Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் உங்களை பார்த்துதான்.... :o:lol::icon_mrgreen:

 

 

யூ ஆர் வெல்கம்... :icon_mrgreen:  :lol:

இப்படியே விட்டீர்கள் என்றால் 

இந்த திரி

வேறு விளையாட்டுத்திரியாகிவிடும்

கவனம்.. :icon_mrgreen:  :lol:

Edited by விசுகு

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக கோப்பை இறுதி போட்டிக்கான அம்பயர்கள் அறிவிப்பு!

 

துபாய்: உலக கோப்பை இறுதி போட்டிக்கான நடுவர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், நோபால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் அலீம்தார் பெயர் இடம்பெறவில்லை. உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே வரும் 29ம்தேதி மெல்போர்னில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அம்பயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

 

அதன் விவரம்: ரஞ்சன் மதுகலே (போட்டி ரெப்ரி), குமார் தர்மசேனா மற்றும் ரிச்சர்ட் கேட்லிபோரா (கள நடுவர்கள்) மாராய்ஸ் எராஸ்மஸ் (மூன்றாம் நடுவர்) இயான் கவுல்ட் (நாலாம் நடுவர்) . உலக கோப்பை இறுதி போட்டிக்கான அம்பயர்கள் அறிவிப்பு! இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதியின்போது நடுவர்களாக குழுவில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்து இறுதி போட்டியிலும் ஐசிசி களமிறக்கியுள்ளது. அதாவது, நாலாம் நடுவராக இருந்த ரிச்சர்ட்டுக்கு பதிலாக இயான் கவுல்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

மற்ற அனைத்தும் அதே குழுதான். மேலும், இந்தியா-வங்கதேச காலிறுதி போட்டியின்போது நடுவராக இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அலீம்தார், அரையிறுதி மட்டுமில்லாமல், பைனலிலும் பெயர் சேர்க்கப்படவில்லை. ரோகித்ஷர்மா அவுட்டான நல்ல பந்தை, நோபால் என்று அறிவித்து அவரை காப்பாற்றிவிட்டார் என்று அலீம்தார் மீது வங்கதேச ரசிகர்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/umpires-named-world-cup-final-no-place-aleem-dar-after-cont-223485.html

  • தொடங்கியவர்

யூ ஆர் வெல்கம்... :icon_mrgreen:  :lol:

இப்படியே விட்டீர்கள் என்றால் 

இந்த திரி

வேறு விளையாட்டுத்திரியாகிவிடும்

கவனம்.. :icon_mrgreen:  :lol:

 

பிறகு நியானிதான் களம் இறங்க வேண்டிவரும் :lol:

 

  • தொடங்கியவர்

பழைய பகை திரும்புமா: பைனலில் பரபரப்பு

 

மெல்போர்ன்: உலக கோப்பை தொடரில் நாளை நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து  மோதுகின்றன. இந்த இரு அணிகள் இடையே உள்ள பழைய பகை, பாதிப்பு ஏற்படுத்துமா என்ற அச்சம் நிலவுகிறது.

 

கடந்த 1981ல் இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதல் இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றன. 3வது போட்டி மெல்போர்னில் நடந்தது.

 

இதில் ஆஸ்திரேலிய அணியின் (235/4) இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கடைசி 1 பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டன. 6 ரன் எடுத்தால் போட்டி ‘டை’ என்ற நிலையில் மெக்கென்யே பந்தை எதிர்கொண்டார்.

 

இது சிக்சர் ஆகி விடாத வகையில், பந்தை உருட்டி விடுமாறு (‘அன்டர் ஆர்ம்’) கேப்டன் கிரெக் சாப்பல் கூறியதை, அவரது சகோதரர் டிரிவர் சாப்பல் சரியாக செய்தார். இப்படி விளையாட்டு உணர்வு இல்லாமல் பந்துவீசியதால், நியூசிலாந்து தோற்றது., கோபப்பட்ட மெக்கென்யே பேட்டினை தரையில் எறிந்து  திரும்பினார்.

இதுகுறித்து அப்போதைய நியூசிலாந்து பிரதமர் ராபர்ட் மல்டூன் கூறுகையில்,‘‘ கிரிக்கெட் வரலாற்றில் இது மிகவும் கேவலமான சம்பவம், எப்போதும் இதை மறக்க முடியாது,’’ என்றார்.

 

ஆஸ்திரேலிய கேப்டன் கிரெக் சாப்பலின் இந்தச் செயல் தான், கிரிக்கெட்டில் நியூசிலாந்தை சாதிக்க துாண்டியது. அன்று முதல் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி  ‘பரம எதிரிகளின்’ மோதலாகவே பார்க்கப்படுகிறது.

இப்போது 34 ஆண்டுகள் கழித்து அதே மெல்போர்ன் மைதானத்தில், உலக கோப்பை தொடரில் பைனலில் இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்துவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வளர்ச்சி உதவியது

கிரெக் சாப்பல் செயல் குறித்து மெக்கென்யே கூறுகையில்,‘‘ ரக்பி மீது பைத்தியமாக இருந்த நியூசிலாந்தை, 1981 சம்பவம் தான் கிரிக்கெட் மீது மக்களின் கவனத்தை திருப்பியது. எங்களது கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இது இருந்தது, இப்போது அந்த அணிக்கு எதிரான பைனலில் விளையாடுவது சிறப்பானது,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/03/1427475859/BrendonMcCullumcricket.html

  • கருத்துக்கள உறவுகள்

//இலங்கையின் குமார தர்மசேன மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பரோ இருவரும் இறுதி ஆட்டத்தில் நடுவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.//

இது எங்கட ஶ்ரீக்கு கிடைச்ச கவுரவம்! :D

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை போட்டு எனது பொதுஅறிவை வளர்த்த நெடுக்ஸ்,நவீனன் மற்றும் விசுகு அனைவருக்கும் நன்றிகள் :D தொடரட்டும் நவீனனின் கிரிக்கட் விலாசல்....

  • தொடங்கியவர்

மெல்போர்னில் ஆடுவதில் எந்த அச்சமும் இல்லை: டிம் சவுதி திட்டவட்டம்
 

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை மெல்போர்ன் மைதானத்தில் விளையாடுவதில் எந்த அச்சமும் இல்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தக்கூடிய அளவுக்கு அனுபவம் பெற்ற வீரர்களும், அதிரடியான பேட்ஸ்மேன்களும் எங்கள் அணியில் இருக்கிறார்கள் என டிம் சவுதி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் மெல்போர்னில் நாளை நடக்கிறது. இந்த நிலையில் மெல்போர்ன் பற்றிய தங்களுடைய அனுபவ அறிவு இறுதிப் போட்டியில் முக்கியப் பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறியுள்ளார்.

 

 

அந்த அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஹேடனோ, நியூஸிலாந்து இதுவரை அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடியுள்ளது. அங்குள்ள மைதானங்கள் சிறியவை. ஆனால் மெல்போர்ன் மைதானம் பெரியது. அதனால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய டிம் சவுதி, “மெல்போர்ன் மைதானம் பெரிய மைதானம் என்பதை பற்றி யெல்லாம் கவலைப் பட வில்லை. இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற எங்கள் கனவு நனவாகியிருக்கிறது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலி யாவை அதன் சொந்த மண்ணில் அதுவும் உலகின் தலைசிறந்த மைதானத்தில் சந்திப்பது நல்லது தான்.

 

நீண்ட காலமாக நாங்கள் இந்த மைதானத்தில் விளை யாடவில்லை. அதேநேரத்தில் 2009-ல் இங்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலி யாவை வீழ்த்திய இனிய நினைவுகள் எங்களிடம் இருக்கிறது. எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டத்தின் முன்பு விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். இறுதி ஆட்டத்தை சுமார் 1 லட்சம் பேர் மைதானத்தில் இருந்து பார்ப்பார்கள். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7042988.ece

 

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து கிளார்க் ஓய்வு

உ,.கோப்பை இறுதிப் போட்டியுடன் மைக்கேல் கிளார்க் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு. | படம்: ஏ.பி.

நாளை மெல்போர்னில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் கடைசி ஒருநாள் போட்டியாகும்.

 

இறுதிப்போட்டிக்கு முன்னதான வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக்கேல் கிளார்க் அறிவித்தார்.

“நாளை (ஞாயிற்றுக் கிழமை) நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் போட்டியே எனது கடைசி ஒருநாள் போட்டி. நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். நாளை நான் விளையாடும் 245-வது ஒருநாள் போட்டி. இவ்வளவு போட்டிகள் நாட்டுக்காக விளையாடுவது என்பது எனக்கு கிடைக்கத்த மிகப்பெரிய கவுரவம். நான் ஒவ்வொரு வீரருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீரர்களுடன் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு என்னிடம் வந்தது. இன்று இறுதிப் போட்டிக்கு வருவது இந்த 4 ஆண்டுகள் அனுபவம் உதவியது.

கடந்த உலகக்கோப்பையில் நாக்-அவுட் சுற்றில் வெளியேறினோம், இந்த முறை இறுதிக்கு வந்துள்ளோம். நாளை இறுதிப் போட்டியில் வெற்றியை ருசிப்போம் என்று கருதுகிறேன். என்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் 2 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் ஒரு காலிறுதிக்கு ஆஸி. தகுதி பெற்றுள்ளது.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவேன். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது டெஸ்ட் போட்டிகளுக்கான எனது வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ” என்றார்.

244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 7,907 ரன்களை 44.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் 57 அரைசதங்களும் அடங்கும். =

73 போட்டிகளில் கிளார்க்கின் தலைமைத்துவத்தில் ஆஸ்திரேலியா 49 போட்டிகளில் வென்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article7043312.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

மெல்போர்னில் ஆடுவதில் எந்த அச்சமும் இல்லை: டிம் சவுதி திட்டவட்டம்

 

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை மெல்போர்ன் மைதானத்தில் விளையாடுவதில் எந்த அச்சமும் இல்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தக்கூடிய அளவுக்கு அனுபவம் பெற்ற வீரர்களும், அதிரடியான பேட்ஸ்மேன்களும் எங்கள் அணியில் இருக்கிறார்கள் என டிம் சவுதி கூறியுள்ளார்.

இப்பிடி சவுண்டு விடுறவைதான் அநேகமாக தோக்கிறவை.. :lol:

  • தொடங்கியவர்

இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களின் ஆதரவைக் கோரும் பிரெண்டன் மெக்கல்லம்
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஆதரவு அளிக்க இந்திய ரசிகர்களுக்கு பிரெண்டன் மெக்கல்லம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததையடுத்து இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்வதை விரும்ப மாட்டார்கள் என்பதை மெக்கல்லம் நன்கு அறிந்துள்ளார் என்பது தெரிகிறது.

 

இந்நிலையில் அவர் எழுதிய கடிதம் வருமாறு,

 

"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும்,

 

உலகக்கோப்பையை வெல்வதற்கான தாகம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன்.

ஏற்கெனவே எங்கள் அணிக்கு ஆதரவாக நீங்கள் பெரும் திரளாக திரண்டுள்ளீர்கள். நன்றி.

 

இப்போதும் உங்களது ஆதரவு எங்கள் அணிக்குத் தேவை. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் உங்களது ஆதரவை நியூசிலாந்து அணிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

எங்கள் கிரிக்கெட் வாழ்வில் இது மிகப்பெரிய தருணமாகும். இதில் லட்சக்கணக்கான குரல்கள் எங்களுக்காக எழுவது நிச்சயமாக எங்களுக்கு உதவும்."

 

இவ்வாறு இந்திய ரசிகர்களை நோக்கி நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நாளை காலை 9 மணிக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இறுதிப் போட்டி மெல்போர்னில் தொடங்குகிறது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article7043416.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இரசிகர்கள் நியூசிலாந்துக்கு ஆதரவு தருவார்களாயின் எனது சப்போர்ட் அவுஸ்ரேலியாவுக்குத்தான்!

  • தொடங்கியவர்

ஏமாற்றிய வீரர்கள்; எல்லை மீறிய ரசிகர்கள்
 

 

பெரும் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா இவ்வளவு மோசமாக தோற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். காரணம், அரையிறுதிக்கு முன்பு வரை இந்தியா தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்றிருந்ததுதான்.

விளையாட்டில் வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், ஓரளவுக்குப் போராடி தோற்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்திய அணியோ, ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்கவில்லை. பொறுப்பில்லாமல் விளையாடி தோற்றது என்பதுதான் உண்மை. அதுதான் இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் இந்திய வீரர்கள் மீது வசைபாட வைத்திருக்கிறது.

 

கோலி தேர்வு செய்த மோசமான ஷாட், அவருடைய காதலி அனுஷ்கா சர்மாவை இன்று வெளியில் தலைகாட்ட முடியாத பரிதாபத்துக்கு தள்ளியிருக்கிறது. இந்திய அணி முக்கிய ஆட்டங்களில் சொதப்புவது இது முதல்முறையல்ல என்றாலும், ரசிகர்கள் இப்போது மிகஅதிகமாக வசைபாடுவதற்கு காரணம், அவர்கள் தோனியின் இளம்படை மீது வைத்திருந்த அதீத நம்பிக்கைதான். தோல்விக்கு பல காரணங்களை இந்திய வீரர்கள் கூறினாலும், அவர்கள் பொறுப்புணர்வுடன் விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது.

 

தென் ஆப்பிரிக்காவின் நாட்டுப் பற்று

நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எவ்வளவு பொறுப்புணர்வோடும், நாட்டுப் பற்றோடும் விளையாடினார்கள், எந்தளவுக்கு உயிரைக் கொடுத்து விளையாடினார்கள் என்பது அந்தப் போட்டியை பார்த்த அனைவருக்குமே தெரியும்.

நியூஸி. கேப்டன் மெக்கல்லம் ஆரம்பத்தில் ஆடிய வேகத்தைப் பார்த்தபோது உலகின் எந்த அணியும் சோர்ந்து போயிருக்கும். ஆனால் அப்படியொரு நெருக்கடியிலும்கூட தென் ஆப்பிரிக்கா வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை.

 

ஏறக்குறைய 32 வயதை நெருங்கிவிட்ட டேல் ஸ்டெயின் கடைசி நேரத்தில் பாய்ந்து சென்று பவுண்டரியை தடுத்தது மயிர்கூச்செரிய வைத்தது. இந்த கேட்ச்சை பிடிக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அற்புதமாக ஆண்டர்சன் கேட்ச்சை பிடித்தார் டூ பிளெஸ்ஸி. அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் அர்ப்பணிப்போடு விளையாடினார்கள்.

தங்கள் அணி கோப்பையை வெல்லாதா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் கனவை நனவாக்க கடைசி வரை போராடினார்கள். தென் ஆப்பிரிக்க வீரர்கள் செய்த ஒரு சில தவறுகளை தவிர வேறு எந்த குறையும் சொல்ல முடியாது.

 

அந்தத் தவறுகள்கூட நெருக்கடி மற்றும் பதற்றம் காரணமாக நிகழ்ந்ததுதானே ஒழிய, பொறுப்பில்லாமல் ஆடி தவறிழைக்கவில்லை. தோல்வியைத் தாங்க முடியாமல் அவர்கள் அழுத காட்சிகளே அவர்கள் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கான சாட்சி.

 

ரசிகர்களின் பிரச்சினை

ஆனால் இந்திய அணியின் ஆட்டம் அப்படியிருந்ததா? நிச்சயம் இல்லை. அதேநேரத்தில் அரையிறுதியில் மோச மாக விளையாடியது உண்மைதான் என்றாலும், தோற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்திய அணி விளையாடவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றி பெறும்போது வானுயர தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோல்வியடையும் தூக்கியெறிவதும்தான் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் ஒரே பிரச்சினை.

 

இன்று நாம் புழுதி வாரித்தூற்றும் கோலிதான், பல போட்டிகளில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்திருக்கிறார், கடந்த உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல கணிசமான பங்களிப்பை தந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது.

 

கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததற்கு அவருடைய காதலி அனுஷ்கா சர்மா மீது குற்றம்சாட்டுவது எந்த வகையில் நியாயம்? இந்தியாவின் தோல்விக்கு கோலி மட்டுமா காரணம்? 11 வீரர்கள் ஆடும் கிரிக்கெட்டில் ஒருவரை மட்டும் பலிகடாவாக்குவது சரியான முடிவல்ல.

 

உணர்வுகளை மதிக்க வேண்டும்

“மற்ற வீரர்களின் குடும்பத்தினரைப் போலவே அனுஷ்கா சர்மாவும் கிரிக் கெட் போட்டியை பார்க்க சிட்னி வந்திருக் கிறார். அவர் மீது பழி சுமத்துவது நியாயமல்ல” என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருப்பதை நியாயமான கருத்தாகவே பார்க்க வேண்டும். ஒரு ரசிகை என்ற அடிப்படையில் அனுஷ்காவுக்கும் போட்டியை நேரில் பார்க்க உரிமை உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

 

கோலி ஒரு கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி அவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. அவருக்கும் உணர்வுகள் இருக்கிறது என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வீசிய விமர்சனக் கணைகள் நிச்சயமாக கோலி, அனுஷ்கா இருவரையும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கும். தோல்வியின் பிடியிலிருக்கும் கோலி மீது ரசிகர்கள் வீசிய விமர்சனக் கணைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்றதுதான். இதிலிருந்து அவர் மீள்வதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ?

 

முதிர்ச்சியில்லாத கோலி

அதேநேரத்தில் கோலியின் சமீபகால செயல்பாடுகள் மெச்சும்படியில்லை. தன்னை பற்றியோ, அனுஷ்கா பற்றியோ ஊடகங்களில் செய்திகள் வந்தால் செய்தியாளர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவது உள்ளிட்ட விஷயங்கள் அவருடைய முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுகின்றன. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் ஒருவரை திட்டி சர்ச்சையில் சிக்கிய கோலியால், இன்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களை திட்ட முடியுமா?

 

நாட்டுக்காக விளையாடுவது என்று வந்துவிட்டால் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சச்சின் டெண்டுல்கர்கூட தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் விமர்சனங்களை சந்திக்கத்தான் செய்தார். ஆனால் அவர் ஒருபோதும் விமர்சனத்துக்கு தனது வாயால் பதில் சொன்னதில்லை.

இந்திய அணியின் வருங்கால கேப்டனான கோலி இனியாவது சிந்தித்து செயல்பட வேண்டும். ரசிகர்களின் உணர்வை புரிந்துகொண்டு இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். அதே தருணத்தில் ரசிகர்களும் வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

 

வெற்றியையும் தோல்வியையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வீரர்கள் மீதான உளவியல் தாக்குதலோ, அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதலோ சரியான முடிவல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டிய தருணம் இது!
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7042992.ece

  • கருத்துக்கள உறவுகள்

10325707_10152675809451160_7333953788894

  • தொடங்கியவர்

Australia
v
New Zealand
(14:30 local | 03:30 GMT | 05:30 CEST)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிரிக்கெட் உலகக் கோப்பை யார் வசம்?
 

ஒருநாள் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் யார்? ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மெல்பர்ணில் ஞாயிற்றுக்கிழமை முடிவாகிறது

ஐம்பது ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை வெல்லப் போவது ஆஸ்திரேலியாவா அல்லது நியூசிலந்தா என்பது மெல்பர்ண் நகரில் முடிவாகிறது.

 

நான்கு முறை உலகச் சாம்பியன்களாக இருந்த ஆஸ்திரேலியா ஐந்தாவது முறையாக இந்தக் கோப்பையை கைப்பற்றுமா அல்லது முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து வெற்றிவாகை சூடுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

 

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் பகை எந்த வகையிலும் இந்திய-பாகிஸ்தான் இடையேயான போட்டாபோட்டிக்கு குறைவானது இல்லை.

அதிலும் குறிப்பாக இந்த இரு நாடுகளும் கூட்டாக இந்தப் போட்டியை இப்போது இணைந்து நடத்திய சூழலில், இருவருக்குமே வெற்றி என்பது கௌரவப் பிரச்சினையும் கூட.

ஞாயிற்றுக்கிழமை மெல்பர்ண் நகரில் இடம்பெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஆஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ள நிலையில், ஆஸி ரசிகர்களிடையே வெற்றிக்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

 

பன்னிரெண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் விளையாடிவரும் மைக்கேல் கிளார்க், கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றி எனும் மகுடத்தை அணிவாரா அல்லது ஏமாற்றத்துடன் வெளியேறுவாரா என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.

 

நியூசிலாந்தும் 'கைக்கெட்டும் தூரத்தில் கோப்பை' எனும் நிலையில், அதை நழுவவிடத் தயாராக இல்லை.

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 70% ஆட்டங்களிலும் நியூசிலாந்து 30% ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

 

ஆனால் ஒரு போட்டியில் யார் இதுவரை அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளனர் என்று பார்த்தல் அது நியூசிலாந்துக்கு சாதகமாக உள்ளது. 2007ஆண்டு, ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ஓட்டங்களை அவர்கள் பெற்றிருந்தனர். அதேபோல வேறொரு போட்டியில் ஆஸி அணியை அவர்கள் 70 ஓட்டங்களுக்கு வீழ்த்திய வரலாறும் உண்டு.

 

ஆனால் அனுபவம், அழுத்தங்களுக்கிடையில் ஆடுவது என்பதெல்லாம் ஆஸி அணிக்கு கைவந்த கலை.

நியூசிலாந்து அணியின் தலைவர் பிரெண்டன் மெக்கலம் தமது அணி வெற்றி பெற இந்திய ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஒரு கோடி மக்கள் குரல் கொடுக்கும்போது அது தங்களுக்கு பெரிய ஆதரவாக அளிக்கும் என பிரெண்டன் மெக்கல்லம் இந்திய ரசிகர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கோரியுள்ளார்.

 

வெளியிலிருந்து வரும் குரலைவிட உள்நாட்டில் தங்களுக்கே பெரிய ஆதரவுள்ளது, அது மெல்பர்ணில் வெளிப்படும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது.

இதனிடையே இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெறவில்லை என்றாலும், இந்த ஆட்டத்தில் இலங்கையர் இருவர் ஈடுபடுகிறார்கள்.

களநடுவர்களில் ஒருவராக குமார் தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்ட நடுவராக ரஞ்சன் மடுகல்ல செயல்படுவார்.

மெல்பர்ணில் வெற்றி பெற்று உலக் கோப்பையை கைப்பற்றப் போவது மஞ்சளா அல்லது கருப்பா?

ஞாயிறன்று உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் இதற்கான விடையை அறிந்திருப்பர்
 

 

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article7043725.ece

  • தொடங்கியவர்

m7yjyw.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று போட்டி நடக்கும் மெல்பென் மைதானத்தின் எல்லைக்கோடுகளின் நீளங்கள் எவை? சிறிய மைதானமா அல்லது பெரிதா? எத்தனை பார்வையாளர்களிற்கு இருக்கை வசதி உள்ளது?

  • தொடங்கியவர்

நியூசீலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கலம் விக்கட்டை தொலைத்தார்..! :o:lol:

  • தொடங்கியவர்

என்ன சோதனை.. உலக கோப்பை பைனலில் டக் அவுட் ஆன முதல் கேப்டன் மெக்கல்லம்!

மெல்போர்ன்: உலக கோப்பை பைனலில் டக் அவுட் ஆன அணி தலைவர் என்ற மோசமான பதிவை இன்று நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் நிகழ்த்தியுள்ளார். 11வது உலக கோப்பை கிரிக்கெட் பைனல் மெல்போர்னில் இன்று நடந்தது. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஸ்டார்க் மெக்கல்லத்திற்கு வீசிய முதல் பந்திலேயே, மெக்கல்லத்தின் நடுக்கம் தெரிந்தது. லீக் போட்டியில் இதே பந்து வீச்சை அடித்து நொறுக்கிய மெக்கல்லத்திற்கு உலக கோப்பை இறுதி போட்டி என்ற நெருக்கடியை தவிர்க்க முடியவில்லை என்பது தெரிந்தது. ஏனெனில் முதல் பந்தே, ஆப் ஸ்டம்புக்கு மிக அருகில் தாண்டி சென்றது. 2வது பந்தை எதிர்கொள்ளும்போது வழக்கமான பாணியில் பிட்சில் இறங்கி வந்தார் மெக்கல்லம். ஆனால், ஆச்சரியம்.. மெக்கல்லம் பேட்டில் பந்து படவில்லை. அழகாக ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது.

மெக்கல்லத்தை நக்கலாக பார்த்தார் ஸ்டார்க். நின்று பார்த்தும் பேட்டில் படவில்லை, இறங்கியும் படவில்லையே என்ற குழப்பத்திலேயே 3வது பந்தை சந்தித்தார் மெக்கல்லம். இப்போது கிளீனாக பௌல்ட் செய்தார் ஸ்டார்க். நியூசிலாந்து ரசிகர்களின் இதயங்கள் ஒரு நிமிடம் நின்று துடித்தன. ஏனெனில் மெக்கல்லம்தான் அவர்களின் துருப்பு சீட்டு. அதேநேரம் ஆஸ்திரேலிய கூடாரத்தில் கூத்தும், கும்மாளமும் எகிறியது. இதில் மோசமான சாதனை என்னவென்றால், உலக கோப்பை இறுதி போட்டியில் டக் அவுட் ஆன ஒரு அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் மட்டுமே.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/brendon-mccullum-is-the-first-captain-ever-score-duck-world-223588.html

  • கருத்துக்கள உறவுகள்

25 ஓவர்களின் பின்பு ....98/3.......ஒசி ஒசி ஒய் ஒய்

  • கருத்துக்கள உறவுகள்

35 ஓவர்களின் பின்பு 150/5

  • தொடங்கியவர்

NZ 183 allout

  • தொடங்கியவர்

உலக கோப்பை பைனல்: செய்யக் கூடாத தப்புகளை மிக சரியாக செய்த நியூசிலாந்து!

 

மெல்போர்ன்: உலக கோப்பை பைனலில், சரியாக தவறுகளை செய்தது நியூசிலாந்து. உலக கோப்பை பைனலில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய அதிருஷ்டம். ஆனால், அதை துரதிருஷ்டமாக மாற்றிவிட்டனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். 6 முறை உலக கோப்பை அரை இறுதிக்கு வந்த நியூசிலாந்து, முதல் முறையாக பைனலுக்கு வந்தது. ஆனால் அந்த பதற்றமே அவர்கள் பேட்டிங்கை புரட்டி போட்டது.

 

நியூசிலாந்து பேட்டிங் முதுகெலும்பான மெக்கல்லம் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்தார். முதல் 10 ஓவர் பேட்டிங் பவர் பிளே எனப்படும். அதில் அதிக ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம். ஆனால், முதல் ஓவரிலேயே கேப்டன் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து. உலக கோப்பை பைனல்: செய்யக் கூடாத தப்புகளை மிக சரியாக செய்த நியூசிலாந்து! அதன்பிறகு எலியட்-டைலர் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தது.

 

ஆனால், 35வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே வந்தபோது, அப்போதும் முதல் ஓவரிலேயே டைலரை இழந்தது. அதன்பிறகு அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் பெவிலியன் பேரேட் நடத்திவிட்டனர். ஆக.. பேட்டிங் செய்ய வேண்டிய பவர்பிளேக்களில்தான், சரியாக தப்பு செய்தது நியூசிலாந்து. இன்னும் சரியாக சொல்லப்போனால், கடைசி 33 ரன்களை எடுப்பதற்குள் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. 1979 உலக கோப்பை பைனலில் இதைவிட மோசமாக பேட்டிங் செய்தது இங்கிலாந்து. அந்த அணி 11 ரன்களில் கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது. அப்போட்டியில், இங்கிலாந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/new-zealand-lost-last-seven-wickets-33-runs-223607.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.