Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனவெளியின் மயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10731004_10202249588754728_1193306278422

 

 

இனிய இளகிய காலை ஒன்றில்
மனவெளியில் மட்டற்று மயக்கங்கள்

நீண்டு தெரியும் நெடுமரங்களோடு
நட்பாய் நடக்கையில்
நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில்
நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும்
நிழல் தந்த இலைகள்
நெஞ்சமதை நெகிழ்க்கின்றன

உதிர்ந்த மரக்கிளைகளில்
கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க்
கூடியிருந்த புலுனிகள் கூட்டம்
கூடி ஒன்றாய் புல்லமர்ந்து
கொற்றித் தின்றன எதையோ
பின் கூடி எழுந்து கோலமிட்டபடி
கண்ணிமை மூடித் திறக்குமுன்னே
காணாமலும் போயின

மீண்டும் அவை வந்து போகலாம்
மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து
மாயங்கள் செய்யலாம்
காலம் மாறிக் கடும்பனி போனபின்
குனிந்த மரங்கள் மீண்டும்
குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம்
நாம் மட்டும்
தொலைந்த எம் இருப்பை எண்ணி
தொலைவிலும் தெரியா துளிர்ப்பும் இன்றி
தொன்மை தொலைத்து எம்மைத் தொலைத்து
தூரம் தெரியா இடுட்டைத் துலாவி
வெளிச்சமற்ற வீதியற்ற வெளியில்
தொலை தூரம் செல்லக் காத்திருக்கிறோம்
  • கருத்துக்கள உறவுகள்
தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துளிர்ப்பும் இன்றி தொன்மை தொலைத்து எம்மைத் தொலைத்து
நாம் தொலைத்தவை பல ......கவிதைக்கு நன்றிகள்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்கள் மனவெளியின் மயக்கத்தில் எம் அனைவரின் மனவலியின் ஏக்கம் தொனிக்கிறது. பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே கவிதைகளில் செழுமை தெரிகிறது இலகுவாக சொற்கள் கோர்வையிடுகின்றன. நல்ல முன்னேற்றம் தொடர்ந்து இந்தவழியிலேயே ஆழமாக உங்கள் பயணத்தை தொடருங்கள் வியத்தகு நிலைக்கு வருவீர்கள் வாழ்த்துக்கள்

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி புத்தன், அன்புத் தம்பி, கண்மணி அக்கா, சகாரா ஆகிய உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மட்டும்

தொலைந்த எம் இருப்பை எண்ணி

தொலைவிலும் தெரியா துளிர்ப்பும் இன்றி

தொன்மை தொலைத்து எம்மைத் தொலைத்து

தூரம் தெரியா இடுட்டைத் துழாவி,

வெளிச்சமற்ற வீதியற்ற வெளியில்

தொலை தூரம் செல்லக் காத்திருக்கிறோம்

 

 

சுமேயின் கவிதை.. மனதை வருடுகின்றது!

 

அந்த வருடலில்... இதம் இல்லை..!

 

ஏக்கம் மட்டுமே தேங்கி நிற்கின்றது!

 

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம் என்பது... 'வைன்' மாதிரி!

 

அது கனிந்து வருவதற்குக் 'காலம்' கனிந்து வர வேண்டும்!

 

சமுதாயம் தனது 'சுயநலம்' தொலைந்து 'பொதுநலம்' கருதும் நாள் வர வேண்டும்!

 

நான் என்னும் அகங்காரம் தொலைத்து.. நாம் என நினைக்கும் நாள் வர வேண்டும்!

 

அது வரை.... கடியும்..இரத்தமும்.. சகதியும்....இருந்தே ஆகும்!

 

'பிரசவம்' மிகவும் கடினமானது....!

 

தொடர்ந்து எழுதுங்கள்... சுமே! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி புங்கை.

ஏனோ தெரியவில்லை இதமான தென்றலாய் வருடும் கவிதைகள் எனக்குக் கைவருகுதில்லை. நான் என்ன செய்ய ???? :D

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி புங்கை.

ஏனோ தெரியவில்லை இதமான தென்றலாய் வருடும் கவிதைகள் எனக்குக் கைவருகுதில்லை. நான் என்ன செய்ய ???? :D

ஐயையோ... சுமே.. தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போல உள்ளது!

 

நான் உங்கள் கவிதையின் 'இதத்தை' விமரிசிக்கவில்லை!

 

அந்த அருகதையும் எனக்கிருப்பதாக நான் கருதவில்லை!

 

உங்கள் கவிதை வரிகளில் ' தொக்கி' நிற்கின்ற ஏக்கத்தை மட்டுமே குறிப்பிட்டேன்!

 

அதாவது எமது ' இன விடுதலை ஏக்கத்தை' மட்டுமே குறிப்பிட்டேன்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நீங்கள் எழுதியதைத் தவறாகப் புரிந்து கொண்டு அப்படி எழுதவில்லை. உண்மையில் எனக்கு துன்பியல் கவிதைகள் எழுதவே பிடிக்குது. அதுதான் .....நீங்கள் பதட்டப்பட வேண்டாம். என் எழுத்துக்களை எப்படியும் விமர்சிக்க உங்களுக்கு உரிமை உண்டு புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.