Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் ஒரு பொம்பிளை அழைப்பாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச்சென்ற மணமகன் (படங்கள் )

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், ஒன்றிய உதவி ஆணையராக இருக்கிறார். அறந்தாங்கியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் பானுப்ரியா பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். 

 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்ணகி, பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களது மகன் கௌதமன் எம்.காம்., பட்டதாரியான இவர் பிரான்ஸ் நாட்டில் படித்து அங்கேயே ஒரு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறார்.
 
கௌதமன் தமிழ்நாட்டில் தான் பெண் எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அவரது பெற்றோர் அறந்தாங்கியில் பானுப்ரியாவை நிச்சயம் செய்தனர். நாளை எஸ்.ஆர்.பட்டிணத்தில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு திருமணம் நடக்க உள்ளது.
 
இந்த நிலையில் இன்று பெண் அழைத்து போக மணமகன் கௌதமன் மற்றும் அவரது பெற்றோர் வாடகை ஹெலிக்காப்டரில் அறந்தாங்கி வந்து இறங்கினர். பிறகு சடங்குகள் முடிந்த பிறகு அதே ஹெலிக்காப்டரில் மணமகளை அழைத்துச் சென்றனர்.
 
தமிழக அரசியல்வாதிகளை மிஞ்சிய அளவில் ஆடம்பரமான திருமணம் நாளை நடக்கிறது. ஹெலிக்காப்டருக்கு மட்டும் ரூ. 15 லட்சம் வாடகையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஹெலிக்காப்ட்டர் இறங்க உடனடி இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆடம்பர பெண் அழைப்பை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். பிரான்சில் வளர்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை விட முடியாது. அதனால் தமிழ்நாட்டில் பெண் எடுக்கிறேன் என்றார் மணமகன்.
 
helipad.jpg
 
-இரா.பகத்சிங்
 

இவர் லாச்சப்பலில் கிருஷ்ணபவான் உணவகத்துக்கு அருகிலுள்ள மொழிபெயர்ப்பு நிலையத்திலும் வேலை செய்பவர். இவரை அங்கு கண்டிருக்கிறேன். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இவர் லாச்சப்பலில் கிருஷ்ணபவான் உணகவகத்துக்கு அருகிலுள்ள மொழிபெயர்ப்பு நிலையத்திலும் வேலை செய்பவர். இவரை அங்கு கண்டிருக்கிறேன்.  :)

 

அடுத்த முறை அந்தப் பக்கம் செல்லும் போது....

மாப்பிள்ளையிடம், ஏன்... இந்த தேவையில்லாத வேலை பாத்தனிங்கள் என்று கேளுங்கள் துளசி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் லாச்சப்பலில் கிருஷ்ணபவான் உணகவகத்துக்கு அருகிலுள்ள மொழிபெயர்ப்பு நிலையத்திலும் வேலை செய்பவர். இவரை அங்கு கண்டிருக்கிறேன்.  :)

 

இங்கினை மொழிபெயர்ப்பாளர் அங்கின.. ஊரையே பெயர்கிறாப்போல.. அண்ணன்.. அண்ணிக்கு நல்லாவே படம் காட்டிறார். எத்தினை கிரடிட் காட்.. ரன்னாகிட்டு இருக்கோ..??!! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வேறொரு ஈழத் தமிழர்களின் திருமண நிகழ்வு கெலிகொப்ரரில் பெண் வந்து இறங்குவது முகப்புத்தகத்தில் போட்டிருந்தனர் uk இல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்ரை கடவுளே!!
நாளைக்கு இதுதான் தமிழரின்ரை கலாச்சாரம் எண்டு சொல்லி குத்திமுறியாட்டி சரி......
 
இனிமேல் ஹெலிக்கொப்பரிலைதான் சாமத்தியவீடு கலியாணவீடு எண்டால் எல்லாம் சுத்தம்.  :D 
 
மூடக்கொள்கைகளை அழிக்க அழிக்க வரட்டு கௌரவங்கள் வளர்கின்றன. :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

என்ரை கடவுளே!!
நாளைக்கு இதுதான் தமிழரின்ரை கலாச்சாரம் எண்டு சொல்லி குத்திமுறியாட்டி சரி......
 
இனிமேல் ஹெலிக்கொப்பரிலைதான் சாமத்தியவீடு கலியாணவீடு எண்டால் எல்லாம் சுத்தம்.  :D 
 
மூடக்கொள்கைகளை அழிக்க அழிக்க வரட்டு கௌரவங்கள் வளர்கின்றன. :icon_idea:

 

தாலி கட்டுற அன்றே மேலே போகும் ஒரு புண்ணியவானுக்கு கெலி விழுந்து சாவதாக கடவுள் கதை எழுதி வைத்திருக்கிறார்.
 
யார் அந்த அதிர்ஷ்ட சாலியோ ??

ஏற்கனவே வேறொரு ஈழத் தமிழர்களின் திருமண நிகழ்வு கெலிகொப்ரரில் பெண் வந்து இறங்குவது முகப்புத்தகத்தில் போட்டிருந்தனர் uk இல்

 

இங்க பிறேமன்ல ஒரு திருமண வீட்டில.. தாலிகட்டி எல்லாம் முடிய மாப்பிளை பொம்பிளைய ஹெலிகொப்ரரிலதான் கூட்டிக் கொண்டு போனவர்.

மாப்பிளை ஹெலீல சிறை எடுத்துக் கொண்டு போறார் எண்டு விளக்கமும் சொன்னவர்..!!

 

அது நிகழ்ந்து ஒரு மாசம் போச்சுதா...?!!!!

பொண்ணு கண்ணைக் கசக்கிக்  கொண்டு வந்து தாய் தேப்பனோடை இருக்குது! 

இப்ப கன இடங்களில இந்த கந்தல்தான் கதை!!!  :o  :(

 

மாப்பிளைத் தம்பி எங்கடை ஆக்களீன்ரை ஆற்ரையோ கலியாண வீட்டுக்குப் போய்... பிரான்சில ஹெலீலை மயங்கீட்டார்போலை..!!  :o  :lol:

ஹெலிகாப்டர் பூமழை தூவ நடந்த திருமணம்: மகிழ்ச்சியில் வாழ்த்திய கிராம மக்கள்!

helicopter%20marriage04.jpg

காரைக்குடி: காரைக்குடி அருகே ஹெலிகாப்டர் பூமழைத் தூவ நடந்த திருமணத்தை அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியில் வாழ்த்தினர்.

காரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்-கண்ணகி தம்பதியினர், தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகளான கலையரசி மற்றும் திருவாசகமும் திருமணமாகி பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இளைய மகன் கௌதமனுக்கு, அறந்தாங்கியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த கௌதமனின் அண்ணன் விரும்பினார்.

இதையடுத்து, மணமக்கள் பயணிப்பதற்காக ஹெலிகாப்டர் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் அருகே ஹெலிபேடும் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று (29ஆம் தேதி) மணமக்களுக்கு நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அப்போது மணமகன் மற்றும் மணப்பெண் அழைப்பு ஹெலிகாப்டர் மூலம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

helicopter%20marriage05.jpg

இந்நிலையில், கௌதமன் மற்றும் பானுப்பிரியாவின் திருமணம் இன்று (30ஆம் தேதி) நடந்தது. மணமகன் கௌதமன் குடும்பத்தாருக்கு சொந்தமான கோயிலில் வைத்து, மணமகள் பானுப்பிரியா கழுத்தில் தாலியை கட்டினார் கௌதமன். அப்போது ஹெலிகாப்டர் வானில் பறந்தபடி, மணமக்கள் மீது பூமழை தூவியது.

திருமணம் முடிந்த கையோடு ஐம்பது கிலோ கேக்கை, திருமண மேடையில் மணமக்கள் வெட்டினர். மேலும், சாம்பெயின் பாட்டில்களை உடைத்து ஆரவாரத்தோடு குதூகலித்தனர். திருமணம் முடிந்த பின் மணமக்கள் இருவரும் ஹெலிகாப்டர் ஊர்வலம் சென்றனர்.

helicopter%20marriage06.jpg

பஸ் போக்குவரத்துகூட சரியாக இல்லாத அந்த கிராம மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த மகிழ்ச்சியோடு மணமக்களையும் அவர்கள் வாழ்த்தினர்.

http://m.vikatan.com/tiny/index.php?module=news&aid=34142

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பிறேமன்ல ஒரு திருமண வீட்டில.. தாலிகட்டி எல்லாம் முடிய மாப்பிளை பொம்பிளைய ஹெலிகொப்ரரிலதான் கூட்டிக் கொண்டு போனவர்.

மாப்பிளை ஹெலீல சிறை எடுத்துக் கொண்டு போறார் எண்டு விளக்கமும் சொன்னவர்..!!

 

அது நிகழ்ந்து ஒரு மாசம் போச்சுதா...?!!!!

பொண்ணு கண்ணைக் கசக்கிக்  கொண்டு வந்து தாய் தேப்பனோடை இருக்குது! 

இப்ப கன இடங்களில இந்த கந்தல்தான் கதை!!!  :o  :(

 

மாப்பிளைத் தம்பி எங்கடை ஆக்களீன்ரை ஆற்ரையோ கலியாண வீட்டுக்குப் போய்... பிரான்சில ஹெலீலை மயங்கீட்டார்போலை..!!  :o  :lol:

 

உப்பிடியான கதையள் எக்கச்சக்கமாய் இருக்கு....எழுதினால் ஆயிரம் பக்கத்தை தாண்டும்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=szvCaVIc3cA

 

http://www.youtube.com/watch?v=szvCaVIc3cA

 

இந்தத் திருமணத்தை பற்றிய, செய்தியை நேற்று ஒரு தொலைக்காட்சியிலும், ஒளி பரப்பியிருந்தார்கள்.
19´வது நிமிடத்தில் இருந்து.... அச் செய்தி வருகின்றது.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.