Jump to content

நண்டுச்சூப்!


Recommended Posts

தேவையானவை
 
நண்டு – அரை கிலோ
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் – 3
கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி
பால் – கால் கப்
 

1408292198238.jpg
நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, 
கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவேண்டும்.

 
http://www.panncom.net/p/7451/நண்டுச்சூப்பு.#c7451


I don't guarantee the correctness of the recipe. Try at your own risk! 


- ஆரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animierte-krebs-bilder-11.gifanimierte-krebs-bilder-10.gif

ஆராவது.... இந்த நண்டு சூப்பை, செய்து பாத்திட்டு  நல்லாய் இருந்தால் சொல்லுங்கப்பா...
நமக்கு தொடர்ந்து....  ரிஸ்க் எடுக்க முடியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animierte-krebs-bilder-11.gifanimierte-krebs-bilder-10.gif

ஆராவது.... இந்த நண்டு சூப்பை, செய்து பாத்திட்டு  நல்லாய் இருந்தால் சொல்லுங்கப்பா...

நமக்கு தொடர்ந்து....  ரிஸ்க் எடுக்க முடியாது. :lol:

 

 

அட நம்ம சிறி அந்தளவுக்கு நொந்து நூலாகிவிட்டாரா :lol: ? சிறிக்கு ரிஸ்க் எடுக்கிறதென்றால் ரஸ்க் சாப்பிடுகிற மாதிரியென்றெல்லோ எண்ணியிருந்தேன்? பம்பலப்பிட்டி கற்பகத்தில் சுட சுட குடித்த கூல் மாதிரி இருவரை எங்கும் குடிக்கவில்லை,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.