Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை முட்டாளாக நினைக்கிறது ஈ.பி.டி.பி: சரவணபவன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

beebaeaadb96635d422dc222554308f0.jpg

 தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர்.ஜனாதிபதி மகிந்தவுக்கும், அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

 
 
இன்று பி.ப 3மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் மூளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரசாத் அரங்கில்  2014ஆம் ஆண்டிற்கான வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 
மேலும் அவர் உரையாற்றுகையில்,
 
வடக்கு,கிழக்கு போர்ச் சூழ்நிலையில் பின்தள்ளப்பட்டுள்ளது.இன்று இலங்கையில் 28வீதம் முல்லைத்தீவிலும், 19வீதம் கிளிநொச்சியிலும்,22வீதமும் மன்னாரிலும்,19வீதம் மட்டக்களப்பில் என  தமிழர் வாழும் பிரதேசங்கள்  அதிகளவிலானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். எனவே வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்ற பிரதேசங்களும் மற்ற பிரதேசங்களுக்கு சமமாக ஆக்க வேண்டும்.நாட்டின் தலைவருடைய கடமை அனைத்து பிரதேசங்களுக்கும் சமமாக அபிவிருத்தியை முன்னெடுப்பதே.ஆனால் நாட்டின் தலைவர் ஜனாதிபதி மகிந்த தமிழர்,சிங்களவர் என பாரபட்சம் பார்க்கின்றார்.
 
 
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இணக்க அரசியல் பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா அவர் குறிப்பிடுகையில்,எத்தனையோ மில்லியன் அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சந்திரகுமார் குறிப்பிடுகின்றார் 9,10,11,12,13,14 ஆம் ஆண்டினை கூட்டி ஒரு பெருந் தொகையினை காட்டுகின்றார்.  தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருக்கிறது.தமிழ் மக்களை பின்னடைவைச் செய்வதற்கான வழிவகைகளையும் செய்கின்றனர்.ஜனாதிபதி மகிந்தவுக்கும்,அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர்.
 
மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த முறை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் புதிதாக
முன்மொழிந்தார்   அவர்களுக்கு 2500 சம்பளம் வழங்கப்பபோவதாக ஆனால் வடக்கு மாகாண சபையும் அவர்களுக்கு ஏற்கனவே 2500 சம்பளமாக வழங்கி வருகின்றது அவரும் தற்போது வழங்கவுள்ளார்.ஏனென்றால் இது தேர்தலுக்கான வரவு செலவு திட்டம் காரணம் முன்பள்ளி ஆசிரியர்களின் வாக்குகளும் ஜனாதிபதிக்கு தேவை என்பதே ஆகும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிற்கான வழிகள் யாவும் முடக்கப்பட்டு விட்டன. வடக்கு மாகாண சபை பிரதேசங்களுக்கு அபிவிருத்தி வங்கி என்ற உண்டு ஆனால் வடமாகாண சபைக்கு அந்த அபிவிருத்தி வங்கிக்கு அனுமதிக்கிறார்கள் இல்லை.அப்படி இருந்தால் புலம்பெயர் தமிழர்கள் இதனை பெற்று தமது இடங்களை அபிவிருத்தி செய்யலாம்.ஆனால் செய்ய முடியாத சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
 
7(35).jpg
 
3(119).jpg
 
6(51).jpg
 
5(73).jpg
 
4(91).jpg
 
2(135).jpg
 
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=410613622008535582

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு லேட்டாவா வாணி விழா வைப்பீங்க? கொஞ்சம் பொறுத்திருந்தா பொங்கல் விழாவையும் சேர்த்தே செஞ்சிருக்கலாம்மே :)

யாழ்ப்பாணத்தில், எலிஃன்ட் பிரான்ட் ஐஸ் கிரீம் விற்பனை யில் தனக்காக பினாமி  ஒருவரை நியமிச்சு உள்ளூர் ஐஸ் கிரீம்களில் மனிசக் கக்கா கலந்து இருக்கு என்று செய்தி போட்டு சுகாதார பிரிவின் மூலம் மூட வைத்தவ எம்பி  சரவணன் எம்பி தானே? அப்படி ஒரு கதை யாழின் ஊடகவியலாளர் மத்தியில் போய்கொண்டு இருக்கு?

இவர் டக்கியை விட பக்கா கில்லாடி .

யாழ்பாணத்தில் பல முதலீடுகள் செய்துவைத்திருக்கின்றார்.

 

இப்போ நாட்டில் அநேகமாகவர்கள் அகப்பட்டதை சுருட்டுவதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பதாக நண்பர் சொன்னார் .இந்த விடயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்ல முடியாது.பாடசாலை நிர்வாகங்கள் கூட  மிக மோசமாக இயங்குவதாக குறைப்பட்டார்.எங்கும் காசு எதிலும் காசு . 

 

உதயன் பத்திரிகை ஆரம்பித்தபோது பதிப்பசிரியராக இருந்த ஈ.சரவணபவனும் இவரும் ஒருவரா? (முன்பு வீரேகேசரி போன்றவற்றிற்கு நிருபராக இருந்தவர். உதயனில் குருமுனி, உளியன் போன்ற பெயர்களில் பத்திகள் எழுதினார்) 

  • கருத்துக்கள உறவுகள்

அவரேதான் ஈசன். ஷப்ரா அல்லது ஹோம் பினான்ஸ் எண்டு ஒரு வட்டிக்கடை தொடங்கி யாழ்மக்களுக்கு நாமம்மும் போட்டவர் எண்டி நினைக்கிறேன்.

Edited by goshan_che

யாழ்பாணத்தில் மாத்திரம் அல்ல இவருக்கு கொழும்பிலும் பல அடுக்கு மாடி வீடுகள் இருக்கு. இவர் shabra unico finance நடத்தி யாழ் மக்களுக்கு நாம்ம் போட்டவர். ஒரு காலத்தில் ரணிலின் மிக நெருங்கிய நண்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

கரிச்சட்டி புறச்சட்டியைப் பார்த்துக் கறுப்பு என்று சொல்லிவிட்டுப் போகட்டும். புறச்சட்டி கரிச்சட்டியைப் பார்த்துக் கறுப்பு என்று சொல்லிவிட்டுப் போகட்டும் கவலையில்லை. ஏதோ கறிகாச்ச அவை உதவுவதையும் மறுக்க முடியாது. ஆனால் இந்தச் சட்டிகள் தமிழர் தலையில் கவுழ்ந்து கிடப்பதைத்தான பொறுக்கமுடியவில்லை. :(

4(91).jpg

 

 

காலில பெரிய சலங்கையையும் கட்டி.... சின்னனுகளப் பார்க்க சந்தோசமா இருக்கு.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.