Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

ஐசிசி நடத்துறியா, இல்லை "இந்தியன் கிரிக்கெட் கவுன்சில்" நடத்துறியா... பொங்கும் முஸ்தபா கமால்!!

 

டாக்கா: இந்தியா - வங்கதேசம் இடையிலான காலிறுதிப் போட்டியின்போது, ரோஹித் சர்மாவுக்கு அவுட் கொடுக்க அம்பயர் மறுத்ததர்கு ஐசிசி தலைவர் முஸ்தபா கமால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த இந்தப் போட்டியின்போது வங்கதசே வீரர் ரூபெல் ஹுசைன் வீசிய பந்து புல்டாஸ் ஆக ரோஹித்தை நோக்க வந்தது. அப்போது 90 ரன்னில் இருந்தார் ரோஹித். அதை அவர் தூக்கி அடித்தபோது அது கேட்ச் ஆனது. ஆனால் அந்தப் பந்தை லெக் அம்பயர் ஆலிம் தர் நோ பால் என்று கூறவே, அம்பயர் இயான் கோல்டும் நோ பால் என்று அறிவித்தார். இதனால் ரோஹித் தப்பினார்.

 

பந்து இடுப்புக்கு மேலே புல் டாஸாக போனதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. ஐசிசி நடத்துறியா, இல்லை இந்த தீிர்ப்புக்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷான் வார்னே கூறுகையில், அது நிச்சயம் விக்கெட்தான். அவுட் கொடுத்திருக்க வேண்டும். அம்பயர் ஆலிம் தர் நம்பிக்கை இல்லாதவராக அந்த அவுட்டை மறுத்துள்ளார். சரியாக அனுமானிக்கத் தவறி விட்டார் என்று கூறியுள்ளார். வங்கதேசத்திலும் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குச் சாதகமாக ஆலிம் தர் நடந்து கொண்டு விட்டார்.

 

இதில் சதி நடந்துள்ளது என்று கூறி வங்கதேசத்தில் குய்யோ முறையோ என போராட்டங்கள் வெடித்துள்ளன. ஐசிசி தலைவராக உள்ள முஸ்தபா கமாலும் தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். இவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். அந்த நாட்டு திட்டத் துறை அமைச்சரும் கூட. ஐசிசி இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாக மாறி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஐசிசி தலைவர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருக்கிறேன். அது இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாகி விட்டது. ஐசிசியில் என்னால் செயல்பட முடியும். ஆனால் அது இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாகி விட்ட பிறகு அதில் என்னால் நீடிக்க முடியாது என்றார் கமால். இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசியில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் முறைப்படி புகார் பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐசிசியின் சேர்மனாக நம்ம ஊர் சீனிவாசன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/aleem-dar-controversy-icc-president-mustafa-kamal-slams-indian-cricket-council-222994.html

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்தியாவுடனான போட்டியில் 'அம்பயர்கள்' சதி... வங்கதேசத்தில் கொந்தளிப்பு- போராட்டம் வெடித்தது!!

 

டாக்கா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் இந்தியாவிடம் நேற்று வங்கதேசம் தோல்வி அடைந்தது. ஆனால் அம்பயர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன. உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்தியா-வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்தது. அதன் பின்னர் ஆடிய வங்கதேசம் அணியோ 193 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்தியாவுடனான போட்டியில் 'அம்பயர்கள்' சதி... வங்கதேசத்தில் கொந்தளிப்பு- போராட்டம் வெடித்தது!! இந்த தோல்வியை வங்கதேச ரசிகர்களால் ஏற்க முடியவில்லை.

 

ஏனெனில் தங்கள் நாட்டு அணிக்கு எதிராக அம்பயர்கள் சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் ரோகித் சர்மா 90 ரன்கள் எடுத்த நிலையில் அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த பந்தை நோபால் என்று அம்பயர் அறிவித்துவிட்டார். தங்களுக்கு எதிராக வேண்டுமென்றே அம்பயர் செய்த சதி என்பது வங்கதேசத்தினரின் குற்றச்சாட்டு. அம்யர் இவான் கெளல்ட்டும் பாகிஸ்தான் அம்பயர் அலீம் தாரும் சேர்ந்துதான் இந்த சதியை செய்துவிட்டதாக வங்கதேச ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக வங்கதேசம் முழுவதும் நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய அளவிலான கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.

 

பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தியா பணம் கொடுத்து அம்பயர்களை விலைக்கு வாங்கிவிட்டனர்; இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக ஐ.சி.சி.யே சதி செய்துவிட்டது என்பதும் வங்கதேச ரசிகர்களின் கொந்தளிப்பாகும். வங்கதேச நாட்டின் பெரும்பாலான ஊடகங்களும் வங்கதேசம் தோற்றது என்பதைவிட அம்பயர்களின் சதியைத்தான் தலைப்புச் செய்தியாக்கி வெளியிட்டுள்ளன.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-bangladeshi-supporters-protest-media-slams-umpiring-222988.html

  • தொடங்கியவர்

213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பாகிஸ்தான்! ஆஸி.க்கு பதிலடி தருவார்களா பாக். பவுலர்கள்?

 

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து நடையை கட்டியதால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இன்று நடைபெறும் 3வது கால்இறுதியில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 1992ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானும் மோதிவருகின்றன.

 

213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பாகிஸ்தான்! ஆஸி.க்கு பதிலடி தருவார்களா பாக். பவுலர்கள்? லீக் சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளிடம் படுமோசமாக தோற்றது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து அணிகளை தோற்கடித்து அசத்தியது. இதனிடையே பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அந்த அணி காலிறுதியில் இன்று அடிலெய்டு மைதானத்தில் எதிர் கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பாகிஸ்தான்! ஆஸி.க்கு பதிலடி தருவார்களா பாக். பவுலர்கள்? இருப்பினும் சொதப்பலாகவே பேட்டிங்கை ஆரம்பித்தது பாகிஸ்தான். தொடக்க வீரர்கள் அகமது செஷாத் 5 ரன்களிலும், சர்பாஸ் அகமது 10 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். ஹரீஸ் சொகைல் மற்றும் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இணைந்து அணியை மீட்க நடத்திய போராட்டமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இருவருமே முறையே 41 ரன்கள் மற்றும் 34 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்த வீரர்களும் 10, 20 என ரன்கள் எடுத்து அவுட் ஆகி, சோபிக்க தவறவே, 49.5 ஓவர்களில் பாகிஸ்தான் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

ஆஸி. தரப்பில் ஹசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பாகிஸ்தான் பேட்டிங் வீக்காக இருந்தாலும், வேகப்பந்து வீச்சில் பலமாக உள்ளது. எனவே அதைக் கொண்டு ஆஸ்திரேலியாவை சாய்க்குமா அல்லது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா சாதிக்குமா, இவ்விரண்டில் எந்த அணி, இந்தியாவுடன் அரையிறுதியில் மோத உள்ளது என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-pakistan-win-toss-bat-first-222974.html

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோமல்ல....ஒசி ஒசி ஒய் ஒய் .....

  • தொடங்கியவர்

கையில் கிடைத்த கேட்சை கோட்டைவிட்ட பாக். வீரர்... கண்ணாடி போடச்சொன்ன ஸ்டார் டிவி!

 

அடிலெய்டு: அல்வா போல கையில் சென்று விழுந்த பந்தை பிடிக்க தவறிய பாகிஸ்தான் ஃபீல்டரை கிண்டல் செய்வது போல ஒரு விளம்பரத்தை டைமிங்கில் வெளியிட்டு கலகலப்பை உண்டாக்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் அனல் வேகத்தில் பந்துகளை வீசிக் கொண்டிருந்தார். அதிலும், வாட்சனை ஸ்லெட்ஜ் செய்தவாரே, கடுப்பேற்றி பவுன்சர்களாக வீசினார்.

 

பல பந்துகளை அப்படியே கீப்பரிடம் பவிட்டுக் கொண்டிருந்தார் வாட்சன். பொறுத்தது போதும் என்று ஒரு பவுன்சரை வாட்சன் அடிக்கப்போக, அது பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரி எல்லையில் நின்ற ரகத் அலியை நோக்கி பயணித்தது. கையில் கிடைத்த கேட்சை கோட்டைவிட்ட பாக். வீரர்... கண்ணாடி போடச்சொன்ன ஸ்டார் டிவி! இதை பார்த்த வகப் ரியாசுக்கு ஏக சந்தோஷம். ஸ்லெட்ஜிங்கிற்கு பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தபடி, கேட்ச்... என்று சத்தம்போட்டார். அந்த பந்தும், ரகத் அலிக்காகவே பிறந்ததை போல, அவரது கைகளில் அல்வா போல இறங்கியது. ஆனால், சிம்பிளாக கிடைத்த அந்த வாய்ப்பை கோட்டை விட்டார் ரகத் அலி. பந்து கைகளில் இருந்து கீழே விழுந்தது. பாகிஸ்தான் ரசிகர்கள் அத்தனைபேருக்கும், அந்த ஒரு நிமிடம் ரகத் அலி வில்லனை போல தென்பட்டார்.

 

அவர்களின் கோப பார்வையில் ரகத் அலி பட்டிருந்தால் எரிந்தே போயிருப்பார். அப்படி ஒரு ஆக்ரோஷம் ரசிகர்களிடம். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் அந்த காட்சியை திரும்ப ரிப்ளே செய்தது. அப்போதுதான், ரிப்ளே வீடியோவுக்கு கீழே, ஓடிய விளம்பரம் அனைவரையும் கவர்ந்தது. அது கண்ணாடிக்கான விளம்பரம். "கண் நன்கு தெரிய வேண்டுமா, இந்த கண்ணாடியை அணியுங்கள்" என்று ஒரு முன்னணி கண்ணாடி பற்றிய விளம்பரம்தான் அப்போது காண்பிக்கப்பட்டது. வாட் ஏ டைமிங் என அதை பார்த்த ரசிகர்கள் வாயில் இருந்து வார்த்தை தானாக வந்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/rahat-ali-dropped-simple-catch-223020.html

  • தொடங்கியவர்

நீ திட்டுவியா.. பதிலுக்கு நானும் திட்டுவேன்.. ஆஸி.க்கு ஸ்லெட்ஜிங்கில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான்!

 

 

அடிலெய்டு: ஆஸ்திரேலிய பாணியிலேயே பாகிஸ்தான் பவுலரும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு, கடுப்பேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அடிலெய்டில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான காலிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முன்னதாக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தது. பாக். வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் ஒருமுனையில் பேட் செய்தபோது, அவருக்கு பந்து வீச வந்தார் மிட்சேல் ஸ்டார்க். ஆப்-ஸ்டம்புக்கு வெளியே யார்க்கர் போல ஒரு பந்தை வீசினார்.

 

அது பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. உடனே, வகாப் ரியாசிடம் நெருங்கி சென்று, "இப்படித்தான் பந்தை எறிய வேண்டும், புரிகிறதா.." என்று பீட்டர் விட்டார். அதற்கு அடுத்த பந்தை எறியும்போதும், வகாப் ரியாசை பார்த்து சிரித்தார். இதையடுத்து நடுவரிடம் புகார் சொன்னார் வகார் ரியாஸ். அம்பயர், வாயில் கையை வைத்து அமைதி என்பது போல செய்கை செய்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியா பேட் செய்ய வந்தபோது, வகாப் ரியாஸ் அனல் பறக்கும் பந்து வீச்சை காண்பித்தார். அதிலும், வாட்சனுக்கு எதிராக தொடர்ந்து பவுன்சர்களாக வீசி நிலைகுலைய வைத்தார். ஏற்கனவே அவரது பவுன்சரில் கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியிருந்ததால், வாட்சனும், குனிந்தோ, வளைந்தோ பவுன்சர் பந்துகளை விட்டுக் கொண்டே இருந்தார்.

10dxekg.png

அப்போதெல்லாம், பேட்ஸ்மேன் அருகே ஓடிவந்து வகாப் ரியாஸ், கைதட்டி கேலி செய்தார். கிட்டத்தட்ட ஒரு ஓவர் முழுவதுமே இப்படியான சீண்டலை வகாப் தொடர்ந்தார். ஆனால், வாட்சன் திருதிருவென முழித்தாரே தவிர பதிலுக்கு எதையும் சொல்லவில்லை. ஒருவேளை, நம்மகிட்ட கத்துகிட்ட மொத்த வித்தையையும் இந்த பாக். பவுலர் இறக்குறாரே என்ற அதிர்ச்சியில் இருந்து வாட்சன் மீளவில்லை போலும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/tit-tat-wahab-riaz-gives-sledging-replay-watson-223018.html

  • கருத்துக்கள உறவுகள்

களத்தடுப்பில் தேறாத அணிகள் இப்பிடித்தான் நாறவேண்டி வரும்.. இந்தியா கொஞ்சம் பரவாயில்லை.. ஆனாலும் ஆஸி இவர்களை ஒதுக்குப்புறமாக கொண்டுபோய் கும்மி எடுக்கப்போவது உறுதி.. :D:lol:

  • தொடங்கியவர்

அப்படி எப்படி பேசலாம்.. முஸ்தபா கமால் மீது ஐசிசி அதிருப்தி! அம்பயர் தீர்ப்பை ஏற்க 'குட்டு'!! 

 

ரோகித் ஷர்மாவுக்கு நோ-பால் வீசப்பட்டதாக அம்பயர் அலீம்தார் அறிவித்ததை ஐசிசி தலைவர் விமர்சனம் செய்திருக்க கூடாது, இது துரதிருஷ்டவசமானது என்று ஐசிசி தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி, டேவிட் ரிச்சட்ர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடுவர் அலீம்தார் நோ-பால் என்று அறிவித்த அந்த குறிப்பிட்ட பந்தை, சிலர் நோ-பால் இல்லை என்கின்றனர். ஆனால், அதை ஆய்வு செய்து பார்த்தபோது, 50-50 வாய்ப்பு இருந்தது தெரியவந்தது. நோ-பால் என்றும் கூறலாம், அல்லது நல்லபால் என்றும் அதை கூற முடியும். அப்படி எப்படி பேசலாம்.

 

. முஸ்தபா கமால் மீது ஐசிசி அதிருப்தி! அம்பயர் தீர்ப்பை ஏற்க 'குட்டு'!! எனவே இந்த விஷயத்தில் அலீம்தாரை விமர்சனம் செய்வது விரும்பத் தக்கது இல்லை. ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஐசிசி குறித்து கூறிய சர்ச்சைக்குறிய கருத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அம்பயர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். உள்நோக்கத்துடன், ஐசிசி நடந்துகொள்வதாக முஸ்தபா கமால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/aleem-dar-s-no-ball-decision-50-50-call-kamal-comments-unfortunate-icc-223024.html

  • தொடங்கியவர்

6 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வெளியேற்றியது ஆஸி.! அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்!!

 

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் எடுத்த நிலையில், 16 ஓவர்கள் எஞ்சியிருக்கும்போதே, வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மார்ச் 26ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், இந்தியா-ஆஸ்திரேலியா பலப் பரிட்சை நடத்த உள்ளன. உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இன்று நடைபெற்ற 3வது கால்இறுதியில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 1992ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் சொதப்பலாகவே பேட்டிங்கை ஆரம்பித்தது பாகிஸ்தான்.

 

தொடக்க வீரர்கள் அகமது செஷாத் 5 ரன்களிலும், சர்பாஸ் அகமது 10 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். ஹரீஸ் சொகைல் மற்றும் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இணைந்து அணியை மீட்க நடத்திய போராட்டமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இருவருமே முறையே 41 ரன்கள் மற்றும் 34 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்த வீரர்களும் 10, 20 என ரன்கள் எடுத்து அவுட் ஆகி, சோபிக்க தவறவே, 49.5 ஓவர்களில் பாகிஸ்தான் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி. தரப்பில் ஹசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வெளியேற்றியது ஆஸி.! அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்!! பாகிஸ்தான் பேட்டிங் வீக்காக இருந்தாலும், வேகப்பந்து வீச்சில் பலமாக உள்ளது. எனவே அதைக் கொண்டு ஆஸ்திரேலியாவை சாய்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

 

அதற்கேற்ப ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை பாக். பவுலர்கள் மிரட்டவே செய்தனர். தொடக்க வீர் ஆரோன் பின்ச் 2 ரன்களில் சொகைல் கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆக, அதிரடி வீரர் டேவிட் வார்னரும் வகாப் ரியாஸ் பந்தில் ரகத் அலியிடம் கேட்ச் கொடுத்து 24 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், வகாப் ரியாசின் அதிரடி பவுன்சரில் சிக்கி சோயிப் மசூதிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் அவுட் ஆனார். அப்போது 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால், பாகிஸ்தான் பக்கம் கை ஓங்கியது. ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 6 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வெளியேற்றியது ஆஸி.! அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்!! இருப்பினும், வாட்சனும், ஸ்டீவ் ஸ்மித்தும் அணியை சரிவில் இருந்து மெல்ல, மெல்ல மீட்டனர்.

 

நடுவே, வாட்சன் அளித்த சிம்பிள் கேட்சை பவுண்டரி எல்லையில் ரகத் அலி மிஸ் செய்து ஆஸி.யை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தார். கிடைத்த அதிருஷ்டத்தை பயன்படுத்திக் கொண்ட வாட்சன் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசினார். இருப்பினும் 27 ஓவர்களில், ஸ்கோர் 148 ரன்களாக உயர்ந்தபோது ஸ்டீவ் ஸ்மித், 65 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் அதன்பிறகு களமிறங்கிய, அதிரடி வீரர் மேக்ஸ்வெல், வாட்சனுடன் இணைந்து, மேற்கொண்டு விக்கெட் வீழாமல் பார்த்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் 29 பந்துகளில் அதிரடியாக 44 ரன்களை குவித்தார். இதனால் 33.5வது ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய ஹசில்வுட்டுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. எனவே மார்ச் 26ம்தேதி நடைபெறும் 2வது செமி பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-pakistan-win-toss-bat-first-222974.html

  • தொடங்கியவர்

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்வது கொஞ்சம் சவால்தான்: ஒப்புக்கொண்ட ஆஸி.கேப்டன்

 

அடிலெய்டு: அரையிறுதியில் இந்தியா வலுவான சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார். அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்வது கொஞ்சம் சவால்தான்: ஒப்புக்கொண்ட ஆஸி.கேப்டன் காலிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய ஆஸி.கேப்டன் மைக்கேல் கிளார்க் "அரையிறுதியில் இந்தியாவுடன் மோத உள்ளோம். அந்த போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். இந்தியா சிறப்பான ஃபார்மில் உள்ள அணியாகும். கேப்டன் டோணியின் தலைமையில் அந்த அணி சிறப்பாக ஆடி வருகிறது.

 

எனவே ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை" என்றார். உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியா இத்தோடு 7வது முறையாக நுழைகிறது. இதுவரை, நுழைந்த 6 அரையிறுதி சுற்றுகளில், எந்த ஒரு அரையிறுதி போட்டியிலும் அந்த அணி தோற்றதில்லை. 2011 உலக கோப்பையில், காலிறுதியில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில், டோணி தலைமையிலான இந்திய அணியிடம், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/clarke-speaks-on-tough-challenge-facing-india-world-cup-se-223041.html

இந்தி : நாங்க இதுவரைக்கும் யார்கிட்டயும் தோற்றதே இல்ல... 
...
ஆஸி : போன தொடர்ல நாங்க தானே வெளுத்து வாங்கினோம்...
...
இந்தி : ஏய் அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம் tongue உணர்ச்சிலை 

 

 

 

21240_858939714145508_516145404754312125

  • தொடங்கியவர்

ஆஸி. வென்றது பாகிஸ்தானையா? வஹாப் ரியாஸையா?
 

 

அடிலெய்டில் பரபரப்பாக எதிர்நோக்கப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் 3-வது காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று அரையிறுதியில் இந்தியாவைச் சந்திக்கிறது.

 

டாஸ் வென்ற மிஸ்பா உல் ஹக் ஓரளவுக்கு பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் முதலில் பேட் செய்ய சரியாக முடிவெடுத்தார். ஆனால் சரியான இடைவெளிகளில் மோசமான ஷாட் தேர்வுகளினால் வரிசையாக வீரர்கள் ஆட்டமிழக்க கடைசியில் 50-வது ஓவரின் 5-வது பந்தில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, வஹாப் ரியாஸின் அட்டகாசமான வேகம் மற்றும் தீவிரத்தில் 49/2 பிறகு 59/3 என்று சரிவு முகம் கண்டது.

 

அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் (65), வாட்சன் (64 நாட் அவுட்), மேக்ஸ்வெல் (44 நாட் அவுட்) ஆகியோரது நிதானமான ஆட்டத்தினால் 33.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் சென்றது. வாட்சன் 4 ரன்களில் இருந்த போதும், மேக்ஸ்வெல் ஒற்றை இலக்கத்தில் இருந்த போதும் பாகிஸ்தான் பீல்டர்கள் 2 எளிதான கேட்ச்களை கோட்டை விட்டனர். இந்தக் கேட்ச்களைப் பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் வென்றாலும் ஆச்சரியமாக இருந்திருக்காது.

 

பாகிஸ்தானின் திட்டமிடாத பேட்டிங்... முதிர்ச்சியற்ற ஷாட் தேர்வு:

சர்பராஸ் அகமட், அகமது ஷெசாத் தொடக்கத்தில் களமிறங்கினர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அபார ஸ்விங் பவுலரும் இன்றைய ஆட்ட நாயகனுமான ஜோஷ் ஹேசில்வுட் தொடக்க ஓவர்களை வீசினர்.

கட்டுக்கோப்பான பந்து வீச்சு, ஓரிருமுறை இரு வீர்ர்களின் மட்டையை பந்துகள் நூலிழையில் கடந்து சென்றது. 5-வது ஓவரில்தான் முதல் பவுண்டரி வந்தது. ஸ்டார்க் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அதிக இடம் இல்லாவிட்டாலும் ஒருவாறாக புல் ஆடி முதல் பவுண்டரியை அடித்தார் சர்பராஸ்.

ஆனால் அடுத்த பந்தே ஸ்டார்க் 150 கிமீ வேகத்தில் நல்ல அளவில் வீச பந்து சர்பராஸ் மட்டையின் விளிம்பில் பட்டு வாட்சனிடம் வேகமாகச் சென்றது. தள்ளிச் சென்றது. இரண்டு கைகளையும் கொண்டு சென்ற வாட்சன் கேட்ச் பிடிக்கும் போது கிட்டத்தட்ட தேர்ட் மேன் திசை நோக்கி இருந்தார் அருமையான கேட்ச்.

ஆஸ்திரேலியாவின் அபார பீல்டிங்குக்கு இந்த கேட்சும் இதற்கு முன்னால் தடுத்த சில பவுண்டரிகளும் அடங்கும், வார்னர், மேக்ஸ்வெல் என்று சில ஷாட்களை அற்புதமாகத் தடுக்க பாகிஸ்தான் மீது நெருக்கடி அதிகரித்தது.

 

அகமது ஷெசாத்தின் தேவையில்லாத ஷாட்:

1ஆம் நிலையில் இறங்கிய ஹாரிஸ் சோஹைல் ஸ்டார்க் வீசிய முதல் பந்தையே பாயிண்டில் பவுண்டரிக்கு விரட்டி கணக்கைத் தொடங்கினார். இப்படி இவர் தன்னம்பிக்கையுடன் தொடங்கிய பிறகு அதற்கு அடுத்த ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த ஷெசாத், ஹேசில்வுட் வீசிய அவுட் ஸ்விங்கரை தொட்டு ஸ்லிப்பில் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தேவையில்லாத ஷாட். விட்டு விட வேண்டிய பந்து இது. ஏனெனில் ஹேசில்வுட் அபாரமாக ஸ்விங் செய்து வந்தார். இந்த விக்கெட்டை ஓரளவுக்கு ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது என்றே கூற வேண்டும். 24/2 என்று ஆனது பாகிஸ்தான்.

 

பைல் கீழே விழாமல் தப்பிய மிஸ்பா:

பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா இறங்கினார். ஷெசாத் அவுட் ஆன அதே ஓவரில் 3-வது பந்தில் மிஸ்பாவைப் பார்த்து அதிர்ஷ்ட தேவதை புன்னகை புரிந்தாள். ஹேசில்வுட் வீசிய இன்ஸ்விங்கர் மிஸ்பாவின் இடது தொடைக்காப்பில் பட்டு ஸ்டம்பை உரசிச் சென்றது இதில் பைல் சற்றே தொந்தரவு அடைந்தது. ஆனால் கீழே விழவில்லை. பைலில் வெளிச்சம் வந்து போனது. ரிவியூ செய்யலாம் என்று ஆஸ்திரேலியா ஆலோசனை செய்வதற்குள் அங்கு நேரம் முடிந்து விட்டது.

 

ஹாரிஸ் சோஹலின் அனாயாச ஆட்டமும் மிஸ்பாவின் நிதானமும்

ஜான்சன் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தே மிஸ்பா சைனிஸ் கட் அடித்தார் பந்து ஸ்டம்பைத் தவிர்த்து பவுண்டரிக்குச் சென்றது. பைல் விழவில்லை. பிறகு சைனிஸ் கட் என்று மிஸ்பாவுக்கு அசவுகரியம் தொடர்ந்தது.

 

இப்படியாக சில ஓவர்கள் செல்ல, 12-வது ஓவரை ஹேசில்வுட் வீச வர, ஹாரிஸ் சோஹைல் அபாரமாக ஒரு ஆஃப் டிரைவ் பவுண்டரியையும், மீண்டும் கவர் எஸ்க்ட்ரா கவர் இடைவெளியில் மற்றுமொரு பவுண்டரியையும் அடித்தார்.

ஒரு மாற்றத்துக்காக 14-வது ஓவரில் கிளார்க், ஆப் ஸ்பின்னர் மேக்ஸ்வெலை கொண்டு வந்தார். கடைசி பந்து மிஸ்பாவுக்கு பிடித்த ஷாட், மிட்விக்கெட்டில் ஒரு சுழற்று சுழற்ற பந்து ரசிகர்களிடையே போய் விழுந்தது. 6 ரன்கள். மிஸ்பா தொடங்கினார். மீண்டும் 18-வது ஓவரில் மிஸ்பா அதே போன்ற ஒரு ஷாட்டில் மீண்டும் மிட்விக்கெட்டில் அதே ஷார் அடித்தார் இம்முறையும் அதே முடிவு 6 ரன்கள்.

 

இருவரும் இணைந்து அரைசதக்கூட்டணியைக் கடந்தனர். பிறகு வாட்சன், பாக்னர் வீச வந்தனர், இருவரும் பயங்கர சிக்கனமாக வீசினர். கடைசியில் வேதனையைப் போக்குமாறு ஹாரிஸ் சோஹைல் வாட்சனை ஒரு பவுண்டரி அடித்தார். ஹாரிஸ் சோஹைல் 38, மிஸ்பா 34 என்றும் ஸ்கோர் 23-வது ஓவரில் 96/2 என்றும் நன்றாகப் போய் கொண்டிருந்தது.

 

அப்போது மைக்கேல் கிளார்க் தனக்கேயுரிய ஒரு பாணியில் மீண்டும் மேக்ஸ்வெலை பந்துவீச அழைத்தார். 24-வது ஓவரின் 2-வது பந்து, ஆஃப் பிரேக் ஆகாமல் லெந்தில் விழுந்து நேராகச் சென்றது மிஸ்பா மீண்டும் தனக்குப் பிடித்த மிட்விக்கெட் ஷாட்டை ஆடினார். ஆனால் இந்த முறை ஷாட் சரியாக சிக்கவில்லை. ஏரோன் பின்ச்சிடம் டீப்பில் கேட்ச் ஆனது 34 ரன்களில் மிஸ்பா அவுட் ஆனார். 73 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த நிலையில் மிகப்பெரிய மரம் சாய்ந்தது. அதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.

 

ஹாரிஸ் சோஹைல் நன்றாக ஆடிவந்தார். நல்ல டைமிங்குடன், பந்தின் லெந்த்தைக் கணித்து 57 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால், பாகிஸ்தான் பேட்டிங்கிற்கேயுள்ள குறைபாடு மீண்டும் தலைதூக்கியது. ஜான்சன் விக்கெட்டுகளை வீழ்த்த திணறிகொண்டிருந்த போது, 27-வது ஓவரில் வந்து ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு கூர்மையான பவுன்சரை வீச சோஹைல் ஆடிப்போனார்.

 

அடுத்த பந்து.. ஜான்சனின் மிகவும் பிரசித்தமான உத்தி. ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து குறுக்காக நல்ல அளவில் பந்தை பிட்ச் செய்து வெளியே இழுத்தார். சோஹைல் எந்த ஒரு சரியான நிலையிலும் இல்லாமல் அதனை டிரைவ் ஆட முயன்றார். மோசமான ஷாட் தேர்வு ஹேடினிடம் கேட்ச் ஆனது.

 

உமர் அக்மல் மட்டுமெ தற்போது கிரீசில் ஒரு பேட்ஸ்மென் என்ற முறையில் மீதமிருந்தார். இவரும் 25 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்தார். ஆனால் திடீரென கிறுக்குப் பிடிக்க மேக்ஸ்வெல் வீசிய ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து நேராக மிட்விக்கெட்டில் ஃபின்ச் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எங்கு வேண்டுமானாலும் இந்த பந்தை அடித்திருக்கலாம். ஸ்கொயர்லெக், மிட்விக்கெட் இடைவெளியில் அடித்திருக்கலாம் ஆனால் ஷாட் தேர்வு சரியில்லாமல் வீழ்ந்தார். 124/5. மேக்ஸ்வெல் மீண்டும் மிஸ்பா, உமர் அக்மல் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய விக்கெட்டுகளைத் தன்னால் கைப்பற்ற முடியும் என்பதை நிரூபித்தார்.

 

அப்ரீடி களமிறங்கினார். 30-வது ஓவரில் போய் அவர் இறங்கினால் என்ன செய்ய முடியும்? அவர் வழக்கமான அனாயாச மட்டைச் சுழற்றலையே காண்பித்தார். மிட்செல் ஜான்சனை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு அசாத்திய சிக்ஸ் அடித்தார். ஷோயப் மக்சூத் இன்னொரு முனையில் ஜான்சனிடமே கேட்ச் கொடுத்திருப்பார் ஆனால் ஜான்சன் வந்த வேகத்தில் அவரால் பிடிக்க முடியவில்லை. பிடித்திருந்தால் அது ஒரு அசாத்தியமான ரிடர்ன் கேட்ச் ஆகியிருக்கும்.

மக்சூதிற்குப் பதிலாக யூனிஸ் கானை தேர்வு செய்திருக்க வேண்டும். மிஸ்பாவின் தவறான முடிவு.

15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்த ஷாகித் அஃப்ரீடியும், ஹேசில்வுட் வீசிய அரைக்குழி பந்தை மிட்விக்கெட்டில் குறிபார்த்து பின்ச் கையில் அளித்து வெளியேறினார்.

 

வஹாப் ரியாஸை கேலி செய்து சீண்டிய ஸ்டார்க்:

வஹாப் ரியாஸ் களமிறங்கினார். அவர் அரைசதம் எடுத்தவர். ஆனால் இந்த முறை ஸ்டார்க், ஹேசில்வுட் பந்துகளில் அவர் மட்டை, பந்தின் ஸ்பரிசத்துக்காக ஏங்கியது. கடைசி வரை பந்து அவரது மட்டையுடன் ஊடல் செய்து கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த ஸ்டார்க், ஒரு பந்தில் வஹாப் பீட் ஆக அருகில் வந்து ‘உருண்டையாக ஏதோ போகிறதே உனக்கு தெரிகிறதா?’ என்ற ரீதியில் ஏதோ கேட்க ஆஸ்திரேலிய வீரர்கள் சிரிக்க, வஹா ரியாஸ் ஆக்ரோஷமாக திருப்பி சில வார்த்தைகளை விட, நடுவர் தலையிட்டு ‘உஷ்’ பேசக்கூடாது என்று இருவரையும் சமாதானப்படுத்தினார்.

மக்சூத் 29 ரன்களில் ஹேசில்வுட் பந்தை கவர் திசையில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 42-வது ஓவரில் 188/7. பிறகு 16 ரன்கள் எடுத்த வஹாப் ரியாஸ், கேலி செய்த ஸ்டார்க் பந்திலேயே அவுட் ஆனார். அதன் பிறகு 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் முதலிடம் சென்றார். ஹேசில்வுட் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேக்ல்ஸ்வெல் 2 விக்கெட், ஜான்சன், பாக்னர் தலா 1 விக்கெட்.

 

 

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய வஹாப் ரியாஸின் பந்துவீச்சும் ஒத்துழைக்காத பீல்டிங்கும்:

214 ரன்கள் என்ற எளிதான இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு 3-வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் ஏரோன் பின்ச் 2 ரன்கள் எடுத்திருந்த போது சோஹைல் கான் வீசிய நேர் பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி ஆனார். அவர் செய்த தவறு அதனை ரிவியூ செய்தார். ரிவியூ உறுதி செய்தது. ஒரு ரிவியூவை வேஸ்ட் செய்தார் பின்ச்.

மறுமுனையில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வலது கை வீச்சாளர் அடிலையே கொண்டு வந்தார் மிஸ்பா.

டேவிட் வார்னர் 2 பவுண்டரிகளை அடித்தார். ஸ்மித் 3 பவுண்டரிகளையும், வார்னர் 3 பவுண்டரிகளையும் அடிக்க இருவரும் 21 ரன்களில் ஜோடியாக நிற்க ஸ்கோர் 9-வது ஓவரில் 49 ரன்களாக உயர்ந்தது.

 

9-வது ஓவரை வஹாப் ரியாஸ் வீச வந்தார். வார்னர் 24 ரன்களில் இருந்தார். அவரது ஈகோவை சீண்டினார் வஹாப், ஒரு ஷார்ட் பிட்ச் பவுன்சரை வீச அதனை அவர் தேர்ட் மேனில் தூக்கி விட்டார். அங்கு ரஹத் அலி கேட்ச் பிடித்தார்.

 

மீண்டும் 11-வது ஓவரை வீச வந்த வஹாப் ரியாஸ். கிளார்க்கிற்கு ஷார்ட் பிட்ச் பந்துகளில் பலவீனம் என்று தெரிந்த மிஸ்பா, ஷார்ட் லெக் திசையில் மக்சூதை நிறுத்தினார். வஹாப் ரியாஸ் நல்ல வேகத்தில் ஒரு பவுன்சரை வீச ஹெல்மெட் கம்பி உயரத்துக்கு வந்த பந்தை ஒன்றும் செய்ய முடியவில்லை கிளார்க்கினால் மட்டையில் பட்டு அருகில் மக்சூதிடம் கேட்ச் ஆனது. திட்டமிட்டு வீழ்த்தப்பட்டார் கிளார்க். 11-வது ஓவரில் 59/3 என்று ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஒரு முனையில் ஸ்மித் அபாரமாக ஆடிவந்தார். வாட்சன் களமிறங்க வஹாப் ரியாஸ் அவருக்கு வேகமாக பவுன்சர்களையும் லெந்த் பந்தையும் மாறி மாறி வீசி வேதனையை அதிகரித்தார்.

 

4 ரன்களில் வாட்சன் இருந்த போது வஹாப் ரியாஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை வாட்சன் ஹூக் செய்ய அது நேராக டீப் ஃபைன் லெக்கில் ரஹத் அலியிடம் உயரமாக எழும்பி அழகாகக் கையில் பூபோல் விழுந்தது அதனை அவரது வழுக்கிய கைகள் தவற விட்டன.

ஸ்மித் அரைசதம் கடந்து 66 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்திருந்த போது 27-வது ஓவரில் இசான் அடில் பந்தில் எல்.பி.ஆனார். பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை. தர்மசேனா கையைத் தூக்கினார், ரிவியூ எதுவும் மீதமில்லை. அதனால் வெளியேறினார்.

மேக்ஸ்வெல் இறங்கினார் ஒரு பவுண்டரி அடித்து 5 ரன்களில் இருந்த போது வஹாப் ரியாஸ் மீண்டும் ஒரு நல்ல வேக பவுன்சரை வீச மேக்ஸ்வெல் தனக்கேயுரிய விசித்திர ஷாட்டை ஆடினார் பந்து டாப் எட்ஜ் எடுத்து தேர்ட் மேனில் உயரே சென்றது ஓடி வந்த சோஹைல் கான் கையை நீட்டினார் பந்து கையில் பட்டுத் தெறித்தது. அப்போது பிடித்திருந்தால் 154/5 என்று ஆஸ்திரேலியா திணறல் அதிகரித்திருக்கும். ஆனால் வஹாப் ரியாஸின் தனிமனிதப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

28.2-வது ஓவரில் மேக்ஸ்வெலுக்கு கேட்ச் விடப்பட்டது. 34-வது ஓவர் 5-வது பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. வாட்சன் 64 நாட் அவுட், அதிரடி ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 44 நாட் அவுட். ஸ்மித் அவுட் ஆன பிறகு 7 ஓவர்களில் 68 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரீடி பெரும் ஏமாற்றம். 4 ஓவர்களில் 30 ரன்கள் விக்கெட்டும் இல்லை. தாக்கமும் இல்லை.

 

இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆடியதைப் பார்க்கும் போது இந்திய அணியினருக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். நல்ல ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை இலக்கைத் துரத்தவிட்டால் அந்த அணியின் பலவீனங்கள் வெளிப்படும் என்பதை பாகிஸ்தான் இன்று இந்திய அணிக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/article7015738.ece

  • தொடங்கியவர்

28vubu8.jpg


zsmvya.png

  • தொடங்கியவர்

நியூசீலாந்து
v
மேற்கு இந்தியதீவுகள்
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)

  • தொடங்கியவர்

NZ WON THE TOSS & BAT

  • கருத்துக்கள உறவுகள்

93/2 in 17.4 overs

  • தொடங்கியவர்

கிரிக்கெட் ஆய்வு செய்த ரகுவை காணவில்லை என்று பார்த்தால் அவர் இப்ப வேறு திரிகளில் விபரீதமான ஆய்வுகளில்....

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் ஆய்வு செய்த ரகுவை காணவில்லை என்று பார்த்தால் அவர் இப்ப வேறு திரிகளில் விபரீதமான ஆய்வுகளில்....

Edited by MEERA

  • தொடங்கியவர்

அவர் இப்ப வேற விளையாட்டுக்கு போட்டார்

நியானி கண்டால் இருக்கு வேட்டு

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு ? Football , Volleyball என்று பல இருக்கே

  • தொடங்கியவர்

கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு ? Football , Volleyball என்று பல இருக்கே

ஓம்ஓம் யார் இல்லை என்ற்து,இப்படி பல விதமான விளையாட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

278/3 After 43 overs

  • கருத்துக்கள உறவுகள்

New Zealand 393/6

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அந்த மனுசன் இந்த சாத்து சாத்தது.  :rolleyes:  (இணைப்பு தந்த கு சா, நவீனனுக்கு நன்றி.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.