Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி.

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10632609_466815820128104_124534692304545

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10593080_803672969666597_669956143989213

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுக்கு ஒரு கால் இல்லை, அந்த
ஆணுக்கு ஒரு கை இல்லை என்று நினைத்து உன்
எண்ணத்தை ஊனமாக்கிவிடாதே,
அந்த பெண்ணுக்கு ஒரு காலும்,
ஆணுக்கு ஒரு கையும் நன்றாக
இருக்கின்றது என்பதை நினைவில் வை,
எப்போதுமே குறையை மட்டும்
பார்க்கவேண்டாம், நிறைவை மட்டும்
பார்ப்போம்.......!!!

 

 

 

ஆனாலும் குறைகளை மட்டும் பார்த்தும்,பேசியும் பழக்கப்பட்டவர்கள் நாம்..

 

 

 
 
 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை வணக்கங்களுடன் யாயினி..அனைத்து உறவுகளுக்கும் இனிய நாளாக கடந்து செல்ல என் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

15771_467443766731976_579196919441997507

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Hari varAsanam-Violin Mastero Kunnakudi Vaidyanathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால்,
நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்ட
ு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். " -
ஹெலன் கெல்லர்
இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும்
திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தும்
தன்னம்பிக்கை விடாமுயற்சியால் புகழ்பெற்ற
எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய
அமெரிக்கக் பெண் தான் ஹெலன் கெல்லர்.
அருகில் இருப்பவர் கெல்லரின் ஆசிரியர் ஆன்
சல்லிவன் .
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில்
கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர்
பேசுவதை புரிந்துகொள்ளும்
கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார்.
மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி,
எழுத்துக்களைப் புரிந்து கொள்ள
பழக்கினார்.
உதாரணத்திற்கு தண்ணீர் என்று கைகளில்
எழுதி காட்டும்போது ஹெலன்
கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால்
அது தண்ணீர் என்று தெரியாது.
ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ்
கெல்லரின் வலது கையில் தண்ணீர்
படுமாறு வைத்து அவரது இடது கையில்
தண்ணீர் என்று எழுதி காட்டினார்.
ஹெலன் கெல்லர் சிறந்த எழுத்தாளராகவும்
சமூக ஆர்வலராகவும் உருவானார்.
ஊனமுற்றோருக்கான தன் வாழ் நாள்
முழுவதையும் செலவிட்டார்.
உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச
தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும்
புத்தகங்களும் எழுதினார்.

 

10675633_468190126657340_220985962069680


 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரிடம் அதிக அன்பு வைப்பது தவறு சில சமயங்களில் அதுவே நம்மை நிரந்தரமாகவே காயப்படுத்தி விடுகிறது. புரியாத இடத்தில் பழகுவதும் புரிந்துகொள்ளாதவர்கள் மேல் பாசம் வைப்பதும் வலிகளை ஆழப்படுத்துவதாக அமைந்துவிடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்....
காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற் போல் உருவாக்கப்படலாம்...! இன்றைக்கு இப்படிப் பட்டவர்கள் தான் அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறுத்தவர்களுக்கு,வெறுக்க நினைப்பவர்களுக்கு

நாம் என்ன செய்தாலும் தீயதாகவே தெரியும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருவி கூட ஜதி இல்லாமல்

சுரங்கள் பாடுது...

Edited by யாயினி

தொடருங்கள்.

15771_467443766731976_579196919441997507

அழகான படம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  டாக்ரர் சீர்காளி கோவிந்தராஜன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி 1970 ஆண்டு.யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன்.

 

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே?  :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா...!

 

நன்றி வாலி.

 

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவுகள், தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் யாழ் கள அன்பு உறவுகளே. .

 

 

10671207_853705354642781_216934481312003
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிள்ளை என்ற பெயர் எடுக்க நாளாகும், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிசம் போதும்.ஆனால் நெடுகவும் நல்ல பிள்ளையாக இருக்க தொடங்கினால் காலப் போக்கில்  நட்புக்கள் வீட்டு உறவுகள் மத்தியில் கூட சுயமாக பேச முடியாத, மனத்தில் தோன்றுவதைக் கூட தெளிவு படுத்த முடியாத நிலையே தோன்றும்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே?  :unsure:

 

 

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்  புங்குடுதீவுக்கு வந்தது தெரியும்

ஆண்டு ஞாபகமில்லை

புங்கையண்ணாவுக்கு தெரிந்திருக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
படத்தில் இருப்பது மாபெரும்
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை.இன்றைக்கும்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.அவருடைய
மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்
வியந்து போய் பேசுகிறார்கள்.இத்தனைக்கும்
அவரது மூளையில் 3 சதவிகிதம்
மட்டுமே பயன்படுத்தப்பட்
டதாம்,அது பத்துசதவிகிதமாக இருந்திருந்தால்
என்னென்ன கண்டுபிடிப்புகள்
வந்திருக்குமோ!.
இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித
கண்டுபிடிப்புகளில் உங்கள்
மனதை வெகுவாக
கவர்ந்தது எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம்
,சற்றும் தாமதிக்காமல் உடனடியாக
புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.
அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில்
இருக்கிறதா?பல் துறை நிபுணர்கள் எழுதிய
நூல்கள்,பல விலை உயர்ந்த புத்தகங்கள்
குவிந்திருக்கும் இடம் நூலகம்.
இத்தகு நூல்களை நூலகங்களில்
மட்டுமே ஒருங்கே நாம் கண்டு,பயன்படுத்திட
முடியும்.நம்மில்
எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம்
செல்லும் வழக்கம் இருக்கிறது?
இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில்
20 நூலகங்களாவது இருக்கவேண்டும்.
ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில்
கூட்டத்தை காணோம்.ஆனால்
இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20
இருக்கின்றன,அத்தனையிலும் கூட்டம்
அலைமோதுகிறது.இதுதான் இன்றைய
தமிழ்க்குடிகளின் நிலைமை.
சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.7
கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில்
ஒருகோடியே முப்பது லட்சம் மக்கள்
குடிப்பழக்கம் உள்ளவர்களாம்.அதில் 50 லட்சம்
பேர் தினமும் குடிப்பவர்களாம்.30 சதவிகிதம்
பேர் 20 வயதுக்குட்பட்ட
இளைஞர்களாம்.கொடுமை.
இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கி
னால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம்
போல்,கடற்கோளினால் அழிந்த
குமரிக்கண்டம் போல்,கல் தோன்றி மண்
தோன்றா முன் தோன்றிய மூத்த
குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க
சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற
நிலை இந்த தமிழ்ச்சமுதாயத்
துக்கு வந்து விடுமோ என்ற அச்சம்
எழுகிறது.
10305960_468284456647907_425394460830729

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் எங்கு படிக்கிறனோ அங்கிருந்து எடுத்து வரப்படுபவை.

 

 

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ்
மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட
வேறு சான்று தேவை இல்லை.
யானை என்ற
ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக
அழைத்துள்ளனர்.
வியக்க வைக்கும்
தமிழர்களின் அறிவுத் திறன்.
இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும்
தமிழ் மொழியின் செம்மைத் திறன்!

யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்:
இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும்
பல்வேறு இடங்களில்
கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை போலவே யானைகளுக்கும்
இளமை கால பெயர்கள் உண்டு..

(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின்
பெயர்

(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும்
பருவம்

(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்

(4) களபம் - உணவு தேடி செல்லும்

பயிற்சி பெரும் பருவம்

(5) கயமுனி - மற்ற இளம்

யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

பொதுவான பெண் யானையின் பெயர்கள்:

பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி
நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:

(1) கரிய நிறம்: யானை/ஏனை

(2) வெள்ளை நிறம்: வேழம்

யானையின் மற்ற காரண பெயர்கள்:

(1) உம்பல் - உயர்ந்தது

(2) கறையடி - உரல் போன்ற
பாதத்தை உடையது

(3) பெருமா - பெரிய விலங்கு

(4) வாரணம் - சங்கு போன்ற
தலையை உடையது

(5) புழைக்கை / பூட்கை / தும்பி -
துளையுள்ள கையை உடையது

(6) ஓங்கல் - மலை போன்றது

(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது

(8) நால்வாய் - தொங்குகின்ற
வாயை உடையது

(9) குஞ்சரம் / உவா - திரண்டது

(10) கள்வன் - கரியது

(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது

(12) கைம்மலை - மலையை போன்ற
கையை உடையது

(13) வழுவை - உருண்டு திரண்டது

(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத்
தலையானையின் பெயர்

(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்

(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின்
பெயர்

யானையின் ஏனைய பெயர்கள்:
(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்...
 
10177507_466769673466052_484092848667625

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி, on 09 Sept 2014 - 6:23 PM, said:snapback.png

1970ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் புன்னாலைக்கட்டுவன் வந்தாரா? :(  அப்போது நியூ விக்ரேஸ் வீடியோ படம் பிடித்தனரா? எங்கையோ இடிக்குதே..

 

குளப்பிட்டனா தாத்தா....இந்த வீடியோக்கடை மிக நீண்ட ஆண்டுகளாக யாழ் நகரில் இருப்பது பற்றி கடந்த பல மாதங்களுக்கு முன்னர் உறவினர் ஒருவரது 25ம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றிருந்த சமயம் அறிந்து கொண்டேன்..ஆகவே நியு விக்கரர்ஸ் வீடியோ பிடித்திருக்க கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருந்திருக்கலாம்.மிகுதி குளப்பதிற்கு மாலைக்கு இடையில் பதில் எழுதிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1922.09.10 :- முதன் முதலாக தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் கவிதைகளில் ஒன்று

 

dasan.jpg

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.