Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேத மந்திரங்களின்றி, திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சியில் நடந்த புதுமைத் திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வேத மந்திரங்களின்றி, திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சியில் நடந்த புதுமைத் திருமணம்!
[Monday 2014-09-15 18:00]
kili-tamil-weding-200-news.jpg
வேத மந்திரங்கள் எதுவும் ஓதப்படாமல், அதற்குப் பதிலாக திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் இன்று திருமணம் ஒன்று இடம்பெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் வேதியர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதப்படவில்லை. இருப்பினும், திருக்குறள்கள் சொல்லப்பட்டன. சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது. கிளிநொச்சியில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான இறைபிள்ளை அபிராமி என்பவருக்குமே இந்த திருமணம் நடைபெற்றது.
 
திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மணமகளின் தந்தையுமான வே.இறைபிள்ளை தலைமையேற்று நடத்தியதுடன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆசியுரையினையும் வழங்கினார். இந்த திருமண நிகழ்வில், திருவள்ளுவருடைய திருவுருவப்படம் வைக்கப்பட்டு திருக்குறள் ஓதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=116851&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

 

வாழ்க  மணமக்கள்..

வாழ்த்துக்கள். அதுவும் தாயக மண்ணில் இப்படி ஒரு சம்பவம் பாராட்டபடவேண்டியது.

 உங்கள் திருமண நிகழ்வு போன்று வாழ்க்கையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையவும், வாழ்வெங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடவும் என் வாழ்த்துக்கள்.

இல்லறம் சிறக்கட்டும்.!! 

திருக்குறள் ஒலிக்கட்டும் !!

வள்ளுவம் வாழட்டும் !!

மணமக்களுக்குத் திருமண வாழ்த்துக்கள். 

 

 

சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது. 

 

தாலி கட்டுதல் தமிழ் முறையா?  

மணமக்களுக்குத் திருமண வாழ்த்துக்கள். 

 

 

 

தாலி கட்டுதல் தமிழ் முறையா?  

 

தமிழச்சி, அவர்கள் இந்த அளவு வந்ததே பாராட்டுதற்குரியது. இப்படி ஒரு திருமணம் செய்ய மணமக்கள் எத்தனை எதிர்ப்புகளைச் சமாளித்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

தமிழச்சி, அவர்கள் இந்த அளவு வந்ததே பாராட்டுதற்குரியது. இப்படி ஒரு திருமணம் செய்ய மணமக்கள் எத்தனை எதிர்ப்புகளைச் சமாளித்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

 

உண்மைதான் இணையவன்.  அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.   செய்தியை வாசித்துப் பார்த்ததில் இது மணமகளின் தந்தையாரின் ஆதரவோடு நடந்ததாகத் தெரிகிறது.  இது மேலும் மேலும் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  

 

தாலி கட்டுவது பற்றிய யாழ்உறவுகளின் கருத்துக்களை அறிந்து கொள்ளவே அப்படி எழுதினேன்.   தாலி பற்றி எனக்குக்கூட குழப்பம் உள்ளது.   சங்ககால இலக்கியங்களில் திருமணத்தின் அடையாளமாக ஒரு ஆபரணம் அணிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால், அவை காலத்துக்குக் காலம் மாறுபட்டிருக்கிறது.  தெரிந்தவர்கள் இங்கு தங்கள் கருத்துக்களைப் பதியட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்குத் திருமண வாழ்த்துக்கள். 

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் "மங்கல அணி" என்ற சொற்பிரயோகம் உண்டு. அபிதான மணிமாலை என்ற நிகண்டு "மங்கல அணி" என்பதற்கு "தாலி" என்றுதான் பொருள் தருவதாக கூறுகின்றனர் "தாலி மங்கல நாண் எனத் தகுமே"

 

"நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்

மறுவின் மங்கல அணியே அன்றியும்

பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்"

 

"அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய

மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

 

தாலி என்ற சொல்லிற்குப் பலரும்மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன் என்றே விதப்பாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இந்தச் சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், “வளமை (prosperity), பிறக்கம் (fertility)” ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி என்னும் பொதுமைச் சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்னும் பொதுமைச் சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, ‘மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி என்றெல்லாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்கள்.

 

விரிவான தகவலுக்கு இங்கே செல்லவும் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.