Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வடக்கு கிழக்கை பிரிக்குமாறு நீதிமன்றத்தில் தீர்ப

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாயகத்தில் தன்னாட்சி அரசு ஒன்றை நிறு வும் அவர்களின் போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசு தொடுத்திருக்கும் அரசியல், இராணுவ யுத்தத்தில், அரசுத் தரப் புக்குத் தோள் கொடுக்கும் தமிழர் தரப்பு சக்திகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஒன்று.

ஆனால், தமிழர் தாயகத்தைத் துண்டாடும் துரோகத்துக்கு அக்கட்சி கூடத் துணை போகமாட்டாது என்பது நிச்சயம்.

என்று உதயன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்சி காசுக்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கிறது. இதுவா துணை போக மாட்டாது???. நகைச்சுவையாக இருக்கிறது.

முன்பு ஈபிடிபியின் பிரசுரங்களில் அவர்களின் கொள்ளை விளக்கம் வரும். " மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயஆட்சி! என்றுமே பிரிக்கப்படதா, வடக்கு-கிழக்கு!" என்று. இப்போது பார்த்தால் அந்த வசனத்தையே, காணோம்!

!

முன்பு ஈபிடிபியின் பிரசுரங்களில் அவர்களின் கொள்ளை விளக்கம் வரும். " மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயஆட்சி! என்றுமே பிரிக்கப்படதா, வடக்கு-கிழக்கு!" என்று. இப்போது பார்த்தால் அந்த வசனத்தையே, காணோம்!

!

என்னெண்டு இருக்கும் மகிந்த அமச்சு என்னும் எலும்புத்துண்டை கொடுத்திருகிரார் எல்லா நாய் எண்டு அவங்களை சொன்னால் நாய் எல்லாம் குட்டமாய் சேர்ந்து கடிக்கவரும் ஏனெண்டால் நாய் நன்றி உள்ள மிருகமல்லா இவர்கள் கேவலங்கெட்ட ஒரு புது மிருகஜாதி தாடி வைச்ச கழுதையும் நரியும் கலந்த ஒரு புது மிருகஜாதி அமைச்சு பதவிக்காக கட்டியிருக்கும் வெட்டியைகூட குடுப்பார் டக்லஸ்.புலிகளின் கழுத்தில நஞ்சு டக்லசின் கழுத்தில செல்போன் மாலை நல்லாக இருக்கு இவரை பற்றிகதைக்க வெளிக்கிட்டால் கெட்டவார்த்தைதான் வரும் சிங்களவன் எல்லாம் ஒன்று சேர்ந்திட்டான் நாம் தான் பிரிந்து கிடக்கிறோம் அது எமது இனத்தின் சாபக்கேடு :evil:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கை இப்பிடி வழக்குப்போட்டு உச்ச நீதிமன்றத்தின்ரை தீர்ப்பின்படி ஒரு அநீதியான முறையிலை பிரிக்கலாமெண்டால் உதேமாதிரி நாங்களும் வழக்குப்போட்டு தமிழீழத்தையும் சிங்களத்தையும் ஏன் பிரிக்கேலாது? ஏதோ ஒரு காலகட்டத்திலை வெள்ளைக்காறனாலை தமிழனுக்குப் பாதகமாச் செய்யப்பட்ட ஒரு அநீதியான செயல் தானே. இல்லையே?

அது ஒருபக்கம் கிடக்கட்டும் இப்ப ஜே.வி.பி காரன் இதாலை சிங்களவனிட்டை நல்லா ஆதரவு தேடப்போறான். அதை எப்பிடிச் சால்வைக்காரனாலை ஜீரணிக்க முடியுமெண்டு தெரியேல்லை.

பொறுத்தார் புூமி ஆள்வாரெண்டு சொல்லிப்போட்டு பொறுத்திருந்து பாப்பம் என்ன கூத்து நடக்குதெண்டு.

இது குறித்து எவ்விதமான கவலையும் படத் தேவையில்லை. தமிழன் தலைவிதியைத் தானே தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றானே, தவிர, சிங்கள சார்பு கொண்ட சிறிலங்கா நீதிமன்றுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

இருக்க, வடக்கு-கிழக்கு இணைப்பு என்றது இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் வந்தது. தமிழனுக்கு தீர்வு என்று இந்தியா மாகாணசபை என்று திட்டம் வைக்க, இலங்கை முழுவதும் மாகாணசபையைக் கொண்டு வந்து, அந்தத் திட்டத்தை, ஒரு பிரியோசமற்ற திட்டமாக்கி வெற்றி பெற்றார் ஜேஆர்.

மேலும், 88களில் தான் வடக்குகிழக்கு தமிழர் தாயகம் என்ற கொள்கை வரவில்லை. அது போராட்டத்தின் அடிநாதத்தில் இருந்தே வந்தது. புத்தளமும் தமிழீழத்தின் ஒரு பகுதி தான். எனவே, சிங்கள நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி, தமிழன் தங்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழருக்கில்லை.

தலைவரின் 50வது, பிறந்தநாள் வாழ்த்து பார்த்தாவர்களுக்கத் தெரிந்திருக்கும். தலைவர் இரவு நேரமொன்றில் மேசையில் இருந்து சொல்லுவார் "................நான் ராஜிவ்காந்திக்கே சொன்னனான்................. ஏனென்றால் இது எம் அனுமதியோடு கொண்டுவரப்பட்ட திட்டம் அல்ல" என்று.

இதைவிட, வடக்கு-கிழக்கு மாகணசபை இருந்தபோது, இந்தியாவின் காலத்தில் தான் ஒரு அடிவருடித் வரதராஜப்பெருமாளால் ஆட்சியில் இருக்க முடிந்தது. இந்தியா வெளியேறு முன்னரே, குதிக்கால் ஆடிபட அவரும் ஒரிசாவுக்கு ஓடிவிட்டார் பின்னர், தமிழர் ஒருவராலும் அப்பதவிக்கு வரமுடியவில்லை. காமினி பொன்சேகா, இராணுவத்தைச் தளபதி அசோக ஜயவர்த்தன, இப்போதும் இராணுவத்தளபதி ஒருவர் தான் ஆட்சியில் இருக்கின்ற நிலமை!

எனவே, குழப்பிக் கொள்ளாதீர்கள். தமிழீழப் பிரகடனமோ, அல்லது சுதந்திரப் போராட்டமோ, 88ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை அடியேற்றி வரவில்லை. அவை இதற்கு ரெம்பவே முற்பட்ட காலத்திற்குரியவை. எனவே, இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

ஆனால், இந்தியா தமிழருக்கு தீர்வு கொடுத்தது என்று அடிக்கடி, விலாசம் காட்டி எழுதுபவர்களுக்கு முடியாமல் போகும். ஏனென்றால் எதிரியாக உள்ள சிறிலங்கா அரசு, தமிழரின் உரிமையைத் தீர்மானிக்க கொண்டுள்ள உரிமை இப்போது பொட்டென்று உடைபட்டுப் போனது. இது ஒருவகையில் தமிழருக்கான வெற்றியே!!

------------------------------------

எந்த நீதிமன்றில் வழக்குப் போடப் போகின்றீர்கள். சிங்கள சார்புள்ள சிறிலங்கா நீதிமன்றத்தில் இன்னமும் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் எழுதியது:.......சிங்கள நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி, தமிழன் தங்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமிழருக்கில்லை....

காலத்திற்கு பொருத்தமான, மிகச் சரியான கூற்று!

சிங்கள அரசயந்திரத்தின்மீதும், நீதித்துறையின்மீதும் நம்பிக்கை உடையவர்கள்தான் அதைப்பற்றி கவலைப்படவேண்டும், சுனாமிகட்டமைப்புக்கு சிங்கள நீதித்துறை தடை இட்டபோதே அதனது நம்பகத்தன்மை புரிந்திருக்கவேண்டும்,

அதனால்தான் எமக்கெனவொரு நீதித்துறை சமைத்தோம் அதை எந்த நாளும் காப்போம்.

தூயவனின் கருத்து மிகச் சரியானதே. சிறீலங்காவின் ஆழுகைக்குட்பட்ட நீதித்துறையின் எந்தத் தீர்ப்பும் தமிழீழத்தில் செல்லுபடியாகாது. இத் தீர்ப்பைப் பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இதனால் அவமானம் தமிழருக்கல்ல எமது பிரச்சனைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் வந்து மூக்கை நுழைத்து எம் மீது தமது திட்டங்களைத் தினிக்க வந்த வல்லரசுக்கே. நாம் எமது கடமையைச செய்வோம். எமது இலட்சியம் தமிழீழமே. அது சரிவர எல்லைகள் வகுக்கப்பட்டு ஒரு தனித் தேசமாகவே இயங்குகின்றது. தெற்கின் திட்டங்கள் தீர்வுகள் வவனியா தாண்டியபின் செல்லுபடியற்றதே.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • தொடங்கியவர்

நன்றி தூயவன்,

நீங்கள் எழுதியதிலிருந்து எனக்கு விளங்கியதை ஏக வசனத்தில் சொல்வதென்றால்.

இலங்கைத் தமிழரின் நியாயமான பிரச்சனைக்குள் தனது வல்லாதிக்க நோக்கோடு உள்நுளைந்த இந்தியா, களயதார்த்தத்திற்கும், சிங்கள அரசியலுக்குமிடையில் சிக்கித் திணறி வெளியேறும் போது திணித்துவிட்டுப் போன போலியான தீர்வின் முகத்திரை இன்று முற்றாக கிழிக்கப்பட்டுவிட்டது.

இதன் முலம் தமிழீழத்திற்கிருந்த ஒரு தடைக்கல்லான போலித்தீர்வின் எச்சமான வடக்கு கிழக்கு மாகாணசபை இணைப்பு உடைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் எமது தமிழீழப் போராட்டத்தில் இறுதி நேரத்தில் பங்கெடுத்துக் கொண்ட JVP இற்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

eelamap.gif

ஐயா நீதிமான்களே....

வடக்கையும் கிழக்கையும் இலங்கையை விட்டு பிரித்து விடுங்களேன். அப்பாவி சிங்கள இளைஞர்களாவது தங்கள் உயிரைக் காப்பாத்தி கொள்வார்கள்.

வட, கிழக்கு பிரிப்பு துரதிர்ஷ்டவசமானது இந்தியா கவலை

[18 - October - 2006] [Font Size - A - A - A]

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்டவிரோதமானதென்றும் செல்லுபடியற்றதென்றும் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் தமிழர் தாயகத்தை பிரிக்கும் இந்தத் தீர்ப்பானது துரதிர்ஷ்டவசமானதென இந்தியா கவலை தெரிவித்திருக்கிறது.

சட்ட ரீதியாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் இது தொடர்பாக இந்தியா செய்வதற்கு ஒன்றும் இல்லையென இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள் காட்டி `இந்துஸ்தான் ரைம்ஸ்' நேற்று தெரிவித்திருக்கிறது.

வட, கிழக்கு இணைப்பு தொடர்ந்திருக்க வேண்டுமென்பதில் இலங்கை ஆர்வம் கொண்டிருந்தால் அதற்கு பரிகாரம் காண்பது இலங்கை அரசைப் பொறுத்த விடயம் என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழியுண்டு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணைப்பைத் தொடர்வதற்கு பொருத்தமான சட்ட ரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு சில சமயங்களில் அரசாங்கம் எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

தேசிய நலனைக் கருத்தில் கொண்டு ஆளும் சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன. ஆதலால் இணைப்பை தொடர அரசும் பிரதான எதிர்க் கட்சியும் ஒத்துழைக்க முடியுமென்ற பரவலான அபிப்பிராயம் காணப்படுகிறது.

இவை யாவற்றுக்கும் மேலாக வட, கிழக்கு மாகாணங்கள் ஐ.தே.க. ஆட்சியிலேயே ஒன்றிணைக்கப்பட்டன.

http://www.thinakkural.com/news/2006/10/18...s_page13234.htm

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கொழும்பு ஊடகம்

வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராக சிறிலங்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதன் மூலம் மகிந்த ராஜபக்ச எந்தப் பலனையும் பெறாத நிலையில் எல்லாவற்றையும் இழக்கப் போகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்திக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாவது:

1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டது. இந்த இணைப்பை கடந்த 18 ஆண்டுகாலமாக சிறிலங்கா நாடாளுமன்றமும் நீட்டித்து வந்தது.

இந்த நிலையில் ஜே.வி.பி. சார்பில் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வடக்கு-கிழக்கு இணைப்பானது சட்டவிரோதம் என்றும் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கில் ஜே.வி.பிக்காக வாதாடியவர்கள் எச்.எல்.டி.சில்வா, கோமின் தயாசிறி மற்றும் எஸ்.எல். குணசேகர.

இவர்களில் எச்.எல்.டி.சில்வா, கோமின் தயாசிறி இருவரும் மகிந்த ராஜபக்சவின் அமைதிப் பேச்சுக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள். அதே நேரத்தில் அரசாங்கக் குழுவில் இடம்பெற்றுள்ள சிறிலங்காவின் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மங்கள சமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, டி.ஈ.டபிள்யூ குணசேகர மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பை விமர்சனம் செய்துள்ளனர்.

இப்படியானா நிலையில் ஜெனீவாப் பேச்சு மேசையில் இது தொடர்பில் எச்.எல்.டி.சில்வா, கோமின் தயாசிறியும் அரசாங்க அமைச்சர்களும் என்ன மாதிரியான கருத்தை முன்வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி உருவாகியுள்ளது. இதற்கு விடைகாண வேண்டிய நிலையில் மகிந்த ராஜபக்ச உள்ளார்.

அதேபோல் எதிர்வரும் 23 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மகிந்த முடிவு செய்துள்ளார். இந்தத் தீர்ப்பு தொடர்பில் மகிந்த மேற்கொள்ளப் போகும் நிலைப்பாட்டில்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேனிலவு தொடங்க உள்ளது.

சிங்களப் பேரினவாதக் கடும்போக்கு ஆலோசகர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரின் ஆலோசனையில் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் "தமிழர் தாயக ஆக்கிரமிப்பு"க்கான இராணுவ நடவடிக்கைகளில் பாரிய தோல்வியைச் சந்தித்துக் கொண்டு கடும் விலை கொடுத்து வருகிறார் மகிந்த ராஜபக்ச.

உலகின் நான்காவது இராணுவமான இந்தியாவை எதிர்கொண்டு ஆயிரம் பேர் இழப்பை உருவாகியவர்கள் விடுதலைப் புலிகள். சிறிலங்கா அரசாங்கம் கூறுவது போல் யுத்த நிறுத்த காலத்தில்தான் புலிகள் பலமடைந்து விட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு அப்பால், யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்னரே பலமான ஆனையிறவைக் கைப்பற்றி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தை பேச்சுக்கு வரவழைத்தவர்கள் புலிகள்.

இப்படியான அண்மைய நிகழ்வுகள் எதுவுமே மகிந்தவுக்கோ அவரது அரசாங்கத்துக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கப் போவதில்லை.

இணைத் தலைமை நாடுகள் செப்ரெம்பர் 12 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையிலும் "அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான எந்த ஒரு செயற்பாட்டையும் வடக்கு-கிழக்கின் தற்போதைய நிலையில் மேற்கொள்ள வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் ஹவானாவில் மகிந்த ராஜபக்ச சந்தித்த போது வடக்கு-கிழக்கை மக்களின் கருத்தறியாமல் பிரிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை மகிந்த ஏற்றுக்கொண்டால் அமைதி முயற்சிகள் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் கரிசனையை இழக்க வேண்டியவராகவும் இருப்பார் மகிந்த ராஜபக்ச.

வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பின் மூலம் எந்தப் பலனையும் மகிந்த பெறப்போவதில்லை. எல்லாவற்றையும் இழக்கப் போகிறார் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு-கிழக்கு வழக்கின் தீர்ப்பு: இந்தியா அதிருப்தி

வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராக சிறிலங்கா உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது இந்தியாவை அதிருப்திக்குள்ளாக்கியுள்ள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருந்தேசியவாதிகள் தமது தெளிவான எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டார்கள். இதற்கு உடனடியாகவே பதில் சொல்லவேண்டியவர்களான 1. ராஜீவ் விசுவாசத்துடன் அடிக்கடி அறிக்கையிடும் இந்திய அரசியலாளர்கள் வாயடைத்துப் போனதேன்?

2. இலங்கை-இந்திய ஒப்பந்த அடிப்படையில் திருப்தியடைந்து ஜனநாயக(!) வழிக்குப் போனதாகச் சொன்ன இலங்கைத் தமிழ் இயக்க வழிவந்த அரசியலாளர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஏதுமே சொல்லாதிருப்பதேன்?

3) இலங்கையின் வரலாற்றுத் தடங்களை செவ்வனே ஆய்ந்து பார்ப்பவர்களுக்கு வரலாற்று பதிவுகளே பாடங்களாக இருப்பதை அறிய முடியும். ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் சிறிலங்கா யாப்பில் ஏதுமே செய்யமுடியாது என்பதை அறிந்திருந்தும், பேசித்தீருங்கோ... பேசித்தீருங்கோ.... என இணைத் தலைமை நாடுகள் திரும்பத்திரும்ப கீறல் விழுந்த இசைத்தட்டு போல் வாசிப்பதேன்?

- தமது விடிவுக்கான தெளிவான பாதைத் தெரிவுடன் இருக்கும் ஈழத்தமிழனுக்கு இந்தப் பொம்மலாட்டம் சிரிப்பாக இருப்பதில் என்ன வியப்பு!

- எல்லாம் நன்மைக்கே! - முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குகிழக்கு இணைப்புக் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு

புதுடில்லியின் வெளியுறவுக் கொள்கைக்கு சவால்!

"ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகை கூறுகிறது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி 1987இல் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக இணைக் கப்பட்டமை சட்டவிரோதமானது என்று இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையானது புதுடில்லியின் வெளிநாட்டுக் கொள்கைக்குச் சவாலாக அமைந் துள்ளது என "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் குறிப் பிட்டுள்ளதாவது:

1987இல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டன இவ்விணைப்பு சட்ட விரோதமானது என இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ்ப் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம் என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித் துள்ளது.

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவும், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இவ்விணைப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு மாகாணம் தனி நாடாகப் பிரியவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியதால் அம்மாகாணங்கள் தனிமாகாணமாக உருவாவதை சிங்களவர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இவ்விணைப்புத் தொடர்பாக இவ்வாறானவர்களின் ஆதரவைப் பெறவேண்டிய நிலை ஜயவர்தனவுக்கு அப்போது ஏற்பட்டது.

ஆகையால், இணைக்கப்படும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்து நிரந்தரமாக ஒரு மாகாணமாக இருக்கவேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்று கிழக்கு மக்கள் ஒரு வருடத்தின்பின் தீர்மானிப்பதற்கு ஏதுவாக இம்மாகாணம் இணைக்கப்பட்டு கிழக்கு மக்களின் விருப்பத்தை அறிய ஒருவருடத்தின்பின் சர்வசன வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறவேண்டும் என்றொரு வாசகத்தை அந்த ஒப்பந்தத்தில் சேர்த்தார் ஜயவர்தன.

அதேநேரம் ராஜீவ்காந்தி, வடக்கு கிழக்கு நிரந்தரமானது என்றும், சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறாது என்றும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

ஆனால், வடக்கு கிழக்கு இணைப்பு நிரந்தரமானது என்று அறிவிக்கப்படுவதற்குமுன்பு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் என்றொரு நிபந்தனையை மாகாண சபைகள் சட்டத்தில் ஜயவர்தன இணைத்தார். ஆனால், புலிகள் அந்த நிபந்தனைக்கு இணங்கி ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை.

இந்த இணைப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெறச்சென்ற மாக்ஷீசவாதிகளான ஜே.வி.பியினர் இந்த ஆயுதங்களைவு நிபந்தனைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

உத்தேசிக்கப்பட்ட தனியான மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தாதவரை அம்மாகாணத்திற்கு ஆளுநர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முடியும்.

இதனை லாபகமாகப் பயன்படுத்த நினைக்கும் ஜே.வி.பியினர் கிழக்கில் உடனடியாகத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அது நடந்தால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதாகிவிடும்.

வடக்கு கிழக்கைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இணைப்பதற்கான மாகாணசபைகள் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றம் சென்றாலும், இந்த விடயத்தில் தலையிட மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அழைப்புவிடுக்கப்படமுடியும்.

பல தசாப்தங்களாக அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசுகளின் ஆதரவுடன் கிழக்கில் சிங்களவர்கள் தமிழர்களின் விகி தாசாரத்தைக் குறைத்து கிழக்கைத் தங்களது சொந்த வீடாக மாற்றியிருக்கிறார்கள்.

வடக்கில் தமிழரின் சனத்தொகை மிகவும் உச்சத்தில் உள்ளநிலையில், புலி அமைப் பின் காரணமாக கிழக்கில் அவர்களின் விகிதாசாரப் பகிர்வு கீழிறங்கிவிட்டது.

அதேநேரம், வடக்கு கிழக்கு இணைப்புக் காலத்தில் இருந்த நிபந்தனைகள் இனி இராது.

வடக்கு கிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகப் பார்க்கப்பட்டவேளையில், 1990ஆம் ஆண்டு தமிழீழ விடு தலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிவிட்டனர்.

கிழக்கில் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவு கசந்துவிட்டது. தற்போதைய உண்மை என்னவென்றால், கிழக்கில் குடியேறிய சிங்களவர்களை யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விரட்டமுடியாது என்பதுதான்.

எந்தவகையிலேனும் புலிகள் வடக்கு கிழக்கின் பெரும்பகுதியை அவர்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளனர். இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பையிட்டு இலங்கையில் உள்ள அதிகமான தமிழர்கள் அதிருப்தி அøடந்துள்ளனர். இத்தீர்ப்பின் பின்னணியில் அரசு உள்ளதோ என்று பலர் சந்தேகிக்கின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.