Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடெல்லி மாநாட்டில் விக்னேஸ்வரனுக்கு முக்கியத்துவம்! – தலாய்லாமாவுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான நகர்வு. மோடியின் ரிமோட் ஆர்எஸ் எஸ் கையில்.

வைகோ, சீமான் போன்ற திராவிடப் பண்டாரங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.

இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் இந்து கோவில்கள் அழிக்கப்படுகிறது எனும் பிரச்சாரம் நிச்சயம் கைமேல் பலன்தரும்.

இதை இட்டு எந்த தமிழ் கிற்ரிஸ்தவரும் அச்சமடைய தேவையில்லை. போப்பாண்டவர் வரும் போது தமிழ் கிறிஸ்தவர்களின் இன்னலை எடுத்துரைப்போம்.

இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம்.

 

பச்சை  இடவேண்டிய  கருத்து

ஆனால்  இன்னொன்றை இகழ்வது முறையல்ல...

தேவையற்றது....

 

ஒன்றை தூற்றி

இன்னொன்றை  தூக்கும் போக்கு நல்லதல்ல என்று சொல்பவரே அதைச்செய்வதா....?

 

மற்றும்படி

நல்ல செய்தி...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா,

 

இந்தியாவின் தெற்கில் ஒரு காஷ்மீர் உருவாகும் என்று கூறியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன ?? தமிழ்நாடு பிரிந்துவிடும் என்பதா?? நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இந்தியத் தமிழர்கள் எல்லோரும் போலியான ஹிந்தித்துவ தேசியவாதத்திற்குள் மூழ்கிப் போய் கிடக்கிறார்கள்.

 

அடுத்தது, இந்தியா விரும்பியது நடக்கிறதென்பதன் பொருள் என்னவோ ??.

 

இந்தியாவின் தெற்கே கஷ்மீர் என்று கூறியது சிறிலங்காவை.....நேபாளத்தில் எப்படி இந்தியா கம்னியுச அரசை கவிழ்த்து தனது அடிமைகளை ஆட்சியில் அமர்த்தியதோ அதேபோன்று சிறிலங்காவிலும் முயற்சி செய்கின்றது....ஆனால் சிங்களவர்களிடம் இது இலகுவில் எடுபடாது.ஆகவே அந்த நாட்டில் மீண்டும் ஒரு போர் நடக்க வாய்பு உண்டு,இன்றைய உலகில் வல்லரசுகள் நேரடியாக போரில் இடுபடாது.நிச்சயமாக இந்தியாவும் சீனாவும் போரில் இடுபடாது.மகிந்தாவை கை விட சீனா ஒருநாளும் பின் நிற்காது...பெரிய போரில் இடுபட்டு பொருள் செலவு செய்வதைவிட சிறிலங்காவில் உள்நாட்டு போரை ஊக்கிவித்து இரு பிராந்திய வல்லரசுகளும் பணம் இட்டுவதில் குறியாக இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிக்கு எதை,எந்த நேரத்தில்,எப்படி,யாருடன் கதைப்பது என நன்றாகத் தெரிகிறது

 
 
Thirumurugan Gandhi 2 புதிய படங்களைச் சேர்த்தார்.

இந்துத்துவ கும்பல்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு என்ன வேலை என்று தெரியவில்லை.

இனப்படுகொலை அரசோடு போப்பாண்டவருக்கு என்ன உடன்பாடு என்று புரியவில்லை.

அமெரிக்கத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள “ மதச்சிறுபான்மையினர்” எனும் சொல்லை நியாயப்படுத்தவும், உருவகப்படுத்தவும் நடக்கும் முயற்சியா எனவும் தெரியவில்லை.

தமிழன் என்கிற அடையாளத்தில்தான் ஈழத்தில் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டான். இந்து என்றோ, கிருத்துவன் என்றோ அவன் அடையாளப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படவில்லை.

விக்கினேசுவரனின் தனிப்பட்ட மதநம்பிக்கையை தமிழீழ மக்களின் மீது திணிப்பது ஏற்புடையதல்ல. அனைத்து தமிழர்களும் இணைந்தே ராஜபக்சேவிற்கு எதிர் கூட்டணி என்கிற நம்பிக்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். விக்கினேசுவரன் தான் யாரை பிரிதிநிதிப்படுத்துகிறோம் என்பதை உணரவேண்டும்.

மன்னாரிலும், கிழக்கு பிரதேசத்திலும் ராஜபக்சேவிடம் அண்டிப்பிழைக்கும் இசுலாமியத் தலைவர்களுக்கும், தமிழர் தலைவர்களுக்கும் நிகழும் முரண்பாட்டினை இந்துத்துவ கும்பல் பயன்படுத்துகிறது. மன்னாரின் ‘மடு’ மாதா தேவாலயத்திற்கு விஜயம் செய்து போப்பாண்டவர் தனது பிரித்தாளும் சூழ்ச்சியினை திறம்பட நிகழ்த்துகிறார்.

மடு மாதாகோவிலை காக்க புலிகள் நடத்திய வீரம் செரிந்த போரும், சிங்களப் படையின் கையில் கிடைக்காமல் கோவில் சிலையை பெயர்த்து எடுத்து எடுத்துச் சென்ற நிகழ்வுகளும் மறக்க இயலாதவை. போரில் சின்னாபின்னமான ஈழத்தின் பெருநிலப்பரப்பினை பார்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் செல்கிறார் போப்பாண்டவர். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த போராட்டத்தினை இருட்டடிப்பு செய்யப்பட்டது தமிழகத்தில்.

இதே சூழலில், இந்துத்துவ கும்பல்களின் காலைப்பிடித்தோ, கையைப் பிடித்தோ உரிமையை பெற்றுவிடலாம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண முதல்வர் மூலமாக கனவு காண்கிறார்களோ எனத் தெரியவில்லை.

ஈழத்தமிழர்களை ’இந்து’க்கள் என்று ஆர்.எஸ்.எஸ்-விசுவ இந்து பரிசத்-பாஜக கும்பல் கருதி இருந்தால் 2009 இனப்படுகொலையின் போது எங்கிருந்தார்கள் என்கிற கேள்விக்கு பதில் அளிக்கப்படவேண்டும்.

விசுவ இந்து பரிசத் கிழக்குப் பகுதிகளில் 2001 துவக்கம் வேலை செய்து வருகிறது. அவர்களுடைய நோக்கமாக அவர்கள் அறிவித்தது கவனத்திற்குரியது. இந்துக்களை இசுலாமியமயமாக்களிடம் இருந்து காப்பதே விசுவ இந்து பரிசத்தின் பணி என்று பதிகிறார்கள். ஈழத்தில் தமிழர்களுக்கு யார் எதிரி என்று பிறக்கும் குழந்தைக்கும் தெரியும். 
இந்துவாகவும், இசுலாமியராகவும் சித்தரித்து பிளவுகளை-முரண்களைப் பயன்படுத்தி இந்து நாடு உருவாக்குகிறோம் என்று பேசித்திரிகிறது இந்த இனப்படுகொலை கூட்டம்.

விக்கினேசுவரன் போன்ற நபர்களிடம் இருந்து ஈழவிடுதலையையும், தமிழர் அரசியலையும் காப்பது முதல் கடமை. ஈழக்கோரிக்கையை கைவிடுகிறோம், ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை எதிர்பார்க்கிறோம் என்று தமிழகத்தில் பேசினால், இந்துத்துவ கும்பல்களோடு கைகோர்த்து மேடையேறினால் கடுமையான எதிர்ப்பு மே 17 இயக்கத்தினால் பதிவு செய்யப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

560236_10205320280030036_3675145144346311604901_10205327217803476_75820839920781

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.