Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதி சமாதியை தோண்டாமல் இருக்க போர்டு வைத்த புலி ஆதரவாளர்கள்

Featured Replies

Tamil_News_large_1058379.jpg

 

மேட்டூர்: ஆயுத புதையல் தேடும் பணிக்காக, விடுதலைப் புலிகள் தளபதி சமாதியை தோண்டாமல் இருக்க, அவரது ஆதரவாளர்கள் திடீரென போர்டு வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
300 பேர்...: மேட்டூர் தாலுகா, கும்பாரப்பட்டி கிராமம் பச்சபாலமலை அடிவாரத்தில், கடந்த, 1984 முதல், 1986ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகள் முகாமிட்டு, ஆயுத பயிற்சி பெற்றனர். முகாமிற்கு, மூன்று மாதத்துக்கு ஒரு முறை, விடுதலைப் புலிகள், 300 பேர் வந்து ஆயுத பயிற்சி பெற்று, இலங்கைக்கு சென்றனர். அந்த சமயத்தில், இலங்கையில் நடந்த போரில், தன் குடும்பத்தினரை பறிகொடுத்து, படுகாயத்துடன் கும்பாரப்பட்டி முகாமிற்கு, விடுதலைப் புலிகளின் தளபதி ரோய், வந்து சேர்ந்தாக தெரிகிறது. ரோய், முகாமிலேயே தங்கி சிகிச்சை பெற்றதுடன், பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். உடல்நலம் பாதித்த ரோய், பயிற்சி காலத்திலேயே இறந்து போனார். அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்லாமல், கும்பாரப்பட்டி பயிற்சி களத்திலேயே புதைத்து விட்டனர். தளபதி ரோய் சமாதி, இன்னமும் கும்பாரப்பட்டியில் உள்ளது. ஆண்டு தோறும் நவ., 27ம் தேதி,
திராவிடர் விடுதலை கழகத்தினர், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்பினர்,
ரோய் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கடந்த, 27ம் தேதி, ரோய் சமாதி அருகே, மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டிய போது, மண்ணுக்குள் கண்ணிவெடி, கையெறி குண்டு உள்ளிட்ட, பயன்படுத்திய ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.
 
சோதனை : அதை போலீசார் கைப்பற்றி, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பினர். ஆயுத புதையல் கண்டுபிடித்துள்ளால், தேவைப்பட்டால் இதர பகுதியையும் தோண்டி சோதனை செய்யப்படும் என, மேட்டூர் சப் -கலெக்டர் அனீஷ்சேகர் கூறினார். இதனால், தளபதி ரோய் சமாதி இருப்பது தெரியாமல், அந்த இடத்தை தோண்டி சோதனை செய்து விடக்கூடாது என்பதற்காக, புலிகள் ஆதரவாளர்கள், இரு நாட்களுக்கு முன் திடீரென சமாதி மீது, 'தளபதி ரோய்' என, போர்டு எழுதி வைத்துவிட்டனர். சமாதி மீது வைத்துள்ள திடீர் போர்டு, வருவாய் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

Roj-Annaa-Kallaraiyil.jpg

 

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113995

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் உங்கள் பதிவை பார்த்தான் சாந்தி. நான் சிறுவனாக வியந்து பார்த்த ஒரு ஆதர்ஷ புருசன் இவர். கண்ணீரை வரவழைத்தது உங்கள் எழுத்து. :(

  • கருத்துக்கள உறவுகள்

Roj-Annaa-Kallaraiyil.jpg

 

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113995&page=2

தேசவிடியலுக்காய் காலங்களைக் கடந்து வரலாறிகிவிட்ட எமது வீரர்களின் வாழ்வு மக்களோடு கலந்து அவர்கள் சுவாசத்தில் நிறைந்து உரமாக நிற்கிறது! எம்மக்கள் நிராயுபாணிகளாக சிங்களத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கலாம் இன்று. ஆனால் எங்களது வீரர்களின் ஆத்மாவின் பலம் எம்தேசத்தை அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து நிமிரவைக்கும்.!அந்த காலம் எங்கள் தேசத்தில் நீங்கள் உலாவருவீர்கள்  வீரர்களே! 
 
வீரவணக்கம்!
 
 
மனதை கரைத்துருக்கிச் சென்றது உங்கள்பதிவு சாந்தியவர்களே! நினைவுகளை பதிவிட்டமைக்கு நன்றிகள். 
  • கருத்துக்கள உறவுகள்

கப்டன் ரோயுக்கும், அவரோடிணைந்த 40,000 மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம் !

வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.