Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவுக்கு ஆசீர்வாதம் - படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2(4172).jpg

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி வழிபாட்டு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(22) அலரி மாளிகையில் இடம்பெற்றன.

3(3119).jpg

4(2252).jpg

6(2240).jpg

5(2095).jpg

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய காலத்தில் கொடுங்கோல் மன்னர்கள்.. தங்களை புலவர்கள் போலியாக என்றாலும் புகழ்ந்து பாடனும்.. இன்றேல் யானையின் கால்களில் மிதிபட்டு சாக விடுவார்கள் என்று அம்புலிமாமாவில் வந்த பல கதைக்களில் படித்ததுண்டு.

இப்ப தான் நேர காணிறம். அந்தக் கதைகளில் வரையப்படும் படங்களில் அமைச்சர்கள் தலைகுனிந்தபடி நிற்க அரசன் சிம்மாசனத்தில்.. சிகரத்தோடு இருப்பார். புலவன் பயத்தை வெளிப்படுத்தியபடி..பாடுவது போல.. படங்கள் இருக்கும்.

இங்கு டக்கிளசின் நிலை அப்படியே அச்சொட்டாக பொருந்தி நிற்குது. ஐயர்மாரின் முகங்கள் அப்படியே அந்தக் காலப் புலவர்களை நினைவூட்டுது.

நன்றி அம்புலிமாமா. அன்று கதையில் வரைந்த படியால்.. இன்று நிஜயத்தில் இந்தப் போலிகளை இலகுவான இனங்காண முடிகிறது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

இன்னும் எத்தனை காலத்திற்கு சிங்களவனோடு நிற்கும் தமிழரெல்லாம் அவனுக்குப் பயந்துதான் அவனுடன் நிற்கிறார்கள் என்று சொல்லப்போகிறீர்கள்?

பணமும், பதவியும், பலமும் மனிதர்கள மிருகங்களாக்கி வைத்திருக்கின்றன. அதற்கு உதாரணம்தான் இந்த டக்கிளஸ், கருணா, கே.பீ , பிள்ளையான் போன்றவரெல்லாம். ஏன், இங்கே நிற்கு ஆராத்தி சுத்தும் பெண்களோ, அல்லது பொன்னாடை போர்த்தும் ஐய்யர் மாரோ பயத்தினால்த்தான் நிற்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கதிர்காமரும், ஜெயராஜும், தொண்டைமானும் பயத்தினால்த்தான் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்தார்கள் என்கிறீர்களா??

முதலில் தமிழினம் சோரம்போகும், சுயநலம் மிக்க, சந்தர்ப்பவாத, காட்டிக் கொடுக்கும் இனம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Edited by ragunathan

'முதலில் தமிழினம் சோரம்போகும், சுயநலம் மிக்க, சந்தர்ப்பவாத, காட்டிக் கொடுக்கும் இனம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.'

மிக மிக உண்மை ,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதையும் உருவாக்குகின்றது .சாத்திரியின் கதையில் வந்தது போல ஆயிரம் சோரம் போன பெண்கள் எமது சமூகத்திலேயே இருக்கின்றார்கள் இவர்கள் எவரும் விரும்பி அந்த தொழிலுக்கு போகவில்லை சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம் .வசதியாக வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் அவர்களை பார்த்து " உந்த வாழ்கை வாழ்வதிலும் பார்க்க தூங்கி சாகலாம் " என்பார்கள் ஆனால் யதார்த்தம் அதுவல்ல .

ஒபரே தேவனின் டயரி வாசித்து வருகின்றேன் ,நாங்கள் கிரிக்கெட்டும் விளையாடி வெளிநாடு போக திரிந்த காலங்களில் எத்தனை பேர்கள் சிங்களத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதையோ செய்ய முயற்சித்திருக்கின்றார்கள் .இவர்களில் பலர் இன்று  இறந்துவிட்டார்கள் அல்லது சோரம் போனவர்கள் பட்டியலில் தான் .பரந்தன்ராஜன்,கருணா ,டக்கிலஸ் ,பிள்ளையான் ,கே.பி ,சித்தர் ,பெருமாள் ,சுரேஷ் எல்லோரும் இந்த பட்டியல் தான் .இதில் சிலர் இன்று அரசுடன், சிலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் , சிலர் உதிரியாக உள்ளார்கள் .

அரசுடன் சேர்ந்து இயங்குவதையோ அல்லது இவர்கள் எவரையுமோ நான் நியாயப்படுத்த வரவில்லை ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை அரசாங்கம் சுட்டு கொண்டிருக்காவிட்டால் இன்று அவர்கள் நிலையும் என்னவாக இருக்கும் என்று யார் கண்டார் .

இயக்கத்தை விட்டு வெளியேறிய நான் வசதி இருந்தபடியால் உடனே வெளிநாடு வந்தேன் அல்லது நானும் ஓட்டுகுழுவோ அல்லது ஒட்டாத குழுவோடுதுதான்  போயிருப்பேன் .வேறு வழி  அங்கு இல்லை .

புலிகள் இருந்த காலத்தில் மற்றைய இயக்கங்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமது பாதுகாப்பிற்கு அரசாங்கத்திடம் அடைக்கலம்கோருவதைத்தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லையென்று சொல்வதில் நியாயம் இருந்தது. அவர்கள் ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கலாம், அல்லது புலிகளுடன் இணைந்திருக்கலாம். ஆனால் இது எல்லோரினதும் தெரிவாக இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் இன்று அழிந்துள்ள நிலையிலும், அவர்கள் தொடர்ந்தும் அரசுடன் இருப்பது சுத்த சுயநலம், சந்தர்ப்பவாதம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கிறதே........மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாற்சி....சமரச அரசியல்.....இணக்க அரசியல்....சுயநலத்திற்கும் சந்தர்ப்பவாததிற்கும் குடுக்கும் பெயர்கள்தான் எத்தனை ?

ஊரில் தாலிக்கொடி அறுப்பவனிடம், ஏன் இந்த தொழில் செய்கிறாய் என்று கேட்டால்... அவனும் சாப்பாட்டுக்கு வழியில்லை, பிள்ளைக்கு பால் வாங்க காசில்லை அது இது எண்டு ஆயிரம் கதை சொல்லுவான். எல்லாம் இந்த பாழாய் போன சந்தர்ப்பம் சூழ்நிலை தான் காரணம்....

  • கருத்துக்கள உறவுகள்

'முதலில் தமிழினம் சோரம்போகும், சுயநலம் மிக்க, சந்தர்ப்பவாத, காட்டிக் கொடுக்கும் இனம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.'

மிக மிக உண்மை ,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதையும் உருவாக்குகின்றது .சாத்திரியின் கதையில் வந்தது போல ஆயிரம் சோரம் போன பெண்கள் எமது சமூகத்திலேயே இருக்கின்றார்கள் இவர்கள் எவரும் விரும்பி அந்த தொழிலுக்கு போகவில்லை சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம் .வசதியாக வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் அவர்களை பார்த்து " உந்த வாழ்கை வாழ்வதிலும் பார்க்க தூங்கி சாகலாம் " என்பார்கள் ஆனால் யதார்த்தம் அதுவல்ல .

ஒபரே தேவனின் டயரி வாசித்து வருகின்றேன் ,நாங்கள் கிரிக்கெட்டும் விளையாடி வெளிநாடு போக திரிந்த காலங்களில் எத்தனை பேர்கள் சிங்களத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதையோ செய்ய முயற்சித்திருக்கின்றார்கள் .இவர்களில் பலர் இன்று  இறந்துவிட்டார்கள் அல்லது சோரம் போனவர்கள் பட்டியலில் தான் .பரந்தன்ராஜன்,கருணா ,டக்கிலஸ் ,பிள்ளையான் ,கே.பி ,சித்தர் ,பெருமாள் ,சுரேஷ் எல்லோரும் இந்த பட்டியல் தான் .இதில் சிலர் இன்று அரசுடன், சிலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் , சிலர் உதிரியாக உள்ளார்கள் .

அரசுடன் சேர்ந்து இயங்குவதையோ அல்லது இவர்கள் எவரையுமோ நான் நியாயப்படுத்த வரவில்லை ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை அரசாங்கம் சுட்டு கொண்டிருக்காவிட்டால் இன்று அவர்கள் நிலையும் என்னவாக இருக்கும் என்று யார் கண்டார் .

இயக்கத்தை விட்டு வெளியேறிய நான் வசதி இருந்தபடியால் உடனே வெளிநாடு வந்தேன் அல்லது நானும் ஓட்டுகுழுவோ அல்லது ஒட்டாத குழுவோடுதுதான்  போயிருப்பேன் .வேறு வழி  அங்கு இல்லை .

உங்களுடைய கருத்தில் எந்த யதார்த்தமும் இல்லை........... (உங்களுக்கான எதிர் கருத்தாக தயவு செய்து எடுக்க வேண்டாம். மேலே உள்ள கருத்துக்கான எதிர் கருத்தே இது) வெறும் சோம்பறிகளுக்கு வக்காலத்து வாங்கவது போல்தான் இருக்கிறது.
 
ஆண்களின் இச்சை பல இளம் பெண்களுடன் உல்லாசம் கண்பதுதான். பெண்களுக்கும் இந்த இச்சை இருக்கிறது என்றாலும் சமூதாய பழிகளை சுமக்க வேண்டிய ஆணாதிக்க சிந்தனைக்கு பணிந்தோ... பயந்தோ...
ஒரு கட்டுபாட்டை வரிந்து கொள்கிறார்கள். அதனால் ஆண்களும் உள்ளுக்குள் காமராஜர்கள் என்றாலும் வெளிக்கு ராமர்கள் ஆகுகிறார்கள். இந்த இறுகிய கோட்டினில் தான் ஆண்பெண் உறவு நீடிக்கிறது.
ஆனால் சிலர் வரம்பு மீறி பெண்களை வட்புறவு கொள்கிறார்கள். 
மேலே இருக்கும் கருத்து இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவே இருக்கிறது. பெண்கள் அவர்களுடன் உடன் பட்டு இருந்தால்...? ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள்? என்ற மிருகத்தனமான கேள்விதான் மேலே இருக்கிறது.
 
ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்று ஒரு வரையறை இருக்கிறது. இதற்குள்தான் வாழ்க்கை  வரையறுக்க பட்டு இருக்கிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியசமே விலங்குகள் எப்படியும் வாழலாம் என்பது மனிதர்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்பதே ஆகும்.
 
(அரசியலை தவிர்க்க விரும்பினேன்... மேலே உள்ள கருத்தை எதிர்நோக்க வேண்டிய கரணம் இருப்பதால் தவிர்க்க முடியாமல் போகிறது). புலிகள் இயக்கங்களை தடை செய்தபோது. அவர்களை அந்த இயக்கங்களை விட்டு  வெளியேறுமாறும் தங்களிடம் வந்து சரண் அடையும்படியும் தான் அறிவித்தார்கள். முதன் முதலில்  டெலோ  இயக்கத்தை தடை செய்தபோது........... (டெலோ இந்தியாவின் ஏவலால் புலிகளை அடிக்கும் கனவில்  மிதந்துகொண்டு  இருந்தது. தாஸ் குறுப்பின் மேல் மட்டம் பொபியை போட்டுத்தள்ளும் கனவில் இருந்தது) 
கல்வியங்கட்டில்  டெலோ இயக்கத்தினர் (இவர்கள் யார் எங்களை சரணடைய சொல்ல? இது சரியா தவறா என்பது  இங்கே வேண்டாத வாதம்) புலிகள் மீது சுட தொடங்கினார்கள். அங்கு சண்டை தொடங்கி புலிகளுக்கும்  டெலோ விற்கும் சண்டை நடந்தது. மற்றது சரசாலையில் இருந்த டெலோ முகாமில் இருந்தவர்கள்  பூனகெரி கடல் வழியாக அங்கு இரண்டு வண்டிகள் (படகு) நின்ற காரணத்தால் விடத்தல் தீவு சென்று( மன்னார்) பின் இரவு இந்தியா போவது என்று ஒரு எல்ப் மற்றும் ஒரு கயஸ் வானில் கிளம்பினார்கள்  
அவர்களும் வெளிக்கிட புலிகளும் போனார்கள். அவர்கள் வாகனங்களை நிறுத்தவே இல்லை எல்ப் இல் இருந்தவர்கள்  புலிகள் மீது சுட தொடங்கினார்கள். துரத்திய புலிகள் நின்று விட்டார்கள் அப்போதே புலிகளிடம்  வால்கி டால்கி இருந்ததால் நின்றவர்கள் சாவச்சேரி சந்தியில் நின்றவர்களுக்கு தகவல் கொடுத்தார்கள்  எல்ப் இல் சென்றவர்கள் குகன் ஸ்டுடியோ இடத்தில் நிறுத்தி குறுக்கு ரோட்டில் சென்றுவிட்டார்கள். கயஸ் வான் சவேசேரி சந்தியை சேர்ந்த போது ஏற்கனவே தயராக காத்தருந்த புலிகள்  சரமாரியாக  சுட்டார்கள் அதில் வான் பற்றி எரிய தொடங்கியது  உள்ளிருந்த சிலர் இறங்கி ஓட தொடங்கினார்கள்  அவர்களையும் பிடித்து எரிந்துகொண்டிருந்த வானில் போட்டுவிட்டார்கள். (இதுதான் இன்னொரு திரியில் சென்ற கிழமை  எரிந்து கொண்டிருந்தது). இந்த இரண்டு சண்டைகளையும் தவிர புலிகளுக்கும் வேறு  இயக்கத்திற்கு சண்டைகள் நடக்கவில்லை. பிளோட்டை தடைசெய்த போது கிழக்கு  மாகாண  பெடியள் புலிகளிடம் பெற்றோல் வாங்கிதான் மாதகலில் இருந்து படகேறி கிழக்கிற்கு போனார்கள்  
(இதில் தராக்கி சிவராமும் அடக்கம்). ஈபி அதுகள் பாவம் முகாமில் ஒரே சொறியும் கடியுமாகத்தான் இருந்தார்கள்  எதோ விடுதலை கிடைத்த மாதிரிதான் ஓடினார்கள். அவர்களுக்கு பயிற்சி என்று பித்தலாட்டம் காட்டி  கல்லு ரோட்டில் குரோல் இழுக்க விட்டு முழங்கை முழுதும் காயம் ... அவர்கள் ஆனையிறவு ஆமியை தாண்டி  போக முடியாமல் இருந்தவர்களை புலிகள்தான் சுண்டிக்குளம் வழியாக அனுப்பினார்கள்.
இவைகளை விட்டால் கந்தன் கருணை சம்பவம். அல்லது ஒன்று இரண்டு தனிநபர் மோதல் சுடுபாடு வாக்குவாதம்  நடந்திருக்கலாம். 
இதில் வாழ வழியில்லாமல் ஆமியுடன் சேர்ந்தது யார்? 1990 இந்திய இராணுவம் வெளியேறும் மட்டும் சிங்கள  ஆமியுடன் யாரும் சேர்ந்து இருக்கவே இல்லை. 1989இல் புலிகள்தான் கொழும்பில் வெளியாக இருந்தார்கள்  நானும் எனது மாமா ஒருவரும் கொழுப்பில் புலிகளுக்கு ஒழித்து போய் கம்பகாவில்  நின்றோம். குண்டு சட்டியில் எத்தனை திரியுலும் குதிரை ஓடலாம் ஆனால் நடந்த உண்மைகள் பட்டபகலில்  எல்லாம் வெளியகத்தான்  நடந்தது.
ஒரு இனத்தை அழிப்பவனுடன் கூடி தனது இனத்தை அழித்தவனை எந்த இடத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. இதில் எந்த சந்தர்ப்ப சூழ் நிலையம் இல்லை. அப்படி என்ன சந்தர்ப்ப சூழ்நிலை இருந்தது?
1990இல் ஆமியுடன் கூடின ஈபிடிபியில் வெறும் 25-30 கயவர்களே இருந்தார்கள். புளொட்டில் 40-50 துரோகிகள்தான்.
புலிகள் தடை செய்தபோது மூன்று இயக்கத்திலும் குறையாது 6000 பேர்கள் இருந்தோம். 6000 பேருக்கு இல்லாத  என்ன சந்தர்பமும் சூழ்நிலையும் இந்த இனத்தை விற்ற 100 பொறுக்கிகளுக்கு இருந்தது?? 
இப்படியே.......... எங்காவது நாட்டில் நித்திரை மட்டுமே கொண்டுகொண்டு இருந்தவன் யாரவது வருவான் அவனின் காதில் பூ சுத்திகொண்டு  இருங்கோ.
 
மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடைவெளி இருந்தால்தான் ......... மனிதன் இருக்க முடியும். அல்லது இங்கே மிருகங்கள் மட்டுமே  இருக்கலாம். ஒன்று இரண்டு பன்றிகளுக்கு நியாயமாக படுகிறது என்பதால் மனித நேயத்தை  விலைக்கு விற்க முடியாது, மனிதர்கள் போராடுவார்கள் மனிதம் வாழும் இதில் மாற்றி கதைகவோ  மாற்றாமல் கதைக்கவோ ஒன்றும் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்திற்கு சிங்களவனோடு நிற்கும் தமிழரெல்லாம் அவனுக்குப் பயந்துதான் அவனுடன் நிற்கிறார்கள் என்று சொல்லப்போகிறீர்கள்?

பணமும், பதவியும், பலமும் மனிதர்கள மிருகங்களாக்கி வைத்திருக்கின்றன. அதற்கு உதாரணம்தான் இந்த டக்கிளஸ், கருணா, கே.பீ , பிள்ளையான் போன்றவரெல்லாம். ஏன், இங்கே நிற்கு ஆராத்தி சுத்தும் பெண்களோ, அல்லது பொன்னாடை போர்த்தும் ஐய்யர் மாரோ பயத்தினால்த்தான் நிற்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கதிர்காமரும், ஜெயராஜும், தொண்டைமானும் பயத்தினால்த்தான் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்தார்கள் என்கிறீர்களா??

முதலில் தமிழினம் சோரம்போகும், சுயநலம் மிக்க, சந்தர்ப்பவாத, காட்டிக் கொடுக்கும் இனம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பயமோ.. சோரம்போதலோ.. இல்ல.. பயத்துடன் கூடிய சோரம்போதலோ.. எதுவாக இருந்தாலும்.. தமிழன் இயல்பாக விரும்பி இப்படி ஒரு ஆசீர்வாதத்தை மகிந்தவுக்கு அளிக்கவில்லை என்பதை அங்கு அரசனின்.. மற்றும் மந்திரிகளின்.. மற்றும் ஆசீர்வாதம் வழங்குவோரின் இறுக்கமான முகபாவனைகள் கட்டியம் கூறுகின்றன தானே. அதை மறுப்பதற்கு இல்லைத் தானே..!!! :):lol:

இறைவா என் அசுர குணங்களை இல்லாதொழித்து மனித குணங்களை எனக்கு அருள்வாயா?

6(2240).jpg

2(4172).jpg

தலைவா எங்கள் இனப் பெண்களின் பொட்டழித்தவரே உங்களுக்கு ஆலாத்தி எடுத்து பொட்டுவைத்து ஆசீர்வதிக்குறோம்...

3(3119).jpg

முள்ளி வாய்க்காலில் மூழ்கடித்த எங்கள் ஆன்மாக்களின் நினைவாக பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன் தலைவா..

எங்கள் மக்களை வறுத்தெடுக்க எங்கள் தலைவர்களுடன் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறி போர்த்துகிறேன் பொன்னாடை....

4(2252).jpg

ஐநா என்ன உலகமே உங்களை இன அழிப்பாழி என்று சொன்னாலும் உங்களை ஆசீர்வதிக்க எங்கள் தலைவர்கள் அருகிருக்க உங்களை ஆசீர்வதிக்க நாமிருக்க பயமேன்?

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112832/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

'முதலில் தமிழினம் சோரம்போகும், சுயநலம் மிக்க, சந்தர்ப்பவாத, காட்டிக் கொடுக்கும் இனம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.'

மிக மிக உண்மை ,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதையும் உருவாக்குகின்றது .சாத்திரியின் கதையில் வந்தது போல ஆயிரம் சோரம் போன பெண்கள் எமது சமூகத்திலேயே இருக்கின்றார்கள் இவர்கள் எவரும் விரும்பி அந்த தொழிலுக்கு போகவில்லை சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம் .வசதியாக வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் அவர்களை பார்த்து " உந்த வாழ்கை வாழ்வதிலும் பார்க்க தூங்கி சாகலாம் " என்பார்கள் ஆனால் யதார்த்தம் அதுவல்ல .

ஒபரே தேவனின் டயரி வாசித்து வருகின்றேன் ,நாங்கள் கிரிக்கெட்டும் விளையாடி வெளிநாடு போக திரிந்த காலங்களில் எத்தனை பேர்கள் சிங்களத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதையோ செய்ய முயற்சித்திருக்கின்றார்கள் .இவர்களில் பலர் இன்று  இறந்துவிட்டார்கள் அல்லது சோரம் போனவர்கள் பட்டியலில் தான் .பரந்தன்ராஜன்,கருணா ,டக்கிலஸ் ,பிள்ளையான் ,கே.பி ,சித்தர் ,பெருமாள் ,சுரேஷ் எல்லோரும் இந்த பட்டியல் தான் .இதில் சிலர் இன்று அரசுடன், சிலர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் , சிலர் உதிரியாக உள்ளார்கள் .

அரசுடன் சேர்ந்து இயங்குவதையோ அல்லது இவர்கள் எவரையுமோ நான் நியாயப்படுத்த வரவில்லை ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை அரசாங்கம் சுட்டு கொண்டிருக்காவிட்டால் இன்று அவர்கள் நிலையும் என்னவாக இருக்கும் என்று யார் கண்டார் .

இயக்கத்தை விட்டு வெளியேறிய நான் வசதி இருந்தபடியால் உடனே வெளிநாடு வந்தேன் அல்லது நானும் ஓட்டுகுழுவோ அல்லது ஒட்டாத குழுவோடுதுதான்  போயிருப்பேன் .வேறு வழி  அங்கு இல்லை .

உங்களது  கருத்து

ஒரு தனிப்பட்டவர் கருத்து என்று எடுத்துக்கொண்டால் சரியாகவே இருக்கிறது

இருக்கும்

ஆனால் பொதுக்கருத்து

அல்லது பொதுநலன் சார்ந்த கருத்துக்குள் வரவே முடியாது..

இதைத்தான் நீங்கள் இன்னும் உணரவில்லை என நினைக்கின்றேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்திற்கு சிங்களவனோடு நிற்கும் தமிழரெல்லாம் அவனுக்குப் பயந்துதான் அவனுடன் நிற்கிறார்கள் என்று சொல்லப்போகிறீர்கள்?

பணமும், பதவியும், பலமும் மனிதர்கள மிருகங்களாக்கி வைத்திருக்கின்றன. அதற்கு உதாரணம்தான் இந்த டக்கிளஸ், கருணா, கே.பீ , பிள்ளையான் போன்றவரெல்லாம். ஏன், இங்கே நிற்கு ஆராத்தி சுத்தும் பெண்களோ, அல்லது பொன்னாடை போர்த்தும் ஐய்யர் மாரோ பயத்தினால்த்தான் நிற்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கதிர்காமரும், ஜெயராஜும், தொண்டைமானும் பயத்தினால்த்தான் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்தார்கள் என்கிறீர்களா??

முதலில் தமிழினம் சோரம்போகும், சுயநலம் மிக்க, சந்தர்ப்பவாத, காட்டிக் கொடுக்கும் இனம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ரகு

உங்களது கருத்தோடு  முரண்பாடில்லை

ஆனால் இதே சனம் தான் தேர்தல் என்று வரும் போது

தமது முழு எதிர்ப்பையும் காட்டுகிறது

தமக்கு வேண்டாதோர் எவ்வளவு தான் அள்ளிக்கொடுத்தாலும் தூக்கி  எறிந்துவிட்டு

தமது இலக்கு சார்ந்து வாக்களிக்கிறது என்பதே பெரும்பான்மை தமிழ்மக்களின் நிலையாகும்....

எனவே ஒரு சிலரை வைத்துக்கொண்டு

ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே  சுயநலம் மிக்கவர்கள் வரிசையில் சேர்ப்பது.............??? :(

அது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.