Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்ராக் (Cataract )... என்றால் என்ன..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது உடலின் முக்கிய உறுப்புகளில் கண்ணும்.. முக்கிய புலன்களில் பார்வைப்புலனும் அடங்குகிறது.

 

eye_cutaway.jpg

 

கட்ராக் (கண்புரை) என்றால் என்ன..??! யாருக்கு வரும்..??!

Cataract2.23911108_std.jpg

 

கண்ணின் வில்லைப் பகுதியில் ஏற்படும்.. பாதிப்பே கட்ராக் எனப்படுகிறது. தெளிவான கண்ணாடியால் ஆன வில்லைகள் போன்று இருக்கும் கண்வில்லைகள் வயதாக ஆக.. புகாரடைந்த கண்ணாடியாக மாறிவிடுகின்றன. குளிர்காலங்களில் கார் கண்ணாடிகளில் புகார் படிந்திருப்பது போல. இதனால் பார்வைத் தெளிவின்மை மற்றும் நிறங்களை சரியாக அடையாளம் காண்பதில் பிரச்சனைகள் தோன்றும்.(நிறக்குருடு என்ற பாரம்பரிய நோய் உள்ளவர்களில் நிறங்களை அடையாளம் காண்பதில் இருக்கும் நிலை வேறு. இது வேறு.)

 

பாரம்பரிய முறையாகவும் இது வரலாம். மற்றும் உடலிரசாயனச் செயற்பாட்டு பிறழ்வுகள் மூலமான தாக்கங்களின் பெறுபேறாகவும் இது வரலாம். சில பெளதீக தாக்கங்களாலும் இந்த நிலை தோன்றலாம்.

 

சில குழந்தைகள் பிறக்கும் போதே கட்ராகோடு பிறப்பதும் உண்டு.

 

கட்ராக் ஒரு கண்ணில் அல்லது.. இரண்டு கண்ணிலும் வருமா..??!

 

cataract.jpg

 

கட்ராக் ஒரு கண்ணில் என்றில்லாமல்.. இரண்டு கண்ணிலும் வர வாய்ப்புள்ளது.

 

கட்ராக் பரிகாரம் என்ன..?!

 

சத்திரசிகிச்சை.

cataract-surgery.png

 

கட்ராக் வந்தால்.. விழிவெண்படலம் (Cornea) ஊடாக சிறிய துளையிட்டு.. பாதிக்கப்பட்ட வில்லையை அகற்றி அதற்கு மாற்றீடாக பிளாஸ்டிக் வில்லையை வைத்துவிடுவார்கள். இதன் மூலம் மீண்டும் பார்வைத் தெளிவு திரும்ப 90% வாய்ப்புள்ளது.

 

இந்த சத்திரசிகிச்சைக்கு எவ்வளவு காலம் எடுக்கும்..?!

 

சராசரியாக..30 தொடங்கி 45 நிமிடங்கள்.

 

இந்த சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்து தருவார்களா..?!

 

ஆம். கண்ணைச் சுற்றிய பகுதிகளை மட்டுமே அது விறைக்க வைக்கும். இதனை local anaesthetic என்று அழைப்பார்கள்.

 

கட்ராக் சத்திரசிகிச்சையால் பிரச்சனைகள் வருமா..?!

 

cataract_phaco.jpg

 

ஆம். வர வாய்ப்புள்ளது. கட்ராக் சிகிச்சையின் போது விழிவெண்படலத்தில் இடப்படும் சிறிய துவாரம்.. காலப்போக்கில் சரியாகி விட வேண்டும். ஆனால் சிலரில் அது சரியாக ஆறாமல்.. அதுவே ஒரு கறையாக மாறி பார்வைப் புலனில் பாதிப்பை அல்லது இடையூறை கொண்டு வரலாம். இதனை அகற்ற பின் வேறு பல சிகிச்சைகள் (சத்திர சிகிச்சைகள் உட்பட) அளிக்க வேண்டி இருக்கும்.

 

மேலும் சத்திரசிகிச்சையின் பின் சரியான பராமரிப்பின்றிய கண்களில் ஏற்படும் தொற்றுக்கள் சார்ந்தும் பிரச்சனைகள் வரலாம். ஆனால் இவை எல்லாம் சிறிய சதவீதமே ஆகும்.

 

மேலும்.. செயற்கை வில்லையைச் சுற்றி காலப்போக்கில் சவ்வுகள் வளரலாம். இதனை posterior capsule opacification (PCO) நிலை என்பார்கள். லேசர் சிகிச்சை மூலம் இதனை சரிசெய்ய முடியும்.

 

விழிவெண்படலத்தை பாதிக்கும் என்றால் கட்ராக் சத்திரசிகிச்சை செய்யத்தான் வேண்டுமா..?!

 

தற்போதைய வழிமுறையின் படியான கட்ராக் சத்திரசிகிச்சையின் பின்னான விழிவெண்படல பாதிப்பு என்பது 20% தான் அவதானிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல மீளத்தக்க பாதிப்புக்களாகவே இருக்கின்றன. அந்த நிலையில்.. மொத்தமான கட்ராக் பார்வைப்புல இழப்பை விட.. இந்தப் பாதிப்பு ஒப்பீட்டளவில் சிறிய சதவீதமே ஆகும். அதனால்.. கட்ராக் சத்திரசிகிச்சை செய்து கொள்வது பற்றி அதிகம் அஞ்ச வேண்டியதில்லை.

 

கட்ராக் சத்திரசிகிச்சையை இரண்டு கண்ணிலும் ஒரே தடைவையில் செய்யலாமா..??!

 

பொதுவாக.. இரண்டு கண்ணிலும் ஒரே தடவையில்.. செய்யமாட்டார்கள். ஒன்றன் பின் ஒன்றாக... சத்திரசிகிச்சை செய்யப்பட்ட ஒன்றின் பெறுபேறு முன்னேற்றம் இவற்றைக் கருத்தில் கொண்டே மற்றைய கண்ணில் சத்திரசிகிச்சைக்கு முன்மொழிவார்கள்.

 

யாரில் இந்த சத்திரசிகிச்சையை செய்ய தயங்குவார்கள்..?!

 

மேலும் உயர் குருதி அழுத்தம்.. நீரிழிவு.. இதயப் பிரச்சனை மற்றும் ஒவ்வாமைகள் உள்ளவர்களிடத்தில்.

 

கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் எவ்வளவு காலம் ஓய்வு வேண்டும்.. என்ன மாதிரியான முற்காப்புகளை செய்ய வேண்டும்..??!

 

கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் 2 தொடக்கம் 3 வாரம் ஓய்வு அவசியம். மேலும்.. கண்ணை கைகளால் தொடுவது.. கசக்குவது கூடாது. அதேபோல்.. கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது சோப் முதலானவற்றை பாவித்து கழுவுவது கூடாது. கடும் ஒளியை காணா வண்ணம்.. புகாரடைந்த (கூலிங்) வில்லைகள் அற்ற கண்ணாடியை அணிந்து கொள்ளலாம்.

 

மேலும் வெற்றுக் கண்ணால் பிரகாசமான ஒளியை.. மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கக் கூடிய தொலைகாட்சி பார்ப்பது.. நூல்கள் படிப்பது.. கணணியில் இருப்பது.. போன்ற செயற்பாடுகளை கண் மருத்துவர் பரிசோதித்து உத்தரவாதம் அளிக்கும் வரை நிறுத்துவது அல்லது குறைப்பது நன்று.

 

கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் கண்ணாடி அணியும் நிலை வருமா..??!

 

cataract.jpg

 

ஆம். வரலாம். காரணம் கட்ராக் சத்திரசிகிச்சையின் பின் இயற்கையான கண்வில்லைகள் அகற்றப்பட்டு செயற்கையான வில்லைகள் அங்கு வைக்கப்படுவதால்.. அவற்றால் இயற்கையான வில்லைகளைப் போலவே 100% தம்மை பார்வைத் தூரத்துக்கு ஏற்ப இசைவுபடுத்தி பார்க்க முடியாது. இந்த நிலையில்.. சில பார்வைத் தெளிவின்மைகளைப் போக்க.. அவரவரின் தேவைக்கு ஏற்ப கண்ணாடிகள் கண் மருத்துவப் பரிசோதனைகளை அடுத்து அணிய நேரிடலாம். சிலர் கென்ராக் வில்லைகள் அணிந்து கொள்வார்கள்.

 

மேலும் விபரங்கள் அறிய..

 

http://www.nhs.uk/Conditions/Cataract-surgery/Pages/Introduction.aspx

 

http://www.webmd.com/eye-health/cataracts/health-cataracts-eyes

cataract-1.jpg

 

 

கண்புரை.. கட்ராக்.. அறிவூட்டல் பதிவு. (யாழ் களத்துக்காக.)

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(கண் சம்பந்தட்ட சிகிச்சைகளுக்கு முன் கண்களை பல வகைகளில் பரிசோதிப்பார்கள்.. visual field tests உள்ளடங்க. இவற்றின் போது வெவ்வேறான திரவங்களை கண்ணில் விட்டு.. வெவ்வேறான கருவிகளின் உதவியோடு அவதானிப்பார்கள். இதனால் கண் மங்கலடைந்தல்.. எரிதல் அடைதல் போன்ற பிரச்சனைகள் எழலாம். எனவே கண் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளுக்கு.. சிகிச்சைகளுக்கு செல்லும் போது உதவிக்கு தெரிந்தவர்களை அழைத்துச் செல்லுதல் நல்லது.) :icon_idea:

புதிய தொழில்நுட்ப உதவியுடன் எனது உறவினருக்கு 15 நிமிடத்தில் இதனை அகற்றினார்கள். சிறிய துளையிட்டு அதனூடாக உயர் ஒலி அலைகளைச் செலுத்தி (ultrasonics ?) நொருங்கச் செய்து அகற்றினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய தொழில்நுட்ப உதவியுடன் எனது உறவினருக்கு 15 நிமிடத்தில் இதனை அகற்றினார்கள். சிறிய துளையிட்டு அதனூடாக உயர் ஒலி அலைகளைச் செலுத்தி (ultrasonics ?) நொருங்கச் செய்து அகற்றினார்கள்.

 

இதனை பேக்கோஇமல்சிபிக்கேசன் (Phacoemulsification) என்பார்கள். தற்போது இந்த முறை பிரபல்யம். ஆனாலும் சிலரில்.. அவர்களின் நிலைமைக்கு ஏற்ப மாற்று முறைகள் பிரேரிக்கப்படுவதுண்டு.

 

ஆம்.. இதில் அதி அதிர்வெண் (frequency) உள்ள அல்ராசொனிக் ஒலி அலைகள் (புறஊதா ஒலி அலைகள்) பயன்படுத்தப்படுகின்றன. சிறிய துவாரம் இடுதல் மூலம்.. அல்ராசொனிக் அலை அதிர்வுகளை செலுத்தும் கருவியை அனுப்பி.. அதன் மூலம் பழுதாகிய வில்லையை உடைத்து.. பின்னர் உறிஞ்சிகள் கொண்டு மீதிகளை அகற்றுவார்கள். அதன் பின்னர் புதிய செயற்கை வில்லையை செலுத்துவார்கள். :icon_idea:

நன்றி நீங்கள் அறிந்ததைப் பகிர்ந்து கொண்டதற்கு இணையவன். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நெடுக்கர்!

 

கட்ராக் பற்றி இன்று நிறைய அறிந்து கொள்ள முடிந்தது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நெடுக்கர்!

 

கட்ராக் பற்றி இன்று நிறைய அறிந்து கொள்ள முடிந்தது!

 

எமது இனத்தின் பலவீனங்களில்.. ஒன்று... நோய் வந்த பின் தான்.. அதைப்பற்றி அறிய ஆர்வம் காட்டுவது. அதனால் சில சமயங்களில் எந்தப் பயனும் கிடைக்காது. அதேவேளை கூடிய அளவு மனிதர்களை தாக்கக் கூடிய நோய்கள் பற்றிய முன்னறிதல்.. அவை வருவதை.. அல்லது அவற்றை உருவாக்கவல்ல.. வன்காரணிகளை வாழ்கையில் தவிர்க்க உதவும். நீடித்த சுக வாழ்வை அது உறுதி செய்யும். அந்த வகையில்.. புங்கை அண்ணா கொஞ்சம் விதிவிலக்காக இருக்கீங்க... அறிய ஆர்வம் காட்டியதன் மூலம்...!

 

இவற்றை பதிவதன் நோக்கமும்.. முன்கூட்டிய அறிதலுக்கே..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

(கண் சம்பந்தட்ட சிகிச்சைகளுக்கு முன் கண்களை பல வகைகளில் பரிசோதிப்பார்கள்.. visual field tests உள்ளடங்க. இவற்றின் போது வெவ்வேறான திரவங்களை கண்ணில் விட்டு.. வெவ்வேறான கருவிகளின் உதவியோடு அவதானிப்பார்கள். இதனால் கண் மங்கலடைந்தல்.. எரிதல் அடைதல் போன்ற பிரச்சனைகள் எழலாம். எனவே கண் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளுக்கு.. சிகிச்சைகளுக்கு செல்லும் போது உதவிக்கு தெரிந்தவர்களை அழைத்துச் செல்லுதல் நல்லது.) :icon_idea:

 

முற்றிலும் உண்மை ...ஆங்கிலம் தெரியும் சமாளிக்கலாம் என்று விட்டு இப்படியான வைத்திய நிலையங்களுக்கு போய் விட்டு அங்கு வைத்தியம் செய்த களைப்புடன் தங்கள் பாட்டில் இயங்கத் தொடங்குவதினால் மயங்கி விழுகிறவர்களும் இருக்கிறார்கள்..வீண் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறவர்கள் உங்கள் கூடவே வைத்தியர்களிடம் செல்லும் போது யாராவது உதவிக்கும் கூட்டிச் செல்வது மிக்க நல்ல விடையம்..கடந்தகிழமை நான் நோில் கண்ட காட்சி.கண் மருத்துவ நிலையம் ஒன்றுக்கு ஒருவரைக் கூட்டிச் சென்றிருந்தேன்..அந்த சமயம் இன்னும் பலர் அங்கிருந்தார்கள்..அதில் ஒரு நடுத்தர வயது நம்ம நாட்டு தமிழ்அண்ணா ஒருவரும் வந்திருந்தார்.

அந்த அண்ணா பரிசோதனை அறைக்குள் போய் லேசர் முறையிலான சிகிச்சை பெற்று விட்டு வெளியில் வந்து வைத்திய நிலையத்துப் பெண்மணி ஒருவரோடு அடுத்த தவணைக்கு உரிய வருகையைப் பதிவு செய்து கொண்டு நிற்கும் போது  மயங்கி விழுந்திட்டார்...அங்கிருந்த வேற்று நாட்டவர்கள்  ஆழைத் தூக்கி கதிரையில் இருத்தி விட்டு தங்கள் பாட்டுக்கு அவ்விடத்தை விட்டு போய் கொண்டே இருந்தார்கள்...யாரும் கிட்டப் போய் என்னாச்சு எதனால் மயங்கி விழுந்தனீங்கள் என்று கேட்பதற்கு கூட தயங்கினார்கள்..

உடன் இன்னும் ஒரு தமிழ் பிள்ளையும் நானுமாக கிட்டப் போய் என்ன உதவி வேணும் என்ன வருத்தங்கள் எல்லாம் இருக்கு..எதனால் தனியாக வந்தனீங்கள் என்று கேட்டு கதைத்துக் கொண்டு நின்றோம்..என்ன சாப்பிட்டனீங்கள் ஒன்றும் சாப்பிட இல்ல..காலையில் என்ன குடிச்சனீங்கள் இன்னும் ஒன்றும் இல்லை..ஏன் வைத்தியர் சாப்பிட வேண்டாம்,ஒன்றும் குடிக்க வேண்டாம் என்று சொல்லியா விட்டார் என்று கேட்டால் இல்லை.....எனக்கு நேரம் இருக்கவில்லை..இங்கு வைத்தியரிடம் வந்தால் கண்ணில் ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக மருத்தவமனைக்கு போகட்டாம் அதனால் யோசனை வந்துட்டுது.....தலைக்குள்ளை என்னமோ செய்தது மயங்கிட்டன். கனவு உலகத்திற்கு போன மாதிரி இருந்தது என்றார்...இப்படியானவர்களை என்னவென்று சொல்வது...மனிதர்களுக்கு வருத்தம்,துன்பம் வருவது உலகத்தில் இயல்பு தான்..முடிந்தவரைக்கு ஒருவரை கூடவே கூட்டிச் செல்லுங்கள்... வெளியில் செல்லும் போது ஏதாச்சும் சாப்பிட்டு விட்டு மற்றும் தேனீர்,கோப்பி,யூஸ் ஏதாச்சும் குடித்து விட்டு போங்கள்..அல்லது கூடவே எடுத்து செல்லுங்கள்.

எல்லாவற்றையும் தொடராக எழுதும் போது யாயினிக்கு வேறை வேலையே இல்ல என்று யாரும் என்று நினைத்து விடக் கூடாது என்பதற்காக எல்லா விடையங்களையும் எழுத விருப்பம் வாறது  இல்லை..ஆனால் இப்படி எல்லாம் நடக்கிறது...நேடுக் அண்ணா சொல்லிச் சென்றிருப்பதனால் இவ் விடையத்தை எழுதினேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி. அவதானித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரத்தியேக பதிவுக்கு, நன்றி நெடுக்ஸ்.
கட்ராக் என்பதும், மாலைக் கண் நோய் என்பதும் ஒன்றா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரத்தியேக பதிவுக்கு, நன்றி நெடுக்ஸ்.

 

கட்ராக் என்பதும், மாலைக் கண் நோய் என்பதும் ஒன்றா?

 

உங்கள் கேள்விக்கு விடை: இல்லை.

 

விளக்கம்:

 

கட்ராக் என்பது.. கண்புரை நோய். மாலைக் கண் நோய் (Nyctalopia - night blindness) அல்ல. மாலைக்கண் நோய்.. பொதுவாக ஒரு பரம்பரை நோய் என்று அறியப்படுகிறது. அங்கு பெண்களே காவிகள். அது அவர்களின் இலிங்க நிறமூர்த்தமான X நிறமூர்த்தம் மூலம் காவப்படுகிறது. மேலும் மாலைக்கண் நோய் விற்றமின் ஏ குறைபாடு மற்றும் பெளதீக தாக்கங்களாலும் வரலாம்.

 

கட்ராக் உள்ளவர்களிலும்.. மாலை நேரத்தில் பார்வை கூடிய மங்கல் அடையும். காரணம்.. வெளிச்சத்தின் அளவில் ஏற்படும் வீழ்ச்சி. மாலைக் கண்நோய் விழித்திரையில் (Retina)  ஏற்படும் பிரச்சனை சார்ந்து ஏற்படுகிறது. கட்ராக்.. விழிவில்லை (Lens) சார்ந்து ஏற்படும் பிரச்சனையால் ஏற்படுகிறது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.