Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை: கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் என நினைக்கிறேன்.

ஓம் மணி, அநேகமானோர் குருநகரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லுகினம். தமிழ் மிரர் மற்றும் ஆரம்ப செய்திகளில் இவர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அத்துடன் இவ் மூவரும் தாம் வாழ்க்கையில் மிச்சம் 5 பேரை பார்க்கவும் இல்லை என்று சொல்லியதாக விகடனில் வந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். :(

தமிழக மீனவர்கள் மீது கடலில் தாக்குதல் செய்வது அரசியல் பிரச்சனைகளை ஏற்படுத்தி இந்திய அரசுக்கும் தலையிடமாக இருப்பதால் இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை உத்தியோகபூர்வமாக குற்றவாளியாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்போது எதிர்ப்பு இருக்காது. அப்பாவி மீனவர்கள் என்ற நிலை மாறி குற்றவாளிகள் என்ற வரையறைக்குள் வரலாம். அரசியல் ரீதியாக அனுதாபமும் எழாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீனவர்கள்தான் யாழுக்கு போதைவஸ்து கடத்தி இருப்பார்களோ? இதை எடுத்துதான் எமது யாழ் சமூகம் சீரளியுதோ? ஆனா அது யாழ்தேவில வாறதாதானே பேச்சு?

தவிர தமிழ் ஆக்கள் இப்படி வேலை எல்லாம் செய்யமாட்டினம். இது இலங்கை அரசின் சதியே.

இலங்கையில் மரண தண்டனை பேச்சளவில் மட்டுமே என்று இருக்க முடியாது, அண்மையில் அலுகோசு வேலைக்கு புதிதா ஆக்களை எடுத்தவங்கள். எதுக்கும் இப்பவே கையெழுத்து புரட்சியை தொடங்கினாத்தான் போதைவஸ்து கடத்தல் காரரை மன்னிக்கணும் அப்பாவி மீனவர்களை விடுவிக்க முடியும்.

மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக நாளைய தினம் இந்திய அரசாங்கத்தினால் மேன்முறையீடு செய்யப்படும்!

தமிழகத்தின் ஐந்து மீனவர்களுக்கு சிறிலங்காவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக நாளைய தினம் இந்திய அரசாங்கம் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை செய்யவுள்ளது.

பாரதீயே ஜனதா கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குறித்த ஐந்து பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

எனினும் அவர்கள் நிரபராதிகள் என்று இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக வாதாடுவதற்காக இந்திய அரசாங்கம் அணில் சில்வா என்ற சட்டத்தரணியை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/35054/57//d,article_full.aspx

ஓம் மணி, அநேகமானோர் குருநகரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லுகினம். தமிழ் மிரர் மற்றும் ஆரம்ப செய்திகளில் இவர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அத்துடன் இவ் மூவரும் தாம் வாழ்க்கையில் மிச்சம் 5 பேரை பார்க்கவும் இல்லை என்று சொல்லியதாக விகடனில் வந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். :(

அவையள் ஐயா டக்ளசிட்டைக் கருணை மனு குடுத்திருக்கினமாம் நிழலி.

இனி ஜனாதிபதி பொது மன்னிப்புக் குடுத்து அதைத் தான் தான் வாங்கித் தந்தது எண்டு டக்ளஸ் பெருமை கொட்டுவார்.

அதர்மம் ஆட்சி செய்யும் நாட்டில் நீதிளை எங்கே எதிர்பார்ப்பது. 

மீனவர் தூக்கு- இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திங்களன்று மனுத்தாக்கல்!

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று மத்திய அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்கிறது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் இலங்கையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி 2 நாட்கள் விடுமுறை காரணமாக மனுதாக்கல் செய்ய முடியவில்லை.

நாளை மறுநாள் 10-ந்தேதி மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக, நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.

http://m.oneindia.in/tamil/news/srilanka/india-appeal-on-monday-against-sri-lanka-court-s-death-sentence-214418.html

மீனவர் தூக்கு வழக்கு செலவுக்கு தமிழக அரசு ரூ20 லட்சம் உதவி - திங்களன்று மேல்முறையீடு!!

சென்னை/ கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் செலவுக்காக தமிழக அரசு ரூ20 லட்சம் உதவி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் திங்களன்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் இலங்கையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி 2 நாட்கள் விடுமுறை காரணமாக மனுதாக்கல் செய்ய முடியவில்லை.

நாளை மறுநாள் 10-ந்தேதி மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக அரசு ரூ20 லட்சம் உதவி

இதனிடையே தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் செலவுக்கு ரூ20 லட்சம் நிதியை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே இந்த 5 மீனவர்கள் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ7,500 உதவித் தொகையை வழங்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

http://www.velichaveedu.com/811141146/

Edited by துளசி

தூள் கடத்தியவன் கஞ்சா விற்றவனுக்கு போராடுறம் அங்கு தமிழ் நாட்டில் முகாமில் உள்ளவனை விட்டுடுவம் வாழ்க அரசியல்  :)

மீனவர் தூக்குத்தண்டனை. மீனவர் கைது என்று தமிழர்களை ஓடவைத்துக்கொண்டே இருக்கிற யுக்தியை இலங்கையும்-இந்தியாவும் திறம்பட செய்துகொண்டிருக்கிறது.

ஓடவேண்டியவர்கள் நம்மை துரத்தும் அவலத்தினை நிறுத்த வேண்டும்.

2011நவம்பரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது இன்று தண்டனை வழங்குகிறாய் என்றால் , அதே 2011 ஜனவரியில் இருவரும், ஏப்ரலில் 4 தமிழ் மீனவரும் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி என்னவாயிற்று என்கிற கேள்வியை நாம் எழுப்பும் தருணம் இது.

எல்லைகடந்தால் வழக்கு போடுவாய், பொய்யாய் வழக்கு ஜோடிப்பார்கள் என்றால், மீனவர் கொலைவழக்கு என்னவாயிற்று ?.. கொலை நிகழ்ந்தால் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும், குற்றவாளி கண்டறியப்படவேண்டும். அவன் மீது விசாரனை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இது எதுவும் 600+ தமிழ் மீனவர்களுக்கு நடக்கவில்லை.

இதை கேள்வி எழுப்பாமல் நமக்கு விடிவு இல்லை.

மீனவர் கொலை தொடர்பாக 2011இல் மே பதினேழு இயக்கம், மற்றும் தோழர்கள் இனைந்து ஆவணபடுத்தலை மேற்கொண்டோம். நிதி பற்றாக்குறை, நேரப்பற்றாக்குறை காரணமாக இதை முழுமையாக முடிக்க இயலாமல் போயிற்று. இதன் நடுவில் இதன் கோப்புகள் அழிந்து போக, எஞ்சி இருந்தவற்றினை வைத்து ஒரு ஆவணப்படத்தினை இன்று பத்திரிக்கையாளர்களிடத்தில் திரையிட்டோம். விரைவில் இணையத்தில் வெளியிடுவோம்.

நாம் உணரவேண்டிய வலிகள் நிறைந்த தமிழக மீனவர் படுகொலைகளையும் அதற்கான் விசாரணையையும் கோரிக்கையாக வைத்து முழக்கங்கள், போராட்டங்கள் எழுப்பப்பட வேண்டும்.

குற்றவாளிகளான இந்தியா-இலங்கை அரசுகள் விசாரனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

இதுவே முதற்பணி.

Thirumurugan Gandhi

https://m.facebook.com/story.php?story_fbid=10205210152756923&id=1339044043

தூள் கடத்தியவன் கஞ்சா விற்றவனுக்கு போராடுறம் அங்கு தமிழ் நாட்டில் முகாமில் உள்ளவனை விட்டுடுவம் வாழ்க அரசியல் :)

அவர்கள் கஞ்சா விற்றதற்கு என்ன ஆதாரம்? :) தமிழக மீனவர்களுக்காக தமிழக உறவுகள் போராடுகிறார்கள். இதில் உங்களுக்கு என்ன நட்டம்? :)

இப்படியான திரிகளையும் பாருங்கள் :)http://www.yarl.com/forum3/index.php?/topic/148340-அகதி-முகாமில்-உள்ள-ஈழ-மாணவிக்கு/#entry1055374

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் சீமான் செய்வதற்கு எதிர்நிலையை எடுக்க வேண்டும் அஞ்சரனுக்கு.. :D அதனால் இலங்கை நீதித்துறையை நம்பிவிட்டார். :o

எப்பவும் சீமான் செய்வதற்கு எதிர்நிலையை எடுக்க வேண்டும் அஞ்சரனுக்கு.. :D அதனால் இலங்கை நீதித்துறையை நம்பிவிட்டார். :o

இசை சீமான் பப்படம் தொடக்கம் பகோடா வரை போராடுவார் இது எல்லாம் சும்மா ஜுயுப்பி மேட்டர் அவருக்கு .. :icon_idea:

குற்றம் செய்தவன் எப்ப ஒப்புக்கொண்டு இருக்கிறான் சொல்லுங்க இன்று தமிழக சிறப்பு முகாமில் இருக்கும் இளையவர் எல்லாம் புலி என்னும் ஆதாரம் வைத்துக்கொண்டு அடைக்கபட்டு உள்ளார்கள் அவர்களுக்கு ஏன் நீங்கள் எல்லாம் போராடுவது இல்லை .. :(

முதல் இலங்கை கடலுக்க வந்ததே தப்பு இதில கஞ்சா ..கருவாடு கடத்தினா விடுவானா ஒரு நாடு தன சட்டபடி நடக்கு எமக்கு  என்ன வந்தது அதனால்  :unsure:

அது இரண்டு நாட்டு பிரச்சினை அவன் பேசி தீர்ப்பான் தூக்கில போடுவான் சும்மா தமிழன் என்று பெயருக்குள் களவானி பயலுகளுக்கு எல்லாம் தஞ்சம் கொடுக்க முடியாது  :rolleyes:

குற்றம் செய்தவன் எப்ப ஒப்புக்கொண்டு இருக்கிறான் சொல்லுங்க.

இன்று தமிழக சிறப்பு முகாமில் இருக்கும் இளையவர் எல்லாம் புலி என்னும் ஆதாரம் வைத்துக்கொண்டு அடைக்கபட்டு உள்ளார்கள் அவர்களுக்கு ஏன் நீங்கள் எல்லாம் போராடுவது இல்லை .. :(

இலங்கை மட்டும் எப்பவும் உண்மை சொல்லுற நாடாக்கும்??? இலங்கை சொல்வதை வைத்து அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?

அப்படியே குற்றம் செய்திருந்தாலும் அதே குற்றத்தை செய்த பலரை வெளியில் சாதாரணமாக நடமாட விடுபவர்கள் இவர்களுக்கு எதற்கு தண்டனை தீர்ப்பு கொடுக்க வேண்டும்?

இதெல்லாம் என்னவாம்?

http://www.yarl.com/forum3/index.php?/topic/101673-செங்கல்பட்டு-பூந்தமல்லி-ஏதிலி/?fromsearch=1

http://www.yarl.com/forum3/index.php?/topic/104848-செங்கல்பட்டு-முகாமை-முற்றுகைய/?fromsearch=1

http://www.yarl.com/forum3/index.php?/topic/107103-பூந்தமல்லி-சிறப்பு-முகாம்-முற்/?fromsearch=1

இதிலும் ஒரு கோரிக்கை அகதி முகாம் பற்றியது.

http://www.yarl.com/forum3/index.php?/topic/130804-அதிர்ந்தது-சென்னை-மாநகரம்-பத்த/?fromsearch=1

இன்னும் பல திரிகள் உள்ளன. இவ்வருடமும் பல போராட்டங்கள் நடந்தது. உங்களுக்காக நாங்கள் தேடி மினக்கட ஏலாது. நீங்களே தேடிக்கண்டு பிடியுங்கோ.

நீங்கள் செய்தியை காணவில்லை என்றால் போராட்டமே நடக்கவில்லை என்று அர்த்தமோ?

நீங்கள் இப்படியான செய்திகளை இணைக்க மாட்டீர்கள். எவ்வளவோ செய்திகளை தவற விட்டாலும் ஒரு சிலவற்றையாவது யாழில் இணைக்கிறார்கள். அப்படி அடுத்தவர் இணைப்பதையும் பார்க்க மாட்டீர்கள். கேள்வி கேட்பதற்கு மட்டும் முதலாவது ஆளா வந்து நிற்பீர்கள். :o

Edited by துளசி

மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு?

http://www.yarl.com/forum3/index.php?/topic/148707-மரண-தண்டனை-பெற்ற-இந்திய-மீனவர்க/#entry1057262

  • 2 weeks later...

சிறீலங்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை!!

சிறிலங்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

5-fishermen.jpg

எனினும் இதே குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களின் நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளது.

பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு வசதியான வகையில் இந்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டையும் மீளப்பெற்றுக் கொண்டது.

5-fisherman-2.jpg

இதன் அடிப்படையில் குறித்த ஐந்து தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாளையதினம் தமிழகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://www.pathivu.com/news/35469/57/5/d,article_full.aspx

ஐந்து மீனவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வாய்ப்பிருந்தும், வழக்கினை நடத்தாமல் , உயிர்பிச்சை ராஜபக்சே வழங்கினார், மோடி பேரம் பேசி காப்பாற்றினார் என்று மூன்றாம் தர அரசியலை செய்து முடித்திருக்கிறார்கள்.

இதன் மூலம் மீனவர்கள் போதை பொருள் கடத்தும் குற்றவாளிகள் எனும் அவதூறு அழியாமால் பார்த்துக் கொண்டன இரண்டு அரசுகள்.

விடுதலையான மீனவர்களை எதற்காக தில்லி அழைத்துச் செல்லவேண்டும்?.. எதற்காக எந்த ஒரு ஊடகமும் சந்திக்க இயலாதவாறு மறைந்து வைக்கப்பட வேண்டும்.?..

ஏ.என்.ஐ (ANI)நியூஸ் ஏஜென்சி மட்டும் அனுமதிக்கப்பட்டு, அந்த நிறுவனம் வெளியுறவுத்துறை அதிகாரிகளால் அழைக்கப்பட்டு மீனவர்களை சந்தித்து பேட்டியெடுக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும், இந்த ஊடகம் இம்மீனவர்கள் தங்க வைக்கப்பட்ட முகவரியை மற்ற ஊடகத்திற்கு கொடுக்க கூடாது என கட்டளை இடப்பட்டிருக்கிறது. இது ஏன் நடந்தது?... ராஜபக்சேவிற்கு, மோடிக்கு நன்றி என மீனவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அது வரை எந்த மீனவரின் குடும்பமும் இவர்களிடம் பேச அனுமதிக்கப்படவில்லை.

இந்த மீனவர்கள் கிட்டதட்ட தில்லியில் சிறைக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.

இதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுப்பாமல், ‘மோடி காப்பாற்றினார்” என்று எதேனும் ஒரு ஊடகம் எழுதினால் அது நேர்மையற்ற வெட்கங்கெட்ட கையூட்டு எதிர்பார்த்து செய்யப்படுகிற நடவெடிக்கை என்பதில் எந்த ஐய்யமும் தேவையில்லை.

ராஜபக்சேவின் காலைப் பிடித்தாவது சுயவிளம்பரம் தேடும் ஒரு கும்பலை என்னவென்று அழைப்பீர்கள்.

#கேமரா_எங்கே_வைக்கப்பட்டிருப்பது_மட்டுமல்ல_யார்_வைத்திருக்கிறார்கள்_என்பதுவும்_நம்_பிரதமருக்கு_தெரியும்

Thirumurugan Gandhi

https://m.facebook.com/story.php?story_fbid=10205292678900025&id=1339044043

திருமுருகன் காந்தியும் இணையவலையில் கூவுவதை விட்டுவிட்டு ஒரு வழக்கு போட்டு மோடியையும் மத்திய அரசையும் கண்டனத்துள்ளாக்கலாம்..அதை செய்வாரா?  இந்த ஐவரும் பார்டன் (pardon) எடுத்தபடியால் தான் இலங்கை இவர்களை வெளியே விட்டிருக்கிறது...

அண்நை நீங்க ரொம்ப புகழுறீங்க....நீங்க விளக்கு பிடிச்சு..முடிச்சவுக்கி..மொள்ளைமாறிகளை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டுவர உழைகுறீங்க பாருங்க அதை பார்க்க 'புல்'லரிக்குது.....

உங்களது விளக்கு பிடிக்கும் கடமைக்கு தலை வணங்குகிறேன்....உங்களது சேவை எல்லாருக்கும் தேவை..

இப்பதான் பார்த்தேன் தோழர் ........ :)
 
தமிழர்களுக்கு விளக்குப்பிடிப்பது தமிழ் இரத்தம் கொண்ட ஒருவனின் சாதாரண செயல்பாடு .இது எப்பிடி உங்களுக்கு புரியும் .......வந்து  பிறந்தது ஒரு கூட்டம் ........தமிழினத்தின் சாபக்கேடு ...  சொந்த இனமே அழிவதை இரசித்து அழகுபார்க்கும் கேவலம் கெட்ட கொள்கை கொண்டு ஈனப்பிறவிகளாய் ................ஆனால் அதுக்க வேற முடிச்சவிக்கி .மொள்ளமாரி என்று வீரவசனம் வேற ...........படு கேவலமாய் இருக்கு . :D ............வாசிக்க  :lol:

திருமுருகன் காந்தியும் இணையவலையில் கூவுவதை விட்டுவிட்டு ஒரு வழக்கு போட்டு மோடியையும் மத்திய அரசையும் கண்டனத்துள்ளாக்கலாம்..அதை செய்வாரா? இந்த ஐவரும் பார்டன் (pardon) எடுத்தபடியால் தான் இலங்கை இவர்களை வெளியே விட்டிருக்கிறது...

திருமுருகன் அண்ணா இந்த ஐவர் பற்றி குறை சொல்லவில்லை.

அவர்கள் டெல்லியிலும் சூழ்நிலை கைதிகளாக்கப்பட்டு மோடி, மகிந்தவுக்கு நன்றி கூற செய்து அதை வீடியோ எடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

அதையும் இவர்களின் தூக்குதண்டனை, விடுதலை என்பவற்றின் பின் உள்ள இந்திய இலங்கை அரசுகளின் அரசியல் போன்றவற்றையும் மறைத்து தனியே மோடி, மகிந்தவை பாராட்டும் ஊடகங்களையே குற்றம் சாட்டியுள்ளார்.

திருமுருகனை இந்திய அரசின் மீது தான் வழக்கு போட சொல்லுகிறேன்...இந்த ஐவரின் மீதும் அல்ல...திருமுருகன் அரசின் மீது வழக்கு போட்டு நீதிமன்றால் அரசும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டால்..இந்த விடயத்தின் முழு விடயமும் வெளிவரும்...இந்திய அரசும் இது மாதிரி மேலும் விளையாடமுடியாது.......திருமுருகன் காந்தி..சீமான் போன்றோர் அதை செய்தால் அவர்கள் மேல் இன்னும் பொதுமக்களிடம் மதிப்பும் வளரும்....பிற்காலத்தில் அவர்கள் முதலமைச்சராக வரவும் மக்களால் தெரிவு செய்ய முடியும்....

இப்பதான் பார்த்தேன் தோழர் ........ :)
 
தமிழர்களுக்கு விளக்குப்பிடிப்பது தமிழ் இரத்தம் கொண்ட ஒருவனின் சாதாரண செயல்பாடு .இது எப்பிடி உங்களுக்கு புரியும் .......வந்து  பிறந்தது ஒரு கூட்டம் ........தமிழினத்தின் சாபக்கேடு ...  சொந்த இனமே அழிவதை இரசித்து அழகுபார்க்கும் கேவலம் கெட்ட கொள்கை கொண்டு ஈனப்பிறவிகளாய் ................ஆனால் அதுக்க வேற முடிச்சவிக்கி .மொள்ளமாரி என்று வீரவசனம் வேற ...........படு கேவலமாய் இருக்கு . :D ............வாசிக்க  :lol:

தமிழனை தமிழன் கொல்லும் போதும் மியூசிக்கும் போட்டுக்கொண்டே விளக்குபிடிப்பவர்களுக்கு சொந்த இனம் அழிவது போல தெரியாது..ஆனால் மற்றவன் கொன்றால் தான் அழிவது  என்று எல்லாம் உணர்ச்சியை கொட்டாமல்... சும்மா இரண்டு யாகம் செய்து பார்க்கிறது.....திருப்பியும் கடவுள் வருவாரா என்று...

Edited by naanthaan

திருமுருகனை இந்திய அரசின் மீது தான் வழக்கு போட சொல்லுகிறேன்...இந்த ஐவரின் மீதும் அல்ல...திருமுருகன் அரசின் மீது வழக்கு போட்டு நீதிமன்றால் அரசும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டால்..இந்த விடயத்தின் முழு விடயமும் வெளிவரும்...இந்திய அரசும் இது மாதிரி மேலும் விளையாடமுடியாது.......திருமுருகன் காந்தி..சீமான் போன்றோர் அதை செய்தால் அவர்கள் மேல் இன்னும் பொதுமக்களிடம் மதிப்பும் வளரும்....பிற்காலத்தில் அவர்கள் முதலமைச்சராக வரவும் மக்களால் தெரிவு செய்ய முடியும்....

நீங்கள் கூறிய இறுதி வரிக்கு தான் எனது பதிலை எழுதியிருந்தேன்.

முதல் எழுதியதற்கு பதிலளிப்பதானால், திருமுருகன் அண்ணா சிலவற்றை சட்டரீதியாக முன்னெடுப்பவர். ஆனால் இது தொடர்பில் அவர் சட்டரீதியாக ஏதும் முயற்சிகளை மேற்கொண்டாரா/மேற்கொள்வாரா தெரியாது.

ஆனால் இந்திய நீதித்துறை சரியாக செயற்படும் என்று நம்ப முடியாது.

எதற்கும் உங்கள் கருத்தை நேரடியாக அவரது முகநூலில் முன்வைக்கலாமே.

அவர் பதிவிற்கான முகநூல் இணைப்பு https://m.facebook.com/story.php?story_fbid=10205292678900025&id=1339044043

எனக்கு இவர்கள் மீது நல்ல அபிப்பிராயமோ, நம்பிக்கையோ இல்லை (வைகோ மீதுள்ள நம்பிக்கையில் லட்சத்தில் ஒரு வீதமும் இவர்கள் மீது இல்லை)..இவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவே எண்ணுகிறேன்....இவர்கள் ஆக்கபூர்வமாக செய்வதானால் வழக்கு போட்டு விட்டு இந்திய அரசை குறை கூறலாம்...இங்கு இவர்களின் மீது மிக்க நம்பிக்கையுள்ளவர் நீங்கள் ஆகவே உங்களின் பதில் இப்படி செய்தால் என்ன என்பதற்காக தான் கூறினேன்...

இந்திய நீதித்துறை சரியாக தான் இயங்குகிறது...அதை நடை முறைப்படுத்துவதில் தான் அரசுகள் தயங்குகின்றன கரணம் அரசியல் வாதிகள்  பின்வாங்குகிறார்கள் (உ+ம்: அம்மா)

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகனின் அமைப்பு அரசியல் அமைப்பு அல்ல.. அவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் நான்தான்??

தமிழனை தமிழன் கொல்லும் போதும் மியூசிக்கும் போட்டுக்கொண்டே விளக்குபிடிப்பவர்களுக்கு சொந்த இனம் அழிவது போல தெரியாது..ஆனால் மற்றவன் கொன்றால் தான் அழிவது  என்று எல்லாம் உணர்ச்சியை கொட்டாமல்... சும்மா இரண்டு யாகம் செய்து பார்க்கிறது.....திருப்பியும் கடவுள் வருவாரா என்று...

என்னாடா  இது......... இவங்க ஒருத்தன் மியூசிக் ,விளக்கு  என்று சம்பந்தமில்லாமல் புசத்திறார் . :D
 
அது சரி எப்போதுமே சிங்களவனை ,அவன் கொலைகளை நியாயப்படுத்த நினைக்கும் இதுகளைப்போன்ற  சிங்களவனின் வழிவந்த -------  கூட்டத்திற்கு  தமிழ் சொல்களின் அர்த்தம் புரியாது என்பதை புரிந்து கொள்கிறேன் . :lol:
 
குறிப்பு ..............உங்களால்  மட்டுமல்ல எந்த கொம்பனாலும் ஒண்டும் செய்ய முடியாது .. ஏன் இதை எழுதுகிறேன் என்பது  உங்களுக்கு மட்டுமே புரியும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.