Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1622059_181917608859044_1484617586574448

கலைத்து விடாதீர்கள்
கவிஞனின்
கற்பனையையும் . . .
வயிற்றில் உதிக்கும்
குழந்தையினையும் .

 

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை தொடர்ந்தும் இணையுங்கள் யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12814645_467511933373501_91350111830216912801346_467511973373497_56833744515091821522_467512016706826_67128848381159685612813971_467512063373488_86163960281158712799265_467512106706817_73521203567125612803084_467512160040145_48933312542370512795431_467512186706809_73826189014927912801207_467512210040140_33738149849535012795325_467512273373467_79177981363360412814365_467512350040126_44213115916751112814113_469016273223067_59816826951383612795469_469016289889732_32383660609283512804626_469016306556397_11826383147851010398392_471516456306382_4733376060427517687_471516489639712_49229634056280870741479533_473308202793874_845504003098699112920252_476502565807771_91333347354724812920494_476502619141099_2441934300491347659_476502672474427_618569130681410227612143248_476502725807755_78536100721201512417746_476502765807751_18970011984523012804722_467511813373513_70628848929361712141658_467511646706863_261305640220298

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12400658_10156728603705717_3787201339182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

yarl18.png

யாழ் இணையம் பதின் எட்டாம் ஆண்டில் கால் பதிப்பதினால் இன்றும்,நாளையும் மட்டும் நிர்வாகத்தினர் பகிரும் சிலவிடையங்களை நாங்களும் வெட்டி ஒட்டுறம்..குறை நினைக்க கூடாது..:):)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...

யாயினி உங்கள் அடுத்த பதிவை காணவில்லை. காத்திருக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12928407_1694144004178094_36458413508982

யோசிக்க வைத்த சில செய்தி
1300 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.
அவரால் இது எப்படி சாத்தியமானது என்று எல்லோருக்கும் வியப்பு. பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?
என்று கேட்ட பொழுது அவர் ஒரு புன்னகையோடு சொன்னார்.
எனக்கு காது சரியாய் கேட்காது. அதனால் என்னை திட்டினாலும் தெரியாது. புகழ்ந்தாலும் புரியாது . அதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் என் வேலையில் ஈடுபட்டேன்.
என் கவனம் எல்லாம் வேலையிலேயே இருந்தது. அதனால் தான் வெற்றி பெற முடிந்தது. "
தன் உடல் குறைபாட்டையே வெற்றியாக மாற்றியவர் #எடிசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

12973560_10207753246683620_4817689473101

 

12973407_10207753247163632_6388107400719

காற்று கற்றுக் கொடுக்கும் பாடம்...............!!...

“பொதுநலம்“என்பது புல்லாங்குழல் போன்றது.
“சுயநலம்” என்பது கால்பந்து போன்றது......

இவை இரண்டுமே காற்றால்தான் இயங்குகின்றன.....
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.....

தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது....
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.........!!.......

 

 

வாசித்தவற்றிலிருந்து......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மலர்ந்திருக்கும் தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

12983262_1165911063440906_87014804304844

துர்முகி"வருட தமிழ்புத்தாண்டு (13.04.16)...

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.
அவர் தன் மகனுக்கு அறிவுரை
சொல்லவில்லை...
பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய
கடிதங்களின் சில பகுதிகள்.

? தோல்வியை ஏற்றுக்கொள்ளவும்,
வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

? பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்...

? வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன்,
பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை
ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்...

? பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது
கண்ணியம் என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள்...

? சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச்
சொல்லுங்கள்.

? மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து
கொள்ளக் கற்றுக் கொடுங்கள்...

? குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

? அளவுக்கு அதிகமாய் இனிமையாகப்
பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்...

? தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...!

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடரட்டும் யாயினி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

13007104_1608681342787026_29325552869862

13007244_1608681499453677_49152591033042

289px-Ecology_symbol.svg.png1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு

இன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

பூமியின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே பூமி தினமாகும். அமெரிக்க செனட் உறுப்பினர் கெலார்ட் நெல்சன் 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி இந்த பூமி தினத்தை உருவாக்கினார். அன்று முதல் இது தொடர்ந்து அமெரிக்காவில் தவறாமல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகெங்கும் இது பிரபலமாகியுள்ளது.

உலகெங்கும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் தனியாக கொண்டாடப்பட்டு வருவது ஒருபக்கம் இருந்தாலும் தற்போது ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பல நாடுகளில் பூமி வாரமாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. பிலடெல்பியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பூமி வாரமாக அனுசரிக்கிறார்கள். 1970ம் ஆண்டு முதல் இவ்வாறு கொண்டாட்பட்டு வருகிறது.ட

பூமி தினத்தையொட்டி பல்வேறு நாடுகலில் விதம் விதமான கோணத்தில் பூமி போன்ற மாதிரிகளை முக்கிய நகரங்களின் முக்கியப் பகுதிகளில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

புவிவெப்ப தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களும் இந்த ஆண்டு பூமி தினக் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

13010744_1595226274071420_63783858072604

13043228_1139738929380377_34458277314155

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மாற முடியாத நீ
ஒரு உயிருக்காக 
உன்னையே மாற்ற 
முடியாத நீ.
ஆண் என்ற அகங்காரத்துடன்
நீயாகவே வாழ்ந்து விட்டு -போ,
ஒரு நாளே பிறப்பெடுத்து
பறத்தலை உறுத்தி
படுத்தி வாழும் ஈசலாய் 
நான் நானாகவே வாழ்ந்து 
முடித்து விட்டு
போய் விடுகின்றேன்.

2065719860_37137d5bf1.jpg

6 hours ago, யாயினி said:

 

மாற முடியாத நீ
ஒரு உயிருக்காக 
உன்னையே மாற்ற 
முடியாத நீ.
ஆண் என்ற அகங்காரத்துடன்
நீயாகவே வாழ்ந்து விட்டு -போ,
ஒரு நாளே பிறப்பெடுத்து
பறத்தலை உறுத்தி
படுத்தி வாழும் ஈசலாய் 
நான் நானாகவே வாழ்ந்து 
முடித்து விட்டு
போய் விடுகின்றேன்.

2065719860_37137d5bf1.jpg

மாற முடியாத நீ

மாற முடியாத நீ
ஒரு உயிருக்காக 
உன்னையே மாற்ற 
முடியாத நீ.
பெண்  என்ற அகங்காரத்துடன்
நீயாகவே வாழ்ந்து விட்டு -போ,
ஒரு நாளே பிறப்பெடுத்து
பறத்தலை உறுதிப் 
படுத்தி வாழும் ஈசலாய் 
நான் நானாகவே வாழ்ந்து 
முடித்து விட்டு
போய் விடுகின்றேன்.

ஒரு சொல் மாற்றம் 
ஒரு சொல் எழுத்துப் பிழை திருத்தம்

இதையும் புரிந்து கொள்ளுங்கோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

Printing3 Walk of Ideas Berlin.JPG

 

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.


இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


 

13076561_1019636188119390_95352151765596

நன்றி: புகைப்படம் :Brian Dettmer

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13051757_1674883429429330_11949799535266 இந்தப் பக்கத்தை புரட்டிச் செல்வோர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்..இடையிடையே சிறு,சிறு இடைவெளிகள் ஏற்பட்டாலும் என்னால் முடிந்தவரை அடுத்தடுத்த பக்கங்களை புரட்டிச் செல்வதற்கு உதவிடுவேன்.......
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உலக  புத்தக தினத்தில் வில்லியம் சேக்சுபியர் அவர்களது நினைவு தினம்!!!
 

800px-Shakespeare.jpgFile:Shakespeare-WillSignature3.png

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் மாதம் 23 ம் திகதி ⊷ உலக புத்தக தினம்

 

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 23 ம் திகதி உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக யுனெஸ்கோ அமையத்தின் ஏற்பாட்டில் 1995 ஆம் ஆண்டு முதற்கொண்டு கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், நூல்களுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில; 

≬ உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் பைபிளினை அடுத்து திருக்குறளே முன்னிலை வகிக்கின்றது. திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளில் தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்களான 247 எழுத்துக்களில் "ஒள" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தவே இல்லை.
 
url.jpeg


≬ விக்டர் ஹியூகோ என்கின்ற எழுத்தாளரின் "லெஸ் மிசெரெவில்ஸ் (Les Miserables)" என்கின்ற புத்தகத்தில் காணப்படுகின்ற ஒரு வசனம் 823 சொற்களைக் கொண்டுள்ளது.
 
les_miserables_book.jpg

≬ ஐக்கிய அமெரிக்காவில், ஒவ்வொரு செக்கனுக்கும் தலா 57 புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றதாம்.

≬ நோஹ் வெப்ஸ்டர் தனது முதலாவது அகராதியினை எழுதுவதற்காக 36 ஆண்டுகளை செலவிட்டாராம்.

≬ கிறிஸ்தவர்களின் புனித நூல்  "பைபிள்" ஆகும். உலகில் அதிகளவில் அச்சிடப்பட்ட நூல் என்கின்ற பெருமைக்குரியது பைபிள் ஆகும். உலகளாவியரீதியில் 2.5 பில்லியன் பைபிள் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளனவாம்.

≬ ஐக்கிய அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் நூலகத்தில் 28 மில்லியன் நூல்கள் உள்ளனவாம். 
 
LibraryofCongresslores.jpg

≬ ஜே.கே. ரவுலிங் என்கின்ற பெண் எழுத்தாளரின் 5 வது தொடரான "ஹரி பொட்டர் அன்ட் த ஓடர் ஒஃப் த பொனிக்ஸ்" (Harry Potter and the Order of the Phoenix) என்கின்ற நூலின் 8.5 மில்லியன் முதற்பிரதிகள் விற்பனையானதாம். 

≬ பிரேசில் நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோஸ் கார்லோஸ் ரொய்கி 1986 இற்கும் 1996ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1058  நாவல்களினை வெளியிட்டுள்ளாராம். இவரின் நாவல்கள் மேற்கத்தேய, விஞ்ஞான புனைகதைகள், மற்றும் விறுவிறுப்பு  சம்பந்தப்பட்டவ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11169867_1581888572071396_50951839176271

10632829_1581770538749866_78131875205953

11164163_1578644999062420_564539328_n.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

ஏப்ரல் 25 – உலக பென்குவின் தினம்

 
 
உலகளாவியரீதியில் ஏப்ரல் 25ம் திகதி உலக பென்குவின்தினமாக கொண்டாடப்படுகின்றது.

 
அந்தவகையில், பென்குவின்கள் தொடர்பிலானசுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…!

 
v உலகில் 17 வகையான பென்குவின் இனங்கள்காணப்படுகின்றனஇவற்றில் 13 வகையான பென்குவின்இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளவையாகவகைப்படுத்தப்பட்டுள்ளன.

 
v பென்குவின்கள் பறக்கமுடியாத பறவை இனங்களைச்சேர்ந்தவையாகும்.

 
5fdc8163ec1cdf11b8f69a579792d46e.jpg
v அதிகளவான பென்குவின்கள் தென் துருவத்திலேயேவசிக்கின்றனஆனால் வட துருவத்தில் பென்குவின்கள்இல்லையாம்.

 
v பென்குவின்கள் அதிகளவில் காணப்படும் நாடுகளாவனநியூசிலாந்துஅவுஸ்திரேலியாசிலிஆர்ஜென்ரீனா மற்றும்தென்னாபிரிக்கா.

 
v பென்குவின் இனங்களில் மிகப்பெரிய இனமாக பேரரசர்பென்குவின் (Emperor Penguins) இனங்கள் விளங்குகின்றனஇவற்றின் உயரம் சராசரியாக 1.2m (4’) ஆகும்.  அவற்றின்நிறை சராசரியாக 45kg ஆகும்.

 
Penguins-image-penguins-36797321-1920-10
v பென்குவின் இனங்களில் மிகச்சிறிய இனமாக சிறிய நீலபென்குவின் (Little Blue Penguins) இனங்கள் விளங்குகின்றனஇவற்றின் உயரம் சராசரியாக 33 cm (13”) ஆகும்.

 
bird1.jpg
v உலகில் அதிகளவில் காணப்படும் பென்குவின் இனமாகமகரோனி பென்குவின் இனங்கள் விளங்குகின்றன.

 
Macaronis-picture.jpg
 
v பென்குவின்களின் சாதாரண உடல் வெப்பநிலை 100°F (38°C) ஆகும்.

 
v பென்குவின்கள் கடல் நீரினையும் குடிக்கின்றன. அவற்றின் கண் குழிகளை சுற்றியுள்ள விசேட சுவை அரும்புகளினால் அவை கடல் நீரின் உவர்ப்பு சுவையினை மாற்றிக்கொள்கின்றன.

 
gentoo-penguins-jumping-in-water_24700_6
 
v பென்குவின்கள் 10 – 15 நிமிடங்கள் வரையில் நீரின் அடியில்தங்கியிருக்ககூடிய இயலுமை கொண்டவையாகும்ஆனால்நீரின் அடியில் அவைகளினால் சுவாசிக்க முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.

 
penguins-underwater.jpg
 
v பென்குவின்கள் மணிக்கு 5 – 6 மைல்கள் வேகத்தில்நீந்தக்கூடியவையாகும். 1.7mph – 2.4mph வேகத்தில்நடக்கக்கூடியவையாகும்.

 
BRD-05-KH0049-01P.JPG
 
v பென்குவின்களின் பாலின இயல்புகளைக் கொண்டு ஆண்பெண்இனங்களினை அடையாள கண்டுகொள்ள முடியாதுஅவைபார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவையாகும்.

05penguinDM_468x743.jpg
 
v பென்குவின்கள் தனது வாழ்க்கையில் 75% இனை கடலிலேயே கழிக்கின்றன.

 
 
download.jpg

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மகன் தன் தாயிடம் கேட்டான்... "எனக்கான சரியான பெண்ணை எப்படி கண்டறிவேன்" என்று... அதற்குத் தாய்..." நீ சரியான பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதை விட சரியான ஆணாக இருப்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச தொழிலாளர்கள் தினம்

 

 

13087824_1371572246190158_83541522583674

 

முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

1mei.jpg

 

மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். 1280px-Triumph_of_Labour_at_Marina_Beach

தொழிளாளர் தின வெற்றிச் சின்னம்..சென்னை மெரினாவில்..
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13133084_263173964027010_402712148870304

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை முதன் முதலில் தொடங்கியவர் இறக்கும் தருவாயில் கூறிய‌ கடைசி வார்த்தைகள்.
இது தான் உன் கடைசி தினம் என்பது போல் தினமும் நீ வாழ்ந்தால், வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரலாம்.

சிறு வயதில் நான் படித்த‌ இந்த‌ வாக்கியம் என் மனதில் ஆழ‌ பதிந்து விட்டது. நீங்கள் இறப்பது முன்னாலேயே தெரிந்து விடும்போது இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்பது புரிந்து விடுகிறது.நிர்வாணமாக‌ இருப்பதை போல் உணர்கிரோம்.

உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது உங்களுக்காகவே அதை வாழுங்கள்.துருபிடித்த‌ சித்தாந்தங்களுக்காக‌ வாழ்க்கையை வீணாக்காதீர்கள். அடுத்தவர்களின் கருத்துச்சத்தங்கள் உங்கள்
உள்ளுணர்வின் சத்தத்தை நீர்த்துபோக‌ செய்ய‌ அனுமதிக்காதிர்கள்.

முட்டாள்தனத்திலிருந்துதான் புத்திசாலித்தனம் பிறக்கிறது. அதனால் எப்போதும் பசியோடு இருங்கள்.
எப்போதும் முட்டாளாக‌ இருங்கள்.
உங்கள் இதயமும் உள்ளுணர்வும் உங்களை வழி நடத்தட்டும்.!!!

13102653_546627178850767_603906522243894

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.