகன்!

என்

உணர்வுகளிடை ....

இடை இடை............

உறங்கியே உயிர்

தின்பவன்..

தின்பவன்...தின்பவன்..

அவன் அவன் அவன்...

என் காதல் தேச

ராஜா ராஜா...

நானவன் ..அவன்.....

கைகொண்ட ரோஜா

ரோஜா ரோஜா !

என்ன நிலாமதியக்கா... வெளயாடுறீங்களா?

அவன் எங்கிற எழுத்தில பாட்டிருக்கா?

நேக்கு தெரியல..

அதால நானே இயற்றிட்டனாம் இந்த்ப்பாட்டை! smile007.gif

ஐயாம் வெரி சாரி அக்கோவ்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வார்த்தையில் கவி புனைய வைத்திருக்கிறேன் கவிஞ்சனுக்குப்( அறிவிலி க்கு) பாராட்டுக்கள்.

எந்தன் பார்வை உந்தன் பார்வை

இடை மெலிந்தாள் இந்தப் பாவை

மெல்ல மெல்ல பக்கம் வந்து

தொட்ட சுகம் அம்மம்மா .........

Edited by நிலாமதி

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ

சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ

ஓடையில் நீரலை மேடையில் தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம் (2)

தொட்டில் கட்டிப் போடும் பூங்கொடி

பள்ளி கொள்ள பார்க்கும் பைங்கிளி

அந்தி மாலையில் இன்ப சோலையில் சொர்கமாகுமோ

மெல்லத்தான் மெல்லத்தான் மயங்கி நடந்தாள் மாது

சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள் தூது இப்பொழுதே

மெல்லப்போ ….. மெல்லத்தான்

ம்ஹும் சொல்லிப்போ …. ஆஹா சொல்லித்தான்.

செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்

செவ்விதல் தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம் (2)

சிந்து நடை போடும் பாற்குடம்

சின்ன விழி பார்வை பூச்சரம்

என்ன மேனியோ இன்னும் பாடவோ கனி தேடவோ

மெல்லப்போ ….. மெல்லத்தான்

பொன்னெழில் தாமரை பூவினால்

மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினான்

முத்துத்தமிழ் பாடும் பூங்குயில்

முத்தம் ஒன்று வேண்டும் ஆண்குயில்

அந்தப்பாடலில் அன்பு ஊடலில் மங்கை நாணினாள்

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ

சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே

மெல்லப்போ ….. மெல்லத்தான்

ம்ஹும் சொல்லிப்போ …. ஆஹா சொல்லித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

அவள் ஆடையில் ஆடிடும் மன்மத் விளை யாட்டே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - கண்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

என் காதுக்கு மொழியில்லை

என் நாவுக்கு சுவையில்லை

என் நெஞ்சுக்கு நினைவில்லை

என் நிழலுக்கு உறக்கமில்லை

என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை

சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை

என் அன்புக்கு மகளiல்லை

ஒரு ஆறுதல் மொழியில்லை

ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்

அதில் என்னையே காவல் வைத்தேன்

அவள் கதவை உடைத்தாளே

தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்

நான் அவளுக்கு மகனானேன்

என் உரிமைத் தாயல்லவா

என் உயிரை எடுத்துச் சென்றாள்

என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.