Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நாடுகடத்திய இலங்கையர்கள் பலர் துன்புறுத்தலிற்க்கும், பாலியல் வதைகளுக்கும் உள்ளாகினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கோர்லட் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

aus%20refugi_CI.jpg

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலிற்க்கும், பாலியல் சித்திர வதைகளுக்கும் உள்ளானதாக தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


தாங்கள் இலங்கை பாதுகாப்பு படையினராலேயே துன்புறுத்தப்பட்டதாக அவர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.


டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லசாப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவினால் நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். அதன் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவபவர்கள் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு இலங்கையில் நரகத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.


தாங்கள் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவதாகவும், இலஞ்சம் வழங்கினால் மாத்திரமே தங்களை விடுவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


குறிப்பிட்ட ஊடகவியலாளர் தான் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே அவர்களை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


தான் சந்தித்த சிலர் மிக மோசமான சித்திரவதைகள் காரணமாக முற்றாக உடைந்து போயுள்ளதாகவும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


முதற்தடவை இலங்கையிலிருந்து தப்பியோட முயன்ற வேளை கைது செய்யப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் தான்  மீண்டும் அவுஸ்திரேலியாவிற்க்கு செல்ல முயன்ற வேளை தடுத்து நிறுத்ப்பட்டு திருப்பி அனுப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அவர் மிகுந்த அச்சத்திலிருந்தார்- அதனால் நாட்டை விட்டுவெளியேற முயன்றார்- அவர் தற்போது வேறு நாட்டிலிருக்கிறார் என அந்த உடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளைவானில் கடத்தபப்ட்டு இலஞ்சம் வழங்கப்படும் வரை சித்திரவதை அனுபவித்தவர்களின் கதைகளுமுள்ளன. மூன்று கிழமை தடுத்து வைக்கப்பட்டு பலரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட ஒருவரை எனக்கு தெரியும் என்றும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112127/language/ta-IN/article.aspx

 

Edited by நிழலி
தலைப்பு திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இது நம்பகமற்ற தகவல்.

எனது பிரதமர்ர தலைல அடித்து மகிந்த சத்யம் செய்தவர் யாரையும் துன்புறுத்த மாட்டோம் என்று.

இவ்வண்ணம்,

அவுஸ் வாழ் அபர்ஜினித் தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

 goshan_che அந்த பச்சை தமிழன் யாழுக்கு வழக்கமாய் வரும் நேரம் நெருப்பை கொழுத்துவது நல்லது அவர் தற்போதெல்லாம் Mark Zuckerberg வாழவைப்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளார். :D

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸி.எஸ்.பி.எஸ் வானொலியின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் திஸர!

 

 

thisara-samarasinghe-300x168.jpgஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் சித்திரவதைகளை அனுபவித்தனர் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்து இலங்கையின் ஆஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க ஆஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். வானொலி சேவை வெளியிட்ட செய்தி பக்கச்சார்பானது – உண்மைக்குப் புறம்பானது – திரிபுபடுத்தப்பட்டது – எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களமும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பான உத்தரவாதங்களை தான் பெற்றுள்ளது எனவும், தான் இந்த வாக்குறுதிகளையே நம்பியிருக்கின்றது எனவும் அது தெரிவித்துள்ளது. எனினும், இந்த விடயம் குறித்து விசாரணை செய்வதற்கான தகவல்களை தான் கோரிய போதிலும் அது கிடைக்கவில்லை என திணைக்களம் மேலும் தெரிவித்தது.

http://tamilleader.com/?p=42109

இந்த இணைப்பில் காணொலி உள்ளது. http://www.sbs.com.au/dateline/story/watch/id/602018/n/Turned-Back-to-Torture

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய பிரச்சனை சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளைத் திருப்பி அனுப்புவது மட்டுமே.
திருப்பி அனுப்பப்படும் அகதிகளுக்கு அவர்களுடைய சொந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது பற்றி ஆராய எங்களுக்கு நேரம் இல்லை. அது எங்களுடைய பிரச்சனையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய பிரச்சனை சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளைத் திருப்பி அனுப்புவது மட்டுமே.

திருப்பி அனுப்பப்படும் அகதிகளுக்கு அவர்களுடைய சொந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது பற்றி ஆராய எங்களுக்கு நேரம் இல்லை. அது எங்களுடைய பிரச்சனையும் இல்லை.

 

 

அது

அந்த மண்ணில் பாண் வாங்கிவர சுதந்திரம் பெற்றுள்ளோம் என்பவர்களின் பொறுப்பு... :(

இந்த இருசாராருக்கும் இடையில் மக்கள்.......... :(  :(  :(

youtube இணைப்பு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.