Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

சூறாவளியும், புயலும், சுனாமியும் இணைந்து தாக்கினால் எப்படி இருக்கும்... இப்படித்தான் இருக்கும்!

 

கான்பெரா: கான்பெரா மைதானம் இன்று கதிலங்கிப் போய் விட்டது கிறிஸ் கெய்ல் அடித்த அடியில். முதல் ஓவரில் தங்களை ரொம்பவே மிரட்டி விட்ட ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை அடுத்த 49 ஓவர்களிலும் நையப்புடைத்து விட்டனர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கெய்லும், சாமுவேல்ஸும். ஸமித்தை முதல் ஓவரின் 2வது பந்தில் வீழ்த்திய கையோடு கெய்லுக்கும் குறி வைத்த ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை கெய்ல் சொல்லி வைத்து கில்லி மாதிரி அடித்து நொறுக்கி விட்டார் தனது பேட்டால். இன்று கெய்ல் ஆடிய ஆட்டம், ஒரு புயலுக்கு நிகரானதாக இருந்தது. சூறாவளியும், புயலும், சுனாமியும் இணைந்து வந்து தாக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நிலை குலைந்து போனது ஜிம்பாப்வே பந்து வீச்சு.

 

40 ஆண்டு காலத்தில் இல்லாத சாதனை கடந்த 40- ஆண்டுகளில் படைக்கப்படாத, பார்த்திராத சாதனையை இன்று கெய்ல் படைத்தார். இதுதான் உலகக் கோப்பையில் போடப்பட்ட முதல் இரட்டை சதமாகும்.

 

138 பந்துகளில் 138 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் கெய்ல். இது ஒரு உலகக் கோப்பை சாதனையாகும்.

 

சச்சின் போட்ட இதே நாளில் கடந்த 2010ம் ஆண்டு இதே நாளில்தான் குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் போட்டு சாதனை படைத்திருந்தார். அதே நாளில் கெய்ல், புதிய உலக சாதனை படைத்து விட்டார்.

 

அதி வேகமான இரட்டை சதம் கெய்ல் இன்று போட்டது அதி வேகமான இரட்டை சதமும் கூட. 138 பந்துகளில் இரட்டை சதத்தை அவர் போட்டார். இதற்கு முன்பு 140 பந்துகளில் ஷேவாக் இரட்டை சதம் போட்டதே சாதனையாக இருந்தது.

 

சதத்திலும் சாதனை கெய்ல் ஒருவர்தான், டுவென்டி 20யில் சதம், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த சாதனையை வைத்திருக்கிறார்.

 

உலகக் கோப்பையில் அதிகபட்சம் இதுதான் கெய்ல் போட்ட இந்த இரட்டை சதம்தான் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ட ரன் குவிப்பாகும்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இது சாதனை அதேபோல ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோரும் இதுவே.

3வது அதிகபட்ச ஸ்கோர் ஒரு நாள் கிரிக்கெட் வரலார்றில் எடுக்கப்பட்ட 3வது உயர்ந்தபட்ச ஸ்கோரும் இதுவேயாகும்.

 

இந்தியர் அல்லாத முதல் இரட்டை சதம் இதுவரை இந்தியர்கள் மட்டுமே ஒரு நாள் போட்டியில் சதம் அடித்துள்ளனர். அதைத் தாண்டி இரட்டை சதம் போட்ட முதல் இந்தியர் அலலாத வீரர் கெய்ல் என்ற புதிய சாதனை இன்று படைக்கப்பட்டது.

5வது முறையாக ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் போடப்பட்டது இது 5வது முறையாகும். இதற்கு முன்பு ரோஹித் சர்மா 2 முறையும், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் தலா ஒரு முறையும் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் போட்டுள்ளனர்.

 

அடேங்கப்பா சிக்ஸ் சாதனை இந்த போட்டியில் கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 49.4 ஓவர்களில் 2வது விக்கெட்டுக்கு கெயல் - சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்களைச் சேர்த்தது. இது ஒரு நாள் கிரிக்கெட்டில் போடப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

 

கடைசி பந்தில் அவுட் இன்றைய போட்டியில் முதல் ஓவரில் ஆரம்பித்து கடைசி ஓவர் வரை நின்று வெளுத்து விட்டார் கெய்ல். கடைசிப் பந்தில்தான் அவர் ஆட்டமிழந்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-list-records-broken-chris-gayle-221601.html

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2011 இறுதி ஆட்டத்தில் பெற்ற சதத்தைப் போன்று ஆப்கானுக்கு எதிரான சதமும் விசேடமானது – மஹேல ஜயவர்தன
 

 

இந்­தி­யா­வுக்கு எதி­ராக 2011 உலகக் கிண்ண இறுதி ஆட்­டத்தில் சதம் குவித்­த­போது அடைந்த மகிழ்ச்­சியைப் போன்று ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ரான நடப்பு உலகக் கிண்ணப் போட்­டி­யின்­போது பெற்ற சதமும் மகிழ்ச்சி தரு­வ­தாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜய­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

ஆப்­கா­னிஸ்­தா­னினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 233 ஓட்­டங் கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போத 3 விக்கெட் இழப்­புக்கு 18 ஓட்­டங்கள் என்ற இக்­கட்­டான நிலையில் களம் புகுந்த மஹேல ஜய­வர்­தன மிகவும் பொறு­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டினார்.

 

இதே­வேளை மேலும் ஒரு விக்கெட் சரிய இலங்­கையின் மொத்த எண்­ணிக்கை 51 ஓட்­டங்­க­ளாக இருந்­தது.

ஆனால் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுடன் இணைந்து ஐந்­தா­வது விக்­கெட்டில் 126 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணியின் வெற்­றிக்கு வித்­திட்­டி­ருந்தார்.

‘‘உலகக் கிண்ண இறுதி ஆட்ட சதத்தைப் போன்றே இந்த சதத்­தையும் நான் வெகு­வாக இர­சித்தேன். மிகவும் கடு­மை­யான நிலை­மையில் எனது மனதை ஒரு­நி­லைப்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டிய கட்­டா­யத்தில் இருந்தேன். அது எனக்கு கைகொ­டுத்­த­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றேன்.

 

போட்­டியில் வெற்­றி­பெறும் வரை ஆடு­க­ளத்தில் இருக்­க­வேண்டும் என நான் நினைத்தேன். ஆனால் துர­தி­ர்ஷ்­ட­வ­ச­மாக அது கைகூ­ட­வில்லை. ஒவ்­வொரு நகர்­வையும் அடி­யையும் திட­ம­ன­துடன் செயற்­ப­டுத்­தினேன்.

 

அண்­மைக்­கா­ல­மாக நான் ஆட்­ட­மி­ழக்கும் விதம் ஏற்­பு­டை­ய­தல்ல. அண்­மைக்­கா­ல­மாக நான் எனது வழ­மை­யான விளை­யாட்டை விளை­யா­டு­வ­தில்லை’’ என மஹேல ஜய­வர்­தன குறிப்­பிட்­டுள்ளார்.

 

‘‘ஓர் அணி மொத்த எண்­ணிக்­கையைத் தக்­க­வைக்க முயற்­சிக்­கும்­போது மேல­திக முயற்­சி­களில் இறங்­கு­வ­துண்டு.

ஆப்­கா­னிஸ்­தானும் அத­னையே கடைப்­பி­டித்­தது. நாங்­களும் அதே­போன்ற உணர்­வு­களை வெளிப்­ப­டுத்தி எதி­ர­ ணி­களைக் கட்­டுப்­ப­டுத்­த­வேண்டும். தனிப்­பட்ட ஒவ்­வொ ­ரு­வரும் அதற்­கான முயற்­சியில் இறங்­க­வேண்டும். இது உலகக் கிண்ணப் போட்டி. எனவே ஒவ்­வொ­ரு­வரும் மேல­திக முயற்­சியில் ஈடு­ப­டு­வது அவ­சியம்’’ என அவர் மேலும் கூறி­யுள்ளார்.

 

''நாம் யாரோடு விளை­யா­டு­கின்றோம் என்­பது விட­ய­மல்ல. ஆனால் எதி­ர­ணி­களை வெற்­றி­கொள்­வதற்கு திட­ மனம் கொள்­ள­வேண்டும். அதனை நாங்கள் இந்தப் போட் டியில் வெளிப்­ப­டுத்­தினோம்.

 

மிகவும் கடு­மை­யான நிலை ­யி­லி­ருந்து எங்­க­ளுக்கு அவற்றை எவ்­வாறு அணுக வேண் டும் என்­பதை அறிந்து வைத்­துள்ளோம்’’ எனவும் மஹேல தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, அணியின் விளை­யாட்டுத் தரா­த­ரத்தை வெகு­வாக முன்­னேற்ற வேண்டும் என அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறி­யுள்ளார்.

 

‘‘ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான போட்­டியில் வெற்­றி­யீட்­டி­யமை மன­துக்கு ஆறு­த­லாக இருக்­கின்­றது. வாழ்வா சாவா என்ற போராட்­டத்தை அப் போட்டி ஏற்­ப­டுத்­தி­யது. அவர்­க­ளது ஆரம்பம் சிறப்­பாக அமைந்தது. ஆனால் நாங்கள் போராடி வெற்றியீட்டினோம். அணியின் வெற்றிக்காக மஹேலவுடன் தொடர்ந்து துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை அறிந்திருந்தேன்.

 

மஹேலவின் சதமும் அவருடன் பகிர்ந்த 126 ஓட்டங்களும் பின்னர் திசரவின் அதிரடியும் எமது வெற்றிக்கு உதவின’’ என்றார் மெத்யூஸ்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9014#sthash.CZdEtTQv.dpuf

  • தொடங்கியவர்

ZIM 177/5 after 28 overs

  • தொடங்கியவர்

254/7 after 38 overs

  • தொடங்கியவர்

ரோஹித் சர்மாவின் 2 இரட்டைச் சதம் தாக்கம் ஏற்படுத்தியது: கிறிஸ் கெய்ல்
  

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்த கிறிஸ் கெய்ல், தனக்கு உத்வேகம் அளித்தது ரோஹித் சர்மாவின் 2 இரட்டைச் சதங்களே என்று கூறியுள்ளார்.

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று கான்பராவில் கிறிஸ் கெய்ல் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 215 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து 17 சிக்சர்கள் என்று மற்றொரு சாதனையை அவர் ஏற்படுத்தும் முயற்சியில் அவுட் ஆனார்.

 

இந்நிலையில் அவர் இரட்டைச் சதம் குறித்து கூறியிருப்பதாவது: “முதல் இரட்டைச் சதம் எடுத்தது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ரோஹித் சர்மா எப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 2 இரட்டைச் சதங்களை எடுத்தாரோ அப்போது முதல் நாமும் ஒரு இரட்டைச் சதத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது.

எனக்கு நானே கேட்டுக் கொண்டேன், ‘ஏன் சீரியசாக ஆட முடியாதா?’ என்று. இந்த இரட்டை சதத்திற்காக கடவுளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

 

நான் ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பினர். என் செல்பேசி மற்றும் ட்விட்டர் கணக்குகளில் எனக்கு சேதிகள் வந்தவண்ணம் இருந்தன.

இப்படிப்பட்ட நெருக்கடியை நான் இதுவரை என் வாழ்நாளில் கண்டதில்லை. கடைசியில் அவர்கள் பேசுவதற்கு ஒரு இன்னிங்ஸை ஆடிக் கொடுத்து விட்டேன்.

தொடக்கத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்தது. பிட்சில் பந்துகள் கொஞ்சம் தாழ்வாக வந்தன. நான் சவால் என்ற காளையின் கொம்புகளைப் பிடித்துப் போராடினேன். அதன் பிறகு பவுலரை ‘பிக்’ செய்து அடிக்கத் தொடங்கினேன்.

 

நான் பல சமயங்களில் காயத்தினால் அவதியுற்று வந்துள்ளேன் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நானும் இனி இளம் வயதினன் அல்ல. வயது என்னுடன் சேர்ந்தே அதிகமாகி வருகிறது.

 

ஆனாலும், இன்று ஆடிய ஆட்டத்தின் உத்வேகத்தை நான் தவற விட விரும்பவில்லை, தென்னாப்பிரிக்கா போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”

இவ்வாறு கூறினார் கெய்ல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D/article6929201.ece

  • தொடங்கியவர்

நம்பிக்கையுடன் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே தோல்வி
 

 

கான்பராவில் நடைபெற்ற உலகக் கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி ஜிம்பாப்வேயை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆட்டம் லேசான மழையால் பாதிக்கப்பட்டதால் ஜிம்பாப்வேக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 48 ஓவர்களில் 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜிம்பாப்வே இந்த இலக்கை நம்பிக்கையுடன் துரத்தியது. ஆனாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டிருக்க அந்த அணி கடைசியில் 44.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

சத நாயகர்கள் கெய்ல், சாமுயெல்ஸின் அதிர்ஷ்டம்

முன்னதாக மே.இ.தீவுகள் டாஸில் வென்று முதல் ஓவரின் 2-வது பந்தில் டிவைன் ஸ்மித் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பிறகு பன்யங்கராவின் இதே முதல் ஓவரின் 4-வது பந்தில் கிறிஸ் கெய்ல் பேடில் நேராக வாங்கினார். நடுவர் நாட் அவுட் என்றார். ஆனால் ரிப்ளேயில் பந்து ஸ்டம்புகளைத் தாக்கும் போல்தான் தெரிந்தது. ஆனாலும் நாட் அவுட் தீர்ப்பே வென்றது. மிகவும் நெருக்கமான ஒரு அவுட் கோரலில் கெய்ல் தப்பித்தார். ஜிம்பாப்வே கடும் ஏமாற்றமடைந்தது.

 

ஆட்டத்தின் 17-வது ஓவரில் சிகந்தர் ரசா வீச 27 ரன்களில் இருந்த சாமுயெல்ஸ் தப்பினார். அந்த ஓவரில் 5 பந்துகளில் ரன் வரவில்லை, 6-வது பந்தை அவர் வைடாக வீசினார். அதனால் வீசப்பட்ட இன்னொரு 6-வது பந்தில் சாமுயெல்ஸ் நேராக பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். அந்த எளிதான வாய்ப்பு தவற விடப்பட்டது.

அதன் பிறகு கெய்லும், சாமுயெல்ஸும் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி ஸ்கோரை 40-வது ஓவரில் 220/1 என்று உயர்த்தினர். கடைசி 10 ஓவர்களில் 152 ரன்கள் விளாசப்பட்டது. ஒருநாள் போட்டி, உலகக்கோப்பை சாதனைகள் சில முறியடிக்கப்பட்டன. மே.இ.தீவுகள் 372/2 என்று மிகப்பெரிய இலக்கை எட்டியது.

 

டக்வொர்த் முறைப்படி 48 ஓவர்களில் 363 வெற்றி இலக்கு

ஜிம்பாப்வே அணி மிகப்பெரிய இலக்கை ஓரளவுக்குத் தன்னம்பிக்கையுடனேயே விரட்டியது. தொடக்கத்தில் சிகந்தர் ரஸா நம்பிக்கை அளித்தார். 20 பந்துகளில் அவர் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து 8-வது ஓவரில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆனார். 8 ஓவர்களில் ஜிம்பாப்வே 46/3 என்று இருந்தது.

 

அதன் பிறகு பிரெண்டன் டெய்லர், சான் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சவால் அளித்தனர். இருவரும் இணைந்து 12 ஓவர்களில் 80 ரன்களை விளாசினர். டெய்லர் 48 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து சாமுயெல்ஸ் பந்தில் ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரன்விகிதம் அப்போது முதல் 6 ரன்களுக்கு மேலேயே ஜிம்பாப்வேயினால் பராமரிக்கப்பட்டு வந்தது.

 

வில்லியம்ஸ் 61 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்தில் வெளியேறினார். இவரும், கிரெய்க் எர்வினும் இணைந்து 7 ஓவர்களில் 51 ரன்களைச் சேர்த்தனர்.

எர்வின் அதன் பிறகு அட்டகாசமான சில ஷாட்களை அடித்து மட்சிகென்யேரியுடன் (19) இணைந்து 6 ஓவர்களில் 49 ரன்களைச் சேர்த்தார். எர்வின் 41 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து கெய்ல் பந்தில் பவுல்டு ஆனார்.

 

33.4 ஓவர்களில் 226/6 என்று ஆன ஜிம்பாப்வே அதன் பிறகு ஆட ஆளில்லாமல் 44.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வேயின் ரன் விகிதம் 6.49 என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு நல்ல தன்னம்பிக்கையுடன் கூடிய விரட்டல்.

மே.இ,தீவு அணியில் டெய்லர், ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாதனை நாயகன் கிறிஸ் கெய்ல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனும் கிறிஸ் கெய்லே.

பந்துவீச்சில் சோடை போனாலும் பேட்டிங்கில் தங்கள் அணி ஒரு அபாயகரமான அணியே என்பதை ஜிம்பாப்வே மீண்டும் ஒரு முறை அறிவித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6929368.ece

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ் கேய்ல் கூட 0 இல் இருக்கும்போது LBW முறையில் ஆட்டமிழக்க இருந்தார். ஆனால் பந்து விக்கட்டுக்கு சற்று மேலாக செல்வதாக Hawk Eye இல் காட்டியது. இதனால் கேய்ல் தப்பிப் பிழைத்தார். ஆனால் நேரடியாகப் பார்த்தவர்களுக்கு அது அவுட் போலவே தோன்றியது. :huh: வர்ணனை செய்த ஷேன் வோர்னினாலும் நம்பமுடியவில்லை.. யாரோ தவறான Button ஐ அழுத்திவிட்டார்கள் என்று பகிடியுடன் அங்கலாய்த்தார்.. :lol:

  • தொடங்கியவர்

நானும் அது அவுட் என்று தான் நினைத்தேன்.

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா அணி வீரர் ஜீவன் மென்டிஸ் பயிற்­ச்சி போது காயமடைந்துள்ளார். ICC டாக்டர்களின் அறிக்கைக்கு  காத்திருக்கிறார்கள். அவருக்கு பதிலாக ஆடுவதுக்கு  உபுல் தராங்க ஆஸ்திரேலியா பயணமாகியுள்ளார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விமர்சகர்களைத் தவறென்று நிரூபித்த அஸ்வின், ஜடேஜா: விராட் கோலி கருத்து
 

 

அயல்நாட்டு ஆட்டக்களங்களில் அஸ்வின், மற்றும் ஜடேஜாவின் திறமைகளைக் குறைவாக மதிப்பிட்ட விமர்ச்கர்களின் கருத்துகளை தவறென்று இவர்கள் நிரூபித்துள்ளதாக விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

 

இதுவரை, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் அஸ்வின், ஜடேஜா முறையே 4 மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். 36.2 ஓவர்கள் வீசி 175 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். சிக்கன விகிதம் ஓவருக்கு 4.83.

 

இந்நிலையில் அணியின் துணை கேப்டன் விராட் கோலி இவர்கள் இருவரையும் ஆதரித்துக் கூறும்போது, “இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போதும் இவர்கள் இருவரும் இந்திய அணியின் முக்கிய வீச்சாளர்களாக திகழ்ந்தனர். ஜடேஜா சிறந்த வீச்சாளர் என்று தேர்வு செய்யப்பட்டார். அந்த நிலையில் ஸ்பின்னர்கள் இந்திய அணியின் சிறந்த வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று ஒருவரும் கருதவில்லை.

 

அப்போது முதல் விமர்சகர்கள் கருத்தை தவறென்று இருவரும் நிரூபித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

முதலில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற மனநிலையில் ஆட வேண்டும். அஸ்வின் அந்த மனநிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக வீசினார். ஜடேஜா எப்போதும் தாக்குதல் குணமுள்ள வீச்சாளர்தான், பிட்சில் கொஞ்சம் உதவி இருந்தால் அவர் அபாயகரமான வீச்சாளராகத் திகழ்வார். இதனை சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பார்த்தோம்.

 

ஆஸ்திரேலியாவில் மிக நீளமான பவுண்டரிகள், பக்கவாட்டிலும் நீளமான பவுண்டரிகள் எனவே கொஞ்சம் புத்தி சாதுரியத்துடன் வீசினால் பலன் நிச்சயம் உண்டு.

சில ஆண்டுகளாக அஸ்வின், ஜடேஜா நமது முக்கிய வீச்சாளர்களாக இருந்து வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் கூட இவர்கள் இருவரும் மோசமாக ஆடினார்கள் என்று கூற முடியாது.

 

இவர்கள் இருவரது பந்துவீச்சு கூட்டணி இந்திய வெற்றிக்கு மிக முக்கியம், இவர்களில் யார் ஆக்ரோஷம் காட்டுவது யார்? ஆக்ரோஷமாக வீசுவதற்கு எதிர்முனையில் உதவிகரமாக வீசப்போவது யார் என்பதை இவர்கள் இருவரும் முடிவெடுப்பது அவசியம்.

 

இந்த முடிவை எடுப்பதில் கேப்டன் தோனி எப்போதும் உதவி புரிவார். எனவே இவர்கள் இருவரும் மிக முக்கியமான உறுப்பினர்கள் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக அஸ்வின், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வீசக்கூடியவர், அப்படி வீசும்போது அவரிடமிருந்து திறமைகள் வெளிப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்வின் பேட்ஸ்மென்களை ஆதிக்கம் செலுத்தினார். முதல் போட்டியில் அவர் வீசிய மெய்டன் ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்றால் அதுதான் உண்மை.

 

இதே மனநிலையில் அவர் உலகக்கோப்பை தொடர் முழுதும் வீசுவார் என்று எதிர்பார்க்கிறோம்.” இவ்வாறு கூறினார் கோலி.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6928998.ece

  • தொடங்கியவர்

இன்று அயர்லாந்து எதிர் ஜக்கிய அரபு அமீரகம் போட்டி

  • தொடங்கியவர்

அணியிலிருந்து ஜீவன் மெண்டிஸ் நீக்கம் : மீண்டும் அழைக்கப்பட்டார் தரங்க
 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணி வீரர் உபுல் தரங்கவை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துள்ளது இலங்கை அணி.


தற்போது இலங்கை சார்பில் உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றியுள்ள ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக உபுல் தரங்க அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவுக்குழுவுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்தே உபுல் தரங்க அவுஸ்திரேலியா நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

நாளை வியாழக்கிழமை இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2015/02/25/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

 


உலகக் கிண்ண குழாமில் தரங்க : ஐ.சி.சி. அனுமதி
 

 

தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜீவன் மென்டிஸ் க்கு பதிலாக உப்புல் தரங்கவை இலங்கை குழாமில் இணைப்பதற்கு  ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.

நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை அணி வீரர் ஜீவன் மென்டிஸ் க்கு பதிலாக உபுல் தரங்கவை குழாமில் இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தொழில்நுட்பக் குழு அனுமதியளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

கடந்த செவ்வாய்க்கிழமை ஜீவன் மென்டிஸ் பயிற்சியில் ஈடுபட்டடிருந்த வேளை தசைப்பிடிப்பிற்குள்ளாயிருந்தார். இதனால் அவருக்கு ஏனைய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையேற்பட்டது.

 

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையால் மென்டிஸின் வெற்றிடத்திற்கு உபுல் தரங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு உலகக் கிண்ண தொழில்நுட்பக் குழு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

30 வயதுடைய உபுல் தரங்க 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,339 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 13 சதம் 28 அரைச் சதம் உள்ளடங்கும். அவரது ஓட்டசராசரி 33.57 ஆகும்.

 

இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க கடந்த 2014 நவம்பர் மாதம் கட்டார்கில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில்  இறுதியாக விளையாடியுள்ளார்.

 

இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம்திகதி பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் உபுல் தரங்க களமிறங்குவார் .

 

 

http://www.virakesari.lk/articles/2015/02/25/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

போன போட்டியிலும் நல்லாத்தானே இருந்தது ஆள்?! தசைப்பிடிப்பு எண்டு கதை விடுறாங்களா??

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்தியது அயர்லாந்து

 

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடும் சவால் அளித்த யு.ஏ.இ. அணியை பரபரப்பான முறையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது அயர்லாந்து.

 

278 ரன்கள் இலக்கைத் துரத்திய அயர்லாந்து ஒரு நேரத்தில் 38.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. விக்கெட் கீப்பர் வில்சன் மட்டுமே ஒரு முனையில் நிலைத்து ஆட அவருடன் அதன் பிறகு அதிரடி மன்னன் கெவின் ஓ பிரையன் இணைந்தார். 6 ஓவர்களில் 72 ரன்கள் விளாசப்பட்டது.

கெவின் ஓ பிரையன் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 ரன்களை விளாசித் தள்ளினார். வில்சன் அபாரமாக விளையாடி 69 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார். முதலில் 97/4 என்ற நிலையில் வில்சன், பால்பர்னி ஜோடி 13 ஓவர்களில் 74 ரன்களைச் சேர்த்ததும் அயர்லாந்து வெற்றிக்கான முதல் முன்னெடுப்பாக அமைந்தது.

 

 

ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகும் கூட அடுத்தடுத்து யு.ஏ.இ. ஓயாது சவால் அளித்து மேலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 267/8 என்ற நிலையில் 15 பந்துகளில் 12 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை இருந்த போது ஆட்டம் எவர் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலையில், 49-வது ஓவரின் 5-வது பந்தை அம்ஜ்த் நவேத் யார்க்கராக வீசாமல் ஸ்லோ பந்தாக வீச டாக்ரெல் அதனை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஆளில்லா இடத்தில் பவுண்டரி விளாசினார்.

 

அந்த முக்கிய ஓவரில் 7 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்றானது. கடைசி ஓவரில் முதல் பந்தை கியூசக் சிங்கிள் எடுக்க, 2-வது பந்தை கவருக்கும் எக்ஸ்ட்ரா கவருக்கும் இடையே அடித்தார், சரியாக அடிக்கவில்லை, பீல்டர்கள் இருவர் கேட்ச் பிடிக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை 2 ரன்கள் ஓடினார் டாக்ரெல், அயர்லாந்து கொண்டாட்டம் தொடங்கியது.

 

அயர்லாந்து 2 வெற்றிகளுடன் தற்போது 4 புள்ளிகள் பெற்று காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

 

அபாரமாக பந்துவீசி அயராது முயற்சி செய்த யு.ஏ.இ.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த ஆட்டமாக இந்தப் போட்டியை வர்ணிக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவேதின் பயிற்சியில் யு.ஏ.இ. அருமையாக பந்துவீசியது. குறிப்பாக அம்ஜத் ஜாவேத் பந்துவீச்சு முறை அகிப் ஜாவேதை நினைவுகூர்வதாக அமைந்தது.

 

உண்மையில் ஆட்ட நாயகன் விருது அம்ஜத் ஜாவேதுக்கே சென்றிருக்க வேண்டும். காரணம் அவர் பேட்டிங்கில் முக்கியமான 7-வது விக்கெட் உலககோப்பை சாதனை கூட்டணியில் 35 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து பங்களிப்பு செய்ததோடு, பந்துவீச்சில் எட் ஜாய்ஸ், கெவின் ஓ பிரையன், மூனி ஆகியோரது விக்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் கைப்பற்றியதோடு, 80 ரன்கள் எடுத்து அயர்லாந்து வெற்றிக்கு வித்திட்ட ஜி.சி.வில்சனை வெளியேற்ற ஒரு அருமையான கேட்சையும் பிடித்தார்.

உண்மையில் ஒரு ஆல்ரவுண்ட் திறமைதான் அம்ஜத் ஜாவேத். ஆனால் ஆட்ட நாயகன் விருது வெற்றி அணிக்கே செல்ல வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் படி வில்சனுக்குச் சென்றது.

 

முதலில் 131/6 என்ற நிலையிலிருந்து அன்வரின் சதத்துடன் 278 ரன்கள் குவித்து இதனை ஒரு சவாலாக மாற்றிய பெருமை யு.ஏ.இ.யின் திறமைக்குச் சான்று.

அதன் பிறகு அயர்லாந்தை கதிகலங்க அடித்த பந்துவீச்சு. தொடக்கத்தில் யு.ஏ.இ. வீச்சாளர் குருகே பால் ஸ்டர்லிங்கை 3 ரன்களில் வீழ்த்தினார். அவர் 7 ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் காயமடைந்து பந்துவீச முடியாமல் போனது யு.ஏ.இ.க்கு ஒரு பின்னடைவே.

முதல் விக்கெட்டுக்குப் பிறகு எட் ஜாய்ஸ், போர்ட்டர்ஃபீல்ட் இணைந்து ஸ்கோரை இறுக்கமான பந்துவீச்சுக்கு மத்தியில் 72 ரன்களுக்கு உயர்த்தினர், ஆனால் இதற்கு 17 ஓவர்களை இவர்கள் எடுத்துக் கொண்டனர்.

 

ஜாய்ஸ் முதலில் வெளியேற, போர்ட்டர்ஃபீல்டை 43 வயது ஸ்பின்னர் மொகமது டாகீர் கைப்பற்றினார். போர்டர்ஃபீல்ட் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து நல்ல முறையில் ஸ்பின்னர்களையும், தூஸ்ரா போன்ற நேர் பந்துகளையும் வீசி அவர் பிரச்சினை கொடுக்க நியால் ஓ பிரையன் 17 ரன்களில் எல்.பி.ஆனார். இவர் ரிவியூ செய்தும் பயனில்லை. நேர் எல்.பி.அது. 9 ஓவர்கள் வீசிய டாகீர் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

முதல் வெற்றிக் கூட்டணி: வில்சன், பால்பர்னி

97/4 என்ற நிலையில் வில்சன், பால்பர்னி கூட்டணி அமைத்தனர். இருவரும் இணைந்து 13 ஓவர்களில் 74 ரன்களைச் சேர்த்தனர். இந்த நிலையில் யு.ஏ.இ. கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், இந்த கூட்டணியை உடைத்திருந்தால் யு.ஏ.இ. வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு அதிகமாகியிருக்கும். பால்பர்னி 30 ரன்கள் எடுத்தார். இதில் அவர் ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்திருந்தார்.இவர் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் மொகமது நவீத் கைப்பற்றினார். இப்போது அயர்லாந்துக்கு உண்மையில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால்...

171/5 என்ற நிலையில் கெவின் ஓ பிரையன், வில்சன் அதிரடிக் கூட்டணி; கெவின் ஓ பிரையனுக்கு விடப்பட்ட கேட்ச்:

68 பந்துகளில் 108 ரன்கள் தேவை என்ற நிலையில் வில்சனுடன், கெவின் ஓ பிரையன் இணைந்தார். இறங்கியவுடனேயே கெவின் 2 பவுண்டரிகளை விளாசினார். இரண்டும் சக்தி வாய்ந்த பவுண்டரிகள்.

 

24 ரன்களை சில பந்துகளில் எடுத்து விட்ட கெவினுக்கு யு.ஏ.இ. கேட்ச் ஒன்றை கோட்டை விட்டது. அதிர்ஷ்டம் இல்லாத பவுலர் மீண்டும் அம்ஜத் ஜாவேத். பந்தை சற்றே இழுத்து விட கெவின் அதனை லாங் ஆனில் அடித்தார் அது மிஸ் ஹிட் அங்கு நின்று கொண்டிருந்த பதிலி வீரர் நசீர் அஜீஸ் கேட்சைக் கோட்டைவிட்டார். இது ஒரு பெரிய பின்னடைவாகப் போய்விட்டது. அவர் கேட்சை அல்ல ஆட்டத்தைக் கோட்டைவிட்டுள்ளார்.

 

அதன் பிறகு 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் (ஒரு சிக்ஸ் தோனி பாணி ஷாட்) விளாசி 25 பந்துகளில் 50 ரன்களை எட்டினார் கெவின். அவர் இறங்கும் போது 68 பந்துகளில் 108 என்று இருந்த இலக்கு ஆட்டமிழந்த பிறகு 32 பந்துகளில் 36 என்று ஆனது. அதன் பிறகும் அயராது முயன்றது யு,.ஏ.இ. ஆனால் அயர்லாந்து தன் அனுபவத்தினால் வெற்றியை 4 பந்துகள் மீதம் வைத்துப் பெற்றது.

 

தோல்வி பற்றி யு.ஏ.இ. கேப்டன் டாகீர் கூறும்போது, “35 ஒவர்கள் வரை சிறப்பாக வீசினோம், அதன் பிறகு லேசான பனிப்பொழிவினால் பந்து வழுக்கத் தொடங்கியது. இது ஒரு அருமையான பேட்டிங் பிட்ச். அயர்லாந்து நன்றாக விளையாடினர்.” என்றார்
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8F%E0%AE%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6933197.ece

  • தொடங்கியவர்

அயர்லாந்து பேட்ஸ்மென் எட் ஜாய்ஸுக்கு நடந்த விசித்திரம்
 

 

பிரிஸ்பனில் யு.ஏ.இ. அணியை எதிர்த்து அயர்லாந்து அணி ஆடி வருகிறது. இதில் அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸ் பவுல்டு ஆகி அதிசயமாகத் தப்பித்தார்.

அயர்லாந்து அணி 279 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்நிலைய்ல் ஆட்டத்தின் 11-வது ஓவரை யு.ஏ.இ. வேகப்பந்து வீச்சாளர் அம்ஜத் ஜாவேத் வீச வந்தார். எட் ஜாய்ஸ் 16 ரன்களில் ஆடி வந்தார். இவர் இடது கை வீரர்.

 

அந்த ஓவரின் 4-வது பந்து யார்க்கராக அமைய எட் ஜாய்ஸ் பேட்டை இறக்கு முன் பந்து ஸ்டம்பில் அடிக்க பைல்கள் மேலே கிளம்பியது. லைட் எரிந்தது. ஆனால் என்ன அதிசயம்... மேலே எழும்பிய பைல்கள் கனகச்சிதமாக திரும்ப வந்து அமர்க்களமாக ஸ்டம்பின் மேல் உட்கார்ந்தது. பவுல்டு என்று யு.ஏ.இ. கொண்டாடத் தொடங்கிய வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கொண்டாட்டம் சோகமாக ஆனது.

 

அது நாட் அவுட். பைல்கள் முழுதும் பெயர வேண்டும், ஆனால் பெயரவில்லை. ஸ்டம்பில் ஏதோ காந்தசக்தி திடீரென ஏற்பட்டு மேலெழுந்த பைல்கள் திரும்ப இருந்த இடத்துக்கே வந்து அமர்ந்தது.

 

இது போன்று முன்பு சில முறை நடந்தது. இந்த உலகக்கோப்பையில் இப்போது முதன் முறையாக எட் ஜாய்ஸ் பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. ஆனால் அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 19-வது ஓவரில் அவர் அதே அம்ஜத் ஜாவேத் பந்தை விக்கெட் கீப்பர் பாட்டீலிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களில் வெளியேறினார்.

அயர்லாந்து தற்போது 39.1ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவை என்ற நிலையில் கேரி வில்சன் 48 ரன்களுடனும், அதிரடி உ.கோப்பை சத நாயகன் கெவின் ஓ பிரையன் 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6932921.ece

  • தொடங்கியவர்

தடுமாறும் இலங்கையும், தாறுமாறு வங்கதேசமும் நாளை மோதல்!

 

மெல்போர்ன்: உலக கோப்பையில் இதுவரை தடுமாறிக் கொண்டுள்ள இலங்கை, நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 105 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்றது.

 

தோல்வி பெறாத அணி எனவே நடப்பு உலக கோப்பையில் இதுவரை தோல்வி பெறாத அணியாகவே வலம் வருகிறது வங்கதேசம். அத்துடன், கடந்த ஆறு ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்றதில்லை என்ற பெருமையும் உள்ளது.

 

இலங்கை தடுமாற்றம் ஆனால் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் பரிதாபமாக தோற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சிறு அணியான ஆப்கானிஸ்தானிடம் போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெயவர்த்தனே சதம் அடித்ததை தவிர்த்தால், அந்த போட்டியில் இலங்கை வெறும் பூஜ்யமாகவே காட்சியளித்தது.

 

நாளை மோதல் இந்த சூழ்நிலையில், மெல்போர்ன் மைதானத்தில், இந்திய நேரப்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் இலங்கை-வங்கதேசம் சந்திக்கின்றன.

 

நெருக்கடியில் இலங்கை இந்த போட்டியில் பெரிய ரன் ரேட் விகிதத்தில் வெற்றி பெற்றால்தான் இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/preview-world-cup-2015-match-18-sri-lanka-vs-bangladesh-melbourne-221693.html

  • தொடங்கியவர்

பவுல்ட் ஆகியும் பெயில்ஸ் கீழே விழாததால் தப்பிய பேட்ஸ்மேன்..! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்கள் ஷாக்

 

பிரிஸ்பேன்: ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்துக்கு ஒரு அதிருஷ்டம் அடித்தது பார்க்கலாம். அந்த அதிருஷ்ட வாய்ப்பால் எமிரேட்ஸ் வீரர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 278 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்த அயர்லாந்து நிதான தொடக்கத்தை கொடுத்தது. 11வது ஓவரை ஜாவீத் வீசினார்.

352rh9s.jpg

10. 4வது பந்தில் அயர்லாந்தின் இடது கை பேட்ஸ்மேன், எட் ஜாய்ஸ் பேட்டிங் செய்தார். ஜாவீத் வீசிய பந்து பேட்டின் இடைவெளியில் ஊடுருவி ஸ்டம்பில் சென்று தாக்கியது. ஸ்டம்பில் பந்து பட்டதும், அது ஒளிரவும் ஆரம்பித்தது. இதனால், ஜாவித் மற்றும் சக வீரர்கள் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அப்போதுதான் தெரிந்தது, ஸ்டம்பில் இருந்து பெயில்ஸ் எதுவுமே கீழே விழவில்லை என்பது.

 

அவ்வளவுதான் ஏமாற்றமடைந்து முகத்தை தொங்கபோட்டனர் எமிரேட்ஸ் வீரர்கள். இதற்கு அடுத்த பந்தை எட் ஜாய்ஸ், பவுண்டரிக்கு விரட்ட கடுப்பாய்விட்டார் பந்து வீச்சாளர் ஜாவித். இப்படியும் ஒரு அதிருஷ்டமா என்று அயர்லாந்து ரசிகர்கள் வியந்தனர். ஆனால் அந்த அதிருஷ்டம் சிறிது நேரம்தான் நீடித்தது. 18.4வது ஓவரில், அதே ஜாவீத் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பாட்டீலிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களுக்கு ஜாய்ஸ் அவுட் ஆனார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ireland-s-joyce-gets-lucky-breakthrough-221677.html

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை: கிறிஸ் கெயில் சாதனைத் துளிகள்
2nsqr1s.jpg

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அதிவேக இரட்டை சதமடித்தார். அவரது சாதனைத் துளிகள்:

215

ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பை போட்டியின் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் கெயில். முன்னதாக 1996-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் 188 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
*

3

ஒருநாள் போட்டி வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் கெயில். ரோஹித் சர்மா (264), சேவாக் (219) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
*

4

ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவரை 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை சதமடித்துள்ளனர். கெயில் தவிர சச்சின், சேவாக், ரோஹித் சர்மா ஆகியோர் இரட்டை சதமடித்துள்ளனர். இதில் ரோஹித் சர்மா இரு முறை இரட்டை சதமடித்துள்ளார்.
*
138

பந்துகளில் இரட்டை சதமடித்ததன் மூலம் அதிவேக இரட்டை சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் கெயில். முன்னதாக சேவாக் 140 பந்துகளில் இரட்டை சதமடித்ததே சாதனையாக இருந்தது. சச்சின் 147 பந்துகளிலும், ரோஹித் சர்மா 151 மற்றும் 156 பந்துகளிலும் இரட்டை சதமடித்துள்ளனர்.
*
16

சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் கெயில்.
*
372

கெயில்-சாமுவேல்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடி (பார்ட்னர்ஷிப்) என்ற உலக சாதனையை படைத்தது. முன்னதாக 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக சச்சின்-திராவிட் ஜோடி 331 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது.
*

9,136

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியோடு சேர்த்து 9,136 ரன்கள் (266 போட்டிகள்) குவித்துள்ளார் கெயில். இதன்மூலம் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் 2-வது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் வீரர் லாரா ஆவார். லாரா 299 போட்டிகளில் விளையாடி 10,405 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச அளவில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 16-வது வீரர் கெயில் ஆவார்.
*

22

இந்தப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 22 சதங்களை அடித்துள்ள கிறிஸ் கெயில், ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருடன் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
*

372

ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தது மேற்கிந்தியத் தீவுகள். உலகக்கோப்பையில் அடிக்கப் பட்ட 5-வது அதிகபட்ச ஸ்கோர் இது.
*

195

கடைசி 13 ஓவர்களில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 195 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது.

*

1

டெஸ்ட் போட்டியில் முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும், டி20 போட்டியில் சதமும் அடித்த ஒரே வீரர் கிறிஸ் கெயில்தான்.
*

5

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இதுவரை 3,612 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் 5 முறை மட்டுமே இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது.
*

298

பந்துகளை எதிர்கொண்டதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது கெயில்-சாமுவேல்ஸ் ஜோடி. முன்னதாக 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவின் சச்சின்-திராவிட் ஜோடி 278 பந்துகளை எதிர்கொண்டதே சாதனையாக இருந்தது.
*

இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததில்லை: கெயில்

ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து தடுமாறி வந்த கெயில், ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதமடித்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளார்.

இரட்டை சதமடித்த பிறகு அவர் கூறியிருப்பதாவது: சமீப காலமாக பெரிய அளவில் ரன் குவிக்காததால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததில்லை. என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக ஏராளமானோர் நான் ரன் குவிக்க வேண்டும் என டுவிட்டரில் கூறியிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் நினைத்தைப் போலவே அவர்கள் கொண்டாடும் அளவுக்கு ரன் குவித்துவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

30 யார்ட் சர்க்கிளுக்கு வெளியில் 4 வீரர்கள் மட்டுமே நிற்க வேண்டும் என்ற புதிய விதிமுறை வந்த பிறகு நான் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தேன். ஆனால் அந்த புதிய முறையால் ரன் குவிப்பது கொஞ்சம் எளிதாகிவிட்டது. நான் சொன்னதைப் போலவே சதத்தை கடந்துவிட்டால் அதன்பிறகு பெரிய ஸ்கோரை குவித்துவிடுவேன்.

ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்ததிலிருந்தே நானும் அதை செய்ய வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் நினைத்தது போலவே இன்று இரட்டை சதமடித்துவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வயது மற்றும் காயப் பிரச்சினைகள் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. 2013 நவம்பரில் இருந்தே தசைநார் முறிவு மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் போன்றவை அணியில் இடம்பெறாத முடியாத அளவுக்கு என்னை பாதித்துவிட்டன. ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் ரன் சேர்ப்பதற்கு கடுமையாகப் போராடினேன். சற்று பதற்றமும் இருந்தது. நான் பார்முக்கு திரும்புவதற்கு நல்ல வாய்ப்பு தேவைப்பட்டது. அது இன்று கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என்றார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6931989.ece

  • தொடங்கியவர்

5f50fr.jpg

 

நாளை சங்ககாரா விளையாடும் 400 வது ஒரு நாள் போட்டி

  • தொடங்கியவர்

Bangladesh
v
Sri Lanka
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

Afghanistan
v
Scotland
(begins in 1h 59m)  இன்று இரவு இரு போட்டிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டிவி ஏதாவது நேரடி ஒளிபரப்புச் செய்கின்றதா நவீனன்

  • தொடங்கியவர்

அது இந்தியாவில் vijay tv இங்கு இல்லை

Deepam deebox இருந்தால் star tv இல் பார்க்கலாம் ஆங்கில வர்ணனையில்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.crictime.nl/live-cricket-streaming-1.htm

 

அநேகமாக தடங்கல் இல்லாமல் வேலைசெய்கின்றது. :D

  • தொடங்கியவர்

http://www.crictime.nl/live-cricket-streaming-1.htm

அநேகமாக தடங்கல் இல்லாமல் வேலைசெய்கின்றது. :D

அப்ப நீங்களும் பார்க்கிறியளே

அப்ப நீங்களும் பார்க்கிறியளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.