Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 5 - புலிகளின் மீதான தடை விலகலும் + தமிழரின் செயற்பாடுகளும்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வாங்க பேசலாம் - 5 - புலிகளின்  மீதான  தடை விலகலும் + தமிழரின் செயற்பாடுகளும்....

நேற்றையிலிருந்து

செய்திகளையும்

கருத்துக்களையும் பார்த்திலிருந்து.....

பலரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி  தெரிகிறது..

ஆனால் இந்த வழக்கை தாக்கல் செய்தவரே 

இது தமிழர்களின் வெற்றி  என்ற போதும்

இதை ஒரு தனி  மனிதரின் முயற்சி  என்பது   போலவும்

அமைப்புக்களை  குறை கூறுவதிலும் ஒரு சிலர் முனைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது..

இங்கு கருத்தெழுதுபவர்கள்

புலத்திலுள்ள எந்த அமைப்பிலாவது இருக்கின்றீர்களா?

ஒருங்கிணைப்புக்குழு

மக்களவை

நாடுகடந்த அரசு

உலகத்தமிழர் அமைப்பு

பேரவைகள்

ஏன் புலம் பெயர்தேசத்து (தமிழரற்ற) அமைப்புக்கள்.....

எதிலாவது அங்கத்தவராக

உறுப்பினராக

சந்தாதாரராக

நிர்வாகிகளாக

நிர்வாகக்கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து கூறுபவர்களாக  உள்ளீர்களா??

தொடர்ந்து பேசலாம்......

  • கருத்துக்கள உறவுகள்

நான் அங்கத்தவனும் இல்லை,கருத்து கூறுபவனும் அல்ல ஆனால் சகல கருத்தரங்குகளுக்கும் சென்று வருபவன்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய வெளிநாட்டு அமைப்பில் நிர்வாகத்தில் உள்ளேன் ஜயா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு  முடக்கபட்ட நிதிகளை விட ஏமாற்று பச்சோந்திகளால்  பதுக்க பட்டது  பலமடங்கு , அதை வெளிக்கொண்டுவர  என்ன செஜ்யலாம்  என்பதையும்  இதில் ஆலோசனை செஜலாம் ,முடக்கபட்ட நிதி சரியானமுறையில் இங்குள்ள அரசாங்களால் பயன் படுத்தப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டதைவிட பதுக்கப்பட்டது அதிகமாக இருக்கலாம், பதுக்கியவர்கள் இப்போது நிம்மதியாக இருக்கலாம் கொஞ்சக்காலத்துக்குத்தான். அவர்கள் பதுக்கியதை சும்மா வைத்திருக்கமாட்டார்கள் இன்னும் பெருக்குவார்கள் அதைவிட நிறைய இடங்களில் முதலீடுசெய்து ஒன்றுக்கு இரண்டாகப் பெருக்கி வைத்திருப்பார்கள். காலம்வரும் அப்போது அறவிட்டுக்கொள்வோம் வட்டியும் முதலிமாகச் சேர்த்து.

தவிர, பதுக்கியது பதுக்கியது எனச் சொல்லுகிறீர்களே! நீங்கள் வாழும் நாடுகளில் சட்டம் ஒழுங்கை நம்புபவர்களாகவிருந்தால், இப்படிக்கருதும் எல்லாருமாகச் சேர்ந்து பதுக்கியவர்களுக்கெதிராக சட்டத்துறைக்கு ஒரு மனுவைத் தாக்கல்செய்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதற்காகத் தயங்குகிறீர்கள்?

கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாதவர்களே அவர்கள் களத்தில் இல்லாதவேளை, சாட்சிசொல்ல ஆட்கள் இல்லாதவேளை நான் அதுகொடுத்தேன் இதுகொடுத்தேன் எனக்கூறி சமூகத்தை ஏமாத்தி நீங்கள் உத்தமபுருசர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறீர்கள்.

பகிரங்கமாகவே சவால் விடுகிறேன் உங்களால் புலம்பெயர் தேசத்தில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்த ஒருவரையாவது நீதியின் முன் கொண்டுவர முடியுமா?

கொள்ளை நடந்தது உண்மையே, அனால் பொன்னைத்தனமாக எதற்காக் முணுமுணுப்பும் ஊழையிடுதலும். பொதுவெளியிக்கு வாருங்கள். அல்லது பொத்திக்கொண்டு இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2 நாடுகளில் தமிழ்ப்பாடசாலை நிருவாகத்தில் சிறிது காலம் காலம் பணியாற்றி உள்ளேன்.பணியாற்றிய காலங்களில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றினேன் என்ற மனநிறைவு எனக்கு உண்டு.தாயக விடுதலை சம்பந்தமாக பல ஒன்று கூடல்கள் கருத்தரங்குகளுக்கு சென்றிருக்கிறேன்.அங்கத்தவராகவோ கருத்துக்கூறுபவராகவோ இருந்ததில்லை. கருத்தரங்குகளை நடத்துபவர்கள் மறறையவர்களின் கருத்துக்களை செவிமடுக்க மறுத்து தங்கள் கருத்துக்களை திணிக்க முயல்வதை பல இடங்களில் அவதானித்திருப்பதால் பயனில்லாத இடத்தில் கருத்துக்கூறுவதிலும் அமைதியாக இருப்பது மேல் என்று எண்ணுகிறேன்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிலும் அங்கத்தவராக இல்லை. யாழ்களத்தில் மட்டும் விசைப்பலகை வீரனாக உள்ளேன். :lol:

பதுக்க பட்ட வை  சட்டத்தின் முன் சாட்சியில்லா  மனசாட்சியின் பினால் நடந்த கொலைகள் இவவை க்கு  சட்டத்தின்  முன்னால் சாச்சியோஇல்லை.தர்மத்தின் முன்னால் தான் .இதற்காக  கேள்வி எழுப்பியவர்கள் அனைவரும்  எதோ ஒருவிதத்தில் அவர்களால் பழிவாங்க பட்டிருகிறார்கள் இதற்க்கு மேல் என்னால் ஏன் நிலைமை கருதி சொல்ல முடியாது

இது ஏன் இனத்தின் சாபம்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் விசுகு அண்ணா கேட்ட எந்த குழுமத்திலும் இல்லை. அதனால் இவ்விடத்தில் இசை சொன்ன மாதிரி விசைப்பலகை வீராங்கனை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பெரிய தலைகள் எல்லாம் சுளிச்சு கொண்டு ஓடுவதை பார்க்க இந்த திரி சூடாகும் போல தெரியவில்லை :)

போன் , அடித்து கதைக்க கூடிய நிலையில் சில தலைகளை/வாலுகளை எனக்கு தெரியும், அவர்கள் சொல்லும் நன்மை தீமைகளும் தெரியும். அதை தவிர நானும் ஒரு வி .ப வி ( விசை பலகை வீரனே /ன் )

இந்த தீர்வை கொண்டு வர செய்வர் ,பொதுவில் உள்ள அவரது படங்களை வைத்து பார்க்கும் போது ; கொடிதான் முக்கியம், அதுதான்-இதுதான் முக்கியம் என்று செயல்படும் ஒருவர் போல தெரியவில்லை. அவரது BBC போட்டி மிகவும் முதிர்ச்சி மிக்கதாக இருந்தது.

ஓரிடத்தில் சொன்னார் ; இன்று தமிழரின் அபிலாசை என்று கதைப்பதை கூட, புலி என்றும், அது பயங்கரவாதம் என்றும் முடிப்பதாக. அந்தவகையில் பார்க்கும் போது இது நிரந்தரமாக என்று வரும் போது , இன்னும் 4 பேருக்கு எங்கள் பிரச்னையை சொல்ல உதவும்.

கூடுதலாக இது நிரத்தரமாகவே நீங்க சந்தர்பம் இருக்கிறது. ஜெயலிதாவிற்கு 2 மாதம் குடுத்தது போல இவர்களுக்கு 3 மாதம், தீர்ப்பை மாற்றி எழுத.

இதன் பலன்; முழுதாகவே தடை நீங்கினது என்று வைத்தாலும், தாயகத்தில் அல்லது புலத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வராது. ஆனால் புலத்தில் சிறைகளுக்கு பின் இருக்கும் உறவுகளுக்கு உதவலாம்.

இதைவைத்துக்கொண்டு புலி -புலியாக இன்னுமொரு ரவுண்டு வரும் என்று கனவு காண்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.

அமைப்புகளில் உள்ளவர்களும் இப்படியான -Swiss போன்ற படிப்பு( English ) இல்லாத நாட்டில் உள்ளவர்கள் செய்வதை போல ஏதும் செய்தால் நன்மை உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டதைவிட பதுக்கப்பட்டது அதிகமாக இருக்கலாம், பதுக்கியவர்கள் இப்போது நிம்மதியாக இருக்கலாம் கொஞ்சக்காலத்துக்குத்தான். அவர்கள் பதுக்கியதை சும்மா வைத்திருக்கமாட்டார்கள் இன்னும் பெருக்குவார்கள் அதைவிட நிறைய இடங்களில் முதலீடுசெய்து ஒன்றுக்கு இரண்டாகப் பெருக்கி வைத்திருப்பார்கள். காலம்வரும் அப்போது அறவிட்டுக்கொள்வோம் வட்டியும் முதலிமாகச் சேர்த்து.

தவிர, பதுக்கியது பதுக்கியது எனச் சொல்லுகிறீர்களே! நீங்கள் வாழும் நாடுகளில் சட்டம் ஒழுங்கை நம்புபவர்களாகவிருந்தால், இப்படிக்கருதும் எல்லாருமாகச் சேர்ந்து பதுக்கியவர்களுக்கெதிராக சட்டத்துறைக்கு ஒரு மனுவைத் தாக்கல்செய்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதற்காகத் தயங்குகிறீர்கள்?

கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாதவர்களே அவர்கள் களத்தில் இல்லாதவேளை, சாட்சிசொல்ல ஆட்கள் இல்லாதவேளை நான் அதுகொடுத்தேன் இதுகொடுத்தேன் எனக்கூறி சமூகத்தை ஏமாத்தி நீங்கள் உத்தமபுருசர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறீர்கள்.

பகிரங்கமாகவே சவால் விடுகிறேன் உங்களால் புலம்பெயர் தேசத்தில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்த ஒருவரையாவது நீதியின் முன் கொண்டுவர முடியுமா?

கொள்ளை நடந்தது உண்மையே, அனால் பொன்னைத்தனமாக எதற்காக் முணுமுணுப்பும் ஊழையிடுதலும். பொதுவெளியிக்கு வாருங்கள். அல்லது பொத்திக்கொண்டு இருங்கள்.

இது ஒரு தவறான கருத்து எழுஞாயிறு. 

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நான் வாழுகின்ற சுவிஸ் நாடு பல விசித்திரமான கடன் பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இது வேறு நாடுகளில் வாழ்பவர்களால் புரிந்துகொள்வது கடினம். இங்கே வங்கியில் கடன் பெறுவதற்கு பெரிய தடங்கல்கள் எதுவும் இல்லை. இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். 30 நிமிடங்களில் உங்களிற்கு கடன் தருகிறோம் என்று ஒரு வங்கி விளம்பரம் செய்கிறதென்றால் பாருங்களேன் :)

நீங்கள் சொல்லும் சட்டரீதியான நடவடிக்கை இங்கே ஏற்கனவே பல வருடங்களிற்கு முன்னர் எடுக்கப்பட்டுவிட்டது (சுவிஸ் நாடு விடுதலைப்புலிகளை தடை செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்க). சிக்கல் என்னவென்றால் இங்கு யாரும் தனிநபராக வந்து கடன் பெற்றுக்கொள்ளவில்லை. அமைப்பின் பெயரிலயே கடன்பெறப்பட்டது (உறுதிசெய்யப்படாத தகவல்களின் படி இறுதிகட்டத்தில் சுவிசில் மட்டும் 3 மில்லியன் பிராங்குகள் கடன் பெறப்பட்டதாக தகவல்). எனவே இங்கே யாரும் ஒரு தனிநபர் மீது சட்டரீதியான நடிவடிக்கை எடுக்க முடியாது. வேண்டும் என்றால் அமைப்பின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். அதனை இங்கே சுவிஸ் அரசாங்கமே முன்நின்று செய்தது.ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கடன்பெற்ற ஒவ்வொருவரும் நினைத்திருந்தால் அமைப்பை மாட்டிவிட்டிருக்க முடியும். அவ்வளவிற்கு இங்கு உள்ள அமைப்பு ஒன்றும் யோக்கியமானது அல்ல. அனைவருமே தமிழீழத்திற்காக போரடி உயிரைகொடுத்து காப்பாற்றிய அந்த அமைப்பின் பெயரை கலங்கப்படுத்த விருப்பம் இல்லாமலே தாங்கள் விரும்பி தான் பணம் கொடுத்தோம் என்று வாக்குமூலம் வழங்கினார்கள். அத்துடன் சுவிஸ் நாட்டில் விடுதலைப்புலிகளை தடைசெய்ய் இது ஓரு காரணமாக வந்துவிடுமோ என்ற பயமும். இதற்கிடையில் இங்கே உள்ள அமைப்பு கடைசை சாத்திவிட்டு வேறொரு பெயரில் கடையை திறந்துகொண்டது. இல்லாத அமைப்பின் மீது யார்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது? சரி அந்த அமைப்பின் பொறுப்பாளர் மீது எடுக்கலாமா? பொறுப்பாளரும் மாறியாகிவிட்டது (அல்லது கலைத்துவிட்டார்கள்). இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?  :lol:

இன்னொரு பிரச்சனையை சிந்தித்துபாருங்கள். ஏற்கனவே கடனில் உள்ள ஒருவர் வக்கீல் கேஸ் என்று அலைந்து அதற்கான செலவை கடன் சுமையையும் ஒருவரால் சுமக்க முடியும்? கடன்பெற்றவரிற்கு சார்பான தீர்ப்பு வரும்வரை அவரின் வக்கீல் செலவை கேஸ் போட்டவர் தான் ஏற்கவேண்டும் (இது இங்கு உள்ள நடைமுறை). 

கடன்தொகையை பெற்றுவிட்டு இவ்வளவு நாட்கள் சென்றபின்னர் தங்களை கட்டாயப்படுத்தியோ அல்லது தங்களின் கையெழுத்தில்லாமலோ பணம் பெற்றுக்கொண்டார்கள் என்று கேஸ் போடும் போது இவர்கள் மீதும் சட்டம் பாய வாய்ப்புள்ளது என்ற பயம். 

இப்படி நிறைய நடைமுறைச்சிக்கல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இது ஒரு இடியப்பச்சிக்கல் போன்றது. 

ஆனால் இதை எல்லாம் திட்டமிடாமல் தான் அமைப்பு செய்தது என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. இங்கே உள்ள அமைப்பிற்கு இவையெல்லாம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும். 

ஒரு நல்லெண்ணத்திற்காக பணம் கொடுத்து உங்களை போன்றவர்களிடம் பொன்னையன் என்று பேச்சுவாங்கும் அவர்கள் மனநிலையில் நீங்கள் ஒரு நிமிடம் இருந்துபாருங்கள் புரியும்.

என்னாலான அனைத்தையும் நான் ஆவணமாக்கி வைத்துள்ளேன். நிச்சயமாக காலம்கனிந்துவரும் போது சட்டரீதியான நடிவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும். அது தமிழீழ நீதித்துறையில் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். 

வேண்டும் என்றால் வெளிநாட்டில் உள்ள அமைப்புகளை ஒரு பகிரங்க பொதுவிவாதத்திற்கு (கடன் சம்மந்தமாக மட்டும்) அழைத்து தான் பாருங்களேன்.   :) பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் ஆரதவை நான் திரட்டித்தருகின்றேன். 

Edit: எழுத்துப்பிழைகளும் சில சொற்களும் திருத்தப்பட்டுள்ளன.

Edited by ஊர்க்காவலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்

11 பேர் எழுதியிருக்கிறார்கள்

அதிலும் ஒரு சிலரே செயற்படுவதாக சொல்கிறார்கள்

தமிழர் நிலையை  தெளிவாக  இது காட்டுகிறது

இது தொடருமாக இருந்தால்

கடவுளுக்கும் மனம் வராது எம்மை காப்பாற்ற..

முயற்சி இல்லாதவரை

எவரும் விரும்பார்

உதவார்....... :(  :(  :(

உதவார்....... :(:(:(

தொண்டராகச் செயற்பட நான் தயாரில்லை. தலைமைப் பதவி இருந்தால் சொல்லுங்கோ.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொண்டராகச் செயற்பட நான் தயாரில்லை. தலைமைப் பதவி இருந்தால் சொல்லுங்கோ.. :D

தம்பி

தம்பி

தலைவா................ என்று

எங்கே கொண்டு போய் விட்டனாங்கள் என்று தெரியும் தானே.... :(  :(

நான் அங்கத்தவனும் இல்லை,கருத்து கூறுபவனும் அல்ல ஆனால் சகல கருத்தரங்குகளுக்கும் சென்று வருபவன்.....

அதாவது  கண்காணிக்கின்றீர்கள்

தொடருங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய வெளிநாட்டு அமைப்பில் நிர்வாகத்தில் உள்ளேன் ஜயா. 

எங்கோ ஒரு இடத்தில்

நாடே இல்லாதவனுக்கு ஊர் எதற்கு என்று நீங்கள் எழுதியதாக ஞாபகம்...

இதில் ஒரு வெளிநாட்டு அமைப்பு என எழுதியுள்ளீர்கள்

விளக்கம் தரமுடியுமா?

அல்லது நாட்டையும் விட்டாச்சா???

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி

தம்பி

தலைவா................ என்று

எங்கே கொண்டு போய் விட்டனாங்கள் என்று தெரியும் தானே.... :(:(

உண்மைதான். அவரை சுழித்துவிட்டார்கள் என்று நம்பினால் உங்கள் கூற்று உண்மைதான்.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ற அவசியமான திரி.
 
 இந்த திரியை நான் பார்த்தேன் ,ஒவ்வொரு நாளும் பார்கிறேன், நிச்சயம் எழுதுவதற்கு நிறைய விடயம் உள்ளது .இன்னும் மற்ற உறவுகளின் கருத்துக்களையும் உள்வாங்கலாம் என்ற நோக்கில் காத்திருக்கிறேன் ,என்னில் வேறு நாடுகளில் நடப்பது ,நடந்தது நான் அறியாதவை .நெதர்லாந்தில் நடந்தவற்றை ,நடப்பவற்றை கண்முன் கண்டவன் என்ற வகையில் நிச்சயம் எழுதுவேன் .
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  முடக்கபட்ட நிதிகளை விட ஏமாற்று பச்சோந்திகளால்  பதுக்க பட்டது  பலமடங்கு , அதை வெளிக்கொண்டுவர  என்ன செஜ்யலாம்  என்பதையும்  இதில் ஆலோசனை செஜலாம் ,முடக்கபட்ட நிதி சரியானமுறையில் இங்குள்ள அரசாங்களால் பயன் படுத்தப்படும்

இது பற்றி  ஒரு திரியை  நீங்களே  தொடங்குங்கள்..

யாழ்கள விதிகளை  அறிந்து கொள்ளுங்கள்

ஒரு தனி நபரையோ

அமைப்புக்களையோ

எழுந்தமானத்துக்கு விமர்சிப்பது

எழுதுவது இங்கு தடை  செய்யப்பட்டுள்ளது...

ஒரு சிலரது நடவடிக்கைகளை  வைத்துக்கொண்டு

மக்களுக்கு உதவுவோர்  அனைவரையும்

எல்லோரையும் ஒரே கூடைக்குள் போட்டுத்தாக்குவது பற்றி  இங்கு கண்டிக்கப்பட்டிருக்கிறது..

தமிழரின் பணத்தை சூறையாடியோர் வெளிக்கொணரப்படணும்

தண்டிக்கப்படணும் 

அதற்கு முழு ஆதரவும் உண்டு

ஆனால் அதுவே இவற்றால் எம்மிடையே மக்கள் சேவையிலுள்ள உள்ள பலரையும் ஓடச்செய்வதற்கு பாவிப்பதை அனுமதிக்கமுடியாது.....

ஆதாரங்களுடன் வாருங்கள்

விவாதிக்கலாம்

அம்பலப்படுத்தலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ ஒரு இடத்தில்

நாடே இல்லாதவனுக்கு ஊர் எதற்கு என்று நீங்கள் எழுதியதாக ஞாபகம்...

இதில் ஒரு வெளிநாட்டு அமைப்பு என எழுதியுள்ளீர்கள்

விளக்கம் தரமுடியுமா?

அல்லது நாட்டையும் விட்டாச்சா???

அது ஒரு சுவிஸ் நாட்டு அமைப்பு. 

தமிழ் அமைப்புகள் ஒன்றிலும் நான் இல்லை (எனக்கு தெரிந்து இல்லை). தெரியாமல் யாராவது என்னை இன்னும் நீக்காமல் வைத்திருக்கலாம்  :lol:

நான் "நாடு"என்று சொன்னது தமிழீழம் ஏன்பதை. இங்கே ஊரை பற்றி தப்பாக பேசினால் கோவம் வரும். ஆனால் தமிழீத்தை பற்றி தப்பாக பேசி பாருங்கள்.யாருக்கும் கோவம் வராது. நாட்டில இல்லாத பாசம் ஊரில எதுக்கு என்று தான் நான் இந்த ஊர் சங்கங்களில் சேரவில்லை என்று எழுதினேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டதைவிட பதுக்கப்பட்டது அதிகமாக இருக்கலாம், பதுக்கியவர்கள் இப்போது நிம்மதியாக இருக்கலாம் கொஞ்சக்காலத்துக்குத்தான். அவர்கள் பதுக்கியதை சும்மா வைத்திருக்கமாட்டார்கள் இன்னும் பெருக்குவார்கள் அதைவிட நிறைய இடங்களில் முதலீடுசெய்து ஒன்றுக்கு இரண்டாகப் பெருக்கி வைத்திருப்பார்கள். காலம்வரும் அப்போது அறவிட்டுக்கொள்வோம் வட்டியும் முதலிமாகச் சேர்த்து.

தவிர, பதுக்கியது பதுக்கியது எனச் சொல்லுகிறீர்களே! நீங்கள் வாழும் நாடுகளில் சட்டம் ஒழுங்கை நம்புபவர்களாகவிருந்தால், இப்படிக்கருதும் எல்லாருமாகச் சேர்ந்து பதுக்கியவர்களுக்கெதிராக சட்டத்துறைக்கு ஒரு மனுவைத் தாக்கல்செய்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதற்காகத் தயங்குகிறீர்கள்?

கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாதவர்களே அவர்கள் களத்தில் இல்லாதவேளை, சாட்சிசொல்ல ஆட்கள் இல்லாதவேளை நான் அதுகொடுத்தேன் இதுகொடுத்தேன் எனக்கூறி சமூகத்தை ஏமாத்தி நீங்கள் உத்தமபுருசர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறீர்கள்.

பகிரங்கமாகவே சவால் விடுகிறேன் உங்களால் புலம்பெயர் தேசத்தில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்த ஒருவரையாவது நீதியின் முன் கொண்டுவர முடியுமா?

கொள்ளை நடந்தது உண்மையே, அனால் பொன்னைத்தனமாக எதற்காக் முணுமுணுப்பும் ஊழையிடுதலும். பொதுவெளியிக்கு வாருங்கள். அல்லது பொத்திக்கொண்டு இருங்கள்.

நன்றி  உங்கள் கருத்துக்கு எழுஞாயிறு..

சட்டப்படி ஏதும் செய்யமுடியுமோ தெரியவில்லை..

ஆனால் நான் இங்கு கேட்டது

தமிழரது  தொழிற்பாடு சார்நது..

அனித்தாவின் கேள்விக்கு

வேறு திரியை  அவர் திறந்தால் பார்க்கலாம்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 நாடுகளில் தமிழ்ப்பாடசாலை நிருவாகத்தில் சிறிது காலம் காலம் பணியாற்றி உள்ளேன்.பணியாற்றிய காலங்களில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றினேன் என்ற மனநிறைவு எனக்கு உண்டு.தாயக விடுதலை சம்பந்தமாக பல ஒன்று கூடல்கள் கருத்தரங்குகளுக்கு சென்றிருக்கிறேன்.அங்கத்தவராகவோ கருத்துக்கூறுபவராகவோ இருந்ததில்லை. கருத்தரங்குகளை நடத்துபவர்கள் மறறையவர்களின் கருத்துக்களை செவிமடுக்க மறுத்து தங்கள் கருத்துக்களை திணிக்க முயல்வதை பல இடங்களில் அவதானித்திருப்பதால் பயனில்லாத இடத்தில் கருத்துக்கூறுவதிலும் அமைதியாக இருப்பது மேல் என்று எண்ணுகிறேன்.

கருத்தரங்குகளுக்கு சென்று

பார்வையாளராக இருப்பதை மட்டும்  தொடர்வீர்களாக இருந்தால்

உங்கள் குரலுக்கு எப்படி வலு இருக்கும்....???

எப்படி உங்கள் குரலுக்கு வலுவைக்கூட்டமுடியும் என யோசித்ததுண்டா புலவர்??

நான் எதிலும் அங்கத்தவராக இல்லை. யாழ்களத்தில் மட்டும் விசைப்பலகை வீரனாக உள்ளேன். :lol:

யாழில் தாயகம் சார்ந்து

மிகத்தெளிவான கொள்கையுடைய  தம்பிகளில் நீங்களும் ஒருவர்....

உங்களிடம் அடுத்த கட்டத்தை எதிர்பார்க்கின்றேன்

உங்களது கொள்கைக்கு  பங்களிக்கும் ஏதாவது ஒரு அமைப்பை

கண்காணிக்கவாவது தொடங்குங்கள்.......

நானும் விசுகு அண்ணா கேட்ட எந்த குழுமத்திலும் இல்லை. அதனால் இவ்விடத்தில் இசை சொன்ன மாதிரி விசைப்பலகை வீராங்கனை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:

வல்வை சகாரா

தமிழரின் சொத்து என எழுதிவருகின்றேன்....

உங்களது கடந்த காலம் அறிவேன்

நிகழ்காலமும அறிவேன்

இதுவும் கடந்து போகும்...... :(

உங்கள்  எழுத்துப்பணிகளை  தொடருங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய தலைகள் எல்லாம் சுளிச்சு கொண்டு ஓடுவதை பார்க்க இந்த திரி சூடாகும் போல தெரியவில்லை :)

போன் , அடித்து கதைக்க கூடிய நிலையில் சில தலைகளை/வாலுகளை எனக்கு தெரியும், அவர்கள் சொல்லும் நன்மை தீமைகளும் தெரியும். அதை தவிர நானும் ஒரு வி .ப வி ( விசை பலகை வீரனே /ன் )

இந்த தீர்வை கொண்டு வர செய்வர் ,பொதுவில் உள்ள அவரது படங்களை வைத்து பார்க்கும் போது ; கொடிதான் முக்கியம், அதுதான்-இதுதான் முக்கியம் என்று செயல்படும் ஒருவர் போல தெரியவில்லை. அவரது BBC போட்டி மிகவும் முதிர்ச்சி மிக்கதாக இருந்தது.

ஓரிடத்தில் சொன்னார் ; இன்று தமிழரின் அபிலாசை என்று கதைப்பதை கூட, புலி என்றும், அது பயங்கரவாதம் என்றும் முடிப்பதாக. அந்தவகையில் பார்க்கும் போது இது நிரந்தரமாக என்று வரும் போது , இன்னும் 4 பேருக்கு எங்கள் பிரச்னையை சொல்ல உதவும்.

கூடுதலாக இது நிரத்தரமாகவே நீங்க சந்தர்பம் இருக்கிறது. ஜெயலிதாவிற்கு 2 மாதம் குடுத்தது போல இவர்களுக்கு 3 மாதம், தீர்ப்பை மாற்றி எழுத.

இதன் பலன்; முழுதாகவே தடை நீங்கினது என்று வைத்தாலும், தாயகத்தில் அல்லது புலத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வராது. ஆனால் புலத்தில் சிறைகளுக்கு பின் இருக்கும் உறவுகளுக்கு உதவலாம்.

இதைவைத்துக்கொண்டு புலி -புலியாக இன்னுமொரு ரவுண்டு வரும் என்று கனவு காண்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.

அமைப்புகளில் உள்ளவர்களும் இப்படியான -Swiss போன்ற படிப்பு( English ) இல்லாத நாட்டில் உள்ளவர்கள் செய்வதை போல ஏதும் செய்தால் நன்மை உண்டு .

ஐயா

புலிகள் மீதான மக்களது

மற்றும் எனது கரிசனை என்பது அவர்கள் எமக்காக செய்த தியாகங்களுக்கானது மட்டுமே..

ஆனால் தொடர்ந்தும்

இனியும்

புலிகள்தான் போராடணும் என்று நாம் இருந்துவிடமுடியாது...அது பெரும் சுயநலமாகும்...

ஆயுதப்போராட்டம் தோல்வி  கண்டநிலையில்

அதை இனிமேல் முன்னெடுக்கமுடியாது என்றநிலையிலும்

அதையும் புலிகள்  தான் நடாத்தணும் என்று நாம் இருந்துவிடுவதால் தான்

இந்த கதைகள் வருகின்றன...

இந்த 5 வருடத்தில் நாம் எங்கேயோ நின்றிருக்கணும்

புலிகளையும் தாண்டி எமது போராட்டம் போயிருக்கணும்

ஆனால் நிலை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தவறான கருத்து எழுஞாயிறு. 

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நான் வாழுகின்ற சுவிஸ் நாடு பல விசித்திரமான கடன் பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இது வேறு நாடுகளில் வாழ்பவர்களால் புரிந்துகொள்வது கடினம். இங்கே வங்கியில் கடன் பெறுவதற்கு பெரிய தடங்கல்கள் எதுவும் இல்லை. இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். 30 நிமிடங்களில் உங்களிற்கு கடன் தருகிறோம் என்று ஒரு வங்கி விளம்பரம் செய்கிறதென்றால் பாருங்களேன் :)

நீங்கள் சொல்லும் சட்டரீதியான நடவடிக்கை இங்கே ஏற்கனவே பல வருடங்களிற்கு முன்னர் எடுக்கப்பட்டுவிட்டது (சுவிஸ் நாடு விடுதலைப்புலிகளை தடை செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்க). சிக்கல் என்னவென்றால் இங்கு யாரும் தனிநபராக வந்து கடன் பெற்றுக்கொள்ளவில்லை. அமைப்பின் பெயரிலயே கடன்பெறப்பட்டது (உறுதிசெய்யப்படாத தகவல்களின் படி இறுதிகட்டத்தில் சுவிசில் மட்டும் 3 மில்லியன் பிராங்குகள் கடன் பெறப்பட்டதாக தகவல்). எனவே இங்கே யாரும் ஒரு தனிநபர் மீது சட்டரீதியான நடிவடிக்கை எடுக்க முடியாது. வேண்டும் என்றால் அமைப்பின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். அதனை இங்கே சுவிஸ் அரசாங்கமே முன்நின்று செய்தது.ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கடன்பெற்ற ஒவ்வொருவரும் நினைத்திருந்தால் அமைப்பை மாட்டிவிட்டிருக்க முடியும். அவ்வளவிற்கு இங்கு உள்ள அமைப்பு ஒன்றும் யோக்கியமானது அல்ல. அனைவருமே தமிழீழத்திற்காக போரடி உயிரைகொடுத்து காப்பாற்றிய அந்த அமைப்பின் பெயரை கலங்கப்படுத்த விருப்பம் இல்லாமலே தாங்கள் விரும்பி தான் பணம் கொடுத்தோம் என்று வாக்குமூலம் வழங்கினார்கள். அத்துடன் சுவிஸ் நாட்டில் விடுதலைப்புலிகளை தடைசெய்ய் இது ஓரு காரணமாக வந்துவிடுமோ என்ற பயமும். இதற்கிடையில் இங்கே உள்ள அமைப்பு கடைசை சாத்திவிட்டு வேறொரு பெயரில் கடையை திறந்துகொண்டது. இல்லாத அமைப்பின் மீது யார்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது? சரி அந்த அமைப்பின் பொறுப்பாளர் மீது எடுக்கலாமா? பொறுப்பாளரும் மாறியாகிவிட்டது (அல்லது கலைத்துவிட்டார்கள்). இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?  :lol:

இன்னொரு பிரச்சனையை சிந்தித்துபாருங்கள். ஏற்கனவே கடனில் உள்ள ஒருவர் வக்கீல் கேஸ் என்று அலைந்து அதற்கான செலவை கடன் சுமையையும் ஒருவரால் சுமக்க முடியும்? கடன்பெற்றவரிற்கு சார்பான தீர்ப்பு வரும்வரை அவரின் வக்கீல் செலவை கேஸ் போட்டவர் தான் ஏற்கவேண்டும் (இது இங்கு உள்ள நடைமுறை). 

கடன்தொகையை பெற்றுவிட்டு இவ்வளவு நாட்கள் சென்றபின்னர் தங்களை கட்டாயப்படுத்தியோ அல்லது தங்களின் கையெழுத்தில்லாமலோ பணம் பெற்றுக்கொண்டார்கள் என்று கேஸ் போடும் போது இவர்கள் மீதும் சட்டம் பாய வாய்ப்புள்ளது என்ற பயம். 

இப்படி நிறைய நடைமுறைச்சிக்கல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இது ஒரு இடியப்பச்சிக்கல் போன்றது. 

ஆனால் இதை எல்லாம் திட்டமிடாமல் தான் அமைப்பு செய்தது என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. இங்கே உள்ள அமைப்பிற்கு இவையெல்லாம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும். 

ஒரு நல்லெண்ணத்திற்காக பணம் கொடுத்து உங்களை போன்றவர்களிடம் பொன்னையன் என்று பேச்சுவாங்கும் அவர்கள் மனநிலையில் நீங்கள் ஒரு நிமிடம் இருந்துபாருங்கள் புரியும்.

என்னாலான அனைத்தையும் நான் ஆவணமாக்கி வைத்துள்ளேன். நிச்சயமாக காலம்கனிந்துவரும் போது சட்டரீதியான நடிவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும். அது தமிழீழ நீதித்துறையில் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். 

வேண்டும் என்றால் வெளிநாட்டில் உள்ள அமைப்புகளை ஒரு பகிரங்க பொதுவிவாதத்திற்கு (கடன் சம்மந்தமாக மட்டும்) அழைத்து தான் பாருங்களேன்.   :) பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் ஆரதவை நான் திரட்டித்தருகின்றேன். 

Edit: எழுத்துப்பிழைகளும் சில சொற்களும் திருத்தப்பட்டுள்ளன.

வணக்கம் ஊர்க்காவலன்

உங்களை  நான் அறிவேன்

அந்தவகையில் தமிழரது   போராட்டம் பற்றிய  தங்களது தெளிவான கொள்கைகளை அறிவேன்..

நான் முன்பும் இங்கு எழுதியதை ஒருமுறை  உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்

(உங்களது கருத்தும் அதனுடன் சார்ந்து இருப்பதால்)

புலிகள் மீதும்

பிரான்சிலுள்ள  தவறுகள் பற்றியும் நானும் எழுதுவேன்.

தமிழருக்கென்று ஒரு தாயகம் அல்லது ஒரு தீர்வு கிடைத்து

அவரவருக்கு தகுதிகள் பட்டங்கள் வளங்கும் நிலையில்.......

நான் புலிகளை தவறாக சொல்லவில்லை (அந்த வகையில் எழுதியிருந்தால் மன்னிக்கவும்). புலிகளின் பெயரில் இங்கு அவர்கள் செய்த அனைவரும் அறிந்த ஏமாற்று வேலைகளை தான் எழுதியிருந்தேன். இப்படி பட்டவர்களை புலிகள் என்று சொல்வதையே என்னால் ஏற்றுக்கொள் முடியவில்லை.

மற்றுமபடி உங்களின் கருத்து தான் எனது கருத்தும்  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.