Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடகொரிய அணுகுண்டு பரிசோதனை

Featured Replies

வட கொரிய அணு குண்டு பரிசோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வடகொரியாவை இவ்வாறான வேறு வழியற்ற (desperate) நிலைக்கு கொண்டு சென்று அதன் மூலம் ஆசியாவின் பாதுகாப்பு விவகாரம் அடிக்கடி உலக செய்தி தலையங்கம் ஆவதில் இன்றய உலக வழக்கில் நன்மை யாருக்கு?

:? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆராயபபட வேணடிய ஒரு விடயம தான். அதிலும் இனறு ஜநா செயலாளர் தெரிவிக்கு வடகொரியாவின் எதிர் நாடு தெரிவு செய்யப்படுவதும் முக்கியமான அம்சம்!

ஐ.நா. பொதுச் செயலாளராக தென்கொரிய வெளியுறவு அமைச்சர்.

ஐ.நா. புதிய பொதுச் செயலராக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கிமூன் தேர்வுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் இன்று ஒரு மனதாக அவரது பெயரை முன்மொழிகின்றன(சங்கதி)

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியா வச்சிட்டான்யா ஆப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

Australia பிரதமர்ரும் சரியா பயந்து போனார்..உடனயியாக ஜ.நா வை பொருளாதார தடை விதிக்கட்டாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை

வடகொரியா இன்று காலை நிலத்தடி அணு ஆயுத சோதனையை நடத்தியது என்று வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் அறிவித்தது. சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில், வடகொரியா, சர்வதேச சமூகத்தின் பொது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அணு ஆயுத சோதனையை மேற்கொள்வதை, சீன அரசு உறுதியாக எதிர்க்கிறது என்றும், அணு ஆயுதமின்மை என்ற வாக்குறுதியை கடைபிடித்து, நிலைமை மேலும் மோசமாகும் எந்த நடவடிக்கைகளையும் நிறுத்தி, வடகொரியா ஆறு தரப்பு பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் சீனா கோரியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் லீ சேள சிங்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸூம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கொரிய தீபகற்பத்தின் புதிய நிலைமை பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

தென்கொரிய அரசு தலைவர் ரோ மு யுன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியுள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனை, ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை தொடர்பான பொது அறிக்கையை அத்துமீறியுள்ளது. இது குறித்து, தென்கொரியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று, கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட அரசு அறிக்கையில் தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினை பற்றி, ஐ.நா பாதுகாப்பவை விரைவில் அவசர கூட்டத்தை நடத்தும்.

வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு எதிரான பதில் நடவடிக்கை பற்றி உடனடியாக கலந்தாய்வு செய்யும் வகையில் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி முன், இன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸ், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தரோ அசோ ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.இந்த பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பு அவை கலந்தாய்வு செய்வதோடு, இன்றியமையாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மூன்று வெளியுறவு அமைச்சர்களும் ஒருமனதாக கோரினர்.

தென்கொரிய அமெரிக்க இராணுவ கூட்டணி, அமெரிக்க-தென் கொரிய கூட்டு பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அமெரிக்க அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைஸ் தெரிவித்தார்.

நன்றி -சீன வானொலி நிலையம்

  • தொடங்கியவர்

தென்கொரிய அமெரிக்க இராணுவ கூட்டணி, அமெரிக்க-தென் கொரிய கூட்டு பாதுகாப்பு பற்றிய ஒப்பந்தம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அமெரிக்க அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ரைஸ் தெரிவித்தார்.

நன்றி -சீன வானொலி நிலையம்

ஊர் இரண்டு பட்டா யாருக்கோ கொண்டாட்டமாம் அது தான் வடகொரியாவை உசுப்பேத்தி பூச்சாண்டி காட்டி நடத்தினம். சீனாவின்ரையும் யப்பானிற்றையும் கொல்லையிக்கை குளப்பம் எண்டு குந்தியிருக்கலாம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு, வடகொரியாவும், தென்கொரியாவும் நட்புறவு கொண்டாடியதல்லவா! இரண்டு நாட்டு மக்களும் மற்றய நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், எவ்வாறு இது குழம்பியது?

முக்கியமாக, அமெரிக்கா வடகொரியாவோடு பேச்சுவார்த்தை என்ற பெயரில் குற்றசாட்டுக்களையும், நெருக்குவாரங்களையும் கொடுத்தா இதற்குக் காரணம்?

  • தொடங்கியவர்

அது தான் உந்த axis of evil இல ஈராக் ஈரான் வடகொரியா என்று 3 நாடுகள் இருப்பதாக சொன்னவை அறிவுள்ள பெரியவை. :roll:

ஈராக்கை போல கைவைக்கமுடியாத பலமுள்லவை ஈரானும் வடகொரியாவையும் இப்ப முழிக்கிரார் புஸ் இவை இரண்டுடன் போரை தொடங்கினால் புஸ்வானமாகுவார் புஸ் அதுவும் வடகொரியாவுக்கு சீனாவின் ஆதரவு உண்டு கொரிய யுத்ததின் போது வடகொரியாவுக்கு ஆதராவாக படைகளை கூட அனுப்பியது சீனா வடகொரியாவின் மீது யுத்தத்தை ஆரம்பிக்குமானால் அது சில வேளை 3ம் உலகயுத்தத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பது என் கருத்து

வடகொரிய அணுக்குண்டுபற்றி....

கொஞ்சம் பறயலாமே...

8) :lol::lol::lol: :| :mrgreen:

எனக்கு சந்தோசம்.

வாழ்த்துக்கள் கொரிய மக்களுக்கு... 8)

உலக சமாதானத்தின் கதவுகளைத் திறப்பதற்கான இன்னொரு திறவுகோல்.... :lol: :lol:

  • தொடங்கியவர்

கிழக்கு மற்றும் மேற்கு யேர்மனி ஒன்றாக வேண்டும் என்றதில் இருந்த ஆர்வம் வடக்கு மற்றும் தெற்கு கொரியா ஒன்றாக வேண்டும் என்பதில் "சர்வதேச சமூகத்திற்கு" இருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பு மற்றும் கரும்சிவப்பு: அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகள்

"தோடம்பழநிறம்": அணுவாயுதம் தயாரிப்பதற்கான திட்டம் வைத்திருக்கும் நாடுகள்

நீலம்: இத்திட்டத்தை விட்ட நாடுகள்

http://upload.wikimedia.org/wikipedia/de/d...%A4chte1006.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மற்றும் மேற்கு யேர்மனி ஒன்றாக வேண்டும் என்றதில் இருந்த ஆர்வம் வடக்கு மற்றும் தெற்கு கொரியா ஒன்றாக வேண்டும் என்பதில் "சர்வதேச சமூகத்திற்கு" இருக்கா?

கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி ஒன்றாக சேர்ந்தால், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த இரண்டு கொரியா நாடுகளும் ஒன்றாக சேர்ந்தால், யாருக்கு நன்மை? அவர்களுக்குத்தானே? சர்வதேசம் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் இந்த மேற்குலகுநாடுகளுக்கு எந்தவொரு நன்மை இருக்கிதா? இல்லைதானே? அதுதான் யாரும் இந்த விஷயத்தில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டு- வடகொரியா

தொழில்நுட்பம் - சீனா

தூண்டுதல் - அமெரிக்கா

நேரடி அச்சுறுத்தல் - தென் கொரியா

ரகசியம் - அமெரிக்கா எதிர்பார்க்காத வேளையில் வேலை முடிச்சது.

  • தொடங்கியவர்

கொம்பியூட்டரில இருந்து சொப்வெயர் வந்ததா சொப்வெயரில இருந்து கொம்பியூட்டர் வந்தா மாதிரி ஒரு பிரமாதமான சாரம்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டரில இருந்து சொப்வெயர் வந்ததா சொப்வெயரில இருந்து கொம்பியூட்டர் வந்தா மாதிரி ஒரு பிரமாதமான சாரம்சம்.

இது என்ன புதிதாக இருக்கிறது. இப்படியான அநாவசியங்களை எழுதுவதை நிறுத்தி உருப்படியா எழுதலாமே தெரிந்த விடயங்களை பொருத்தமாக.

Beijing - traditionally Pyongyang's closest ally - said it had not ruled out UN sanctions but that military action was "unimaginable".

Beijing is one of the North's few remaining allies, and a major supplier of energy and financial aid to the secretive regime in Pyongyang.

The US ambassador to the UN said while the US would not rule out using force, it was seeking a diplomatic solution.

The South Korean Prime Minister, Han Myung-sook, said Seoul would not support a resolution including a threat of military force.

South Korean President Roh Moo-hyun feared the move could "spark a nuclear arms build-up in other countries.

Russia, which like China has resisted sanctions in the past, has said it is "ready to take part in joint efforts of the interested parties to arrive at a peaceful, diplomatic settlement of the situation".

Only Iran, which also faces Security Council action over its failure to suspend its uranium enrichment programme - has voiced support for North Korea.

பிபிசி இணையத்தள செய்திகளினூடு.

  • தொடங்கியவர்

The US ambassador to the UN said while the US would not rule out using force, it was seeking a diplomatic solution.  

வடகொரியா புளுட்டோனியம் பாவிக்குதாம் பாக்கிஸ்தான் யுறேனியம் பாவிக்குதாம். ஆனபடியா பாக்கிஸ்தான் வடகொரியாவிற்கு உதவி செய்திருக்க முடியாதாம்.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டு - பாகிஸ்தான்

தொழில்நுட்பம் - சீனா

தூண்டுதல் - இந்தியா

நேரடி அச்சுறுத்தல் - இந்தியா

ரகசியம் - இந்தியா அமெரிக்கா எதிர்பார்க்காத வேளையில் வேலை முடிச்சது.

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரிய நெருக்கடியும் மேற்குலகின் இரட்டைவேடமும்

உலகில் அணுகுண்டுச் சோதனையை நடத்தியதாகப் பிரகடனம் செய்திருக்கும் எட்டாவது நாடாக கம்யூனிஸ்ட் வட கொரியாவை இன்று நாம் காண்கின்றோம். மேற்குலகினால் `போக்கிரித்தனமான நாடு' (Rogue State) என்று வர்ணிக்கப்படும் வட கொரியா அதன் வட கிழக்கு ஹம்கியோங் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை நிலத்தின் அடியில் நடத்திய அணு வெடிப்புச் சோதனையின் மூலமாக உலகின் அணுவாயுத நாடுகளின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதுடன் உலக இராணுவ வல்லாதிக்க சமநிலையில் சில மாறுதல்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலையொன்றையும் உருவாக்கியிருக்கிறது.

வட கொரியாவின் இந்த நடவடிக்கை இயல்பாகவே உலக நாடுகளின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கந்தப்பு இணைப்புக்கு, நல்ல கட்டுரை.

"

:o:D:lol: 8) 8) :| :idea:

இந்த உலகை வெல்லுவோம்... ஆனால் இவ் உலகை நம்பாதே...

இதுவே இன்றைய உலகயதார்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.